Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 4

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 4

பனி 4

 

“அக்கா, அக்கா” என்று உள்ளே வந்தான் நேசன்.

 

“ஏன் டா கத்துற? மாமா தூங்குறாரு. நேற்று இராத்திரி அவரு வர ரொம்ப லேட் ஆகிறிச்சி” என்றார் சிவபெருமாளின் மனைவியான கனகவள்ளி.

 

‘பசிக்குது அக்கா” என்று கூற,

 

“போ போய் கை, கால் அலம்பிட்டு வா” என்றார் கனகா.

 

அவனும் சென்று கை, கால் அலம்பி, டைனிங் டேபளில் அமர்ந்தான்.

 

“என்னக்கா ராமன், நந்தனி ஒருத்தரும் வீட்டுல இல்லையா?” என்று நேசன் கேட்க,

 

“இல்லை டா, அவங்க நந்தனி அம்மாவோட வீட்டுக்கு போயிருக்காங்க” என்றார்.

 

“வேனி பேசினாளா?” என்று அவன் கேட்க,

 

“ஆமான்டா, வேலைக்கு இப்போ போயிருப்பா” என்றார்.

 

“அவ தான் இந்த வீட்டோட இளவரசியே அக்கா, அங்கே இருந்து எதுக்கு கஷ்டபடுறா?” என்றான்.

 

“அவளுக்கு பிடிச்ச வேலையை அவள் பாக்குறா, அவளுக்கு அதில் ஒரு சந்தோஷம் இருக்கும் டா” என்றார்.

 

“உன் மூத்த பையனுக்கும் கல்யாணம் பன்னி வச்சிட்ட, இப்போ வேணி மட்டும் தான் இருக்கா. அவளுக்கும் கல்யாணம் பன்னி வச்சா, உனக்கும் மாமாவுக்கும் நிம்மதியா இருக்குமே” என்றான் வாயில் இட்லியை வைத்த படி.

 

“அவளுக்கு இப்போ கல்யாணம் பன்னிக்குற ஐடியாவே இல்லை டா, அது மட்டும் இல்லை, அவளுக்கு ஏற்றது போல ஒருத்தனை தேடனும், எங்கே இருக்கானோ அவன்” என்று கூறும் போது

 

சென்னையில் உணவு உண்டுக் கொண்டு இருந்த ஆதிக்கு புரை ஏறியது.

 

“மச்சான், என்னடா உனக்கு அவசரம்? மெதுவா சாப்பிடு” என்றான் விகி.

 

“எருமை நான் எப்போ டா சாப்பாட்டை அவசரமா சாப்பிட்டு இருக்கேன், எனக்கு எப்பவுமே சாப்பாடை ரசிச்சு, ருசிச்சு தான் சாப்பிடனும். அப்படி இருக்கும் போது எனக்கு எதுக்கு புரை ஏறனும்?” என்றான் ஆதி.

 

“வேணுன்னா, நாம ஒரு டீமை ரெடி பன்னி, விசாரிக்க சொல்லலாமா?” என்று விகி கேட்க,

 

“என்ன கலாய்க்க டிரை பன்னி இருக்க, சரியா பன்னல்ல…இன்னும் நல்லா பன்றதுக்கு வாழ்த்துக்கள்” என்று மீண்டும் உண்ண ஆரம்பித்தான் ஆதி.

 

தன் தலையில் அடித்துக் கொண்டு விக்ரமன் சாப்பிட ஆரம்பித்தான்.

 

“சரி அக்கா, நல்ல பையனை பார்த்து கல்யாணம் பன்னி வைக்கலாம்” என்று உண்டு முடித்து கைகழுவி வெளியே வந்தான் நேசன்.

 

தனது ஜீப்பில் ஏறியவன் நேரடியாக தோப்பிற்குச் சென்றான்.

 

“அங்கிருந்த ஒருவன், என்ன அண்ணா ரொம்ப கோவமா இருக்கிங்க?” என்று கேட்க,

 

“நான் முறை மாப்பிள்ளை இருக்கும் போது, வேணிக்கு வேறு ஒருத்தனை மாப்பிள்ளை பார்த்து, கல்யாணம் பன்னி வைக்க போறாங்களாம். அக்கா வேணி விஷயத்துல என்ன முடிவு எடுத்தாலும், மாமா மறுப்பு தெரிவிக்க மாட்டாரு. அதே போல வேணி சொன்னால் அதை மறுக்காமல் செய்வாரு. யேன்னா, அவருக்கு வேணின்னா உயிரு” என்றான்.

 

“நீங்களே கல்யாணம் பன்னி வைங்கன்னு கேட்கலாமே அண்ணா?” என்று கேட்க,

 

“இல்லை அது முடியாது. அவளுக்கும் எனக்கும் பன்னிரெண்டு வயசு வித்தியாசம். வயது, அவளோட படிப்பை காரணம் காட்டி கல்யாணம் பன்னி வைக்கமாட்டாங்க” என்றான்.

 

“அப்போ என்ன பன்ன போறிங்க?” என்று கேட்க,

 

“அவளுக்கு யாரை மாப்பிள்ளை பார்த்தாலும் பரவால்லை, அவ கழுத்துல நான் தான் தாலி கட்டுவேன், அவ எனக்கு தான் சொந்தம், எனக்கு மட்டும் தான் சொந்தம். அவளுக்காக யாரோட உயிரை எடுக்கவும் தயங்க மாட்டேன்” என்று ஆக்ரோஷமாக கத்தினான் நேசன்.

 

அன்றைய தினம் ஆதியை பார்க்கக் கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டே அந்த நாளை ஆரம்பித்தாள். அன்று கோலேஜ் விட்டு வெளியேறும் வரையில் அவனைப் பார்க்கவில்லை. அவளும் தான் பிராத்தனை நிறைவேறியதாக சந்தோஷமாக இருந்தாள். அவள் ஸ்கூட்டியை எடுத்து சிறிது தூரம் போகும் அவளுடைய வண்டிக்கு குறுக்காக ஒரு பைக் நின்றது. முழுமையாக ஹெல்மட்டால் தன் முகத்தை மறைத்து இருந்தவன் அதை கழற்றி அவளிடம் வந்தான்.

 

“கிருஷி, உன் பின்னாடி நான் ஒரு வருஷமா சுத்திட்டு இருக்கேன். நீ எந்த பதிலும் சொல்லவே இல்லை” என்றான் புதியவன்.

 

“என்ன பதில்?” என்று அவள் கேட்க,

 

“நான் உன்னை லவ் பன்றேன்னு சொன்னேன்” என்று கூற

 

“சேர் நீங்க யாரு?, பெயர் என்ன? எதுவுமே தெரியாது. எனக்கு தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எங்க வீட்டில் பாக்குறவரை தான் நான் கல்யாணம் பன்னிப்பேன். தயவு செஞ்சி இனிமேல் என் பின்னாடி வராதிங்க, மீறி வந்திங்கன்னா நான் பொலிசில் கம்பிளைன்ட் கொடுக்க வேண்டி வரும்” என்று தனது ஸ்கூடியை கிளப்பிச் சென்றாள்.

 

புதியவனோ இவள் செல்வதையே நின்ற இடத்திலிருந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

‘சே, நல்ல மூட்டில் இருந்த என்னை இப்படி பன்னிட்டான் , கோயிலுக்கு போயிட்டு வரலாம்’ என்று வெகு தூரத்தில் உள்ள பிள்ளையார்க் கோயிலை நோக்கிச் சென்றாள்.

 

அங்கு சாமி கும்பிட்டு விட்டு மன நிம்மதிக்காக ஓரிடத்தில் அமர்ந்தாள்.

நேரம் செல்ல ஏதோ யோசணையில் மணியைப் பார்த்தவள் 5.45 என்று காட்டியது. அவசரமாக வண்டியைக் கிளப்பி வரும் போது, சிறிது தூரம் வந்தவளுடைய வண்டி பஞ்சராகி நின்றுவிட்டது.

 

வண்டியை விட்டு கீழ் இறங்கிப் பார்க்க, டயர் பஞ்சர் ஆகி இருப்பது தெரிந்தது. சுற்றி முற்றும் பார்க்க ஆள் அரவமற்ற ஒரு பாதையாக இருந்தது. ஏனோ அவள் மனம் பயத்தை தத்தெடுத்தது. மொபைலில் தெரிந்தவர்களை அழைக்கத் தோன்றினாலும், உடனே வருமளவுக்கு எந்த ஒரு ஆண் நண்பனும் இல்லையே, நண்பியும் ஊரிற்குச் சென்று இருக்கிறாளே என்று அமைதியாக மொபைலைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் செய்வதறியாது.

 

நேரத்தைப் பார்க்க மணி ஆறு என்று காட்டியது. ‘கடவுளே இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டிடுமே நான் எப்படி போவேன்?’ என்று பயப்பட அவள் முன்னே வேகமாக வந்து நின்றது ஒரு கார். எத்தனையோ செய்தித்தாள்களில் படித்தபடி அவளையும் கடத்திக் கொண்டு செல்லப் போகிறார்கள் என்று நினைத்தவளின் சப்தநாடியும் அடங்கியது.

 

விழித்து விழித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளின் அருகில் காரிலிருந்து இறங்கி வந்தவன்,

 

“என்ன குட்டி பேபி முகம் எல்லாம் வெளுவெளுத்து இருக்கு?” என்று கேட்ட பின்னரே கிருஷியால் சீராக மூச்சுவிட முடியுமாக இருந்தது.

 

“இடியட் இப்படி தான் பயமுறுத்துவியா?” என்று அவனை அடித்தாள்.

 

“அடியேய் நான் டி.எஸ்.பி டி, நடு ரோட்டில் என்னை இப்படி அடிக்கிற”  என்றவன், “என்னா அடி?” என்று அவள் அடித்த இடத்தை தடவிக் கொடுத்துக் கொண்டே கேட்டான்.

 

‘ஐயோ, நீ என்னடி அவன் மேலே உரிமை இருக்கிறது போல அடிக்குற’ என்று அவள் மனசாட்சி கேட்க,

 

‘அட ஆமா’ என்று, “சொரி” என்றாள் ஆதியிடம்.

 

“எதுக்கு? அடிக்கும் போது டி.எஸ்.பி ன்னு கூடவா உனக்கு தோனல்ல?” என்று அவன் கேட்க,

 

“அடிச்சதுக்கு தான் சொரி சொன்னேன். இப்போ நீ காக்கியில் இல்லை, மப்டியில் தான் இருக்க” என்றாள் வெடுக்காக.

 

“அதுக்கு நான் டி.எஸ்.பி இல்லைன்னு ஆகிறுமா?” என்றான்.

 

“தெரியாமல் அடிச்சிட்டேன், தயவு பன்னி விட்டுடு ” என்று கை எடுத்துக் கும்பிட்டாள்.

 

“நீ இங்கே தனியா என்ன பன்ற?” என்று கேட்க,

 

“வண்டி பஞ்சராச்சு, மெகானிக் ஷொப் எதுவும் பக்கத்துல இல்லை” என்றாள்.

 

“கொஞ்சம் இரு” என்று தன் மொபைலில் தனக்குத் தெரிந்த மெகனிக்கை அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்தான்.

 

“மெடம் சிங்கள் தானா?” என்று கேட்க,

 

“உனக்கு எதுக்கு நான் சொல்லனும்?” என்றாள் மறுபுறம் திரும்பி

 

“நீ சொல்ல தேவையில்லை. நானே கண்டுபிடிச்சிட்டேன்” என்றான்.

 

“எப்படி?” என்று அவள் கேட்க,

 

“நீ கமிட்டா இருந்தால், உன் போய்பிரன்டு இப்போ இங்கே வந்திருப்பான், சிம்பிள்” என்று தோளை உலுக்கினான்.

 

“உண்மை தான், நான் சிங்கள் தான்” என்றாள் புன்னகைத்துக் கொண்டே.

 

“யேன் நீ யாரையும் லவ் பன்ன இல்லை?” என்று அவன் கேட்க,

 

“நீ யாரையாவது லவ் பன்றியா?” என்று அவள் கேட்க,

 

“இல்லை” என்றான்.

 

“யேன்?” என்று அவள் கேட்க,

 

“நான் எனக்கு புடிச்சது போல் மீட் பன்ன இல்லை” என்றான்.

 

“எனக்கு காதல் மேலே நம்பிக்கை இல்லை” என்றாள்.

 

“இந்த டயலோகை நான் கேட்டு இருக்கேன்” என்றான்.

 

“எதுக்கு இப்படி சொல்றாங்கன்னு ஒரு தடவை சரி யோசிச்சு பார்த்து இருக்கியா?” என்று கேட்க,

 

“இல்லை” என்றான்.

 

“இந்த டயலோகை அதிகமா யூஸ் பன்றது பொண்ணுங்க தான். அதுக்காக அவங்க முதல் காதலில் தோற்று விட்டு சொல்றதா நினைக்காத, அவங்க மற்றவர்களுடைய காதலை பார்த்துட்டு சொல்றது. இந்த காலத்துல பசங்களோ, பொண்ணுங்களோ ஒருத்தரை காதலிச்சிட்டு இருக்கும் போதே இன்னொருத்தரையும் காதலிக்கிறாங்க. முன்னைய காலத்துல காதல் அப்படிங்கிறது சந்தோஷம், கவலை இதை போன்ற ஒரு உணர்வு. அந்த உணர்வுக்கு பொதுவா எல்லாருமே மதிப்பு கொடுப்பாங்க ஆனால் இந்த காலத்துல வெறும் டைம்பாஸ் தான். அதற்குன்னு, நான் எல்லாரையுமே குறை சொல்ல மாட்டேன். சிலர் பன்ற தப்பால இப்போ காதலுக்கு இருந்த மரியாதை, அதோட புனிதம் எல்லாமே போயிருச்சு, உண்மையா காதலிக்கிறவங்களை கூட நம்ப முடியாத அளவுக்கு மாறிபோச்சு” என்றாள்.

 

“அப்போ மெடம் யாரையும் காதலிக்க மாட்டிங்க?” என்று அவன் கேட்க,

 

“யாரு சொன்னா? நான் என் புருஷனை கண்டிப்பா காதலிப்பேன்” என்றாள்.

 

“நீ என்ன சொல்ற?” என்று அவன் கேட்க,

 

“நான் காதலிக்கிறவனை தான் கல்யாணம் பன்னிப்பேன் என்ன நிச்சயம்? கடைசி வரைக்கும் அவன் தான்னு நினைப்போம், ஆனால் விதி அவன் உனக்கில்லன்னா, நம்மளால் அதை தாங்கிக்க முடியாது. அவனையும் மறக்க முடியாமல் இன்னொருத்தனையும் ஏத்துக்க முடியாமல் கஷ்டபடுறதுக்கு, வீட்டில் யாரை மாப்பிள்ளையா பாக்குறாங்களோ அவங்களையே கல்யாணம் பன்னிக்கிறது பெடர்” என்றாள்.

 

“ஒரு வேளை கல்யாணம் பன்ன புருஷன் தப்பானவன்னா?” என்று அவன் கேட்க,

 

“நல்ல கேள்வி, நம்ம பேரென்ஸ் நம்மளுக்கு நல்லதை தான் பன்னுவாங்க, நாம நினைக்குறதை விட நம்ம பெற்றவர்கள் நினைக்குறது நம்மளுக்கு எப்பவுமே நல்லதா தான் முடியும். அதனால என் பெற்றவர்கள் கண்டிப்பா தப்பா எதையும் பன்ன மாட்டாங்க, இத்தனை வருஷமா பெற்று வளர்த்த அவங்களுக்கு நமக்கு எப்படி பட்ட துணையை அமைச்சி கொடுக்கனும்னு நல்லாவே தெரியும்” என்றாள்.

 

“நீ உண்மையாவே லெக்சர் தான் அதை ஒத்துக்குறேன்” என்றான்.

 

அவள் அவனை முறைக்க, அதை நேரம் மெகேனிக்கும் அவ்விடம் வந்து சேர்ந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 6யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 6

பனி 6   அடுத்த நாள் காலையே ஆதி கிருஷியைப் பார்ப்பதற்கு ஆர்வமாகக் கிளம்பினான். அங்கு சென்று பிரின்சியிடம் அனுமதி வாங்கி, கிருஷியின் வகுப்பிற்குச் சென்றான். அங்கே, அவன் எதிர்பார்த்தது போல் கிருஷி இருக்கவில்லை. மாணவ, மாணவிகளிடம் விசாரணைகளை முடித்து உனடியாக

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 32யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 32

பனி 32 “அப்பா நான் உங்க பொண்ணு பா” என்றாள் கிருஷி அழுகையுடன்.   “நீ என் பொண்ணே இல்லை. நான் பெத்த பொண்ணு இருபத்து மூன்று வருஷத்துக்கு முன்னாடியே செத்துப் போயிட்டா” என்று சென்றுவிட்டார்.   கிருஷி இதைக்கேட்டு அதே

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 34யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 34

பனி 34   கிருஷியைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் நேசன் கூற இருவருமே அதிரந்தனர்.   அப்போது “அண்ணா” என்ற குரல் கேட்டு இருவருமே திரும்பிப் பார்க்க ஒரு பெண் நின்று இருந்தாள்.   இருவரும் “ஐஷூ, உள்ள வா மா”