Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 END

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 END

54 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

அபி உள்ளே நுழைய ஆதர்ஷ் “அண்ணி சக்ஸஸ்… அவன் ஓகே சொல்லிட்டான்..”

ருத்திரா “டேய் நான் எப்போ ஓகே சொன்னேன்.. நீயே முடிவு பண்ணிட்டேன்னு தான் சொல்லிட்டு இருந்தேன்..” என மீண்டும் ஆரம்பிக்க

கடுப்பான ஆதர்ஷ் “போடா நீயும் உன் முடிவும்” என்றவன் அபியிடம் திரும்பி “போயும் போயும் இவனை லவ் பண்ணீங்க பாரு…அண்ணி நீங்க கடைசிவரைக்கும் இப்பிடியே இருந்து அவ்வையார் தான் ஆகப்போறிங்க…”

ருத்திரா “டேய்..”

ஆதர்ஷ் “உன்கிட்ட நான் பேசவே இல்ல..அண்ணி நாம கிளம்பலாம்.. வேற பையன பாத்துக்கலாம் வாங்க..” என அபி இருவரையும் பாவமாக பார்க்க ஆதர்ஷ் “அண்ணி உங்களை என்ன பண்றதுனே தெரில. அக்ஸா திட்டுனதுல தப்பே இல்ல.. ஆள் பாத்து சூஸ் பண்ணவும் தெரில. பேசி சரி பண்ணவும் தெரில..இப்டியே இருந்தா நீங்க ரொம்ப கஷ்டம் தான் பட போறீங்க என அவனும் கூற

ருத்திரா “அடிவாங்க போற நீ.. என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க.. ஆளாளுக்கு அவளை திட்டிகிட்டு.. நீ முதல வெளிய போடா… பேசவே விடாம நந்தி மாதிரி நடுவுல நின்னுகிட்டு..” என

ஆதர்ஷ் அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு “ஏன் சொல்ல மாட்ட… ரொம்ப தான் இரண்டுபேரும் பண்றீங்க… நீயாச்சு அவங்களாச்சு.. பேசிட்டு நீயே அவங்கள வீட்டுக்கு அனுப்பிச்சு வெச்சிடு..நான் கிளம்புறேன்.. ” என அவன் வெளியே செல்ல

ருத்திரா “ஏய்.. இருந்து அவளை கூட்டிட்டு போடா..” என

ஆதர்ஷ் “நீதான் பெரிய இவனாச்சே.. எங்க இருந்தாலும் நினைச்சதை சாதிப்பேன்னு அக்ஸாகிட்ட பேசும்போது சவால் விட்டேல நீயே ஏதாவது அரேஞ் பண்ணி அவங்கள அனுப்பிச்சிடு..” என அவனும் கத்திகொண்டே சென்றுவிட இவன் சிரிக்க

அபி “அய்யயோ.. அவரு கோவிச்சிட்டு போறாரு.. நான் எப்படி போறது?”

ருத்திரா “அதெல்லாம் அவன் போகமாட்டான்…வெயிட் பண்ணுவான்..”

 

அவன் அமைதியாக இருக்க அபி “அப்போ அவரு சொன்னது உண்மையா?” என திக்கி திணறி கேட்க

ருத்திரா “அதான் அவன் தெளிவா சொல்லிட்டு போறானே … எல்லாமே நீங்க எல்லாருமே யோசிச்சு முடிவு பண்ணிட்டீங்க.. ”

அபி “ம்ச்.. உங்களுக்கு மனசார ஓகேவான்னு இப்போவரைக்கும் சொல்லவேயில்லையே..?” என அவள் முகம் சுருங்க அதை ரசித்தவன் “இப்போ வேண்டாம்னு சொன்னா என்ன பண்ணுவ அபி?” என அவள் சட்டென்று மீண்டுமா என விழித்தவள் அவன் சிரிக்கும் கண்களை கண்டதும் தலை குனிய ருத்திரா “என்னை பாரு.. இது சும்மா  டயலாக் பேசுறது, ரொமான்ஸ் பண்றது எல்லாமே ஒத்துவராது.. நான் நேரா கேக்கறேன்.. அக்ஸா ஆதர்ஷ் சொல்றது நிஜம்… என்னை கல்யாணம் பண்ணா உனக்கு நிறைய கேள்விகள் வரும் பின்னாடி பேச்சுகள் வரும்.. எல்லாமே நீ சமாளிக்க ரெடியா இருக்கனும்.. நான் கண்டிப்பா கூட இருப்பேன். இருந்தாலும் நீ தெளிவா இருந்தாதான் என்னால எதுன்னாலும் மனசார முடிவு பண்ணமுடியும்.. உனக்கு புரியும்னு நினைக்கிறேன்…. ஏன்னா அவங்க சொல்ராங்கனு எல்லாம் என்னால சரினு சொல்லமுடியாது.. எனக்கு தெரியும் உனக்கு என்னை பிடிக்கும்னு.. என்கூட இருந்தா நீ சந்தோஷமா இருப்பேன்னு நம்பிக்கை அவங்களுக்கு உனக்கு இருக்கு.. அத காப்பாத்த முடியும்னு நானும் நம்பறேன்..அந்த நம்பிக்கைல தான் நான் ஓகே சொல்றேன்..” என

அபியும் “கண்டிப்பா..உடனே நான் எல்லாத்தையும் மாத்திக்கறேன்னு சொல்லமுடியாது.. அதாவது எந்த விஷயம்னாலும் பயப்படுறது, பிரச்சனை இல்ல யாரு என்ன சொன்னாலும் அழுகிறது இந்த மாதிரி எல்லாம் இல்லாம கொஞ்சம் கொஞ்சமா வெளில வந்துடறேன்.. உங்களுக்கு ஏத்த மனைவியா உங்களுக்கு கண்டிப்பா ஒரு நல்ல துணையா பிரண்டா இருக்கணும்.. இருப்பேன்னு நம்புறேன்.. ”

ருத்திரா மெல்லிய புன்னகையுடன் “கிரேட்.. ஆனா அபி ப்ளீஸ் தப்பா எடுத்துகாத.. கல்யாணம் மட்டும் இப்போ வேண்டாம்..ஒன்னு இல்ல இரண்டு வருஷம் தள்ளி வெச்சுக்கலாம்…எனக்கு இப்போ நடக்குற எதுவுமே நான் எதிர்பார்த்து நடக்கல. என்னை மீறி எல்லாமே எனக்கு கிடைச்சிட்டு இருக்கு.. சோ உடனே எல்லாத்தையும் நான் ஏத்துக்கிற மனநிலைல இல்ல.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நீ எதுவும் பீல் பண்ணலையே? புரிஞ்சுப்பேனு நினைக்கிறேன்..” என அவன் முதன்முறையாக மிகவும் தணிந்து பேச அபி புன்னகையுடன் “எனக்கு வேணும்ங்கிறது உங்ககூட உடனே கல்யாணம் பண்ணிட்டு வாழ ஆரம்பிக்கணும்னு இல்ல. உங்க மனசுல நான் இருக்கேனா.. எனக்கான இடம்னு ஒன்னு இருக்கான்னு தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு.. அது உங்ககிட்ட இருந்தே கிடைச்ச பிறகு நான் ஏன் பீல் பண்ண போறேன்.. உங்ககூட தான் எனக்கு வாழ்க்கைனு ஆனதுக்கு அப்புறம் எனக்கென்ன கவலை.. ஒன்னு இரண்டு வருஷம் இல்ல நீங்க என்னை முழு மனசோட ஏத்துக்கறேன்னு சொன்னமாதிரி கல்யாணமும் நீங்க சொல்லும் போது வெச்சுக்கலாம்.. அதுவரைக்கும் நான் உங்கள தொந்தரவு பண்ணமாட்டேன்.. நீங்க தெளிவா மனசார எல்லாமே ஏத்துக்கிட்டு வெளில வர வரைக்கும் உங்களுக்காக காத்திட்டு இருக்கேன்.” என உறுதியாக கூற

ருத்திரா “ம்ம்… அது உனக்கு ஓகே.. ஆனா வீட்டுல எல்லாரும் என்ன சொல்லுவாங்க..?” என

அபி “அதுக்கு தான் அக்ஸா, ஆதர்ஷ் இருக்காங்களே..அவங்க பேசிப்பாங்க..” என

அவனும் “ஓ..அவ்ளோ நம்பிக்கையா? அது சரி, அதுக்கு முன்னாடி முதல என்னை கல்யாணம் பண்ணிக்க கேக்கும்போது உன் அம்மா அப்பா அக்கா எல்லாரும் ஒத்துக்கணுமே.. அது என்ன பண்றது?” என

அபி “அது எல்லாம் ஆதர்ஷ் ஏற்கனவே பேசி கன்வின்ஸ் பண்ணி சம்மதம் வாங்கிட்டாரு..” என

ருத்திரா விழி உயர்த்தி ஆச்சரியமாக பார்த்தான். அபி தொடர்ந்து நடந்தவை அனைத்தும் கூறிவிட்டு “என்னதான் இருந்தாலும் ஆதர்ஷ் உங்களுக்காக இவ்ளோவும் செய்வாருன்னு நான் நினைச்சுக்கூட பாக்கல. அவருக்கு உங்க மேல இருக்கறது பாசமா? மரியாதையா? பயமானு? எனக்கு எதுவுமே புரியல..” என

ருத்திரா புன்னகையுடன் “பாசம் கலந்த நம்பிக்கை.. நான் ஒரு விஷயம் பண்ணா அதுக்கு காரணம் இருக்கும்னு அவன் நம்புனது, என்னை பெத்தவங்க வளத்தவங்க பிரண்ட்ஸ்னு எல்லாரும் நான் ஒரு விஷயம் பண்ணத வெட்ச்சு என்னை ஜட்ஜ் பண்ணாங்க.. ஆனா அவன் மட்டும் தான் கடைசிவரைக்கும் என் மேல வெச்ச நம்பிக்கைய விடாம என்னை மதிச்சு என்கிட்ட பேசுனான்.. ஒருவேளை அது நடக்காம இருந்திருந்தா இன்னும் நான் எந்த அளவுக்கு மாறிருப்பேன்னு தெரில..”

அபி “உண்மை தான்.. இங்க வந்தபிறகு நிறையா தெரிஞ்சுகிட்டேன்.. உங்களுக்கு இப்போ நடக்குற நிறையா நல்ல விஷயங்கள், உங்க அம்மா உட்பட குடும்பத்துல மத்தவங்க உங்ககிட்ட பேசுறதுக்கு எல்லாமே அவர் தான் காரணம்ல.. உங்கள பாத்துதான் அவரு வளந்தாருன்னு எல்லார்கிட்டேயும் சொன்னாராம். அப்படியிருக்க ..” என அவள் முடிக்காமல் பார்க்க

ருத்திரா “ஏன் முடிக்காம விட்டுட்ட. நீ ஏன்டா இப்டி கொடுமை பண்ணேன்னு தானே கேக்கவந்த.. அடக்கி வெக்காத… எதுனாலும் கேட்டிடு.. இதுக்கு பதில் எனக்கு அவனுக்கு இருக்கற வித்தியாசம் தான்.. நான் பிரச்சனை வந்தா அதுக்கு காரணமானவங்கள அழிக்கணும்னு பாத்தேன்.. அவன் அந்த பிரச்சனைய மட்டும் தீக்கணும்னு பாத்திருக்கான்… எனக்கிருந்த அந்த ஈகோ அவன்கிட்ட இல்ல. என்னை பாத்து பயந்து ஒருத்தன் நான் சொல்றதுக்கு சரி சொல்றதுதான் கெத்துனு நான் நினைப்பேன்.. அவன் பாசமா பேசி தன்னை சுத்தி இருக்கறவங்கள சந்தோசமா தக்க வெச்சுப்பான்… என்னைவிட சின்னவன் அவன்கிட்ட நான் அடங்கி போறதான்னு ஈகோலையே வாழ்ந்திட்டேன்.. ”

அபி “ஒண்ணு சொல்லவா… நம்மள விட சின்னவங்க சொல்றத கேக்கிறதான்னு நினைச்சா கோபம் வரும் தான்.. ஆனா அது நம்ம பசங்களா நம்மல்ல ஒருத்தரா நம்மகிட்ட இருந்து வளந்தவங்களா நினைச்சா அதுக்கு பெருமை தானே படுவோம்… எப்படி அது கோபமா ஈகோ தூக்கிட்டு திரியணும்னு தோணும்?” என வினவ ருத்திரா கண்களில் மின்னலுடன் “உண்மை தான்.. அவனை நான் தம்பியா பாத்திருந்தா நாங்க இரண்டுபேருமே நல்லா இருந்திருப்போம் இரண்டு குடும்பத்தோடவும்… ஆனா இப்போ …ம்ச்… எனக்கு அந்த பக்குவம் இல்லை..சரி பாக்கலாம் இதுக்கு மேல ஈகோ குறையுதான்னு..” என்றான்.

அபி சிரித்துவிட்டு “சரி சரி… குறைஞ்சிடும்.. நான் கிளம்பவா? அவரு ரொம்ப நேரம் வெயிட் பண்ணி  எதுவும் நினச்சிக்க போறாரு..”. என

ருத்திரா “அதெல்லாம் அவன் ஏதும் நினைச்சுக்கமாட்டான். ஆனா கொஞ்சம் கிண்டல் பண்ணுவான் கண்டுக்காத.. ” என்றவன் “சரி போயிட்டு வா.. இருந்தாலும் பாவம் பையன் யாரும் கூட இல்லாம தனியா கேம் விளையாடிட்டு வெயிட் பண்ணிட்டு இருப்பான்.” என அனுப்பி வைத்தான்.

அபியும் சிரிப்புடன் வெளியே வந்து பார்க்க ஆதர்ஷ் காரின் மீது சாய்ந்து கேம் விளையாடிக்கொண்டிருக்க இவளுக்கு இன்னும் சிரிப்பு வந்தது.. அவனை அழைக்க “போலாமா அண்ணி?” என்றவன் அவள் ஏறியதும் “என்ன அண்ணி முகம் முழுக்க இவளோ சிரிப்பு…அவன் நாளைக்கே கல்யாணம் சொல்லிட்டானா அப்டி எல்லாம் பண்ற ஆள் இல்லையே அவன்.. ஒருவேளை ஓகே சொன்னதுக்கே இப்டி பூரிப்பா?” என அவன் கிண்டல் செய்ய

அபி ருத்திரா தன்னிடம் அவன் கோவிச்சுட்டு எல்லாம் போகமாட்டான்…கேம் விளையாடிட்டு இருப்பான்னு சொன்னதை சொல்லிவிட்டு நீங்க அதுவே பண்ணத பாத்ததும் சிரிப்பு வந்திடுச்சு என்றாள்.

அவனும் புன்னகைக்க அபி “நீங்க இரண்டுபேரும் ஒருத்தர பத்தி இன்னொருத்தர் இவளோ தெரிஞ்சுவெச்சிருக்கீங்க ஆனா ஏன் இப்டி இத்தனை நாள்?” என

ஆதர்ஷ் “சில கேள்விகளுக்கு நமக்கு வாழ்க்கைல விடை இருக்காது அண்ணி.. அது நடந்தே ஆகணும்னு இருந்திருக்கு.. ஆனா அதோட காரண காரியம் இதுதான்னு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.. தனி தனியா எல்லாருமே நல்லவங்க தான். என் அப்பா, அண்ணா, ருத்திரா அப்பா, அவன் எல்லாருமே அவங்க எண்ணத்தை பொறுத்தவரை தப்பு பண்ணலையேனு நினைச்சிட்டாங்க.. ஆனா தனக்குனு சுயநலமா யோசிச்சு பண்ண சில விஷயம் எல்லாரோட வாழ்க்கையும் மாத்திடுச்சு.. அவ்ளோதான்…இதுக்காக அவனை இன்னும் தண்டிச்சு சங்கடப்படுத்தி என்ன ஆகப்போகுது?.” என விரக்தியுடன் புன்னகை கலந்து சாதாரணமாக கூற அபி அதை ஒப்புக்கொண்டாள்.

பின் அவனும் ருத்திரா பேசியதை கேட்டுவிட்டு மகிழ்வுடன் “சரி இப்போதைக்கு அவன் ஓகே சொன்னானே… அதுவே பெரிய விஷயம் தான்.. விடுங்க அண்ணி.. சீக்கிரம் அவனே சொல்லுவான்… நாம எல்லாரும் அவன்கூட இருப்போம்.. சப்போர்ட்டா..பிரண்ட்ஸ் பேமிலினு உனக்கு இருக்குனு காட்டிட்டே இருப்போம்.. சீக்கிரம் மனசு மாறிடுவான்..” என தைரியம் கூறிவிட்டு அழைத்து சென்றான்.

மூன்று வருடங்கள் கழித்து அந்த வீட்டில் நிறைந்திருந்த சொந்தங்கள் தன்னை கவனித்தாலும் வரவேற்றாலும்  ருத்திராவின் கண்களோ யாரையோ தேட அனைவரும் அவன் தேடியதை கண்டு அபி அண்ணி இப்போ வந்திடுவாங்க.. உங்களுக்கு தானே 2நாள்ல கல்யாணம் ஏன் அவசரப்படுறீங்க என கிண்டல் செய்ய இறுதியாக அந்த பிஞ்சு பாலகனின் இடத்தில் நிலை கொண்டது. அக்ஸா ஆதர்ஸின் ஒன்றரை வயது மகன் அஷ்வத் ரூபனிடம் சென்றவன் “டேய் பெரியப்பாகிட்ட வாங்க ..” என அவனும் உடனே இவனிடம் வந்து ஒட்டிக்கொள்ள அபி அக்ஸா முதற்கொண்டு அனைவர்க்கும் ஆச்சரியம் “என்ன சொன்னிங்க?” என மீண்டும் அவனிடம் வினவ

ருத்திரா “என்ன எல்லாம் அப்டி பாக்குறீங்க… தம்பி பையன் என்னை பெரியப்பானு தானே கூப்பிடனும்..?” என அவன் சாதாரணமாக வினவ அனைவரும் ஆச்சரியம் நீங்காமல் நின்றனர். வருடங்கள் கடந்தாலும் ஆதர்ஷ் அவனுக்காக அனைத்தும் செய்தாலும் ஏனோ அவனை தம்பி என அவனும் கூறியது இல்லை. ஆதர்ஸையும் அண்ணா என கூற ஒப்புக்கொண்டது இல்லை.. அது அனைவர்க்கும் ஒரு நெருடல் என்றே கூறலாம்.. ஆனால் இன்று ஆதர்சின் பிறந்தநாள்.. ஆனால் அதற்காக என கூறாமல் தேதி மட்டும் குறிப்பிட்டு இன்று தான் வெளியே வரவேண்டுமென கேட்டு வந்தான். அதன் பிறகு எப்போது வேண்டுமானாலும் திருமணம் வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டான். அனைவரும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர். ஆனால் அவன் வந்ததும் ரூபனிடம் சென்று பேசியது அதேபோல தன்னை பெரியப்பா என அழைக்க சொன்னது எல்லாம் யாரும் எதிர்பாரா ஒன்று. இதுவரை அவனின் புகைப்படம் கூட ருத்திரா கேட்டு பார்த்ததில்லை.. வீட்டில் இருந்து யார் சென்றாலும் ஆதர்ஷ் பையன் எப்படி இருக்கான்னு தான் கேப்பான். ஆதர்ஷ் சென்றாலும் உன் பையன் நல்லா இருக்கானா அவ்ளோதான். அப்படியிருக்க அங்கே இருந்த மூன்று குழந்தைகளில் வாசு பிரியா மகன், விக்ரம் சஞ்சு மகன், ரூபன் என மூவரும் 3 மாதம் 6 மாத வயது வேறுபாடு தான் என இருக்க அவன் முதலில் வந்ததும் சரியாக குழந்தையை அடையாளம் கண்டுகொண்டு அவனிடம் சென்றது உறவு முறை கூறி அவனை அழைக்கச்சொன்னது என அனைவரும் விழிவிரிய பார்க்க பின்னால் வந்த ஆதர்ஸை கண்டவன் அவனிடம் சென்று “சரியோ தப்போ இந்த மாதிரி உன்னோட ஒரு பிறந்தநாள்ல தான் உன்னை மட்டுமே எல்லாரும் பெருசா நினைக்கிறாங்கனு நானா முடிவு பண்ணி உன்னை என்கிட்ட இருந்து விலக்கி வெக்கணும்னு நினச்சேன்.. உன் மேல கோபப்பட்டேன்.. அதான் இத்தனை வருஷம் கழிச்சு அதேநாள்ல இனிமேல் ஒரு அண்ணனா இருக்கணும் நடந்துக்கணும்னு ஆசைப்படுறேன். அவன் கையில் ஒரு பிரெஸ்ட்லெட்டை கட்டிவிட்டான். இது நான் ஸ்கூல் படிக்கும்போது போட்டு இருந்தது. நீ சின்ன பையனா இருந்தபோது உனக்கும் இது மாதிரி வேணும்னு என்கிட்ட கேட்ட முததடவையா.. நான் அப்போ கத்தி உன்னை அனுப்பிச்சிட்டேன்.. உனக்கு அப்போவே அவளோ ரோசம்…ஆனா நீ இத வேற யார்கிட்டேயும் அதுக்கப்புறம் கேக்கல.. எந்த பிரெஸ்ட்லெட் போட்டும் பாக்கல.. சோ இப்போ அதேமாதிரி ஒண்ணு உனக்கு தரணும்னு தோணுச்சு.. அதுவும் உன் பிறந்தநாள் அப்போ.. அதான்.. ஹாப்பி பர்த்டேடா ஆதர்ஷ்…என்றவன் அவனை தழுவிக்கொண்டான்.

ஆதர்ஷ்ம் கட்டிக்கொண்டு “தேங்க்ஸ்..” என்றான் மகிழ்ச்சியுடன்

ருத்திரா “எங்க அண்ணா வரல.. மறந்திடுச்சோ..” என வம்பிழுக்க

ஆதர்ஷ் “ஒருவேளை கூப்பிட்டு பிடிக்கலேன்னு அடிச்சிட்டா..?”

“ஆமா, நான் உன்னை திட்டுனா அடிச்சா நீ பயப்படுற ஆளு.. இத நான் நம்பணும் ஏண்டா..?” என்றவன் “இனிமேல் உனக்கு பிடிச்சமாதிரியே கூப்பிடு” என்றான்..

ஆதர்ஷும் சிரித்துக்கொண்டே “டன் அண்ணா..” என்றான் உடன் ரூபனும் பாதி புரிந்தும் புரியாமலும் “டன் பெய்யிப்பா ” என்று தன் மழலை மொழியில் கூறிவிட்டு “எனக்கு இது.. அப்பா எனக்கிது பெயிப்பபா எனக்கு எங்க? என ஆதர்ஷ்க்கு அளித்து பிரெஸ்ட்லெட் பார்த்து வினவ ருத்திரா “அப்பாவும் பையனும் ஒரேமாதிரி இருங்கடா.. ” என்றவன் அவனுக்கென வாங்கியதும் அணிவித்து விட்டான்.

மற்ற குழந்தைகளுக்கு செயின் வாங்கியிருந்தான்.

இன்னும் இரு நாளில் கல்யாணம் என அனைவரும் வேலையில் ஈடுபட ருத்திராவை சுற்றி குடும்பம் குழந்தைகள் என நிறைந்திருக்க தான் இழந்த அனைத்தையும் எண்ணி வருத்தம் கொண்டான். அதோடு யாரால் தன் மகிழ்ச்சியை இழந்ததாக எண்ணினானோ அந்த ஆதர்ஷினால் தான் தன் எண்ணியவற்றிக்கும்  அதிகமான சொந்தம் தன்னை சூழ்ந்திருக்க அவனை முழு மனதோடு தம்பியென ஏற்றுக்கொண்டான். தன் செயலுக்காக நித்தமும் வருத்தம் கொண்டான். இனிமேல் யாரையும் வருத்தப்படாமல் பார்த்துக்கொள்ளவும் முடிவெடுத்துக்கொண்டான். அனைவரின் ஆசியுடன் ருத்திரா அபியின் திருமணம் நிகழ்ந்தேற அக்ஸா ஆதர்ஸ் இருவரும் சற்று காத்தாட நடந்துவரலாம் என சென்றனர்.

அக்ஸா “ருத்திரா இவளோ மாறுவாருன்னு நினைக்கவேயில்லல ஆதவ்..? ரொம்ப சந்தோசமா இருந்தது..” என்றாள்..

ஆதர்ஷ் “ம்ம்.. எனக்கும் தான்டா.. அவன் என் மேல வெறுப்பு கோபம்னு சொன்னாலும் என்னோட ஒரு ஒரு விஷயத்தையும் அப்டி ஞாபகம் வெச்சிருக்கான்.. இவளோ பாசமா இருக்கறவன் எப்படி வாழ்ந்திருக்கான்லனு நினைக்கும் போது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு..” என

அவன் கையோடு கை கோர்த்தவள் “விடுங்க.. அதான் இப்போ எல்லாமே கடந்து வந்தாச்சே.. பீ ஹாப்பி மை டியர்..என் தர்ஷு எப்போவுமே சிரிச்சிட்டே இருக்கணும்….” என

அவளது அன்பில் தன்னை இழந்தவன் அவளது தோளை சுற்றி கையை போட்டுக்கொண்டவன் “கண்டிப்பாடா அன்னைக்கு நீ அவ்ளோ சொல்லி போயி பிரச்சனைய சரி பண்ணுங்கன்னு அனுப்பாம விட்டிருந்தா அம்மா அண்ணி இப்போவும் பீல் பண்ணிட்டு தான் இருந்திருப்பாங்க.. ருத்திரா தப்பு தான் பண்ணிருப்பான்.. பிஸ்னஸ் மொத்தமா போயிருக்கும்.. சொத்து அவங்ககிட்ட இல்ல வெளில யார்கிட்டேயாவது இருந்திருக்கும்.. ஏனோ தானோன்னு ஒரு வாழ்க்கை உங்ககூட இருக்கோம்னு ஒரு நிம்மதில வாழ்ந்திருப்பேன்.. ஆனா இப்போ நிம்மதியோட மனசு நிறைஞ்சு சந்தோஷமும் இருக்கு…நிம்மதிக்கும் சந்தோசத்துக்கும் இருக்கற வித்யாசத்தை புரியவெச்சு வாழவெச்சுட்ட…இது எல்லாத்துக்குமே என்கூட இருக்கற என் வாழ்க்கைல வந்த என் அச்சு பேபி தான் காரணம்.. லவ் யூ சோ மச் குட்டிமா” என அவனை தன்னுள் அடக்கி அணைத்துகொண்டான்…

 

********************************************  சுபம் ********************************************

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 25ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 25

25 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் “டேய் ஆதர்ஷ் கண்ணா கல்யாணம் பண்ணா தான் இந்த மாதிரி பெரிய பேமிலி எல்லாம் வரும்.” “அப்போ எனக்கு அண்ணாக்கு இன்னும் கல்யாணம் ஆகல. ஆனா பெரிய பேமிலி இருக்கே. அப்புறம் எதுக்கு?” “இல்லடா,

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 01யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 01

  கனவு – 01   தலவாக்கலை இலங்கை வங்கிக் கிளையின் அடகுப் பிரிவு. அச்சிறு அறையில் தனக்கு முன்னே அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கொடுத்த சங்கிலியை நகைகளின் தரம் பார்க்கும் உரைகல்லில் தேய்த்துக் கொண்டிருந்தாள் வைஷாலி.  

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 05அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 05

திகிலோடு கலந்த காதல் என்னை மேலும் அதிகமாக வதைக்கத் தொடங்கிற்று. எங்கள் குடும்பக் கஷ்டமோ அதிகரித்துக் கொண்டே வந்தது. வீட்டின் மேல் வாங்கியிருந்த கடனுக்கு வட்டி கட்டத் தவறி விட்டார் அப்பா. அவர் என்ன செய்வார்? இல்லாத குறைதான். வட்டியைச் செலுத்தும்படி