Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-14

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-14

14 – மீண்டும் வருவாயா?

 

விஜய் கூறியது போல என்றும் தன் புன்னகை மறையா முகத்தோட வலம் வந்த நேத்ரா எதிர்பார்த்த அந்த காலமும் வந்தது. மாதங்கள் கடக்க மீண்டும் அவன் இவளை தேடி வந்தான். பெரியர்வர்கள் அனைவரும் மனதார ஏற்றுக்கொள்ள விரைவில் கல்யாண நாள் குறித்தனர். விஜயின் வீட்டில் அனைவர்க்கும் நேத்ராவை மிகவும் பிடித்துவிட அவள் அந்த குடும்பத்தில் ஒருத்தியாகவே மாறிவிட்டாள். அனைத்தும் அவள் விருப்பம் தான். விஜயை கேட்கிறார்களோ என்னவோ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நேத்ராவை கேட்காமல் அவள் விருப்பமின்றி எதுவும் செய்யாத அளவிற்கு நெருக்கம். விஜய் கிண்டல் செய்தாலும் “உனக்கு ஏன்டா பொறாமை? கண்ணுவெக்காம நீ கிளம்பு” என அவனுக்கு தான் திட்டு விழும்.

 

மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் தன்னை நேசிக்கும் தன் மொத்த உறவும் சுற்றியிருக்க மனம் கவர்ந்தவனின் கைகளால் பூட்டப்பட்ட மங்கள நாண் கழுத்தில் தவழ நேத்ராவின் பூரிப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையற்று போயின. விஜய் – நேத்ரா இருவரின் தனிமை நேரத்தில் அவர்களுக்கு கேட்க வேண்டிய பேச வேண்டிய விஷயங்கள் பல இருந்தன.

“ஏன் நித்து, நான் பேசிட்டு போனதுக்கு அப்புறம் உங்க வீட்ல யாரும் எதுமே நம்ம கல்யாணத்தை பத்தி கேட்கலையா?”

களுக்கென்று சிரித்தவள் “அது ஒரு பெரிய காமெடி ட்ராஜெடி. நீங்க பேசுனதுமே அவங்களுக்கு பிடிச்சிருச்சு போல. அப்புறம் உங்களை பத்தி விசாரிச்சுட்டு வந்து அதுவும் அவங்களுக்கு எல்லாமே ஓகே. ஆனா யாருமே வெளில காட்டிக்கமாட்டேனு இருந்திருக்காங்க. நாம அன்னைக்கு சாய்ந்தரம் மண்டபத்துக்கு பக்கத்துல நின்னு பேசுனோம்ல. அண்ணா பாத்திருக்கான். சோ என்கிட்ட தனியா வந்து  “உனக்கும் விருப்பம்னு தெரியும்டா. ஓபன வீட்ல லவ் மேரேஜ் மாதிரி காட்ட வேண்டாம். எப்படியும் அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா எல்லாரும் விசாரிப்பாங்க. அப்புறம் பேசிக்கலாம். அத்தை மாமாகிட்ட சொன்னா போதும் புரிஞ்சுப்பாங்க. கவலைப்படாத. அண்ணா உனக்கு ஹெல்ப் பண்றேன்.”

“அண்ணா, உனக்கு ஓகே தானே?” என தயக்கத்துடன் கேட்க

புன்னகையுடன் “இப்டி ஒரு பையன யாரு நோ சொல்லுவாங்க. அதுவும் உன் செலெக்ஷன் வேற. நீங்க அன்னைக்கு பேசும்போதே எனக்கு டபுள் ஓகே.” என்றான். அவள் வெட்கம் கொள்ள “என்ன, அவரு மிலிட்டரில வேலை. அவரு அங்க நீ இங்க. அதைத்தான் கொஞ்சம் யோசிப்பாங்க. பாப்போம். ஏதாவது பேசி சமாளிப்போம்.”

அப்புறம் அம்மா “நேத்ரா, அம்மாடி எனக்கு அந்த பையன ரொம்ப பிடிச்சிருக்கு. வீட்ல வந்து உனக்கு எது சந்தோஷமோ அத தரணும்னு சொன்னானே அப்போவே முடிவு பண்ணிட்டேன். விசாரிச்ச வரைக்கும் எந்த குறையும் இல்லை. ஆனா பெரியப்பா அவங்க வீட்ல எப்படி ஏத்துப்பாங்கனு தான் யோசனையா இருக்கு. கொஞ்ச நாள் வேற வரன் கொஞ்சம் வந்திட்டு போகட்டும். அப்போ பேசி பாப்போம். கண்டிப்பா ஒத்துக்க வெச்சடலாம். அந்த பையன பத்தி மத்த எல்லாமே சரி தான். ஆனா கல்யாணம் முடிச்ச கையோட அவன் கிளம்பி போய்டுவானே. நீ மட்டும் அவங்க குடும்பத்துல இருக்கனும். அவங்க எப்படி ஏத்துக்குவாங்கலோன்னு தான் கவலையா இருக்கு.” என பெருமூச்சுடன் நகர்ந்துவிட்டார்.

பெரியம்மா, அத்தை வந்தும் இதே விஷயம் தான் அவர்கள் தோரணையில் கூறினர். “எங்களுக்கு என்னடா குட்டி உன் சந்தோசம் தான் முக்கியம். அவங்க எல்லாரும் அந்த பையன பத்தி, வேலை, படிப்பு, குடும்பம் சொத்துனு எதை பத்தி சொன்னாலும் பேசிடலாம். ஆனா அவன் உன் கூட இருக்கமுடியாதே. புருஷன் கூட இருக்கற பொண்ணுங்களுக்கே எவ்ளோவோ பிரச்னை. இதுல இப்டினா என்ன சொல்லி அவங்களை ஒத்துக்கவெக்கறதுனு தான்டா தெரில. சரி யோசிப்போம்.”

இறுதியாக அப்பா, பெரியப்பா தனித்தனியாக பேசினார். “அம்மாடி, அன்னைக்கு அவன் வந்து பேசிட்டு போனானே. அதுலையே அவன் எவ்ளோ தைரியம். எப்படி தெளிவான முடிவெடுப்பான்னு தெரிஞ்சிடுச்சு. கண்டிப்பா அது வாழ்க்கைல ரொம்ப முக்கியம். இப்போ இருக்கற நிறையா பசங்க பொண்ணுங்க முன்னாடி வெளில புலியா இருந்தாலும் வீட்ல பெரியவங்க முன்னாடி எலியா இருக்காங்க. அது எல்லா நேரத்துலையும் ஒத்து வராது. ஆனா அவன் அப்டி எல்லாம் கொழப்பிக்கற ஆளா தெரில. எடுத்த முடிவுல உறுதியா இருக்கான். அதோட என்ன தைரியமா சவால் விட்டுட்டு போனான் பாத்தியா? ‘உங்களுக்கும் என்னைவிட ஒரு நல்ல பையன்  உங்க பொண்ணுக்கு பிடிச்ச பையன் அவளை நல்லா பாத்துக்குவான்னு மனசார தோணுச்சுனா  அவனுக்கு கல்யாணம் பண்ணிவைங்கன்னு’.. என்றவர் சிரித்துவிட்டு ஆனால் அதுக்காகவே வீம்புக்குனு வெளில மாப்பிளை பாத்தேன்மா. அவன் சொன்னா எல்லாமே ஒத்து வர மாதிரி ஒருத்தனை என்னை கண்டுபுடிக்கமுடில.. ஏன்னா உனக்கு மனசார வேற யாரையும் இதுக்கு மேல ஏத்துக்க முடியாதுனு அன்னைக்கு உன்னை பாத்த போதே புரிஞ்சிடிச்சு… வெளிப்படையா இப்டியே போகட்டும். சில வரன் வரட்டும். எதுவும் மனசுக்கு பிடிச்சமாதிரி இலேன்னு தட்டிக்கழிச்சிட்டே கொஞ்ச நாள் கழிச்சு இதே பேச்ச ஆரம்பிப்போம். அப்போ பேசிக்கலாம். என்ன இருந்தாலும் அந்த பையன் தான் உனக்கு அதுக்கு நான் பொறுப்பு. சரியா?” என தனித்தனியாக தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். அனைத்தும் அவள் கூறிவிட்டு

“அப்போவே அங்க எல்லாரும் மை ஸ்வீட் டார்லிங் விஜய்க்கு தான் ஓகே சொன்னாங்க..ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம எல்லாருமே உங்களுக்கு தான் சப்போர்ட்…”என கூறி புன்னகைத்தாள்.

அவனும் உடன் புன்னகைத்துவிட்டு “ஆமா நித்து, … நீ தனியா செல்லமா வளந்த பொண்ணு. கல்யாணம் பண்ணிட்டு அங்க நிறையா பேர் இருப்பாங்க. புது இடம்.. உனக்கு பயம், தயக்கம் எதுமில்லையா?”

 

“நான் கல்யாணம் பண்ணிட்டு யாரும் தெரியாத காட்டுக்குள்ள இல்லை கூண்டுக்குள்ளவா  போகப்போறேன்  பயப்படுறதுக்கு. அதோட என்கூட இருக்கறவங்க பழகறவங்கள நீங்க ஒதுக்கி வெச்சுட்டு வான்னு சொல்லலையே. ஜஸ்ட் வேலைக்கு போகும்போதோ படிக்க போகும்போதோ கொஞ்ச நாள் விலகி இருப்போம்ல. அந்த மாதிரி தான் இதுவும் எனக்கு தோணுது. அப்போவும் கால், மெஸேஜ்னு நிறையா இருக்கும். இப்போ எவ்ளோ டெக்னாலஜி இருக்கு. எல்லாத்துக்கும் மேல இவங்களை பாக்கணும்னு சொன்னா நீங்க என்னை தடுக்கப்போறதில்லை. முடிஞ்சா நீங்களே கூட்டிட்டு வரப்போறிங்க. இதுல நான் எதுக்கு வருத்தப்படப்போறேன் சொல்லுங்க. உண்மைய சொன்னா இன்னும் நிறைய பேர் என் வாழ்க்கைல இணைய போறாங்க ஒரு புது உலகத்தை பாக்க போறோம்னு சந்தோசமா எக்ஸைட்டிங்கா இருக்கு. அதுவும் உங்ககூட சேந்துனு நினைக்கும்போது சொல்லவேவேண்டாம். அவ்ளோ ஹாப்பி.” என தோளில் சாய்ந்துகொண்டாள்.

 

அவனும் அணைத்துக்கொண்டு “இத அவங்க யாரும் அப்புறம் கேட்கலையா?”

“கேட்டாங்க. கடைசியா. எல்லாரும் சேந்து இத மட்டும் தான்னு கொழப்பிக்கிட்டே இருந்தாங்க. அப்போ கேட்டாங்க. இப்போ உங்ககிட்ட சொன்னதே தான் அங்கேயும் சொன்னேன். அப்புறம் வீட்டு ஆளுங்கள பாத்திட்டு அவங்களும் என்கிட்ட கிளோஸ இருக்கறதை பாத்ததும் அவங்களுக்கு இருந்த உறுத்தலும் போயிடிச்சு.” என்றாள்.

 

அனைத்தும் நலமாக முடிந்த மகிழ்ச்சியில் யாரும் குறைகூறா நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என சிரிப்பில் திளைத்த அந்த குடும்பத்தை பார்த்து விதி சிரித்தது. அதன் விளையாட்டு யாரும் எதிர்பாரா வகையில் அமையப்போவதை அறியாமல் இரு குடும்பமும் குதூகலித்தது.

 

விஜய் ஊருக்கு செல்லும் போது அனைவரிடமும் கூறிவிட்டு செல்லும் போது அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு நேத்ரா கோவிலுக்கு சென்றுவிட்டாள். அவளிடம் சொல்லலாம் என பார்த்தவன் அவளின் உணர்வுகளை புரிந்துகொண்டு மற்றவர்களிடம் கூறிவிட்டு சென்றுவிட்டான். அவன் சென்று பத்தாவது நிமிடத்தில் வந்ததும் அனைவரும் புரிந்துகொண்டனர். இருப்பினும் யாரும் அவளை எதுவும் சொல்லாமல் தனி தனியே வந்து பேசினர். குழந்தைகள் விளையாட அவளுடன் வம்பிழுக்க என அவளின் தனிமை மனநிலையை மாற்ற பார்த்தனர்.

 

வாசுகி, வசந்தா இருவரும் அவளுக்கு உணவு எடுத்து வந்து ஊட்டிவிட்டு “நேத்ரா, ஏன்டா மா தனியா இருக்க… அவன் சீக்கிரம் வந்துடுவான். நீ இப்டி இருந்தா வீட்ல யாருக்குமே மூஞ்சியே இல்லை தெரியுமா?..கொஞ்ச நாள்ல சரி ஆகிடும். அவனுக்கு எதும் ஆகாம சீக்கிரம் நல்லபடியா வந்திடுவான். ஒரு ஒரு தடவையும் அவன் ஊருக்கு போகும்போது எனக்கும் இப்டி தான் சங்கடமா இருக்கும். ஆனா பழகிடிச்சு. வேணும்னா இந்த தடவை வந்ததும் அவன்கிட்ட சொல்லி இனி இங்கேயே இருக்கற மாதிரி வேலை பாத்துக்க சொல்லலாமா?”

நேத்ரா “இல்லை அத்தை வேண்டாம். அப்படி கேட்டு அவரு செஞ்சாலும், அது மனசார ஏத்துக்க முடியாது அத்தை. அவருக்கு பிடிச்சதுனு ஒண்ணு இருக்கும்ல. எனக்கு அவரோட ஆசை கனவு இதுவும் தானே முக்கியம். அதை விட்டுகுடுத்திட்டு என்கூட இருங்கனு சொல்றது எனக்கு மனசுவரல அத்தை. அவரு என்கிட்ட இதெல்லாம் சொல்லிட்டு தானே கல்யாணம் பண்ணினாரு. திடிர்னு அதுவும் முதல் தடவை அதான் ஒரு மாதிரி இருக்கு. பழகிடும். ஒரு வருஷம்கிறது இப்டிங்கிறதுக்குள்ள போய்டும். அவரு திரும்பி வரேன்னு சொல்லிட்டு போயிருக்காரு. கண்டிப்பா வருவாரு. எனக்கு அதுல முழு நம்பிக்கை இருக்கு. பயமேயில்லை. அதோட எனக்கென்ன குறை. இந்த ராஜ்யத்துக்கே ராணி மாதிரி என்னை எல்லாரும் பாத்துக்கிறிங்க.” என அவள் சிரிக்க இதை கேட்டுக்கொண்டே வந்த சுந்தராஜன் “சரியா சொன்னமா.. இங்க நீதான் ராணி.. நீ உன் புருஷனை பத்தி சரியாதான் புரிஞ்சுவெச்சிருக்க. நீ இங்க வந்திடுன்னு கேட்டா அவன் செஞ்சிடுவான் தான். ஆனா அவன் மனசு இங்க இருக்காது. உங்க அத்தைக்கும், பெரியம்மாவுக்கும்  சொல்லு. சதா அவனை நினச்சு பீல் பண்ணிட்டே இருப்பாங்க. உன்னை வெச்சு பிளான் போட்டாங்க. ஆனா அக்கா, பாத்திங்களா என் மருமகளை..” என அவர் காலரை தூக்கிவிட்டுகொள்ள வாசுகியும் “போதும், போதும்.. ஜீவன் தேர்ந்தெடுத்த பொண்ணாச்சே..அப்டித்தான் இருப்பா.” என அவளை திருஷ்டிகழித்துவிட்டு “எங்களுக்கு என்னமா, புள்ளைங்க நீங்க சந்தோசமா இருந்தா சரிதான். மத்தபடி இங்க உனக்கு எந்த பிரச்சனைனாலும் சொல்லு. இங்க உனக்கு 2 அம்மா இருக்கோம். நானும் சரி, உன் மாமியாரும் சரி உன்னை எங்க பொண்ணாதான் பாக்குறோம்.”

நேத்ரா பொய்யாக முகம் வாட “அய்யயோ, மாமா.. அப்போ இங்க மாமியார் மருமக சண்டை, இவங்க நாத்தனார் சண்டை எதுவுமே இருக்காதே. போர் அடிக்குமே. இப்டி ஒரு இடத்துல உங்க பையன் என்னை விட்டுட்டு போய்ட்டாரே..சரி அப்போ நான் ஏதாவது கத்துக்க போறேன். ” என வருத்தம் கொள்ள சுந்தரம் வாய்விட்டு சிரித்துவிட்டு “பாத்துக்கோமா. இப்டி தான் என் பொழப்பு இத்தனை வருசமா போகுது. இதுல வெளில வேற போகாம இவங்க முகத்தையே வேற பாக்கணுமாம். என்ன கொடுமை பாரு. என்னையும் அப்டியே படிக்க கூட்டிட்டு போய்டுமா..” என கூற வாசுகியும், வசந்தாவும் “இரண்டுபேருக்கும் சேட்டையாகிடிச்சு இன்னைக்கு உங்களுக்கு சாப்பாடு கிடையாது.” என பொய்யாக மிரட்ட

நேத்ரா “ஐயையோ அத்தை உங்க சாப்பாடுக்காகவே எங்கேயும் போகாம வீட்லையே இருப்பேன். நான் உங்ககிட்ட தான் சமையல் கத்துக்க போறேன்னு சொல்லவந்தேன். அதுக்குள்ள மாமா அவசரப்பட்டுட்டாரு. மாமா வேணா பிடிக்காட்டி போகட்டும்பா.” என ஐஸ் வெக்க சுந்தரம் “இப்டி வாரிட்டியே மருமகளே..” என தாய்மார்கள் இருவரையும் பார்க்க அவர் கவிழ்ந்த தலையுடன் பவ்யமாக நின்றார்.

அதை கண்டு அனைவரும் சிரித்துவிட்டு பின் சுந்தரம் புன்னகையுடன் “ஆனா நேத்ராமா, நான் உண்மையைத்தான் சொல்றேன். உனக்கு ஏதாவது படிக்கணும்னு தோணுச்சுனா தாராளமா பண்ணு. நாங்க எல்லாரும் கூட இருக்கோம். படிக்கவெக்கிறோம். உன் திறமையை வீட்ல வெச்சு பூட்ட இங்க யாரும் விரும்பமாட்டாங்க.” என

நேத்ரா சற்று யோசித்தவள் “சரிங்க மாமா, அப்போ நான் யோசிச்சு சொல்றேன்” என்றாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-19ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-19

19 – மீண்டும் வருவாயா? காலை வீட்டிற்கு வந்தவன் குளித்து தயாராகி வெளியே வந்து அவன் பைக்கை எடுத்தவன் கோவிலுக்கு வரசொல்லிவிட்டு சென்றான். அங்கே அனைத்தும் தயாராக இருக்க வாசுகியிடம் வந்தவன் “அத்தை, நீங்க தான் குழந்தைக்கு பேர் வெக்கணும்” என

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-26ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-26

26 – மீண்டும் வருவாயா?   தனியாக அமர்ந்திருந்த ஜீவி சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். பாட்டி, தாத்தா மாமா பெரியப்பா என அனைவரும் கூட்டமாக ஊர் பெரியவர்களோடு தூரத்தில் பேசிக்கொண்டிருக்க, மறுபுறம் மேளதாளத்திற்கு ஏற்றவாறு இளவட்டம் ஆடிக்கொண்டிருக்க அதை பார்த்துவிட்டு திரும்ப

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-1ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-1

மீண்டும் வருவாயா? குழந்தைகளின் வருகை சொந்தங்களை இணைக்கும் என்றபோதிலும், குழந்தைகளை காரணம் காட்டி உறவுகளால் பிரிக்கப்பட்ட இரு மனங்களின் மௌனப்போராட்டம் தான் இங்கே நிகழ்வது. நம் வாழ்வில் மனிதர்கள் பின்பற்றும் நம்பிக்கைக்கும், மனித உணர்ச்சிகளுக்கும் இடையே நிகழும் இந்த பயணத்தில் விதி