சூரப்புலி – 6

இப்படி அது பல முறை ஊளையிட்டுப் புலம்பிற்று. அந்தப் புலம்பல் எப்படியோ அந்தப் பக்கமாகத் தற்செயலாக மூன்றாம் நாள் மாலையில் சென்ற ஒரு துறவியின் காதில் விழுந்துவிட்டது. அவர் சட்டென்று நின்று உற்றுக் கேட்டார். மறுபடியும் அந்த வேதனைக் குரல் கேட்டது. அவர் காட்டுக்குள்ளே புகுந்து போவதை நிறுத்தி மெதுவாக அந்தச் சிறிய குன்றைக் கவனித்தார். போலீசார் வந்து சென்றதால் ஓடைக்குப் பக்கத்திலிருந்த குறுகலான வழியில் செடிகள் ஒடிந்து தாறுமாறாகக் கிடந்தன. அதன் வழியாக அவர் உள்ளே நுழைந்து, குகைக்குள்ளே இருந்த சூரப்புலியைக் கண்டார். நாயின் பரிதாபமான நிலையைக் கண்டு மனம் வருந்தி அவர் அதன் அருகில் சென்றார். 

துறவியின் நீண்ட தாடியைப் பார்த்ததும் தாடிக்காரனின் மேலிருந்த ஆத்திரமெல்லாம் சூரப்புலியின் உள்ளத்திலே கொந்தளித்து எழுந்தது. முன்னால் இருப்பவர் யாரென்றுகூடக் கவனியாமல் அது அவர் அன்போடு நீட்டிய கையைப் பிடித்துக் கடித்தது. அதைக் கண்டு துறவி கோபம் கொள்ளவும் இல்லை பயமடையவும் இல்லை. அவர் சிரித்துக்கொண்டே தம் கையை விடுவித்துக் காயங்களிலிருந்து பீரிட்டு வந்த ரத்தத்தைத் தம் மேலே போட்டிருந்த நீண்ட மேலாடையை கிழித்துத் துடைத்துக் கொண்டார். காயங்களின் மீது ஏதோ மருந்தை வைத்துக் கட்டிக் கொண்டு மீண்டும் சூரப்புலியிடம் வந்தார். சூரப்புலி மறுமுறையும் அவரைக் கடிக்க முயன்றது. ஆனால், இந்தத் தடவை துறவி ஏமாற வில்லை. அவர் சாமர்த்தியமாகச் சூரப்புலியின் தலையைக் கீழே அழுத்திக்கொண்டு, அதன் வாயையும் கால்களையும், தமது மேலாடையை மேலும் கிழித்து அதன் உதவியால் கட்டி வைத்தார். சூரப்புலி துள்ளிப் புரண்டு கொண்டு ஓலமிட்டது. ஆனால், அதனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. துறவி வெளியே கிடந்த பெரிய கட்டையொன்றை மெதுவாகக் குகைக்குள்ளே கொண்டு வந்து சூரப்புலியின் முன்னே போட்டார். பிறகு சில நீண்ட காட்டுக் கொடிகளைப் பிடுங்கிக் கொண்டு வந்தார். கொடி களின் உதவியால் சூரப்புலியைக் கட்டையோடு சேர்த்து நன்றாகக் கட்டிவிட்டார். சூரப்புலியால் இப்பொழுது உடம்பையும் அசைக்க முடியவில்லை. அது அசையாமல் கிடந்தது. புதிய விபத்து ஒன்று நேரப்போகிறது என்று பயந்து கத்திற்று. 

பிறகு, நிதானமாக அந்தத் துறவி சூரப்புலியின் பின்னங்கால் களைத் தொட்டுத் தடவிப் பார்த்தார். ஒவ்வொரு காலிலும் எலும்பு ஒடிந்த பாகத்திலே அவர் தொட்டு அழுத்திப் பார்த்த பொழுது சூரப்புலி வீரிட்டுக் கத்திற்று. பின்னங்கால்கள் இரண்டிலும் துடைக்குப் பக்கத்தில் எலும்பு முரிந்து இருப்பதைத் துறவி கண்டு கொண்டார். அவர் கண்களிலே இரக்கம் தோன்றிற்று. யாரோ அதை அடித்து எலும்பை ஒடித்திருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. நல்ல வேளையாக கால் எலும்பு ஒவ்வொன்றும் இரண்டு துண்டாக முரிந்ததே ஒழிய அவை நொறுங்கிப் போகவில்லை அதை அறிந்ததும் துறவிக்குக் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது அவர் தம்மிடத்திலிருந்த சிறிய கத்தியைக் கொண்டு ஓடைக்கு பக்கத்திலே வளர்ந்திருந்த மூங்கி லொன்றை வெட்டி எடுத்து கொண்டு வந்தார். அதைப் பிளந்து நான்கு பத்தைகள் தயார் செய்தார். ஒவ்வொரு காலிலும் எதிரெதிர்ப் பக்கமாக இரண்டு யத்தைகளை வைத்து ஒடிந்த எலும்புகளையும் சரியானபடி பொருத்தி வைத்துக் கட்டினார். பத்தைகளுக்கு மேலே அவருடைய மேலாடை யிலிருந்து கிழித்த துணிதான் கட்டுவதற்குப் பயன்பட்டது. அந்தத் துணியையே சிறு நாடாக்களைப் போலக் கிழித்து அவற்றைக் கயிறாகத் திரித்து, பத்தைகள் இடம் பிசகாதபடி நன்றாகக் கட்டி வைத்தார். அவர் கட்டும் போதெல்லாம் வலி தாங்கமாட்டாமல் சூரப்புலி வீரிட்டுக் கத்திற்று. அப்படிக் கதறும்போது அதை அன்போடு துறவி தடவிக் கொடுத்தார். இருந்தாலும் தாடி வைத்துக் கொண்டிருக்கிற அந்தத் துறவியின் மீது சூரப்புலிக்குக் கோபம் தணியவில்லை. மனித குலமே தன்னைத் துன்புறுத்துவதற்காகவே இருக்கிறது என்று சூரப்புலிக்குத் தோன்றிற்று. அதன் வாய் மட்டும் கட்டப்படாமல் இருந்தால் அது துறவியை நன்றாகக் கடிக்க முயன்றிருக்கும். உடம்பை அசைக்க முடியாத நிலையிலும் அது துறவியைக் கோபத்தோடு பார்த்து அடிக்கடி உறுமிற்று. கோபப்படாதே. உனக்கு நல்லதுதான் செய்கிறேன்” என்று அவர் சிரித்துக் கொண்டே கூறினார். சூரப்புலி சீறிக்கொண்டு அவரைக் கனல் தெறிக்கப் பார்த்தது. “மனிதனைக் கண்டாலேயே உனக்குப் பிடிக்கவில்லையா? அப்படியானால் இனிமேல் உனக்கு முன்னாலேயே நான் வரவில்லை; பயப்படாதே’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவர் சூரப்புலியைத் தட்டிக்கொடுத்தார். இதற்குள் கட்டெல்லாம் கட்டி முடிந்துவிட்டது. அவர் தமது கையிலுள்ள கத்தியைக் கொண்டு சூரப்புலியின் வாயிலும் உடம்பிலும் கட்டியிருந்த கட்டுகளையெல்லாம் அறுத்தெறிந்தார். வாயிலுள்ள கட்டை அறுக்கும் முன்னதாகவே கழுத்தில் கட்டியிருந்த கயிற்றையும் அறுத்துவிட்டார். பிறகு வேகமாக அவர் அந்தக் குகையைவிட்டு வெளியேறிவிட்டார். சூரப் புலி குகைக்குள்ளேயே படுத்துக் கிடந்தது. இப்பொழுதும் அதனால் எழுந்திருக்க முடியவில்லை. வலியும் தணியவில்லை. அனர்த்திக் கொண்டே சூரப்புலி படுத்துக்கிடந்தது. 

வெளியே உடைந்து கிடந்த பெரிய பானை ஓடுகள் இரண்டைத் துறவி எடுத்து வந்தார். தம் தோளிலே தொங்கிக்கொண்டிருந்த சோற்று மூட்டையை அவிழ்த்து ஓர் ஓட்டிலே கொட்டினார். மற்றோர் ஓட்டிலே ஓடையிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார். இரண்டையும் சூரப்புலியின் அருகே கொண்டுவந்து வைத்துவிட்டு வேகமாக வெளியே வந்து மறைந்துவிட்டார். அன்று இரவு அவர் பட்டினி . ஆனால், துன்பப்படும் ஓர் உயிருக்கு உதவி செய்த மகிழ்ச்சியோடு அவர் அங்கிருந்து மறைந்தார். 

அடுத்த நாள் மாலையிலும் இருள் பரவுகின்ற சமயத்தில் அவர் எங்கிருந்தோ அங்கு வந்தார். கையிலே உணவு மூட்டை இருந்தது. அவர் தம் முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டு குகைக்கு முன்னாலிருந்து கொண்டே உணவு முட்டையை அவிழ்த்து உள்ளே போட்டார். தாம் கொண்டுவந்திருந்த கமண்டலத்தில் தண்ணீர் எடுத்துவந்து ஓட்டில் ஊற்றினார். இருள் பரவிக் கொண்டதாலும், துறவி தம் முகத்தை மூடியிருந்ததாலும் அவரை இன்னாரென்று சூப் புலி கண்டுகொள்ளவில்லை. ஆனால், முந்தின நாள் வந்தவர்தான் என்று மட்டும் உணர்ந்தது. 

இவ்வாறு பல நாட்கள் நடந்தன. முதலில் சில நாட்கள் மட்டும் துறவியின் உருவம் குகைக்கு முன்பு தோன்றியபோது சூரப்புலி குரைத்தது. பிறகு குரைப்பதை நிறுத்திவிட்டது. இந்த மனிதனால் தனக்கு ஆபத்தில்லை என்று மட்டும் அது தெரிந்து கொண்டிருக்க வேண்டும். இருந்தாலும் மனித இனத்தைப்பற்றி அதற்கிருந்த கோபம் ஆறிவிட்டதாகச் சொல்ல முடியாது. மனித இனத்தையே அது வெறுக்கிறது என்பதை அந்தத் துறவி உணர்ந்து கொண்டிருந்தா ரென்பது நிச்சயம். அதனால்தான் அவர் தமது முகத்தை அதற்குக் காட்டாமல் இருந்தார்.

பல நாள்களுக்குப் பிறகு சூரப்புலிக்கு மெதுவாக எழுந்து நடமாட முடிந்தது. பின் கால்களில் கட்டிருந்ததால் அக்கால்களை நன்றாக எடுத்துவைக்க முடியவில்லை. ஆனால், அக்கால்களிலிருந்த வலி நீங்கிவிட்டது. குகையை விட்டு அது வெளியே வரமுடியும் என்று தெரிந்ததும் துறவி குகைக்கு முன்னாலிருக்கும் திருப்பத்திலேயே இருந்து கொண்டு உணவை வைத்து விட்டுச் சென்றுவிடுவார். சூரப் புலி அந்த உணவைத் தின்றுவிட்டு, ஓடையிலே நீர் அருந்தித் தனது தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும். 

கால்கள் முற்றிலும் குணமடைந்த போது சூரப்புலிக்கு அந்தத் துறவியை நன்றாக அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. அன்று மாலையில் அவரது வருகைக்காகக் குகைக்கு. முன்னாலிருந்த திருப்பத்திற்கு முன்னாலேயே நின்று காத்துக்கொண் இருந்தது. ஆனால் அன்று அவர் வரவில்லை. அன்று முதல் அவர் வருவதை நிறுத்திவிட்டார். சூரப்புலி இனிமேல் தானாகவே உணவு தேடிக்கொள்ள முடியுமென்பதை அவர் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அதனாலேயே அவர் வரவில்லை. 

சூரப்புலி மறுநாள் காலையில் ஓடையிலே ஓடி வருகின்ற தண்ணீரிலே தலையை உயர்த்தி வைத்துக்கொண்டு படுத்தது. பல நாள்களுக்குப் பிறகு தண்ணீரிலே இப்படி முழுகுவது அதற்கு மிகுந்த உடற்சாகத்தைக் கொடுத்தது. பிறகு கரைக்கு வந்து மெதுவாகத் தன் பின்னங்கால்களிலிருந்த கட்டையெல்லாம் பல்லினால் கடித்து திழுத்தது. சிறிது நேரத்தில் சாமர்த்தியமாகத் துணிக் கயிற்றை பெல்லாம் கடித்தெறிந்து விட்டதோடு கட்டுத் துணிகளையும் கிழித்து அப்புறப்படுத்திவிட்டது. மூங்கில் பத்தைகள் தாமாகவே கீழே இழுந்துவிட்டன. சூரப்புலிக்குப் புதிய உயிர் வந்தது போல் இருந்தது. அதன் கால்கள் என்றும் போல உறுதி அடைந்துவிட்டன. அதனால் இப்பொழுது ஓடியாடித் திரியமுடியும். ஆகவே, சூரப்புலி குதூகலத் நாடு இரை தேடப் புறப்பட்டது. முன்பு காட்டெருமைப் போரையும் தந்தையின் திறமையையும், மலைப்பாம்பின் கொடுமையையும் கண்ட கட்சிகள் அதன் நினைவிற்கு வந்தன. கானகத்திலே வாழ வேண்டுமானால் வஞ்சகமும் தந்திரமும் கொடுமையும் நிறைய வேண்டும் என்று அது நினைத்தது. அதே சமயத்தில் தன் உயிர் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய வேகமும் எச்சரிக்கையும் அவ மென்பதையும் அது நன்றாக அறிந்து கொண்டிருந்தது. இ அறிவைக் கொண்டு அது ஜாக்கிரதையாகத் தனது கால் வாழ்க்கையைத் தொடங்கிற்று. அந்தக் குகையே அதற்கு ந பாதுகாவலான இருப்பிடமாக அமைந்தது. அந்த இடத்தி வேறு கொடிய வன விலங்குகள் வருவதில்லை. பல காலமா கள்ளச் சாராயம் காய்ச்சுவோர்கள் அங்கு நடமாடியதால் வனவில கன் அந்தப் பக்கத்தையே பெரும்பாலும் நாடுவதில்லை. அது கு புலிக்கு நன்மையாக முடிந்தது. 

சூரப்புலி ஆரம்பத்தில் காட்டுக்கோழி, முயல், கீரி முதல் சிறு பிராணிகளைப் பிடித்துத் தின்னலாயிற்று. துறவியார் அதற் கொடுத்தது மாமிசம் கலவாத உணவு. ஆனால் அது இப்பொழு மாமிசத்தைப் புசித்தே உயிர் வாழலாயிற்று. மெதுவாக இன்ற சற்றுப் பெரிய காட்டு விலங்குகளையும் அது கொல்லப் பழ கொண்டது. தந்திரத்தினால் புள்ளிமான் போன்ற பிராணிகளை அது கொன்று தின்றது. 

கானக வாழ்க்கையின் பயனாக, சூரப்புலி மிகுந்த வலிமை பயங்கரமான தோற்றமும் பெற்றுவிட்டது. சூரப்புலியின் த சாதாரணப் பட்டி நாய் என்று முன்பே நமக்குத் தெரியும் ; அது தந்தை ஓர் ஆல்சேஷியன் என்று சொல்லப்படும் ஜெர்மன் போன் நாய். ஓநாயைப் போலத் தோற்றமளிக்கும் அந்த நாய் ] இனத்தின் தன்மைக்கேற்றவாறு மிக உயரமாக வளர்ந்திருந்த அது அறிவிலே சிறந்தது. தந்தையான அதனுடைய உடற்கட் அறிவும், தாயான பட்டி நாய்க்குரிய விசுவாசமும் காவல் காக்க திறமையும் சூரப்புலிக்கு வாய்த்திருந்தன. பட்டி நாயின் காது நுனியிலே சற்று மடிந்திருக்கும். ஆல்சேஷியன் நாயின் காது எப்பொழுதும் நிமிர்ந்தே நின்று சிறிய ஒலியையும் கேட்கக்கூடிய வாய் அமைந்திருக்கும். தந்தையைப் போலவே சூரப்புலியின் க களும் சிறிதும் மடிப்பில்லாமல் நிமிர்ந்து நின்றன! வா உரோமம் அடர்ந்து அழகாக இருந்தது. கானகத்திலே எப்பெறு தும் எச்சரிக்கையாக இருந்து பழகிப் பழகி அதன் காதுகளும் களும் மிகுந்த கூர்மையடைந்து விட்டன. மோப்பம் பிடிக்கும் து யும் மிக ஆச்சரியமாகப் பெருகிவிட்டது. சிறிய ஒலியும் அது நன்றாகக் கேட்டதோடு அந்த ஒலி எதனால் உண்டானதொர் அறிந்து கொள்ளவும் அதனால் முடிந்தது. கானகத்து மையிருட்டிலும் அது இப்பொழுது நன்றாகப் பார்த்தது. காற்றில் வருகின்ற வாடையைக் கொண்டே எந்த விதமான பிராணி தூரத்திலிருக்கிறது என்பதையும் அது அறிந்து கொள்ளும். இவ்வாறு சக்தியெல்லாம் பெற்று, நல்ல உடற்கட்டும் காளைப் பருவத்தின் கம்பீரமும் கொண்டு அது மிடுக்கோடு விளங்கிற்று. 

மேலும், கானக வாழ்க்கையால் அது எத்தனையோ அனுபவங் களையும் ஆற்றலையும் பெற்றது. தந்திரம், வஞ்சகம், அஞ்சா நெஞ்சம். குரூரத் தன்மை, இரக்கமின்மை – இப்படி எல்லாம் அதற்கு அமைந்துவிட்டன. அது மனிதனோடு பழகிய நாள்களையே மறந்து காட்டு விலங்காகவே மாறிவிட்டது. மனிதனிடத்திலேற்பட்ட வெறுப்பும் ஆத்திரமும் மட்டும் மாறவேயில்லை. இப்பொழுது காட்டுக்குள்ளே யாராவது மனிதன் அதற்கு முன்னால் வந்திருந்தால் நிச்சயம் அவனைக் கடித்துக் கொல்லாமல் விடாது. குகைக்குத் திரும்பும் போதெல்லாம் மனிதன் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பு வளர்ந்து கொண்டேயிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சூரப்புலி – 2சூரப்புலி – 2

இந்தச் சம்பவத்தால் சூரப்புலி மனமுடைந்துவிட்டது. அந்த மாளிகையில் இனிமேல் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தது. ஒன்பது மாதமே ஆன குட்டியாகிய தன்னால் ஒரு பெரிய கோழியைப் பிடித்து முழுவதையும் தின்ன முடியாது என்பதைக் கூட யாரும் அறிந்துகொள்ளவில்லையே என்று நினைத்து, அது மிகவும்