Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-24

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-24

24 – மீண்டும் வருவாயா?

வீட்டிற்கு நேத்ரா வந்ததும் விஜயை சென்று பார்க்க அவன் அறையில் படுத்திருந்தான். இவளும் அருகில் அமர்ந்தவள் அவன் மறுபுறம் திரும்பி படுத்திருந்ததால் அவன் தூங்குகிறான் என எண்ணியவள் சில வினாடி அமைதியாக இருந்தவள் எழுந்து செல்ல முற்பட விஜய் நித்து என அழைத்தான்.

அவள் பார்க்க மெதுவாக எழுந்தவன் “கை ரொம்ப வலிக்கிதா?” என்றான்.

அவளோ “இல்லை இப்போ வலி அவ்ளோவாயில்லை.” என்றதும் அவன் அவளது மார்பில் சாய்ந்து கட்டிக்கொள்ள இவளும் புன்னகையுடன் அணைத்துக்கொண்டு தலையை வருடிவிட

விஜய் “நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?”

“என்னாச்சு உங்களுக்கு? அப்படியெல்லாம் இல்லை.”

“நீ என்னை அப்டி நினைச்சத என்னால ஏத்துக்கமுடில நித்து. அதான் கோபம். மத்தபடி என்னாலையும் உன்னை விட்டுட்டு இருக்கிறதோ பேசாம இருக்கிறதோ எல்லாம் முடியாத காரியம். இதுவரைக்கும் பட்டதே போதும். ஏதோ கோபத்துல பேசாம இருக்கணும் என்னை நீ புரிஞ்சுக்கலன்னு பீல் பண்ணிட்டு தான் அப்டி விலகி விலகி போனேன். ஆனா உனக்கு அடி பட்டிடுச்சுனு சொன்னதையே என்னால தாங்கமுடில. அந்த ஒரு நிமிஷம் நீ இவ்ளோ நாள் என்கூட இல்லாதத நினச்சு பாத்தேன். உனக்கு திரும்ப பிரச்சனைன்னு நினைச்சதுமே எனக்கு வேற எதுவுமே தோணல. அப்போதான் புரிஞ்சது உன்மேல எவ்ளோ லவ்னு.” என அவளை இறுக்கி கொள்ள

 

நேத்ரா “ஹா ஹா ஹா.. அப்போ சாரோட கோபம் எல்லாம் அவ்ளோதானா? ரொம்ப கெத்து காட்டுவீங்கன்னு நினைச்சேனே?” என அவள் வம்பிழுக்க

விஜய் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு “ரொம்ப பண்ணாதடி. என் பிரச்சனை எனக்கு. எவ்ளோ பதறிட்டேன் தெரியுமா? ஆனா உனக்கு கிண்டலா இருக்கு.. சரி எனக்கு ப்ரோமிஸ் பண்ணு. இதுவரைக்கும் நடந்ததை நான் கண்டுக்கல. ஆனா இனிமேல் என்ன ஆனாலும் நீ என்னைவிட்டு போகக்கூடாது. எப்போவுமே? நீ என் கூட இருந்தாலே போதும். எந்த பிரச்சனையும் நான் சமாளிச்சிடுவேன். சோ டோன்ட் கோ(so don’t go.)..ப்ரோமிஸ் பண்ணு..” என அவன் சீரியசாக வினவ

இவளோ கிண்டலுடன் “அச்சச்சோ … அப்டி ப்ரோமிஸ் பண்ணிட்டா அப்புறம் எனக்கு இந்த சிறைல இருந்து லைப்லாங் விடுதலையே கிடைக்காதா? சோ சேட் (so sad) யோசிச்சு தான் ப்ரோமிஸ் பண்ணனும் என யோசிப்பது போல பாவனை செய்ய அவளை மென்மையாக அணைத்தபடி அவளது மார்பில் சாய்ந்திருந்து கைகளுடன் விளையாடி கொண்டிருந்தவன் இதை கேட்டதும் நிமிர்ந்து பார்க்க அவள் கண்ணடித்து சிரிக்க  கடுப்பாகி அவளை கை வளைவில் அள்ளி மறுபுறம் கீழே தள்ளியவன் முரட்டுத்தனமாக அவளது இதழ்களை சிறை செய்ய சில கணங்களில் அவள் மூச்சுவிட சிரமப்பட சற்று விலகியவன் புன்னகையுடன் “இப்போதைக்கு இதுல இருந்து மட்டும் தான் உனக்கு விடுதலை. லைப்லாங் விடுதலை எல்லாம் குடுக்கமுடியாது.” என சிரிக்க அவளும் “உன்னை அதுக்குன்னு இப்படியாடா என அடிக்க, அவனும் சிரிப்புடன் அதை தடுக்க எண்ணி கையை பற்ற அவளோ “ஐயோ அம்மா” என கத்தினாள்.

“ஹே என்னாச்சு டி.?”

“கை அடிபட்டது வலிக்கிது… அதுலையா அமுத்துவீங்க? ரொம்ப வலி இல்லனு தான் சொன்னேன். வலியே இல்லேனு சொல்லல..” என அவள் செல்லமாக கோபிக்க

“சாரி சாரி டா. கவனிக்கல.. இரு ஆயின்மென்ட் எடுத்துட்டு வரேன்.” என எடுத்துவந்து அவளுக்கு மருந்திட்டான்.

அவளும் புன்னகையுடன் அவனை பார்த்துக்கொண்டிருக்க விஜய் விடாமல் மீண்டும் “நித்து சொல்லு, என்ன பிரச்சனை வந்தாலும் என்னை விட்டு போகமாட்டேல்ள? என அதுலையே நிற்க

கடுப்பான நேத்ரா “ஸ்ஷ்ஷ்… இன்னும் நீங்க அதை விடலையா? எனக்கு இனிமேல் என்ன பிரச்சனை வந்தாலும் அது உங்க கண்ணு முன்னாடி தான் நடக்கும்.”

“ஏய் என்ன டி இப்டி சொல்ற?”

“அட்ச்சோ என்ன முழுசா முடிக்க விடுங்க. நான் சொல்லவரது உங்களுக்கு தெரியாம எனக்கு எந்த பிரச்சனையும் வராது. வந்தாலும் நான் உங்களை விட்டு போகமாட்டேன். நான் வேணும்னே பண்ணாட்டியும் ஒரு தடவை பிரிஞ்சு போயி உங்களை கஷ்டப்படுத்தினதே எனக்கு போதும் போதும்னு இருக்கு. நான் ஜீவாவை பத்தி பீல் பண்ணதை விட உங்கள நினச்சு பீல் பண்ணது தான் ரொம்ப அதிகம். ஐயோ …இன்னொரு தடவ என்னால முடியாது பா..சோ யாரு சொன்னாலும் என்ன நடந்தாலும் உங்களை விட்டு போகமாட்டேன் இது ப்ரோமிஸ் ஓகேவா?” என அவள் பாவனைகளுடன் சொல்ல அதை எப்போதும் போல ரசித்தவன் புன்னகையுடன் பார்க்க

நேத்ரா கண்களாலையே என்னவென்று வினவ விஜய் “உனக்கு எக்ஸ்பிரஸிவ் பேஸ் (expressive face) டி செல்லம். அதான் எப்போவும் போல நீ பேசும் போது உன் ரியாக்ஷன்ஸ ரசிச்சிட்டு இருக்கேன். உன்னை இப்டி ஒவ்வொரு விசயத்தலையும் ரசிச்சு எவ்ளோ நாளாச்சு” என்றவன் பெருமூச்சுடன் அவளது கன்னம் பற்றி இழுத்து “லவ் யூ சோ மச் டி செல்லம்..” என அழுத்தமாக கன்னத்தில் முத்தமிட்டான்.

அவளும் சிரிப்புடன் அவனது கைகளுக்குள் அடங்கினாள். இருவரும் நெடுநேரம் பேசிக்கொண்டே நிம்மதியாக உறங்கினர்.

 

திடீரென முழிப்பு வர அருகே இருந்த விஜயை பார்த்த நேத்ராவிற்கு உண்மையிலையே ஜீவா, ஜீவி இவர்களை விடவும் விஜயை எண்ணித்தான் கவலையாக இருந்தது.  தான் அவனை விட்டு சென்ற பின் அனைத்தையும் அவனே விட்டு விலகி தனியாக எவ்வளவு கஷ்டம். ஜீவாவது தன் உணர்ச்சிகளை கோபமாக  கூறிவிட்டான். ஆனால் விஜய் தன்னிடம் கோபத்தை காட்டவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல், கூற வருவதை கேளாமல் தவறாக புரிந்துகொண்டு தன்னையே வருத்திக்கொள்ளும் வளர்ந்த குழந்தையாகவே தோன்றினான். ஏதோ மனம் கனக்க சிறிதுகாலம் பிரிவையே இவனால் முழுதாக ஏற்கமுடியவில்லையே ஒருவேளை தான் இல்லவேயில்லை என்றானால் விஜயின் நிலை என்னவாகும் என எண்ணியவள் அவன் தலையை வருடிக்கொடுத்து நெற்றியை நீவிவிட அவன் அவளது கைகைளை தலையணைக்கும் அவனது கன்னத்திற்கும் இடையே வைத்து உறங்கினான். நேத்ரா இவனின் செயலை கண்டு புன்னகையுடன் அவனது நெற்றியில் முத்தமிட்டு “பிராடு.. ஏன்டா இவளோ பாசமா இருக்க? என்றவள் லவ் யூ சோ மச்..” என இறுக அணைத்துக்கொண்டு உறங்கினாள்.

 

மறுநாள் நேத்ரா கிட்சனில் பாடிக்கொண்டே வேலையாக இருக்க, தூக்கம் கலைந்து அவளை தேடிக்கொண்டே வந்தவன் கதவோரம் சாய்ந்தபடி அவளை கவனிக்க, யாரோ உற்றுப்பார்ப்பது போல தோன்ற திரும்பி பார்த்தவள் மீண்டும் திரும்பி தன் வேலையில் கவனம் செலுத்த அவளருகில் வந்தவன் பின்னால் இருந்து அணைத்துக்கொண்டு “பேபி மா…”

“ம்ம்…”

“நித்துமா…”

“ம்ம்ம்ம்..”

“கூப்படறேன்ல டி” என கத்த நேத்ராவும் கரண்டியுடன் திரும்பி அதான் ம்ம் சொல்றேன்ல அப்புறம் என்ன கத்துறீங்க என அவள் கத்த முகத்தின் முன் சூடாக இருந்த கரண்டியை கண்டவன் சற்று தன் சுதியை குறைத்து “ஓ…கூல் பேபி.. எனக்கு கொஞ்ச தூக்கக்கலகத்துல கேட்கல போல…” என கூற

கண்ணுக்கு முன்னே கரண்டியை வைத்துக்கொண்டு “இப்போ தூக்கம் போய்டுச்சா..”

“இப்டி பத்ரகாளி மாதிரி கேட்டா தூக்கம் மட்டுமில்ல உயிரே போய்டும்…” என முணுமுணுக்க

“என்ன? என்ன சொன்னிங்க?”

“ஐயோ ஒண்ணுமில்ல டா.. கரண்டியை அங்க வெச்சு நீ உன் வேலைய பாரு. நான் இங்க சமத்தா இருந்து என் வேலைய பாக்குறேன்.” என அவளை பின்புறம் அணைத்துக்கொள்ள அவளும் புன்னகையுடன் “ஆஹான்…எவ்ளோ நேரம் சார் இப்டியே இருக்கறதா பிளான்?”

“என்னை யாரு கேப்பா.. எவ்ளோ நேரம் வேணாலும் இப்டியே இருப்பேன். ஆனா இப்போ கிளம்பணும்ல? செல்லம் நாம போகாம இங்கேயே இருந்துட்டா…” என அவன் பாவமாக வினவ

“அது சரி… என் தங்கச்சி கல்யாணத்தை கிராண்ட்டா நடத்துவேன், என் பிரண்ட் கல்யாணத்தை சூப்பரா நடத்துவேன்னு சொல்லி பில்டப் பண்ணிட்டு இன்னைக்கு கல்யாணத்தப்போ சார் கேக்கற கேள்வியைப்பாரு..நீங்க இங்க இருந்து என்னமோ பண்ணுங்க.. நான் ஆனா என் அண்ணா, பிரண்ட் கல்யாணத்துக்கு போகப்போறேன்…”

அவன் முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு “ம்ச்… ம்ம்ம்…” என சப்தமிட்டுக்கொண்டே இருக்க

நேத்ரா “விஜய்.. இப்பிடியே எவ்ளோ நேரம் சிணுங்கிகிட்டே இருக்கப்போறிங்க? மை ஸ்வீட்ஹார்ட் சீக்கிரம் போயி ரெடி ஆகுங்க.. நாம இவங்க கல்யாணம் முடிச்சு வந்த பிறகு நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன். உங்ககூட எவ்ளோ நேரம் டைம் ஸ்பென்ட் பண்ண சொன்னாலும் ஓகே…ம்ம்.. ப்ளீஸ் இப்போ ரெடி ஆகுறீங்களா?” என டீல் பேச

அவனும் “நிஜமா? அப்புறம் பெரியவங்கள பாக்கணும், குட்டிஸ கூப்பிடணும்னு டயலாக் பேசமாட்டேள்ல? என வினவ

சிரிப்புடன் இல்லை என்பது போல தலையசைக்க “என் செல்லம் லவ் யூ டி டார்லு..” என

“ம்ம்.. சரி இப்போ போங்க..” என விரட்ட

“ஏய்..நேத்துல இருந்து எவ்ளோ லவ் யூ சொல்றேன். உனக்கு கொஞ்சம் கூட என் மேல பாசமேயில்லையாடி.. ஒரு தடவையாவது திருப்பி சொல்றியா? நாம பஸ்ட் மீட் பண்ணதுல இருந்து இப்போவரைக்கும் சொன்ன லவ் யூவ விரல் விட்டு எண்ணிடலாம் தெரியுமா?” என குறைபட

அவளோ அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் “அப்டி சும்மா சும்மா எல்லாம் சொல்லமுடியாது. அதுவா நம்மள மீறி தோணனும். அப்போ சொன்னாதான்  அது மறக்காம ஸ்பெஷல இருக்கும்.” என அவள் சொல்ல

விஜய் “கல்நெஞ்சக்காரி..” என திட்டியவன் அவள் சிரிக்க பின்னால் இருந்து முன்னே முத்தமிட்ட அவளது கன்னத்தை கடித்துவிட்டு சென்றுவிட்டான்.

 

இருவரும் தயாராகி மகிழ்வுடன் வீட்டிற்கு செல்ல அங்கே அனைவரும் எடுத்துவைத்துக்கொண்டிருந்தனர். கல்யாணம் குலதெய்வ கோவிலில் என முடிவு செய்ததால் வசந்த், அவனது தாயார், வாணி, விஜய், நேத்ரா மற்றும் அவர்கள் இருவரது குடும்பத்தினர் மட்டுமே திருமணத்திற்கு போதும் என்றுவிட்டான் வசந்த். திரும்பி இங்கே வந்தபின் ஒரு நாள் வெளியாட்கள் அனைவரையும் அழைத்து வரவேற்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வசந்த் மற்றும் விஜயின் குலதெய்வம் கோவில் இரண்டும் அருகருகே இருப்பதால் காலை திருமணம் முடித்து அனைவரும் விஜயின் குலதெய்வம் கோவிலுக்கு வந்து பொங்கல் வைப்பதாகவும் முடிவு செய்தனர். இன்று கிளம்பி அனைவரும் கோவிலுக்கு செல்ல தயாராகினர். 7 8 மணி நேர பயணத்திற்கு பின் மாலை கோவில் அடைந்ததும் மறுநாள் திருமணத்திற்கு தேவையான பொருட்கள் சொல்லிவிட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டு வர என அனைத்திற்கும் விஜய் நேத்ராவே சென்றனர். அவர்களின் இணக்கம் கண்டு குடும்பத்தில் அனைவரும் அனைத்தும் சரியாகிவிட்டது என மனதார மகிழ்ந்தனர். இருப்பினும் வசந்தாவிற்கு ஏதோ ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. அதை நேத்ரா உணர்ந்தாலும் எதுவும் கேட்காமல் சாதாரணமாகவே இருந்தாள்.

 

அடுத்த நாள் காலையில் அனைவரின் ஆசிர்வாதத்துடன் யாரும் உறவுகள் இல்ல என எண்ணாத அளவிற்கு இருகுடும்பத்தினரும் சொந்த ஊரில் திருமணம் வைக்க வந்ததால் மகிழ்ந்த ஊர் பெரியவர்களும் என அனைவரின் வாழ்த்துகளுடன் வசந்த் வாணி திருமணம் இனிதே நடந்தேறியது.

 

பின் சிறிது நேரத்தில் விடைபெற்றுக்கொண்டு விஜயின் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல பெண்கள் அனைவரும் பொங்கல் வைக்க ஏற்பாடு செய்ய ஆண்கள் சிலர் உடன் உதவி செய்ய, சிலர் தெரிந்தவர்களுடன் பேச என இருக்க குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க வசந்த், விஜய் இருவரும் ஏதோ வேலை விஷயமாக பேசிக்கொண்டே கோவிலை சுற்றி சற்று தூரம் நடந்து வர ஒரு பெரியவர் தடுக்கி விழ போக விஜய் வேகமாக சென்று பிடித்தான். “ஐயா பாத்து.” என்றான்.

தனது கைப்பிடியின் துணைகொண்டு ஊன்றி நின்றவன் விஜயை பார்த்து “என்ன விழாம காப்பாத்துனது இருக்கட்டும் இன்னைக்கு உனக்கு வரபோற பிரச்சனைல இருந்து உன்னை நீ காப்பாத்திக்கிவியா?” என வினவ

வசந்த் “ஐயா என்ன சொல்றிங்க.? பிரச்சனையா?”

“ஆமா… எதுக்கும் அசையாத இவனே ஆடிப்போற அளவுக்கு ஒரு பிரச்சனை..”

1 thought on “ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-24”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-23ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-23

23 – மீண்டும் வருவாயா? அடுத்து வந்த சில நாட்களில் திருமணவேளை குழந்தைகளின் சேட்டை அதோடு வெளியே கூறாவிடினும் இருவரின் அருகாமையை இருவருமே மிகவும் ரசித்தனர். வாரம் ஒருமுறை என்றால் அனைவரும் ஜீவனின் பெற்றோர் வீட்டிற்கு செல்வது என அனைத்தும் சாதாரணமாகவே

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-8ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-8

8 – மீண்டும் வருவாயா? ஜீவன் அவனுக்கு உணவு, மாத்திரை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று அவனை எழுப்பி சாப்பிட சொல்ல  ஜீவா உறக்கத்தில் இருந்து தெளியாமல் “வேண்டா நிரு மா, எனக்கு தூக்கமா வருது.” என கூற ஜீவன் “டேய் செல்லம்,

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-29ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-29

29 – மீண்டும் வருவாயா? நேத்ரா அனைத்தும் எடுத்து பேக் பண்ணிவிட்டு விஜயை அழைக்க “என்ன நித்து கிளம்பலாமா?” அவளோ “கடைசிவரைக்கும் எங்க போறோம் எப்போ ரீட்டர்ன்னு தான் சொல்லல..டிரஸ் எடுத்து வெச்சதாவது போதுமா ஓகே வான்னு பாருங்க..” என அவன்