Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 45

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 45

45 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

யாரும் எதுவும் கூறாமல் நகர்ந்துவிட பைரவி, அம்பிகா இருவரும் அழுதுகொண்டே இருக்க சாந்தி, தனம் என அனைவரும் சமாதானபடுத்த அவர்கள் புலம்பிக்கொண்டே இருந்தனர். அவரிடம் சென்ற அக்ஸா “அத்தை” என அழைக்க அம்பிகா “அம்மாடி அக்ஸா, நான் பேசாம இருந்தா என் பையன் மாறுவான்னு நினச்சு தான் அவனை முதல கண்டுக்காம விட்டேனே தவிர அவன் எங்கேடோ கெட்டு போகட்டும்னு எப்போவுமே நினைச்சதில்லமா.. எனக்கும் அக்காவுக்கும் ஆதர்ஷ், ருத்திரா, ஆனந்த் மூணு பேருமே எங்க புள்ளைங்கன்னு தான் வாழ்ந்தோம். ஒருத்தன் இல்லாமலே போய்ட்டான். ஒருத்தன் ஜெயிலுக்கு போய்ட்டான். ஒருத்தன் இப்டி எல்லாத்துக்கும் நாங்க எங்க பாசம் தான் அவங்க வாழ்க்கையே இப்டி மாறுனதுக்கு காரணம்னு சொல்லிட்டு போய்ட்டான். இந்தமாதிரி நாங்க எப்போவுமே யோசிக்கல. எங்க புள்ளைங்க அவங்க சந்தோசம் தான் எங்க வாழ்க்கைனு நினச்சு எல்லாமே பண்ணோம். அத கூட அவனுங்க புரிஞ்சுக்கலையா?” என

அக்ஸா “அத அவங்க புரிஞ்சுக்கிட்டதால தான் இவளோ வருசமும் உங்கள கஷ்டப்படுத்தக்கூடாதுனு நீங்க சொல்ற விஷயத்துக்கு அவங்க சரினு சொல்லிருக்காங்க அத்தை… எல்லா அம்மா அப்பாவும் பாசமா தான் இருக்கீங்க. அவங்கவங்க புள்ளைங்களுக்கு தான் பெஸ்ட்டா  எல்லாமே கிடைக்கணும்னு செயிரிங்க. அத எல்லாமே அவங்களுக்கு நல்லதா இருக்கான்னு பாக்குறீங்க சரி, ஆனா அது புடிச்சிருக்கா மனசார அந்த முடிவை அவங்க ஏத்துக்கிட்டாங்களான்னு யோசிக்கமாட்டேங்கிறீங்க. எங்க புள்ளைங்க பிரச்னையே இல்லாம வாழணும்னு நினச்சு உங்களுக்கே புரியாம அவங்கள கஷ்டப்படுத்திட்டு இருக்கீங்க. பிள்ளைங்களும் தான் ஆசைப்பட்டதை செய்யமுடியாம, உங்களுக்கு பிடிச்சதை மனசார ஏத்துக்கவும் முடியாம உங்ககிட்ட வேண்டாம்னு சொல்லி கஷ்டப்படுத்தவும் மனசில்லாம ஏதோ கடமைக்கினேன்னு எல்லாமே செய்ய வேண்டியதா இருக்கு. அது எவளோ காலத்துக்கு சரிவரும் சொல்லுங்க..” என அவர் மேலும் கண்ணீர் வடிக்க

பைரவி “அக்ஸா, நான் திரும்ப பிரச்சனைல மாட்டிகிவிங்களோனு பயத்துல தான்மா கோபமா பேசுனா நீங்க இனி அந்தமாதிரி செய்யமாட்டீங்க. மாறிடுவீங்கன்னு நினச்சு அப்டி பேசுனேன். ஆனா உன்னை இந்த குடும்பத்தை பிரிக்க வந்தவனு நான் என்னைக்குமே நினைச்சதில்லடா மா, அவன் என்னை புரிஞ்சுக்காம இப்டி பேசிட்டானே…”

அக்ஸா அவரது கண்ணீரை துடைத்துவிட்டு “அத்தை, அவரு உங்கள புரிஞ்சுக்காம பேசல. அதான் தெளிவா சொன்னாரே.. பேச்சுக்கு கூட சொல்லாதீங்க. அவருக்கு தெரியும் நீங்க பிளாக் மைல் பண்ணி இனி அத செய்யாம தடுக்க சும்மா தான் சொல்றிங்கனு. ஆனா அவரோட கவலையே அதுதான். வாழ்க்கைல எல்லா விஷயத்தையும் எமோஷனல பிளாக் மைல் பண்ணியே நாம அடையமுடியாதே. ஒருவேளை அந்த விஷயம் எதிர்பார்த்த மாதிரி நடந்தாலும் யாருக்காக அத பண்ணிங்களோ அவங்களே மனசு விட்டுட்டா என்ன பண்றது சொல்லுங்க. அத நீங்க கூப்பிட்டு உட்கார வெச்சு பேசலாமே. உங்க மனசுல இருக்கறத சொல்லிட்டு முடிவை அவங்க கையில விட்ருங்க. நீங்க ஒரு விஷயம் பண்ணனும்னு ஆர்டர் போடும்போதே செய்றவங்க, என்னை நம்பி என் அம்மா என்கிட்ட ஒரு விஷயம் சொல்லிருக்காங்க, கேக்கறாங்க. அவங்க இஷ்டப்படி பண்ணா இன்னும் அவங்க சந்தோசம் தான் படுவாங்கனு நினச்சு மனசார அத ஏத்துக்க பாப்பாங்க. அவரு இப்போவும் உங்கள மட்டும் குறை சொல்லல அத்தை… குடும்பத்துல வர பிரச்சனைகள்ல எல்லாருக்கும் பங்கு இருக்கும். குறைகள் எல்லார்கிட்டயும் தான் இருக்கு. அத நாம ஏத்துக்கிட்டு சேந்து எப்படி பிரச்சனைய சமாளிக்கணும்னு பாக்கறதை விட்டுட்டு உன்னால தான் வந்ததுனு மாத்தி மாத்தி திட்டிக்கறதுல என்ன இருக்கு. நம்ம வீட்ல நடந்த பல பிரச்சனைகள் ஒரே நாள்ல வந்தது இல்லை. ருத்திரா, ஆதவ் இவங்க இரண்டுபேர் அவங்களோட கோபத்தால மட்டும் வந்தது இல்லை. எல்லாருமே கொஞ்சம் கொஞ்சம் தப்பு பண்ணிருக்கும் போது கடைசியா தண்டனை ஒருத்தருக்கு மட்டும்னா எப்படி?. அந்த கோபம் தான் அவருக்கு. அதோட இன்னமும் நீங்க எல்லாரும் நீ இதை பண்ணா நான் இப்டி பண்ணுவேன்னு அவங்க உணர்ச்சிகளை அடக்க தான் பாக்கறீங்களே தவிர எந்த முடிவையும் மனசார ஏத்துக்கற மாதிரி பொறுமையா என்ன ஏதுனு கேட்கமாட்டேங்கிறீங்க. அந்த கோபத்துல தான் அவரு இப்டி கத்திட்டு போறாரு. என் பையன் காரணம் இல்லாம எதையும் செய்யமாட்டான், அவன் எத நினச்சு இத பண்ணான்னு நான் அவன்கிட்ட கேட்டுட்டு முடிவு பண்றேன்னு நீங்க சொல்லி ஒருதடவை அவர்கிட்ட பேசி கேட்டிருந்தா கூட அவர் பதில் சொல்லாம இருந்திருப்பாரா சொல்லுங்க.”

அம்பிகாவிடம் “ருத்திராவுக்கும் இருக்கற ஒரே உறவு அவரு அம்மா நீங்கதான். நீங்களும் அவரை யாரோ மாதிரி நடத்துனா அவரு மறுபடியும் பழையமாதிரி தானே மாறுவாரு. என ருத்திரா பேசியது அனைத்தும் கூறிவிட்டு நீங்க அவர்கிட்ட மனசுவிட்டு பேசுங்க.  இதுவரைக்கும் தப்பு பண்ணியிருந்தாலும் நமக்காக ஒருத்தர் உண்மையா ரிஸ்க் எடுக்கறாங்க, பீல் பண்ராங்க, நம்மள நம்புறாங்கனு ஒரு எண்ணம் நம்ம மனசுல இருந்ததுனா எந்த தப்பும் பண்றதுக்கு முன்னாடி ஒரு நிமிஷமாவது யோசிப்பாங்க. நீங்க அவர்கிட்ட பேசுனா இதுக்கு மேலையாவது பிரச்சனை வராம இருக்கும்னு தோணுது. ப்ளீஸ் அத்தை.யோசிச்சு முடிவு பண்ணுங்க… ஆனா கட்டாயப்படுத்தல. ” என அவள் எழுந்து சென்றுவிட்டாள்.

ஆதர்ஷ் அறைக்கு அம்பிகா, பைரவி, சாந்தி, தனம் அனைவரும் செல்ல அவனோ சன்னல் கம்பியை இறுக பற்றிக்கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவனை அழைத்து அமர சொல்லிவிட்டு பைரவி மன்னிப்பு கேட்க ஆதர்ஷ்க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. எழுந்து வந்து அவர் முன் மண்டியிட்டு “அம்மா, நீங்க மன்னிப்பு கேட்கறதுக்காகவோ இல்லை நீங்க பண்ண தப்புனால தான் வாழ்க்கை இப்டி ஆகிடிச்சுனு குறை சொல்லவோ  நான் அப்டி பேசலம்மா. பிரச்சனை நாங்க பண்றது, எங்க பக்கம் மட்டுமில்லனு சொல்றதுக்காக தான் அப்டி பேசுனேன். ஏன்னா நாங்க வருத்தப்பட்டா எங்களை விட அதிகமா இப்போவும் நீங்க எல்லாரும் தான் சங்கடப்படுவீங்க. அத பாத்து நாங்க மட்டும் சந்தோசமா இருப்போமா என்ன? அப்டி இருக்க எதுக்கு இந்த வீம்பு, வெறுப்பு கோபம் எல்லாம்?”

பைரவி “உண்மை தான் ஆதர்ஸ், எல்லாத்தையும் மறந்தாலும் என்னால கல்யாணிக்கு நடந்த கொடுமையை மறக்க முடில. ஆனா இன்னைக்கு நீ சொல்லும்போது தான் தோணுச்சு. ஒருவேளை அப்டி நான் பண்ணிருந்தா அவ உயிரோட நம்ம கூட ஏன் கொஞ்ச நாள்ல சந்தோஷமாவது குழந்தைங்களை வளத்திட்டு வாழ்ந்திருப்பா. அவளுக்கு பாதுகாப்பு தரணும்னு நினச்சேன். ஆனா அது கல்யாணத்துல இருந்து மட்டும் தான் கிடைக்கும்னு தப்பா யோசிச்சிட்டேன்.. அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் உன் அப்பாவும் என்கிட்ட தேவைக்கு மீறி பேசுனதில்லை. கல்யாணி எனக்கு வேணும்ங்கிறதா செஞ்சிட்டு கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போய்டுவா. முன்னாடி பாத்த அந்த சந்தோஷமான கல்யாணி எப்போவோ போய்ட்டா.. அவளுக்கு நடந்த சம்பவம், அதிர்ச்சினு நானும் விட்டுட்டேன். அவ வாழ்க்கையே இப்டி ஒண்ணுமில்லாம ஆகிடுச்சே..” என

சாந்தி “இல்லை அத்தை, நீங்க சங்கடப்படுவீங்கன்னு இவளோ நாள் நான் இத சொல்லல… கல்யாணி அத்தைக்கு இருந்த பெரிய கவலை உங்க வாழ்க்கைல அவங்க மூலமா பிரச்சனை வந்ததுன்னு தான். மாமா மேல அவங்க ரொம்ப மரியாதை வெச்சிருந்தாங்க. அவருக்கு உதவியா தான் இருக்க முடில ஆனா அவரோட மரியாதையை கெடுக்கற மாதிரி ஒரு விஷயம் பண்ண வேண்டியதா போயிடிச்சேன்னு தான் ரொம்ப வருத்தப்பட்டாங்க. அதுக்கு காரணமான எல்லா விஷயத்தையும் அவங்க விலக்கி வெச்சுட்டாங்க. அவங்க பொண்ணு சிந்து உட்பட. அவகிட்ட கூட அவங்களால சாதாரணமா பேசனதில்லை. இதுவே பல வருஷம் கழிச்சு சிந்து எப்போவோ ஒருதடவை என் அப்பா அம்மா இரண்டுபேருக்குமே என்னை பிடிக்கலையா ஏன் கண்டுக்கமாட்டேங்கிறாங்கனு அழுது புலம்புனா.. அப்போ மனசு தாங்காம நான் தான் கல்யாணி அத்தைகிட்ட சண்டை போட்டு திட்டிட்டேன். அப்போதான் அவங்க இந்தமாதிரினு சொல்லி ரொம்ப சங்கடப்பட்டாங்க. அவங்களோட வருத்தம் புரியாம எத்தனை பேரு எத்தனை பேச்சு ஆனா அதையெல்லாம் தாண்டி என்கிட்ட ‘நான் ஏதோ பாவம் பண்ணிருக்கேன் போல. அதான் இப்டி.. நான் இனிமேல் யாருமேலையும் பாசம் வெச்சு அவங்கள கஷ்டப்படுத்த விரும்பல. எனக்கு ஒரு உதவி பண்ணு, என் பொண்ணை பாத்துக்கோ. ஏதோ சூழ்நிலைல பாத்துக்க முடிலேன்னாலும் ஆதர்ஷ்கிட்ட விட்று அவளை. சிந்துவை அவன் பாத்துப்பான். என்ன கோபம் இருந்தாலும் மனுஷங்களா அவங்களோட உணர்ச்சிகளை அவன் மதிப்பான். தப்பே பண்ணாத அந்த சின்ன பொண்ண அவன் கண்டுக்காம விட்டுட்டு போகமாட்டான். நான் வளத்துன பையன் இப்போ அவன்கிட்ட கூட என்னால மனசார பேசமுடிலேனு நினைக்கும் போது தான் ரொம்ப வேதனையா இருக்கு. ஒருவேளை எனக்கு ஏதாவது ஆகிடிச்சுனா ஆதர்ஷ்க்கு எப்போவது என் மேல நம்பிக்கை வந்து என் சித்தி தப்பு பண்ணமாட்டாங்க, இருந்தும் அவங்க ஏன் இப்டி பண்ணாங்கன்னு கேட்டா அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லு. ஆனா அவனுக்கு இதுக்கு காரணமானவங்க யாருனு தெரிஞ்சா அவன் எனக்காக பேசுவான். அவங்களுக்கு தண்டனை வாங்கிக்குடுக்காம இருக்க மாட்டான். இங்க இருக்கற எல்லாருமே பாசம், பாதுகாப்பு, மானம், குடும்ப அந்தஸ்த்துன்னு பாக்கறாங்களே தவிர என் மனசை புரிஞ்சுக்கமாட்டேன்கிறாங்க.’ சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க. அதோட ஆதர்ஷ் உன்னை அவங்க ரொம்ப நம்புனாங்க. அத நீ காப்பாத்திட்ட..” என கூற  ஆதர்ஷ் கண் கலங்க அதை அடக்கினான்.

பைரவி, அம்பிகா கண்ணீர் வடிக்க “இதுக்கு மேல மன்னிப்பு கேட்டு ஏதும் மாறப்போறதில்லை. ஆனா இனிமேல் இந்த தப்பை பண்ணமாட்டோம் எங்களை மன்னிச்சுடு கண்ணா..தூரமா கூட இருந்திக்கறோம் …எங்களை வெறுத்திடமாட்டியே?” என ஆதர்ஷ் “மா, ஆண்ட்டி ” என இருவரையும் அணைத்துக்கொண்டு “முதல அழுகிறத நிப்பாட்டுங்க. இத்தனை வருஷம் பிரீயா விட்டது பத்தாதா? வெறுக்கறது, கோபம்னு எல்லாம் டயலாக் பேசி இன்னும் எஸ்கேப் ஆகலாம்னு பாக்கிறிங்களா? அதெல்லாம் எங்கேயும் விடமுடியாது. இனி எல்லாரும் ஒழுங்கா என்னை பாத்துக்கோங்க.” என அவன் மிரட்ட அனைவரும் சிரித்தனர்.

சாந்தி “ஆதர்ஷ், அப்புறம் அம்பிகா அத்தைக்கு இப்போ கிடைச்சிருக்கற இரண்டு பசங்களை என்ன பண்றதாம்?”

ஆதர்ஷ் புரியாமல் பார்க்க தனம் “வாசுவும், ரஞ்சித்தும் தான் சொல்றா அவ. இரண்டுபேரும் போட்டி போட்டு பாசத்தை பொழியறானுங்க.” என அவன் சிரிக்க

அம்பிகா “பாவம்பா, தாயில்லா புள்ளைங்க… ரொம்ப கஷ்டப்பட்டுட்டானுங்க.. அதான் நானும் அக்காவுமே எங்ககூடவே இருங்க நீங்களும் எங்களுக்கு பசங்க தான்னு சொல்லிட்டோம்.. ” என கூற

ஆதர்ஷ் “ஆண்ட்டி உங்ககிட்ட ஒண்ணு கேக்கவா?” என

அம்பிகா மெல்லிய புன்னகையுடன் ஆதர்ஷின் தலையை வருடிவிட்டவர் “ருத்திராகிட்ட நான் பேசுறேன்.” என்றாள் அவன் மனதை படித்தவர் போல.

அவனும் “தேங்க்ஸ் ஆண்ட்டி” என்றான்.

பின் அனைவரும் சகஜநிலைக்கு வந்ததும் சாந்தி, “எங்களை எல்லாம் எமோஷனல பேசி பிளாக் மைல் பண்ணாதிங்கனு சொன்ன.. கடைசில அக்ஸாவுக்காக நீயும் தானே எங்க எல்லாரையும் விட்டுட்டு போறேன்னு சொல்ற, அது மட்டும் சரியா? எங்களை விட அவ அவ்ளோ முக்கியமா போய்ட்டா? ம்ம்ம்..” என பெருமூச்சுடன் சொல்ல

அம்பிகாவும் “அதானே, அவ முக்கியம் தான், கஷ்டப்படுத்தகூடாது தான் . அதுக்காக சும்மா ஒரு வார்த்தை கூட சொல்லக்கூடாதுனு சொல்லுவ போலவே. குடும்பம்னா அப்போ அப்போ இந்தமாதிரி சண்டை பிரச்சனை இருக்கும் தான். அதுக்காக அவளை நாங்க அப்டியே விட்ருவோமா? நீ சொல்றத பாத்தா அவகிட்ட நாங்க பேசலாமா இல்லை அதுவும் கூடாதா?”

பைரவி சிரிப்புடன் “எல்லாரும் சும்மா இருங்க, அவனை வம்பிழுத்திட்டு என அதட்டியவர் ஆமாடா கண்ணா, நான் அக்ஸாவை என் பொண்ணா தான் பாக்கறேன். எப்போவுமே அவ இந்த குடும்பத்துல பிரச்சனை பண்ணுவான்னு நான் நினைச்சதே இல்ல. நினைக்கவும் மாட்டேன். அப்போ ஏதோ கோபத்துல நீங்க சொல்றத கேக்கலேன்னதும் அப்டி பேசிட்டேன். மத்தபடி அவளை நான் எதுவும் சொல்லமாட்டேன்டா. என்ன இருந்தாலும் நான் அப்டி பேசுனது தப்பு தான் அவகிட்டேயும் மன்னிப்பு கேட்டுட்டேன். நீயும் என்னை மன்னி..”

“அம்மா, என்ன இது எல்லாம். நீங்க இவளோ எல்லாம் சொல்லவே வேண்டாம். நீங்க ஏன் அப்டி சொன்னிங்கனு எனக்கு மட்டுமில்ல அவளுக்கும் புரியும். அதனால எங்க இரண்டுபேர்கிட்டேயும் நீங்க மன்னிப்பு கேட்கணும்னு அவசியமே இல்ல. என்ன இந்த விஷயமும் நீங்க என்னை அவளை வெச்சு பிளாக் பண்ணி தான் செய்ய வெக்கறீங்கன்னு நினைச்சதும் கொஞ்சம் கோபம் வந்திடுச்சு. அதான் அப்டி சொல்லிட்டேன். மத்தபடி உங்க மருமகளை என்னை பாத்துக்கறதா விட நீங்க நல்லா பாத்துக்குவீங்கன்னு எனக்கு தெரியும்.” என கண்ணம் கிள்ளி செல்லம் கொஞ்ச அவரும் சிரித்துவிட்டு “என்ன பண்றது, அவ மேல உனக்கு இருக்கிற அன்பு அக்கறை அவளுக்காக நீ எல்லாமே பாத்து பாத்து செய்றதுல ஏன் நீ அவளை பாக்கிறதுலையே அப்டி அப்பட்டமா தெரியுது. கண்டிப்பா நீ அவளுக்காக என்னவேணும்னாலும் செய்வேன்னு தோணுச்சு. அதான் நானும் அப்டி பேசிட்டேன், அவங்க அம்மா, அப்பா மாமானு அவ குடும்பத்துல இருக்கறவங்களும் அப்டி பேசிட்டாங்க. நீங்களே வேண்டாம்னு சொன்னாலும் என்னால அக்ஸாவை தவிர வேற யாரையும் மருமகளா ஏத்துக்க முடியாது, அவங்களும் உன்னை தவிர யாருக்கும் குடுக்கமாட்டாங்க.”

ஆதர்ஷ் சிரிக்க அம்பிகா “ரொம்ப பெருமையா இருக்கு ஆதர்ஷ். வந்த கொஞ்ச நாள்னாலும் அவ உன் வாழ்க்கைல எவ்ளோ முக்கியமானவளா மாறிட்டால?”

சாந்தி “அவளை எப்படி பாத்த? யாரு லவ் ப்ரொபோஸ் பண்ணது முதல?”

ஆதர்ஷ் புன்னகையுடன் “ப்ரொபோஸா?, அதெல்லாம் எங்களுக்கு உள்ள நடக்கவே இல்லை. ஆனா அப்டியே இரண்டுபேரும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம். வெளில சொல்லிகிட்டதே இல்லை. அப்டி பாத்தா நேத்து அவ ரொம்ப சந்தோஷத்துல இங்க எல்லாரும் இருக்கும் போது என்கிட்ட லவ் யூ ஆதவ்னு சொன்னதுதான் பஸ்ட்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77

77 – மனதை மாற்றிவிட்டாய் பாட்டி, ஈஸ்வரி, சந்திரா அனைவர்க்கும் மகிழ்ச்சி தாளவில்லை. ஈஸ்வரி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு அழத்துவங்க அனைவரும் அவரை சமாதானபடுத்தினர். பின் ஆதியும், திவியையும் அழைத்து திருஷ்டி சுற்றி போட்டுவிட்டு பட்டுப்புடவை வேஷ்டி கொடுத்து கட்ட சொல்லி