Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-28

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-28

28 – மீண்டும் வருவாயா?

வீட்டிற்கு நேத்ரா விஜய் இருவரும் குழந்தைகளுடன் வந்ததும் ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அனைவரும் அவளிடம் விசாரிக்க என்ன வேணுமோ சொல்லு நாங்க செஞ்சு தரோம் நீ நல்லா ரெஸ்ட் எடுடா மா.. என மாறி மாறி அவளை ஜூஸ் சாப்பாடு என குடுத்து கவனித்தனர்…ஒவ்வொருவராக அவ்வப்போது ஏதாவது வேண்டுமா என கேட்க அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்தனர்….நேத்ராவின்  பெற்றோர்களும் அங்கேயே இருக்க அவர்களுக்கே இவர்களின் கவனிப்பு ஆயாசமாக இருந்தது… இவர்களுக்கு இடையில் குட்டிஸ்களின் கவனிப்பு வேறு தனியாக… ஜீவா சொன்னது போலவே அம்மாவை விட்டு நகராமல் இருந்தான்…அவளுக்கு அனைத்தும் திரும்ப கிடைத்தது போல இருந்தது..

அவளிடம் மாலை “என்ன வேண்டும் என கேட்க”

நேத்ராவோ “இப்படியே இருந்தா எனக்கு போர் அடிக்கிது.. டிவி எல்லாம் எனக்கு வேண்டாம்… ஏதோ தனியா ரூம்க்குல்லையே அடைச்சுவெச்சமாதிரி இருக்கேன்..” என முகத்தை பாவமாக வைத்துச்சொல்ல விஜய் “அது சரி அப்போ ரெஸ்ட் எடுக்காம என்ன டி பண்ணுவாங்க.. சேர் சோபாவுல உட்காந்தாலும் எவ்வளவு நேரம் நீ காலை தொங்கபோட்டே இருக்க முடியும்…” என கூற நேத்ரா முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள அவன் வெளியே வந்ததும் சுந்தரம் “டேய் புள்ளைக்கு ஏதாவது வேணுமா கேட்டியா?”

“ம்ம்.. அவளுக்கு போர் அடிக்கிதாம்…” என அவள் கூறியது இவன் திட்டியதை கூற சுந்தரம்,குமார், சுரேஷ் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு “இதுக்காடா புள்ளைய திட்டுவ நீ..முதல நீ போயி அவளை கூட்டிட்டு வா..” என்றவர் அவர்களிடம் ஏதோ சொல்ல அடுத்த பாத்தாவது நிமிடம் ஹாலில் இருந்த அனைத்தும் நகர்த்திவிட்டு சோபாவை அவளுக்கு வசதியாக விரித்து சுவரோரம் ஒட்டி போட்டுவிட மற்ற அனைவரும் வரவழைத்தனர்…அவளை மட்டும் சோபாவில் உட்கார வைத்துவிட்டு மற்ற அனைவரும் சுற்றி கீழே என அமர்ந்துகொண்டனர்.. அவளிடம் பேச குழந்தைகள் சேட்டை செய்ய மாற்றி மாற்றி ஒவ்வொருவரும் கலாய்த்துக்கொள்ள என வீடே நிறைந்திருந்தது…அவளும் விடாமல் சிரித்துக்கொண்டே இருந்தாள்..அருகே இருந்த விஜயிடம் அனைவரையும் ஒரு மாதிரி பார்த்துவிட்டு “ஆமா எல்லாரும் இங்க மாநாடு போட்டு இருக்கீங்க…யாருக்கும் வேலை இல்லையா?” என

கீதா, சுதா “அது எங்க பிரச்சனை.. நாங்க வேலை செஞ்சுக்கறோம்.. உனக்கு என்ன டா..புள்ளைகிட்ட பேசு விடமாட்டீயே?”

வசந்தா, வாசுகி “உனக்கு சரியா நேரத்துக்கு சாப்பாடு வந்திடும்.. கொஞ்ச நேரம் இந்த ஸ்னாக்ஸ் சாப்பிட்டு பேசாம இரு டா.. எது எடுத்தாலும் திட்டிகிட்டு கேள்வி கேட்டுகிட்டு..” என கூறிக்கொண்டே ஜூஸ் கொண்டு வர அவன் வாங்க போங்க நேத்ராவிற்கு குடுத்தனர்..

நேத்ரா பழிப்பு காட்டிவிட்டு குடிக்க சுந்தரம் “ம்ம்.. நல்லா சொல்லு… அவனுக்கு ஏதாவது தெரியுதா ஒண்ணா? புள்ளை தனியா இருக்கறமாதிரி இருக்குனு சொன்னா அதுக்காக என்ன பண்ணுவாங்க ரூமலையே இருன்னு சொல்லிட்டு வந்திருக்கான்..” என

விஜய் “வேற என்ன பண்ணுவாங்க..”

குமார் சுரேஷ் “ம்ம்..இப்போ என்ன பண்ணிருக்கோம்…நேத்ராவுக்கு எப்போவுமே அவளை சுத்தி ஆளுங்க இருந்திட்டே இருக்கனும்..அப்டி இருந்தாலே அவ பாதி சரி ஆகிடுவா…நீ பார்டர்க்கு எல்லாம் போனதுக்கு அப்புறம் வாரத்துக்கு ஒரு நாள் எல்லாரும் ஆஜர் ஆகி இப்டி பேசிட்டு இருப்போம். அவளுக்கு இது பிடிக்கும்.. அவளுக்கு காய்ச்சல் தலைவலினு உடம்பு எல்லாம் சரி இல்லாம போனாகூட கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விட்டுட்டு அப்புறம் எல்லாரும் அவகூடவே இருந்தா பேசி அவளை சந்தோசமா வெச்சுக்கிட்டாலே போதும் சீக்கிரம் சரி ஆகிடுவா தெரியுமா? எங்களுக்கு அந்த நேரத்துல நேத்ராவை தவிர வேற எதுவும் முக்கியமில்லை.. என்ன வேலை இருந்தாலும் விட்டுட்டு வந்துடுவோம்…”

விக்கி “ஆமா மாமா.. நாங்க எல்லாரும் கூட ஸ்கூல்க்கு எல்லாம் லீவு போட்டுடுவோமே… அத்தை கூடவே இருப்போம்.. செம ஜாலியா இருக்கும்” என அவர்கள் கூற நேத்ரா அவனை பார்த்து கண்ணடித்து விட்டு “பாத்திங்களா? உங்களுக்கு தான் தெரில.. எல்லாருக்கும் என்னை பத்தி தெரிஞ்சிருக்கு..” என விஜய் அவளை கண்டு புன்னகைத்தான்.. மனதிலோ இவ்வளவு பாசமாக இவளை பார்த்துக்கொண்டவர்கள் எப்படி அத்தனை கடுமையாக அவளிடம் அன்று நடந்துகொண்டனர்.’ என யோசிக்க அவனுக்கு விடை மட்டும் கிடைக்கவில்லை…

நேத்ராவின் தந்தை “ஆமா ஜீவி ஜீவா இரண்டுபேருமே காணோமே..மதியம் அம்மாகூடவே தூங்கறேன்னு போச்சுங்க எங்க?” என விசாரிக்க

விஜய் “அட நீங்க வேற மாமா.. அது ஒரு ட்ராஜெடி…”

 

[விஜய் “இவளோ நாள் ஸ்கூல்க்கு லீவு போட்டாச்சு.. சரி இனி மன்டேல இருந்து  ஸ்கூல்க்கு போகணும்டான்னு சொன்னா…இரண்டும் பிராடுங்க.. மாத்தி மாத்தி முழிச்சிட்டு

ஜீவி “அப்பா ஆனா நோட்ஸ் எல்லாமே காபி பண்ணனும்ப்பா..இல்லாட்டி மிஸ் திட்டுவாங்க.. சோ வேண்டாம்ப்பானு பேசாம எக்ஸாம்ஸ் முடிச்சிட்டு அந்த லீவு முடிச்சிட்டே போய்க்கறோம் பா..”

“ஹே.. அதுக்கு இன்னும் ஒன் மந்த் இருக்கு.. ஒன்னும் பிரச்சனை இல்லை. இனி நெக்ஸ்ட் 2 டேஸ் சாட்டர்டே சண்டே  தானே..இன்னைக்கு ஈவினிங் போயி உங்க கிளாஸ்மேட் கிட்ட நோட்ஸ் வாங்கிட்டு வந்து காபி பண்ணுங்க..”

ஜீவா “அப்பா அம்மா தனியா இருப்பாங்க.. நாங்க கூடவே இருக்கோம்..நான் போகமாட்டேன்..”

“எது ? ஏன்டா வீடு முழுக்க இவளோ ஆளுங்க இருக்காங்க.. உன் அம்மா தனியா இருப்பாளா.. நான் கூட இருந்து பாத்துக்கறேன்… நீ வசந்த் கூட போய்ட்டு வா.. மன்டே இரண்டு பேரும் ஸ்கூல்க்கு போறீங்க.. உங்க மிஸ் என்னை திட்றாங்கடா..”

“அவ்ளோதானே பா புள்ளைகளுக்காக இது கூட வாங்க மாட்டிங்களா? வாங்கிக்கோங்க..” என

நேத்ரா சிரிக்க விஜய் “எது திட்டுவாங்கவா? நான் என் மிஸ் கிட்டேயே வாங்குனது இல்லடா.. உனக்காக எதுக்குடா வாங்குறேன் அதெல்லாம் சரி படாது..ஸ்கூல் கட் அடிக்க நீ என்ன பிளான் போட்டாலும் நடக்கவே நடக்காது…” என

ஜீவா “அம்மா பாவம் என்னை மிஸ் பண்ணுவாங்க… இல்லமா?”

விஜய் “அப்போ சரி உன் அம்மா தூங்கும் போது நீங்க இரண்டுபேரும் போயி வாங்கிட்டு வாங்க..” என அந்த கதவையும் அடைத்துவிட ஜீவி பாவமாக ஜீவாவை பார்க்க ஜீவாவோ தன் தந்தையை கொடூர கொலைகாரன் போல பார்த்துவிட்டு நகர்ந்தான்..]

 

விஜய் “அதுனால இவ தூங்கும் போதே இரண்டத்தையும் வசந்த்கூட அனுப்பி வெச்சிருக்கேன்..” என

சரியாக அவர்களும் உள்ளே நுழைந்ததும் ஜீவா ஜீவி இருவரும் “ஹே ஜாலி எல்லாரும் அம்மாகூட இங்கேயே இருக்காங்க என குஷியாகிவிட விஜய் “டேய் உங்க மிஸ் பாத்து பேசியாட்ச்சாடா.. ஸ்கூல்க்கு வரேன்னு சொலிட்டேல?

“ம்ம்..”

“நோட்ஸ் வாங்கிட்டு வந்தியா?”

“ம்ம்..”

நேத்ராவிடம் விஜய் “ஏய் இவனை நான் ஸ்கூல்க்கு தானே டி போக சொன்னேன்.. எவ்ளோ முறைச்சிட்டு இருக்கான் .. என்ன புள்ளைங்க…கட் அடிக்க எவ்ளோ பிளான் பண்ணுதுங்க..ஸ்ஸ்ஸ்..”

நேத்ரா “எல்லாம் உங்ககிட்ட இருந்து வந்தது தானே.. அப்புறம் அப்டித்தான் இருக்கும்..பிராடு..” என ஜீவியும் ஜீவாவும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டு “என்ன மா டாடியும் இப்படித்தானா?”

வசந்தா “ஆமாடா குட்டி.. உங்க அப்பா உங்களை விட அடம்பண்ணுவான்..”

ஜீவி “திட்டே வாங்குனது இல்லேனு சொன்னாரு..”

சுந்தரம் “ஆமா ஸ்கூல்க்கு போனாத்தானே…அப்படியும் போனா திட்டு தான் வாங்குனது இல்லை..நேரா அடி தான்..அவளோ சேட்டை பண்ணுவான்..”

ஜீவா தன்னிடம் விஜய் கூறிய வார்த்தைகளை எண்ணி பார்த்தான் “நான் எல்லாம் எவ்ளோ ஸ்மார்ட் தெரியுமாடா.. என் பையனா இருந்திட்டு எப்படித்தான் இவளோ சேட்டை பண்றியோ? ரொம்ப கஷ்டம்”

ஜீவி ஜீவா இருவரும் “எங்ககிட்ட பொய்யா சொன்னிங்க.. இப்போ அந்த மிஸ்கிட்ட வேற வரோம்னு சொல்லிட்டோமே …” என அவனிடம் சென்று ஏறி அவனை அடிக்க அனைவரும் சிரித்துக்கொண்டிருந்தனர்..

நேத்ரா சிறிது பொறுத்து “சரி சரி எப்படி இருந்தாலும் ஸ்கூல்க்கு போகணும்ல..” என பேசி சமாதானம் செய்து ஒப்புக்கொள்ள வைத்தனர்.

 

சுந்தரம் “என்ன பெரிய மனுஷா எங்கள எல்லாம் கண்ணுக்கு தெரியுதா?” என ஜீவாவை பார்த்து கேட்க

நேத்ரா புரியாமல் சிரிப்புடன் அவர்களை பார்க்க ஜீவா அமைதியாக சென்று தாத்தா பாட்டி அத்தை மாமா என ஒவ்வொருவரிடமும் “சாரி.. நான் இனிமேல் அப்டி கோபமா கத்தமாட்டேன்..” என கேட்டதும் அனைவர்க்கும் மனம் உருகிவிட்டது..

அவனை ஒருவரும் ஒன்றும் கூறவில்லை.பின் நேத்ரா என்னவென்று வினவ நேத்ராவின் அம்மா கூறினார் “உனக்கு அடி பட்டு இருந்தப்போ நைட் அவனை நீயும் எங்களோட வந்திடுடான்னு கூப்பிட்டோம்..முடியாதுனு சொன்னான்… குழந்தை தானே பயத்துல புரிஞ்சுக்காம அழுகிறான் சாப்பிட கூட இல்லேனு அவன்கிட்ட கேட்டுகிட்டே இருந்தோம்.. என்ன நினைச்சானோ தெரில “உங்க கூட வந்தா மட்டும் என் அம்மாவுக்கு சரியாகிடுமா? நான் எங்கேயும் வரமாட்டேன். எனக்கு என் அம்மா தான் வேணும்.. ஏற்கனவே நீங்க எல்லாருமே தான் என் அம்மாவை தொலைச்சிட்டீங்க.. நான் உங்களால தான் அவங்களை விட்டு பிரிஞ்சு இருந்தேன்.. இனி எப்போவும் நான் என் அம்மாகூட தான் இருப்பேன்.. என் அம்மா சரியாகி வரட்டும் அவங்ககூட தான் நான் வீட்டுக்கு வருவேன்.. அதுவரைக்கும் வரமாட்டேன்.. யார்கிட்டேயும் பேசமாட்டேன்.. எல்லாரும் போங்கன்னு கத்திட்டான்..அதுக்கப்புறம் தான் வசந்த் தம்பி குழந்தைகளை நான் ரூம் எடுத்து வெளிய தங்க வெச்சுக்கறேன். ஜீவன் மட்டும் உன்கூட ஹாஸ்பிடல்ல இருக்கட்டும்.. நேத்ராவுக்கு சரியானதும் கூட்டிட்டு வரோம்னு சொல்லி அனுப்சு வெச்சது..”

வாசுகி “அப்பாடி என் பேரனுக்கு என்ன கோபம் அப்போ?” என கன்னம் பற்றி கிள்ள

வசந்தா “அவன் சின்ன பையன் தான்.. எத நினச்சு அப்டி சொன்னானோ… ஆனா என்னைக்கும் உன்னையும் அவனையும் பிரிக்கணும்னு நினச்சதில்லைமா… ஆனா அப்டியே அவன் அப்பா மாதிரியே சொல்லிட்டு போனான்..” என வருத்தமாக கூற விஜய்க்கும் தான் நித்து இல்லாமல் இனி அந்த வீட்டுக்கு வரமாட்டேன் என கூறியது நினைவு வர நேத்ராவை பார்க்க அவளுக்கும் அனைவரையும் பார்த்து சங்கடமாக இருந்தது..

ஜீவாவை அழைத்த நேத்ரா அருகே அமரவைத்து “ஏன்டா அவங்களை அப்டி சொன்ன? என் அம்மாவை நீங்க தான் தொலைச்சிங்கனு…உனக்கு ஏன் அப்டி தோணுச்சு?”

ஜீவா “அதுவா.. எல்லாரும் ஒண்ணா இருந்து ஒருத்தர் மட்டும் காணாம போனா அப்போ இவங்க தானே உங்களை தொலைச்சிட்டீங்கனு அர்த்தம்.. நீங்க எப்படி எங்களை தொலைக்க முடியும்.. இவங்க எல்லாரும் உங்களை தொலைச்சதால தானே நான் உங்க கூட இருக்க முடில.. அதான் மம்மி அப்டி சொன்னேன்..” என

அனைவர்க்கும் குழந்தையின் செயல் பேச்சு மேலோட்டமாக இருப்பினும் இவர்கள் செய்த குற்றம் அவர்களின் உள் மனதில் குத்திக்கொண்டே இருக்க சுந்தரம் “உண்மைதானே…அவன் சொன்னது.. நாங்க தானே மா உன்னை தொலைச்சிட்டோம்” என அனைவரும் அமைதியாக

ஜீவா “ஆனாலும் நான் கத்திருக்க கூடாதுல அதான் சாரி சொல்லிட்டேன்மா..”

நேத்ரா “ம்ம்.. எப்போவுமே நாம கஷ்டத்துல இருக்கும் போது நம்ம பிரச்சனை தான் நமக்கு பெருசா தெரியும்.. மத்தவங்க உணர்ச்சிகளை நாம மதிக்கறதில்லை.. ஆனா அது எவ்ளோ பெரிய தப்பு.. பேசுறதுக்கு முன்னாடி அதுக்கு தான் யோசிச்சு பேசணும்னு சொல்லுவாங்க.. நாம காயப்படுத்திட்டு மன்னிப்பு கேக்றதுல என்ன பிரயோஜனம் சொல்லு.. எனக்கு ப்ரோமிஸ் பண்ணு ஜீவா எந்த சூழ்நிலையிலையும் கோபமா வருத்தமா இருக்கும் போது பதில் பேசாம அமைதியா கூட போயிடு.. ஆனா நம்ம வலி மட்டும் தான் பெருசுனு நினச்சு அடுத்தவங்கள காயப்படுத்தகூடாது.. எதுன்னாலும் யோசிச்சு பேசணும்..” என அவள் பொறுமையாக கூற

ஜீவா அதை பொதுப்படையாக எடுத்துக்கொண்டு “ப்ரோமிஸ் மா..இனிமேல் இப்டி பண்ணமாட்டேன்.. யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன்..” என்றான்.

சுற்றி இருந்த அனைவர்க்கும் அதை தங்களுக்காக கூறுவது போலவே எடுத்துக்கொண்டனர்.. நேத்ரா மனதில் பல சிந்தனைகள் ஓட ஜீவிதாவை பார்க்க அவள் நேத்ராவை பார்த்து கண் சிமிட்டி புன்னகைத்ததும் நேத்ராவும் சகஜநிலைக்கு வர ஜீவி “பாட்டி, எனக்கு என்ன ஸ்பெஷல் செயிரிங்க??”

வசந்தா “உனக்கு பிடிச்சது தான்டா செல்லம் இனி இங்க எப்போவுமே..”

ஜீவா “எதையோ செய்ங்கபா.. சரியா எனக்கு நேராநேரத்துக்கு சாப்பாடு போடுங்க..ஆமா எல்லாரும் இங்க இருக்கீங்க.. யாரு அப்போ வேலை பாப்பாங்க..” என விஜய் சற்று முன் கேட்டு அனைவரிடமும் வாங்கிக்கட்டிய அதே கேள்வியை அதே தோரணையில் கேட்க அனைவரும் விஜயை முறைக்க “வளத்தி வெச்சிருக்கான் பாரு.. அப்டியே அப்பன் மாதிரி.. பேசுனாலே உங்களுக்கு எல்லாம் எங்க இருந்து தான் மூக்கு வேர்க்குமோ..” என ஒவ்வொருவரும் விஜயை திட்டிக்கொண்டே நகர விஜய் தலையில் கை வைத்து அமர ஜீவா “டாடி..நான் கரெக்ட்டா தானே டாடி கேட்டேன்…ஏன் எல்லாரும் உங்களை திட்டிறாங்க…” என

விஜய் தன் மகனை பார்த்து “டேய் உண்மையாவே நீ தெரிஞ்சு பண்றியா தெரியாம பண்றியா?” என சீரியஸக கேட்க ஜீவாவும் “தெரியமா தான் டாடி பண்றேன்..” என பதில் அழித்துவிட்டு “நீங்க தானேப்பா சொல்லுவீங்க.. நான் உங்களை மாதிரி இருக்கணும்..அப்போதான் அம்மாக்கு என்னை பிடிக்கும்னு.. அதான் நீங்க பண்ற எல்லாத்தையுமே நான் அப்டியே அப்ஷார்ப் பண்ணிட்டேன்…ஏன்ப்பா ஏதாவது ப்ரோப்லேமா..” என அவன் புரியாமல் வினவ விஜய்க்கு தான் என்ன பதில் கூறுவது என புரியாமல் முழிக்க அருகே நேத்ரா வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-5ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-5

5 – மீண்டும் வருவாயா? ஜீவன் “நித்து நீ எப்போ திரும்பி வருவ? ஒருவேளை நீ கூட இருந்து வளத்திருந்தா ஜீவா இப்போ இருக்கறமாதிரி தான் அம்மா அம்மானு இருந்திருப்பான்ல..நம்ம பையனுக்கு அம்மா ஏக்கம் வந்திடிச்சா? இல்ல ஜீவிதாவோட அம்மா அவளோ

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-11ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-11

11 – மீண்டும் வருவாயா? வாணி ” இந்த கல்யாணத்த நிருவும் ஏத்துக்குவான்னு எனக்கு தோணல. கூட இல்லேன்னாலும் அவ ஹஸ்பண்ட அவ்ளோ லவ் பண்ரா..நிரு நல்ல பொண்ணு. ரொம்ப ஸ்வீட். ரொம்ப தைரியமும் கூட. இன்னைக்கு நான் இங்க இருக்கேன்னா

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13

13 – மீண்டும் வருவாயா?     சிவகாமி “அதோட உங்க குடும்பமோ பெரிய குடும்பம், நிறையா பேர் இருப்பாங்க. நீங்க கூட இருந்தாலாவது பரவால்லை. கல்யாணம் பண்ணி அவங்ககிட்ட விட்டுட்டு போறது, எப்படி ஒத்துவரும்னு தெரில..தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. இப்போ