Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 9

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 9

பனி 9

 

திவி கூற ஆதி கற்பனை செய்துக் கொண்டு இருந்தான். மணகளாக கிருஷியைக் கண்டவுடன் அவன் உதடுகள் ‘நவி’ என்று கூறின. வேகமாக கண்ணத் திறந்தவன் முன்னால் இருப்பவர்களைப் பார்த்தான். அவர்கள் இருவரும் இவன் திடீரென்று கண்களை திறந்ததில் அதிர்ச்சியாகி அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 

“என்ன இப்படி பாக்குறிங்க?” என்று அவன் கேட்க,

 

“இப்போ எதுக்கு அண்ணா நீ அவசரமா கண்ணை திறந்த? யாரை பார்த்த?” என்று நிலா ஆர்வமாகக் கேட்க,

 

“யாரையும் இல்லையே” என்று தோளை உலுக்கிக் கொண்டு அங்கிருந்து எழுந்து வேகமான தாவல்களால் படியிலேறி தனது அறையை அடைந்தான்.

 

நிலாவிற்கு ஏதும் புரியவில்லை, திவி யாரையும் காணவில்லை என்று அவன் கூறியதில் நிம்மதி அடைந்தாள்.

 

அறைக்கு வந்தவன் கட்டிலில் விழுந்து கண்களை மூடினான். கிருஷியை முதல் நாள் பார்த்தது முதல் நேற்று நடந்தது அனைத்தையும் நினைத்துப் பார்க்க அவன் இதழ்களும் விரிந்தன.

 

‘குட்டிபேபி நான் உன்னை லவ் பன்றேன்டி. உன்னை என் வைப் இடத்துல பார்க்குறேன் டி. ஐ லவ் யூ நவி மா’

 

‘என்னை இம்சைன்னு தானே பேசுவ, இந்த இம்சை இனி தினம் தினம் உனக்கு காதல் இம்சை எப்படி கொடுக்கப்போறேன்னு மட்டும் பாரு’ என்று நினைத்துக் கொண்டான்.

 

‘மனசாட்சி மனசாட்சின்னு ஒன்னு இருந்ததே, எங்கே போச்சு?’ என்று அவன் தேட,

 

‘அதுக்கு சூடு, சொரணை எல்லாம் இருக்கு ஆதி, இப்போவே வராது’ என்று மூளை அவனுக்கு கூறியது.

 

‘குட்டிபேபி இப்போ உன்னை உடனடியா பார்த்தாகனுமே, என்ன பன்றது?’ என்று அவன் யோசிக்க,

 

‘அதான் ஒரு அப்பாவி ஜீவன் நமளுக்கு பிரன்டா வாச்சிருக்கே’ என்று விகியிற்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

 

“என்ன மச்சான் அதிசயமா போன் பன்னி இருக்க?” என்று விகி கேட்க,

 

“மச்சான் நான் உன் தங்கச்சியை உடனே பார்கனும் டா” என்றான்.

 

“அதற்கு நீ உடனே அங்கிருந்து சென்னைக்கு தான் வரனும். அதற்கு தான் போன் பன்னியா?”  என்று விகி கேட்க,

 

“ஐயோ இப்போவே நான் அவளை பார்கனும் எருமை” என்றான்.

 

“அடேய் பக்கிப் பயலே சொன்னா புரியாதாடா? ஒரு நிமிஷம், என்ன உன் குரலில் வித்தியாசம் தெரியிது?” என்றான் விகி ஏதோ அறியும் ஆவலில்.

 

“அதுவா மச்சான், அது…” என்று நகத்ததை கடிக்க,

 

“டேய் என்னடா பன்ற? சத்தமே இல்லை?” என்று விகி கேட்க,

 

“மச்சான் நான் குட்டிபேபியை லவ் பன்றேன் டா” என்றான்.

 

“சூப்பர் மச்சான். இப்போ சரி அவ மேலே இருக்கிற காதலை உணர்ந்தியே” என்றான்.

 

“ஆமா டா, அதை எப்படி உணர்ந்தேன்னு நான் அங்க வந்து சொல்றேன். இப்போ நான் குட்டி பேபியை பார்க்கனும். சொ அங்க போய் வீடியோ கோல் எடு” என்றான்.

 

“டேய் நான் இப்போ டியூட்டியில் இருக்கேன் டா, எப்படி டா போகிறது?” என்று விகி கேட்க,

 

“இப்போ போக இல்லை,நான் வந்ததுக்கு அப்பொறமா பவியை பார்க்கவே முடியாதபடி பன்னிடுவேன்” என்று ஆதி மிரட்டினான்.

 

“ஐயா சாமி, என் வாழ்க்கையில் கும்மியடிச்சுடாத, இப்போ தான் நான் அவளை சமாதானப்படுத்தி இருக்கேன். இப்போ என்ன நான் அங்கே போகனும், அவளோதானே?” என்று கேட்க,

 

“ஆமாடா மச்சான் லவ் யூடா” என்றான் ஆதி.

 

“சீ போடா, கடைசியில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல சந்தானத்தோட டயலோகை எனக்கு சொல்ல வச்சிட்டியேடா?” என்றான்.

 

“என்ன டயலோக் மச்சான்?” என்று கேட்க,

 

“அவன் அவன் ஆயரம் பிரன்டை வச்சிட்டு இருக்கான். நான் ஒரே ஒரு பிரன்டை வச்சிட்டு படுகிற பாடு இருக்கே, ஐய்யையோ” என்றான் விகி.

 

“நண்பேன்டா” என்றான் ஆதி.

 

“போனை வை, நான் அங்கே போயிட்டு உனக்கு கோல் பன்றேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.

 

ஆதி  போன் வரும் வரையில் கட்டில் அமர்ந்து குட்டிபேபியுடன் டூயெட் ஆடிக் கொண்டு இருந்தான்.

 

அங்கே சென்றவுடன் விகி வீடியோ கோல் எடுத்தான்.

 

“மச்சான் இப்போ தான் உள்ள போக போறேன் டா, லைன்லயே இரு” என்று கூறி கதவைத் தட்ட பவியே திறந்தாள்.

 

“நீ இந்த நேரத்துல என்ன பன்ற?” என்று கேட்க,

 

“அதை நான் கேட்கனும், நீ வேலைக்கு போகாமல் வீட்ல என்ன பன்ற?” என்று விகி கேட்டான்.

 

“இன்றைக்கு கிருஷி, அவ கூட இருக்க சொன்னா அதான். நீ எதுக்கு இங்க வந்த?” என்று பவி கேட்க,

 

“ஆதி அவ கூட பேசனுமாம். லைன்ல இருக்கான். அவ எங்க இருக்கா?” என்று உள்ளே நுழைந்தான்.

 

“அவ ரூம்ல இருக்கா இரு அவளை கூட்டிக்கிட்டு வரேன்” என்று சென்று கிருஷியை அழைத்து வந்தாள் பவி.

 

“என்ன அண்ணா, உங்க பிரன்டுக்கு நான் யாருன்னு தெரியுமா?” என்று கிருஷி நக்கலாக கேட்க,

 

“நீயே அவன் கிட்ட கேளு” என்று அவன் பவியை அழைத்துக் கொண்டு கிச்சனிற்குள் நுழைந்தான்.

 

அவன் காதலை ஒன்று சேர்த்து “நவி மா” என்று அவன் அழைக்க அவன் அழைப்பு அவள் உயிர் வரை சென்று தீண்ட அவள் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

அவனாலும் அவளை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை, சிறிது நேரம் தன் குட்டிபேபியை இரசித்தவன் குட்டி பேபி என்று அழைக்க கிருஷி தன்னிலை அடைந்தாள்.

 

“என்ன?” என்று அவள் கோபமாகக் கேட்க,

 

அவள் கோபத்தை இரசித்தவன் “என்ன குறை சொல்லாத குட்டிபேபி, விகி உன்னை பார்க்க வந்தால் தான் உன் கூட பேச முடியும். உன் நம்பர் இருந்தால் உன்கிட்டவே எனக்கு நேரடியா பேசி இருக்கலாம். சொ இப்போ என்ன பன்ற உன் நம்பரை சொல்ற?” என்றான்.

 

“என்னது நம்பரை கொடுக்கனுமா? முடியாது” என்றாள்.

 

“நான் உன் நம்பரை எடுக்க முடியும் குட்டிபேபி, நீயா உன் அனுமதியோட உன் நம்பரை கொடுக்குறது தான் எனக்கும் பிடிக்கும்” என்றான்.

 

அவனை முறைத்தவள், பின் நம்பரை வழங்கினாள். அவளிடம் அவள் உடல் நலத்தைப் பற்றி விசாரித்து அழைப்பைத் துண்டித்தான். சிறிது நேரத்தில் விகியும் அங்கிருந்து கிளம்பினான்.

 

விகி அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தி,

 

“மச்சான் தங்கச்சி  கிட்ட லவ்வை சொன்னயா?” என்று கேட்க,

 

“இப்போ நான் அவ கிட்ட லவ்வை சொன்னேன்னா என் தோலை உரிச்சு உப்புகண்டம் போட்டுருவா” என்றான் ஆதி.

 

“அப்போ என்னடா பன்ன போற?” என்று கேட்க,

 

“மச்சான் அவளுக்கு காதல் மேலே நம்பிக்கை இல்லை. அது மட்டும் இல்லாமல் அவ புருஷனை மட்டும் தான் லவ் பன்னுவன்னு சொல்லி இருக்கா. சொ முதல்ல நான் அவ அப்பா கூட பேசி அவரிடம் பேர்மிஷன் வாங்கனும். அதற்கு அப்பொறமா தான் லவ்வை சொல்லுவேன்” என்றான்.

 

அவள் தந்தையிடம் அனுமதி பெற்று அவன் காதலை அவளிடம் கூறி 24 மணிநேரத்திற்கு உள்ளேயே அவன் காதல் இறந்துவிடும் என்பதை அவன் அறியவில்லை.

 

“சரி டா, நீ சொல்றது தான் சரின்னு எனக்கும் தோனுது” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான் விகி.

 

அறையில் இருந்து வெளியே வந்தவன் நேரடியாக தன் தாயிடம் சென்றான்.

 

“அம்மா, இன்றைக்கு ஈவினிங் நான் கிளம்புறேன், முக்கியமான வேலை இருக்கு, பிளீஸ்” என்று கூற

 

ராஜேஸ்வரி அவனை உற்று நோக்கினார்.” என்ன தேவ் முகம் எல்லாம் சந்தோஷமா இருக்கு?” என்று கேட்க,

 

“அடுத்தவாட்டி வரும் போது கண்டிப்பா சொல்லுவேன் மா. இப்போ நான் போயே ஆகனும்” என்று கூற அவரும் சம்மதித்தார்.

 

நண்பர்களிடம் கூற சென்றான்.

 

“என்ன மச்சான் உன் ஆளை பார்க்க முடியல்லைன்னு சீக்கிரமா போறியா?” என்று கேலி செய்ய

 

அவனும் “ஆமாடா” என்றான்.

 

“அண்ணி எப்படி இருப்பாங்க?” என்று கேட்க,

 

“குட்டியா, கியூட்டா இருப்பா” என்று இரசித்துச் சொல்ல நணபர்கள் அவனைக் கேலி செய்தனர்.

 

அன்று மாலையே அனைவரிடமும் கூறி சென்னையை நோக்கி பயணமானான்.

 

இரவு நேரம், கிருஷிக்கு அழைப்பை ஏற்படுத்தினான் ஆதி.

 

“குட்டிபேபி என்ன பன்ற?” என்று கேட்க,

 

“இம்சை அறிவு இருக்காடா உனக்கு? நைட் பதினொரு மணிக்கு போன் பன்னி என்ன பன்றன்னு கேட்குற?” என்றாள் ஏகக் கடுப்பில்.

 

“நீ தான் எனக்கு இம்சைன்னு பெயர் வச்ச, சொ அந்த பெயருக்கு பொருத்தமானது போல நடந்துக்க வேணும், இல்லையா?” என்று ஆதி கேட்க,

 

” லக்ஷன் எனக்கு தூக்கம் வருது, நான் நாளைக்கு பேசுறேன். பாய்” என்று அழைப்பைத் துண்டித்து தன் உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

 

ஆதியோ, தன்னவள் தனக்காக ஒரு செல்லப் பெயரை வைத்து இருக்கிறாளே என்ற சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டு இருந்தான்.

 

அடுத்த நாள் காலையில் கிருஷி வேலைக்குக் கிளம்ப தயாராகி வர

 

பவி,” மச்சி இன்றைக்கு ஷொபிங் போயிட்டு வரலாம் டி. ஷொபிங்க பன்னி ரொம்ப நாளாச்சு” என்றாள்.

 

“ஒகே மச்சி, நான் கோலேஜ் முடிச்சுட்டு நேரடியா மோலுக்கு வரேன், நீயும் வந்திரு” என்று கிளம்பினாள்.

 

மாலை கோலேஜ் முடித்தவுடன் மோலிற்கு செல்லும் போது ஒரு கார் அவளை போலோ செய்வதைக் கவனித்தவள் சற்று வேகமெடுத்துப் போக, அவளை இடமறித்து அந்த கார் அவள் ஸ்கூர்டியின் முன்பு வந்து நின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)

பனி 39   “நீங்க இரண்டு பேருமே எதிரிங்க தானே? எப்படி பார்ட்னர்ஸ் ஆனிங்க?” என்று ஆதி உறும அவர்கள் பதில் கூற ஆரம்பித்தனர்.   “நாங்க இந்த நிமஷம் கூட குடும்ப ரீதியா எதிரிகள் தான். இந்த தொழில் ரீதியா

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 34யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 34

பனி 34   கிருஷியைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் நேசன் கூற இருவருமே அதிரந்தனர்.   அப்போது “அண்ணா” என்ற குரல் கேட்டு இருவருமே திரும்பிப் பார்க்க ஒரு பெண் நின்று இருந்தாள்.   இருவரும் “ஐஷூ, உள்ள வா மா”

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 12யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 12

பனி 12   பவியின் வீட்டிற்குச் செல்லும் வழியில் கிருஷி மொபைலில் ஏதோ செய்ய,   “என்ன டி பன்ற? அதுவும் சிரிச்சிகிட்டே?” என்றாள் பவி.   “இன்றைக்கு 12.36க்கு தான் லக்ஷன் புரொபோஸ் பன்னான். அதான் சேவ் பன்னி வைக்குறேன்”