Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-9

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-9

9 – மீண்டும் வருவாயா?

 

அடுத்த வார இறுதியில் நிருவிற்கு பேங்க் வேலை இருக்க அதுவும் ட்ரைனிங் என வேறு ஊருக்கு செல்வதால், வாணிக்கும் பள்ளியில் வேலை இருக்க ஜீவி “நான் ஜீவா வீட்ல இருந்துக்கறேன்.” என கூறினாள்.

இவர்களும் வேறு வழி இல்லை என்பதால் ராமுவிடம் சொல்லிவிட்டு காலையில் பார்க்கில் வந்து ராமு ஜீவிதாவை அழைத்துக்கொண்டு செல்ல

மாலை வாணி வந்து ஜீவியை அழைத்துச்செல்வதாக கூறினாள். நிரு மறுநாள் இரவு தான் வரமுடியும் என கூறிவிட்டு சென்றாள். வீட்டில் ஜீவாவை எதிர்பார்த்து சென்றவளுக்கு ஆச்சரியம் ஜீவனும் அங்கே அவளை வரவேற்றது.

ஜீவி பார்த்துவிட்டு “ஜீவிப்பா..” என ஓடி சென்று கட்டிக்கொள்ள அவனும் அவளை தூக்கிக்கொண்டான்.

ஜீவன் கீழே நின்று முறைக்க இருவரும் சிரித்துவிட்டு ஜீவன் அவனையும் இன்னொரு கையில் தூக்கிக்கொள்ள

ஜீவா “ஜீவி, உனக்கு தெரியுமா? இன்னைக்கு முழுக்க அப்பா நம்மகூட தான் இருக்கப்போறாங்க. நாம ஜாலியா வெளில சுத்தலாம்.” என குழந்தைகளோடு அவனும் குஷியாகிவிட வசந்த் வந்ததும் சாப்பிட்டுவிட்டு  அனைவரும் வெளியே கிளம்பினர்.

முதலில் மால், ரெஸ்ட்டாரெண்ட், பார்க் என சுற்றிவிட்டு இறுதியாக ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றான். அங்கே அனைவரும் வந்து மகிழ்ச்சியுடன் நிற்க ஜீவா “பாட்டி, தாத்தா.. ” என வேகமாக ஓடினான். அவர்கள் அவனிடம் கொஞ்சிவிட்டு முன்னே வந்து “இந்த பாப்பா யாரு?” என வினவ ஜீவி ஜீவனின் கால்களை கட்டி கொண்டு நின்றாள்.

அவன் அவளது தலையை வருடிவிடவும், “ஜீவிப்பா, இவங்க எல்லாரும் யாரு?” என வினவ

அனைவரும் அவள் ஜீவனை அப்பா என அழைத்ததில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வசந்த் அவளிடம் வந்து “ஜீவிமா, இவங்க எல்லாரும் ஜீவிப்பாவோட ரிலேட்டிவ்ஸ்..” என கூறிவிட்டு “என்ன ஜீவா, அவளுக்கு யாரு என்னனு இன்ட்ரோ தரலையா?” என்றதும்

ஜீவா இறங்கி வந்து அவளை அழைத்து சென்று “ஜீவி, இவங்க தாத்தா(சுந்தராஜன்) – பாட்டி(வசந்தா), வாசுகி பாட்டி (ராஜனின் அக்கா), இவங்க பெரியப்பா(சுரேஷ்) – பெரியம்மா(சுதா), இவங்க அத்தை(கீதா) – மாமா(குமார்), அப்புறம் இங்க இருக்கற என்னோட பிரண்ட்ஸ் ரமேஷ் அண்ணா – சுரேஷ் பெரியப்பா, சுதா பெரியம்மா பையன் அடுத்து விக்கி அண்ணா – கீதா அத்தை குமார் மாமா பையன். என்றதும் அவளை கண்டு அனைவரும் சினேகமாக புன்னகைத்தனர். ஒவ்வொருத்தரும் “குட்டி பேரு என்ன? பாப்பு எந்த கிளாஸ் படிக்கிறிங்க? எந்த ஸ்கூல்? நீங்க யாரு?” என கேள்வி கேட்க ஜீவாவே தொடர்ந்து அனைவரிடமும் “இது ஜீவிதா, என்னோட பிரண்ட், என் கிளாஸ் தான். நிரு அம்மாவோட பொண்ணு…” என்றதும்

வசந்தா “நிரு அம்மாவா?”

“ம்ம்.. ஆமா பாட்டி.. நிரு அம்மா ரொம்ப ஸ்வீட். எனக்கு அவங்கள ரொம்ப புடிக்கும். என்னை அவங்க தான் நல்லா பாத்துக்கிட்டாங்க. நாங்க எல்லாரும் ஒண்ணா தானே இருக்கோம்.” என்றதும் பெரியவர்கள் தவறாக புரிந்துகொண்ட ஜீவனை பார்க்க அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக நிற்க வசந்த் “ஐயோ, அம்மா.. அவங்களும் ஜீவன் இருக்கற அப்பார்ட்மெண்ட்ல தான் இருக்காங்க.. அதான் ஜீவா அப்டி சொல்றான்” என்றவன் நிருவை பற்றி சுருக்கமாக அனைவர்க்கும் சொல்ல எல்லாரும் பின் ஜீவா ஜீவிதாவையும் உள்ளே அழைத்துக்கொண்டு சென்றனர். ராஜன், சுரேஷ் “டேய் ஜீவன், குழந்தைங்களுக்காகவாது உள்ள வாடா..” என அழைக்க பின்னால் இருந்து அம்மா, அத்தை, அக்கா, அண்ணி என அனைவரும் ஒரு எதிர்பார்ப்போடு அவனை பார்க்க அவனோ எப்போதும் போல விரக்தியுடன் புன்னகைத்துவிட்டு “அப்பா.. எனக்கும் பெரியவங்க மேல தான் கோபம்.. நம்ம பிரச்னைய குழந்தைங்க மேல திணிக்கக்கூடாதுனு தான் ஜீவாவை இங்க கூட்டிட்டு வரேன். அவனோட உரிமைல நான் தலையிடமாட்டேன். அவனுக்கு எல்லா உறவும் இருக்கட்டும். அதேமாதிரி என் உரிமைல யாரு தலையிட அனுமதிக்கமாட்டேன். அது என் குழந்தையாவே இருந்தாலும் சரி..”

வாசுகி “ஜீவன், இது சுத்தமா சரி இல்லை. ஒருவேளை உன் பையனே எனக்காக வீட்டுக்கு வாங்கப்பான்னு கேட்டா அப்போ கூட வரமாட்டியா?”

 

ஜீவன் “என் பையன் அப்டி ஒருத்தரை கம்பெல் பண்ணி எதுவும் கேட்கமாட்டான் அத்தை. அப்டி கேட்டாலும் முதல ஏன்ப்பா வீட்டுக்குள்ள வரல. அதுக்கு என்ன காரணம்னு கேட்பான். அந்த காரணத்தை நீங்க சொன்னாலும் சரி, நான் சொன்னாலும் சரி. அதுக்கப்புறம் அவன் முடிவு தான். அந்த காரணத்தை தெரிஞ்சும் அவன் உங்களை விட்டு போகாம இருக்கானான்னு பாத்துக்கோங்க..அவன் பிடிவாதம், கோபத்தை பத்தி உங்களுக்கே தெரியும்.. அப்டியே என்னை மாதிரி.. சாரி என்னை விட அதிகம்ல..அப்படித்தானே சொல்லுவீங்க.? அவன்கிட்ட இவளோ நாள் வேலை, பிஸி அதனால வரல. அப்படிங்கிற மாதிரி தான் கவர் பண்ணிருக்கேன். நீங்க நேரா போயி அவன்கிட்ட அப்பாவை வீட்டுக்குள்ள கூப்பிடு ஜீவான்னு சொன்னா, முதல ஏன் அப்பா வரலன்னு உங்ககிட்ட தான் கேப்பான். என்ன பதில் சொல்லுவீங்க.. இல்லாட்டி அவன்கிட்ட கேட்டு ட்ரை பண்ணி பாருங்களேன்..” என்றதும் பெரியவர்கள் சற்று அடங்கித்தான் போனார்கள்.

 

(ஏனெனில் ஏற்கனவே அவ்வாறு ஒரு முறை அவனிடம் “டேய் ஜீவா கண்ணா, உன் அப்பாவை இங்க வர சொல்றியா? நீயும் இங்கேயே இருக்கேன்னு சொல்றியா? நீ சொன்னா உன் அப்பா கேட்பான்.” என நாசுக்காக கேட்க போயி ஜீவா “ஏன் பாட்டி, நீங்களே கூப்பிடலாமே? நீங்க கூப்பிட்டா அப்பா வரமாட்டாரா? ஏன் வரமாட்டாரு? அவருக்கு கோபமா? அப்போ யாரு என்ன தப்பு பண்ணது?” என கேள்விகளாக துளைக்க பின் கீதா, சுதா “அச்சச்சோ, என்ன ஜீவா.. நீ ஏன் இவளோ யோசிக்கற.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. உன் அப்பா எப்போவுமே வேலை வேலைன்னு பாத்துட்டு இருக்காரு. நீ அங்க இருந்தா உன்ன யாரு பாத்துப்பாங்க. இங்க வந்திட்டா உனக்கு அண்ணா, மாமா எல்லாரும் இருப்பாங்கள்ல. அதுனால தான் கூப்பிட்டாங்க.”

ஜீவா “ஓ… ஓகே ஓகே அத்தை. ஆனா எங்க வீட்லயும் எனக்கு போரே அடிக்காதே. ஸ்கூல் முடிஞ்சதும் அப்பா என்கூடவே இருப்பாரு. நானும் அப்பாவும் ஜாலியா விளையாடுவோம். அப்பா எனக்கு நிறையா கதை சொல்லுவாரு. அம்மா பத்தி சொல்லுவாரு.. அப்புறம் நாங்களே சமைப்போம் நல்லா இருக்கும். அண்ட் அப்பா எப்போவுமே சொல்லிருக்காங்க, ஒருத்தர் ஒர்க்ல இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு. அதேமாதிரி அவங்கள கம்பெல் பண்ண கூடாதுனு.” என தெள்ளத்தெளிவாக பேசினான்.

ஆனால் அதன் பின் யாருக்கும் அவனிடம் பேச்சுக்கு கூட அப்பாவை வர சொல் என கேட்கவில்லை.)

 

அதை நினைத்துப்பார்த்தவர்கள் அடுத்து எதுவும் பேசாமல் உள்ளே சென்றனர். தோட்டத்தில் மட்டும் ஜீவன் அவனது அப்பா, அண்ணா, மாமா வசந்த் அனைவரும் அமர்ந்து பொதுப்படையாக பேசிக்கொண்டிருந்தனர். குழந்தைகள் உள்ளே விளையாட பேச சிரிக்க ஜீவன் அவ்வப்போது எட்டி பார்த்துக்கொண்டான். சற்று நேரத்தில் எல்லாரும் வெளியே வந்து அமர ஜீவாவோ நிருவின் புராணம் பாடிக்கொண்டிருக்க ஜீவி அம்மாவிடம் பேசவேண்டுமென கூற ஜீவன் மொபைல் தந்தான்.

நிரு “ஜீவி குட்டி, என்ன பண்றீங்க ஜீவா எங்க? எல்லாரும் எங்க இருக்கீங்க?”

ஜீவிதா “அம்மா, நாங்க எல்லாரும் ஜீவிப்பாவோட டாடி வீட்ல இருக்கோம். இங்க தாத்தா பாட்டி, அத்தை பெரிம்மா பெரிப்பா அத்தை மாமா எல்லாரும் ரொம்ப நல்லா பழகுறாங்க. ஜாலியா விளையாடுறோமே.” என

நிரு “ஓ… அப்டியா.. சரி ஜாலியா விளையாடுங்க. ஆனா யாரையும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது குட்டிமா.. ஓகே வா? சரி ஜீவா சார் என்ன பண்றாரு?”

ஜீவி “ஜீவா இங்க தான் மா இருக்கேன். கோபமா.. அவன் விக்கி மாமா கூட சண்டை போட்டுட்டான்… எல்லாரும் திட்டுனாங்க. அதான் மூஞ்ச உர்ருனு வெச்சு உக்காந்திருக்கான். இருங்க போனை அவன்கிட்ட தரேன்.” என நீட்டினாள். ஸ்பீக்கரில் இருக்க அனைவரும் கேட்டனர்.

ஜீவா “அம்மா, இவங்க எல்லாரும் என்னை மாட்டிவிடுறாங்க. நான் ஒன்னும் தப்பு பண்ணல..நீங்க நம்பாதீங்க”

நிரு “சரி சரி… அவங்கள எல்லாம் விடு.. நீ சொல்லு அங்க என்ன பிரச்சனை?”

ஜீவா “அம்மா, நீங்களே சொல்லுங்க.. விக்கி தான் எனக்கு அவனோட விளையாட பேட் தரேன்னு சொன்னான். எது வேணும்னு கேட்டான்.  எந்த கலர் பேட் எடுக்கறோம்னு சண்டை வந்திடுச்சு. அப்டியே பேசிட்டே, உனக்கு ஒண்ணுமே தரமாட்டேன்னு எடுத்துட்டு போய்ட்டான்… எனக்கு கோபம் வந்திடுச்சு. ” என

நிரு “அதனால அடிச்சியா?”

“………………………………………………………”

“ஜீவா, நான் உன்கிட்ட தான் கேக்கறேன். அடிச்சியா?”

“ம்ம்ம்…”

“உனக்கு எதுக்கு இவளோ கோபம்.?”

“ஒன்னு செய்றேன்னு சொல்லி செய்யமா ஏமாத்தக்கூடாது அது தப்புனு அப்பா சொல்லிருக்காரு. அவனா தானே மா கேட்டான். அப்போ தரணும்ல.”

“ஓ.. அப்போ ஒருத்தர் ஹெல்ப் பண்ண, ஷேர் பண்ணிக்க உன்கிட்ட கேட்டா அவங்ககிட்ட இருக்கறத குடுத்தா சார் ஏத்துக்கமாட்டீங்க இல்ல?…சரி, அப்பா ஏமாத்தகூடாது சொன்னாரு ஓகே.. ஆனா அடுத்தவங்க திங்ஸ அடிச்சு வாங்கணும்னு சொல்லிருக்காரா?”

“இல்லை.”

“உனக்கு ஏற்கனவே சொல்லிருக்கு தானே. பேசிட்டு இருக்கும்  போது முதல அடிக்கற பழக்கத்தை நிறுத்துனு.. இல்லாட்டி நீ பண்ண தப்புக்கு அப்பாவை தான் எல்லாம் தப்பு சொல்லுவாங்க. உனக்கு நீ பண்ணது தப்புனு தோணுச்சுனா யாரை அடிச்சியோ அவங்ககிட்ட முதல சாரி சொல்லிட்டு அப்புறம் என்கிட்ட பேசு. இல்லை நீ பண்ணது சரின்னு சொன்னா ஓகே நீ யாரையோ அடி சண்டை போடு. நான் உன்னை எதுவும் கேட்கவும் மாட்டேன் உனக்கு அட்வைஸ் பண்ணவும் மாட்டேன். உனக்கு தான் எல்லாமே தெரியுமே. நீ பேசுனா பேசுறேன். இல்ல அமைதியாவே இருந்துக்கறேன். சரியா.. டாடா பை..” என கூறிவிட்டு அவள் போன் வைத்துவிட ஜீவா முகம் வாடிவிட அனைவர்க்கும் பாவமாக போய்விட்டது.

நேரே சென்றவன் “விக்கி மாமா, சாரி. இனிமேல் அப்டி சண்டை போடமாட்டேன்.” என தரையை பார்த்தே கூற அவனும் 7ஆவது படிக்கும் பையன் முதலில் கோபம் வீம்பு ஈகோ என இருக்க, அதோடு அனைவரும் பெரியவன் தானே நீ கொஞ்சம் விட்டுகுடுத்தா என்னவென அவனை வாட்டியெடுத்த கடுப்பில் இருந்தவன் ஜீவா போனில் பேசியதை கேட்டவன், இவனும் உடனே வந்து சாரி சொல்லவும் அமைதியாகிவிட்டான். அவனிடமும் பேசிவிட்டான்.

 

பின் நிருவிற்கு மீண்டும் கால் செய்து “சாரி சொல்லிட்டேன் நிரு மா. நீங்க பேசுவீங்களா?” என்றான்

நிரு புன்னகையுடன் “நீ சாரி சொல்லாட்டியும் நான் பேசமாட்டேனு சொல்லலையே?”

“அது..நீங்க தானே சொன்னிங்க.. பேசுனா பேசுவேன். ஆனா உனக்கு எதுவும் சொல்லமாட்டேன். அட்வைஸ் பண்ணமாட்டேனு .. எனக்கு அப்டி வேண்டாம். எனக்கு நிரு மா எப்போவும் போல தான் வேணும்.” என

“சரி சரி… அதான் நீ சாரி சொல்லிட்டியே.. விடு..  எல்லார்கூடவும் ஜாலியா இரு..கோபம் இருக்கறதுலையே ரொம்ப பவர்புல்லான ஆயுதம், அதேசமயம் ரொம்ப டேஞ்சரான ஆயுதமும் கூட.. அது சரியான காரணத்துக்கு பயன்படுத்தனும்..இப்டி சும்மா சும்மா கோபம் வந்தா நீ தேவையான விஷயத்துக்கு கோபபட்டா கூட யாரும் மதிக்கமாட்டாங்கடா செல்லம் அதுக்கு தான் சொல்றது..” என கூறவும்

அவனும் “ஓஓஓஓஓ………ஓகே மா.. இனிமேல் இப்டி பண்ணமாட்டேன்.. எப்பவும் ஜாலியா இருப்பேன்..” என கூறிவிட்டு போனை வைத்துவிட சுற்றி இருந்த அனைவரும் இவர்களின் ஒரு அன்யோநியத்தை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

 

வாசுகி “பாத்தியா, வசந்தா.. இந்த பையன் நாம இத்தனை பேரு சொல்றத கேட்டிருக்கானா.. அந்த பொண்ணு சொன்னதும் உடனே கேட்டுட்டானே..”

கீதா “ஆமா அத்தை, அந்த பொண்ணும் நம்ம ஜீவா மேல எவ்ளோ பாசமா இருக்காள்ல. வசந்த் சொன்னதை வெச்சு பாத்தா அந்த பொண்ணு அவ குழந்தை மட்டும் தான் போல.”

வசந்தா “ஆமாடி. ஆனா உன் தம்பி ஒத்துக்குவானா?”

சுதா “அத்தை, முதல அந்த பொண்ணை பத்தி விசாரிப்போம். அப்புறம் ஜீவன்கிட்ட நாம பேசலாம். அவரும் கூட அந்த பொண்ணு மேல ரொம்ப நம்பிக்கை வெச்சு தானே குழந்தை எல்லாம் விட்டுட்டு போயிருக்காரு. நம்மகிட்ட கூட ஒரு தடவ விட்டதில்லை. அப்போ அவருக்கும் விருப்பம் இருக்கும் தானே?” என அவர்கள் எதோ மனதில் கணக்கு போட வசந்தின் போனில் இருந்து வேறொரு கேஸ் விஷயமாக பேசிவிட்டு வந்து அமர்ந்த ஜீவன் இவர்கள் பேசுவதை வைத்து மேலோட்டமாக என்ன நடந்திருக்குமென புரிந்துகொண்டான். அவனுக்கு கோபம் வந்தாலும் ஏனோ நிருவை பற்றி தான் தெரிந்துகொள்ள வேண்டும் என தோணுவதால் அமைதியாக இருந்தான்.

 

வசந்தா ஜீவிதாவிடம் “ஜீவிம்மா, இங்க வாடா கண்ணு..நீ உங்க அம்மா மட்டும் தான் இங்க இருக்கீங்களா? உங்க அப்பா என்ன பண்ராங்க.. எங்க இருக்காங்க.?”

ஜீவி “எங்க அப்பா, மிலிட்டரில இருக்காங்க.”

கீதா “உங்க அப்பா எப்போ வருவாரு? உனக்கு என்ன எல்லாம் கிப்ட் வாங்கிட்டு வருவாரு?”

“அப்பா, இப்போவாரைக்கும் நான் இருக்கும்போது வந்ததில்லை.. அவருக்கு ரொம்ப வேலை இருக்கும்ல அதனால வரமுடிலையாம். ஆனா என் அப்பாக்கு என் மேல ரொம்ப பாசம், எனக்கு நிறையா கிப்ட்ஸ் அனுப்பிச்சு வெப்பாரு. லெட்டர் போடுவாரு. அவருக்கு நான்னா ரொம்ப இஷ்டம்.”

சுதா “உன் அப்பா பேர் என்ன மா?”

ஜீவி “விஜய்”

மற்றவர்களுக்கு இவளது பதில் ஏதோ ஒருவகையான ஏமாற்றம் குடுத்தாலும் யாரும் காட்டிக்கொள்ளவில்லை.

அவர்கள் எதிர்பார்த்தது “ஏதேனும் பிரச்சனை, கணவனை இழந்த பெண் இல்லை விவாகரத்து அதனால் தான் கணவரோடு இருக்கவில்லை. ஒத்துவந்தால் ஜீவனுக்கு திருமணம் செய்து வைக்கலாம்” என விசாரித்தனர். ஆனால் ஜீவி சொல்வது போல இருந்தால் நன்றாக இருக்கும் குடும்பத்தில் குழப்பம் வேண்டாம் என அடுத்து எதுவும் கேட்காமல் நிறுத்திவிட்டனர்.

 

ஆனால் ஜீவனுக்கோ வேறு வகையான எதிர்பார்ப்பு, ஏமாற்றம், குழப்பம் என அனைத்தும் சூழ எதுவும் நிலையின்றி சற்று நேரம் அங்கே இருந்துவிட்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-19ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-19

19 – மீண்டும் வருவாயா? காலை வீட்டிற்கு வந்தவன் குளித்து தயாராகி வெளியே வந்து அவன் பைக்கை எடுத்தவன் கோவிலுக்கு வரசொல்லிவிட்டு சென்றான். அங்கே அனைத்தும் தயாராக இருக்க வாசுகியிடம் வந்தவன் “அத்தை, நீங்க தான் குழந்தைக்கு பேர் வெக்கணும்” என

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-28ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-28

28 – மீண்டும் வருவாயா? வீட்டிற்கு நேத்ரா விஜய் இருவரும் குழந்தைகளுடன் வந்ததும் ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அனைவரும் அவளிடம் விசாரிக்க என்ன வேணுமோ சொல்லு நாங்க செஞ்சு தரோம் நீ நல்லா ரெஸ்ட் எடுடா மா..

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-14ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-14

14 – மீண்டும் வருவாயா?   விஜய் கூறியது போல என்றும் தன் புன்னகை மறையா முகத்தோட வலம் வந்த நேத்ரா எதிர்பார்த்த அந்த காலமும் வந்தது. மாதங்கள் கடக்க மீண்டும் அவன் இவளை தேடி வந்தான். பெரியர்வர்கள் அனைவரும் மனதார