Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 5

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 5

பனி 5

 

மெகெனிக் அவ்விடம் வந்தவுடன் இருவரும் அமைதியாகவே இருந்தனர்.

 

“ஆமா, நீ எவளோ நாளாக லெக்சர் பன்ற?” என்று அவன் கேட்க,

 

“ஏன், நீ எக்ஸ்பீரியன்ஸ பார்த்து, செலரியை கூட்டி தர போறியா?” என்று அவள் நக்கலாக கேட்க,

 

“உன் திமிருக்கு மட்டும் குறைச்சலே” இல்லை என்றான்.

 

அவன் கடுப்பாகியதைக் கண்டு திருப்தியடைந்தவள், “இன்றையோடு இரண்டாவது நாள்” என்றாள்.

 

“இதற்கு தான் இவளோ பில்டப் கொடுத்தியா?” என்று கேட்க, அவள் அவனை முறைத்தாள்.

 

“உன் கொலேஜ் முதல் நாளிலேயே தரமான சம்பவம் நடந்திருக்கு. என்ன குட்டி பேபி எல்லாமே அபசகுணமாவே இருக்கே?” என்று அவன் கூறி அவளைப் பார்க்க,

 

“மிஸ்டர் இம்சை எனக்கு இந்த சகுணம் பார்க்குறதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. அது மட்டும் இல்லை, நீ சொல்றது போல பார்த்தால், சொ என் பர்ஸ்ட் கிளாசை யாருக்கும் மறக்கவும் முடியாது. நான் அந்த நாள் சொல்லி கொடுத்த விஷயங்களையும் மறக்க மாட்டாங்க. இது எனக்கு ஸ்பெஷல் டே தான்” என்றாள்.

 

“என் பெயர் இம்சை இல்லை. ஆதிலக்ஷதேவன்” என்றான்.

 

“அதே போல என் பெயரும் குட்டி பேபி இல்லை. கிருஷ்ணவேனி” என்றாள் அவன் கூறிய டோனிலே.

 

“எனக்கு என்னமோ உனக்கு, குட்டி பேபி தான் உனக்கு செட் ஆகும்னு தோனுது. அவளோ நல்லா இருக்கு” என்றான்.

 

“தயவு செஞ்சு அந்த பெயரை சொல்லி கூப்பிடாத எனக்கு எரிச்சலா இருக்கு” என்றாள்

 

“சரி அப்போ நான் உன்னை குலாபின்னு சொல்லட்டா?” என்று கேட்க,

 

“என் கூட நீ பேச தேவையே இல்லை” என்றாள்.

 

“சேர் வேலை முடிஞ்சது” என்றான் மெகானிக்

 

“தேங்ஸ் அண்ணா, எவளோ ஆச்சு?” என்று கேட்க,

 

“இல்லை சேர் கொடுப்பாங்க” என்றான் மெகானிக்.

 

“அவன் எதுக்கு எனக்கு பணம் கொடுக்கனும்? நீங்க சொல்லுங்க, நான் தான் பணம் கொடுப்பேன்” என்றாள்.

 

“அவரு உங்க லவர் தானே?” என்று கேட்க,

 

அதில் கடுப்பாகியவள், “யோவ் அவரு இந்த சிடியோட DSP, அவரு இந்த வழியால போகும் போது ஒரு பொண்ணு தனியா நிக்குறான்னு எனக்கு உதவி பன்னாரு அவளோ தான்” என்று கோபமாக முடித்தாள்.

 

“இந்த பணத்தை பிடிங்க” என்று அவள் நூறு ரூபாயை வழங்க,

 

மெகானிக் ஆதியைப் பார்க்க, ஆதி அதை வாங்குமாறு கண்களால் கூற அதை வாங்கிக் கொண்டான்.

 

“அவள் தேங்ஸ்” என்று கூறி ஸ்கூடியை ஸ்டார்ட் செய்ய,

 

“இட்ஸ் ஒகே நவி” என்றான் ஆதி.

 

அவள் அதிர்ந்து அவனைத் திரும்பிப் பார்க்க,

 

“நான் உன் பெயரில் ஒரு பகுதியை சுருக்கி வச்சேன்” என்று கண்ணடித்தான்.

 

அவள் எதுவும் கூறாமல் அங்கிருந்து பறந்துவிட்டாள்.

 

‘ஆதி இவளை நீ லவ் பன்ன வைக்கிறது ரொம்ப கஷ்டம் தான்’ என்று அவன் மனசாட்சி கூற,

 

‘ஆமா நான் ரொம்ப கஷ்டபட வேண்டி இருக்கும்’ என்றான்,

 

‘ஏஏ நான் எப்போ அவளை லவ் பன்னேன்? சேசே அப்படி ஒன்னும் இல்லை அவளை எனக்கு பிடிக்கும் அவளோ தான்’ என்று தனது மனசாட்சியை அடக்கினான்.

 

மெகானிக்கிடம் அவள் வழங்கிய பணத்தை அவன் பெற்றுக் கொண்டு வேறு பணத்தை வழங்கி, அந்த நூறு ரூபாயை தனது பர்சில் பத்திரமாக வைத்துக் கொண்டான்.

 

வீட்டிற்கு வந்தவள் பிரஷப்பாகி வந்தாள். காபியை ஊற்றிக் கொண்டு பல்கனிக்கு வந்து வெளிச்சூழலை ரசித்து பருக, ‘நவி’ என்ற அவனது குரல் இவள் காதில் கேட்க, பருகிக் கொண்டு இருந்த காபியைப் துப்பினாள்.

 

பின்னால் திரும்பிப் பார்க்க, அவ் வீட்டில் இவளைத் தவிற வேறு யாரும் இருக்கவில்லை. அவனின் நவி என்ற அழைப்பு, அவள் ஆழ்மனதில் உடனேயே பதிந்துவிட்டதை அறியவில்லை.

 

‘சே, என்னடா இது? அவன் குரல் என் காதுல கேட்குது? கடவுளோ அந்த இம்சை கிட்ட இருந்து என்னை காப்பாற்று’ என்று வேண்டினாள். அவள் இம்சை இவளை இம்சிக்க ஆரம்பித்து விட்டான் என்று புரிந்துக் கொள்ளாமல் இருந்தாள்.

 

அவள் மொபைல் ஒலிற அதில் பவி என்று திரையில் மின்னியது.

 

“என்ன மச்சி, இப்போ தான் உனக்கு என்னை தெரிஞ்சுதா?” என்றாள் கிருஷி.

 

“இல்லை மச்சி, வீட்டிற்கு முழு குடும்பமும் வந்து இருக்கு. அதான் கொஞ்சம் பிசி” என்றாள் பவி.

 

“உன் கல்யாண விஷயம் என்னாச்சு மச்சி? உன் அத்தைப் பையனை தான் கல்யாணம் பன்னிக்க போறியா?” என்று கிருஷி கேட்க,

 

“ஆமான்டி, அந்த எருமையை தான், அவன் சென்னையில் தான் இருக்கான். வீட்டிற்கு கூட அவன் இந்தவாட்டியும் வேலையை காரணம் சொல்லி வர இல்லை மச்சி. அவன் என் கையில் மாட்டாமலா இருப்பான்? அப்போ பார்த்துக்கலாம்” என்றாள் பவி.

 

கிருஷி புன்னகைத்து, “சரி மச்சி விடு, அண்ணாவை நீ இங்கே வந்த பிறகு பார்த்துக்கலாம்” என்றாள்.

 

“சரி மச்சி, உன்னோட பர்ஸ்ட் டே கோலேஜில் எப்படி போச்சு?” என்று பவி கேட்க,

 

“நான் அசிங்கப்பட்ட கதையை ஏன் டி கேக்குற, எனக்கு வருகிற கோபதுக்கு, அவனை ********” என்று திட்ட

 

“ஏய் போதும் கிருஷி, இவளோ கேவலமா எதுக்குடி திட்ற? யாரவன்?” என்று கேட்க,

 

அன்று நடந்தது அனைத்தையும் பெயர் கூறாமல் கூறி முடித்தாள். “அவன் என் ஹைட்ட பற்றி பேசி கடுப்பாக்கிட்டான், அவன் குட்டி பேபின்னு சொல்லும் போது ரொம்ப கடுப்பா இருக்கும் டீ” என்றாள்.

 

“அவன் பெயர் என்ன மச்சி?” என்று பவி கேட்க,

 

அவள் “ஆதி” என்றாள்.

 

“சரி விடு, வந்து பார்த்துக்கலாம்” என்று சில பல கதைகளைப் பேசி அழைப்பைத் துண்டித்தனர்.

 

“என்னடா தூங்காமல் யோசிச்சுட்டு இருக்க? அவனுங்களை பிடிக்க ஏதாவது ஐடியா வச்சிருக்கியா? அதை பற்றி தான் யோசிக்கிறியா?” என்று விகி வினவ,

 

“இல்லை மச்சான், இன்னும் கொஞ்சம் அந்த கேசில் டீபா இறங்காமல் அவசரப்பட்டு எந்த ஐடியாவும் போட கூடாதுடா. அந்த தலை உஷாராகிருவான். நான் இப்போ யோசிக்கிறது வேற மச்சான்” என்றான் ஆதி உறங்கியபடி.

 

“அப்போ எதை பற்றி யோசிக்கிற?” என்று விகி கேட்க,

 

“எல்லாம் குலாபி பற்றி தான்” என்றான் ஆதி.

 

“அது யாருடா?” என்றான் விகி.

 

“மச்சான் குட்டி பேபியை சுருக்கி குலாபின்னு சொன்னேன்” என்றான்.

 

“நடத்து டா நீ நல்லா நடத்து” என்றான் விகி.

 

“அவ கண்ணு தான் மச்சான், அது எனக்கு ரொம்ப பரீட்சையமானதுன்னே என் மனசு சொல்லிட்டு இருக்குடா? ஆனால் அவளை இப்போ தான் பாக்குறேன், ஒரே குழப்பமா இருக்குடா” என்றான் ஆதி.

 

“அப்போ அந்த கண்ணு டிஸ்டர்ப் பன்றதால் தான், நீ அவளை நினைக்குற, அப்படி தானே?” என்று விகி கேட்க,

 

“ஆமான்டா டெபன்ட்லி” என்றான்.

 

“சரி மச்சான், நீ அவளை பார்க்காமல் இருந்தால் அவளைப் பற்றி நினைக்கமாட்ட இல்லை?” என்று கேட்க,

 

“ஆமா டா” என்றான் ஆதி.

 

“சரி பாக்கலாம்”, என்று அவனும் விட்டு விட்டான்.

 

அடுத்த நாள் அழகாக விடிந்தது. அன்றைய நாள் முழுவதும் கிருஷி, ஆதி இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. இருவருமே தத்தமது வேலைகளில் பிசியாக இருந்தனர். ஏனோ இருவருக்கும் அந்த நாள் டல்லாகவே இருந்தது. இரவு அவளைப் பார்க்கவில்லையே என்று ஆதியின் மனது கவலைப்பட்டது. ஏனோ அவனுடன் சண்டையிடாமல் இருந்தது, அவளுக்கும் ஏதோ போல் இருந்தது.

 

இவ்வாறே தொடர்ந்து மூன்று நாட்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருந்தனர். அவர்கள் பார்ப்பதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை. இது கிருஷியைப் பாதித்ததோ இல்லையோ, ஆதியை மிகவும் பாதித்தது. அது ஏன் என்று அவனிற்கும் புரியவில்லை. அதற்கான பதிலை அவன் தேடவும் முனையவில்லை. அவளை எப்படியாவது பார்க்க வேண்டும் என்றே எண்ணி இருந்தான்.

 

“என்ன மச்சான் கொஞ்ச நாளாகவே நீ சரியில்லை? அம்மா என் கிட்ட ஏன்னு கேட்குறாங்க?” என்று விகி அவனிடம் வேலை விட்டு வந்து ஷூவைக் கழற்றிக் கொண்டே கேட்டான்.

 

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை டா” என்று ஆதி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

 

‘இவன், குட்டிபேபியை பற்றி தான் யோசிக்கிறானோ’ என்று இவன் எண்ணி இவனும் மற்றைய அறையில் இருந்த குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

 

இருவரும் சாப்பிட அமர, “ஆதி நீ குட்டி பேபியை பார்க்க இல்லைன்னு கவலைபடுறியா?” என்று விகி கேட்க,

 

அவன் சாப்பிடுவதை நிறுத்தி, விகியைப் பார்த்தான்.

 

“சொல்லுடா” என்று விகி கேட்க,

 

“தெரியல்லை மச்சான் அவ கூட சண்டை போடாமல், போசாமல் இருக்கிறது ஒரு மாதிரி தான் டா இருக்கு” என்றான்.

 

‘மச்சான் நீ அவளை காதலிக்க ஆரம்பிச்சிட்ட டா, இதை நான் சொன்னால், நீ ஏத்துக்க மாட்ட டா, நீயா அதை உணரு’ என்று எண்ணிக் கொண்டான் விகி.

 

“சரி டா, நாளைக்கு கோலேஜில் சில இன்வெஸ்டிகேஷன் இருக்கு. அதற்கு நீ போ, மற்றைய வேலைகளை அப்பொறம் பார்த்துக்கலாம்” என்றான் விகி.

 

“ஒகே டா, நாளைக்கு நான் ரவுன்ஸ் போலான்னு தான் இருந்தேன், நான் பாத்துக்குறேன்” என்றான் ஆதி முகமலர்ச்சியுடன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 32யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 32

பனி 32 “அப்பா நான் உங்க பொண்ணு பா” என்றாள் கிருஷி அழுகையுடன்.   “நீ என் பொண்ணே இல்லை. நான் பெத்த பொண்ணு இருபத்து மூன்று வருஷத்துக்கு முன்னாடியே செத்துப் போயிட்டா” என்று சென்றுவிட்டார்.   கிருஷி இதைக்கேட்டு அதே

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17

பனி 17   “அப்பா அவன் வேறு யாரும் இல்லை. அன்றைக்கு வீட்டிற்கு என்னை வந்த தேவ் தான். ராஜேஸ்வரி அம்மாவோட பையன்” என்று கூறி அழுதாள்.   சிவபெருமாள் அதிர்ச்சியில் கீழே அமர்ந்துவிட்டார். கனகாவும் அதிர்ந்து அவளைப் பார்த்தார்.  

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 10யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 10

பனி 10   மாலை கோலேஜ் முடித்தவுடன் மோலிற்கு செல்லும் போது ஒரு கார் அவளை போலோ செய்வதைக் கவனித்தவள் சற்று வேகமெடுத்துப் போக, அவளை இடமறித்து அந்த கார் அவள் ஸ்கூர்டியின் முன்பு வந்து நின்றது.   காரிலிருந்து ஒருவன்