Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-26

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-26

26 – மீண்டும் வருவாயா?

 

தனியாக அமர்ந்திருந்த ஜீவி சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

பாட்டி, தாத்தா மாமா பெரியப்பா என அனைவரும் கூட்டமாக ஊர் பெரியவர்களோடு தூரத்தில் பேசிக்கொண்டிருக்க, மறுபுறம் மேளதாளத்திற்கு ஏற்றவாறு இளவட்டம் ஆடிக்கொண்டிருக்க அதை பார்த்துவிட்டு திரும்ப இவளது தந்தை யாரிடமோ போன் பேச சத்தத்தில் அவனுக்கு கேட்காமல் போக எழுந்து  ஒரு காதில் மொபைல், மறுகாதை கையில் வைத்து அடித்துக்கொண்டே கத்தி பேசிக்கொண்டே சற்று முன்னேறி நடந்துகொண்டிருந்தான். சற்று தூரமாக ஆனால் பார்வை படும் தொலைவில் ஒரு இடத்தில அவன் திரும்பி நின்று பேசிக்கொண்டிருக்க அவனையே கவனித்திருந்தவள் நேர் பின்னால் ஒருவர் பிரேக் பிடிக்கவில்லை என ஒரு லாரியை மிக வேகமாக ஓட்டி வர அனைவரும் கவனிக்க நிற்காமல் விஜயை நோக்கி செல்ல ஜீவி அவனை நோக்கி “அப்பா….” என கத்திகொண்டே  ஓடிச்சென்றாள் …அவனோ திரும்பி நின்றதால் அதுவும் சத்தத்தில் காதை அடைத்துக்கொண்டு கத்தி போன் பேச, வெடி சத்தம் என இருப்பதால்  ஜீவி அழைப்பதும், வண்டியின் ஹார்ன் சத்தமும்  அவனுக்கு கேட்கவில்லை.

இதை கவனித்த அனைவரும் பதட்டமாக அவனை அழைக்க ஜீவி விஜயிடம் சென்று அவனது காலை பற்ற திரும்பியவன் “ஜீவி மா.. என்னடா..” என ஒரு நொடி பின்னால் வந்த வண்டியை பார்த்து சுதாரிக்கும் முன்  நேத்ரா அவனையும், ஜீவியையும் தள்ளிவிட்டாள். வண்டியை திருப்பியவர் கட்டுக்குள் கொண்டுவர முயன்று  அவள் மேல் மோதி பின் மரத்தில் இடித்து வண்டியை நிறுத்தினார்.

 

விஜய்க்கு ஒரு நிமிடம் உலகமே இருண்டது போல  உணர்ந்தான். ஜீவி “அப்பா…..அம்மா….” என அதிரிச்சியாகி காட்ட அருகே உயிரில்லாமல் நின்றவன் மறுநொடியே “நித்து” என விரைந்து அவளிடம் சென்றான். அவளை மடியில் ஏந்தியவன் அருகே வந்த ஜீவி “அம்மா, என்னாச்சு மா.. அம்மா” என அழுக

நேத்ரா “குட்டி மா.. ஒண்ணு இல்லடா… பயப்பட கூடாது… அழக்கூடாது.. அம்மா சொல்றேன்ல…” என இரத்தம் வழிவதை கண்ட குழந்தை பதறி மீண்டும் “அம்மா..அம்மா ” என அழத்துவங்க

“அப்பாகூடவே இருக்கணும்.. அம்மாக்கு ஒண்ணுமில்ல..தைரியமா இரு..” என

தூரத்தில் இருந்து ஜீவா “அம்மா” என கத்திகொண்டே வந்தான்.

அவனை பார்த்தவளுக்கு கண்ணீர் வர “ஜீவா…” என்றழைத்தவள் விஜயின் கைகளை இறுக பற்றினாள்.

அவனோ உயிரியில்லாமல் இருக்க அனைவரும் வண்டி எடுத்துவந்ததும் எந்திரம் போல அவளை ஏந்தி வண்டியில் ஏற்றி தன் தோளில் சாய்த்துகொண்டான் விஜய்..மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் “நித்து..உனக்கு ஒண்ணு இல்லேலடி.. ப்ளீஸ் நித்து..” என அவன் கண்கள் கலங்க “விஜய்…” என அவன் கண்ணீர் பெருக அதை காண பொறுக்காமல் “விஜய்…என்னை பாருங்க ” என அவனது நடுங்கும் விரல்களை பிடிக்க அவன் பார்த்ததும் “ஐ லவ் யூ விஜய்..” என்றாள்.

 

அவனுக்கு என்னவோ போல் ஆக “ஏய்.. இப்போ எதுக்கு டி இதை சொல்ற?” என்றான் பதட்டமாக..

அவனின் பதட்டம் புரிய மெல்லிய புன்னகையுடன் “மறக்கமுடியாத மொமெண்ட்ல சொல்லணும்னு சொன்னேன்ல… இது ஓகேவா இருக்கும்ல?..ஏன்னா இதுக்கு மேல இதே மாதிரி சான்ஸ் …” என அவள் விளையாட்டாக கேட்க விஜய் “உன்னை கொன்றுவேன் நித்து.. ப்ளீஸ் டி..விளையாடாத.. இப்டி எல்லாம் சொல்லாத..எனக்கு உயிரே போகுது… உனக்கு சரி ஆகிடும்..அப்போ வந்து எனக்கு நீ லவ் யூ சொல்லு.. இல்ல நீ சொல்லவே இல்லேன்னாலும் பரவால்லை.. நான் இனி சண்டை போடமாட்டேன்…எனக்கு நீ திரும்ப வந்தா போதும்..  ப்ளீஸ் நித்து.. நீ சொல்லு டி.. உனக்கு ஒண்ணுமில்லேல… ” என அவன் இறைஞ்சும் குரலில் கேட்க அவளுக்கும் அடிபட்ட வலியோடு இதயத்திலும் வலித்தது.. எதுவும் கூறாமல் அவனின் கன்னம் வருடியவள் அவனது மார்பில் சாய்ந்து மயக்கமானாள்..

 

மருத்துவமனை அடைந்ததும் வண்டியில் இருந்து இறக்கி அவளை அழைத்து செல்லும் போது சிறிது நினைவு வந்தவள் தன்னை சுற்றி குடும்பமே கதறும் சத்தம் கேட்பினும் அருகே நின்று கணவன், மகன் மகளை பார்த்தவள் ஜீவிதாவிடம் “ஜீவிம்மா, அம்மா வரவரைக்கும் அப்பாவையும் ஜீவாவையும் பாத்துக்கோ…அப்பாவை விட்டு போகாத ” என்றவள் விஜயை பார்த்துக்கொண்டே மீண்டும் மயங்க அவளை உள்ளே அழைத்துச்சென்றனர்.

 

அவனோ பிரமை பிடித்தவன் போல அப்டியே அமர்ந்துவிட அனைவரும் பதட்டத்துடன் செய்வதறியாது வருத்ததுடன் நின்றிருந்தனர்.

 

உள்ளே அவளுக்கு டிரீட்மென்ட் நடந்துகொண்டிருக்க வெளியே விஜய், ஜீவிதா, ஜீவன், வசந்த், வாணி மட்டும் இருக்க மற்ற அனைவரையும் கிளம்ப சொல்லிவிட்டனர். யாருக்கும் மனமில்லாமல் செல்ல வசந்தா, வாசுகி இருவரும் கோவிலை விட்டு வரவும் இல்லை, உணவும் உண்ணவில்லை அழுதுகொண்டே பிரார்த்தனையில் இருந்தனர். ராஜி, நேத்ராவின் குடும்பத்தினர் கூட கூறியும் அவர்கள் நகரவேயில்லை.

இறுதியில் விஜய் கூறினால் வேண்டுமானால் கேட்கலாம் என குமார் வசந்த்திடம் “எப்படிடா, ஜீவன்கிட்ட சொல்ரது? அவனும் இப்டியே பீல் பண்ணிட்டு உக்காந்திருக்கான். ஏற்கனவே அவங்க இரண்டுபேரும் பிரிஞ்சதுக்கே இங்க எல்லாரும் அவசரப்பட்டது தான் காரணம்னு நினச்சு கத்திட்டு இருக்கான். இப்போ அவன் பொண்டாட்டிக்கு அடிபட்டத பாப்பானா? இல்ல வயசான அம்மா அத்தை அங்க அவங்களையே வருத்திகிட்டு சாகக்கெடக்குறாங்களே அத பாப்பானா? அவன்கிட்ட என்னனு சொல்றது…ச்சா…” என இருவரும் தங்களுக்குள் பேசி குமுறிக்கொண்டிருக்க இதை கண்ட ஜீவிதா விஜயிடம் சென்றாள்.

 

முகத்தை மூடி அமர்ந்திருந்தவனை கைகளை விலக்கி “அப்பா..” என அழைக்க

கண்விழித்தவன் “ஜீவி குட்டி சாரி டா… நான் அம்மாவை பத்திரமா பாத்துக்கல. அப்பா மேல கோபமா?”

ஜீவி “இல்லப்பா.. அம்மா சொல்லிருக்காங்க.. அவங்க உங்ககூட இருக்கும்போது தான் ரொம்ப சேஃப்பா இருப்பாங்களாம்.. நீங்க தான் அம்மாவை எல்லாரையும் விட ரொம்ப நல்லா பாத்துபிங்களாம்… உங்க கூட இருந்தாலே அம்மாக்கு வந்த ப்ரோப்லேம் எல்லாம் போயிடும்னு சொல்லுவாங்க… நடக்கற எல்லா விஷயத்துக்கும் ஒரு ரீசன் இருக்கும்னு மம்மி சொல்லுவாங்க.. சோ இதுக்கும் ஏதாவது ரீசன் இருக்கும் தானே. அதோட அம்மா திரும்ப வரேன்னு தானே சொல்லிருக்காங்க. நீங்களும் அம்மாவும் எப்போவும் சொல்லுவீங்கதானே எப்போவுமே ஒரு விஷயத்தை நம்புனா அத முழு மனசோட நம்பணும்…நாம சந்தேகத்தோடு பயத்தோட இருந்தா அத முழுசா நம்பலேனு அர்த்தம்னு.. அம்மா திரும்பி வருவாங்கனு நீங்க நம்புறீங்க தானே..அப்புறம் ஏன் அழுகுறீங்க…நீங்க அழுகிறது தெரிஞ்சா அம்மா ரொம்ப பீல் பண்ணுவாங்க…” என கூற அவன் ஒரு நிமிடம் திகைக்க அவனும் “கண்டிப்பா நித்து திரும்பி வந்திடுவாடா..எனக்கு நம்பிக்கை இருக்கு… தேங்க்ஸ்டா செல்லம்” என அவளும் தந்தையை கட்டிக்கொண்டு தோளில் சாய்ந்தபடி “நீங்க அழுதா எனக்கும் அழுகை வரும்ப்பா..” என கண் கலங்க

“இல்லடா குட்டி..அப்பா இனிமேல் அழமாட்டேன்… அம்மாக்கு நான் மட்டுமில்ல நீங்க யாரும் அழுதாகூட பிடிக்காது. அம்மா சொல்லிருக்காங்க தானே. எப்போவுமே நீ ரொம்ப தைரியமா இருக்கணும்..கண்ணை தொடச்சுக்கோ..வா” என மடியில் தூக்கி வைத்துக்கொண்டான்.

“அப்பா….”

“சொல்லுடா..”

“வசந்தா பாட்டியும், வாசு பாட்டிகிட்டேயும் பேசுங்கப்பா.. அவங்க சாப்பிடமா, டேப்லெட் போடாம அம்மாக்காக பீல் பண்ணிட்டு இருக்காங்க..நீங்க பேசுங்கப்பா..” என அவன் அருகே இருந்த வசந்த், குமார், கீதாவை பார்க்க அவர்கள் எதுவும் கூற முடியாமல் அமைதியாக நிற்க அவனும் சில வினாடி அமைதியாக இருந்தவன் பின் ஜீவிதாவை பார்த்ததும் புன்னகையுடன் “சரி பேசுறேன்” என்றவன்

கால் செய்து அம்மாவிடம் தர சொல்லி அவர்களிடம் பேச சாப்பிடுமாறு கூற அவர்கள் மறுத்துவிட்டனர்.

“இல்லடா ஜீவன்…எனக்கு மனசே கேக்கல.  எங்களுக்கு அந்த நேரத்துக்கு உனக்கு பிரச்னைன்னு சொல்லும் போது அவளுக்கும் தானே அது மனக்கஷ்டம். அதான்  புள்ளைங்க உயிரோட இருந்தா போதும்னு நினச்சு அப்டி கத்தி திட்டி அனுப்பிச்சிட்டோம். ஆனா மனசார அவளை என்னைக்குமே நாங்க வெறுத்ததில்லைடா. என் பேத்தி ஐயோ உனக்கு ஒரு பிரச்னைனதும் அப்டி ஓடிவந்தாளே.. இப்போ அடுச்சுக்கறோம் அந்த புள்ளைங்க  உன்கூட இருந்தாவா உனக்கு ஆபத்துனு வேண்டாம்னு விலக்கி வெச்சோம். எவ்ளோ பெரிய பாவம். அதுவும் எங்க அவசரத்தால எல்லாம் வந்தது. அன்னைக்கு முழுசா சாமி சொல்றத கேட்டிருந்தா இத்தனை காலம் நீங்க பட்ட வலி எதுவுமே இல்லாம போயிருக்குமே. என் மருமகளுக்கு அம்மாவா இருப்பேன்னு சொல்லி நானே எவ்ளோ கொடுமை பண்ணிட்டேன். எனக்கு அவளை பாக்காம மன்னிப்பு கேட்காம மனசு ஆறாதுடா. இப்போ தான் சாமிகிட்டேயும் பேசுனோம். அவ கண்டிப்பா சரி ஆகி வந்திடுவானு சொல்லிருக்காங்க. அவ வந்ததும் தான் எனக்கு தண்ணி பசி தூக்கம் எல்லாமே… நீ அவ குணமாகிட்டானு சொல்ற வரைக்கும் என்னால வேற எதுவுமே நினைக்கமுடியாதுடா. என் மருமக வந்தா போதும். இதுல நீயே சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்.” என அவர் பிடிவாதமாக மறுத்துவிட இவனும் எவ்வளோ  கூறியும் அவர் முடியாது என இறுதியில் ஜீவிதா போன் வாங்கி “பாட்டி.. நீங்க ஏன் இப்படி பண்றீங்க? உங்களுக்கு எங்க அம்மாவை பிடிக்காதா பாட்டி?” என

வசந்தா “அப்டி எல்லாம் இல்லடா. என் பொண்ணு பையன விட உன் அம்மாவை தான் எனக்கு ரொம்ப புடிக்கும். அவகிட்ட தான் நான் அதிகம் உரிமையே எடுத்துக்குவேன். ஆனா நான் தான் உன் அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.” என அவர் அழுக

ஜீவிதா “சரி அம்மாகிட்ட சொல்லி நான் மன்னிக்க சொல்றேன். நீங்க பீல் பண்ணாதீங்க..”

“உன் அம்மா மன்னிப்பாளா?”

“கண்டிப்பா பாட்டி..தப்பு பண்ணவங்க அத அவங்களே உணர்ந்து வரும்போது மன்னிக்கணும். அவங்களை இன்னும் தண்டிச்சு கஷ்டப்படுத்த கூடாதுனு அம்மா சொல்லிருக்காங்க.. சோ நீங்க அழாதீங்க.. போயி சாப்பிட்டு மாத்திரை போடுங்க..” என கூற

வசந்தா “இல்லடா குட்டி மா.. உங்க அம்மா வரவரைக்கும் எனக்கு எதுமே வேண்டாம்..”

“நான்தான் சொல்றேனே.. அம்மா திரும்பி வரேன்னு தான் பாட்டி சொல்லிட்டு போயிருக்காங்க.. கண்டிப்பா வருவாங்க..நான் சொல்றத கேளுங்க…” என வசந்தாவுக்கு ஒரு நொடி அன்று நேத்ரா கூறியது நினைவு வந்தது ‘அவரு வரேன்னு சொல்லிட்டு போயிருக்காரு அத்தை.. கண்டிப்பா வருவாரு.. நம்புங்க.. ப்ளீஸ்.’ ,மனதில் மீண்டும் அதே குரல் கேட்க ஜீவிதா “பாட்டி ..”

“ஆ.. சொ..சொல்லுடா மா.”

“நான் இவளோ சொல்றேன்.. அப்போ எங்க அம்மா சரியாகி வருவாங்கனு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அவங்களுக்கு ஏதாவது ஆகும்னு சொல்றிங்களா?” என அவள் கேட்டதும்

வசந்தா பதறி போயி “ஐயையோ..அப்டி எல்லாம் என் மருமகளுக்கு எதுவும் ஆகவேண்டாம். அவ கண்டிப்பா வந்திடுவா… எனக்கு நம்பிக்கை இருக்கு..”

“அப்புறம் என்ன பாட்டி.. அம்மா திரும்பி வந்ததும் நீங்க தெம்ப்பா பேசணும்ல. சோ போயி சாப்பிட்டு டேப்லெட் போட்டு எனெர்ஜிடிக்கா இருங்க…” என்றதும் வசந்தா அமைதி காக்க

ஜீவிதா “ஏன் பாட்டி..நீங்க ஜீவா ஏதாவது கேட்டா மட்டும் தான் செய்விங்களா? உங்களுக்கு ஜீவா மட்டும் தான் புடிக்குமா.. ரமேஷ் அண்ணா, விக்கி மாமா ஜீவா மட்டும் தான் உங்க பேரனா? என்னை பிடிக்காதா? நான் வேண்டாமா? நானும் அம்மாவும் திரும்ப போய்ட..” என பாவமாக கேட்டு அவள் முடிக்கும்முன்

வசந்தா “இல்லடா மா.. இல்ல..நீயும் தான் எனக்கு ரொம்ப முக்கியம். ஜீவா, ரமேஷ், விக்கி எல்லாரையும் விட இந்த வீட்டோட செல்ல பொண்ணே நீதான். எனக்கு மட்டுமில்ல.. நம்ம வீட்ல எல்லாருக்குமே.. இப்போ உனக்கு என்ன பாட்டி மாத்திரை சாப்பிடணும் அவ்ளோதானே.. போட்டுக்கறேன்…இன்னொரு தரம் நீயும் உன் அம்மாவும் எங்களை விட்டு போகாதீங்கடா. அப்டி யோசிக்கக்கூட செய்யாத…” என அவர் மருந்து சாப்பிடுவதாக ஒப்புக்கொண்டு போனை வைத்துவிட ஜீவிதா தன் அப்பாவிடம் திரும்பி கண்சிமிட்டி பாட்டி மருந்து சாப்பிடுறேன்னு சொல்லிட்டாங்கப்பா…அம்மா வந்ததும் சொல்லுவேனே..அம்மா ஹாப்பி ஆவாங்க தானே..” என அவன் “அப்டியே நீ உன் அம்மா மாதிரிடா செல்லம்..” என கூறி  நெற்றியில் முத்தமிட்டு தன் மகளை மார்போடு அணைத்துக்கொண்டான். தன் கவலை மீறி அடுத்தவர்களின் புன்னகையில், நிம்மதியில் மனம் மகிழ்பவள் என எண்ணினான்.அதையே எண்ணிய பிறரும் ஜீவிதா அறிந்தோ அறியாமலோ  வினவிய கேள்வி என்னை பிடிக்காதா? நான் வேண்டாமா? என்பது கேட்டுக்கொண்டிருந்த அனைவர்க்கும் கண்கள் கலங்கின. தன் தந்தை, பாட்டி என அனைவரிடமும் அன்பும் பரிவும் கொண்ட இந்த குழந்தையவா வேண்டாம்னு அழிக்க பாத்தோம்னு நினைத்து நினைத்து மனதினுள் புழுங்கினர்.

யார் என்ன கூறியும் ஜீவா மட்டும் சமாதானம் ஆனபாடில்லை..அம்மா அம்மாவென அரற்றிக்கொண்டே இருந்தான். அடி பலம் தான். எதுவாகினும் நாளை அவள் மயக்கம் தெளிந்த பின்னரே கூற முடியும் என கூறிவிட  இரவு விஜய் மட்டும் மருத்துவமனையில் இருந்துகொண்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-8ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-8

8 – மீண்டும் வருவாயா? ஜீவன் அவனுக்கு உணவு, மாத்திரை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று அவனை எழுப்பி சாப்பிட சொல்ல  ஜீவா உறக்கத்தில் இருந்து தெளியாமல் “வேண்டா நிரு மா, எனக்கு தூக்கமா வருது.” என கூற ஜீவன் “டேய் செல்லம்,

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-7ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-7

7 – மீண்டும் வருவாயா?   நாட்கள் நகர மழை காரணமாக பள்ளி விடுமுறை என அறிவிக்க ஜீவன்க்கு தவிர்க்க முடியாமல் வெளியூர் செல்லவேண்டிய வேலை இருப்பதால் ராமுவிடம் சொல்லிவிட்டு ஜீவாவை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான். மதியம் 3 மணி வரை ஜீவா,

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-33ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-33

33 – மீண்டும் வருவாயா? விஜய் “ம்ம்.. எப்போ உன்கிட்ட பேசுனா? என்ன சொன்னா?” “வசந்த் அண்ணா வீட்ல இருந்து வந்த அன்னைக்கு ஈவினிங் நீங்க வெளில போய்ட்டாங்கல… அப்போ பேசுனா. ஜீவா நான் ஜீவி மூணு பேரும் கொஞ்ச நேரம்