Tamil Madhura பயணங்கள் முடிவதில்லை - 2019,Uncategorized வயநாடு பயண அலப்பறைகள்

வயநாடு பயண அலப்பறைகள்

பயணம் இந்த வார்த்தை ஒவ்வொருத்தருக்கும் ஒருவித உணர்வைத் தரும் என்னைப் பொருத்தவரையில் பயணம் செய்யாதே என்று நிம்மதியாக வீட்டில் உறங்குவேன். என்னடா இவ பயணம் பற்றி எழுத வந்துட்டு பயணம் பண்றது பிடிக்காதுனு  சொல்றாலேனு யோசிக்கிறீங்களா? உண்மைதாங்க சிலருக்கு தனிமை பிடிக்கும் அதனால லாங் டிரைவ் அதுவும் தனியா போவாங்க.நான் அந்த கேட்டகிரி இல்லைங்க கூட்டமாக போனா தான் சண்டை, சச்சரவு, சந்தோஷம் எல்லாமே இருக்கும். பிறந்தது, வளர்ந்தது வாழ்ந்ததைக்கிட்டு இருக்கிறது எல்லாமே கூட்டுக் குடும்பம் தான் அப்ப நான் எப்படி தனியா போக யோசிப்பேன். சரி என்னோட எனக்கு பிடித்த ஒரு பயணத்தைப் பற்றி சொல்றேன்.


ரயில் பயணம் இது எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் சின்ன குழந்தையாகட்டும், பெரியவர்களாகட்டும் எல்லாருக்கும் ஒவ்வொரு விதமான சந்தோஷத்தை தரும். எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனா உண்மைய சொல்லனும்னா என் 18 வயசு வரைக்கும் நான் ரயில் பயணம் போனதே இல்லை. ரொம்ப பிடிக்கும் சொல்றா? போகலானும் சொல்றா? அப்புறம் எதை பத்தி தான் பேச போறேன்னு கேட்கிறீர்களா ரயில் பயணத்தை பற்றி தான்.( அப்பா இப்பவே கண்ண கட்டுதே)


18 வயசு வரைக்கும் வெளியில ரொம்ப பயணம் போனதே இல்ல. அதனாலேயோ என்னவோ என்னோட ரயில் பயண ஆசையும் அப்படியே கழிந்துவிட்டது. கல்லூரி இறுதி ஆண்டு வரை எல்லா கல்லூரிகளிலும் ஏற்பாடு பண்றா மாதிரி என்னோட கல்லூரியிலும் சுற்றுலா ஏற்பாடு பண்ணினாங்க. அதுக்கு போக அனுமதி வாங்க நான் பட்ட பாடு இருக்கே அதை சொல்லிமாலாது. சரி என் சோக கதைய விட்டுட்டு நான் பயணம் போனது பற்றி சொல்றேன்.


என்னதான் அப்பா அம்மா கூட தம்பி தங்கச்சி கூட இப்படி சொந்தங்கள் கூட போகிறது எவ்வளவு சந்தோஷமோ அதைவிட பன்மடங்கு சந்தோஷம் நண்பர்களோடு போகும்போது கிடைக்கும். 


சென்னை சென்ட்ரலில் கோழிக்கோடு செல்ல வேண்டிய ரயிலை எதிர்பார்த்து காத்திருந்தோம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்தோம் எங்க நல்ல நேரமோ என்னவோ அன்னிக்கு வரவேண்டிய ரயில் தாமதமாக வந்தது. வந்ததுக்கப்புறம் அடிச்சு பிடிச்சு அவங்க அவங்க இடத்துல உட்கார்ந்துகிட்டோம். எங்களை வழிநடத்திச் செல்ல வந்த பேராசிரியை கொஞ்சம் கண்டிப்பாணவர் அப்படித்தான் நாங்க நினைச்சிட்டு இருந்தோம். நாங்க மாணவர்களை இல்ல அவங்க மாணவர்களான சந்தேகம் வர அளவுக்கு அவ்வளவு ஜாலியா இருந்தாங்க.


அப்படியே அட்டகாசம் பண்ணி கம்பார்ட்மெண்ட்ல இருந்தவங்க கிட்ட திட்டு வாங்கிட்டு ஒரு வழியா 12 மணிக்கு தூங்கினோம். ரயில் சரியாக காலை 3.30 அளவில் கோழிக்கோடை அடைந்தது. அந்த நேரத்தில் அதுவும் நட்ட நடு இரவில் எங்களை அழைத்து சென்றார்கள். தூக்க கலக்கம் எங்கே போகிறோம் என்று கூட தெரியாமல் பேராசிரியை கைகாட்டிய பேருந்தில் ஏறி அமர்ந்தோம். நீங்கள் நினைக்கலாம்

கோழிக்கோடு(கேலிகட் ) தான் வந்தாச்சே எங்கே போனீர்கள் என்று. நான் சுற்றுலா வந்த தலம் வயநாடு. சொல்ல போனால் அப்படி ஒரு இடம் இருப்பதே எங்களில் பாதி பேருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யும் போது தான் தெரியும். பேருந்து போய் கொண்டே இருந்தது. நான் கண் விழித்த வேலை பகலவன் தன் கதிர்களை என் மேல் விழ செய்தான். சுற்றிலும் பச்சை பசேல் என டீ தோட்டம், கண்ணுக்கு இதமாய் இருந்தது. திரும்பி பார்த்தேன் என் அருமை தோழி இதையெல்லாம் அனுபவிக்காமல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் பாவம் அவளை எழுப்பதே என்றது ஆனால் இன்னொரு பக்கம் எருமை மாடு டூர் வந்த இடத்துல தூக்கிட்டு இருக்கா பாரு எழுப்பி விடு என்றது. கடைசியில் அவளை தட்டி எழுந்து தொல நைட்லாம் ஆந்தை மாதிரி முழிச்சிக்கிட்டு இருந்திட்டு இப்ப தூங்கிட்டு இருக்கீயா வா நம்ம தங்க வேண்டிய ஹோட்டல் வந்து விட்டது என்று அவளை இழுக்காத குறையாக எழுப்பி வந்தேன் ரூம் பிடிக்க, ஆம் ஒவ்வொரு அறையிலும் 7 பேர் வீதம் தங்கினோம்(பெண்கள் மட்டும் தான் ஏனெனில் நான் படித்தது மகளிர் கல்லூரி ஆயிற்றே) தமிழ்நாட்டில் இட்லி, சாம்பார், சட்னி என்று சாப்பிட்டவர்களால் தேங்காய் எண்ணெயில் செய்த சமையலை சாப்பிட முடியவில்லை.

எப்படியோ கொறித்து விட்டு குளிக்க பக்கத்தில் ஒரு அருவிக்கு சென்றோம். பக்கத்திலேயே உள்ளது என்று கூட்டி சென்றார்கள் ஆனால் ஒரு மணி நேரம் பயணம், அதுக்கு அப்புறமாவது அருவி வந்ததா என்றால் இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அருவியின் அறிகுறி தென்படவே இல்லை. அருவிக்கு செல்ல மேலும் இரண்டு மூன்று கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கோள்ள வேண்டும். காலையில் சரியாக சாப்பிடாமல் வேற சென்றதில் கோபம் வர அரை மணி நேரம் கழித்து கதவை திறந்தார் காவலாளி. சரி என்று நடந்தால் குரங்கு தொல்லை வேறு நான்கு கால் குரங்குடன் இரண்டு கால் குரங்குகளும் சேர்ந்து அங்கிருந்த ஆடவர்கள் எங்களை பார்த்து தெறித்து ஒட, எங்களுக்கு பாவமாகி போனது. 
ஒரு வழியாக அருவியை கண்டுபிடித்து குளிக்க சென்றால் எங்களுக்கு ஐய்யோ என்றானது. ஏன்னு கேக்குறீங்களா? அது அருவியா என்றிருந்தது எங்களுக்கு. நம்ம குற்றால அருவியின் அருமை அங்கே சென்றபிறகு தான் தெரிந்தது. நம்ம ஊர் செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவிகளில் கூட தண்ணீர் வெள்ளியை உருக்கியது போல கொட்டும். அங்கே அங்காங்கே ஷவரில் கொட்டுவது போல இருந்தது. காலையில் அவசரமாக நான் எழுப்பிய என் தோழி என்னை பார்த்தாலே ஒரு பார்வை,அப்பப்பா சொல்ல முடியாது. அவளிடம் சில அர்ச்சனைகளை வாங்கி கொண்டு எங்கள் கல்லூரி முதல்வர், தாளாளர் அவர்களையும் திட்டி தீர்த்து விட்டு  அங்கேயே குளித்து விட்டு கிளம்பினோம். அப்பொழுது மணி மூன்றை கடந்திருந்தது. குட்டி அருவியில் குளித்தது காலையில் சரியாக சாப்பிடாதது எல்லாம் சேர்ந்து வயிற்றை கிள்ள நாங்கள் எல்லாம் டேய் சோறு எப்படா போடுவீங்க? என்று வாய்விட்டே கேட்டு விட்டோம். அதே போல் ஒரு மணி நேர பயணம் சரி சாப்பிட தான் கூட்டி செல்கிறார்கள் என்று பார்த்தால் பேருந்து நின்ற இடம் ஒரு தேயிலை தோட்டம். எங்களோடு வந்த சில வானரங்கள் மட்டும் படம் எடுக்க சென்று விட நானும் என் தோழிகள் சிலரும் வெளியே நின்று விட, எழு மணியளவில் மறுபடியும் பயணம்.

ஹோட்டலை அடைந்ததும் நானும் என் தோழியும் அவர்கள் நடத்தும் ரெஸ்டாரென்ட்க்கு சென்றோம். அங்கே காபியும் பிஸ்கெட்யும் சுவைத்து விட்டு அறைக்கு சென்றால் என் மற்றொரு தோழி அரை போதையில் உளறி கொண்டு இருந்தாள். (தெரியாமல் நடந்தது தான், தண்ணீர் என்று நினைத்து வோட்காவை விழுங்கி விட்டிருந்தால், நாங்கள் அருவிக்கு சென்ற இடத்தில் யாரோ ஒரு அறிவாளி எங்கள் உடைமையின் அருகில் அவனின் பாட்டிலை வைக்க, நாங்கள் எடுத்து வந்த தண்ணீர் பாட்டில் என்று ஒரு மிடறு குடித்து விட்டாள்) எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளோ கண்டபடி கத்தி கொண்டிருந்தாள் பக்கத்து அறையில் வேற துறை மாணவர்கள். விசியம் வெளியே தெரிந்தால் அவ்வளவு தான் என்று அவளை கட்டுபடுத்த முயன்றோம், ஆனால் எங்கள் முயற்சி நெடுநேரம் பயனளிக்கவில்லை. நண்பர்களுக்குள் பட்ட பெயர் வைத்து கொள்வது எல்லா இடத்திலும் நடக்கும் ஒன்று. அதில் நாங்களும் விதிவிலக்கல்ல.

என் அருமை தோழி சிறிது குண்டாக இருப்பால் அதனால் அவள் பெயர் ரைனோ, தள்ளாடியவளின் பெயர் பழம், எனக்கெல்லாம் பட்ட பெயர் இல்லீங்க..அந்த பழம் என்ற பெயர் கொண்ட என் தோழிக்கு ரைனோ மீது அன்று ஏனோ அலாதியான பாசம் பெருக்கெடுத்து ஓடியது. இரவு நெடு நேரம் வரையில் அவளையே அழைத்து கொண்டும் அவளுடன் தான் உறங்குவேன் என்றும் அவள் அடித்த லூட்டியில் எங்கள் அறையில் இருந்தவர்களுடன் நானும் கப் சிப் என்றானோம்.

அன்றைய நாள் சிறிது கோபம், சிறது கலாட்டா என்று கழிய மறுநாள் பொழுது ரைனோவும் நானும் மற்றும் அறையில் இருந்த என் மற்ற தோழிகளும் தள்ளியடிய தோழிக்கு அர்ச்சனைகளை வாரி வழங்கி கொண்டிருந்தோம். அடுத்த இடத்திற்கு செல்ல அழைக்கவே அதை அப்படியே விட்டுவிட்டு உணவருந்த சென்றோம். அன்று காலை உணவு கொஞ்சம் சாப்பிடலாம் என்று இருந்தது. சரி இத விட்டா இவங்க சோறு போட மாட்டாங்க கஷ்டப்பட்டு உள்ள தள்ளிட்டோம்.

அதுக்கப்புறம் எப்பவும் போல பயணம் ஆரம்பமானது. 
அப்பொழுது நாங்கள் சென்ற இடத்தின் பெயர் வியூ பாயிண்ட். நாங்களெல்லாம் பெருசா எதிர்பார்த்து போனோம். அங்க போனதும் தான் தெரிஞ்சது நடுரோட்டில் நிற்க வைச்சி இதோ பாருங்கன்னு ஒரு இடத்தை சுட்டி காட்டினாங்க நாங்களும் ஆர்வமா பார்த்தோம், கடைசியில அந்த ஊர்ல ரோடு போட்ட அழக கூட்டிக்கிட்டு போய் காட்டினாங்க. காலங்காத்தால எழுப்பி லோங்கு லோங்குனு டிராவல் பண்ணி வந்தா இப்படி ரோட காண்பிச்சி ஏமாத்தினா கோபம் வருமா? வராதா? நீங்களே சொல்லுங்க. அங்கிருந்து கிளம்பி நாங்கள் அங்கிருந்த நகர வீதிகளில் பயணமானோம், வேற என்ன பண்றது ஆனா நம்ம சென்னை மாதிரி ஒண்ணு சொல்லிக்கிறா மாதிரி இல்ல. கேரளா போனேனு சொல்லிக்க ஆளுக்கு ஒரு கேரளா சாரி வாங்கிட்டு மறுபடியும் தூங்க போயாச்சி. 


மறுநாள் கொச்சியை நோக்கி பயணமானோம். உருப்படியாக கூட்டி சென்ற இடம் வீகா லேண்ட். அங்கே சென்றது தான் மறக்க முடியாத அனுபவம். அனைத்து ரைடுகளிலும் என் தோழி ரைனோவை கூட்டிக்கொண்டு போனேன். அதில் முக்கியமானது டண்டர் பால்.. அவள் வர மாட்டேன் என்று பிடிவாதம் செய்தாள். நானோ நீ வந்தே ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக கூட்டி சென்று விட்டேன். 


ரைனோ, “இங்க பாருடீ இது இவ்வளவு உயரம் இருக்கு. உன்ன நம்பி என் வீட்ல என்ன அனுப்பி வச்சா நீ என்ன உயிரோட அனுப்ப மாட்ட போல.. எனக்கு ஏதாவது ஆச்சி ஆவியா வந்து தொல்லை பண்ணுவேன் பாத்துக்கோ. 
நான்,” மச்சி, கவலைப்படாதே எப்படியும் நீ கீழே விழும் போதே என்னையும் இழுத்துகிட்டு தான் போவ ஏன்னா நீ அவ்வளவு நல்லவ என்றதும் அவள் மூக்கு கண்ணாடியை தாண்டி கோபம் கொப்பளித்தது. 


பாதியில் சென்று உயரத்தில் நிறுத்தினார்கள். நான் அவளை கண் திறந்து பார்க்க சொன்னேன். 


ரைனோ, “முடியாது, இது இப்ப ரொம்ப உயரத்துல இருக்கும். எனக்கு பயமா இருக்கு. 


நான்,” அந்த அளவுக்கு உயரமா இல்லடீ கண்ண திற. 
அவள் கண்ணை திறக்கவே இல்லை. பின்னர் சற்று உயரத்தில் அதாவது உச்சியில் நிறுத்தினார்கள். அங்கிருந்து கொச்சியை முழுவதும் பார்க்கலாம். 


நான், “இப்ப கண்ண திறந்து பாருடீ ரைனோ
ரைனோ, “பாதியில் இருந்த போது கண் திறக்காதவள் உச்சியில் இருந்த போது பார்த்து விட்டாள் கீழே இறங்கும் வரையில் என் கையை விடவே இல்லை.அவ்வளவு தான் தரை இறங்கியதும், பாவி நான் என்ன பாவம் பண்ணேன் உனக்கு என்ன வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போய் சேர்ப்பீயா மாட்டியா? மவளே இனி இங்க வா இந்த ரைடு க்கு வானு ஏதாவது பேசுன நான் பொல்லாதவளாயிடுவேன் என்றாள். எனக்கு அவள் சொன்ன விதம் சிரிப்பு தான் வந்தது. என்னை திட்டி விட்டு எனக்காக சாப்பிட வாங்க சென்றாள். இப்படியாக மூன்று நாட்கள் கழிய வீகா லேண்டிலிருத்து பட்டம் வாங்குமாறு இருந்த ஒரு கரடி பொம்மையை வாங்கி வந்தோம். இன்றும் அந்த சுற்றுலாவின் நினைவாக பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறேன். 


அப்பறம் என்ன டூர் முடிஞ்சி போச்சி. எங்கள் ஊர் ஏரி பார்த்து பேசாம இங்கயே இருந்து இருக்கலாம் என்ற பெருமூச்சோடு அவரவர் வீட்டை அடைந்தோம். 
இதுதாங்க என்னுடைய பயண கதை.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.. 

  • சஹானா ஹரீஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ‘ஊரார்’ – 06சாவியின் ‘ஊரார்’ – 06

6 குமாருவின் கையில் ஒரு விளையாட்டுத் துப்பாக்கி இருந்தது. அதில் ‘கேப்பு’களை வைத்து ‘டப்டப்’பென்று சுட்டுக்கொண்டிருந்தான். அவன், “கொள்ளைக்காரங்க எதிரிலே வந்தா இதாலேயே சுட்டுடுவேன்” என்று வீரம் பேசினான். “இது ஏதுடா துப்பாக்கி?” “மாமா சேலம் போய் வந்தாரே, அப்ப வாங்கிட்டு