Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 6

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 6

பனி 6

 

அடுத்த நாள் காலையே ஆதி கிருஷியைப் பார்ப்பதற்கு ஆர்வமாகக் கிளம்பினான். அங்கு சென்று பிரின்சியிடம் அனுமதி வாங்கி, கிருஷியின் வகுப்பிற்குச் சென்றான். அங்கே, அவன் எதிர்பார்த்தது போல் கிருஷி இருக்கவில்லை. மாணவ, மாணவிகளிடம் விசாரணைகளை முடித்து உனடியாக அங்கிருந்து கிளம்பினான்.

 

அன்று முழுவது விசாரணைகள் மேற் கொண்ட போது, கோலேஜிற்கு அருகில் போதைப் பொருள் விற்பனை செய்வது ஒரு இளம் பெண் என்ற செய்தி கிடைக்க, நாளை அவளைப் பிடிப்பதற்காக திட்டங்களைக் தனது டீமிடம் கூறிவிட்டு இரவு நேரம் வீடு வந்து சேர்ந்தான் ஆதி. அவனுடனேயே விகியும் வந்தான். இருவரும் பிரஷப்பாகி இரவுணவை உண்ண அமர்ந்தனர்.

 

” மச்சான் இன்றைக்கு குட்டி பேபியை பார்க்க போனியே, அவ கூட பேசினியா?” என்று விகி கேட்க,

 

“என்னை பார்த்தால், அவ கூட பேசி ஊர் சுற்றிட்டு வந்தது போல இருக்காடா?” என்று ஆதி கேட்டான்.

 

“இல்லை மச்சான், இஞ்சி திண்ண குரங்கு போல இருக்குடா” என்றான்.

 

“புரியிது இல்லை, அவளை நான் பார்க்கவே இல்லை டா, அவ இரண்டு நாளாக சிக் லீவ் எடுத்திருக்காடா” என்றான் ஆதி கடுப்பாக.

 

“இப்போ என்ன பன்ன போற?” என்று விகி கேட்க,

 

“பார்க்கலாம் டா, நான் அவளை திரும்ப பார்ப்பேன் அப்படிங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்றான் ஆதி.

 

‘ நீ உன் காதலை சீக்கிரமா புரிஞ்சுப்ப அந்த நம்பிக்கை எனக்கு இருக்குடா’ என்றான் விகி மனதில்.

 

“சரி டா நான் வீட்டுல இருக்கிறவங்க கூட பேசிட்டு வரேன் டா” என்று எழுந்து சென்றான் ஆதி.

 

அதேநேரம், விகியும் சாப்பிட்டு முடிந்து, அவனுடைய வீட்டினருடன் பேசச் சென்றான்.

 

சங்கரன்”என்னடா சிவபெருமாளோட பொண்ணை பற்றி இந்தவாட்டியவது ஏதாவது, டீடேய்ல்ஸ் கிடைச்சதா?” என்று ஒருவனிடம் கேட்க,

 

“இல்லை ஐயா, அந்த பொண்ணு பேரு வேணி, வயசு 23 அது மட்டும் தான் தெரிந்தது. ஆனால் சிவ பெருமாளுக்கும், அவன் குடும்பத்துக்கும் அந்த பொண்ணுன்னா உயிரு” என்றான் அவன்.

 

“அவன் பொண்ணை எங்க தான் மறைச்சு வச்சிருப்பான்? ஒரு நாள் கண் முன்னாடி வர தானே வேணும், அப்போ பார்த்துக்கலாம்” என்றார் சங்கரன்.

 

அடுத்தநாளும் அழகாக விடிந்தது.

 

ஆதி,விகி இருவருமே அவர்களது இந்த திட்டம் சரியாக நடைபெற வேண்டும் என்று அதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருந்தனர். இருவருமே மப்டியில் இருந்தனர். இவர்களது டீமும் அந்த வீதியில் மாறுவேடத்தில் இருந்தனர். ஆதி, விகி இருவரும் அதே வீதியில் வெவ்வேறு இடங்களில் இருந்தனர்.

 

ஆதி இந்த சிடிக்கு வருகைத் தந்த புதிய DSP என்பதால், அவனை அநேகம் பேர் அறிந்து இருக்க இல்லை. அதனால் ஆதி அருகில் இருந்த இளநீர் கடையில் இளநீர் ஒன்றைப் பருகிக் கொண்டு இருந்தான். அதே நேரம் கிருஷியும் அவ்விடத்திற்கு வந்து ஸ்கூர்டியை ஓரமாக நிறுத்தி மொபைலை எடுத்து பேசினாள்.

 

“பவி, என்னால் ரொம்ப முடியல்லை டி, தலை சுத்துறது போல இருக்கு, நான் ஜீ.பி.எஸ். லொகேஷனை சேயார் பன்றேன், இந்த இடத்திற்கு சீக்கிரமா வாயேன்” என்றாள்.

 

“அதான், காலையிலேயே சொன்னேன், கொலேஜ் போகதன்னு கேட்டியா? எங்கேயும் போயிறாத, அங்கேயே இரு நான் ஓபிசை விட்டு வெளியாகிட்டேன்”என்றாள் பவி.

 

கிருஷி ஆதியைப் பார்க்க ஆதியும் அவளைக் கண்டுக் கொண்டான். அவன் முகம் பிரகாசமானாலும், இவள் முகத்தை தலை சுற்றல் காரணமாக மறு புறம் திருப்ப,

 

ஆதி ‘தன்னைப் பார்க்கப் பிடிக்காமல் தான் அவள் முகத்தைத் திருப்புகிறாள்’ என்று நினைத்து அவள் மேல் கோபத்தில் இருந்தான்.

 

அந் நேரம், அவன் டீமில் ஒருவர் அவனுக்கு புளூடுத்தில், “சேர் அந்த பொண்ணு ரெட் டொப் வியர் பன்னி ஸ்கூர்டிக்கு” என்றதோடு லைன் கட்டானது.

 

அவன் அங்கே பார்க்க, அந்த இடத்தில் கிருஷியே ரெட் டொப் அணிந்து ஸ்கூர்டியில் சாய்ந்து நின்று இருந்தாள். முன்பே கிருஷியின் மேல் கோபத்தில் இருந்தவன், அந்தப் பெண் கிருஷி என்று நினைத்து கோபத்தின் உச்சியில் அவளை நோக்கி நடந்து வந்தான்.

 

வந்தவன் தன் இரும்புக் கைகளால் அவளைப் பிடித்து இழுத்து கோபத்தை ஒன்று திரட்டி அவள் கன்னத்தில் அறைந்ததில் அஷள் மயங்கி விழ, அவளை இடையோடு பிடித்துக் கொண்டான். தூரத்தில் இருந்த விகி இவ்விடம் ஓடி வந்தான்.

 

“எதுக்குடா இவளை அடிச்ச?” என்று கேட்க,

 

“இவளை என் மனசுல ரொம்ப பெரிய இடத்துல வச்சிருந்தேன் டா, ஆனால் இவ டிரக்ஸ் விற்குறாடா” என்றான் உடைந்த குரலில்.

 

“யாருடா சொன்னது?” என்று கோபத்தில் கேட்க,

 

“டீம்ல ரவி தான் சொன்னாரு” என்று ஆதி கூற

 

“ரெட் டொப் ஸ்கூர்டிக்கு  வலது பக்கத்துல இருக்கிற உயரமான இந்த பொண்ணு” என்று டீமில் ஒரு ஆள் பிடித்த அப்பெண்ணைக் காட்டினான்.

 

“என்னடா சொல்ற? அப்போ இவ?” என்று ஆதி கேட்க,

 

“அவ சும்மா இங்கே இருக்கா” எனும் போது,

 

அங்கிருந்த மக்களும் இவர்களிடம் சண்டையிட ஆரம்பித்தனர்.

 

“என்ன தைரியம் இருந்தால் பட்ட பகலில் ஒரு பொண்ணை எல்லோர் முன்னாடியும் கை நீட்டி அடிப்பிங்க?” என்று ஒருவர் கேட்க,

 

மற்றவர்களும் இவர்களுடன் சண்டையிட ஆரம்பித்தனர். அவளை ஹொஸ்பிடலிற்கு அழைத்துச் செல்லவும் வழி விடவில்லை.

 

ஆதியோ எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. தன்னவளை சந்தேகப்பட்டு அறைந்து விட்டோமே என்ற கவலை மட்டுமே இருந்தது. அவளை கையிலேந்தி தன் மேல் அவளை சாய்த்துக் கொண்டு அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான். இவர்களை விகி சமாளிக்க பவியும் அவ்விடம் வந்து சேர்ந்தாள்.

 

ஆதியின் கையில் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு பதறி, “கிருஷி” என்று அவளைத் தட்டி எழுப்ப, அவள் விழிக்கவில்லை. அப்போதே அவள், கண் கலங்கி நின்று இருந்த ஆதியைப் பார்த்தாள்.

 

“தேவ் அண்ணா” என்று பவி அழைக்க,

 

“பவி நீ எப்படி இங்கே?” என்று அவன் கேட்க,

 

“இவ என் பிரன்டு, நாங்க இரண்டு பேரும் ஒன்றாக தான் தங்கி இருக்கோம், இவ எப்படி மயங்கினா?” என்று அவனிடம் கேட்டாள் பவித்ரா.

 

ஆதி அறைந்ததை அங்கிருந்த ஒருவர் கூற,

 

சூழ்நிலையை சமாளிக்க பவி, “இவங்க இரண்டு பேருமே லவர்ஸ், அவங்களுக்குள்ள சின்ன பிரச்சனை.  நீங்க யாரும் இதை பெரிதாக்க வேணாம், இவங்க பேர்சனல் இவங்க பார்த்துப்பாங்க, இப்போ அவளை ஹொஸ்பிடல் கூட்டிக்கிட்டு போக வழி விடுறிங்களா?” என்று பவி கேட்க,

 

அவர்கள் அனைவரும் வழி விட்டனர். ஆதி, கிருஷியுடன் அவன் காரிலும், பவி அவளது ஸ்கூர்டியிலும் செல்ல விகியிடம் கிருஷியின் ஸ்கூர்டியை தங்களது வீட்டில் வைத்து விட்டு ஹொஸ்பிடலிற்கு வருமாறு கூறினான் ஆதி.

 

அவனும் ஆதி கூறியதை செய்துவிட்டு தனது காரில் ஹொஸ்பிடலை அடைந்தான்.

 

“மச்சான், இன்றைக்கு உனக்கு அக்ஷன் பில்ம் தான்” என்று ஆதியின் காதில் விகி கிசுகிசுக்க,

 

கிருஷிக்கு மருந்து வாங்கி வரச் சென்ற பவி அங்கே வந்தாள்.

 

“மச்சான், எனக்கு அக்ஷன் பில்மா?  இல்லை உனக்கான்னு, உன் பின்னாடி பார்த்துட்டு சொல்லு டா” என்றான் ஆதி.

 

அப்போதே அவன் பவியைப் பார்க்க, பவியும் அவனைப் பார்த்தாள். அவனை முறைத்து வேறு புறம் திரும்பிக் கொண்டாள் பவி. இதைப் பார்த்த ஆதி புன்னகைத்தான்.

 

“பவி, என்னாச்சு உன் பிரன்டுக்கு? அவ என்ன சின்ன குழந்தையா? அடிச்ச உடனேயே மயங்கிட்டா?” என்று ஆதி கேட்க,

 

“அவளுக்கு இந்த மூன்று நாளா பீவர் அண்ணா, அவளுக்கு எந்திரிக்க கூட முடியல்லை, இன்றைக்கு தான் பீவர் குறைந்தது. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்ததுக்கு அப்பொறமா போன்னு சொன்னேன். அதை கேட்காமல் கோலேஜிற்கு போனாள். அவளுக்கு தலை சுற்றுதுன்னு சொல்லி பிரின்சி கிட்ட சொல்லிட்டு வரும் போது அவளால் ரொம்ப முடியல்லை, அப்போ என்னை போன் பன்னி அவ இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போக  வர சொன்னா. அதற்குள்ள இப்படி நடந்திருச்சி” என்றாள் பவி.

 

“எதுக்கு நீ அவங்க முன்னாடி லவர்ஸ்னு சொன்ன?” என்று ஆதி கேட்க,

 

“என்னது லவரா? மச்சான் இப்போவே அவ உன்னை போட்டு மிதிக்க ரெடியாகி இருப்பா, லவர்னு சொன்னனு அவளுக்கு தெரிஞ்சது உன் துப்பாக்கியை எடுத்து உன் குட்டிபேபி உன்னையே ஷூட் பன்னிருவா” என்றான் விகி.

 

“என்னது நீங்க தான் அந்த இம்சையா?”  என்று ஆதியைப் பார்த்துக் கேட்க,

 

“உனக்கு எப்படி தெரியும்?” என்று ஆதி கேட்க,

 

“அவ உங்களை ரொம்ப திட்டிட்டு இருந்தா. இப்போ கொஞ்சம் திட்றத விட்டு இருக்கா. அவளுக்கு ஹைட்ட பற்றி பேசினா செம்மையா கோபம் வரும்” என்றாள் பவி.

 

“ஆமா, அண்ணா இவங்க யாரு? முந்திரி விதை போல முன்னாடி வந்து பேசிகிட்டு” என்றாள் பவி விகியைப் பார்த்து கடுப்பாக.

 

ஆதி மௌனமாக இங்கு நடப்பதை நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

“யாருடி முந்திரி விதை நானா? நீ தான்  கடுகு போல சின்னதா இருக்க” என்றான்.

 

“என்னது டி யா? யாரைக் கேட்டு நீ டின்னு என்னை பேசின?”  என்று அவள் எகிற

 

“நான் யார் கிட்ட கேட்கனும்? என்னை விட அந்த உரிமை யாருக்கு இருக்கு?” என்றான் விகி.

 

“உன்னை தவிற எல்லோருக்கும் இருக்கு” எருமை என்றாள்.

 

“உன்னை டி போட்டு, என்னை தவிற எவனாவது பேசட்டும், அதான் அவன் பேசுற கடைசி நாள்” என்றான் விகி.

 

“இந்த பூச்சாண்டியெல்லாம் இங்கே செல்லாது” என்றாள் பவி மிடுக்காக.

 

அவன் பதில் கூற வருவதற்குள் டாக்டர் கிருஷி விழித்து விட்டதாக கூறி அவர்களது சண்டைக்கு முற்றிப் புள்ளி வைத்து, அடுத்த டொம் என்ட் ஜெரி சண்டையை ஆரம்பிக்க உதவி செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 25யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 25

பனி 25   கிருஷி சாப்பிட அமர்ந்து ஒருவரையும் பார்க்காமல் சாப்பிடுவதிலேயே குறியாய் இருந்தாள்.   ‘புருஷன் சாப்பிட்டானான்னு ஒரு வார்த்தை கேட்குறாளா? ஐயோ இவ சாபிடுற வேகத்தை பார்த்தால் நமளுக்கு சாப்பாடு இருக்காது’ என்று நினைத்தவன் அவசரமாக கைகளை கழுவி

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 11யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 11

பனி 11   “நவி” என்று ஆதி கத்தினான். கீழே விழுந்த கிருஷி எழுந்து நின்ற ஐந்து நிமிடங்களில் ஆதி அங்கு பைகில் வந்து இறங்கியவன் பைக்கை ஸ்டேன்ட் வைத்து நிற்பாட்டாமல் கீழே கிடத்தி விட்டு அவள் அருகில் ஓடி வந்தான்.

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 32யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 32

பனி 32 “அப்பா நான் உங்க பொண்ணு பா” என்றாள் கிருஷி அழுகையுடன்.   “நீ என் பொண்ணே இல்லை. நான் பெத்த பொண்ணு இருபத்து மூன்று வருஷத்துக்கு முன்னாடியே செத்துப் போயிட்டா” என்று சென்றுவிட்டார்.   கிருஷி இதைக்கேட்டு அதே