Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 15

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 15

பனி 15

 

அடுத்த நாள் காலையில் கண் விழித்த கிருஷியை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அது வரையில் மூவரும் ஹொஸ்பிடலை விட்டு வெளியேறவில்லை. அவளுக்கு ஓய்வு எடுக்க கூறிய பிறகு, அவரவர் வேலைகளை கவனிக்கச் சென்றனர். சிவபெருமாள் தனியாக அமர்ந்து யோசித்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கே வந்த கனகா,

 

“என்னங்க யோசிக்கிறிங்க?” என்று கேட்க,

 

“வேணியை பற்றி தான். அவ மாரியோட இழப்புக்கு பிறகு ரொம்ப உடைஞ்சி போயிட்டா. டொக்டர் சொன்னது போல் அவளை கொஞ்சம் வெளியே கூட்டிட்டு போக வேணும். அவ வீட்டுலேயே அடைந்து இருந்தால் பழைய மாதிரி மாற மாட்டா” என்றார்.

 

“ஆமாங்க, நீங்க சொன்னது போல அவளை ஊரை சுற்றி காட்டனும், பக்கத்து ஊருக்கு சுற்றி பார்க்க சொல்லனும். ஆனால் அவளுக்கு பாதுகாப்பு பலமா இருக்கனும்” என்றார் கனகா.

 

“பாதுகாப்பை பற்றி பயப்படாத மா, நான் அதை பாத்துக்குறேன். அவளுக்கு காலா காலத்துல ஒரு கல்யாணம் பன்னி வச்சா நாமளும் நிம்மதியா பயப்படாமல் இருக்கலாம். அவ புருஷன் அவளை நல்லா பார்த்துப்பான்” என்றார் ஆதியை எண்ணிக் கொண்டு.

 

“அப்போ சரிங்க மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சா சரிங்க” என்று கூற

 

“நான் மாப்பிள்ளை ஒருத்தரை பார்த்து இருக்கேன்” என்று ஆதி பேசிய அனைத்தையும், கிருஷி கூறியதையும் கூறினார்.

 

“ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. துக்கம் நடந்த வீட்டில் ஒரு நல்லது நடக்குறது சந்தோஷம்ங்க, உடனே மாப்பிள்ளை வீட்டாளுங்க வர சொல்லலாம்” என்று கூற

 

“இல்லை வள்ளி, இப்போ வேணி நிம்மதியா இல்லை. அவளோட மனசு ஒரளவு சரியாகட்டும். அவ கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு, மாப்பிள்ளை கூட பேசலாம்” என்றார்.

 

“அதுவும் சரி தான். இதை மத்தவங்க கிட்ட சொல்லட்டுமா?” என்று கேட்க,

 

“இல்லை மா, இப்போ வேணாம் வேணி கூட பேசினதுக்கு அப்பொறமா பேசலாம்” என்று அவர் கூற, கனகாவும் ஒத்துக் கொண்டார்.

 

கிருஷியோ முழுமையாக ஆதியின் நினைவுகளில் இருக்க ஆதியும் அங்கு அதே நிலையில் தான் இருந்தான்.

 

அன்று காலை உணவை உண்பதற்கு டைனிங் டேபளில் அனைவரும் ஆஜராகி இருக்க, அமைதியாகவே அனைவரும் சாப்பிட்டனர். அந்த அமைதியை களைத்து திவியின் தாயே பேச்சை ஆரம்பித்தார்.

 

“கெட்டது நடந்த வீட்டுல ஒரு நல்லது நடக்கனுமனு சொல்லுவாங்க, நாம தேவ், திவ்யாக்கு கல்யாணம் பன்னி வைக்கலாமா?” என்று கேட்க,

 

“ஆமா அண்ணி, எனக்கும் இதில் முழு சம்மதம். நீங்க என்ன அண்ணி சொல்றிங்க?” என்று மகாலிங்கம் கேட்க,

 

சங்கரனிற்கு கண்ணில் ஏனோ ஒரு பெண்ணின் முகம் வந்துபோனது. அப் பெண்ணை தேவிற்கு திருமணம் செய்தால் என்ன என்று அன்று ஒரு நாள் சிந்தித்தது, இன்று நினைவிற்கு வர அவர் அமைதியாக இருந்தார்.

 

இதைக் கேட்ட திவ்யாவின் மனம் சந்தோஷத்தில் குதிக்க வெட்கப்பட்டு கீழே குனிந்தாள். தேவ் சாப்பிட்ட உணவை வைத்து விட்டு எழுந்துச் சென்றான்.

 

ராஜேஸ்வரி தன் மகனை பார்த்துக் கொண்டே இருந்தார். அவன் முகத்தில் திருமணத்தைப் பற்றி பேசும் போது அதில் ஒரு வெறுப்பே இருந்தது. அதே நேரம் வலியின் ரேகைகளை கண்டுக் கொண்டார். திவியை அவனுக்கு பிடிக்கவில்லை என்பதோடு அவன் மனதை வேறு ஒருவள் ஆக்கிரமித்துவிட்டாள் என்பதைக் கண்டுபிடித்தார். ஆனால் ஏன் அந்த வலியின் ரேகைகள் என்பதை மட்டும் அவரால் அறிய முடியவில்லை. எதுவாயினும் மகனின் விருப்பத்தை மீறி எதையும் செய்யக் கூடாது என்பதையும் முடிவு எடுத்தார்.

 

ஆதி வெளியே செல்ல எத்தனிக்க,

 

“என்ன தேவ் உடனே இங்கே இருந்து எந்திரிச்சி போனால் என்ன அர்த்தம்?” என்று மகாலிங்கம் கேட்க,

 

“என் கல்யாணத்தை பற்றி பேசுறது எனக்கு பிடிக்க இல்லைன்னு அர்த்தம். இதை பற்றி யாரும் இதற்கு அப்பொறம் என் கிட்ட பேசாதிங்க” என்று கூறி வேகமாக சென்றுவிட்டான்.

 

திவி தன்னை மாமாவிற்கு பிடிக்கவில்லையோ என்று அஞ்ச, அதைப் பார்த்த மகாலிங்கம்,

 

“ஒன்னும் இல்லை திவி மா, சூர்யா மேலே இவன் எவளோ பாசம் வச்சிருந்தான்னு நம்ம எல்லோருக்கும் தெரியுமில்லை? அதான் அவன் இன்னும் அதை விட்டுவெளியே வர இல்லை. நீ தேவையில்லாமல் எதையும் போட்டு குழப்பிக்காத” என்று கூறி சமாதானப்படுத்த அவளும் அதை ஏற்றாள்.

 

“திவி மா, நீ தான் அவனுக்கு பொன்டாட்டி அதில் எந்த மாற்றமும் இல்லை, சரி தானே அண்ணி?” என்று திவியின் அம்மா கேட்க,

 

“என் பிள்ளையோட சந்தோஷம் தான் என் சந்தோஷம்” என்று கூறி புன்னகைத்து அங்கிருந்து எழுந்து சென்றார்.

 

இந்த வீட்டின் மருகளாக ஆதியின் மனைவியாக கிருஷி இன்னும் சிறிது நாட்களில் இவ்வீட்டில் காலடி எடுத்து வைக்கப் போகிறாள் என்பதை யாரும் அறியவில்லை.

 

அனைவருக்கும் அவர் திவியை மருமகளாக ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்று குழம்ப, சங்கரன் மட்டும் அவர் எதுவாக இருந்தாலும் தேவிற்கு ஆதரவாக இருப்பதாக முடிவு எடுத்துக் கொண்டார்.

 

அன்றைய தினம் இவ்வாறு முடிவடைய கிருஷி அமைதியாகவே இருந்தாள்.

 

அடுத்த நாள் அவளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள ஆறிற்றிற்கு தளிர் அழைத்துச் சென்றாள். அவர்கள் இருவருக்கும் பாதுகாப்பிற்காக பதினைந்து பேர் அவ்விடம் சுற்றி இருந்தனர்.

 

“அக்கா யேன் கா இப்படி இருக்க? நீ சிரிச்சுட்டு இருந்தால் தான் அழகா இருப்ப” என்றாள் தளிர் அவள் தன் கவலைகளை மறைத்துக் கொண்டு.

 

‘நான் எப்படி டி உன் கிட்ட சொல்லுவேன் என் சித்தப்பாவையும் பறி கொடுத்து, என் காதலையும் பறிகொடுத்து இருக்கேன்னு, உனக்கு சொன்னாலும் புரியாதே’ என்று தன்னுள்ளே புலம்பினாள்.

 

“அக்கா இங்க வந்தால் நான் நாம உட்கார்ந்து இருக்கிற இடத்துல உட்கார்ந்து என் ஆளோட பாட்டு கேட்பேன்” என்றாள் தளிர்.

 

“அது யாருடி உன் ஆளு? அதுவும் பாட்டு படிக்கிறவரு?” என்று கிருஷி கேட்க,

 

“எல்லாம் நம்ம முகேன் தான்” என்று கண்ணடிக்க

 

“நல்லா வருவ” என்றாள் கிருஷி.

 

“இரு கா நான் பாட்டை போடுறேன்” என்று கூறி பாட்டை ஒலித்தாள்.

 

இதே நேரம் ஆதி நண்பர்களுடன் அமர்ந்து இருந்தான்.

 

“என்னடா ஒரு மாதிரி இருக்க?” என்று ஒருவன் கேட்க,

 

“எனக்கு கல்யாணம் பன்ன போறாங்களாம்” என்று கூற

 

“நல்ல விஷயம் தானே டா, நீ லவ் பன்ற பொண்ணை வீட்டுல சொன்னால் உடனே கல்யாணம் பன்னி வைக்கப்போறாங்க” என்று கூற

 

“கடுப்பாங்கதிங்க டா, எனக்கும் திவிக்கும் தான் கல்யாணமாம்” என்றான்.

 

“என்ன டா சொல்ற? அப்போ நீ இன்னும் சிஸ்டரை பற்றி சொல்லாமல் இருக்க? நீ சொன்னால் பிரச்சனை முடிஞ்சிறும் தானே?” என்று கேட்க,

 

அவன் விரக்தியாக சிரித்து விட்டு அமைதியானான்.

 

“ஏன் மச்சான் சிஸ்டர் கூட பிரச்சனையா?” என்று ராஜேஸ் கேட்க

 

அதற்கு பதில் இல்லாமல் போக, இன்னொருவன் மச்சான் என் கிட்ட  சிடுவேஷன் சோங் இருக்கு. அதை போடுறேன், என்று அவனும் ஒலிற விட்டான்.

 

காணாமலே போகதடி உன் நெனப்பில் நானும் இங்க

வேணாமுன்னு சொல்லாதடி

வேணுமுன்னே நீயும் நின்னு

ஏனோ ஏனோ உன்னை பார்க்காமலே கண்கள் ரெண்டில் கண்ணீர் குடியேறுதே

என் தோழி உந்தன் தோளில் தினம் சாயாமலே

என் பகல் இங்கு இருட்டிடுதே

 

யார் யாரோ  ஏதோ பேசி

உன் மனசை தான்

என் நெனப்ப அழிக்க பார்த்தா

அது முடியல்லன்னா

தன்னந்தனியா நடக்குறேன் காட்டுல

நான் இப்போ பொலம்புறேனா

வெள்ளம் ஏறுது மனசு முழுசா உன் பூமுகம் தான்

 

உள்ளுக்குள்ளேயே என்னை வச்சியே

நீ என்னை தச்சியே

உன் உசுருக்குள்ள

உள்ளுக்குள்ளேயே உன்னை வச்சியே

உன்னை தச்சியே

என் உசுருக்குள்ல

நனே நனே நா

அன்பே…..

 

கண்ணுக்குள்ளே தோன்றிடும் காட்சிகள்

முகமானது உன் முகமானது

கண்ணீர் இங்கு அலையென தேங்கி நதியானது

அது கடலானது

 

நீந்திதான் பார்க்கும் அந்நாள் நீந்தி வருவேன்

உனை பார்க்கவே

மரணம் எனை சீண்டினா

உனக்காகவே உயிர்வாழ்வேனே

 

யார் யாரோ  ஏதோ பேசி

உன் மனசை தான்

என் நெனப்ப அழிக்க பார்த்தா

அது முடியல்லன்னா

தன்னந்தனியா நடக்குறேன் காட்டுல

நான் இப்போ பொலம்புறேனா

வெள்ளம் ஏறுது மனசு முழுசா உன் பூமுகம் தான்

 

என்று பாட இருவருமே தங்களை நினைத்துப் பார்க்க இருவரின் கண்களும் கலங்க ஒருவரும் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டனர்.

 

“டேய் இது சிடுவேஷன் சோங்கா?” என்று ராஜேஸ் கேட்க,

 

மற்றவர்கள் அவனை முறைக்க அவன் ‘ஈஈஈ’ என்று இழிக்க அதில் கடுப்பானவர்கள் அவனை அடி பின்னி எடுத்தனர்.

 

இதைப் பார்த்து ஆதி சிரித்தான்.

 

இவ்வாறே இரண்டு நாட்கள் கிருஷியை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்றாள். அவளால் ஆதியை மறக்க முடியாமல் கஷ்டப்பட, மற்றவர்களுக்கு அது புலப்படா வண்ணமும் பார்த்துக் கொண்டாள். ஆதியோ அங்கு எதிலும் பிடி கொடுக்காமல் இருக்க மகாலிங்கம் தனது ஆட்களை வைத்து கிருஷி செல்லும் இடங்களை விசாரித்து அவளை கொல்வதற்கு நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

 

“ஐயா அந்த வேணி பொண்ணு கோயிலில் இருக்கும் போது மட்டும் தான் அவளை சுற்றி யாருமே இருக்க மாட்டாங்க” என்று ஒருவர் கூற

 

“அப்போ அவளை கோயிலை வச்சி தான் போடனும்” என்று மகாலிங்கம் கூற

 

“ஐயா கோயிலில் வச்சி கொலை பன்ன கூடாது” என்று அவன் கூற

 

“அதெல்லாம் பார்த்தால் அவளை கொல்ல முடியாது. அவளை கொல்றதுக்கு இருக்கிற வாய்ப்பை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது” என்றார் உறுதியாக.

 

அவன் அமைதியாக இருக்க,

 

“நாளைக்கு அவ கோயிலுக்கு வருவாளா?” என்று கேட்க

 

“ஆமா ஐயா தினமும் சாயந்தரம் அந்த பொண்ணு கோயிலுக்கு போகும்” என்றான்.

 

“நாளைக்கு கோயிலில் வச்சி தான் போடனும். கதையை கச்சிதமா முடிக்க சொல்லு” என்று தன் திட்டம் முழுவதையும் அவனிடம் கூறினான்.

 

அவனும் சரியென்று அங்கிருந்து சென்றான்.

 

“கிருஷ்ணவேனி சிவபெருமாள் உன்னோட கடைசி நாள் இந்த உலகத்துல நாளை தான். இன்றைக்கு சந்தோஷமா இரு” என்று ஆக்ரோஷமாக கத்தினார் மகாலிங்கம்.

 

அடுத்த நாள் மாலையில் கிருஷி கோயிலுக்குள் நுழைய அவளுக்கு பாதுகாப்பிற்கு வந்தவர்கள் வெளியே இருக்க அவள் மாத்திரம் கோயிலுக்குள் நுழைந்தாள்.

 

சாமி கும்பிட்டுவிட்டு மன அமைதிக்காக பின்னால் இருந்த பெரிய குளத்தின் படிகட்டுகளில் அமர்ந்து இருந்தாள். கால்களை நனைக்கலாம் என்று தண்ணீரில் கால் நனைக்க அதே நேரம் வேறு ஒருவன் அவளை மறு புறம் திருப்பி அவள் வயிற்றில் கத்தியை இறக்க கத்தியை ஓங்கினான்.. அங்கு கிருஷியின் “அம்மா” என்ற குரலே கேட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 16யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 16

பனி 16   கிருஷி கால்களை நனைப்பதற்காக கோயிலின் குளத்தில் கடைசிப் படியில் நிற்க, அதே நேரம் மகாலிங்கம் அனுப்பிய ஆள் அவள் அவளை தன் புறம் திருப்பி வயிற்றில் கத்தியை இறக்க கையை ஓங்கும் அதே நேரம் அவளை குளத்தில்

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 1யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 1

பனி 1   நிலா நடு வானத்தில் வந்து தனது ஒளியை முடியுமானளவு அந்த ஊரிற்கு வழங்க, அந்த நிலாவின் வெளிச்சத்தில் அந்த ஆள் அரவமற்ற வீதியில் உயிர் பயத்தில் ஓடிக் கொண்டிருந்தான் ஒருவன். அவனைத் தொடர்ந்து பலர் கைகளில் அறுவாளுடனும்,

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 36யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 36

பனி 36   ஆதி அனைத்தையும் கூறி முடித்து,   “இப்போ சொல்லு திவ்யா? என் வைப் எதிரியோட பொண்ணா? சொல்லு” என்றான்.   அவள் அமைதியாக இருக்க,   “அம்மா இவ இருக்கிற வீட்டில் என் மனைவிக்கு ஆபத்து இருக்கு.