Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 16

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 16

பனி 16

 

கிருஷி கால்களை நனைப்பதற்காக கோயிலின் குளத்தில் கடைசிப் படியில் நிற்க, அதே நேரம் மகாலிங்கம் அனுப்பிய ஆள் அவள் அவளை தன் புறம் திருப்பி வயிற்றில் கத்தியை இறக்க கையை ஓங்கும் அதே நேரம் அவளை குளத்தில் ஒரு கை அவள் காலை இழுக்க  “அம்மா” என்று குளத்தினுள் ‘தொப்’ என்று விழுந்தாள்.

 

இதை எதிர்பார்க்காத மகாவின் ஆள் குளத்தில் பாயும் முன் மற்றவர்கள் அங்கே வர அவன் அங்கிருந்து ஓடினான். கிருஷி உள்ளே விழுந்தவளை ஒரு வலிய கரம் அவள் இடையோடு கட்டிக் கொண்டு காட்டுப்புறம் இருந்த குளத்தினுள் நீந்தி அழைத்துச் சென்று கரைக்கு அழைத்துச் சென்றது. அவள் நீச்சல் தெரியாமல் இருந்ததால் நீரை விழுங்கி மயங்கி இருந்தாள்.

 

அவளை கரைக்கு அழைத்து வந்த நபர்

 

“குட்டி பேபி கண்ணை திற டி” என்று இரண்டு கன்னங்களிலும் தட்டினான் அவள் காவலனான ஆதி.

 

அப்போதே அவன் எவ்வாறு அவளை காப்பாற்றினான் என்பதை யோசித்துப் பார்த்தான்.

 

நேற்று மகாலிங்கத்தின் ஆள் ஆதியின் நண்பர்களிடம் கூற அவர்களும் தகுந்த ஆள் ஒருவரை நியமித்தான். ஆதிக்கு இந்தத் திட்டம் தெரியும் என்று அவனிடம் கூறவில்லை.  இன்று பகல் நண்பர்களுடன் அமர்ந்திருக்கும் போது,

 

“என்னடா எல்லோரும் டென்ஷனா இருக்கிங்க?” என்று ஆதி கேட்க,

 

“இல்லை டா இன்றைக்கு அந்த சிவபெருமாளோட பொண்ணை போடுறதுக்கு ஸ்கெச் போட்டு இருக்கோம். எல்லாம் நல்ல படியா நடக்க வேணுன்னு தான்” என்றான் ஒருவன்.

 

ஆதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

“என்னடா சொல்றிங்க? அவளை இன்றைக்கு போட போறிங்களா? எங்க வச்சு?” என்று அவன் தனது பதட்டத்தை வெளிக்காட்டாமல் கேட்க,

 

“இன்றைக்கு கோயிலை வச்சு தான், அவ சாயந்திரம் கோயில் போவாளாம் அப்போ தான்” என்றான்.

 

அப்போதே அவன் யோசித்து வைத்து விட்டான். தான் எவ்வாறு சென்றாவது அவளைக் காக்க வேண்டும் என்று. ஆனால் கோயிலில் எங்கு வைத்து என்று அவன் யோசிக்க குளக்கரையில் வைத்து மாத்திரமே ஆள்நடமாட்டம் குறைவாக இருக்கும். அதனால் அவ்விடத்தை தான் தெரிவு செய்து இருப்பார்கள். ஆனால் யார் கண்ணிலும் படாமல் தான் இருக்க வேண்டும் என்று யோசித்தவன் குளமே ஞாபகத்திற்கு வர அங்கே கிருஷி வர முன்னே குளத்தினுள் உள்ளே சென்று விட்டான்.

 

அவளுக்கு குளத்தில் தண்ணீரில் கால் கழுவுவது ஒரு பழக்கம் என்பதால் அவள் நிச்சயம் அங்கு வருவாள் என்று உறுதியாய் நம்பியவன், அவள் வரும் வரை உள்ளே இருக்க அவள் வந்தவுடன்,  அதே நேரம் வேறு ஒருவன் அவளை குற்ற வருவதைக் கவனித்தவன், அவள் காலை இழுக்க அவள் உள்ளே விழுந்தாள்……

 

“நவி மா” என்று மீண்டும் அவள் கன்னம் தட்ட அவளிடம் அசைவு தென்படவில்லை. வயிற்றை மெல்ல அழுத்தும் போதும் அசைவு இல்லை.

 

அவள் வாயை திறந்து இவன் வாய் மூலமாக மூச்சை வழங்க தண்ணீரை வாயின் மூலம் தண்ணீரை வெளியேற்றினாள். மெதுவாக கண்களைத் திறக்க, ஆதியைப் பார்த்தவள்  அனைத்தையும் மறந்து

 

“லக்ஷன்” என்று அணைத்துக் கொண்டு

 

“என்ன கொல்ல பாக்குறாங்க டா” என்று சிறு பிள்ளை போல குற்றச்சாட்டை வைத்து அழ,

 

அவளை அணைத்தவன், “உன்னை யாராலும் எதுவும் பன்ன முடியாது. என்னை மீறி தான் உன் மேலே கையை வைக்கனும், அதை யாராலும் முடியாத காரியம் நவி மா” என்றான் தீவிரமான குரலில்.

 

நடந்தவைகள் அனைத்தும் நினைவு வர தீச்சுட்டது போல அவனை தள்ளிவிட்டவள்,

 

“என்ன? என்னை ஒருத்தனை கொல்ல சொல்லிட்டு என்னை இப்போ காப்பாத்தினது போல நடிக்கிறியா?” என்று கத்த,

 

“ஆமான்டி, அதை தான் பன்னேன். நீ அந்த சிவபெருமாளோட பொண்ணு தானே? அதான். இவளோ சீக்கிரம் நீ சாக கூடாது, இன்னும் நீ நிறைய அனுபவிக்கனும்” என்றான் ஆதி.

 

“அதனே, ஒரு நிமிஷம் நீ நல்லவனோன்னு நம்பினேன், உன் உடம்புலையும் அந்த குடும்பத்து இரத்தம் தானே ஓடுது” என்றாள்.

 

“அந்த குடும்பத்து இரத்தமனு புரூப் பன்னனும் இல்லையா?” என்று அவன் நக்கலாக கேட்க,

 

அவள் கோபத்தில் முகத்தைத் திருப்பினாள்.  அவள் அருகில் வந்தவன் அவளை இழுத்து தன்னோடு அணைத்தவன்,

 

“என்னை திட்டும் போது என்னை பார்த்து தான் திட்டனும், நிலத்தை பார்த்து திட்ட கூடாது கிருஷ்ணவேனி சிவபெருமாள்” என்றான்.

 

அவன் பிடியில் இருந்து விடுபட திமிறியவள் முடியாதவளாக,

 

“உன்னை பார்த்து சொல்றதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை ஆதிலக்ஷதேவன், உன் முகத்தை கூட எனக்கு பார்க்க பிடிக்கல்லை” என்றாள் மறு பக்கம் திரும்பி.

 

அவள் கூறியதைக் கேட்டு ஒரு மனம் கவலைக் கொண்டாலும் அவள் கூறும் தோரணையில் சிரிப்பும் வந்தது.

 

“அதை என்னை பார்த்து சொல்லு குட்டிபேபி” என்று கூற

 

“அந்த பெயரை சொல்ற தகுதியை எப்பவோ இழந்துட்ட” என்று அவன் முகம் பார்க்க, அவன் கண்களைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.

 

அவள் கூறியது வெகுவாக வலியை உணர்ந்தவன், அவள் முகத்தையும் அவள் கண்களையும் பார்த்தவன், அதில் காதல், வலி, ஏமாற்றம், விரக்தி, பயம் அனைத்தையும் பார்க்க இருவரின் கண்களும் கண்ணீரைச் சுரந்தன.

 

அவள் வலியைப் பார்த்தவன் அவள் நெற்றியில் இதழ்பதித்து அணைப்பை இறுக்கினான். அவளுக்கும் அந்த அணைப்பு ஆறுதலாக இருந்தமையால் அவன் நெஞ்சில் முகம் புதைத்து கண்ணீர் வடித்தாள். எத்தனை நேரம் அவ்வாறே இருந்தார்களோ அவர்களே அதை அறிவர். தீடிரென்று இடிமுழங்கியதில் சுயநினைவு அடைந்த இருவருமே பிரிந்து நின்றனர்.

 

“தயவு செஞ்சு இதற்கப்பொறம் என் முன்னாடி வந்துராத லக்ஷன்” என்று அங்கிருந்து நகர,

 

“அவளோ சீக்கிரம் உன்னை விட மாட்டேன் கிருஷ்ணவேனி சிவபெருமாள்” என்றான் ஆதி.

 

இருவரும் இரண்டு திசைகளில் நகர அடைமழை பெய்யத் தொடங்கியது. இருவரும் முழுவதும் நனைய இருவரின் கண்ணீரும் அம்மழையின் துளிகளுடன் சேர்ந்து வடிந்தது.

 

கோயிலை விட்டு தனக்காக நிறுத்தி இருந்த காரின் அருகில் செல்ல, அவளுக்கு பாதுகாப்பாக வந்தவனில் வந்த ஒருவன்,

 

“சின்னமா, நீங்க கத்துற சத்தம் கேட்டது. அங்கே பார்த்தால் நீங்க இல்லை. ஒருத்தன் ஓடினான் அவனை பிடிக்கும் போது அவன் ஓடிட்டான். எங்கமா போனிங்க?” என்று அவன் பதட்டத்தில் கேட்க,

 

“குளத்துல கால் கழுவும் போது வழுக்கி உள்ள வந்துட்டேன், இங்க இருந்து ஓடியவன் என்னை கத்தியால் குத்த வந்தான். அதற்கு முன்னாடி நான் குளத்துல விழுந்துட்டேன்” என்றாள்.

 

“சரி மா உங்களை பத்துரமா ஐயா கொண்டு வந்து விட சொல்லி இருக்காரு. வாங்க வீட்டிற்கு போலாம்” என்று கூற அவளும் சென்று காரில் அமர்ந்துக் கொண்டாள்.

 

சென்னையில்…..

 

அங்கே ஒரு குடோனில்,

 

“என்ன அண்ணா இந்த போலிஸ் மோப்பம் பிடிச்சிட்டே இருக்காங்க? நல்ல வேலை அந்த DSP ஆதி ஊருக்கு போனதால் அவன் நம்மளை பிடிக்க இல்லை. அவன் போற ஸ்பீடுக்கு நம்மளையும் கண்டுபிடிச்சி நம்ம தலையையும் கண்டு பிடிச்சிடுவான்னு நினைச்சேன்” என்று கூற

 

அந்த அண்ணன் “அவனை சின்னதா இடை போடாத, அவன் அங்க இருந்தாலும் கேஸை பற்றி விசாரிச்சுட்டு தான் இருப்பான். அவன் பிரன்டு அந்த ACP விக்ரமன் இங்கே தான் இருக்கான், அதனால் அவன் இவன் கிட்ட சொல்லி ஒவ்வொரு ஸ்டெப்பையும் பார்த்து பார்த்து வைப்பான்” என்று கூறும் போதே அவனது மொபைல் அலறியது.

 

திரையைப் பார்த்தவன் புன்னகைத்து, “சொல்லுங்க MLL sir” என்று கூற

 

“எப்படி இருக்க குணா? ரகுவை போட்டதுக்கு அப்பொறமா உனக்கு தானே பிரச்சனை குறைஞ்சது. என்னை நான் சொன்னமாதிரி உனக்காக குணாவை போட்டு சரக்கையும் கொடுத்துட்டேன். நாளைக்கு வருகிற சரக்கை கவனமா எடுத்து வை” என்றான் MLL.

 

“சரிங்க சேர், இந்த உதவியை நான் எப்பவுமே மறக்க மாட்டேன். ஆனால் இந்த ஆதி அமைதியா இருக்கிறது எனக்கு சரியா பட இல்லை. பதுங்கி இருக்கிற புலி எப்போ பாயும்னு தெரியாது?” என்று குணா கூற

 

“அவனை டைவேர்ட் பன்றதுக்காக தான் அவன் ஊர்ல பிரச்சனையை கிளப்பிவிட்டேன், அதுல இரண்டு உசிரு போயிருச்சு. எனக்கு எதிரா இருக்கிறதுல ஒருத்தனும் அதுல போயி சேர்ந்துட்டான். பிரச்சனை இப்போ குறைஞ்சிருக்கு” என்று MLL கூற

 

“என்ன சேர் சொல்றிங்க? நீங்க தான் பன்னிங்களா?” என்று குணா ஆச்சரியமாக கேட்க,

 

“நான் தான் பன்னேன். என்னை நெருங்குறவங்க உயிரோட இருக்க கூடாது” என்று தீவிரமாக கூற குணாவே சற்று ஆடித்தான் போனான்.

 

“நீ நாளைக்கு வர சரக்கை பத்திரமா கைக்கு எடுக்குற வழியை பாரு, அதற்கு அப்பொறம் அடுத்த மாசம் வர இருக்கிற சரக்கு கோடி கணக்கு பொறுமதியானது” என்றான் MLL.

 

“சரிங்க சேர் நான் அப்போ வைக்குறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.

 

“யாருண்ணா போன்ல? நம்ம தலையா?” என்று அடியாள் ஒருவன் கேட்க,

 

“ஆமா டா, அவரை எங்களை போல் ரௌடிங்க யாருமே பார்த்தது இல்லை. ஒரே ஒருத்தர் தான் பார்த்து இருக்கான், அவனோட பாட்னர் தான்” என்று கூறி வேலையைப் பார்க்கச் சென்றான்.

 

அடுத்த நாள் காலையில் கிருஷியின் வீட்டில், கிருஷி அவளது அப்பா அம்மாவைத் தவிற அனைவரும் கோயிலுக்குச் சென்று இருந்தார்கள்.

 

கிருஷியின் அறைக்கு வந்த பெருமாள்

 

“வேணி மா, நீ வேலையா இருக்கியா?” என்று கேட்க,

 

“இல்லை பா சொல்லுங்க” எனும் போதே கனகாவும் உள்ளே வந்தார்.

 

“உனக்கு கல்யாணம் பன்னலாம்னு இருக்கோம்” என்று கனகா கூற

 

“அப்பா” என்று அவள் அதிர

 

“பயப்படாத மா, ஆதியை தான் உனக்கு கல்யாணம் பன்னி வைக்கலாமனு இருக்கோம்” என்று கூற

 

“அப்பா எனக்கு கல்யாணம் வேனாம் பா” என்று கலங்கிய குரலில் கூற

 

“யேன் மா, ஆதி ரொம்ப நல்ல பையன் மா, அவன் உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பான்” என்று கூற

 

“அவன் எனக்கு வேணாம் பா” என்று அழ

 

“யேன் மா அழற? உனக்கும் அந்த பையனுக்கும் ஏதாவது பிரச்சனையா? நான் வேணுன்னா அவன் கிட்ட பேசட்டா?” என்று கேட்க,

 

“அவன் தான் பா பிரச்சனை , அவனுக்கும் நமளுக்கும் ஒத்து வராது” என்று அழ

 

“வேணி அப்பா கிட்ட அழாமல் தெளிவா பேசு” என்று கனகா கூற

 

“அப்பா அவன் வேறு யாரும் இல்லை. அன்றைக்கு வீட்டிற்கு என்னை வந்த தேவ் தான். ராஜேஸ்வரி அம்மாவோட பையன்” என்று கூறி அழுதாள்.

 

சிவபெருமாள் அதிர்ச்சியில் கீழே அமர்ந்துவிட்டார். கனகாவும் அதிர்ந்து அவளைப் பார்த்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 21யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 21

பனி 21   சிவபெருமாள், அவரது குடும்பம் முழுவதுமே அவர்கள் இருவரையும் அதிர்ச்சியாய் பார்த்தது. தளிர் ஆதியைப் பார்த்து ஒருவரும் கவனியா வண்ணம் புன்னகைத்தாள். சிவபெருமாளின் ஆட்கள் அவர் அருகில் வந்து,   “ஐயா மன்னிச்சிருங்க, எங்களால் ஒன்னும் பன்ன முடியாதது

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 4யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 4

பனி 4   “அக்கா, அக்கா” என்று உள்ளே வந்தான் நேசன்.   “ஏன் டா கத்துற? மாமா தூங்குறாரு. நேற்று இராத்திரி அவரு வர ரொம்ப லேட் ஆகிறிச்சி” என்றார் சிவபெருமாளின் மனைவியான கனகவள்ளி.   ‘பசிக்குது அக்கா” என்று

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 23யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 23

பனி 23   “மச்சான் தங்கச்சை சமாளித்தாலும் உன் குடும்பத்தை சமாளிக்க முடியுமா?” என்று விகி கேட்க,   “கேள்வியை மாற்றி கேக்குற டா” என்றான் ஆதி.   “புரியிர மாதிரி சொல்லு?” என்று கூற   “என் குடும்பத்தை சமாளிப்பேன்,