Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-7

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-7

7 – மீண்டும் வருவாயா?

 

நாட்கள் நகர மழை காரணமாக பள்ளி விடுமுறை என அறிவிக்க ஜீவன்க்கு தவிர்க்க முடியாமல் வெளியூர் செல்லவேண்டிய வேலை இருப்பதால் ராமுவிடம் சொல்லிவிட்டு ஜீவாவை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான். மதியம் 3 மணி வரை ஜீவா, ஜீவி இருவரும் விளையாடிகொண்டிருந்தனர். பின் வாணி வந்து உடன் இருந்துவிட்டு, சற்று நேரத்தில் ஜீவன் வந்துவிடுவான் என்பதால் ராமுவிடம் ஜீவாவை விட்டுவிட்டு ஜீவியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள். அவர்கள் சென்றபின் மழையில் ஜீவா விளையாட ராமு அவனை ஒரு வழியாக சமாளித்து உள்ளே அழைத்து வருவதற்குள் அவன் நன்றாக நினைந்துவிட்டான். மாலை ஏழு மணி ஆகியும் ஜீவன் வராமல் இருக்க, ஜீவாவிற்கு காய்ச்சல் அடிக்க ராமு ஜீவனிற்கு கால் செய்தார். அவன் எடுக்காமல் போக என்ன செய்வது என புரியாமல் இவரோ விழித்துக்கொண்டிருக்க, நிரு ராமுவிற்கு கால் செய்தாள்.

“ஆ..அப்பா, ஜீவா என்ன பண்றான். சாப்பிட்டானா? அவங்க அப்பா வந்திட்டாங்க தானே?” என விசாரிக்க

ராமு “அம்மாடி, நல்லவேளைமா நீ போன் பண்ண.. ஜீவன் தம்பி இன்னும் வீட்டுக்கு வரல. அவங்களுக்கு ஏதோ வேலைபோல. போன் போட்டும் எடுக்கல. ஜீவாக்கு உடம்பு சரி இல்லை. சாயந்தரம் மழைல நினைஞ்சுட்டான். காய்ச்சலா இருக்கு. இப்போவும் மழை பெய்யுது. எப்படி ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறதுன்னு தான் தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்மா.” என அவர் கூறியதும்

நிரு “நான் உடனே அங்க வரேன்பா. எந்த பிலோர் டோர் நம்பர் சொல்லுங்க. நான் வரவரைக்கும் நீங்க ஜீவா கூட இருங்க.” என்றவள் வாணியிடம் கூறிவிட்டு ஜீவிதாவிடம் “நீ ஆண்ட்டிகூட சமத்தா இருக்கனும். நான் போயி ஜீவாவ பாத்துட்டு வரேன்.” என்றவள் விரைந்து சென்றாள்.

ஜீவாவின் வீட்டை தட்ட ராமு திறந்ததும் எந்த அறை என கேட்டதும் ஓடிச்சென்று அவனை மடியில் ஏந்தினாள். “ஜீவா, என்ன மா என்ன பண்ணுது…” என அவள் தொட்டுப்பார்க்க

அவனோ பாதி சுயநினைவில் “அம்மா, எனக்கு உடம்பெல்லாம் வலிக்கிது. கண்ணு எரியுதுமா. என்கூட இருங்க. போகாதீங்க மா.” என அவளது இடுப்பை கட்டிக்கொண்டான்.

அவளோ “சரிடா மா. அம்மா உன்கூட இருக்கேன். ஹாஸ்பிடல் மட்டும் போயிட்டு வரலாம்.” என அவனை சமாதானப்படுத்தியவள் சற்றும் தாமதிக்காமல் வண்டிக்கு சொல்லிவிட்டு ராமுவிடம் அவனோட ஸ்வெட்டர் மட்டும் எடுத்து கொடுங்கப்பா. நீங்க கதவை பூட்டிட்டு வாங்க. நான் ஜீவாவை தூக்கிட்டு கீழ போறேன். வண்டி வந்திடும்.” என்றவள் துரிதமாக சென்றாள்.

அவனுக்கு வீசிங் வந்துவிட முற்றிலுமாக நிரு பதட்டமாகினாள். மருத்துவமனையில் அவனுக்கு டிரீட்மென்ட் பார்க்கும் போதும் இவளது கையை ஜீவாவும் விடவில்லை. இவளும் சிறிதும் நகரவில்லை. அவளின் பதட்டம், நெருக்கம் அனைவரும் அவள் தான் பெற்ற தாய் என எண்ணும் அளவிற்கு இருந்தது. டாக்டர் வந்ததும் இவள் பதட்டமாக “மேடம், என் பையனுக்கு என்னாச்சு. நான் பாக்கலாமா?” என

அவரோ “ஒண்ணுமில்லமா. கொஞ்சம் வீக்கா இருக்கான். ஃப்பீவர் அதோட வீசிங் வந்ததால ரொம்ப டையர்டு ஆகிட்டான். அதனால ட்ரிப்ஸ் போட்டிருக்கு. இந்த ஒரு பாட்டில் முடிஞ்சதும் கூட்டிட்டு போயிட்டு கொஞ்சம் சாப்பிட வெச்சு தூங்க வெச்சுடுங்க. டேப்லெட் மட்டும் 2 நாள் எடுத்துக்கட்டும்.” என அனுப்பி வைத்தார்.

ஜீவாவை சென்று பார்த்தவளுக்கு கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அது ஏன் வருகிறது என்ற பதிலும் இல்லை. இருப்பினும், அவனது தலையை வருடி கொடுத்தவள் அவனுடனே இருந்தாள். சற்று பொறுத்து கிளம்பியதும் காரில் வீட்டிற்கு செல்லும் வழியிலும் ஜீவாவை தன் மடியிலேயே வைத்துக்கொண்டாள்.  ஜீவாவும் மா, மா என அனத்திகொண்டே இருக்க   நிரு சேலையை எடுத்து அவனுக்கு போர்த்திவிட்டு தன் கைக்குள்ளேயே வைத்துக்கொண்டாள். உடன் சென்று ராமுவிற்கே அவளை கண்டு பாவமாக இருந்தது.

ராமு “அம்மாடி, நீ வருத்தப்படாத மா. ஜீவாக்கு சீக்கிரம் சரி ஆகிடும்.”

நிரு “சீக்கிரம் சரி ஆகிடணும்…பாவம்பா, பையன். எப்படி வாடிபோய்ட்டான். ஜீவாவை இப்டி பாக்க எனக்கு கஷ்டமா இருக்கு.” என புலம்பிகொண்டே தட்டிக்கொடுத்தாள். பின் “ஜீவா என்கூடவே இருக்கட்டும். அவனை நான் பாத்துக்கறேன். நீங்களும், எங்ககூடவே வந்துடுங்க. ஜீவாவோட அப்பா கால் பண்ணதுக்கு அப்புறம் நீங்க அங்க போய்க்கோங்கபா.” என்றாள்.

வாணியிடம் சொல்லிவிட்டு வீட்டிற்க்கு வந்ததும், ஜீவிதா ஓடி வர நிரு “ஜீவி மா, ஜீவாக்கு காய்ச்சல்.. சோ இன்னைக்கு அம்மா நம்ம ரூம்ல அவனை வெச்சு பாத்துக்கறேன். நீ சமத்தா வாணி ஆண்ட்டி கூட போயி தூங்குங்க சரியா.?”

ஜீவி “நானும் ஜீவாகூட இருக்கேன்மா.” என்றாள் பாவமாக.

நிரு “கூட இருந்தா உங்களுக்கும் காய்ச்சல் வந்துடும். அப்புறம் நாளைக்கு ஜீவா சரி ஆனதும் யார்கூட விளையாடுவான் சொல்லு.”என பேசி அவளை வாணியுடன் அனுப்பிவைத்தாள். ராமுவை ஹாலில் படுத்துக்கொள்ள அனைத்தும் எடுத்து கொடுத்துவிட்டு ஜீவாவிற்கு கஞ்சி செய்து அவனுக்கு கொஞ்சம் ஊட்டிவிட்டாள். அவ்வப்போது காய்ச்சல் குறைய ஈரத்துணியில் பத்து போட, மாத்திரை தர என அவள் ஜீவாவை கவனித்துக்கொண்டே இருந்தாள்., ராமு இவை அனைத்தையும் கவனித்துக்கொண்டே உறங்கிவிட்டார். விடியும் வேளையில் அவள் அடுத்தடுத்து வேலைகளை செய்துகொண்டிருக்க , ராமு “அம்மாடி நிரு, நீ என்ன பண்ணிட்டு இருக்க. என்னை எழுப்பிருக்கலாம்ல.. நீ தூங்கினியா இல்லையா?” என வினவ

அவளோ புன்னகையுடன் “இருக்கட்டும்பா நீங்களும் பாவம் நைட்டு தூங்காம முழுச்சிட்டுகுழந்தைங்க மட்டுமில்ல பா, வயசானவங்களும் நேரா நேரத்துக்கு நல்லா தூங்கணும் அதான் உங்களை எழுப்பாம விட்டுட்டேன்.. குழந்தைகளுக்கு சாப்பிட ரெடி பண்ணிட்டேன். நமக்கு பண்ணிட்டு இருக்கேன். ”

உணவு உண்ணும் போது இவள் ஜீவாவிற்கு ஊட்டிவிட ராமு, “ஜீவாவோட பெத்த அம்மா இருந்திருந்தா கூட இவளோ பாத்திருப்பாங்களா, பதறுவாங்களானு தெரில. நேத்து நீ ஆஸ்பத்திரில அழுதத பாத்ததும் ரொம்ப சங்கடமா போச்சுமா.” என அவர் கூறியதும் தான் நிருவிற்கு முன்தினம் முதல் தான் தன் நிதானத்தில் இல்லாமல் மிகவும் உணர்ச்சிவசப்படுவதும், அதன் காரணம் புரியாமல் தவிப்பதும் உரைத்தது. அப்டியே அமைதியாகிவிட்டாள்.

ராமுவிற்கு ஜீவன் கால் செய்து பேசி விஷயம் அறிந்ததும் வீட்டிற்கு உடனே வருகிறேன் என கூறினான்.

ஆனால் என்ன நினைத்தாலோ நிரு “இல்லைப்பா, ஜீவாக்கு இப்போ ஓரளவுக்கு சரி ஆகிடுச்சு. நீங்க அவனை வீட்டுக்கு கூட்டிட்டு போயி ரெஸ்ட் எடுக்க வைங்க. ஜீவாவோட அப்பாவும் பாவம் வேலை முடிச்சிட்டு இப்போதான் வராரு. அவரை இங்க அங்கன்னு அலைய வெக்க வேண்டாம். நானும் வேலைக்கு கிளம்புறேன்.” என்றாள்.

ராமுவும் எதுவும் தவறாக எண்ணாமல் “அதுவும் சரி தான் மா. ஜீவன் தம்பியும் பாவம்தான் எதுக்கு அலைச்சல்.” என ஜீவாவை அழைத்துக்கொண்டு சென்றார்.

வாணி அவர்கள் சென்றதும் “நிரு உனக்கு என்னாச்சு. காலைல தான் பேங்க் லீவு  போடுறேன்னு சொன்ன. இப்போ போறேங்கிற. ” என்றவள் அவளது கலங்கிய கண்ணீரை பார்த்து பதறினாள். “ஹே, நிரு..ஏன் அழுகற.. ஜீவாக்கு ஒன்னும் இல்ல. அவன் சரி ஆகிட்டான். நீ ஏன் அவன் விஷயத்துல இவளோ எமோஷனல் ஆகுற?”

நிரு “அது தெரியாம தான் அழுகை வருது.”

வாணி “உன் பையன் நியாபகம் வந்திடிச்சா?விடுமா. அவனும் நல்லாதான் இருப்பான்.”

நிரு “ஜீவா அன்னைக்கு பேசுனத்துக்கு அப்புறம் உண்மையாவே எனக்கு ஒரு தடவ கூட என் பையன் என்ன பண்ணுவானோ, எப்படி இருப்பானோன்னு தோணவேயில்லை.  ஜீவா தான் என் பையங்கிற மாதிரியே எனக்கு தோணஆரம்பிச்சிடிச்சு. ஆனா இன்னைக்கு காலைல ராமு அப்பா சொன்னாரே. அப்போதான் எனக்கு புரியுது. நான் அவன் அம்மா இல்லை. அவன் அப்டி பாக்குறான் கூப்படறான் அவ்ளோதான்னு. இது எத்தனை நாளைக்கு நிலைச்சிருக்கு சொல்லு. நான் இவளோ எமோஷனல் ஆகுறது, அவன் வாழ்க்கைல எனக்கு ஒரு உரிமையை எதிர்பார்த்திருவேனோன்னு பயமா இருக்கு. ஜீவா எதுவும் சொல்லமாட்டான் ஆனா  அத அவங்க குடும்பத்துல ஏத்துக்கணும்ல. அப்புறம் அவனை விட்டு விலக சொன்னாலும், என்னால அத பண்ணமுடியாது. பாசம் காட்டி விலகி இருக்கறது ரொம்ப கொடுமையான விஷயம். அத நான் அவனுக்கு பண்ணக்கூடாது. அத நினைச்சுக்கூட பாக்கமுடில. அதான், கொஞ்சம் விலகி இருக்கறது நல்லதுனு யோசிச்சேன்.” என்றவள் பெருமூச்சுடன் நகர்ந்துவிட்டாள்.

வாணியும் யோசித்துகொண்டே நகர்ந்துவிட்டாள்.

 

ஜீவன் வந்ததும் ஜீவாவை சென்று பார்க்க நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். காய்ச்சல் இல்லை. பின் ஆசுவாசமாக வெளியே வந்தவனிடம் ராமு “இப்போ அலுப்புல தான் தம்பி ஜீவா தூங்குறாப்பல. நேத்து இருந்ததுக்கு காய்ச்சல் இல்லை. எல்லாமே அந்த பொண்ணு தான் பாத்துக்கிச்சு என நடந்த அனைத்தையும் கூறினார். விஷயம் அறிந்து வந்த வாசுவிடமும் ராமு மீண்டும் ஒரு முறை சளைக்காமல் நிருவை பற்றி புகழாரம் பாடினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-30ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-30

30 – மீண்டும் வருவாயா?   அவ்வழி வந்த வாணி வசந்த் இருவரும் இவர்களை பார்த்துவிட்டு அருகே வந்தனர். “என்ன டா இங்க உக்காந்திட்டே?” “தெரில வசந்த் ..ஏனோ இந்த இடம் பாக்க நல்லா இருக்கு. இங்கிருந்து பாரு பாக்கிற இடமெல்லாம்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-35 (நிறைவுப் பகுதி)ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-35 (நிறைவுப் பகுதி)

35 – மீண்டும் வருவாயா?   பின்னர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாட நேத்ராவிற்கு ஒவ்வொருவரும் பரிசு தர ஜீவி “அம்மா..இந்தாங்க…” என ஒரு போட்டோ பிரேம் நீட்ட அதில் விஜய் நித்து ஜீவி ஜீவா நால்வரும் ஒன்றாக இருக்கும் பள்ளி

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-1ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-1

மீண்டும் வருவாயா? குழந்தைகளின் வருகை சொந்தங்களை இணைக்கும் என்றபோதிலும், குழந்தைகளை காரணம் காட்டி உறவுகளால் பிரிக்கப்பட்ட இரு மனங்களின் மௌனப்போராட்டம் தான் இங்கே நிகழ்வது. நம் வாழ்வில் மனிதர்கள் பின்பற்றும் நம்பிக்கைக்கும், மனித உணர்ச்சிகளுக்கும் இடையே நிகழும் இந்த பயணத்தில் விதி