Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 3

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 3

பனி 3

 

கோலேஜ் இலிருந்து வெளியான ஆதி, விக்ரமன் நேராக ஹொஸ்பிடலிற்குச் சென்று, பி.எம் ஐப் பெற்று அவர்களது அலுவலகத்திற்குச் சென்றனர். தனது சீட்டில் வந்து அமர்ந்த ஆதி,

 

“எனக்கு அந்த கிளாஸ் ரூமுக்கு வெளியே இருக்கிற ரோடுக்கு பக்கத்துல இருக்கிற கடையில் இருந்து சீசிடிவி புடேஜ் இன்னும் ஒன் அவரில் என் கைக்கு வந்து சேரனும்” என்றான்.

 

“எஸ் சேர்” என்று விக்ரமன் வெளியே செல்ல,

 

“இன்ஸ்பெக்டர் அந்த ரௌடி பற்றிய டீடெய்ல்ஸ் எல்லாம் உங்க கிட்ட இருக்குல்ல?” என்று கேட்க,

 

அவர் “ஆம்” என்றார்.

 

“மற்ற டிரக் டீலர்ஸோட டீடைல்ஸ் இப்போ வேணும்” என்று ஆதி கூற,

 

“சேர் அதில் கொஞ்சம் பேரை பற்றி தான் தெரிஞ்சது . மற்றவர்கள் எல்லோருமே பெரிய தலைகளோட பினாமி தான்” என்றார் இன்சி.

 

“சரி எனக்கு அது போதும், கொண்டு வாங்க” என்றான் ஆதி.

 

அவரும் அதை ஆதியின் கைகளில் வழங்க அவை அனைத்தையும் பிரட்டிப் பார்த்தான். அதில் பார்வையை வைத்துக் கொண்டே,

 

“ரகு செத்துட்டான், அவன் இறந்தால் யாருக்கு இலாபம் அதிகம்?” என்று ஆதி கேட்க,

 

“அவன் செத்தால் எல்லோருக்குமே இலாபம் தான் சேர். யேன்னா சரக்கு அவங்க கைக்கு இனி போகாமல் மற்றவங்க கைக்கு தான் போகும்” என்றார் இன்சி.

 

ஹம்ம்ம்… என்று பெருமூச்சை இழுத்து விட்டவன், “இந்த கேஸ் ரொம்ப நீளும் போல இருக்கே, இதோட மெயின் சப்லையர் யாருன்னு கண்டு பிடிக்கனும். நீங்க பெரிய தலைங்கன்னு கொண்டு வந்தீர்க்களே, அவங்க எல்லாருமே பினாமி தான் இவங்க எல்லாருக்குமே தலைவன்ஒருத்தன் இருக்கான், அவன் யாருன்னு கண்டு பிடிக்கனும்”

 

“கண்டுபிடிக்கிறேன்” என்று தனக்கே சவால்விட்டுக் கொண்டான் ஆதி.

 

அவன் அறியாத ஒன்று அந்நேரம் தன்னவளுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்று.

 

ஒரு மணி நேரத்திற்கு முன்பே விக்ரமன் புடேஜை எடுத்துக் கொண்டு வந்தான். அதைப் பார்த்தவர்களுக்கு எந்தவொரு குளூவும் கிடைக்கவில்லை.

 

“விகி, பி.எம் பன்ன டொக்டருக்கு கோல் பன்னு” என்று ஆதி அவசரமாக கூற, அவனும் அழைப்பை ஏற்படுத்தினான்.

 

“டொக்டர் அந்த புலட் சைஸ் படி பார்த்தால், அவனை ரொம்ப தூரத்துல இருந்து தானே ஷூட் பன்னி இருக்காங்க?” என்று கேட்க,

 

“ஆமா ஆதி, மெ பி ஒரு  25 பீட் தூரம் இருக்கலாம்” என்றார்டொக்டர்.

 

“தேங்கியூ டாக்டர்” என்று அழைப்பைத் துண்டித்தான் ஆதி.

 

“விகி அவரு சொல்கிறதைப் பார்த்தால் ஒரு ஷார்ப் ஷூடர் தான் ஷூட் பன்னி இருக்கனும். சொ 25 பீட் தூரத்துல இருக்கிற ஹைட்டான இடங்களை பாருங்க” என்றான் ஆதி.

 

அன்றைய தினம் அவர்களுக்கு தேடல்களுடனேயே நாள் முடிந்தது. வீட்டிற்கு இருவருமே டயர்டாகி வந்தனர். ஆம் இருவருமே ஒரே பிளெட்டில் வசிக்கும் நண்பர்கள்.

 

“மச்சான், ரொம்ப டயர்டா இருக்கு டா” என்று சோபாவில் அமர்ந்தான் ஆதி.

 

“எனக்கும் தான் டா” என்று கிச்சனிற்குள் நுழைந்தான்.

 

“மச்சான் கமலா மா( வேலை செய்யும் பெண்) நமளுக்காக தோசை சட்னி, காபியை பிளாஸ்குல ஊற்றி வச்சிட்டு தான் போயிருக்காங்க” என்றான் கிச்சனில் உணவுகளைப் பார்த்துக் கொண்டே.

 

இருவரும் சென்று பிரஷப் ஆகி, காபியை குடித்து உணவை உண்டனர்.

 

பின் இருவரும் தத்தமது வீட்டினருடன் பேசுவதற்காக சென்றனர்.

 

ஆதி அழைப்பை ஏற்படுத்த, “ஹலோ அம்மா” என்று கூற,

 

“சொல்லு தேவ், இப்போ தான் வேலை முடிஞ்சுதா?” என்று கேட்க,

 

“ஆமா மா, இன்றைக்கு வேலை கொஞ்சம் ஜாஸ்தி தான் அதனால் ரொம்ப டயர்ட்” என்றான்.

 

“இல்லையே என் பையன் முகம் இன்றைக்கு வித்தியாசமா இருக்கே” என்றார்..

 

“இல்லை மா எப்பவும் போல தான் இருக்கேன்” என்றான் ஆதி.

 

ஆனால் ஒரு தாயிடம் எதையும் மறைக்கமுடியாதல்லவா? அதே போல் தன் மகனிடம் உள்ள சந்தோஷத்தைக் கண்டு கொண்டார் ராஜேஸ்வரி. சிறிது நேரம் வீட்டில் உள்ள அனைவருடனும் பேசி அரட்டை அடித்து முடித்து வர, விக்ரமனும் தன் குடும்பத்தினருடன் பேசி முடித்து வந்தான்.

 

“என்ன ஆதி தனியா சிரிக்கிற?” என்று கேட்க,

 

“அப்பிடியெல்லாம் இல்லை மச்சான்” என்றான்.

 

“என் கிட்டயே பொய் சொல்றியேடா?? அவளைப் பார்த்ததுல இருந்தே உன் நடவடிக்கையே சரி இல்லையே” என்றான் விகி.

 

“யாரை டா குட்டி பேபியவா?” என்று ஆதி கேட்க,

 

“நான் அவ தான்னு சொல்லவே இல்லையே மச்சான். அங்கே எத்தனை பொண்ணுங்க இருந்தாங்க, நீ என்ன இவளை சொல்ற?” என்று விகி புருவம் சுருக்கி கேட்க,

 

“அவ மட்டும் தானே டா பெயரை சொன்னா?” என்றான் ஆதி.

 

“என்ன மச்சி கண்டதும் காதலா?” என்று கேட்க,

 

“நோ நோ டா, அவ மேலே எனக்கு காதல் எல்லாம் இல்லை டா. அவளை புடிச்சிருக்கு” என்றான்.

 

“அப்போ கிரஷ்ஷா” என்று கேட்க,

 

“அது தெரியாது. பட் கியூட்டா இருந்தா டா” என்றான் ஆதி.

 

“சரி, எவளோ கியூட்?” என்று கேட்க,

 

தன் கண்களை மூடிக் கொண்டு அவளை தன் மணக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தினான்.

 

“மின்னி, மின்னி இருக்கிற இரண்டு கண்ணு, குட்டி மூக்கு, ரோஜா பூ….” என்று ஆதி கூறும் போது

 

“ஐயோ நிறுத்துடா இப்படி வர்ணிச்சு நான் நிறைய பார்த்து இருக்கேன். புதுசா ஏதாவது டிரை பன்னுடா” என்று விகி கூற,

 

“ஓகே, இரண்டு சிம்பள் யூ லெடரை சேர்த்து வச்சது போல கண்ணு, A லெடரை நிலைக்குத்தா வச்சி,B ஐ கிடையா வச்சது போல மூக்கு, இரண்டு V லெடரை வச்சது போல ஒரு வாய்” என்று ஆதி கூற,

 

“ஐயோ சாமி மன்னிச்சு விட்டுடா தெரியாமல் சொல்லிட்டேன், ஆளை விடு” என்று கூறி விகி எழப்போக,

 

“ஒரு புளோல நான் அழகா சொல்லிட்டு இருந்தேன், நீ தான் என்னை புதுசா ஏதாவது சொல்லுன்னு சொன்ன, இப்போ நான் சொல்றதை கேட்டு தான் ஆகனும்” என்றான் ஆதி அவன் கையைப் பிடித்துக் கொண்டே.

 

“தவளைக்கு தன் வாயால் கேடுன்னு சொல்லுவாங்க, இப்போ தான் அதை அனுபவத்தால் புரிஞ்சி இருக்கேன்” என்று புலம்ப

 

“மரியாதையா கேளு” என்றான் ஆதி

 

“சொல்லித் தொலை” என்றான் விகி.

 

“எங்க விட்டேன்?” என்று கேட்க,

 

“V லெட்டர் டா” என்றான் விகி.

 

“ஐயோ அது இல்லை, ரோஜா பூ” என்று கூறி மீண்டும் அவனே தொடர்ந்தான்.

 

“ரோஜா பூவோட ஒரு இதழ் போல அவளோட இரண்டு இதழ், ரசகுல்லா போல இரண்டு கன்னம், அழகா வளைந்து இருக்கிற இரண்டு புருவம், இடுப்பு வரைக்கும் இருக்கிற கூந்தலை நாலுபின்னல் இட்டு அதை வலது பக்கமா போட்டு ஒரு பேபி மாதிரி அழகா இருந்தா” என்று ஆதி இரசித்துக் கூற விகியோ அவனை அதிர்ச்சியாக பார்த்தான்.

 

“என்னடா?” என்று ஆதி கேட்க,

 

“இல்லை, நீ பொண்ணுங்க கூட பிரன்லியா பழகுற, நல்லா பேசுவ, ஆனால் இந்த அளவுக்கு ஒரு பொண்ணை பற்றி என் கிட்ட சொல்றது இதான் முதல் தடவை டா”  என்றான் விகி.

 

“மச்சான் நீ சொல்றது உண்மை தான், நான் பொண்ணுங்க கூட பேசி இருக்கேன், பழகி இருக்கேன் தான், ஆனால் யாரையும் இரசிக்க இல்லை. இவளை கூட நான் இரசிச்சு பார்க்கல்லை டா, அவ முகம் என் மைன்ட்ல பிக்ஸ் ஆயிருச்சு” என்றான் ஆதி.

 

“ஏஏஏ, ஒரு நிமிஷம், நீ எப்போ அவளை இந்த அளவுக்கு கவனிச்ச? அவ உன்னை கொலை வெறியில் தானே பார்த்தாள், அப்படி இருக்கும் போது நீ எப்படி பார்த்த? ” என்றான் விகி புருவங்களை சுருக்கி.

 

“உன் கூட அவ பேசிட்டு இருக்கும் போது தான் டா, அவ குரல் கூட சின்ன பொண்ணு போல இருந்தது. அதான் அவளை பார்க்க முன்னாடி சின்ன பொண்ணுன்னு வெளியே போக சொன்னேன்” என்றான் ஆதி.

 

“அப்போ சைடு கெப்புல அவளை சைட் அடிச்சிருக்க?” என்று விகி கேட்க,

 

ஆதி ‘ஈஈஈ’ என்று இளித்து வைத்தான்.

 

“அவ தான் உன் கூட சண்டை போடுறாளே டா” என்று விகி கூற,

 

“இது வரைக்கும் நான் எந்த பொண்ணு கிட்டவும் வம்பு இழுத்தது இல்லை, என்னன்னு தெரியல்லை, அவளை கடுப்பாக்கனும், அவ கூட சண்டை போடனும்னு மனசு சொல்லிட்டே இருக்கு” என்றான் ஆதி.

 

“மச்சான் எனக்கு என்னமோ, அவ மேலே உனக்கு கிரஷ் இருக்குன்னு தோனுது டா” என்று விகி கூற

 

“இருக்கலாம், ஆனால் அவளோட கண்ணை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன் டா” என்றான் ஆதி.

 

“தயவு செஞ்சி கனவுலன்னு சொல்லாதடா, இதை மாதிரி நிறைய கதை இருக்கு டா” என்று கூற

 

“மச்சான் நான் அவளை இன்றைக்கு தான் முதன்முதலா பார்த்து இருக்கேன். ஆனால் அந்த கண் எனக்கு ரொம்ப பரீட்சயமானது” என்றான் ஆதி உறுதியாக.

 

இவ்வாறு அவன் வீட்டில் கூறிக் கொண்டு இருக்க, கிருஷியோ கண்ணாடியின் முன் நின்று அவளைப் பார்த்தாள்.

 

“அவன் சொன்னது போல நான் ரொம்ப குட்டியா இருக்கேனா?” என்று அவள் தன்னை மேலிருந்து கீழே பார்த்தாள்.

 

“என்னை குள்ளமனு சொல்றான், அவன் மட்டும் என்ன ஆறடியா?” என்று கேட்க,

 

“அவன் ஆறடி இல்லை தான், 5′ 10″ இருப்பான். நீ 4’10” உன்னை விட அவன் ரொம்ப உயரம் தான்” என்றது அவள் மனசாட்சி.

 

“கொஞ்சம் வளர்ந்திருக்கலாமோ” என்று அவள் கூற

 

“ஆமா, ஒரு ஐந்தடியாவது வளர இருந்தது” என்றது அவள் மனசாட்சி.

 

“அம்மா, அப்பா இரண்டு பேரும் நல்ல உயரம் தான், அப்போ நான் எப்படி குள்ளமா இருக்கேன், ஒரு வேளை நான் அவங்க பொண்ணு இல்லையோ” என்று யோசிக்க,

 

“எப்படி கேவலமா யோசிக்கிற?” என்று அவள் மனசாட்சி அவளைத் திட்ட

 

“எல்லாத்துக்கும் இவன் தான் காரணம், சொந்த அம்மா அப்பாவை பெத்தவங்க இல்லைன்னு இந்த இம்சை என்ன யோசிக்க வச்சிட்டானே” என்று அவனுக்கு அர்ச்சணை செய்து மீண்டும் அவனைப் பார்கக் கூடாது என்று உறங்கச் சென்றாள்.

 

அவனோ அவளை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று நினைத்து உறங்கினான். அடுத்த நாள் காலையில்,

 

“அக்கா, அக்கா” என்று உள்ளே வந்தான் நேசன்.

 

“ஏன் டா கத்துற? மாமா தூங்குறாரு. நேற்று இராத்திரி அவரு வர ரொம்ப லேட் ஆகிறிச்சி” என்றார் சிவபெருமாளின் மனைவியான கனகவள்ளி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 4யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 4

பனி 4   “அக்கா, அக்கா” என்று உள்ளே வந்தான் நேசன்.   “ஏன் டா கத்துற? மாமா தூங்குறாரு. நேற்று இராத்திரி அவரு வர ரொம்ப லேட் ஆகிறிச்சி” என்றார் சிவபெருமாளின் மனைவியான கனகவள்ளி.   ‘பசிக்குது அக்கா” என்று

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)

பனி 39   “நீங்க இரண்டு பேருமே எதிரிங்க தானே? எப்படி பார்ட்னர்ஸ் ஆனிங்க?” என்று ஆதி உறும அவர்கள் பதில் கூற ஆரம்பித்தனர்.   “நாங்க இந்த நிமஷம் கூட குடும்ப ரீதியா எதிரிகள் தான். இந்த தொழில் ரீதியா

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 30யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 30

பனி 30   அவள் உள்ளே நுழைய கூற முடியா ஓர் உணர்வு அவளுள் எழுந்தது. சுற்றிப் பார்த்து உடனடியாக அவ்வறையின் ஜன்னலை திறந்தாள். அப்போதே அவள் சுவரில் தொங்கிய புகைப்படத்தைப் பார்த்து சிலையானாள்.   “இவங்க யாரு? இந்த போடோ