Tamil Madhura பயணங்கள் முடிவதில்லை - 2019,Uncategorized கார்த்திகா அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரை

கார்த்திகா அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரை

சுற்றுலா என்றால் எத்தனையோ அனுபவங்கள் இருக்கும். எனக்கு ஸ்கூலில் நான் போன டூர் தான் நினைவு வருது. படிக்கும்போது எங்க ஸ்கூலில் வேளாங்கண்ணி, தஞ்சாவூர், திருச்சி டூர் கூட்டிட்டு போனாங்க. நானும் என் பிரெண்டுகளும் ஒரு மாசம் முன்னாடியே பணம் கட்டிட்டு எப்படா கூட்டிட்டு போங்கன்னு பெரிய எக்ஸ்பட்டேசன்ல  இருந்தோம். 
எங்க ஸ்கூல்ல பஸ் ஒன்னு அரேஞ்சு பண்ணி ராத்திரி பத்து மணிக்கு ஸ்கூல்ல எல்லாரும் இருக்கணும்னு எங்க டீச்சர் சொல்லிட்டாங்க. 


ரெண்டு நாள் முந்தி அப்பா அவசர வேலையா ஊருக்கு போய்ட்டாங்க. எங்கம்மா அதனால டூரை கான்சல் பண்ண சொல்லிட்டாங்க. நைட் வர முடியாத என் க்ளாஸ் பொண்ணுங்க சாய்ந்தரமே ஸ்கூல் வர்றதா சொல்ல நானும் அடம்பிடிச்சு சாய்ங்காலமே கிளம்பிட்டேன். 
எல்லாரும்  ரெண்டு நாளைக்கு சாப்பாடு கட்டி கொண்ட்டு  வந்தோம். எங்கம்மா புளிசாதம், இட்டிலி , முறுக்கு தந்திருந்தாங்க. மத்தவங்களும் அதே மாதிரி சாப்பாடுதான். ஸ்கூலில் பணம் கட்டினதால ஸ்நாக்ஸ் லட்டு, மிச்சர் பாக்கட் எல்லாம் பெரிய மூட்டைல வச்சு டீச்சர் எடுத்துட்டு வந்தாங்க. நாளைக்குத்தான் தருவோம்னு சொன்னதால நாங்க எங்க சாப்பாட்டை சாப்பிட்டோம். 


ரமா எடுத்துட்டு வந்த பால்கோவாவை யாருக்கும் தராம எங்க க்ரூப் மட்டும் முறுக்கோட சேத்து மொக்கினோம். 
ராத்திரி பஸ் வந்தது. இப்ப மாதிரி ஆம்னி பஸ் இல்லை. அரசாங்க பஸ் மாதிரி தான் இருக்கும். பெரிய பெரிய சீட். அதில் ஒரு சீட்டுக்கு நாலு பேர். நாங்க பிரெண்ட்ஸ் நாலு பேரும் பக்கத்தில் உக்காந்துகிட்டாம்.யாருக்கு ஜன்னல் சீட்டுன்னு சண்டை வேற. ராத்திரி உனக்கு, மறுநாள் மார்னிங் ரமாவுக்கு , நெஸ்ட் டே ராத்திரி உஷாவுக்கு, அடுத்து நித்யகு டர்ன் போட்டோம். 


அப்பத்தான் வில்லி எங்க க்ளாஸ் லீடர் விஜி வந்தா. அவ பயங்கர டெர்ரர். சைலன்ட்னு அவ சொன்னாலே சொர்ணாக்கா மாதிரி இருக்கும். நானும் என் பிரெண்டு ரமாவும் பயந்துடுவோம். கார்த்திகா, ரமா  எந்திருச்சு வாங்கன்னு கூட்டிட்டு போயி ட்ரைவர் சீட்டுக்குப் பின்னாடி இருந்த சீட்டில் உக்கார வச்சுட்டா.  வேற  ரெண்டு பொண்ணுங்களை எங்க சீட்டில் உக்கார வச்சா. 
கொஞ்ச நேரம் கழிச்சு எங்க பக்கத்தில் எங்க க்ளாஸ் டீச்சர் வந்து உக்காந்தாங்க. அவங்களுக்கு பக்கத்து சீட்டில் எங்க மாத்ஸ் டீச்சர். டூரில் பாட்டு பாடணும், விளையாடனும்னு பெரிய பிளான் போட்டுட்டு வந்த எங்களுக்கு அழுகையே வந்துடுச்சு. 


டீச்சர் டூர் முடிஞ்சதும் டெஸ்ட் வச்சிருக்கேன் நினைவிருக்கானு கேள்வி வேற கேட்டு மூட் ஆப் பண்ணிட்டாங்க. 


டூர் ஆரம்பிச்சது. எங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் பின்னாடி பாட்டு பாடிட்டு வர நாங்க வாயே திறக்காம உக்காந்திருந்தோம். அப்பப்ப பின்னாடி திரும்பி பார்த்தோம். பாவி விஜி பழி வாங்கிட்டா. 
மணி பன்னெண்டாகுது தூங்குங்கன்னு எங்க டீச்சர் திட்டுனாங்க நாங்க கண்ண மூடிக்கிட்டோம். எங்க மாத்ஸ் டீச்சர் அவங்க குழந்தையோட வந்திருந்தாங்க. குழந்தைக்கு பஸ் கம்பில தொட்டில் மாதிரி கட்டிவிட்டுட்டு அந்தப்பக்கம் இருந்த இன்னும் ரெண்டு பொண்ணுங்களை கூப்பிட்டு மாத்தி மாத்தி எதிலும் இடிச்சிடாம ஆட்டி விட சொல்ல அவங்களும் கம்பியை பிடிச்சுட்டு தொட்டிலை ஆட்டிவிட்டாங்க. நம்ம பரவால்லன்னு எங்களுக்கு பீல் ஆச்சு. விஜ்யலக்ஷ்மிக்கு நாலு பொண்ணுக சாபம்.


எப்படியோ தூங்கிட்டோம். காலைல வேளாங்கண்ணி போனோம். அங்க ஒரு இடத்தில கிளம்பி யூனிபார்ம்ல ஆமாம் யூநிபார்ம்தான் கியூல நின்னு மாதாவை கும்பிட்டோம். எங்க டூரை என்ஜாய் பண்ண விடாம செஞ்ச விஜிகு நல்ல பனிஷ்மென்ட் குடுக்க நாங்க ஆறு பேரும் கோரிக்கை வச்சுட்டு அப்பறம் டயத்தை வேஸ்ட் பண்ணாம விளையாண்டோம். திரும்பி பாத்தா விஜி எங்க எல்லாரையும் மேய்க்க சொல்லிட்டு டீச்சர் சாமி கும்மிட போய்ட்டாங்க. நாங்களாவது டீச்சர் கிட்ட உக்காந்திருந்தோம். இன்னொரு ரெண்டு பொண்ணுங்க மாத்ஸ் டீச்சர் குழந்தையை பாத்துக்க, பாட்டிலை கழுவித் தர்றதுன்னு கிட்டத்தட்ட அவங்களுக்கு எடுபிடியாளாவே மாறிட்டாங்க. 


நாங்க அவளை வெறுப்பேத்தவே நல்லா கடல் பக்கம் விளையாண்டோம். அப்பறம் சங்கு பொம்ம, பாசின்னு குட்டி குட்டியா வாங்கி ப்ரெசென்ட் பண்ணோம். அப்பறம் வீட்டிலிருந்து கொண்டு வந்த இட்டிலியை சாப்பிட்டுட்டு தஞ்சாவூருக்குக் கிளம்பினோம். 


பெரிய கோவிலை பாத்து அசந்து போனோம். எவ்வளவு பெரிய நந்தின்னு ஆச்சிரியம். கோவில் பத்தின சிறப்புகளை டீச்சர் சொன்னாங்க. கோபுர நிழல் தெரியாதுன்னு சொன்னது உண்மையான்னு பாத்தோம். கண்டுபிடிச்சோமா இல்லையான்னு நினைவில்லை. ஆனால் போயிட்டு வந்தது சந்தோஷமா இருந்தது. பார்க் எங்கேயோ கூட்டிட்டு போனாங்க. எல்லாரும் விளையாண்டோம். விஜியும் நைசா விளையாட வந்தா. அப்பறம் பஸ்ல ஏறினோம். விஜி ஸ்நாக்ஸ் பாகை தொலைச்சுட்டா. எங்களுக்கு லட்டு கிடைக்கல ஆனா விஜிக்கு நல்லா திட்டு கிடைச்சது. 


சண்டை அப்படியே அதிகமாகி இங்கிலிஷ் டீச்சர் பொறுப்பில்லாம தொலைச்சுட்டதா மாத்ஸ் டீச்சர் திட்ட, கைப்பிள்ளையை தூக்கிட்டு டூர் வந்துட்டு நீ எனக்கு பொருப்பைப் பத்திப் பேசுறியான்னு மாத்ஸ் டீச்சர் பதிலுக்குத் திட்ட, பெரிய சண்டையாச்சு. பஸ் ட்ரைவர் வந்து விலக்கிவிட்டுட்டு பஸ்ஸை எடுத்தார். 
ரெண்டு பேரும் மூஞ்சியைத் திருப்பிட்டு உக்கார, இங்கிலிஷ் டீச்சர் உங்களுக்கு நான் முக்கியமா இல்லை அவ முக்கியமானு கேட்டு எங்களை ஒரே டார்ச்சர். அது ஊருக்குப் போற வரைக்கும் தொடர்ந்தது தான் வேதனை. 
கடைசியா திருச்சிக்கு போனோம். அங்கிருந்த சர்ச்கு போயிட்டு எந்த சர்ச்னு நினைவு இல்லை.மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க. 


நைட் சாப்பிட்டுட்டு திருச்சி தெப்பக்குளத்தை கடை எல்லாம் பாத்துட்டு மாத்ஸ் அண்ட் இங்கிலிஷ் டீச்சர் சண்டையை பாத்துட்டே எல்லாரும் ஒரு வழியா வீடு  போனோம். இனிமே இந்த ஸ்கூல் முடிக்கிற வரை டூரே போக கூடாதுன்னு ஒரே முடிவோட. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜைஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை

வணக்கம் தோழமைகளே, எமது தளத்திற்கு சுதா பாலகுமாரன் அவர்கள் ‘ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை’ பற்றிய முழு விபரங்களையும் வழங்கியுள்ளார்.  படித்துப் பார்த்து நீங்களும் பயனடையுங்கள் தோழமைகளே. அன்புடன்  தமிழ் மதுரா.    Sri_Lakshmi_Kuberar_Pooja_and_Mantras_opt

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 39ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 39

39 – மனதை மாற்றிவிட்டாய் மறுநாள் அனைவரும் மகிழ்ச்சியோட விழிக்க ஆதியின் வீட்டிலே நிச்சயம் என்பதால் பரபரப்பாக அனைவரும் வேலை செய்துகொண்டு ஆதிக்காக காத்திருக்க ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தவன் அந்த சூழலை கண்டு முதலில் திகைக்க அவனின் கண் முன்னால்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 62ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 62

62 – மனதை மாற்றிவிட்டாய் அடுத்த நாள் சீமந்தம் என அரவிந்த் வீட்டாரும் முந்தைய நாளே இங்கேயே வந்து தங்கி வேலையில் இருக்க அனு நேராக வந்து திவியிடம் “நீ ஏன் இப்டி பண்ண திவி? நான் உன்னை என்ன பண்ணேன்.