Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 53

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 53

53 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

அபியை கண்ட ருத்திரா “நீ இங்க…?”

அபி “நான் தான்… உங்களை தான்  பாக்க வந்தேன்.”

“நீ …..நீ இன்னும்?” என அவன் முடிக்காமல் திணற அவளே “நான் இன்னும் யாரையும் கல்யாணம் பண்ணிக்கல… ” என்றாள் வெடுக்கென்று..

“ஏன்?”

“ஏன்னு உங்களுக்கு தெரியாதா?.. சரி நானே சொல்றேன்.. நான் எதிர்பார்த்த சாரி தப்பா புரிஞ்சுகிட்டு எதிர்பார்த்த ஒருத்தருக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. அதுலையே பாதி வாழ்க்கையே போயிடிச்சு..” என்றதும் அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

அவனை பார்த்தவள் “நீங்க ஏன் பீல் பண்றீங்க?.. நான் யாரையும் தப்பு சொல்றதுக்கு இல்லை.. எனக்கு அப்டி ஒருத்தர பிடிக்கும்னே யாருக்கும் தெரியாது.. கொடுமையான விஷயம் அந்த சம்மந்தப்பட்ட ஆளுக்கே தெரியுமா? தெரியாதானு தான்.. அதுக்கே நான் பீல் பண்ணாம எதுவும் ஆகாம இன்னும் குத்துகல் மாதிரி தான் நிக்குறேன்…” என

ருத்திரா “உனக்கு எதுக்கு ஏதாவது ஆகணும்.. நீ என்ன தப்பு பண்ண?”

“அதான் சொன்னேனே அடுத்தவங்க மனசுல என்ன இருக்குனும் தெரியாம அவங்கள பத்தி முழுசாவும் புரியாம நானே என் இஷ்டத்துக்கு ஏதோ நினைச்சுகிட்டு பொய்யான எதிர்பார்ப்போட வாழ்ந்தது தப்பு தானே… எத்தனை பேருக்கு கஷ்டத்தை குடுத்திட்டேன். இது எல்லாம் தப்பு இல்லையா?” என அவள் கண்ணீர் வடிக்க

அவனால் எதுவும் செய்யமுடியாமல் “அதான் தப்புனு தெரியுதே…மனசார நீ செஞ்சதை தப்புனு உணர்ந்து அதுல இருந்து வெளில வரணும்னு நினைச்சிட்டியே..மறுபடியும் ஏன் தயங்குற?..உன் வாழ்க்கையை நீ நல்லபடியா அமைச்சிக்கோ..”

“நீங்களும் நீங்க செஞ்ச தப்பை உணர்ந்திட்டிங்க தானே.. அப்புறம் ஏன் வெளில வரதுக்கு நீங்க யோசிக்கிறீங்க?”

“அது நான் செஞ்ச தப்புக்கு தண்டனை கண்டிப்பா கிடைச்சே ஆகணும்… இப்போ உனக்கு நான் தப்பை உணர்ந்த மாதிரி தெரியலாம்…ஆனா இந்த கொஞ்ச நாள்ல முழுசா மனசு மாறிடிச்சுன்னு சொல்லமுடியாது… இத்தனை வருஷ பழக்கம், எண்ணம் மாத்துறது சாதாரண விஷயம் இல்ல. அதையும் மீறினா அது மத்தவங்களுக்கு ஆபத்தாயிடும்..”

“இதுவும் நான் செஞ்ச தப்புக்கு தண்டனை தான்.இத்தனை வருஷ அன்பை சட்டுனு விடசொன்னா எல்லாம் முடியாது.. அதையும் மீறி நான் ஒரு வாழ்க்கை அமைச்சிக்கணும்னா அது எனக்கு அசிங்கமாகிடும்…” என்றாள்..

கடுப்பான ருத்திரா “சொன்னா உனக்கு புரியாதா? நீ ஏன் வாழ்க்கைய அழிச்சுக்கணும்… வேற யாராவது கல்யாணம் பண்ணிக்கோ…”

அதை விட வேகமாக அபி “நான் உங்க பதில் தான் கேக்கவந்தேனே தவிர என் வாழ்க்கைல என்ன முடிவெடுக்கணும், யார்கூட வாழ்க்கையை அமைச்சுக்கணும்னு எல்லாம் உங்ககிட்ட கேக்கல.. அதுக்கான உரிமையோ, அதிகாரமோ இப்போ உங்ககிட்ட இல்லை.. அது ஞாபகம் இருக்கில்ல?” என

அவளின் இந்த கோபம், பேச்சுக்கு பேச்சு எதிர் பேச்சு இது எல்லாம் புதிதாக இருக்க அதோடு ருத்திரா தனக்காக பார்த்துக்கொண்டு வாழ்க்கையை வீணடிக்க போகிறாள் என்பதை எண்ண எண்ண கோபம் மட்டுப்பட மறுத்தது.. அதோடு அவள் தனக்கு அவள் மேல் உரிமை இல்ல என கூறியதும் அவளை விடாமல் முறைத்துக்கொண்டே இருந்தவன் “ஆதர்ஷ், அக்ஸா…” என கத்தினான்..

இருவரும் வெளியே நிற்கிறேன் என வந்தாலும் இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு தான் இருந்தனர் ருத்திரா நன்கு அறிவான்..

ஆதர்ஷ் இவனின் குரல் கேட்டதும் “நான் அப்போவே சொன்னேன்ல..கண்டுபுடிச்சிட்டான்..” என

அக்ஸா “இல்லை.. அபி அக்காவை பாத்ததுல நம்மள கண்டுக்கமாட்டாருன்னு நினச்சேன்…சொதப்பிடிச்சு…சரி வாங்க சமாளிப்போம்..” என இருவரும் வெகு சாதாரணமாக உள்ளே வர

ருத்திரா “அங்க என்ன சிரிப்பு.. ஏன் இங்கேயே நின்னு கேளுங்களேன்.. ஒளிஞ்சு நின்னு ஒட்டு கேக்கறீங்களா?”

ஆதர்ஷ் “ஆமா..நீ பெரிய ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கப்பாரு…இதை ஒளிஞ்சு நின்னு கேக்கறோம்னு வேற உனக்கு கோபம் வருது.. இதேமாதிரி வல்லு வல்லுனு கத்திட்டே தானே இருக்க? இது எங்க நின்னு கேட்டா என்ன?”

அக்ஸா சிரிக்க ருத்திரா “பண்றதெல்லாம் பண்ணிட்டு சிரிக்கிறிங்களா?”

அக்ஸா “எது நாங்க  என்ன பண்ணேன்?”

ஆதர்ஷ் “அதானே…நாங்கள கல்யாணத்தப்போ விடாம பாத்து ஒரு அப்பாவி பொண்ணு மனசை கலச்சது..?”

அக்ஸா “நாங்களா காலேஜ் ட்ரிப் முடிஞ்சு போற புள்ளை முன்னாடி ஹீரோ மாதிரி சீன் போட்டது?”

ஆதர்ஷ் “நாங்களா ஹெல்ப் பண்ணி சாப்பிட வெச்சு பத்திரமா வீட்டுல ட்ராப் பண்ணது?”

“ஆதவ் அந்த அட்வைஸ்..” என எடுத்துக்கொடுக்க

“ஆ… யாருக்குமே இல்லாம ஸ்பெஷல அட்வைஸ் எல்லாம் குடுத்து அக்கைறையா நடந்துக்கிட்டது?”

ருத்திரா இருவரையும் முறைக்க  அவர்களானால் கண்டுகொள்ளாமல் நிற்க இவனோ அபியை முறைத்துவிட்டு “எல்லாமே சொன்னியா?”

அவள் அமைதியாக நிற்க

ஆதர்ஷ் “டேய், அண்ணிய ஏன்டா மிரட்டுற.. பண்றது எல்லாம் நீ.. திட்டு வாங்குறது மட்டும் அவங்களா?”

“டேய்.. யாருடா அண்ணி உனக்கு.. இனிமேல் அப்டி கூப்பிட்டு பாரு..”

“இங்க பாருடா.. உன்னை அண்ணான்னு கூப்பிட வேணாம்னு சொன்ன.. அது உன் விருப்பம்..அவங்களை நான் அண்ணின்னு கூப்பிடக்கூடாதுன்னு நீ எதுக்குடா சொல்ற? உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?” என கத்த

ருத்திரா “வேணாண்டா வெளில வந்தேன்.. அடிதடிட் தான் நடக்கும்..”

“என்ன டா பூண்டி காட்டுறியா?”

அக்ஸா “அடச்ச… ஆ …. ஊன்னா இப்போ வேற அடிச்சுக்கோங்க… ஆதவ் ப்ளீஸ் நாம எதுக்கு வந்திருக்கோம்.. சும்மா இப்டி எல்லாம் சண்டை வேண்டாமே…” என கொஞ்சி கேட்க

அவனும் “ஓகே டா பேபி.. நான் இனி எதுவும் பேசல.. டேய் உனக்கு பயந்து எல்லாம் ஒண்ணுமில்ல.. என் அச்சு பேபிக்காக தான்.. ” என

ருத்திரா தலையில் அடித்துக்கொண்டு “அக்ஸா..என்ன இது எல்லாம்… நான் என்ன தப்பு பண்ணிருக்கேன்..எங்க இருக்கேனு உங்க எல்லாருக்குமே மறந்திடுச்சா? இது எனக்கான நான் பண்ண தப்புக்கான தண்டனை..”

“அதேதான் அபி அக்காவும் சொல்ராங்க.. உங்கள விரும்பின தப்புக்கு தண்டனையா தான் இந்த கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்ராங்க..” என அவன் முறைக்க

அக்ஸா பாவமாக பார்த்துவிட்டு “என்னை ஏன்பா முறைக்கிறீங்க? அக்கா தான் சொன்னாங்க.. வேணா கேட்டு பாருங்க..” என அபியை பார்க்க அவள் தலையை குனிந்து கொண்டு நிற்க

ருத்திரா “நீயாவது இவளுக்கு சொல்லு..” என கூற

அக்ஸா “ஆ… நான் வீட்டுலையே சொல்லிட்டேன். ஏன் இவங்க இந்த மாதிரி விஷயம்னு சொல்லும்போது இருந்தே சொல்லிட்டே தான் இருக்கேன்… எங்க முழுசா கேட்டாத்தானே..” என அவள் கூற

ருத்திரா “அவ பேசுனதுல இருந்தே நல்லா தெரியுது.. நீ தான் இவளுக்கு நிறையா சொல்லிருக்கேன்னு.. நான் சொல்ல சொன்னது அவளுக்கு இது லைப் வேணாம் இது எல்லாம் சரி பட்டு வராதுனு அட்வைஸ் பண்ண சொல்லி சொல்றேன்.. ஆனா நீ அவளை என்கிட்ட எப்படி பேசணும்னு தைரியமா ட்ரெயின் பண்ணி கூட்டிட்டு வந்தத பத்தி சொல்ற?” என அக்ஸா திரு திருவென விழித்துவிட்டு இருந்தாலும் விட்டுக்கொடுக்காமல்

“ஆமாமா… இவளோ பெரிய ஆள லவ் பண்ண தெரியுது… இத்தனை வருஷம் கல்யாணமே பண்ணிக்காம எல்லாருக்கும் டிமிக்கி குடுக்க தெரியுது… எல்லாரையும் சமாளிச்சு இன்னும் உங்கள தான் லவ் பண்றேனு சொல்ல தெரியுது…அப்போ எல்லாம் இல்லாத தைரியம் தான் உங்ககிட்ட பேசும்போது இல்லாம போகுதா?” என கிண்டலாக கேட்க

ருத்திரா “அதுதான் உண்மை… அவ மத்தவங்ககிட்ட அவ்ளோ தைரியமா பேசுனா இருந்தான்னா அது நான் இருந்த தைரியத்துல..ஆனா என்கிட்ட அவ இப்டி எதித்து எதித்து பேச மாட்டா..அந்த வேலைய பண்றது நீயும் அந்த அவனும் மட்டும் தான் என ஆதர்ஸை காட்டினான். இப்போ இவளுக்கு சொல்லிகுடுத்து கூட்டிட்டு வந்திருக்கிங்க.. எது பேசுனாலும் சொல்றதை கேட்காம எதித்து பேசுறது..” என முறைக்க அபி சற்று பயத்தில் கையை பிசைந்து கொண்டு நிற்க

இவன் அவளை திட்டவும் மனம் வராமல் “அக்ஸா… இது எல்லாம் சரி பட்டு வராது.. யோசிச்சு பாரு…” அபியை காட்டி “இவளே சொல்றா .. புரியாம தெரிஞ்சுக்காம ஆசைபட்டுட்டேன்னு… பின்னாடி பிரச்சனைனு தெரிய வரும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும்..”

அக்ஸா “கரெக்ட்… முதல தான் உங்களை பத்தி புரிஞ்சுக்காம விரும்பினாங்க.. இப்போ முழுசா தெரிஞ்சுக்கிட்டு தான் விரும்பறாங்க.. இதுக்கு மேல பிரச்சனைனு பின்னாடி தெரிய வர அளவுக்கு ஒண்ணுமில்ல. ஏற்கனவே எல்லாமே தெரிஞ்சது தான்.. எல்லாம் கஷ்டமும் அனுபவிச்சது தான். இதுக்குமேல நீங்க அதேமாதிரி போகாம இருக்க அவங்க தான் பொறுப்பெடுத்துக்கணும்..இல்லையா அந்த பாவத்துல அவங்களுக்கும் பங்கு இருக்கும்.”

ருத்திரா “அது தான் எதுக்கு இவளோ ரிஸ்க்… அவளுக்கும் ஞாபகம் வந்ததுன்னா …எல்லாரும் ஏத்துக்கறது….ஒரே குடும்பத்துல இருக்கறது  ஒத்து வராது….இது எல்லாம் வேணாம்னா தான் இப்போவே சொல்றேனே..?”

பொறுமை இழந்த அக்ஸா “கொஞ்சம் தெளிவா பேசுறிங்களா? இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை.. இவங்கள கல்யாணம் பண்ணிக்க எல்லாரும் அக்சப்ட் பண்ணுவாங்களா? இவங்க அக்கா வாழ்க்கையை அவங்க குடும்பத்தை அழிச்சவனோட இருக்கோம்னு உறுத்தல் இவங்களுக்கும் இருக்கும்னு சொல்றிங்களா?” என வெளிப்படையாக கேட்க அபி விம்மலுடன் கண்ணீர் வடிக்க ருத்திரா அவளை பாவமாக பார்க்க அக்ஸா “ம்ச்.. அபிக்கா இப்போ எதுக்கு அழுகறிங்க.. இது என்ன இப்போதான் உங்களுக்கு தெரியுமா? முததடவையாவா கேக்கறீங்க? இல்லேல… எப்படி ஒரு ஒரு தடவையும் இந்த மாதிரி யாரு பேசுனாலும் அழுகணும்னு இருக்கிங்களா?.. ” என திட்ட அவள் சற்று மிரள உடனே கண்களை துடைத்துக்கொண்டாள்.

ருத்திரா “அக்ஸா, இப்போ ஏன் நீ அவளை திட்ற?” என

அக்ஸா “நான் உங்ககிட்ட பேசல… அபிக்காகிட்ட பேசிட்டு இருக்கேன்… நீங்க வேணும்னு முடிவு பண்ணா அவங்களுக்கு வர முக்கியமா சொசைட்டி வெளி ஆளுங்ககிட்ட இருந்து வர பிரச்சனையா இந்த மாதிரி பேச்சை சமாளிக்க கத்துக்கணும்.. அந்த உறுத்தலை அவங்க முதல வெளில தூக்கி எறியனும். அத விட்டுட்டு அதையும் நான் நினச்சு நினச்சு பீல் பண்ணுவேன்.. இவனும் வேணும்னு ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் எல்லாம் சரி பட்டு வராது..இல்ல முடியாது நான் இப்டி தான் இருப்பேன்னு சொன்னிங்கன்னா இப்டியே அழுதிட்டே தனியாவே இருங்க… யாரையும் நீங்க கல்யாணமே பண்ண வேணாம் கா..” என்றாள் சற்று காட்டமாக

ருத்திரா “அக்ஸா.. கொஞ்சம் பொறுமையா இரு.. ஏன் இப்டி அவளை கத்துற?” என

அக்ஸா “ம்ச்.. நீங்க என்கிட்ட சொன்னிங்கல அவங்களுக்கு பிராக்டிகலா சொல்லி புரிய வெக்க சொல்லி…. அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன்…நீங்க கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?” என வெடுக்கென பேச

அவன் “இல்ல.. அதுக்காக ஏன் இவளோ ஹார்ஸ பேசணும்.. அவ ..”

அக்ஸா “எது இது ஹார்ஷாவா.. அது சரி.. ஆமா உங்க இரண்டுபேருக்கும் மத்தவங்க எல்லாரையும் பாத்தா எப்படி தெரியுது.. அபிக்கா ஒன்னும் குழந்தை இல்லை.. சில நேரம் நாம சில விஷயத்துல தெளிவான திடமான முடிவை எடுத்து தான் ஆகணும் அது கஷ்டமாவே இருந்தாலும்..

ஆனா இவங்க ஆசைப்படுறது நீங்க தான் அவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்.. ஆனா எல்லாரும் மனசார ஏத்துக்கணும்.. உங்களை கல்யாணம் பண்ணா சும்மா எவனாவது பின்னாடி பேசுறவனுங்க ஏதாவது பேச தான் செய்வாங்க… அத சமாளிக்க மேடம் ரெடி இல்ல.. யாரு என்ன சொன்னாலும் அழுகணும். சரி இவளோ பிரச்சனை எதுக்கு மா விட்றுனு சொன்னா அதுவும் முடியாது. நம்ம வீட்டு பொண்ணு வாழ்க்கை இப்டி ஆகிடிச்சேனு குடும்பத்துல எல்லாரும் நினச்சு நினச்சு பீல் பண்ணிட்டே இருக்கணும். சரி அவங்கள கன்வின்ஸ் பண்ணிக்கலாம்.. வாழப்போற நீங்களாவது சந்தோசமா இருந்தா சரினு நினச்சு பேச வந்தா நீங்க  அதுக்கு மேல ஓவரா பண்றீங்க..இது சரி வராது ஒத்து வராதுனு.. நீங்க இரண்டுபேரும் உங்க முடிவுல இருந்து கொஞ்சம் கூட மாறாம இப்டி பிடிவாதம் பண்ணுவீங்க… ஆனா சுத்தி இருக்கற நாங்க எல்லாம் கெஞ்சிட்டே இருக்கணுமா? எக்கேடோ கெட்டு போங்கன்னு எங்களுக்கு விட தெரியாதா? அக்கா இதுதான் உங்களுக்கு பஸ்ட் அண்ட் லாஸ்ட்… இன்னைக்கே எதுன்னாலும் டிசைட் பண்ணிட்டு வாங்க.. ஒன்னு இவரை சம்மதிக்க வெச்சு கல்யாணம் பண்ணிக்கோங்க… வீட்ல பேசி சமாளிக்கலாம்.. இல்லையா இந்த ஜென்மத்துல உங்க வாழ்க்கை அவ்ளோதான்னு முடிவு பண்ணிட்டு வீட்ல பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்கோங்க.. இதுக்கு மேல எல்லாம் உங்க போக்குல விட யாரும் தயாரா இல்ல.. இது எதுமே முடியாதா யார் முகத்துலையும் படாம எங்கேயாவது கண்காணாம போயி உங்க இஷ்டப்படி வாழுங்க. உங்கள நாங்க யாரும் கேள்வி கேட்கமாட்டோம்கா..” என கத்த

ருத்திரா எதுவும் கூற முடியாமல் அவளை அடக்கவும் முடியாமல் அபி திட்டு வாங்குவதை பொறுத்துக்கொள்ளவும் முடியாமல் இருக்க அக்ஸா கோபமாக கத்திவிட்டு ஒரு புறம் திரும்பிக்கொள்ள அபி மௌன கண்ணீர் வடிக்க இவன் கடுப்பில் நிற்க அங்கே தனக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை என்பது போல ஆதர்ஷ் மட்டும் மொபைலில் கேம் விளையாடி கொண்டிருக்க ருத்திரா “டேய், நீ என்னடா பண்ணிட்டு இருக்க..? என அவனிடம் கத்த

ஆதர்ஷ் அவனை விசித்திர ஜந்துவை பார்ப்பது போல பார்த்து விட்டு எழுந்து வந்தான் “டேய் உனக்கு என்ன தான் பிரச்சனை…”

“கேம் விளையாடுற வயசாடா உனக்கு?”

“டிஸ்டர்ப் பண்ண வேணாம் பேச வேணாம்னு சொல்லிட்டு இப்போ என்ன?.”

“இங்க என்ன நடந்திட்டு இருக்கு..சின்ன பசங்கங்கிறது சரியா தான் இருக்கு.. பிளான் பண்ணி ஏமாத்தி சத்தியம் வாங்கிட்டு இப்போ பிளாக் மைல் பண்ணிறிங்களா?”

“ஸீ.. நான் அப்போவே உன்னை அலெர்ட் பண்ணேன். யசோச்சு பதில் சொல்லுடான்னு.. நீதான் பெரிய மகாராஜா மாதிரி வாக்கு குடுத்திட்டு எங்களை குறை சொன்னா எப்படி?..

முடிவு எடுத்தா எடுத்தமாதிரி இருக்கணும் பாஸ்… நீ இப்போ எல்லாம் அப்டி இல்ல போலவே.. சொல்றது ஒண்ணு, செய்றது ஒண்ணு.. ஒரு தெளிவான முடிவு எடுக்கறதில்ல..நீ உன் நிதானத்துல இல்ல ருத்திரா..” என

அவனும் அதை ஒப்புக்கொண்டு ஆனால் அமைதியாக இருக்க

அக்ஸா பொறுமை இழந்தவள் “ஆதவ்.. என் பிரண்ட் என்னை பாக்க வரான்னு சொன்னேனே.. நான் போயி பாத்துட்டு நேரா வீட்டுக்கு வந்துடறேன்.. நீங்க எல்லாரும் பேசிட்டு வீட்டுக்கு போங்க.. அபிக்கா சொன்னது ஞாபகம் இருக்கில்ல.. முடிவு எடுக்காம வீட்டுக்கு வராதீங்க..” என்றவள் ருத்திராவை பார்த்து “கிளம்புறேன்.. பை..” என திரும்ப அவள் கதவு வரை சென்றதும் சுயநினைவிற்கு வந்தவன் “அக்ஸா பாத்து போ..” என்றான்.

அவளும் திரும்பி பார்த்து புன்னகையுடன் தலையசைக்க ஆதர்ஷ் கண்ணடித்தான்..

அபி “அக்ஸாவோட போன் பர்ஸ் என்கிட்ட இருக்கு.. விட்டுட்டு போய்ட்டா.. நான் குடுத்திட்டு வந்துடறேன்..” என அவள் வெளியே செல்ல ருத்திரா ஆதர்ஷ் மட்டுமே அங்கே இருந்தனர்.

ருத்திரா அமைதியாக நிற்க ஆதர்ஷ் “இன்னும் உனக்கு என்ன டா தயக்கம்.. முடிஞ்சு போன எதையும் நம்மளால மாத்தமுடியாது.. தப்பு பண்ணவங்களுக்கு தண்டனை கொடுக்கறது அவங்க திருந்தி இனி அந்த தப்பை பண்ணக்கூடாதுங்கிறதுக்கு தானே தவிர அவங்க வாழ்க்கையை அழிச்சிட்டு உணர்வுகளை தொலைச்சிட்டு வாழணும்னு இல்லை.. நீ தயங்குற விஷயங்கள் என்ன? சாந்தி அண்ணி வாழ்க்கை இப்டி ஆகிடுச்சு.. அதுக்கு காரணமான உன்கூட எப்படி அபி அண்ணி நிம்மதியா வாழ முடியும்னு தானே..

சாந்தி அண்ணிக்கு ரஞ்சித்கும் கல்யாணம் நடக்கபோகுது.. உடனே அவங்க மனசு மாறி வாழணும்னு நாம சொல்லமுடியாது. ஆனா பிரச்சனை இல்லாத ஒரு நிம்மதியான பாதுகாப்பான வாழ்க்கை அவங்களுக்கு கிடைச்சிருக்கு.. கொஞ்ச காலம் போச்சுன்னா அது சந்தோஷமான வாழ்கையாவும் மாறும் அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. அப்போ பெரியவங்க மத்தவங்க எல்லாரும் அதை அது போக்குல ஏத்துக்குவாங்க.

ஆனா அப்போவும் அபி அண்ணி வாழ்க்கை இதேமாதிரி கேள்வி குறியா இருக்கறதா? இன்னும் சொல்லப்போனா ஒரு வேளை எல்லாரும் சந்தோசமா இருந்தாலும் அத அபி அண்ணிக்காகவும் உனக்காகவும் பாத்து வெளில காட்டிகாம தான் எல்லாரும் வாழணும். குடும்பத்துல இருக்கற 2 பேர் மட்டும் கஷ்டப்பட மீதி எல்லாரும் எப்படி சந்தோசமா இருக்க முடியும் சொல்லு. அந்த உறுத்தல் வாழ்க்கை முழுக்க எல்லாருக்கும் இருக்காதா?

அம்பிகா ஆண்ட்டி பத்தி யோசிச்சு பாத்தியா? அவங்க நியாயமா இருக்கணும்னு பாத்தாங்க தானே தவிர பபெத்த பிள்ளை அழிஞ்சு போகட்டும்னு என்னைக்காவது நினச்சிருப்பாங்களா? அவங்களோட ஒரே பையன் உனக்கு ஒரு வாழ்க்கை அமையணும்னு அவங்க ஆசைபடமாட்டாங்கனு சொல்லு.. அந்த கவலையே இல்லாம அவங்க வாழ்க்கையை முடிச்சுப்பாங்கனு சொல்லு பாக்கலாம்.. ” என அவன் அமைதியாக இருக்க

ஆதர்ஷ் “இது எல்லாம் நீ வெளில சொல்றது, மத்தவங்க யோசிக்கிறது … நீ அது எல்லாம் சமாளிச்சுடுவ….ஆனா உன்னோட தயக்கம் வேற.. நீ மத்தவங்க கூட இருக்கலாம்.. நானும் மத்தவங்க கூட இருக்கலாம்.. ஆனா நானும் நீயும் சேந்து இருக்கறது தான் சரியா வராது.. இங்க இருந்தா என்கூட இருக்க வேண்டியது வரும் திரும்ப இரண்டுபேருக்குமே பழசு எல்லாம் ஞாபகம் வரும் அதானே உன்னோட பெரிய தயக்கம்..?” என ருத்திரா அமைதியாக தலையசைக்க

“அதுக்கு நானே பதில் சொல்லிடறேன்..உன் மேல எனக்கு இப்போவும் கோபம் இருக்கு.. அது எப்போவும் போகாது.. ஆனா அது அந்த ஒரு விசயத்துல தான்.. மத்தபடி உன் மேல எனக்கிருக்கற நம்பிக்கை மரியாதையும் எப்போவுமே குறையாது.. அது வேற…” என அவன் இன்னும் தெளிவுறாமல் இருக்க

ஆதர்ஷ் பெருமூச்சுடன் “நானும் இங்க இருக்க போறதில்லைடா… சரியோ தப்போ நமக்குள்ள பிரச்சனை பண்ணி நம்ம வாழ்க்கைல நிறையா இழந்ததுக்கு காரணம் அந்த பிஸ்னஸ் சொத்து எல்லாம் தான். ஏனோ அதனாலையே பிடிக்காம போயிடிச்சு.. நியூம் போட்டிக்காக தான் அதை அபகரிக்கணும், அழிக்கணும்னு நினைச்சியே தவிர அதுல உனக்கு விரும்பம்  இல்லேனு எனக்கு தெரியும்.. ஒருவேளை நீயோ இல்ல நானோ திரும்ப அந்த பொறுப்பை எடுத்தா இன்னைக்கு இல்லாட்டியும் கண்டிப்பா பின்னாடி நமக்குள்ள பிரச்சனை வரலாம்.. அதனால தான் அதுல அது விக்ரம், வாசுகிட்ட குடுத்திட்டேன்.. நானும் ஊட்டி போய்டுவேன்.. அங்க தான் இருக்க போறேன்.. இது வேண்டாம்… நீயும் வெளில வந்தா பாரின் போயிட்டு ஏற்கனவே நீ பாத்த ஒர்க் பாரு..கொஞ்ச வருஷம் போகட்டும் அப்புறம் உனக்கு ஓகேனு தோணுச்சுனா திரும்ப இந்தியா வா.. எல்லார்கூடவும் இரு… நான் என்ன பண்ணாலும் இத்தனை வருஷம் அடலீஸ்ட் இவங்ககூடவாது இருந்தேன்.. ஆனா அதையும் நீ ரொம்ப மிஸ் பண்ணிட்ட.. உனக்கு அவங்ககூட இருக்கணும்னு தோணும்.. சந்தோசமா வந்து இரு.. நான் இங்க பக்கத்துல தானே இருக்கேன்.. எப்போவாது கூப்பிட்டா வர போறேன்.. அவ்ளோதான். சிம்பிள்.. இரண்டுபேரும் ரொம்ப ஒண்ணாவும் இருக்கவேணும்.. ரொம்ப தூரமும் வேண்டாம்.. என்ன ஏதுன்னு கேக்கற அளவுக்கு இருப்போம். அது தான் நமக்கு நம்மள சுத்தி இருக்கற எல்லாருக்கும் நல்லது..” என அவன் கூறிமுடிக்க

ருத்திரா புன்னகையுடன் “அதான் எல்லாமே யோசிச்சு நீயே முடிவு பண்ணிட்டியே? அப்புறம் என்ன கேள்வி?” என்றான்

ஆதர்ஷ் “ஆமா அப்டியே நீ நான் சொல்றத கேக்கற ஆள் தான் பாரு.” என்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 1கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 1

வணக்கம் தோழமைகளே! ‘காதல் யுத்தம்’ என்ற புதினத்தின் மூலம் நமது தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு.கணபதி அவர்களை வரவேற்கிறோம்.  கதையின் கதாநாயகன் விஷ்ணுவை வெறித்தனமாக விரும்பும் கவிதா, ஆனால் தான் கனவில் மட்டுமே தோன்றிக் கண்ணாமூச்சி காட்டும் கனவுக்கன்னியைத் தூரிகையில் சிறைபிடித்துக்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66

66 – மனதை மாற்றிவிட்டாய் அதிகாலையே எழுந்தவன் டாக்டர்க்கு கால் செய்தான். அவரிடம் விஷயத்தை கூற அவரை சென்று அழைத்துவந்தவன் வீட்டில் அனைவர்க்கும் இவன் படித்ததில் அவர்களுக்கு தேவைப்படுவதை அவள் மனநிலை பற்றி மட்டும் கூற முழுதாக கேட்டுக்கொண்ட டாக்டர் “ஓகே