Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-25

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-25

25 – மீண்டும் வருவாயா?

 

“என்ன பிரச்சனை வரப்போகுது?” என வசந்த் பதற இதில் எல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லாத விஜய் “டேய்.. அவரு ஏதோ சொல்லிட்டு இருக்காருன்னு நீயுமா.. ஐயா பாத்து போங்க.. நீ வாடா.” என நண்பனுடன் நகர

“விடு..அவன் போகட்டும். இவங்க அம்மா மாதிரியே இவனும் அரைகொறையா விஷயத்தை கேட்டு பிரச்சனைல அவஸ்தைபடபோறான். நீ ஏன் அவனை தடுக்கற?” என அந்த பெரியவர் கூற

விஜய் “என்ன எங்க அம்மாவா? அவங்கள உங்களுக்கு தெரியுமா? எப்படி எப்போ பாத்திங்க? அவங்க எதுல அவசரப்பட்டாங்க..?”

“ம்ம்.. உன் மனைவி விஷயத்துல உங்க அம்மா பிரச்சனை பண்ணல? அதுனால நீங்க எவ்ளோ காலம் பிரிஞ்சிருந்திருப்பிங்க.. அத நீ இன்னும் மறக்கலையே? அதோட உன் பொண்ணு எப்படி இருக்கா?” என கேட்டதும் விஜய், வசந்த் இருவரும் தங்களுக்குள் பார்த்துக்கொள்ள அவரின் சாந்தமான புன்னகை கண்ட விஜயின் அடுத்த கேள்வி “அவங்ககிட்ட என் பொண்ணு என் மனைவினால பிரச்சனை வரும்னு சொன்னது நீங்க தானா?” என கேட்க அவர் புன்னகையுடன் மேலும் கீழும் தலையசைக்க

விஜய், “உங்களை நான் தேடிட்டு இருந்தேன். என் குடும்பத்தை பிரிக்கறதுல அப்டி என்ன உங்களுக்கு சந்தோசம்? பெரியவரா இருக்கீங்க.. இப்டியா ஒரு குடும்பத்துல குழப்பிவிட்டு பிரச்சனை பண்ணுவீங்க?” என கத்த

வசந்த் “டேய்.. கொஞ்சம் இருடா…” என அமைதிப்படுத்த

அந்த பெரியவர் “எல்லாமே நானா பண்றேன். விதியை மாத்தணும்னு யாரு நினைச்சாலும் முடியாது போல. அது நடந்தே தீரணும்னு இருக்கு. உங்க இரண்டுபேரோட ஜாதகத்தை பாத்து உன் மனைவியோட குணம், பொறுமை, நீ அவமேல வெச்சிருக்கற பாசம், அதோட அவளுக்கு வரபோற கஷ்டத்தையும் கணிச்சதும் மனசு வருத்தப்பட்டது. ஐயயோ இந்த பொண்ணுக்கா இப்டி ஒரு பிரச்சனை அதை முடிஞ்சளவுக்கு நாம குறைக்கணும்னு நினச்சு உங்க வீட்டு ஆளுங்ககிட்ட முன்னாடியே சொல்லிவெக்கலாம் தான் நான் நினச்சேன். ஆனா பாரு நான் “உங்க பையனுக்கு கண்டம் இருக்கு, பொண்ணு பொறந்தா உங்க பையனும் மருமகளும் பிரியவேண்டியது வரும். உங்க பையன் கட்டுன தாலி அவ கழுத்துல இருக்கறது..ன்னு” சொல்லி முடிக்கறதுக்குள்ள உங்க அம்மா அதிர்ச்சில மயங்கி விழுந்திட்டாங்க. உன் அத்தை, கூட வந்த பொண்ணு எல்லாரும் உடனே அவங்களை கூட்டிட்டு போய்ட்டாங்க. நானும் திரும்பி வருவாங்கன்னு பாத்தேன். அடுத்து யாருமே வரல. ஒரு விஷயத்தை அரைகுறையா கேட்டு அவங்களால தானே வீட்டுல பிரச்சனையே வந்திருக்கும்..” என கூற

 

விஜய் “பின்ன இப்டி சொன்னா யாருதான் அடுத்து பொறுமையா கதை கேப்பாங்க. பதட்டம் தானே படுவாங்க. அதோட எப்படி இவங்களால பிரச்னை வரும்னு நினைக்காம இருப்பாங்க..?” என அவன் கோபத்தில் கத்த

 

அவரோ “பொறுமை, பொறுமை… இன்னும் உனக்கு அவசரம் போகவேயில்ல.. நான் சொல்றத நீயாவது கேளு. நான் சொல்லவந்த விஷயம். ‘உங்க பையனுக்கு கண்டம் இருக்கு, பொண்ணு பொறந்தா உங்க பையனும் மருமகளும் பிரியவேண்டியது வரும். உங்க பையன் கட்டுன தாலி அவ கழுத்துல இருக்கறது கஷ்டம். அதோட அவளுக்கு பிரச்சனை வரும். அதுவும் அவளை சுத்தி இருக்கற நம்புனவங்களால தான் வரப்போகுது. செய்யாத தப்புக்கு அவ தண்டனை அனுபவிக்கப்போறா. அதனால அவளை பத்திரமா பாத்துக்கோங்க. அதோட உங்க பையனுக்கு வந்த கண்டமும் வந்த இடம் தெரியாம போய்டும். அதனால நீங்க ரொம்ப கவலைப்படவேண்டாம். உங்க மருமகளையும் பொறக்க போற பேரக்குழந்தையும் நீங்க உங்க கூடவே வெச்சுக்கோங்க. அவங்க உங்கள விட்டு போனா உங்க சந்தோஷமும் சேந்தே போயிடும் அதனால என்ன பிரச்னை வந்தாலும் அவங்களை பத்திரமா பாத்துகிட்டு கூடவே வெச்சுக்கோங்கனு தான் சொல்லவந்தேன்.’

ஆனா இத முழுசா கேட்க தான் ஆள் இல்லை. இப்போ சொல்லு தப்பு என் மேலையா? முழுசா கேட்காத உங்க வீட்டு ஆளுங்க மேலையா? இல்லை நடந்தே ஆகணும்னு ஏற்கனவே எழுதிருக்கற விதி மேலையா?” என அவர் வினவ விஜய் அதிர்ச்சியில் நிற்க வசந்த் “ஐயா, நீங்க சொன்னது எல்லாமே சரி.. ஆனா அதெல்லாம் முடிஞ்சது. இப்போ இவனுக்கு மறுபடியும் ஏதோ பிரச்சனைன்னு சொன்னிங்களே. அது என்ன? அது தடுக்கமுடியுமா?”

 

“மறுபடியும் நீ என்னைய மாதிரி தப்பு தான் பண்ற. இவன் விசயத்துல அப்போவே நான் விதியை தடுக்க முயற்சி பண்ணி இப்போ அது நடக்க நானே காரணம் ஆகிட்டேனே அது உனக்கு புரியலையா? அதோட இவனுக்கு தான் கடவுள், பூஜை, ஜாதகம் இதெல்லாம் நம்பமாட்டானே அப்புறம் என்ன? அவனே சமாளிக்கட்டும்.” என அவர் கூறிவிட்டு சென்று அருகே இருந்த தூணில் சாய்ந்தபடி நிற்க

விஜயை தேடிக்கொண்டு வந்த நேத்ரா “என்னங்க.. பொங்கல் எல்லாம் வெட்ச்சாச்சு.. சாமி கும்பிட கூப்படறாங்க. இரண்டுபேரும் வாங்க.” என திரும்பி நடக்க காலில் முள் ஏறிவிட “ஆ…” என

“நித்து..” என வேகமாக வந்தவன் அவளை அழைத்துவந்து தூணிற்கு அருகே அமரச்செய்தவன் முள்ளை எடுத்துவிட்டான். பெரிய முள் என்பதால் ஆழமாக பட்டு ரத்த கசிவு ஏற்பட

இதை கவனித்த பெரியவர் “பாத்து வரதில்லையாமா?” என்றார்.

அவளும் புன்னகையுடன் “தெரியாம அது மேல கால வெச்சுட்டேன் தாத்தா..” என்றாள்.

அவரோ “நீ பிரச்சனைனு தெரிஞ்சாலுமே, பிடிச்சவங்களுக்காக தேடி போறவ தானேமா.” என அவள் புரியாமல் “என்ன சொன்னிங்க தாத்தா..” என ஆனால் அவர் கூறியதை கவனித்த விஜய்க்கு தெளிவாக காதில் விழுந்தது.

அவன் யோசனையுடன் இருக்க பெரியவரோ “உன்னை நீ தானே கவனமா பாத்துக்கணும்?”

“என்னை பத்திரமா பாத்துக்க தான் என் வீட்டுக்காரர் இருக்காரே..” என விஜயை பார்த்து கண்ணடித்து கூற அவனும் மெலிதாக புன்னகைக்க பெரியவரோ “அவ்ளோ நம்பிக்கை.. நல்லது. சந்தோசமா நல்லா இருங்க..இந்த சந்தோசம் உனக்கு எப்போவும் இருக்கணும்.” என வாழ்த்திவிட்டு அவர் நகர முற்பட நேத்ரா “தாத்தா கொஞ்சம் நில்லுங்க” என்றவள் வந்து கையில் வைத்திருந்த பழத்தை அவரிடம் கொடுத்தவள் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினாள்.

அவரோ “எதுக்குமா இது எல்லாம்?”

“மனசார இன்னொருத்தர வாழ்த்தறது ரொம்ப நல்ல விஷயம். அதுவும் உங்கள மாதிரி பெரியவங்ககிட்ட இருந்து ஆசிர்வாதம் வாங்கணும்னு தோணுச்சு அதான்.” என

அவரும் புன்னகையுடன் “உன் மனசுபோல உன் குடும்பம், குழந்தைங்கன்னு ரொம்ப காலத்துக்கு சந்தோசமா இருப்ப. எந்த பிரச்சனை வந்தாலும் நீ தைரியமா முழு நம்பிக்கையோட இருக்கணும்.” என கூறிவிட்டு சென்றார். அவளும் புன்னகையுடன் நகர்ந்தாள்.

 

அவளும் அதை பெரிதுபடுத்தி யோசிக்காமல் சாதரணமான ஆசீர்வாதம் போலவே எடுத்துக்கொண்டு புன்னகையுடன் விஜயுடன் கோவிலுக்குள் சென்றாள். அவன் மனம் ஏதோ யோசனையிலேயே இருந்தது. இருப்பினும் அமைதியாக பூஜையில் கலந்துகொண்டான். ஊர் திருவிழா சமயம் என்பதால் இங்கே இந்த வாரம் முழுவதும் வெடி, மேளதாளம் என கோவிலில் எப்போதும் ஆட்கள் வரபோகவே இருப்பார்கள் என கூறிக்கொண்டிருந்தனர். தரிசனம் முடிந்து பெண்கள் கூட்டமாக சென்று பூஜை சாமான்கள் எடுத்துவைக்க பொங்கல் எடுத்து கொடுக்க, குடும்ப பெரியவர்கள், ஆண்கள், ஊர் பெரியவர்கள் என அனைவரும் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சிலர், மரத்தடியில் சிலர் என பேசிக்கொண்டிருக்க குழந்தைகள் பார்க்கும் தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

 

விளையாடி களைப்புடன் குழந்தைகள் சற்று அமர பிரசாதம் தருவதாக குழந்தைகளை அழைக்க ஜீவா “ஜீவி வா நாமளும் போலாம். எல்லாரும் போய்ட்டாங்க. உனக்கு மாவு ரொம்ப புடிக்கும்ல.. அங்க பொங்கல், மாவு தான் தரங்களாம்..வா போயி சாப்பிட்டு வந்து அப்புறம் விளையாடலாம்.” என்றழைத்தான்.

 

ஜீவி “இல்ல ஜீவா. எனக்கு கோவில்ல நின்னுட்டே இருந்தது, இப்போ ஓடியே விளையாண்டது காலெல்லாம் ரொம்ப வலிக்கிது. பரவால்ல.. நீங்க எல்லாரும் சாப்பிட்டு வாங்க. எனக்கு வேண்டாம்..” என கூற

 

ஜீவாவிற்கு தங்கையின் முகவாட்டம் கண்டு பாவமாக போய்விட்டது. “சரி..நீ இங்கேயே உக்காரு.. நான் போயி உனக்கும் சேத்தி வாங்கிட்டு வரேன். விக்கி மாமா, ரமேஷ் அண்ணாவையும் கூட்டிட்டு வரேன்.. நாம இங்கேயே சாப்பிடலாம்.” என கூற அவள் வேகமாக தலையசைக்க அவனும் சிரித்துவிட்டு ஓடிச்சென்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-21ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-21

21 – மீண்டும் வருவாயா?   வசந்த் “ஆனா ஏன்டா. அவங்க திரும்ப நேத்ரா வந்தாலும் ஏத்துக்கற மனநிலைல தானே இருந்தாங்க. அதுனால என்ன பிரச்சனை வரப்போகுது. ஏன் மறைக்க சொல்ற? அதோட இப்போ இந்த கல்யாணத்துக்கு என்ன அவசியம்?” ஜீவன்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-31ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-31

31 – மீண்டும் வருவாயா?   விஜய் “ஆனா அதுக்காக நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைப்பியா? இதுக்கு நீ என்ன காரணம் சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்..” என அவன் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு வீம்புடன் அமர அவள் அழைப்பதை

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-35 (நிறைவுப் பகுதி)ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-35 (நிறைவுப் பகுதி)

35 – மீண்டும் வருவாயா?   பின்னர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாட நேத்ராவிற்கு ஒவ்வொருவரும் பரிசு தர ஜீவி “அம்மா..இந்தாங்க…” என ஒரு போட்டோ பிரேம் நீட்ட அதில் விஜய் நித்து ஜீவி ஜீவா நால்வரும் ஒன்றாக இருக்கும் பள்ளி