Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 14

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 14

பனி 14

 

கிருஷி தனது மனக் கவலைகளைக் பவியிடம் கூறி அழுதாள். இடையில் அவள் அதிகமாக அழும் போது மூர்ச்சையாகி மயங்கிச் சரிந்தாள்.

 

பவி மறுபுறம் ஏதும் சத்தம் வராமல் போக,

 

“கிருஷி பேசுடி” என்று பேச எந்த சத்தமும் இல்லாமல் போக,

 

“கிருஷி” என்று கத்தினாள்.

 

கிருஷியின் அழைப்பைத் துண்டித்தவள் உடனேயே கிருஷியின் அண்ணன் ராமனுக்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.

 

“அண்ணா  நான் பவித்ரா பேசுறேன், எங்க இருக்கிங்க?” என்று பதட்டமாக கேட்க,

 

“வீட்டில் தான் மா, யேன் பதட்டமா பேசுற?” என்று கேட்க,

 

“அண்ணா இப்போ கிருஷி கூட பேசிட்டு இருந்தேன். திடீர்னு அவ பேசவே இல்லை அண்ணா. பயமா இருக்கு அண்ணா. போய் அவளை கொஞ்சம் பாக்குறிங்களா?” என்று கேட்க

 

“என்னமா சொல்ற?” என்று பதறி உடனே நான்கு தாவல்களாக படி ஏறி அவளறைக்கு ஓடினான் ராம்.

 

“வேணி மா கதவை திறடா, அண்ணா வந்திருக்கேன்” என்று கதவைத் தட்ட பேச சத்தமே வராமல் போக,

 

“வேணி, வேணி” என்று பல முறை தட்டினான். ஆனால் அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் இருந்தது.

 

தனது தோள்களைக் கொண்டு கதவை இடித்தான். அந்தச் சத்தம் கேட்டு மற்றவர்களும் இங்கே ஓடி வர

 

சிவபெருமாள் “தம்பி என்னாச்சு பா?” என்று பதற

 

அனைத்தையும் கூற அவரும் கலங்கி விட்டார். ராமுடன் சேர்ந்து மேலும் இருவர் தோளால் கதவை உடைக்க அது உடையவில்லை. பழங்காலத்து தேக்கையால் உருவாக்கப்பட்ட அந்தக் கதவு இலகுவாக உடையவில்லை.

 

இன்னும் இருவர் சேர்ந்து மொத்தமாக ஐந்து பேர் சேர்ந்து உடைக்க அப்போதே, ஓரளவு அசைந்தது. அனைவரும் தத்தம் பலத்தை ஒன்று திரட்டி உடைக்க அப்போதே உடைந்தது. உள்ளே சென்ற ராம் பார்த்தது மயங்கிய நிலையில் இருந்த கிருஷியைத் தான்.

 

அவளைத் தன் கைகளில் ஏந்தியவன் உடனியாக ஹொஸ்பிடலிற்கு அழைத்துச் சென்றான். அவனுடன் கனகா, சிவபெருமாள் போன்றோர் சென்றனர். அவளை எட்மிட் செய்த உடனேயே டாக்டர் அவளை பரிசோதிக்க ஆரம்பித்தார். பின் அவளுக்கு டிரிப்ஸ் ஏற்றப்பட்டது. வெளியே வந்தவர் அவர்களிடம்,

 

“பயபடுறது போல ஒன்னும் இல்லை.  அவங்க ரொம்ப அழுது இருக்காங்க. ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க. ரெஸ்ட் எடுத்தால் சரியாகும். அவங்க மனசு அமைதியா இருக்கிறது போல பார்த்துக்கொங்க” என்று கூறி அங்கிருந்து சென்றார்.

 

மூவரும் உள்ளே சென்று வாடிய கொடியாய் இருக்கும் கிருஷியைப் பார்க்க அவர்களின் கண்களும்

கலங்கிவிட்டன. அருகில் வந்த சிவபெருமாள் வாஞ்சையாய் அவள் தலையை வருடினார். ராம், கனகா இருவரும் மறுபுறம் சென்று நின்றனர்.

 

கிருஷியை வெட்ட வந்த ஆதி மகாலிங்கம் அழைத்ததும் அவளை ஒரு முறை திரும்பி பார்த்து தன் கண்களில் நிரப்பிக் கொண்டு அங்கு இருந்து சென்றான்.

 

ஜீப்பில் சென்று அமர்ந்தவன் கிருஷியின் நினைவுகள் முழுமையாக ஆக்கிரமித்து இருந்தன. அவனால் தன் காதலி சிவபெருமாளின் மகள் என்பதை ஜீரணிக்க முடியாமல் இருந்தான். எத்தனை கனவுகளுடன் வந்தவன் இன்று ஒரே நொடியில் அனைத்தும் தவிடுபொடியானதை நினைத்து அவன் மனது ஊமையாய் கதறிக் கொண்டது.

 

“யேன் டா அவளை விட்ட?” என்று மகாலிங்கம் கேட்க,

 

அவரைப் பார்த்து விரக்த்தியாய் புன்னகைத்தவன் “நம்ம பிரச்சனையில் பெண்களை எதுக்கு இழுக்கனும்?” என்று கேட்க,

 

அவனை வித்தியாசமாக பார்த்தவர் அதன் பிறகு அமைதியாய் இருக்க அவனின் நண்பன் ராஜேஸ் மட்டும் அவனின் ஒவ்வொரு நடவடிக்கையும் பார்த்தவனுக்கு சந்தேகம் அதிகரித்தது. ஆனால் அவன் ஏதும் பேசவில்லை.

 

வீட்டிற்கு வந்தவன் ஜீப்பில் இருந்து இறங்கியவன்,நேரடியாக தன் தந்தையின் படத்தின் முன் சென்று அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான். கண்களை மூடியவன்  கைகளை எடுத்துக் கும்பிட அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய அதை வேகமாக துடைத்தவன்,

 

“என்னை யாரும் டிஸ்டர்ப் பன்ன வேணாம்” என்று பொதுவாக அனைவருக்கும் கூறி விட்டு தனது அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டான். அங்கேயும் அவனால் நிம்மதியாக இருக்க முடியாமல் அறையில் இருந்து வெளியே வந்தவன் அதே தளத்தில் இருந்த கடைசி அறைக்கு நுழைந்தான்.

 

அவன் மனம் கஷ்டமாகவோ, குழப்பமாகவோ  இருக்கும் போது பொதுவாக அவன் அவ் அறைக்குச் செல்வது அனைவரும் அறிந்ததே. அவன் சூரியாவின் இறப்பினால் தான் இவ்வாறு இருக்கிறான் என்று தவறாக நினைக்க, ராஜேஸ்வரிக்கு மட்டும் அவர் மகன் நடவடிக்கைகள் வித்தியாசமாக தென்பட்டது. நேற்று இரவு, காலையில் தெளிவாக இருந்தவன் முகத்தில் ஏன் இத்தனை கஷ்டம்,குழப்ப ரேகைகள் என்று தாயுள்ளம் எண்ணியது.

 

அவ்வறைக்குள் வந்தவன் சீராக மூச்சை இழுத்துவிட்டான். உள்ளே நுழையும் போது கண்களை அறை முழுவதும் சுழல விட்டான். ஒரு நபர் பயன்படுத்துவதற்கான அத்தனையும் அங்கு இருந்தது. சுவரைப் பார்க்க ஆள் உயரத்தில் ஒரு புகைப்படம். அந்த உருவம் இவனைப் பார்த்து புன்னகைப்பது போல் இருக்க அவனும் புன்னகைத்தவாறே அந்த படத்தை வருட அவன் அனுமதியின்றி கண்களும் கண்ணீரைச் சுரந்து வழிந்தது.

 

“தேவ் நில்லு தேவ் ஓடாத” என்று அவ் உருவம் ஐந்து வயது சிறுவனான ஆதியைத் துரத்த, பின்னால் திரும்பி அவ்வுருவத்திற்கு திரும்பி பழிப்புக் காட்டி வேகமாக ஓடி விட்டான்.

 

பழைய நினைவுகள் தாக்க கண்ணீரை துடைத்தான்.

 

அப்படத்தின் கீழ் அமர்ந்தவன் கால்களை மடக்கி அதனுள் முகம் புதைத்து அழ, அவ்வுருவம் அவன் தலையை வருடுவது போல் இருக்கவும்

 

“இப்ப கூட நீ என் பக்கத்துல இருக்கிறது போல தான் இருக்கு. நான் ஏன் இங்கே வந்திருக்கேன் தெரியுமா? நான் தோத்துபோயிட்டது போல இருக்கேன்” என்று அழுதான்.

 

“கிருஷி என்னோட மனைவியா நினைச்சே இருந்துட்டேன். இப்போ அவ அந்த சிவபெருமாளோட மகளா இருக்கா. அவளை காதலிக்கும் போது என் மனசு அவ உனக்கானவ தான்னு சொல்லிச்சு. இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் அதை தான் என் மனசு சொல்லுது. ஆனால் சூரியன் மேற்கில் உதிக்கிறது எப்படி நடக்காதோ அதே போல இதுவும் நடக்காத காரியம். என் மனைவி எப்படி இருக்கனும்னு நான் எதிர்பார்த்தேனன்னு உனக்கு நல்லா தெரியும். அப்படீயே தான் என் நவி இருந்தா. இப்போ என் நவி இல்லையே. அவ சிவபெருமாளோட பொண்ணு கிருஷ்ணவேனி சிவபெருமாள்” என்று கண்ணீரை துடைத்து எழுந்து அப்படத்தை பார்த்தான்.

 

“எனக்கு ஒன்னும் வேணாம். நான் அவளை எப்படியாவது மறக்கனும், அவளை வெறுக்கனும். என் நவி யா பார்க்குறதை விட்டு சிவபெருமாளோட பொண்ணா மட்டும் தான் நான் அவளை பார்க்கனும். அவ அப்பாவால் தான் நான் என் அப்பா, உன்னை, உன் சந்தோஷத்தை பறி கொடுத்து இருக்க. அவ அப்பாவிற்கு கண்டிப்பா ஒரு பாடத்தை புகட்டியே ஆகனும்” என்றான் உறுதியாக.

 

அந்தப் படத்தில் உள்ள தூசியைத் துடைத்தவன் பார்த்து அதிர்ந்தான்.

 

“பார்த்தியா இப்போ கூட தப்பு தப்பா யோசிக்கிறேன், என் பொலிஸ் புத்தி எல்லாதையும் சந்தேகமாவே பார்க்குறேன்” என்று தலையில் அடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தான். அவன் சந்தேகம் உண்மையானது என்று வெகு நாட்களுக்குப் பிறகே அறிவான்.

 

“என் மனசு அவ கிட்ட இருந்து முழுசா வெளியே வர மாட்டேங்குதே, இந்த கொஞ்ச நேரம் கூட எனக்கு அவளை வேணியா பார்க்க முடியல்லை. என் நவியா தான் பார்க்குறேன். என்னால் முடியல்லையே” என்று கீழே அமர்ந்து அழுதான்.

 

அவனுக்கு விகி அழைப்பை ஏற்படுத்தி நிலமையை விசாரிக்க ஆதி எந்த பதிலும் கூறாமல் அமைதியாய் இருந்தான்.

 

“மச்சான் லைனில் இருக்கியா?” என்று விகி கேட்க,

 

“இருக்கேன் டா” என்றான் வேண்டா வெறுப்பாக.

 

“யேன் டா ஒருமாதிரி பேசுற? காலையில் கூட தெளிவா பேசினியே இப்போ என்னடா ஆச்சு? சொல்லுடா?” என்றான் விகி.

 

விகியிடம் எதையும் மறைக்காதவன் இன்று இவனிடம் பேசினால் மனம் அமைதியாக இருக்கலாம் என்று நடந்த அனைத்தையும் கூறி உடைந்து அழுதான்.

 

“மச்சான் அப்போ கிருஷி அந்த எம்.எல்.ஏ சிவபெருமாளோட பொண்ணா?” என்று கேட்க,

 

“ஆமா டா, என் நவி சென்னையிலேயே காணமால் போயிட்டா, இவ சிவபெருமாளோட பொண்ணா இருக்கா” என்று கலங்கிய குரலில் கேட்க,

 

“கிருஷியை வெட்ட போயிருக்கியே அது ரொம்ப தப்பு டா, நீ ஒரு பொலிஸ் அதை மறந்திருக்க. ஆத்திரக்காரனுக்கு புத்திமத்திமம்னு சொல்லுவாங்க, உன் விஷயத்துல அது உண்மை டா, அந்த இடத்துல கிருஷி இல்லாமல் வேறு யாராவது இருந்து இருந்தால் நீ நிலமையை யோசிச்சு பார்த்தியா?” என்று விகி கேட்க,

 

“ஆமா டா, நான் தப்பு பன்ன இருந்ததை அவளால் தடுத்து நிறுத்தி இருக்கேன். சூர்யா மாமாவை பற்றி தான் உனக்கு தான் தெரியுமே? எந்த வம்புக்கும் போக மாட்டாரு. யாரையும் போகவும் விட மாட்டாரு. அவரை போய் கொன்னுட்டாங்களே அந்த கோபத்துல தான் டா இப்படி பன்ன போயிட்டேன்” என்றான்.

 

“சரி நடந்ததை விடு, இனி என்ன பன்ன போற?” என்று கேட்க,

 

“தெரியல்லியே, என்னால் அவளை மறக்கவும் முடியல்லை. மறக்காமல் இருக்கவும் முடியல்லை” என்றான்.

 

“நீ அவளை மறக்காத டா, பேசாமல் அவளையே கல்யாணம் பன்னிக்க” என்றான் விகி.

 

“பைத்தியமா டா பிடிச்சிருக்கு உனக்கு? அந்த சிவபெருமாளோட பொண்ணை எப்படி டா கல்யாணம் பன்னிக்க முடியும்?” என்று கத்த

 

“இந்த கல்யாணத்தால ஒரு வேளை இரண்டு குடும்பமும் ஒன்னாகலாம் டா” என்றான்.

 

“இரண்டு குடும்பமும் ஒன்னாகாது, இரண்டு குடும்பதிலேயும் ஒருத்தனும் உயிரோட இருக்க மாட்டான்.. மூன்றாம் உலக யுத்தத்தை இங்கே பார்க்கலாம், இதை போல கேவலமா பேசாமல் போய் வேலையை பாரு” என்று அழைப்பை துண்டித்து மொபைலை சைலன்டில் போட்டு அங்கிருந்த கட்டிலில் சென்று கால்களை சுருக்கி நவியின் நினைவுகளில் கண்ணீர் வடித்தான்.

 

சிவ பெருமாள் மகளுக்கு ஆசைபட்ட வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்து அவளிடம் பேச தயாராய் இருந்தார். மறுபுறம் மகாலிங்கம் கிருஷியை கொலை செய்ய தன் திட்டத்தை தீட்டி முடித்து இருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 9யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 9

பனி 9   திவி கூற ஆதி கற்பனை செய்துக் கொண்டு இருந்தான். மணகளாக கிருஷியைக் கண்டவுடன் அவன் உதடுகள் ‘நவி’ என்று கூறின. வேகமாக கண்ணத் திறந்தவன் முன்னால் இருப்பவர்களைப் பார்த்தான். அவர்கள் இருவரும் இவன் திடீரென்று கண்களை திறந்ததில்

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 18யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 18

பனி 18   “மாமா நான் வேணியை கல்யாணம் பன்னிக்குறேன்”என்றான் நேசன்.   “நேசன், நீயா? ஆனால் அவ இதை ஒத்துகுவாளான்னு தெரியாது” என்று பெருமாள் கூற   “மாமா இப்போ கேட்டால் யாரையும் கல்யாணம் பன்னமாட்டேன்னு உறுதியா சொல்லுவா. கொஞ்ச

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 35யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 35

பனி 35   ஒரு நாள் ஆதி கிருஷியின் ரிபோர்ட் எடுக்கச் சென்று இருந்தான். கிருஷி அறையில் அடைந்திருக்க முடியாமல் கீழே செல்ல வர மாடிப்படிகளில் இறங்கும் போது அவளுக்கு தலைவலி ஏற்பட்டது. அவள் ஒரு கையால் தலையைப் பிடித்து மறு