Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 12

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 12

பனி 12

 

பவியின் வீட்டிற்குச் செல்லும் வழியில் கிருஷி மொபைலில் ஏதோ செய்ய,

 

“என்ன டி பன்ற? அதுவும் சிரிச்சிகிட்டே?” என்றாள் பவி.

 

“இன்றைக்கு 12.36க்கு தான் லக்ஷன் புரொபோஸ் பன்னான். அதான் சேவ் பன்னி வைக்குறேன்” என்றாள்.

 

“அதான் உனக்கு ஞாபகம் இருக்குல்ல? எதுக்கு சேவ் பன்ற?” என்று பவி கேட்க,

 

“அடுத்த வருஷம் இதே நேரம் எனக்கு ஞாபகம் இருக்காதுல்ல? அதனால் தான் ரிமைன்டரில் வைக்குறேன்” என்றாள் கிருஷி.

 

இருவரும் வேறு சில கதைகள் பேச சிவபெருமாள் கிருஷிக்கு அழைப்பை ஏற்படுத்தினார்.

 

“ஹலோ அப்பா சொல்லுங்க” என்றாள்.

 

“எங்க மா இருக்க?” என்று அவர் கேட்க,

 

“நான் பவி வீட்டிற்கு போயிட்டு இருக்கேன் பா, ஆமா ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு?” என்று அவள் கேட்க,

 

“அது வந்து மா” என்று அவர் அழுகையை கட்டுபடுத்திக் கூற,

 

“அப்பா அழறிங்களா? என்னாச்சு பா? எனக்கு பயமா இருக்கு பா, சொல்லுங்க பா?” என்று அவளும் கண்கலங்கிக் கேட்க,

 

“வீட்டிற்கு உடனே வர முடியுமா?” என்று அவர் கேட்க,

 

“சரி பா வரேன், என்னாச்சுன்னு சொல்லுங்க பா” என்றாள்.

 

“உன் சித்தப்பாவை கொன்னுட்டாங்க டா” என்று அழ

 

“அப்பா” என்ற வார்த்தையைத் தவிற வேறெதுவும் அவளால் பேச முடியவில்லை கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்துக் கொண்டே இருந்தது.

 

“வேணி மா” என்று பேச, அவளால் பதில் அளிக்க முடியவில்லை.

 

“அப்பாவை பதறை வைக்காத டா ஏதாவது பேசு மா” என்றார்.

 

“அப்பா நான் ஊருக்கு வரேன்” என்று அழைப்பைத் துண்டித்து அந்த பஸ் இலிருந்து இறங்கி தனது ஊரிற்குச் செல்லும் பஸ்ஸில் ஏறினாள்.

 

சிவபெருமாளுக்கு இரண்டு தம்பிகள் மூத்தவன் மாரியப்பன், இளையவன் ராஜாராம். இருபத்து மூன்று வருடங்களுக்கு முன் நடந்த சண்டையில் அவர் இறந்தார். அதுவும் ராஜேஸ்வரி குடும்பத்தினரால் கொல்லப்பட்டார். சிவபெருமாள், அவரது மனைவி கனகவள்ளிக்கும் இரண்டு பிள்ளைகள் ராமன், கிருஷ்ணவேனி. ராமன் சில மாதங்களுக்கு முன்பு நந்தனியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டான். தற்போது நந்தினி 4 மாத கருவை சுமந்துக் கொண்டு இருக்கிறாள்.

 

மாரியப்பன் அவரது மனைவி ரம்யாவிற்கும் இரண்டு பிள்ளைகள் 15வயதான ருத்ரன், 19 வயதான இளந்தளிர் என்போர். கனகவள்ளியின் தம்பியே நேசன். அவன் தனது அக்கா திருமணம் செய்த பிறகு தனக்கு அக்காவைத் தவிற வேறு உறவு இல்லை என்பதால் அவருடனே அங்கேயே வந்துவிட்டான். அனைவருக்கும் கிருஷி என்றால் செல்லம். அதில் சிவபெருமாளுக்கு உயிர் என்றே கூறலாம்.

 

சென்னையில் கிருஷியின் சிந்தையில் இருந்தவனை களைத்தது அவனது மொபைல்..

 

“ஹலோ சொல்லுங்க மா” என்று கூற

 

“எங்கே இருக்க?” என்று கூற

 

“ஸ்டேஷனில் தான் மா” என்றான்.

 

“வீட்டிற்கு உடனே வா” என்றார்.

 

“அம்மா என்னாச்சு?” என்று அவன் கேட்க,

 

“அம்மா நான் சொல்றேன் வீட்டிற்கு உடனே வா” என்று அழைப்பைத் துண்டித்தார் ராஜேஸ்வரி.

 

இதில் இருந்தே தன் தாய் எத்தனை கோபத்தில் உள்ளார் என்பதை தெரிந்துக் கொண்டான்.

 

உடனே தன் சித்தப்பா சங்கரனிற்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

 

“சித்தப்பா என்னாச்சு?” என்று கேட்க,

 

“இப்போ எதையும் சொல்கிற நிலமையில் இல்லை தேவ். ரொம்ப பெரிய பிரச்சனை, வீட்டிற்கு உடனே வா” என்று உடைந்த குரலில் கூற

 

ஏதோ பெரிய தவறொன்று நடந்து விட்டது என்பதை உறுதி செய்துக் கொண்டு கமிஷனரிடம் கூறி ஊரிற்குச் சென்றான்.

 

ஊரினுள் நுழையும் போது இரவாகி இருந்தது, தன் வீட்டிற்கு நுழையும் போது வீட்டின் முன் ஊரில் உள்ள அத்தனை பேரும் அங்கு இருந்தனர். சிலர் மௌனமாக கண்ணீர் வடிக்க வீட்டினுள் ஓலமிடும் சத்தம் கேட்க, அவனது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. ஹாலிற்கு வந்தவன் அனைவரையும் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் ‘தொப்’ என்று கீழே அமர்ந்தான்.

 

“தேவ்” என்று சங்கரன், மகா இருவரும் அவன் அருகில் செல்ல

 

“சித்தப்பா, சூர்யா மாமா” என்பதைத் தாண்டி அவனுக்கும் பேச்சு எழவில்லை.

 

“மச்சான் சூர்யா மாமாவை அவனுங்க கொன்னுட்டாங்க டா” என்று அவனைக் கட்டிபிடித்து அழுதான் அவன் நண்பனான ராஜேஸ்.

 

அவனும் சூரியாவின் உடலைப் பார்த்துக் கொண்டு கண்ணீர் வடித்தான்.

 

கண்ணீரைத் துடைத்தவன் “சித்தப்பா என்ன நடந்தது?” என்று கேட்க,

 

மகா நடந்ததைக் கூற ஆரம்பித்தார்.

 

இன்று காலையில் சந்தையில் ஒரு நிலம் ஏலத்திற்கு வந்தது. அதை வாங்குவதற்காக இரு குடும்பத்தினரும் சென்று இருந்தனர். அங்கும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே திரிந்தனர். ஏலத்திற்கு சிவபெருமாள் வீட்டு சார்பாக நேசன், மாரியப்பனும், ராஜேஸ்வரி வீட்டின் சார்பாக சூர்யாவும் மகாலிங்கமும் சென்று இருந்தனர்.

 

அதில் ஏலம் ராஜேஸ்வரி வீட்டிற்குச் செல்ல அதில் கோபமடைந்த நேசன் அவர்கள் குடும்பத்தைப் பற்றி தவறாகப் பேச அதற்கு மகாவும் திருப்பிப் பேச வாய்வார்த்தைகள் கடுமையாக மாறி வாய்சண்டை கைகலப்பாக மாறியது. அவர்களின் குடும்பத்தில் ஒருவரை கொல்ல வேண்டும் என்று துடித்த நேசன் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மகாவை வெட்ட போக இடையில் சூர்யா பாய்ந்ததால் அவரின் முதுகில் கத்தி இறங்கியது. அதில் அவர் கத்த மற்றவர்கள் சுதாகரித்துக் கொண்டனர்.

 

சூர்யா இடையில் பாய்ந்ததால் கோபமுற்ற நேசன் அவரை சாராமாரியாக வெட்டினான். அதில் கோபமடைந்த மகாவின் ஆட்கள் மாரியப்பனை வெட்ட சூர்யா, மாரி இருவரின் உயிரும் அங்கேயே பிரிந்தது. பொலிஸார் வருகை தந்து அனைவரையும் பிரித்தனர். மகா, நேசன் இருவருக்கும் அதிர்ச்சியே சூர்யா, மாரி இறந்தது.

 

என்று நடந்ததைக் கூறி முடித்தார்.

 

இதைக் கேட்ட ஆதி கொதிநிலைக்கே சென்றுவிட்டான். ஏதோ முடிவு எடுத்தவன் தன் நண்பர்களை தனியாக அழைத்துச் சென்றான். பின் சில விடயங்களைக் கூற அவர்களும் சரி என்று கூறி அங்கு இருந்து விடைப் பெற்றனர்.

 

நேரடியாக தனது சித்தப்பாவிடம் வந்து அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறினான். அவனது உறுதி ஏதோ முடிவு எடுத்துவிட்டான் என்பதை கூறியது. வெளியே சென்ற நண்பர்கள் சிறிது நேரத்தில் வந்து ஏதோ கூற அவன் யோசித்து ஏதோ கூற, அவர்களும் ஒத்துக் கொண்டனர். அடுத்த நாள் காலையில் இறுதி சடங்குகள் நடைபெற்று சூரியாவின் உடல் எரிக்கப்பட்டது.

 

பின் நேரடியாக தன் இரு சித்தப்பாக்களிடம் வந்தான்.

 

“சித்தப்பா இப்போ தான் சிவபெருமாளோட வீட்டில் மாரியை அடக்கம் செய்றதுக்காக போக போறாங்க. அந்த நேரம் அங்க போய் நிச்சயமா நான் ஒருத்தர் உயிரை எடுத்தே தீருவேன். அதுவும் அவனுக்கு நெருக்கமானவங்களை” என்று கூறும் போது கையில் நண்பன் ஒருவன் அறுவாளைக் கொடுத்தான்.

 

“நான் தான் சொன்னேன். கத்தியை எடுக்கக் கூடாதுன்னு, ஆனால் சூர்யா மாமாவையே அவனுங்க போட்டதுக்கு அப்பொறமா என்னால் பார்த்துட்டு இருக்க முடியாது. நாம கத்தியை கையில் எடுக்க மாட்டோம் அப்படிங்குற நம்பிக்கையில் தான் அவனுங்க இப்படி ஆட்டம் போடுறாங்க. நாங்களும் கத்தியை எடுப்போம்னு அவனுக்கு புரிய வைக்கனும். மகா சித்தப்பா எங்க கூட வரட்டும், நீங்கள் வீட்டை பார்த்துக் கொங்க” என்று சென்று ஜீப்பில் ஏற மகாவும் ஏறினார். சங்கரன் வீட்டை நோக்கி பயணித்தார்.

 

 

கிருஷி வீட்டிற்கு வரும் போது அனைவரும் அழுகும் சத்தம் கேட்க, உள்ளே நுழையும் போதே அவள் பார்த்தது வெள்ளைநிற புடவையால் சுற்றப்பட்டு இருந்த தன் சித்தப்பாவை தான்.

 

அவர் அருகில் வந்தவள் ” சித்தப்பா பாருங்க நான் வந்துட்டேன். நீங்க சொன்ன மாதிரியே வந்துட்டேன் சித்தப்பா. எந்திரிங்க சித்தப்பா, என்னை ஊர் பூரா சுற்றி காட்றிங்கன்னு சொன்னிங்களே, நான் வந்திருக்கேன்  நீங்க பொறுப்பில்லாமல் தூங்குறிங்க, எந்திரிங்க சித்தப்பா” என்று கதறி அழுதாள்.

 

கிருஷியை அவ்வூர் மக்கள் பத்து வருடங்களுக்குப் பிறகே பார்க்கின்றனர். சிறு வயதிலேயே அழகியாய் இருந்தவள் தற்போது தேவதையாய் வந்திருந்தாலும் அவளிடம் பேசுவதற்கான நிலமையில் ஒருவரும் இருக்கவில்லை.

 

“சித்தி, நீங்களாவது சொல்லுங்க அவ எந்திரிக்க சொல்லுங்க சித்தி, நான் இனி இவரை விட்டு எங்கேயும் போக மாட்டேன் சித்தி” என்று அழ அவளை ரம்யா அணைத்துக் கொண்டு அழுதார்.

 

தளிர்,ருத்ரா இருவரும் அவளருகில் வந்து

 

“அக்கா அழாத அக்கா, நீயே அழுதா நாங்க எப்படி அக்கா தைரியமா இருக்கிறது?” என்று அவள் கண்ணைத் துடைத்துவிட்டனர்.

 

“நான் அழ மாட்டேன் டா, நீங்களும் அழாதிங்க” என்று அவர்கள் இருவரின் கண்களையும் துடைத்து விட்டு இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.

 

ஒருவரும் சாப்பிட்டு இருக்கமாட்டார்கள் என்று எண்ணியவள் சிறியவர்கள், சித்தி, அம்மா, அப்பா விற்கு வற்புருத்தி ஊட்டிவிட்டாள். பின் மற்றவர்களையும் அதட்டி சாப்பிட வைத்தாள்.

 

அன்றைய இரவில் மொட்டை மாடியில் அமர்ந்து தனியாக கண்ணீர் வடித்தாள். தன் மீது அதீத  அன்பு வைத்திருந்த சித்தப்பாவை கொன்றவர்களின் மேல் வெறுப்பு அதிகமாகியது.

 

அவள் தனியாக நிச்சயம் அழுவள் என்று அறிந்த தமையன்

 

“வேணி மா” என்று அவள் அருகில் அமர அவன் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதாள்.

 

“என்னால முடியல்லை அண்ணா. சித்தப்பாவை கொல்றதுக்கு எப்படி மனசு வந்தது? அவரு பாவம்” என்று கண்ணீர் வடிக்க,

 

“கடவுள் அவரோ ஆயுள் இவளோ தான் முடிவு பன்னி இருக்காருடா, நம்மளால் என்ன பன்ன முடியும்?” என்று கேட்க,

 

அவள் தொடர்ந்து அழ அவளை சமாதானப்படுத்தி கீழே அழைத்துச் சென்றாள்.

 

அடுத்த நாள் காலையில் மாரியின் இறுதி சடங்குகள் ஆரம்பித்து அவரை அடக்கம் செய்வதற்காக ஆண்கள் அனைவரும் ஊரிற்கு வெளியே இருந்த மயானத்திற்கு சென்றனர். அந்த நேரத்தைப் பயன்படுத்தி தேவ் அங்கே வந்தான்.

 

நேரடியாக வீட்டினுள் நுழைந்தான்.

 

கிருஷி தூரத்தில் தனது அன்னையை அணைத்துக் கொண்டு அழுதாள். அவள் தாவணி அணிந்து முதுகுப்புறம் தெரிய இருந்ததால் அவனால் அவள் யாரென்று பார்க்க முடியவில்லை.

 

அவன் நண்பர்களில் ஒருவன்

 

“தாவணி உடுத்த பொண்ணு தான் சிவபெருமாளோட பொண்ணு” என்று கூற

 

ஆதி அவளிடம் கோபமாக அறுவாளுடன் நெருங்கினான். அவளை கையால் இழுத்து அறுவாளை வெட்டுவதற்காக ஓங்கினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 6யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 6

பனி 6   அடுத்த நாள் காலையே ஆதி கிருஷியைப் பார்ப்பதற்கு ஆர்வமாகக் கிளம்பினான். அங்கு சென்று பிரின்சியிடம் அனுமதி வாங்கி, கிருஷியின் வகுப்பிற்குச் சென்றான். அங்கே, அவன் எதிர்பார்த்தது போல் கிருஷி இருக்கவில்லை. மாணவ, மாணவிகளிடம் விசாரணைகளை முடித்து உனடியாக

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 34யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 34

பனி 34   கிருஷியைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் நேசன் கூற இருவருமே அதிரந்தனர்.   அப்போது “அண்ணா” என்ற குரல் கேட்டு இருவருமே திரும்பிப் பார்க்க ஒரு பெண் நின்று இருந்தாள்.   இருவரும் “ஐஷூ, உள்ள வா மா”

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 22யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 22

பனி 22   “பெரியம்மா உள்ள வரலாமா? பிசியா இருக்கிங்களா?” என்று நிலா அனுமதி கேட்டு ராஜேஸ்வரியின் அறையின் கதவு அருகில் நின்று இருக்க,   “வா நிலா, பைல்சை பார்த்தேன். நீ உள்ள வா” என்றார் ராஜேஸ்வரி.   உள்ளே