Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13

13 – மீண்டும் வருவாயா?

 

 

சிவகாமி “அதோட உங்க குடும்பமோ பெரிய குடும்பம், நிறையா பேர் இருப்பாங்க. நீங்க கூட இருந்தாலாவது பரவால்லை. கல்யாணம் பண்ணி அவங்ககிட்ட விட்டுட்டு போறது, எப்படி ஒத்துவரும்னு தெரில..தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. இப்போ இருக்கற காலத்துல எதுமே எங்களால நம்ப முடில.. எங்களுக்கு எங்க பொண்ணு அவ வாழ்க்கை தான் முக்கியம். அதனால எங்களுக்கு உடனே முடிவு சொல்ல முடியாது..” என

 

ஒரு நிமிடம் அங்கே அமைதி நிலவ ஜீவன் புன்னகையுடன் “ரொம்ப சந்தோசம்.. கண்டிப்பா நீங்க சொன்ன எல்லாமே யோசிக்கணும். நீங்க நல்லா விசாரிச்சிட்டு யோசிச்சுட்டு சொல்லுங்க. நான் திரும்பவும் வரேன்.”

“ஆ.. உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசணும்.” பெரியோர்கள் இருவரும் தங்களுக்குள் பார்த்துக்கொள்ள

விஜய் “இல்லை. இல்லை.. இங்கேயே தான்.” என்றவன் அவர்கள் முன்னே சென்று கதவருகில் நின்றவளை கண்டவன் “என் அம்மா எப்போவுமே சொல்லுவாங்க. எல்லாமே ப்ரேக்டிகலா பாக்காதடா. எல்லாத்துக்கும் காரண காரியம் தேடாத.. சில நேரம் மனசு சொல்றத கேளு. அது உனக்கு தேவையான உன் மனசுக்கு பிடிச்ச பாதையை காட்டும்னு. ஆனா நான் என்னைக்குமே அத செஞ்சதில்லை. முதல் தடவையா உன் விஷயத்துல இப்டி இருக்கேன். முழுக்க முழுக்க உன் விசயத்துல மனசு சொல்றத மட்டும் தான் நான் கேட்கறேன். இப்போவும் உன்னை எனக்கு ஏன் பிடிச்சிருக்குனு கேட்டா எனக்கு பதில் இல்லை. ஆனா எப்போவுமே இருக்கற ஆசை. உன்னை முதல் தடவை பாக்கும்போது உன் முகத்துல, கண்ணுல தெரிஞ்ச அந்த சந்தோசம், சிரிப்பு உன் வாழ்க்கை முழுக்க இருக்கனும். அத நான் பாக்கணும்னு ஆசைபடறேன். அதுக்கு நான் காரணமா இருந்தா இன்னுமே சந்தோஷப்படுவேன். அவ்ளோதான். ஆனா எதுமே நம்ம கைல இல்லை. உனக்கு பிடிச்சதை நீ சூஸ் பண்ணு. அது நானா இருந்தாலும் சரி, வேற யாரானாலும் சரி. எதையும் போட்டு குழப்பிக்காத. உன் மனசு படி உனக்கு எல்லாமே கிடைக்கும்..” என்றவன் மெலிதான புன்னகையுடன் திரும்பி அவளின் பெற்றோர்களிடம் “உங்களுக்கும் என்னைவிட ஒரு நல்ல பையன் உங்க பொண்ணுக்கு பிடிச்ச பையன், அவளை நல்லா பாத்துக்குவான்னு மனசார தோணுச்சுனா அவனுக்கு கல்யாணம் பண்ணிவைங்க.” என்றான் கிட்டத்தட்ட சவாலாக கூட அந்த தோரணை அமைந்தது என்றே கூறலாம்.

 

அவன் கிளம்பியதும், நேத்ராவின் பெரியப்பா, பெரியம்மா அவர்களின்  பையன் (கணேஷ்) வந்தான். அவர்களிடம் நடந்தவற்றை பற்றி கூறிக்கொண்டிருந்தனர். இதனிடையில் நேத்ரா அருகே இருந்த தோப்பின் வழியே ஓடிவந்து விஜயின் காரை வழிமறைக்க ஏதோ சிந்தனையில் கார் ஓட்டிகொண்டு வந்தவன்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-4ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-4

4 – மீண்டும் வருவாயா?   ஜீவன் வீட்டிற்கு வந்ததும் ஜீவா பேச ஆரம்பித்தவன் தான். நிருமா நிருமா என அதே மந்திரம். முதன் முறையாக தன் மகன் வெளியாள் ஒருவரை இத்தனை தூரம் நம்புகிறான். உரிமையாக அதுவும் அம்மா என

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-8ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-8

8 – மீண்டும் வருவாயா? ஜீவன் அவனுக்கு உணவு, மாத்திரை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று அவனை எழுப்பி சாப்பிட சொல்ல  ஜீவா உறக்கத்தில் இருந்து தெளியாமல் “வேண்டா நிரு மா, எனக்கு தூக்கமா வருது.” என கூற ஜீவன் “டேய் செல்லம்,

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-14ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-14

14 – மீண்டும் வருவாயா?   விஜய் கூறியது போல என்றும் தன் புன்னகை மறையா முகத்தோட வலம் வந்த நேத்ரா எதிர்பார்த்த அந்த காலமும் வந்தது. மாதங்கள் கடக்க மீண்டும் அவன் இவளை தேடி வந்தான். பெரியர்வர்கள் அனைவரும் மனதார