Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 10

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 10

பனி 10

 

மாலை கோலேஜ் முடித்தவுடன் மோலிற்கு செல்லும் போது ஒரு கார் அவளை போலோ செய்வதைக் கவனித்தவள் சற்று வேகமெடுத்துப் போக, அவளை இடமறித்து அந்த கார் அவள் ஸ்கூர்டியின் முன்பு வந்து நின்றது.

 

காரிலிருந்து ஒருவன் இறங்கி வந்தான். அவனைப் பார்த்து கிருஷி

“நீ அன்றைக்கு என்னை லவ் பன்றன்னு சொன்னவன் தானே?” என்று கேட்க,

 

“பரவால்லியே ஞாபகம் வச்சிருக்கியே பேபி, என்னை லவ் பன்றதால் தான் உன் மனசுல என் முகம் பதிஞ்சிருக்கு” என்றான்.

 

“இங்க பாருங்க, என் கோலேஜ் போற வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல ஒரு பொண்ணு கிட்ட வம்பு பன்றிங்க. இது நல்லதுக்கு இல்லை. பேசாமல் போயிருங்க. இன்னும் ஐந்து நிமிஷம் இங்க இருந்திங்கன்னா உங்களுக்கு தான் சேதாரம் அதிகம்” என்றாள்.

 

“நீ தானே சொல்லிட்ட இந்த பக்கம் யாரும் வர மாட்டாங்கன்னு, அதனால் நான் உன்னை என்ன பன்னாலும் யாருக்கும் தெரியாது” என்றான்.

 

“வாட்? முட்டாள் மாதிரி பேசாத, இடத்தை காலி பன்னு” என்று ஸ்கூர்டியை ஸ்டார்ட் செய்யப் போனவளை அவள் கைபற்றி தடுத்தான்.

 

“என்ன பன்ற? கையை விடு” என்று திமிறியவளை கண்டு கொள்ளாது காரிற்கு இழுத்துச் சென்று காரினுள் உள்ளே அவளை தள்ளும் போது இரண்டடி தூரே சென்று விழுந்தான் அவன்.

 

அப்போதே இருவரும் திரும்பிப் பார்க்க கண்கள் சிவக்க உச்ச கட்ட கோபத்தில் நின்று இருந்தான் ஆதி.

 

அவனைப் பார்க்க கிருஷியே பயந்து விட்டாள். அவளை கைபிடித்து தன் பக்கம் நிறுத்திக் கொண்டான் ஆதி.

 

“யாருடா நீ?” என்று புதியவன் கேட்க

 

“DSP டா, ஒரு பொண்ணு தனியா போனா, இப்படி தான் பன்னுவியா? அவ உன்னை பிடிக்கல்லன்னா விட்டு விலகிடனும். அது தான் ஆம்பளைக்கு அழகு. இப்படி யாரும் இல்லாத இடத்துல கையை பிடிச்சி இழுப்பியா?” என்று அவனை ஆதி தன் பெல்டைக் கழற்றி வெளுத்துக் கொண்டிருந்தான்..

 

“விக்ரமன் இவனை இப்டீசிங் கேசில் உள்ள போடுங்க” என்று ஆதி கத்த

 

“ஒகே சேர்” என்று விக்ரமன் அவனை இழுத்துச் சென்றான்.

 

“யேன்டா உனக்கு தேவையில்லாத வேலை, ஒரு பொண்ணு லவ்வை எக்செப்ட் பன்ன இல்லைன்னா அவ முகத்துல அசிட் அடிக்கிறது, இல்லைன்னா இப்போ மாதிரி அவளை கடத்துறது இந்த மாதிரி கேவலமான விஷயங்களை பன்றதுக்கு உங்களை எல்லாம் நடு ரோட்டு ஓடவிட்டு சுடனும் போல வெறி வருதுடா” என்றான் விக்ரமன் கோபத்தில் அவனை இழுத்து ஜீப்பில் போட்டுக் கொண்டே.

 

” மற்ற பொண்ணுங்களை ஏதாவது சொன்னாலே எல்லாரையும் பின்னி பெடலெடுப்பான். இப்போ அவன் லவ் பன்ற பொண்ணையே கடத்தை பார்த்து இருக்க, நீ உயிரோட வீட்டிற்கு திரும்புறது கஷ்டம் தான்” என்று கூறி அவனை ஜீப்பில் அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றான் விகி.

 

கிருஷி அவன் அடித்தைப் பார்த்து மிரண்டு இருந்தவள், ஆதி அவளை பல முறை அழைத்தும் அவள் அசையாதவள் அவள் தோள் தொட்டு உழுக்கும் போதே தன்னிலை அடைந்தாள்.

 

“என்ன?” என்று பயந்தவாறே கேட்க,

 

அவள் பயத்தைப் போக்க,

“குட்டிபேபி நீ பயந்தாங்கோழியா?  சின்னதா இருந்தால் என்ன தான் பன்ன முடியும் இல்லையா குட்டிபேபி?” என்று ஆதி கூற

 

“ஹைட்டை பத்தி பேசாதன்னு சொன்னால் நீ கேட்கவே மாட்டியா? ஹைட்டுக்கும், பயப்படுறத்துக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டாள் ஆதியின் குட்டிபேபி.

 

“சம்மந்தம் இல்லை தான். ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் தாமதிச்சி வந்திருந்தேன்னா, உன் நிலமையை கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா? பொண்ணுங்க எப்பவுமே முன் ஜாக்கிரதையா இருக்கனும் நவி” என்றான்.

 

“அவன் என்னை போலோ பன்னி வந்தப்பவே உனக்கு போன் பன்னிட்டேன், அதனால் தான் பேசாம இருந்தேன். உன் மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ என்னை காப்பாத்திருவன்னு எனக்கு தெரியும்” என்றாள்.

 

அவனுக்கு தன்னவள் தன் மீது அதீத நம்பிக்கை உள்ளதை எண்ணி சந்தோஷமாக இருந்தாலும் அவளது அஜாக்கரதையையை எண்ணி கோபம் வந்தது.

 

“இங்க பாரு நவி, நீ என்னை கூப்பிடும் போது பக்கத்துல இருந்ததால் தான் வர முடியுமா இருந்தது. என்னால் நீ கூப்பிட்ட உடனே எப்பவுமே வர முடியும்னு உறுதியா சொல்ல முடியாது நவி. நீயும் உன் பாதுகாப்பை பற்றி கொஞ்சம் யோசி, அதனால் இதற்கு அப்பொறமா கொச்சி தூள், சின்ன கத்தி, பர்பீயும் இந்த மாதிரி பொருட்களை வச்சிக்க” என்றான்.

 

அவள் சிரித்து,”எனக்கு கராதே தெரியும் டா, நான் பிளெக் பெல்ட் எடுத்து இருக்கேன். நிச்சயமா என்னால் என்னை பாதுகாக்க முடியும். இன்றைக்கு நீ கண்டிப்பா வருவேன்னு தெரியும் அதான் அநாவசியமா எதுக்கு என் எனர்ஜியை வேஸ்ட் பன்னிக்கிட்டுன்னு பேசாமல் இருந்தேன்” என்றாள்.

 

“ஆனாலும் இந்த குருட்டு தைரியம் உனக்கு நல்லது இல்லை நவி மா” என்றான்.

 

அவனது நவி மா என்ற அழைப்பில் உருகியவள் இதன் பிறகு கவனமாக இருப்பதாகக் கூறினாள்.

 

“சரி வா போலாம்” என்று அவன் மோலுக்கு அழைத்துச் சென்றான் அவளது ஸ்கூர்டியில்.

 

அவளை மோலில் விட்ட பிறகு அவன் ஸ்டேஷனிற்கு சென்றுவிட்டான்.

 

பவி “யேன்டி லேட்டு?” என்று கேட்க,

 

கிருஷி வரும் வழியில் நடந்ததைக் கூற பவியும் அவளை கவனமாக இருக்கும் படி எச்சரிக்கை செய்தாள்.

 

இருவரும் ஷொபிங்கை முடித்து வீடு செல்ல இரவானது. ஆதி இடையில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்க மறக்கவில்லை.

 

“நாங்க வீட்டிற்கு வந்துட்டோம் லக்ஷன்” என்றாள்.

 

“இப்போ ஒன்பது மணி, இவளோ நேராமா டி ஷொபிங் பன்னுவிங்க?” என்று கேட்க,

 

“ஆமா டா, இப்போதைக்கு அரைவாசி தான் வாங்கினோம்” என்று கூறினாள்.

 

“ஐந்து மணி நேரமா அரைவாசியா வாங்கினிங்க?” என்று அவன் வாய் பிளக்க,

 

“இப்போ உன் கூட பேச நேரம் இல்லை அப்பொறமா பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

 

அடுத்த சில நாட்கள் அழகாகவே அனைவருக்கும் நகர்ந்தன. ஆதியின் காதல் ஆலமரத்தைப் வளர்ந்துக் கொண்டே சென்றது. கிருஷிக்கு ஆதியின் மேல் உள்ள நல்லெண்ணம் அதிகரித்தது. ஆனாலும் இருவரும் சண்டை இடுவதை மட்டும் விடவில்லை.

 

ஒரு நாள் கோலேஜில் இரண்டு நாள்  செமினார் ஒன்று வேறு ஊரில் நடைபெற இருப்பதால் மாணவர்களுக்கு இன்சார்ஜாக கிருஷியும், மேலும் இரண்டு ஆண் பேராசிரியர்களும், இன்னும் ஒரு பெண் ஆசிரியரும் சென்றார்கள். அதே ஊரிற்கு ஆதியும் டிரகஸ் கேஸ் விஷயமாக சென்றான்.

 

முதல் நாள் செமினார் எவ்விதப் பிரச்சனையும் இன்றி இனிதே நடந்து முடிந்தது. பெண் மாணவர்கள், இன் சார்ஜ் ஆசிரியர்களுக்கு ஒரே கட்டடத்தில் அறைகள் வழங்கப்பட்டு இருந்தன. அதே போல ஆணகளுக்கும் வேறு இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. ஆசிரியர்கள் இருவருக்கும் ஒரே அறை வழங்கப்பட்டு இருந்தது. அன்றைய தினம் இரவு,

 

கிருஷி அனைத்து அறைகளையும் ஒரு முறை பார்த்த பிறகு உறங்கச் செல்லும் போது, ஆதி அழைப்பை ஏற்படுத்தினான்.

 

அவள் வரண்டாவில் நின்று அழைப்பை ஏற்றாள்.

 

“இந்த நைட் டைம் எதுக்கு கோல் பன்ன இம்சை?” என்று கேட்க,

 

“நீ என்ன பன்றன்னு பார்க்க தான், புது இடம் வேற” என்றான்.

 

“ரொம்பத்தான் அக்கறை , நீயும் இதே ஊர்ல தானே இருக்க? அவளோ என் மேலே அக்கறை இருக்குன்னா நேரடியாவே வந்து பார்க்க வேண்டியது தானே? அக்கறைபடுகிறது போல நடிக்க கூடாது இம்சை” என்றாள்.

 

“அப்போ மெடம் நான் உன்னை பார்க்க வர இல்லைன்னு கோபப்படுறிங்க?” என்று நக்கலாக கேட்க,

 

“சே சே, அப்படி எதுவும் இல்லை. நான் யாரு உன் மேலே கோபடுகிறதுக்கு?” என்றாள்.

 

‘நான் முன்னாடி எப்படி உன்னை காதலிக்கிறேன்னு புரிஞ்சுக்காமல் இருந்தேனோ, அதே நிலமையில் தான் இப்போ நீ இருக்க நவி மா’ என்று தன்னுள் நினைத்தான்.

 

“என்னடா நின்னுட்டே தூங்கிட்டியா?” என்று கிருஷி கேட்க,

 

“ஆமா டி, நீ பேசுறது தாலாட்டு பாடுறது போல இருக்கு” என்றான்.

 

“என்னது? தலாட்டு பாடுறது போலவா? வைடா போனை” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

 

‘ஐயோ ரொம்ப ஓட்டிட்டோமோ’ என்று நினைத்தவன் மீண்டும் மீண்டும் அழைக்க அவள் அழைப்பை துண்டித்துக் கொண்டே இருந்தாள்.

 

அவன் தொடர்ந்து அழைப்பை ஏற்படுத்தியதால் ஒரு கட்டத்தில் அழைப்பை ஏற்றாள்.

 

“இப்போ என்னடா வேணும் உனக்கு? நான் வேணுன்னா தாலாட்டே பாடுறேன், சேர் உடனேயே தூங்குங்க” என்றாள் கடுப்பாக.

 

“சொரிடி, சும்மா சொன்னேன் டி” என்று கூற

 

அவள் யாரோ தூரத்தில் இருந்த நுழைவாயிலின் அருகே ஒரு பெண் யாருடனோ பேசுவது தென்பட்டது. அதைப் பார்த்வள்,

 

“ஒரு நிமிஷம் லக்ஷன்” என்று அழைப்பைத் துண்டிக்காமல் அங்கே சென்றாள்.

 

அருகில் சென்றவள் ஒரு பெண்ணும் கேர்ட்டிற்கு வெளிபுறம் ஒரு ஆடவனுடன் பேசுவதைக் கண்டாள். அப் பெண் இவளின் ஸ்டூடன்ட். அவள் அருகே சென்ற போது அவன் இவள் கையில் ஏதோ ஒன்றை திணித்து விட்டுச் சென்றான்.

 

“தியா, இங்கே என்ன பன்ற?” என்று கிருஷி கேட்க,

 

“ஒன்னும் இல்லை மேம். சும்மா காற்று வாங்கலாம்னு வந்தேன்” என்று பயத்தில் தடுமாறிக் கூற

 

“பொய் சொல்லாத தியா, நீ ஒரு பையன் கூட பேசினதை பார்த்தேன். அவன் உன் கையில் ஏதோ கொடுத்தான். என்னதுன்னு ஒழுங்கா காட்டு. இல்லை மேலிடத்துல கம்பிளைன்ட் பன்ன வேண்டி வரும்” என்றாள் கிருஷி.

 

“ஒன்றும் இல்லை மேம்” என்று தியா கூற

 

கைகளை பிடிக்க முன் கிருஷியை கீழே தள்ளிவிட்டு கேர்ட்டிற்கு வெளியே ஓடினாள்.

 

கிருஷி “அம்மா” என்று கத்தியவாறே கீழே விழ மொபைலில் “நவி” என்று ஆதி கத்தினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 30யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 30

பனி 30   அவள் உள்ளே நுழைய கூற முடியா ஓர் உணர்வு அவளுள் எழுந்தது. சுற்றிப் பார்த்து உடனடியாக அவ்வறையின் ஜன்னலை திறந்தாள். அப்போதே அவள் சுவரில் தொங்கிய புகைப்படத்தைப் பார்த்து சிலையானாள்.   “இவங்க யாரு? இந்த போடோ

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 22யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 22

பனி 22   “பெரியம்மா உள்ள வரலாமா? பிசியா இருக்கிங்களா?” என்று நிலா அனுமதி கேட்டு ராஜேஸ்வரியின் அறையின் கதவு அருகில் நின்று இருக்க,   “வா நிலா, பைல்சை பார்த்தேன். நீ உள்ள வா” என்றார் ராஜேஸ்வரி.   உள்ளே

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 11யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 11

பனி 11   “நவி” என்று ஆதி கத்தினான். கீழே விழுந்த கிருஷி எழுந்து நின்ற ஐந்து நிமிடங்களில் ஆதி அங்கு பைகில் வந்து இறங்கியவன் பைக்கை ஸ்டேன்ட் வைத்து நிற்பாட்டாமல் கீழே கிடத்தி விட்டு அவள் அருகில் ஓடி வந்தான்.