Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-2

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-2

2 – மீண்டும் வருவாயா?

 

“அப்பா புது அபார்ட்மென்ட்க்கு நாம ஏன் இன்னும் 2 டேஸ் கழிச்சு போகணும். இன்னைக்கே போலாம்ல..?” என கத்த

“டேய், ஏண்டா கத்துற? நீ நினைச்சா உடனே போய்ட முடியுமா? எவ்ளோ வேலை இருக்கு. பேக் பண்ணனும். யாரு செய்வா அதெல்லாம்.?”

“என்ன டாடி, இப்டினு நீங்க என்கிட்ட சொல்லிருந்தா இந்த லீவ்ல நான் உங்களுக்கு எல்லா வேலையும் செஞ்சு குடுத்திருப்பேனே?…” என சலித்துக்கொள்ள

“ம்ம்… நீதானே…மொதல்ல சிந்தாம சாப்பிடு. அதுவே எனக்கு பெரிய ஹெல்ப்.” என

சின்னவனோ, “என்னப்பா? என் ரேஞ்க்கு இதெல்லாம் ஒரு விஷயமா? உங்களுக்கு என்ன கரெக்ட்டா யூஸ் பண்ணிக்கவே தெரில…” என குறைபட

“உன்னைத்தானே… அது சரி…இப்போ உனக்கு என்ன பிரச்சனை. இப்பகூட நீ எனக்கு ஹெல்ப் பண்ணலாம் ஜீவா. இன்னைக்கு நாளைக்கு நீ பேக் பண்ணு.. உன்ன யாரு வேண்டாம்னு சொல்ல போறாங்க?”

“ஆ..அதில்லப்பா.. இந்த 2 டேஸ் ஒர்க் பண்ணிட்டு டையர்டு ஆகிட்டா அப்புறம் அந்த வீட்ல அரேஞ்ஜ் பண்ணறதுக்கு உங்களுக்கு யாரு ஹெல்ப் பண்ணுவா? என்ன இருந்தாலும் நான் கொஞ்சமா வளந்த குட்டி பையன் தானே. ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணகூடாதில்லப்பா. அதனால இந்த 2 டேஸ் நான் நல்லா சாப்பிட்டு விளையாடிட்டு ரெஸ்ட் எடுத்திட்டு நல்ல தெம்பா இருக்கேன். அங்க வந்து உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.” என விளக்கம் குடுக்க அவனை ஓரக்கண்ணால் பார்த்தவன் “டேய் பிராடு, எப்படியும் எந்த வேலையும் செய்யாம ஓபி அடிக்க எவ்ளோ விளக்கம் சொல்ற நீ..நானே பெரிய சோம்பேறி, இந்த மாதிரி வேலைல இருந்து எப்படி தப்பிக்கறதுனு பாப்பேன். நீ எனக்கு மேல இருக்கடா…” என

“நான் உங்க பையன்ல டாடி.. சோ உங்களை மாதிரியே அப்டித்தான் இருக்கனும்…” என கெத்தாக கூற

“ஆனா நானா போயி ஹெல்ப் பண்றேன்னு கேட்டு ஓவரா பில்டப் எல்லாம் குடுக்கமாட்டேன்டா… வேலை செய்யலேன்னு பேசாம போய்டுவேன்..வேலை இருக்கான்னு கேட்டு செய்யமாட்டேனு சொல்றது உனக்கு எதுக்கு இதெல்லாம்?” என செல்லமாக மகனை வார

அவனோ சளைக்காமல் “ஹய்யோ அப்பா, உங்களுக்கு ஒண்ணுமே தெரில. அது உங்களுக்கு ஹாப்பி பண்றதுக்காக சொல்ற டயலாக்… ஏதாவது ஹெல்ப் பண்றேனேனு கேட்டா, நீ சொன்னதே ஹாப்பி டா செல்லம் .. நீ போ.. எல்லாமே நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு நீங்களே ஜாலியா எல்லா வேலையும் பண்ணனும். அப்டித்தான் பாட்டி தாத்தா எல்லாரும் சொல்லுவாங்க. அதோட என்னை கொஞ்சிட்டு சாக்குலேட்ஸ் தருவாங்க. நீங்க தான் எல்லாத்தையும் மாத்தி மாத்தி பண்றீங்க..” என நடப்பை கூற

பெரியவனோ வாய் விட்டு சிரிக்க “உண்மையாவே நீ பிராடு தான்டா..” என

சின்னவனும் உடன் சிரித்துவிட்டு “அப்பா, எனக்கு கராத்தே கிளாஸ் எப்போ இருந்து பா.?..” என குஷியாக கேட்க

“அது, இப்போதைக்கு வேண்டாம் ஜீவா.. கிளாஸ் கேட்கல…அடுத்த வருஷம் பாத்துக்கலாம்..” என சாதாரணமாக கூற

சின்னவனோ முகத்தை சுருக்கி “என்னப்பா நீங்க, நானா கேட்டேன்.. நீங்க தானே கிளாஸ் போறியான்னு கேட்டீங்க.. நான் ஓகே சொன்னதுக்கு அப்புறம் இப்டி நோ சொல்லி ஏமாத்திரிங்க.. இது தப்புதானே…” என கோவமாக சென்று சோபாவில் அமர்ந்துகொள்ள

பெரியவனோ பொறுமையாக புன்னகையுடன் அவனிடம் சென்று அமர்ந்தான் “ஜீவா, நாம புது வீட்டுக்கு பக்கத்துல தான் கிளாஸ். நெக்ஸ்ட் வீக்ல இருந்து நீ ஸ்கூல் முடிச்சிட்டு ஈவினிங் கிளாஸ் போலாம்.” என சின்னவன் கண்கள் பளிச்சிட உண்மையாவா? என கேட்டு தந்தையை கட்டிக்கொண்டான்.

பின் “அப்புறம் ஏன் டாடி அப்டி சொன்னிங்க?”என குறைபட

அவனது தந்தை அவனை அருகில் அமர்த்தி “ஒரு விஷயத்தை சொல்லிட்டு செய்யாம போனா எவ்ளோ தூரம் ஏமாற்றம் வரும்னு நீ தெரிஞ்சுக்கணும்ல…ஒரு 2 நிமிஷம் தான்.. அதுக்கே நீ இவளோ கக்கற.. நீங்களே ஒன்னு செய்றேன்னு சொல்லிட்டு இப்போ செய்யமாட்டேனு சொல்றிங்களே இது தப்புதானேனு கேக்கற.. அப்டி பண்றது தப்புனு உனக்கு புரியுதில்ல..அப்புறம் அந்த தப்ப நீ ஏன் பண்ணனும் சொல்லு… இப்போ மட்டுமில்ல, சின்ன விஷயமோ பெரிய விஷயமோ, எப்போவுமே உன்னால ஒரு விஷயம் செய்ய முடிஞ்சா மட்டும் தான் நீ அடுத்தவங்ககிட்ட சொல்லணும். வாக்கு குடுக்கணும். இல்லாட்டி நீ அந்த பொறுப்பே எடுத்துக்கூடாது. உன்னால செய்ய முடியாததை சும்மா சொல்லி மத்தவங்கள ஏமாத்தக்கூடாதுல?” என வினவ

ஜீவா சற்று யோசித்துவிட்டு “சரி பா, இனிமேல் அப்டி ஏமாத்தமாட்டேன்.” என கூற

பெரியவனோ புன்னகையுடன் “சரி ஓகே…இவளோ வருஷம் இங்க இருந்திட்டோம்… எல்லாரையும் விட்டுட்டு புது அபார்ட்மெண்ட் போகப்போறோம். உனக்கு பயமா வருத்தமா இல்லையா?”

ஜீவா “அதுல என்னப்பா இருக்கு. இதே ஊரு தான். போன், வீடியோ கால் எல்லாம் இருக்கு. பாக்க தோணுச்சுனு உங்ககிட்ட சொன்னா கூட்டிட்டு வர போறீங்க. அப்புறம் ஏன் நான் பீல் பண்ணனும். அதோட ஒரு நியூ வேர்ல்ட் பாக்க போற மாதிரி ஜாலியா இருக்கு.. நான் போயி இப்போ விளையாடுறேன்.. ஈவ்னிங் நான் உங்களுக்கு பேக் பண்ண ஹெல்ப் பண்றேன்…” என கூறிவிட்டு தன் பந்தை எடுக்க சென்றான்.

 

சிறுவன் கூறிய விளக்கத்தில் பெரியவனின் மனம் அவன் அனுமதியின்றி பழைய நிகழ்வை நினைவுபடுத்தியது.

 

[‘ஆமா நித்து, … நீ தனியா செல்லமா வளந்த பொண்ணு. கல்யாணம் பண்ணிட்டு அங்க நிறையா பேர் இருப்பாங்க. புது இடம்.. உனக்கு பயம், தயக்கம் எதுமில்லையா?’

 

நான் கல்யாணம் பண்ணிட்டு யாரும் தெரியாத காட்டுக்குள்ள இல்லை கூண்டுக்குள்ளவா  போகப்போறேன்  பயப்படுறதுக்கு. அதோட என்கூட இருக்கறவங்க பழகறவங்கள நீங்க ஒதுக்கி வெச்சுட்டு வான்னு சொல்லலையே. ஜஸ்ட் வேலைக்கு போகும்போதோ படிக்க போகும்போதோ கொஞ்ச நாள் விலகி இருப்போம்ல. அந்த மாதிரி தான் இதுவும் எனக்கு தோணுது. அப்போவும் கால், மெஸேஜ்னு நிறையா இருக்கும். இப்போ எவ்ளோ டெக்னாலஜி இருக்கு. எல்லாத்துக்கும் மேல இவங்களை பாக்கணும்னு சொன்னா நீங்க என்னை தடுக்கப்போறதில்லை. முடிஞ்சா நீங்களே கூட்டிட்டு வரப்போறிங்க. இதுல நான் எதுக்கு வருத்தப்படப்போறேன் சொல்லுங்க. உண்மைய சொன்னா இன்னும் நிறைய பேர் என் வாழ்க்கைல இணைய போறாங்க ஒரு புது உலகத்தை பாக்க போறோம்னு சந்தோசமா எக்ஸைட்டிங்கா இருக்கு. அதுவும் உங்ககூட சேந்துனு நினைக்கும்போது சொல்லவேவேண்டாம். அவ்ளோ ஹாப்பி. என தோளில் சாய்ந்துகொண்டாள்.]

 

“ஜீவா” என்ற அழைப்பில் இருவரும் திரும்ப அங்கே வந்த வசந்த் சட்டென்று சிரித்துவிட

சின்னவன் “என்னனு சொல்லுங்க அங்கிள். நான் போயி விளையாடணும். எனக்காக என் பிரண்ட்ஸ் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.”

வசந்த் “உன்ன இல்லடா குட்டி ஜீவா. நான் இவனை கூப்பிட்டேன்.” என்றான்

சின்னவனோ செல்லமாக முறைத்துவிட்டு “அங்கிள், இதே உங்க எல்லார்கூடவும் எனக்கு பெரிய பிரச்சனையா இருக்கு.  எனக்கு என் அப்பாக்கும் ஒரே நேம் வெச்சு ஸ்ஸ்.. பேரை மாத்தி கூப்பிடுங்கன்னு எனக்கு சொல்லி சொல்லி டையர்டு ஆகிடுச்சு.” என சலித்துக்கொள்ள பெரியவர்கள் இருவரும் சிரித்துவிட்டு அவனிடம் வந்தனர்.

அவனது தந்தையோ “டேய் அதுதான் உனக்கு ஜீவ நேத்ரன்னு பேர் வெச்சிருக்கே. உன் பேர்ல இருக்கற செகண்ட் ஹாஃப் சொல்லி கூப்பிட சொல்லு.” என வம்பிழுக்க

சின்னவனோ “ஆ… அதுதான் உங்களுக்கு விஜய ஜீவிதன் னு பேர் வெச்சிருக்காங்களே. உங்களோட பஸ்ட்  ஹாஃப் சொல்லி கூப்பிட சொல்லுங்க. எனக்கு என் அம்மா சூஸ் பண்ணது அந்த பேர். எனக்கு ஜீவா தான் வேணும்.  ” என அவனும் சரிக்கு சரியாக கேள்வியோடு நிற்க

வசந்த் “அடடா..இரண்டுபேரும் ஆரம்பிச்சிட்டீங்களா… ஜீவா நீ பொறக்கறதுக்கு முன்னாடி வரைக்கும் உன் அப்பாவை ஜீவன் ஜீவானு மாத்தி மாத்தி எல்லாரும் கூப்பிட்டு இருந்தோம். நீ வந்த அப்புறம் உன்ன அதிகம் ஜீவான்னு கூப்பிட்டு பழகிடிச்சுடா. அதான் அப்டியே கூப்பிட்டேன். எல்லார்கிட்டயும் சொல்லி இனிமேல் உன் அப்பாவை ஜீவன்னே கூப்பிடறோம். ஜீவா பேர் உனக்கே இருக்கட்டும் போதுமா? இப்போ நீங்க விளையாட போங்க சார்.” என அவன் பைசல் பண்ணி வைக்க ஜீவா சிரித்துவிட்டு வசந்த்தை கட்டிக்கொண்டு “தேங்க்ஸ் அங்கிள்.” என்றான். அவனும் குழந்தையை கொஞ்சிவிட்டு அனுப்பிவைத்தான்.

 

ஜீவா வெளியே சென்றதும் தான் கவனித்தான். ஜீவன் அமைதியாக அங்கேயே நிற்க அவனிடம் சென்ற வசந்த் “டேய் என்னாச்சுடா?” என

அவனோ “விஜய்னு என் பேரோட முதல் பாதியை சொல்லி கூப்பிட்ட ஒரே ஒரு ஆள் என் நித்ரா மட்டும் தான். அவளை மாதிரியே தான் இவனும் சரிக்கு சரி நிக்குறான் பாரேன். இந்த பேரு தான் சொல்லி கூப்பிடுவேன்னு. சேட்டை, செல்லம், பொறுப்பு, பேச்சு எல்லாம் அப்டியே அவ அம்மா மாதிரி ” என புன்னகைக்க

வசந்த் அவன் தோளில் தட்டி “டேய் ஜீவன் சொல்றத கேளு. நீ அவளை எந்த அளவுக்கு மிஸ் பண்றேன்னு எங்களுக்கு புரியும்டா. நீங்க இரண்டுபேருமே தப்பு பண்ணல. எதுக்காக இந்த தண்டனை. நாம அவளை தேடலாம்டா. கண்டிப்பா கெடைச்சிடுவா.. நீ சரினு மட்டும் சொல்லு.” என ஆவலுடன் வினவ

ஜீவன் விரக்தி புன்னகையுடன் “நாளைக்கு ஆபீஸ் லீவு போட்டிருக்கேன்.பேக்கிங் வேலை இருக்கு. அடுத்த வாரம் ஜீவாக்கு ஸ்கூல். திங்ஸ் எல்லாம் கொஞ்சம் வாங்கவேண்டியது இருக்கு. அந்த வீட்டுக்கு போய்ட்டு எல்லாம் அரேஜ் பண்ணிட்டு போகணும்டா. ஆபீஸ்ல ரொம்ப ஒர்க் இருந்தா மட்டும் சொல்றேன். நீ ஜீவாவை கூட்டிட்டு போய்ட்டு வரியா?” என அவன் அடுத்த விஷயம் பற்றி பேச நண்பனை பற்றி அறிந்தவனாதலால் வசந்த் “உன் இஷ்டம். நீ ஸ்ட்ரைன் பண்ணாத. நான் ஜீவாவை கூட்டிட்டு போய்க்கறேன்.” என்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-3ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-3

3 – மீண்டும் வருவாயா? பள்ளி விட்டு வெளியே வர குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் சிலர், பள்ளி பேருந்தில் சிலர் என கிளம்பிக்கொண்டிருந்தனர். வாட்ச்மேன் மற்றும் சில ஆசிரியைகள் உடன் இருந்து அனுப்பி வைத்தனர். ஜீவா, ஜீவிதா, இருவரும் கூட்டிச்செல்ல ஆள்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-23ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-23

23 – மீண்டும் வருவாயா? அடுத்து வந்த சில நாட்களில் திருமணவேளை குழந்தைகளின் சேட்டை அதோடு வெளியே கூறாவிடினும் இருவரின் அருகாமையை இருவருமே மிகவும் ரசித்தனர். வாரம் ஒருமுறை என்றால் அனைவரும் ஜீவனின் பெற்றோர் வீட்டிற்கு செல்வது என அனைத்தும் சாதாரணமாகவே

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-32ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-32

32 – மீண்டும் வருவாயா?   இரண்டு நாள் முன்பு நேத்ராவிடம் அனைவரும் “நீ, ஜீவன் குழந்தைங்க எல்லாரும் இங்கேயே இருக்கலாம்ல மா?” நேத்ரா “ஆ..அது வேண்டாமே.. அப்போ அப்போ வர போக இருந்திட்டு பாத்துக்கலாம்.. ஒண்ணா வேண்டாம்னு தோணுது மாமா..”