Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-33

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-33

33 – மீண்டும் வருவாயா?

விஜய் “ம்ம்.. எப்போ உன்கிட்ட பேசுனா? என்ன சொன்னா?”

“வசந்த் அண்ணா வீட்ல இருந்து வந்த அன்னைக்கு ஈவினிங் நீங்க வெளில போய்ட்டாங்கல… அப்போ பேசுனா. ஜீவா நான் ஜீவி மூணு பேரும் கொஞ்ச நேரம் பேசிட்டு ஜீவா தூங்கிட்டான். இவளையும் படுக்க வெச்சுட்டு வந்தேன்.பட் பின்னாடியே வந்து தனியா பேசணும்னு சொன்னா.

 

ஜீவி “மா…”

“ஜீவி குட்டி என்னடா தூங்கல..”

“இல்ல மா..தூக்கம் வரல. உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.”

“சரி வா..” என அழைத்து இன்னொரு அறைக்கு சென்று தன் மடியில் அமரவைத்து வினவினாள்.

“சொல்லுங்க..என் குட்டி தங்கத்தோட குட்டி மண்டைக்குள்ள அப்டி என்னதான் ஓடிட்டு இருக்கு. நீ வந்ததுல இருந்தே பாக்குறேன். எதையோ யோசிச்சிட்டே இருக்க?”

“நான் வேண்டாம்னு எப்போவாது நினைச்சிருக்கீங்களா மா?” என்றதும் புரியாமல் விழித்த நேத்ரா “அப்படியெல்லாம் இல்ல.. நீ எப்போவுமே எனக்கு ஸ்பெஷல் தான்.?”

“ஏன் மா எல்லாரும் வேண்டாம்னு சொன்னதால தான் நான் உங்களுக்கு ஸ்பெஷலா?” என வினவ நேத்ராவிற்கு தூக்கிவாரி போட்டது. மறுநிமிடமே “குட்டி மா.. என்னாச்சு உனக்கு ஏன் இப்டி எல்லாம் கேக்குற?”

“நீங்க எனக்கு பதில் சொல்லுங்க. அப்பாக்கு கூட என்னை பிடிக்காதா? என்னை எல்லாரும் வேண்டாம்னு சொன்னாங்களா? எனக்கு முதல பதில் சொல்லுங்க மா. எல்லாமே எனக்கு தெரிஞ்சாகணும்..”

“கண்டிப்பா நான் உனக்கு பதில் சொல்றேன். ஆனா அதுக்கு முன்னாடி நீ என்ன நினைக்கிற? எதை தெரிஞ்சுக்கிட்ட? ஏன் இப்டி கேக்கற? உன் மனசுல என்ன யோசிக்கிறேன்னு தெரிஞ்சா தானே அம்மா சரியான உண்மையான பதிலா சொல்ல முடியும்…”

ஜீவி மௌனமாக இருக்க நேத்ரா “நீ என்கிட்ட சில விஷயம் கேட்டு இனிமேல்  முடிவெடுக்க போறேன்னா உன் மனசுல இருக்கறத முழுசா வெளில ஒரு பிரண்ட்கிட்ட சொல்றமாதிரி சொல்லி ஷேர் பண்ணிக்கோ. கொஞ்சம் உன் மைண்ட் ரீலீப் ஆகும் குழப்பம் இல்லாம தெளிவா அப்புறம் யோசிக்கலாம்.. இல்ல ஆல்ரெடி முடிவு பண்ணிட்டேன். சும்மாதான் கேக்குறேனா பதில் சொல்றேன்.ஆனா அதுல இருந்து அரைகுறையா புரிஞ்சுகிட்டு பிரச்னை வந்தாலும் எல்லாருக்கும் திரும்ப கஷ்டம் அதுக்கு தான் சொல்றேன்.” என்றதும்

சின்னவள் வாணியிடம் வசந்த் வீட்டில் பேசியதை கேட்டது அனைத்தும் கூறினாள்.

“அப்போ என்னை வேண்டாம்னு தானே அம்மா எல்லாரும் நினைச்சிருக்காங்க. நான் கூட இருந்தா அப்போ அப்பாக்கு ப்ரோப்லேமா? அப்பாக்கு இது தெரியுமா? அப்போ என்கிட்ட நார்மலா இருக்கமாட்டாங்களா? இனிமேல் பாட்டி வீ…அப்பாவோட அம்மா அப்பா வீட்டுக்கு போனாலும் என்னை அப்படித்தானே சொல்லுவாங்க. அப்டி சொல்லும் போது அப்பா என்னை விட்டு போகசொல்லிடுவாரா? அப்டி போகசொல்லிட்டா நீங்க என்கூட வருவீங்களா? எனக்கு தெரியும் தான் உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு ஆனா ஜீவாவும் பாவம் அவன் உங்களை ரொம்ப மிஸ் பண்ணான்ல. ஏன் அவங்க அப்டி பண்ணாங்க நான் என்ன மா தப்பு பண்ணேன். உங்களுக்கு என்னை பிடிச்சமாதிரியே ஜீவா டாடி எல்லாரையும் பிடிக்கும்னு எனக்கு தெரியும்.. இவளோ வருஷம் நீங்களும் அப்பாவும் பிரிஞ்சிருக்க நான் தான் காரணமா மா? அப்டினா உங்களுக்கும் என்னை பிடிக்காம போய்டுமா? நீங்களும் என்னை வேண்டாம்னு சொல்லிடுவீங்களா?” என கேட்கும்போது அவள் அழுதுவிட

நேத்ரா முதலில் அவள் கூறியதை கேட்டு வருந்த பின் அவள் கேள்விகளில் அவளின் எண்ணவோட்டங்களை எண்ணி சிறிது அதிர்ச்சி அடைந்தவள் இறுதியாக அவளின் கேள்வியிலும் அழுகையிலும் சுயஉணர்விற்கு வந்தவள் தனக்கும் வந்த கண்ணீரை கட்டுப்படுத்தி மகளை தன்னோடு அணைத்துக்கொண்டாள் “ஜீவி குட்டி இல்லடா மா. அம்மா எப்போவும் உன்னை விட்டு போகமாட்டேன். இங்க பாரு அழக்கூடாது. என் செல்லம் தானே. அம்மா மட்டுமில்லை அப்பா ஏன் ஜீவா, வசந்த் அங்கிள் யாருமே உன்னை எப்போவுமே வெறுத்ததில்லை.. அவங்களுக்கு மட்டுமில்ல நீ சொல்ற மாதிரி உங்க தாத்தா பாட்டிக்கு அன்னைக்கு நீ பாத்தியே அங்க இருந்து எல்லாருக்குமே உன்னை எப்போவும் பிடிக்கும். அவங்க யாருமே உன்னை  எப்போவுமே வெறுக்கமாட்டாங்க. பயத்துல உன்னை வேண்டாம்னு அவங்க ஒரு தடவை எமோஷனலா நினைச்சிட்டாங்க. அது தப்பு தான்.ஆனா பயம் கோபம் வரும் போது நாம நம்ம கண்ட்ரோல்ல இருக்கறதில்லை. அந்த நேரத்துல பொறுமையா யோசிச்சு முடிவு பண்றதில்லை. அதுதான் எல்லாரும் பண்ற பெரிய தப்பு.”

தாயின் மார்பில் சாய்ந்து தன்னை ஆசுவாசப்படுத்தியவள்

“எப்படி மா ப்ரோப்லேம் வந்தா உடனே வேண்டாம்னு சொல்லுவாங்க? என்னை பிடிக்கலேங்கிறதால தானே வேண்டாம்னு சொல்ராங்க. நீங்க சும்மா சொல்றிங்க… அவங்களுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க.” என முகத்தை திருப்பி கொள்ள

மகளை அள்ளிக்கொண்டவள் “நான் சும்மா சொல்லலடா.. எல்லாருமே அப்டித்தான்.  உனக்கு எப்படி சொல்றது…என யோசித்தவள் ம்ம்..சரி மதியம் ஜீவாகிட்ட நீ கத்திட்டு, வாங்க மம்மி நாம இங்க இருக்கவேண்டாம் போலாம்னு சொன்னியே.. ஏன் அப்படி சொன்ன?”

“அது நீங்க அப்பா எல்லாரும் என்னதான் சொன்னாலும் ஜீவா கேட்காம பிடிவாதமா கத்திட்டே இருந்தான். அதுவும் இல்லாம அவங்க பாட்டி தாத்தானு எல்லாரும் பண்ண தப்புக்கு நீங்க ஏன் கெஞ்சிட்டு இருக்கனும். இன்னும் சொன்னா உங்களுக்கு தானே அதுல கஷ்டம். அப்டி இருந்தும் அவன் சொன்னா திரும்ப திரும்ப கத்திட்டே இருந்தான். அதான் அப்டி சொன்னேன்..”

“சோ அப்போ உனக்கு ஜீவா உன் அப்பா யாரையும் பிடிக்கல. நான் மட்டும் போதுமா?”

“அவங்க பிடிக்கலைனு சொல்லல மா. அவன் தான் புரிஞ்சுக்காம உங்ககிட்ட சண்டை போட்டான். உங்களை கோவிச்சுகிட்டதால தான் எனக்கு கோபம் மத்தபடி ஜீவாவ அப்பாவை இரண்டு பேரையுமே எனக்கு எப்போவுமே பிடிக்கும்.”

“கரெக்ட் தான்.  இதேமாதிரி தானே அவங்களும் அன்னைக்கு ரியாக்ட் பண்ணிருக்காங்க. அவங்களுக்கு உன் அப்பாவை தான் தெரியும். அவ்ளோ வருஷம் கூடவே இருந்திருக்காங்க. அவருக்கு ஒரு பிரச்சனைனு சொன்னதும் அந்த பிரச்சனை எதுன்னாலும் கொஞ்சம் தள்ளி வெக்கணும்னு பாத்திருக்காங்க. ஒருவேளை அவங்களால ப்ரோப்லேம் வரும்னு சொல்லிருந்தாலும் அவங்க உன் அப்பாவை விட்டு விலகித்தான் போயிருப்பாங்க..அவங்களுக்கு உன்னை வெறுக்கணும் அழிக்கணும்னு ஆசையில்லைடா. உன் அப்பாவை காப்பாத்தணும் நல்லா இருக்கணும்னு ஆசை.

சோ உனக்கு பிடிச்ச இந்த அம்மாவுக்கு ஒரு பிரச்னை வந்தது. நீ ஜீவா மேல கோபப்பட்டு கத்துன. அவங்கள விட்டுட்டு போகவும் ரெடியாகிட்ட… இதேமாதிரி அன்னைக்கு உன் அப்பா விஷயத்தை மட்டும் மனசுல வெச்சு அவங்க முடிவு பண்ணிட்டாங்க.” என ஜீவி அமைதியாக இருக்க

நேத்ரா தொடர்ந்து “ஜீவா தான் பிடிவாதமா கத்திட்டு இருந்தான். உன் அப்பா அவனையும் கன்வின்ஸ் பண்ணதானே பாத்தாரு. ஆனா நீ அம்மாவுக்காகனு ஜீவாகிட்ட சண்டை போட்டு திரும்ப நாம வெளிய போலாம்மா. இவங்க வேணாம்னு சொன்னியே. அங்க நம்மள வேணும்னு சொன்ன உன் அப்பா இத கேட்டு பீல் பண்ணிருப்பாரு தானே. அத நீ யோசிச்சியா? அவரு பாவம் தானே..

ஜீவாவுக்கு நம்மள பிடிக்காம இல்லை. இவளோ நாள் விட்டுட்டு போய்ட்டோமேனு கோவிச்சுக்கிட்டான். நம்மகிட்ட தானே அவன் கோவிச்சுக்கமுடியும்.. பாசமா கோவிச்சுக்கறவங்க கொஞ்ச நேரத்துலையோ கொஞ்ச நாள்லையோ கண்டிப்பா சரி ஆகிடுவாங்க. நம்மள ரொம்ப மிஸ் பண்ணிடுவாங்க. அப்போ அவங்களே வருவாங்க. ஆனா அதுக்கு இடமே குடுக்காம நாமளும் கத்திட்டு பிடிவாதமா நின்னா எல்லாருக்கும் சண்டை மட்டும் தான் மிஞ்சும்.”

“அப்போ அவங்க என்னவேணாலும் கத்திகிட்டே இருக்கட்டும்னு கேட்டுட்டு தப்பே பண்ணாட்டியும் அமைதியா இருக்கணுமா மா? நீங்க தானே மா சொன்னிங்க செய்யாத தப்பை எப்போவுமே அக்ஸ்ப்ட் பண்ண கூடாது. சாரி சொல்லக்கூடாதுனு.”

“ம்ம்.. ஆனா அதுக்காக அவசரப்பட்டு முடிவெடுக்கணும்னு சொல்லலையே. அவங்க கோபப்பட்டு கத்துனா நாமளும் கத்தணும்னு என்ன இருக்கு. ஒரு நிமிஷம் யோசிக்கலாம்ல..அவங்க நாம வேண்டாம்னு கத்துறாங்களா இல்ல வேற பிரச்சனை கோபம் பயத்துல அப்டி ரியாக்ட் பண்றாங்களானு.. அப்டி யோசிச்சா நமக்கே தெரிஞ்சிடும் அடுத்து அவங்கள விட்டு போகணுமா? இல்ல பொறுமையா இருந்து ஆறுதல் சொல்லி அவங்க பிரச்சனையா சால்வ் பண்ண கூட இருக்கணுமான்னு.. அதுக்கு இடமே குடுக்காம எல்லாரும் சண்டை போட்டு பிரிஞ்சு போன பிறகு பீல் பண்ணி என்ன பிரயோஜனம்..?”

 

“அப்போ இனி அவங்ககூட தான் இருக்கணுமா? இனிமேல் என்னால தான் ப்ரோப்லேம், நான் வேண்டாம்னு எப்போவுமே அவங்க அப்டி சொல்லமாட்டாங்களா? ஒருவேளை சொல்லிட்டா?”

“நீ ஏன் இவளோ எக்ஸ்ட்ரீம்ல அதுவும் நெகடிவ்வா யோசிக்கற.. என் குட்டி மா எப்போவுமே அப்டி இருக்கமாட்டாளே.. முடிஞ்சளவுக்கு பாசிடிவ்வா நல்லதே நடக்கும்னு நினைச்சுக்கோ. நாம ஒரு விஷயத்தை ஆசைப்படுறோம் நம்புறோம்னா முழுசா நம்பணும்.. இல்லை தப்பு அது ப்ரோப்லேம்ன்னா முழுசா விலகி வந்திடணும். இரண்டுமே இல்லாம உன்னால அந்த விஷயத்தை ஜட்ஜ் பண்ணவே முடிலேனா அது அப்டியே விட்ரு.. நடக்கிறத வெச்சு அப்போ அத பாத்துக்கலாம். ஏன் போட்டு கொழப்பிட்டு இருக்கணும்?

ஒரு விஷயத்தை பத்தியோ இல்ல மனுஷங்களா பத்தியோ முழுசா தெரிஞ்சுக்காம உன்னால அவங்க குட்னு சொல்ல முடியலையா ஓகே. அப்போ பேட் னு நாம சொல்ல கூடாதில்லை. அதுக்கான சான்ஸ் குடுத்து தானே அவங்க எப்படி என்னனு முடிவு பண்ணனும்..

நான் உன்னை அவங்க கூட இருக்கலாம். இருக்கணும்னு கம்பெல் பண்ணமாட்டேன். அப்பாவும் பண்ணமாட்டாரு. அந்த முடிவை நீயே எடு. ஆனா அவங்க எப்படி என்னனு பழகிப்பாரு. அவங்களுக்கு ஒரு சான்ஸ் குடு. அப்புறம் சொல்லு. வாய்ப்பே குடுக்காம எப்போவோ நடந்ததை வெச்சு இன்னைக்கு முடிவு பண்றது சரி இல்லடா கண்ணா.. நடுவுல எவ்ளோவோ நடந்திருக்கலாம். அவங்க மனசு மாறி இருக்கும். அவங்க தப்பை உணர்ந்திருக்கலாம். சோ பாத்து நீயே யோசிச்சு சொல்லு. ஆனா உடனே டிசைட் பண்ணாத. இது அம்மாவோட ரிக்வ்யூஸ்ட்டா கூட எடுத்துக்கோ. இந்த விஷயம்னு இல்ல லைப்ல எப்போவுமே அவசரத்துல கோபத்துல ரொம்ப எமோஷனலா இருக்கும்போது முடிவெடுக்காத..மத்தபடி நீ சொல்றது தான். அவங்ககூட சாதாரணமா பழகு. உனக்கு அவங்க மேல நம்பிக்கை வந்தா கூட இருக்க பிடிச்சிருந்தா அப்போ அவங்ககூட போறத பத்தி யோசிக்கலாம். இல்லமா இப்டியே இருக்கலாம்னு சொன்னா ஓகே நீ நான் அப்பா ஜீவா இங்க இருப்போம். அப்போ அப்போ போயி பாத்திட்டு வருவோம். ஓகே வா? உனக்கு பிடிக்காத விஷயத்தை அப்பாவோ நானோ உன் மேல போட்டு திணிக்க மாட்டோம். சோ சந்தோசமா இரு. எப்போவுமே என் செல்லம் சிரிச்சிட்டே தான் இருக்கணும். அப்போதான் நாங்களும் ஹாப்பியா இருக்கமுடியும்.” என கூறி அவள் மூக்கோடு உரச ஜீவியும் பாரம் நீங்கி சிரித்துவிட்டாள். பின் அம்மாவின் மேலையே படுத்து சில நேரம் இருவரும் கதை பேசிக்கொண்டிருக்க திடீரென நேத்ரா “குட்டி மா, உனக்கு தெரிஞ்ச விஷயம் ஜீவா க்கு தெரியுமா?” என வினவ

ஜீவி “ம்ஹூம்.. அவன் விளையாடிட்டு இருந்தான் மா…நான் மட்டும் தான் கேட்டேன். அவன்கிட்ட சொல்லலாமானு பாத்தேன். ஆனா அவன் ரொம்ப கத்துவானா? அதனால உங்ககிட்ட பேசிட்டு அவன்கிட்ட சொல்லிக்கலாம்னு இங்க வந்துட்டேன்.” என கூற நேத்ரா “உப்ப்ப்ப்ப்ப்பப்..” என ஆசுவாசமாக ஜீவி சிரித்துவிட்டு “அவன்கிட்ட சொல்லவேண்டாம்ல…” என கண்ணடித்து கேட்க

நேத்ரா தன் மகளின் தலையோடு முட்டிவிட்டு “இப்போ வேண்டாம்.. அவன் வளரட்டும் பெரியவனானதுக்கப்புறம் கேட்டா அப்போவாது கோபத்தை குறைச்சுகிட்டா சொல்லலாம்…”

“மா ஒருவேளை எப்படியாவது அவனுக்கு தெரிஞ்சிட்டா..?”

“எல்லாரும் காலி தான். அவனை கண்ட்ரோல் பண்றதுக்குள்ள..” என நேத்ரா வருத்தம் கொள்ள ஜீவி “நீங்க பாசமா சொன்னா அவன் கேட்டுப்பான்மா..”

“அவனா…அதான் மதியம் பாத்தேனே…அவன் அப்டியே அவரு மாதிரி.. உடனே எல்லாத்துக்குமே கோபம் தான்…. ஆனா நீ திட்டி சொன்னாலும் ஜீவா கொஞ்சம் அடங்குறான்ல..” என கேட்க

தாயும் மகளும் கண்ணடித்து கொள்ள ஜீவி “அப்டினா இனி ஜீவா கத்துனா நீங்க அவன்கிட்ட பாசமா சொல்லுங்க நான் அவன்கிட்ட சண்டை போட்டு சொல்றேன்…” என கூறி

“குட்.. அப்போ உன் அப்பா கத்துனா..?”

“அப்டியே இதே மெத்தட மாத்திடலாம்…நான் அப்பாகிட்ட பாசமா பேசுறேன்.. நீங்க திட்டி சொல்லுங்க… அப்பா ஆஃப்… இரண்டுபேரும் ரொம்ப கத்துனா நாம இரண்டுபேரும் கிளம்பிபோறோம்னு சொல்லிடலாம். அப்போதான் அடங்குவாங்க..” என கூறி இருவரும் சிரித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-30ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-30

30 – மீண்டும் வருவாயா?   அவ்வழி வந்த வாணி வசந்த் இருவரும் இவர்களை பார்த்துவிட்டு அருகே வந்தனர். “என்ன டா இங்க உக்காந்திட்டே?” “தெரில வசந்த் ..ஏனோ இந்த இடம் பாக்க நல்லா இருக்கு. இங்கிருந்து பாரு பாக்கிற இடமெல்லாம்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-1ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-1

மீண்டும் வருவாயா? குழந்தைகளின் வருகை சொந்தங்களை இணைக்கும் என்றபோதிலும், குழந்தைகளை காரணம் காட்டி உறவுகளால் பிரிக்கப்பட்ட இரு மனங்களின் மௌனப்போராட்டம் தான் இங்கே நிகழ்வது. நம் வாழ்வில் மனிதர்கள் பின்பற்றும் நம்பிக்கைக்கும், மனித உணர்ச்சிகளுக்கும் இடையே நிகழும் இந்த பயணத்தில் விதி

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-21ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-21

21 – மீண்டும் வருவாயா?   வசந்த் “ஆனா ஏன்டா. அவங்க திரும்ப நேத்ரா வந்தாலும் ஏத்துக்கற மனநிலைல தானே இருந்தாங்க. அதுனால என்ன பிரச்சனை வரப்போகுது. ஏன் மறைக்க சொல்ற? அதோட இப்போ இந்த கல்யாணத்துக்கு என்ன அவசியம்?” ஜீவன்