💓”இது நினைவுகளின் திருவிழா!”💓
பொதுவா ஒரு டூரிஸ்ட் கைடோட வேலை என்னன்னு உங்களுக்கே தெரியும். அந்த இடத்தைப் பற்றிய கம்ப்ளீட் டேட்டா பேஸ்-அ நம்ம கிட்ட கொடுக்குறதும் இல்லாம.. கூகுளையே மிஞ்சுற ஒரு நடமாடும் மேப்-ஆ மாறி நம்மளோட ‘ஹாப்பி பேக்கேஜ்’-ஆ கூடவே வருவாங்க!
ஆனா தமிழ் ஃபிக்ஷன் தளம் அதுக்கும் ஒரு படி மேல போய்.. உலகின் பல இடங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை மக்களுக்குக் கொடுக்க நினைச்சது மட்டுமல்லாம.. அந்தந்த இடங்கள்-ல பயணப்பட்டவர்கள் சந்திச்ச அலாதி அனுபவங்களையும் சுக துக்கங்களையும் மக்கள் கிட்ட நேரடியாக் கொண்டு போய் சேர்க்க முடிவு பண்ணினாங்க!
அதன் பிரதிபலனே இங்கு பயணங்களின் கட்டுரைகளாக உங்கள் கண் முன் விரிய இருக்கிறது..
இப்போ நீங்க செய்ய வேண்டியதெல்லாம், ஒவ்வொரு இடத்தையும் எழுத்தின் வாயிலாக சுற்றிப் பார்த்து விட்டு, உங்கள் மனதை நிறைத்த படைப்புகளுக்கு மனமார்ந்த விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் அள்ளிக் கொடுங்க..
ஏன்னா.. வாசகர்களாகிய நீங்க தான் ‘நடுவர்கள்’ மக்களே! அதிக வாசிப்பு எண்ணிக்கையைக் கொண்ட படைப்புக்கே முதலிடம்!
உங்களுக்கான வழித்தடங்களின் பட்டியல் இதோ..
உங்களைப் போலவே நாங்களும் இங்கு ஆவலுடன்.. ஏனெனில் மக்கள் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பல்லவா?!
“பயணங்கள் முடிவதில்லை போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி 15 ஆகஸ்ட் 2019”
பயணங்கள் முடிவதில்லை போட்டி முடிவுகள் !
பயணங்கள் என்றாலே அதற்கு ஒரு முடிவு உண்டு! ஆனாலும் நீங்காமல் மனதோடு இசைந்தாடும் பயணத்தின் நினைவலைகள் என்றும் ஓய்வதே இல்லை. ஆதலால் அதற்கு மகுடம் சூட்ட நாங்களும் விழைந்தோம். அப்படியான மறக்க முடியாத பயணங்கள் பற்றி எங்களோடு பகிர்ந்து கொண்ட எழுத்தாளர்கள் அனைவருக்கும் தமிழ் பிக்ஷன் சார்பாக நன்றிகள் பல.அதே சமயம் எங்களின் இந்த முயற்சியை சாத்தியமாக்கிய வாசகர்கள் அனைவருக்கும் பேரன்புகள்!
போட்டிக்கு வந்திருந்த படைப்புகள் அனைத்துமே எங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வேளையில் யாம் பெற்ற இன்பம் நீங்களும் பெற்றிடுக.
“ஜான்சி எங்களை கேரளா வரை உள்ள வாகமான் வரை அழைத்து சென்று இருக்கிறீர்கள். கட்டுரையில், நீங்கள் பனியின் மென்மை பற்றி கூறிய வரிகளில் சிலிர்த்து போனோம். உங்களின் உலாவில் நாங்களும் உலா வந்தோம் குழந்தைகளாய், மிக்க நன்றி.”
“ஊட்டிக்கு இனிமே போனா கௌரி முத்துகிருஷ்ணன் அவர்களின் ஞாபகம் வரவில்லை என்றால் தான் ஆச்சர்யம்! அவ்வளவு எதார்த்தமாய் நம்மை குன்னூர் வரை அழைத்துச் செல்கிறது அவர்களின் கட்டுரை”
“செங்கல்தேரி என்ற இடமே புதிதாய் தோன்றிய பட்சத்தில் வை. சிதம்பரம் அவர்களின் கட்டுரை நகைச்சுவையும் திகிலும் கலந்து நம்மை இருக்கையின் நுனியில் கட்டிப்போட்டது என்றே சொல்லலாம்”
“சிகிரியா இந்த பெயரே போதும் கட்டுரையை படிக்க ஆவல் வந்துடும் நமக்கு, இது வரை பார்க்காத ஒரு இடம். கோட்டையை பற்றிய வரலாற்று தகவல்களும் அருமை. உங்களின் பயண அனுபவத்தோடு எங்களுக்கு தகவல்களையும் சேர்த்து தந்து இருக்கீறிர்கள்.”
“கல்லூரி கால பயணங்கள் எல்லாருக்குமே ஸ்பெஷல் தான். அந்த வகையில வயநாடு வரைக்கும் நம்மையும் கூட்டிட்டு போய் அட்ராசிட்டி பண்ண வச்சது சஹானா அவர்களின் கட்டுரை”
“தீம் பார்க் போகணும்னு சின்ன வயசுல ஏங்கியிருக்கீங்களா? வாழ்க்கையின் அனுபவங்களையும் பயண அனுபவங்களோட சேர்த்து தொகுத்து கொடுத்துருக்காங்க மாதவ கிருஷ்ணன் அவர்கள்”
“கொடைக்கானல் லேக்கை சுற்றி நாமும் நம்மவரோடு கை கோர்த்து பயணிக்க வேண்டும் என்ற ஆசையை சுகன்யா பாலாஜி அவர்களின் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் எழும்”
“திருமதி சாரதா கிருஷ்ணனின் கிளி கொஞ்சும் குரலில் பாண்டிச்சேரியைப் பற்றியும் அங்கிருக்கும் சுற்றுலாத்தளம் மற்றும் பாண்டிபஜார் பற்றிக் கேட்கும் போது அடுத்த விடுமுறை பாண்டியில்தான் என்று சபதம் மேற்கொள்ளத் தோன்றும்”.
“அர்ச்சனா நித்யானந்தம் அவர்களின் கட்டுரை படிக்கும்போது சிறுவயதில் சென்ற சுற்றுப் பயணங்கள் எல்லாம் கண்முன் வந்து போனது. கிடைக்கும் இடத்தில் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு நம் வயதுடைய உறவினர்களோடு செல்லும் அந்த இன்பத்தை நானும் அவர்கள் எழுத்தில் அனுபவித்தேன்.”
“ஏஞ்சலின் டயானா அவர்களின் கட்டுரையில் நம்மை டெல்லி வரை அழைத்து சென்று இருக்கிறார். உங்களின் தந்தைக்கு உங்களோடு உள்ள புரிதலும், அன்பும் எங்களை நெகிழ செய்தது. பள்ளி பதின்வயது சுற்றலா என்றும் இனிமையானது தான். “
“திருமதி பொன்ஸ் செல்லம் அவர்களின் கட்டுரையும் அவ்வாறே. உள்ளூரில் சுற்றுலா செல்லும்போது எங்கள் வீட்டிலும் நாலு மணிக்கே அலாரம் வைத்து எழுந்து மதிய உணவுக்கு புளியோதரை, எலுமிச்சை சாதம், துவையல், உருளைக்கிழங்கு வறுவல் என்று என் அம்மா செய்த நினைவுகள் வந்து போனது. என் அப்பாவும் பெரியப்பாவும் வாழை இலையில் மடித்து செய்தித்தாளை சுற்றிப் பொட்டலம் கட்டுவார்கள்.”
“இது மாதிரி சாப்பாடுப் பொட்டலம் கட்டிக் கொள்ளாமல் சுற்றுலா சென்ற சேதுபதி விசுவநாதன், அவர்களின் கொடைக்கானல் பயணம் எப்படி இருந்தது என்பதை மிகவும் ரசிக்கும்படி சொன்னதுடன் மட்டுமல்லாமல் அவர்களது நண்பர்களின் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார். அவரது பயண அனுபவம் நாமும் அந்த நண்பர் குழாமில் இரு நபராக இணைந்த உணர்வைத் தந்தது. இருந்தாலும் பைக்கில் அவ்வளவு தூரம் பயணமா… மனது கொஞ்சம் பதை பதைக்கத்தான் செய்கிறது.”
“காயத்திரியின் பெங்களூர் மைசூர் பயணம் ஒரு குடும்பத்தலைவியாக எவ்வளவு பொறுப்புக்களை சுமக்க வேண்டும் என்பதை உணர்த்தியது. என் மகனுக்குப் பிடிக்கும், மகளுக்குப் பிடிக்கும் என்று குறிப்பிட்ட இடங்களில் அன்பான தாயைக் காண முடிந்தது. மைசூர்பாகை கண்டுபிடித்த மகானுபாவன் கடையைக் கண்டுபிடித்து சொன்னதுக்கு பிடியுங்கள் எங்களது நன்றிகளை காயத்திரி.”
“திருமதி ராஜி அவர்களின் அரகளூர் பக்திப் பயணம் பலருக்கும் உதவியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அஷ்ட பைரவர் சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டு சேலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மட்டுமின்றி விவரம் அறிந்தவர்கள் அனைவரும் பலன் பெறுவார்கள்.”
“கார்த்திகா அவர்களின் பயணக் கட்டுரை ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. மற்றவர்கள் இன்பச் சுற்றுலாவைப் பற்றி சொல்லியிருக்க அவர்களோ ஒரு மாற்றமாக துன்பச் சுற்றுலாவைப் பற்றி சுவைப்பட தெரிவித்திருந்தார்கள். அந்த ஆசிரியைகள் அதன் பின்னர் எத்தனையோ சுற்றுலா சென்றிருப்பார்கள். ஆனால் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய அவர்களே தங்களது சிறுபிள்ளைத் தனமான செய்கையால் டூரை பாழடித்தது வருத்தம் தருகிறது.”
இப்படி பலவகையான அனுபவங்களால் எங்களைத் திணற அடித்த வாசகர்களுக்கு பரிசினைத் தேர்ந்தெடுக்கும் பேரும் பொறுப்பில் எங்களுக்கு உதவியாக வந்த எழுத்தாளர். திருமதி நித்யா கார்த்திகன் அவர்களுக்கு தமிழ் பிக்ஷனின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உயிரைத் தொலைத்தேனே, விடிவெள்ளி, மயக்கும் மான்விழி, கனல் விழிக் காதல் என்று நித்யா தொடர்ந்து கொண்டிருக்கும் நித்யா அவர்களின் எழுத்துக்கு நானும் பரம விசிறி. தனது கதை, கவிதை மற்றும் சகாப்தம் தளத்தின் வேலைப் பளுவிற்கு மத்தியில் இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்தது மட்டுமின்றி அவர்களைக் கவர்ந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்ததற்கு நன்றி நித்யா.
அடுத்து பயணங்கள் முடிவதில்லை முடிவுகள் தான் வாங்க பார்ப்போம். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. நாங்க போட்டி ஆரம்பத்தில் சொன்னது போல, விதிமுறைகளின் படிதான் இந்த முடிவை எடுத்து இருக்கோம். உங்களுக்கும் எங்க முடிவில் மகிழ்ச்சி இருக்கும் நம்புறோம். எங்களுக்கு இந்த முடிவுகளை எடுக்க உதவிய திருமதி நித்யா கார்த்திகன்அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
முதல் பரிசு: ஜான்சி ராணி
இரண்டாம் பரிசு : கௌரி முத்து கிருஷ்ணன்.
மூன்றாம் பரிசு : வை. சிதம்பரம் மற்றும் யாழ் சத்யா அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
வெற்றிபெற்றவர்கள் மட்டுமின்றி போட்டியில் பங்கு பெற்ற அனைவரும் அன்புப் பரிசுகள் அனுப்பி வைக்கப்படும். அது பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்கிறோம்.
அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்கள்.
வாசகர்களே நீங்கள் இன்றி நாங்கள் இந்த பயணத்தை செய்து இருக்க முடியாது. உங்களோடு எங்களின் பயணம் என்றும் முடிவதில்லை. எங்களுக்கு என்றும் துணையாக இருக்கும் உங்களின் அன்புக்கு நன்றிகள் கோடி. கூடிய விரைவில் அடுத்த போட்டியோடு உங்களை சந்திக்க வருகிறோம். அதுவரை எங்களின் நாவல்களோடு இணைந்து இருங்கள்.
நன்றி
தமிழ் பிக்க்ஷன்.