Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-12

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-12

12 – மீண்டும் வருவாயா?

 

விஜய ஜீவிதன் – அப்பா, அம்மா, அத்தை, அக்கா மாமா, அண்ணா அண்ணி குழந்தைகள் என உறவுகள் சூழ அனைவரும் அன்பிலும் வளர்ந்தவன். மிகவும் தைரியமானவன். அவனுக்கு அவனது தாத்தாவின் பெயரை(விஜயேந்திர ராஜன்) இணைத்து வைத்ததால் யாரும் அவனை வீட்டில் விஜய் என அழைக்க மாட்டார்கள். ஜீவா, ஜீவன் என்று தான். அவனது தாத்தாவுக்கு ராணுவத்தில் சேர வேண்டுமென ஆசை. ஆனால் குடும்ப சூழல், பல பிரச்சனைகள் என அவரால் முடியாமல் போனது. ஆனால் நமது முன்னோர்கள், நமக்கு சுதந்திரம் அடைந்தது, அப்போதைய வீரர்கள் என அனைத்தும் கதைகளாக இவனிடம் கூற  கூற சின்ன வயது முதல் அவனுக்கும்  இராணுவத்தில் சேர வேண்டுமென கூறி அதேபோல தன் அனைத்து தகுதிகளையும் வளர்த்துகொண்டு சொன்னது போல செய்தும் காட்டினான். குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியே. நாட்டுக்காக தன் பேரன் போராட போகிறான் என பெருமையிலே அவனது தாத்தா மகிழ்ச்சியுடன் கண்களை மூடினார். ஜீவன் வருடம் ஒரு முறை தான் ஊருக்கு வருவான். வந்தால் இங்கே வீடு, நண்பர்கள் என அந்த ஒரு மாத காலம் மகிழ்ச்சியாக இருப்பான். ஆனால் பெரிதாக விழாக்களில் கலந்துகொள்வது, இந்த சடங்கு சம்ப்ரதாயம் பூஜை தெய்வபக்தி இவைகளில் அவனுக்கு விரும்பம் இல்லை. மற்றவர்களை அவன் தடுக்கவும் மாட்டான்.

 

வசந்தா “டேய், ஜீவன் அம்மாக்காக எது வேணாலும் செய்வேன்னு சொல்லுவ. இத செய்யமாட்டியா? ரொம்ப நெருங்கன சொந்தம்டா. எங்களாளையும் போக முடில. உன் அண்ணாக்கு ஆபீஸ்ல ஏதோ ட்ரைனிங் போட்டுட்டாங்கனு கிளம்பி போய்ட்டான். நீ இங்க இருந்தும் போகாம இருந்தா நல்லா இருக்காது டா. நம்ம வீட்ல இருந்து யாராவது போகணும்ல. கல்யாணத்துக்கு தானே போக சொல்றேன். ஏன்தான் இப்டி மாட்டேன்னு பிடிவாதம் பண்ற. வேணும்னா வசந்த்த கூட்டிட்டு போ.”

ஜீவன் “வேணா அவனையே போக சொல்லுங்க மா.. அவன் வெட்டியா தான் இருக்கான்.”

வசந்தா “சார், இங்க என்ன கலெக்டர் வேலை பாக்கிறிங்களா? உங்க வயசு பசங்க எல்லாம் வெளில போயி பாரு. கல்யாணம் கோவில் விசேஷம்னா அட்லீஸ்ட் கண்ணுக்கு குளிர்ச்சியா கலர் கலரா புள்ளைங்கள பாக்கவாது ஆளுக்கு முன்னாடி போயி நிக்கறானுங்க.. நீயும் எனக்கு வந்து சேந்திருக்கியே? அப்டி கூடவாடா உனக்கு எந்த ஐடியாவும் வரல.”

 

வசந்த் “மா.. நீங்க தெய்வம் மா. டேய், ஜீவா.. அம்மாவ கெஞ்ச வெக்கிறது பாவம்டா. இப்டி ஒரு அம்மா கிடைக்க குடுத்து வெச்சிருக்கணும்.”

ஜீவன் சிரித்துக்கொண்டே “டேய், அம்மா கல்யாணத்துக்காக தான் என்னை போக சொல்றங்கனா நான் சரி அம்மாக்காகன்னு போயிருப்பேன். அவங்க பிளான் இப்போ சொன்னாங்களே அதுதான். எனக்கு கல்யாண ஆசையா கொண்டுவரங்களாம் அதுக்காக இவளோ சீன் போட்டு என்னை பேக் பண்ண பாக்குறாங்க. அது இந்த ஜீவாகிட்ட நடக்காது. என்னை யாராலையும் ஏமாத்த முடியாது.” என வாசுகியின் மடியில் படுத்துக்கொண்டு கால் மேல் கால் போட்டுகொண்டு வீர வசனம் பேச வசந்தா வேகமாக எழுந்து வந்து அவனது காலை தட்டி விட்டு அவனை எழுப்பிவிட்டு “எந்திரிச்சு முதல போயி கிளம்பு. இங்க அம்மா, அத்தைன்னு உனக்கு சொகுசா மடில படுக்க வெச்சுகிட்டு செல்லம் கொஞ்சறதால சார்க்கு இன்னும் குழந்தை பையன்னு நினைப்பு. ஆமாடா எனக்கு உன் கல்யாணத்தை பாக்கணும். இங்க இருக்கற எல்லாருக்குமே தான். அதுவுமில்லை இன்னைக்கு, நாளைக்கு உனக்கு வீட்ல சாப்பாடு கிடையாது. நீ உன் மாமா பையன் கல்யாணத்துக்கு தான் போற. வேணும்னா அங்க சாப்பிடு. இல்லை பட்டினியா கெட. அண்ணி நீங்க வாங்க. அவன் என்ன கொஞ்சுனாலும், கெஞ்சுனாலும் நீங்க மசிய கூடாது…” என முன்னே செல்ல ஜீவன் அவனது அம்மாவை முறைத்துக்கொண்டே நிற்க அவனது அப்பா சிரிக்க வாசுகி, வசந்தா இருவரும்  முறைத்ததும் அவரும் அமைதியாக உள்ளே சென்றுவிட்டார்.

வாசுகி “பாருப்பா ஜீவா, எங்களுக்கு இனி என்ன இருக்கு சொல்லு. உன் கல்யாணம், நீ உன் குடும்பத்தோட சந்தோசமா வாழறத பாக்கணும்னு நாங்க ஆசைப்படுறது தப்பா.” அவன் ஏதோ சொல்ல வர வாசுகி “நீ எதுவும் சொல்லாத. நீயாவும் பொண்ணு பாக்க மாட்டா, எங்களையும் பாக்க வேணாம்னு சொல்லிட்ட. கேட்டா அதுவா வரும்னு சொல்லவேண்டியது … வீட்லையே உக்காந்திருந்தா அதுவா எப்படி வரும்? நீ பார்டர்க்கு போய்ட்டா உன் கண்ணு முன்னால பாம் துப்பாக்கி தான் வரும். இப்டியே இருந்தா அப்புறம் எப்போ உனக்கு கல்யாணம் பண்றது. அதான் உன் அம்மா இப்டி பிளான் பண்ணிட்டா. நீ நாலு விசேஷ இடத்துக்கு போ வா.அப்டி  பிடிச்ச மாதிரி பொண்ணு எதாவது கிடைச்சா நல்லதுதானே.” என பேசி அவனை வசந்த்துடன் அனுப்பி வைத்தனர்.

 

அவனும் “சாப்பாடும் வீட்ல இல்லேன்னுட்டாங்க வேற என்ன பண்றது வாடா வசந்த் சரி சும்மா போவோம்” என ஏனோ தானோவென்று கிளம்பி சென்றான். வசந்த் தலையில் அடித்துக்கொண்டு உடன் சென்றான்.

விசேஷ வீட்டில் இவனுக்கு நல்ல வரவேற்பு. மணமகன் ராஜீவ் “டேய் மாப்ள ஜீவா, எப்படி இருக்க? வாடா வாடா..நீ வருவேன்னு நினைக்கவேயில்லை. ரொம்ப சந்தோசம் டா.” என பேசி அழைத்து சென்று அவனது நண்பர்களுடன் அறிமுகப்படுத்தினான். அனைவரும் ஒரே வயது வேறு. சீக்கிரம் நண்பர்கள் ஆகிவிட்டனர். ஈவினிங் நிச்சயதார்த்தம் இருக்க, நண்பர்கள் அனைவரும் ரெடியாகி கேக் கட் பண்ணலாம் என கூறி ஏற்பாடு செய்தனர். மோதிரம் மாற்றிவிட்டு கூட்டம் சிறிது குறைந்ததும், இளவட்டம் மேடைக்கு செல்ல மேடையின் ஒரு புறத்தில் மணமகனின் தோழர்கள் ஒரு புறம் ஏற, மறுபுறம் மணமகளின் தோழிகள் ஏறினர். அனைவரும் பார்க்க , சைட் அடிக்க, தங்களுக்குள் கிண்டல் செய்ய தத்தம் வேலையில் மூழ்கிவிட இறுதியாக மேடை ஏறிய ஜீவன் நேர் எதிரே மேடை ஏறியவளை கண்டு ஒரு நிமிடம் வானுலகிற்கு சென்றான். அவளும் இவனை பார்த்தவள் இவன் கண்ணிமைக்காமல் பார்க்க நாணத்தில் சட்டென்று நகர்ந்து தோழியர்களுடன் இணைத்துக்கொண்டாள். உறைந்து நின்றவனை தட்டி அழைத்து சென்ற நண்பர்கள் கிண்டல் செய்ய இவனும் சிரிப்புடன் ஏற்றுக்கொண்டான். மணமக்களுக்கு கேக் கட் செய்து கொண்டாடி விட்டு இளையோர்களுக்கே உண்டான கிண்டல், கேலி என சிறிது நேரத்திற்கு அந்த இடமே கோலாகலமாக இருந்தது. அதனுடன் போட்டோ எடுக்கவேண்டுமென போட்டோக்ராபர் கூற அதில் சில நேரம் கழிந்தது.

 

பின் அனைவரும் சாப்பிட செல்ல உண்டு முடித்து கைகழுவிவிட்டு நிமிரும் போது மேலே இடித்துக்கொண்டான். இவளோ “ஐயோ ..பாத்து..” என பதற அவனும் சிரித்துக்கொண்டே நகர  ஐஸ்கிரீம் எடுக்கும் போது அவளின் அருகில் வந்து நின்றவன் “ம்க்கும்.. பதட்டம் பயங்கரமா இருக்கே..என்கிட்ட ஏதோ சொல்லணும்னு நினைக்கிறிங்க போல. சொல்லிடுங்க.”

அவளோ “ம்ம்.. வீட்டுக்கு போனதும் உங்க அம்மாகிட்ட சொல்லி சுத்திப்போட சொல்லுங்க” என்றாள்.

ஜீவன் புரியாமல் “எதுக்கு..”

“இங்க இருந்த நிறையா பொண்ணுங்க உங்கள சைட் அடுச்சாங்க.. கண்ணுப்பட்ரிக்கும்ல அதான். அப்போ அடி கூடபட்டுச்சே..” என அவன் சிரிப்புடன் “அப்போ சரி, நீயும் உங்க அம்மாகிட்ட சொல்லி பெரிய பூசணிக்காயா வாங்கி சுத்தி போட சொல்லு. பாதிப்பு கொஞ்சமாவது குறையுதா பாக்கலாம்.” என

“எனக்கா? எதுக்கு?”

ஜீவன் “ஏன்னா நான் உன்னை தானே சைட் அடிச்சுட்டு இருந்தேன்.. என் மொத்த கண்ணும் உன்மேல மட்டும் தான்… இதுல இருந்து நான் வெளில வருவேன்னு தோணல..நீயும் தப்பிப்பேனு தோணல..” என அவள் நாணத்தில் தலை குனிய இருந்தும் “இதெல்லாம் சும்மா, விசேஷ வீட்ல கோவில்ல வெளியிடத்துலன்னு நிறையா பேரை பாக்கும்போது ஒரு பீல், இன்பாக்சுவேஷன்ல வரது, விசேஷ முடிஞ்சு போகும்போது அதுவும் போய்டும்.” என அவள் பொறுமையாக ஆனால் தெளிவாக கூற

இவனும் “என்னை அப்டி நினைக்கிறியா? என்னை நம்ப மாட்டியானு டயலாக் பேசுறது எல்லாம் சரிவராது. ஏன்னா

என்னை நீ இப்போதான் முதல் தடவையா பாக்குற…எனக்கு தெளிவா தான் இருக்கு.” ஒரு நொடி ம்ம்..என யோசித்தவன்  “வேணா எதுக்கும் ஒரு டெஸ்ட் வெச்சிடுவோம்..உனக்காக..நானும் தெரிஞ்சுக்கறேன் எனக்கு நீ எவ்ளோ முக்கியம்னு.. நான் நாளைக்கு மோர்னிங் கல்யாணம் முடிஞ்சதும் 9க்கு இங்கிருந்து கிளம்பிடுவேன்.

அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ள நாம மீட் பண்ணா கண்டிப்பா இந்த ரிலேஷன்ஷிப் இதோட முடியாதுனு அப்போ நம்பலாம்ல. அண்ட் கண்டிப்பா இந்த மண்டபத்தை தாண்டி வெளில போனதும் நான் திரும்பி கூட பாக்கமாட்டேன். அந்த ஒரு மணி நேரத்துல உனக்கா என்னை பாக்கணும்னு தோணுச்சுனா, என்னை பத்தி யார்கிட்டேயாவது விசாரிச்சா அப்போ நீ ஏத்துக்குவேல்ல..?”

ஒரு நொடி “ஒரு மணி நேரத்துலையா?” என வாய்விட்டு கூறி கலவரமானவள் அவனை பார்க்க அவனும் மெலிதான புன்னகையுடன் “என்ன, அப்டி பாக்காம போய்ட்டா என்ன பண்றதுனு யோசிக்கிறியா? பயமா இருக்கா?” என்றான்.

அவனின் கண்களில் தெரிந்த நம்பிக்கை, அவனது கம்பீரம் அதில் கவரப்பட்டவள் அதே தெளிவுடன் கூறினாள் “கண்டிப்பா இல்லை. விதி பதில் சொல்லும்னு சொல்றிங்க. பாக்கலாம். சொல்லுதா இல்லையா?… ஆனா நானா தேடி வரது, ஏதாவது பிராடு வேலை பண்ணி பாக்க ட்ரை பண்றது, கூப்படறது எல்லாம் இருக்கக்கூடாது… உங்க பிரண்ட்ஸ் என் பிரண்ட்ஸ் யாருக்கும் இது தெரியக்கூடாது. சும்மா ஜாலிக்குனு அவங்க ஏதாவது பிளான் பண்ணி மீட் பண்ண வெச்சுட்டா? அப்டி எல்லாம் இருந்தா கேம்ல செல்லாது..” என அவள் மிரட்டும் தோணியில் சொல்ல

இவனும் அந்த அழகில் தன்னை மறந்து சிரித்தவன் “பண்ணமாட்டேன்..கூப்படறதுக்கு எனக்கு உன் பேர் கூட தெரியாதே?”

“நிர்பய நேத்ரா”

“ம்ம்.. நைஸ். டிஃபரென்ட்டா இருக்கு.. ஆனா பேர் இப்போ எதுக்கு சொன்ன? கூப்பிட்றதுக்கா? எதிர்பாக்கிறியா என்ன?”

“சான்ஸே இல்லை.. நீங்க வெளில விசாரிச்சு அவங்க என்கிட்ட வந்து உன்னை பத்தி ஒருத்தர் கேட்டருனு சொல்லி அது யாருனு நான் கேட்டு அப்டி கூட உங்கள நானா பாக்க வந்திட்டா.. சோ அதெல்லாம் அவொய்ட் பண்ணத்தான் நானே சொல்லிட்டேன். இது விதிக்கும் வாழ்க்கைக்கும் உண்டான விளையாட்டு. சோ அப்டியே நடக்கட்டும். நீங்க கேம் என்னனு சொல்லிட்டீங்க. அதுல நான் இருக்கற எல்லா கதவையும் அடைச்சிடறேன். இது எல்லாம் தாண்டி நான் உங்களை பாத்தா அப்போ முடிவு தெரிஞ்சுடும்ல… எந்த அளவுக்குன்னும் சேத்தி தெரியும்..” என அவள் அதே நம்பிக்கையில் சொல்ல அதை ரசித்தவன் “செம தைரியம் தான்.” என்றான்.

இவள் “புரில..” என்று வினவ

“நாளைக்கு கன்பார்ம் ஆனதும் எல்லாமே சொல்றேன் அண்ட் உன்னை பத்தியும் கேட்டுக்கறேன்.” என்று திரும்ப “உங்க பேர் சொல்லல? கூப்பிடவேண்டாம்னு நினச்சா சொல்லவேண்டாம்..” என அவள் மேலே பார்த்து சொல்லு திரும்பியவன் சிரிப்புடன் “விஜய ஜீவிதன்” என்று கூறிவிட்டு சென்றான்.

 

மறுநாள் உண்மையாகவே இருவரும் இதை ஒரு பரீட்சை போலவே எண்ணினர். ஜீவன், வசந்த் கிளம்ப உடன் உறவினர் குடும்பத்தினர் மாமா அத்தை முறையில் இருப்பவர்கள் வழியில் தான் இறங்க வேண்டுமென சொல்லி இவர்களுடன் ஏறிக்கொண்டனர். வழியில் அம்மன் கோவில் இருக்கும். ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம். முடிந்தால் தரிசித்து விட்டு செல்லலாம் என கூறிவிட்டு அவர்கள் வழியில் இறங்கிக்கொண்டனர். டிராபிக் வேறு இருந்ததால் வசந்த் “டேய், ஊருக்கு போயும் சும்மா தான் இருக்க போறோம். அங்க வெளில சுத்த சும்மா இதாவது பாக்காத ஊரு. அவரு சொன்ன கோவில் போயி பாத்திட்டு போலாம். டிராபிக்ல இப்டியே இருந்தா மண்டை காயுதுடா.” என்றான்

ஜீவன் “சரி ஓகேடா.” வண்டியை கோவிலுக்கு செலுத்தினான். அது ஊர் எல்லையில் உள்ளது. உள்ளே பிரகாரம் சுற்றிவிட்டு வர வசந்த் நான் பிரசாதம் வாங்கிட்டு வரேன் என்றான். ஜீவன் “சரி நான் வெளில வண்டி எடுத்திட்டு வெயிட் பண்றேன் நீ வா.” என வெளியே வந்தவன் வீட்டில் அம்மாவிடம் போன் பேசிக்கொண்டே வந்தான். வளைவில் ஒரு வண்டி வர சாலையை கவனிக்காமல் போனை கட் செய்துகொண்டே கடக்க முயல

“விஜய்..” என்ற குரலில் திரும்பி பார்த்தவன் அப்டியே நின்றுவிட அவனை ஒட்டியபடி ஒரு வண்டி விரைந்து அவனை கடந்து சென்றது. நேத்ராவிற்கு போன உயிர் மீண்டு வந்தது போல இருந்தது. விரைந்து அவனிடம் வந்தவள் “இப்டி தான் போன் பாத்திட்டே ரோடு கிராஸ் பண்ணுவிங்களா?.. வண்டி வந்த ஸ்பீட்க்கு  மோதிருந்தா இந்நேரம் என்னாகிருக்கும்?” என இவள் கத்திக்கொண்டிருக்க அவன் மெல்லிய சிரிப்புடன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான். “நான் உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.”

“என் பேரை யாருமே அப்டி கூப்பிட்டதில்லை..முத தடவையா எனக்கு புடிச்ச மாதிரி அதுவும் நீ கூப்பிட்டதும் சந்தோஷத்துல உன்னை பாத்திட்டு நின்னுட்டேன். அதோட டைம் சரியா 9.55..” என்றான்.

இவளுக்கு அப்போது தான் நேற்று இருவரும் பேசியது ஞாபகமே வந்தது.

விஜய ஜீவிதன் தொடர்ந்து “நீ பாத்தா இந்த உறவு பழக்கம் இதோட முடியாது. தொடரலாம்னு நேத்து சொன்னேன். மேடம் என்னை பாத்து சாரி கூப்பிட்டு பேசி, உரிமையோடு திட்டி எதிர்பாரா திருப்பங்கள். ரொம்ப ஸ்ட்ரோங் பேஸ்னு நினைக்கிறேன்.”

அவள் “அது நேத்தே ஊருக்கு போகும்போது இந்த கோவிலுக்கு போயிட்டு போலாம்னு பிளான் இருந்தது. நான் மதியம் கிளம்பறதா தான் இருந்தது. அண்ணா வீட்டுக்கு வந்திருக்காங்கனு கால் வந்தது. சோ உடனே கிளம்பிட்டேன். இங்கிருந்து பஸ் ஸ்டாண்ட பக்கம் தான். டிராபிக் அதிகமா இருக்கறதால வண்டில போனா நின்னு நின்னு போகணும்னு நான் தான் இறங்கி நடந்தே போய்க்கறேன்னு சொல்லி வண்டிய அனுப்பிச்சிட்டேன். சரி கோவிலுக்குள்ள போய்ட்டு போய்டலாம்னு இங்க வந்தேன்..” என அவள் தான் ஒன்று பிளான் பண்ணி வரவில்லை என விளக்கம் குடுக்க அவன் புன்னகைத்துவிட்டு “தெரியும். நீ அப்டி பண்ணமாட்டே.. சரி போயி சாமி கும்பிட்டு வா.” என்றான். அவளும் கோவிலுக்குள் சென்றுவிட்டு வர வசந்த் வந்ததும் பொதுபடையாக பேசிவிட்டு அவளை பஸ் ஏற்றிவைத்தான்.

“பாத்து பத்திரமா போ” என்றான். அவன் தன்னை பற்றி எதுவும் கேட்காமல் அனுப்பியது ஏனோ ஒரு மாதிரி இருக்க அவன் கூறினான் என்பதற்காக மட்டுமே எதுவும் கூறாமல்  வண்டி ஏறினாள். அவனும் வண்டியை கிளப்பினான்.

வரும் வழியில் வசந்த்திடம் நடந்தவற்றை கூறினான்.

வசந்த் மகிழ்ச்சியில் “சூப்பர், சூப்பர்டா மச்சான். ஆனாலும் நீ ரொம்ப மோசம் டா. ஒரு மணி நேரம்னு டைம் பிக்ஸ் பண்ணியே பாக்க முடியாட்டி என்ன ஆகிருக்கும்.. நீ இப்டினா உன் ஆளு அதுக்கும் மேல, கூப்பிடக்கூடாது, பிரண்ட்ஸ்கிட்ட சொல்லக்கூடாதுனு ரூல்ஸ். உங்க இரண்டுபேருக்கும் உண்மையாவே பிடிச்சுதான் பேசுனீங்களா? இவளோ ப்ளாக்ஸா வெப்பாங்க…ஷ்ஷ்ஷ்ஷ்..” என

ஜீவன் சிரித்துவிட்டு “அதுதான்டா எனக்கு அவகிட்டேயும் புடிச்சது. அவளோ தைரியம். முதல அவகிட்ட கொஞ்சம் பதட்டம் இருந்தாலும் அவ என்னை நம்புனது அவ கண்ணுல தெரிஞ்சது..”

வசந்த் “அதெல்லாம் சரி. இப்போ அவகிட்ட எதுவுமே கேக்கல. அவ என்ன பண்ரா? எங்க இருக்கா? ஒரு ப்ரோபோசல் எதுவுமே இல்லை. அவளும் எதுவும் கேக்காம போய்ட்டா. இரண்டுபேரும் எதுக்கு இப்போ அந்த டெஸ்ட் வெட்சிங்கனே எனக்கு புரில.” என புலம்ப

ஜீவன் “ரிலாக்ஸ் மச்சான்.  நானே சொல்றேன். அதுவரைக்கும் பொறுமையா இரு. வீட்லயும் சொல்லாத.” என்றான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-30ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-30

30 – மீண்டும் வருவாயா?   அவ்வழி வந்த வாணி வசந்த் இருவரும் இவர்களை பார்த்துவிட்டு அருகே வந்தனர். “என்ன டா இங்க உக்காந்திட்டே?” “தெரில வசந்த் ..ஏனோ இந்த இடம் பாக்க நல்லா இருக்கு. இங்கிருந்து பாரு பாக்கிற இடமெல்லாம்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-15ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-15

15 – மீண்டும் வருவாயா?   வீடு, குழந்தைகளை பார்த்துக்கொண்டு பேங்கிங் தேர்வுகளுக்கு படிக்கறேன்னு என கூற அனைவரும் ஒப்புக்கொண்டனர். குமார், வசந்த், சுரேஷ் என மூவரும் அண்ணன்களாக அவளை காத்தனர். சுதா, கீதா இருவரும் அவளை உடன் பிறவா சகோதரியாக

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-23ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-23

23 – மீண்டும் வருவாயா? அடுத்து வந்த சில நாட்களில் திருமணவேளை குழந்தைகளின் சேட்டை அதோடு வெளியே கூறாவிடினும் இருவரின் அருகாமையை இருவருமே மிகவும் ரசித்தனர். வாரம் ஒருமுறை என்றால் அனைவரும் ஜீவனின் பெற்றோர் வீட்டிற்கு செல்வது என அனைத்தும் சாதாரணமாகவே