Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 7

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 7

பனி 7

 

டாக்டர் கிருஷி விழித்து விட்டதாக கூறி அவர்களது சண்டைக்கு முற்றிப் புள்ளி வைத்து, அடுத்த டொம் என்ட் ஜெரி சண்டையை ஆரம்பிக்க உதவி செய்தார். மூவரும் கிருஷியைப் பார்க்க உள்ளே சென்றனர்.  கிருஷி மூவரையும் பார்த்தாள்.

 

ஆதியைப் பார்த்து முறைத்து,

” நான் அன்றைக்கு கையில் தானே வலிக்காமல் அடிச்சேன். அதுக்கு பழி வாங்க இப்படி தான் அடிப்பியா? பாரு என் கன்னம் எப்படி சிவந்து வீங்கி இருக்கு, இடது கண் சின்னதானது போல ஒரு பீலிங்” என்றாள் சிறு குழந்தை போல.

 

அதை இரசித்தவன், “சொரி நவி தெரியாமல் அடிச்சிட்டேன், சொரி”

என்று கெஞ்சும் குரலில் கேட்க,

 

“என்னால் உன்னை மன்னிக்க முடியாது மிஸ்டர் இம்சை. நீ சொரி கேட்டால், என் வீக்கம் குறைஞ்சிருமா? கண்ணீர் வடியும் போது எனக்கு எறியுது” என்றாள்.

 

அவள் அருகில் வந்து அவள் கன்னத்தை வருடி, “இந்த வீக்கம் குறைந்து, உன் பீவர் குறைந்து நீ பழைய மாதிரி மாறுகிற வரைக்கும் நான் உன்னை நல்லா பார்த்துக்குறேன்” என்றான்.

 

அவன் ஸ்பரிசத்தில் தடுமாறியவள்,

“அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை. என்னை என் பிரன்ட் நல்லா பாத்துப்பா” என்றாள் வேறு புறம் திரும்பி.

 

“மெடம் நீங்க அதை என் கண்ணை பார்த்து சொல்லுங்க” என்றான் ஆதி குறும்பாக.

 

அவன் கண்களைப் பார்த்துக் கூறப் போக, அவன் கண்களைப் பார்த்த பிறகு அவளுக்கு பேச்சு எழவில்லை. அதில் எதைக் கண்டு கொண்டாளோ அப்படியே தலைக்குனிந்தாள்.

 

“இங்க பாரு குட்டி பேபி, நீ நோர்மல் ஆகுறவரைக்கும் நான் தான் உன்னை பார்த்துப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றான் உறுதியாக.

 

“ஐயோ, இம்சை நான் என் வீட்டுல இருப்பேன், நீ உன் வீட்டுல இருப்ப, எப்படி உன்னால் பார்த்துக்க முடியும்? பேசாம போய் உன் வேலையை பாரு” என்றாள் கிருஷி.

 

“நீ பவி வீட்டுல தானே இருக்க? நான் அங்கேயே வந்து பார்த்துட்டு போறேன்” என்று கூற,

 

“பவியை உனக்கு தெரியுமா?” என்று கிருஷி கேட்டாள்.

 

“பவி, விக்ரமனோட அத்தை பொண்ணு, அதாவது அவனோட பியான்சி” என்றாள்.

 

“ஏய் பவி நீ இந்த ஆந்தையை தான் கல்யாணம் பன்னிக்க போறியா?” என்று கேட்டாள் கிருஷி.

 

இதுவரை பார்வையாளராக அவர்கள் பேசுவதை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த இருவரும் இவள் கேள்வியில் தன்னிலை அடைந்தனர்.

 

“ஆமா டி இந்த எருமையை தான்” என்றாள் பவி.

 

“என்னடி ஆளுக்காள் என்னை எருமை, ஆந்தைன்னு சொல்றிங்க?” என்று ஏகக் கடுப்பில் விகி கேட்க,

 

“மிஸ்டர் ஆந்தை, அன்றைக்கு உங்களை DSP கோலேஜில் என் கிட்ட கேள்வி கேட்க சொன்னதுக்கு நீங்க என்ன பன்னிங்க? ஆந்தை மாதிரி முழிச்சிங்க, அதிலிருந்து உங்க பெயர் ஆந்தைன்னு மாறிருச்சு” என்றாள் கிருஷி.

 

“ஐயோ சாமி, உங்க இரண்டு பேரு கிட்டவும் சண்டை போடுறதும், இரவு வானத்துல நட்சத்திரம் எண்கிறதும் ஒன்று தான்” என்றான் விகி.

 

மூவரும் அவன் நிலையைக் கண்டு சிரித்தனர்.

 

“ஆமா, லக்ஷன் எதுக்கு என்னை அறைஞ்ச?” என்று கிருஷி கேட்க,

 

ஆதி அவள் கேள்வியில் அதிர்ந்து இருந்ததால், அவன் பெயரைச் சுருக்கி அழைத்ததை அவன் கவனிக்கவில்லை. அதே நிலையில் தான் விகியும் இருந்தான். ஆனால் பவியோ இதைக் குறித்துக் கொண்டாள். ஏனென்றால் கிருஷி, தன்னக்கு நெருக்கமானவர்களைத் தவிற வேறு ஒருவரின் மீது உரிமை

எடுக்க மாட்டாள்.

 

இன்று அவள் ஆதியுடன் பேசுவதை வைத்தே அவள் அறியாமலேயே அவனை நெருங்கிவிட்டாள் என்பதைப் புரிந்துக் கொண்டாள் பவி.

 

“என்ன மச்சான், வேதாளம் முருங்கை மரம் ஏறுது” என்று விகி ஆதியின் காதில் மெதுவாகக் கூற,

 

“அதான் டா, எனக்கும் தெரியல்லை. நானும் அவ அதை மறந்து இருப்பான்னு நினைத்தேன். திரும்ப ஞாபகபடுத்திட்டா டா” என்றான் ஆதி.

 

“நீ என்னை பார்த்துட்டு மறு பக்கம் திரும்பினியா? அந்தக் கோபத்துல தான்” என்று பாதி உண்மையைக் கூறினான்.

 

அவன் முழுவதுமாகக் கூறி இருந்தால் இன்றே அவளை சமாதானபடுத்தி இருக்கலாம். அவளுக்கு இது அவனை வெறுக்கும் போது தெரியவருவதால் அவனை வெறுக்கும் அளவு மேலும் அதிகரித்து இருக்கும். விதி யாரை விட்டு வைத்தது?

 

“அதற்கு, என்னை அடிப்பியா? எவளோ வலிச்சது தெரியுமா?” என்றாள்.

 

“சொரி, சொரி, சொரி” என்றான் ஆதி.

 

அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

டாக்டர் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறியவுடன் நால்வரும் கிளம்பினர்.

 

பவி அவளது ஸ்கூர்டியிலும், விகி அவனது காரிலும், கிருஷி ஆதியின் காரிலும் பவி, கிருஷி இருவரும் தங்கி இருக்கும் வீட்டிற்குச் சென்றனர். அங்கு சென்ற பிறகு, கிருஷி அவளது அறைக்குச் செல்ல, பவி நால்வருக்கும் காபி தயாரிக்க கிச்சனிற்கு சென்றாள்.

 

மற்ற  இருவரும் வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தனர்.

 

“மச்சான், நம்ம வீட்டையும் இவங்க வீட்டையும் பாரேன். நமளுக்கு 1 மார்க் போட்டா, இவளுங்களுக்கு 10000 மார்க் போடனும் டா” என்றான் விகி.

 

“அதென்னமோ உண்மை டா, எவளோ தான் டிரை பன்னாலும், வீட்டு கிளீனிங்கில் மட்டும் நாம ரொம்ப லோ தான்” என்றான் ஆதி.

 

“என்ன இரண்டு பேரும் சீரியசா டிஸ்கஸ் பன்னிட்டு இருக்கிங்க?” என்று பவி கேட்க,

 

“சும்மா தான் பேசிட்டு இருந்தோம்” என்றான் விகி.

 

அதே நேரம் கிருஷி பிரஷபாகி வர அவளை கண் கொட்டாமல் பார்த்தான் ஆதி.

 

இடை வரை நீண்டு இருந்த கூந்தலை விரித்து சிறிய கிளிப்பில் அடக்கி, கறுப்பு நிற டொப், வெள்ளை பொடம் அணிந்து வரவேற்பரையில் சென்று அமர்ந்தாள்.

 

“என்ன இம்சை எதுக்கு என்னை குறுகுறுன்னு பாக்குற?” என்று கிருஷி காபியைப் பருகிக் கொண்டே கேட்க,

 

‘அடிப்பாவி, பொண்ணா பிறந்துட்டு இரசிக்கும் பார்வைக்கும், குறுகுறு பார்வைக்கும் வித்தியாசம் தெரியாதவளா இருக்கியே, உன்னை எல்லாம் நான் கட்டிக்கிட்டு என்ன பன்ன போறேனோ?’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.

 

‘என்ன நான் அவளை கட்டிக்க போறேனா?’ என்று அதிர,

 

‘அடக்கடவுளே இவன் கிருஷி சம்பந்தமா என்ன பேசினாலும் ஷொக் ஆகுறானே’ என்று அவன் மனசாட்சி தலையிலடித்துக் கொண்டது.

 

‘ஆமான்டா, நீ தான் சொன்ன அவளை கல்யாணம் பன்னிக்க போறேன்னு’ என்றது மனசாட்சி.

 

‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை’ என்றான் ஆதி.

 

‘கடவுளே உனக்கே இது நல்லா இருக்கா? இவனுக்கு போய் மனசாட்சியா என்னை படைச்சி இருக்கியே! ஊர் உலகத்துல மனசாட்சி பன்னும் வேலையை இவன் பன்றான். இவன் பன்ன வேண்டியதை நான் பன்றேன், இங்க எல்லாமே உல்டாவா இருக்கே, தயவு செஞ்சி இவன் கிட்ட இருந்து என்னை காப்பாற்று கடவுளே’ என்று கண்ணீர் வடித்தது அவன் மனசாட்சி.

 

‘ஏய் நீ ரொம்ப ஓவரா பன்ற’ என்று மனசாட்சியை அடக்கி வைத்தான் நம் நாயகன்.

 

‘டேய் நீயா கூப்பிட்டா கூட நான் வர மாட்டேன் டா, மனசாட்சிக்கு வந்த சோதனை’ என்று அங்கு இருந்து சென்றது அவன் மனசாட்சி.

 

“என்ன நீ அதே போசில் நின்னுட்டு இருக்க? நோயாளி நானே காபியை குடிச்சிட்டேன். நீ கையில் வச்சிட்டு என்ன பன்ற?” என்றாள் கிருஷி.

 

இத்தனை நேரமும் மனசாட்சியுடன் விவாதத்தில் இருந்தவன் அவள் கூறிய பிறகே கையில் இருக்கும் காபியைப் பார்த்தான்.

 

தனது கெத்தை விட்டுக் கொடுக்காமல்,”குட்டி பேபி, சுடச்சுட காபியோ, எது குடிக்கிறது பல்லுக்கு ஆரோக்கியம் இல்லை. அதான் சூடு ஆறுகிற வரைக்கும் இருந்தேன்” என்று மடமடவென குடித்து மேசையின் மேல் டம்ளரை வைத்தான்.

 

‘ஹப்பா, சமாளிச்சுட்டேன்’ என்று பெருமூச்சுவிட்டான் ஆதி.

 

விகியும், பவியும் அவனை விசித்திர ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தனர். அவனுக்கு காபி முதல் உணவு அனைத்துமே சூடாக இருக்க வேண்டும். இல்லை எனில் சாப்பிட மாட்டான். அப்படிப்படவன் இன்று இவ்வாறு நடந்துக் கொள்கிறானே என்று.

 

“டேய் நீ இப்படி பார்த்தே என்னை காட்டிக் கொடுக்காத பன்னாடை” என்று விகிக்கு மட்டும் குரலில் திட்டினான் ஆதி.

 

அவனை முறைத்த விகி, “பவி சாப்பாடு சமைச்சு இருக்கியா? இல்லை வாங்கிட்டு வரவா?” என்றான்.

 

“நான் சமைச்சு தான் இருக்கேன், உன் உதவி எனக்கு தேவையில்லை” என்றாள் பவி கோபமாக.

 

“பவி, உன்னை பொண்ணு கேட்க அம்மா அப்பா, வந்த நேரம் இங்கே எனக்கு வேலை டி, டிரக்ஸ் கேஸ் ஒன்னு தான் இப்போ சிடியில் முக்கியமா போயிட்டு இருக்கு. அதை விட்டுட்டு என்னால் வர முடியல்லை டி. அதற்காக இவளோ நாளாக கோபமா இருப்பியா? சொரிடி என்னை புரிஞ்சிக்க” என்றான் விகி கெஞ்சலாக.

 

அவளுக்கு அவன் கெஞ்சுவது பிடிக்காமல் “சரி இதான் லாஸ்ட்” என்று பெருந்தன்மையாக மன்னித்துவிட்டாள்.

 

ஆதி “பவி சாப்பாடை எடுத்து வை” என்றான்.

 

அவளும் மேசையில் சாப்பாடு எடுத்து வைக்க, மற்ற மூவரும் அமர்ந்தனர். கிருஷி உணவை உண்ண ஆரம்பிக்கும் போது அவள் தட்டை அவன் புறம் இழுத்த ஆதி அவளுக்கு ஊட்ட கையை நீட்டினான்.

 

மூவருமே அதிர்ச்சியாக அவனைப் பார்த்தனர்.

 

“இம்சை இப்போ எதுக்கு எனக்கு ஊட்டுற? எனக்கு கையில் எந்த அடியும் பட இல்லை” என்று தட்டை அவள் புறம் இழுக்கப்போக,

 

“DSP ஆதியா என்னை மாற்றாமல் ஒழுங்கா நான் ஊட்டும் போது சாப்பிடு” என்று கடுமையான குரலில் கூற, கிருஷி பயந்து அமைதியாக சாப்பிட்டாள்.

 

“ஒரு கிழமைக்கு கோலேஜிற்கு லீவ் சொல்லிடு, வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுக்குற” என்று ஆதி ஊட்டிக் கொண்டே கூற,

 

கிருஷி ஏதோ கூற வர, அவளை ஆதி முறைக்க அவள் சரி என்று தலை ஆட்டினாள்.

 

அவளுக்கு தேவையான மருந்தை வழங்கியவன் இரவு வருவதாக கூறி அவனும் சாப்பிட்டு ஸ்டேஷனிற்கு கிளம்பினான். இரவு வீட்டிற்கு வந்தவன் அவளுக்கு ஊட்டிவிட்டு மருந்தையும் வழங்கி விட்டே வீடு சென்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 24யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 24

பனி 24   அடுத்த நாள் காலை ஆதி கண்விழிக்க இமைகளை இறுக்க மூடி தன் மார்பை தொட வெற்றிடமாக இருந்தது. கண்களைத் திறந்து பார்க்க, கிருஷி அதே இடத்தில் உறங்கிக் கொண்டு இருந்தாள்.   ‘சே எல்லோருக்கும் போல் நைட்டில்

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 30யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 30

பனி 30   அவள் உள்ளே நுழைய கூற முடியா ஓர் உணர்வு அவளுள் எழுந்தது. சுற்றிப் பார்த்து உடனடியாக அவ்வறையின் ஜன்னலை திறந்தாள். அப்போதே அவள் சுவரில் தொங்கிய புகைப்படத்தைப் பார்த்து சிலையானாள்.   “இவங்க யாரு? இந்த போடோ

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17

பனி 17   “அப்பா அவன் வேறு யாரும் இல்லை. அன்றைக்கு வீட்டிற்கு என்னை வந்த தேவ் தான். ராஜேஸ்வரி அம்மாவோட பையன்” என்று கூறி அழுதாள்.   சிவபெருமாள் அதிர்ச்சியில் கீழே அமர்ந்துவிட்டார். கனகாவும் அதிர்ந்து அவளைப் பார்த்தார்.