Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 43

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 43

43 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

ருத்திராவை பார்த்துவிட்டு ஆதர்ஷ், அக்சரா இருவரும் திரும்பி வண்டியில் வரும் வழியில் அக்சரா வேடிக்கை பார்த்துக்கொண்டே வர ஆதர்ஷ் அமைதியாக வந்தான்.

அக்ஸா “என் மேல கோபமா?” என

ஆதர்ஷ் புன்னகையுடன் “கோபப்பட இதுல என்ன இருக்கு சொல்லு. நான் கேட்டதுக்கு எல்லாமே நீ எப்போவுமே சரி சொல்லணும்னு நான் என்னைக்குக்மே எதிர்பார்த்ததில்லை. காரணம் இல்லாம சொல்லமாட்டேன்னு தெரியும் ருத்திராவும் தான்.. அதான் என்னவா இருக்கும்னு யோசிச்சிட்டு இருந்தேன்… உனக்கு எதுவும் அங்க கூட்டிட்டு போனதுல ப்ரோப்லேம் இல்லையே?”

அக்ஸா “ச்ச..ச்ச… அதெல்லாம்  இல்லை ரகு அண்ணா தான் பாவம் கத்திகிட்டே உட்காந்திருந்தாரு..” என ஆதர்ஷ் சிரித்திவிட்டு “ரொம்ப வருஷம் கழிச்சு மீட் பண்றோம். என்ன இருந்தாலும்  அவனும் எனக்கு ஒரு வகைல அண்ணா மாதிரி தான். அவனை எப்போவுமே நான் அவ்ளோ கெத்தா பாத்துட்டு அன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருந்து அவன் போகும்போது மூஞ்சியே இல்லை. என்னால அவனை அப்டி பாக்க முடில. அதான் அவன்கிட்ட பேசணும்னு நினச்சேன். நீ கேட்டதும் ஓகே சொல்லிட்டேன்..”

அக்ஸா “ம்ம்…அப்புறம், சார் அவரோட அண்ணாகூட பயங்கர டிஸ்கஷன் போல.. ரொம்ப நேரமா இரண்டுபேரும் பேசிட்டே இருந்திங்க.. நாங்க எல்லாரும் லஞ்ச் முடிச்சிட்டு வரலாமானு யோசிச்சிட்டு இருந்தோம்..” என கிண்டல் செய்ய

ஆதர்ஷ் “ஹா ஹா ஹா.. முடிச்சிட்டே வந்திருக்க வேண்டியதுதானே..எங்களை டிஸ்டர்ப் பண்றதுக்குன்னே அங்கேயே சுத்திகிட்டு இருந்திங்க எல்லாரும்.. கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லை..” என இவன் அவர்களை குறை கூற

அக்ஸா “அடப்பாவி, போனா போகட்டும் அடிச்சுக்காம பேசுனா சரினு விட்டுட்டு வந்தா எனக்கு மேனர்ஸ் இல்லையா? நானா வரேணு  சொன்னேன்… உங்களை அடுத்த டைம் எங்கேயாவது கூப்பிடுவீங்கள்ல அப்போ பாண்ட் பேப்பர்ல சைன் வாங்கிட்டு தான் வருவேன் பாருங்க.”

“இதுக்கு மேல எல்லாம் உன்கிட்ட யாரு கேட்க போற? என் பொண்டாட்டிய எனக்கு எப்போ தோணுதோ எங்க வேணும்னாலும் கூட்டிட்டு போவேன்.. அவசியம் இருந்தா தூக்கிட்டே போவேன். என்ன யாரு கேள்வி கேட்பா சொல்லு.. இன்க்லுடிங் யூ… அண்ட் அதுவுமில்லாம என் அண்ணா வேற முதல் தடவையா என்கிட்ட ஒண்ணு சொல்லிருக்கான்.. உன்ன பத்திரமா சந்தோசமா பாத்துக்கசொல்லி.. அதுக்காக வேற ஸ்பெஷல் எவெர்ட் போடணுமே..” என

அக்ஸா “அடடடடா…. உங்க அண்ணன் தம்பி தொல்லை தாங்கல.. இரண்டு பேரும் கொஞ்சம் ஓவரா தான் போறீங்க.. சண்டைன்னாலும் ஒரு எக்ஸ்ட்ரீம் தான் சமாதானம்னாலும் ஒரு எக்ஸ்ட்ரீம் தானா.. இந்த நடுவில இருக்கற பழக்கமே இல்லையா?”

ஆதர்ஷ் சிரிக்க அக்ஸாவும் உடன் சிரித்துவிட்டு “ஆனா அவரை உங்களுக்கு அவளோ பிடிக்கும், மதிக்கிறீங்க.. அண்ட் ரகு அண்ணா நடந்ததை எல்லாம் சொன்னாங்க…அவரும் உங்க மேல அவளோ நம்பிக்கை வெச்சிருக்காரு ஆனா ஏன் இத்தனை வருஷம் இரண்டுபேருமே அத வெளில காட்டிக்கல?”

ஆதர்ஷ் ஏதோ சொல்ல வர அக்ஸா “ஆ… நீங்க ஏன் காட்டிக்கலன்னு சொல்லுங்க.. ருத்திரா ஏன்னு நான் அவர்கிட்டேயே கேட்டுக்கறேன்..” என அவனும் சிரிப்புடன் “ஓகே… எனக்கு பெருசா பிரச்சனை எல்லாம் இல்லை. அவனையும் நான் அண்ணானு தான் சின்ன வயசுல கூப்பிடுவேன்.. விளையாட்டுல பேசுறதுலன்னு அவனை தான் பாலோ பண்ணுவேன். ஆனா அவன் கூப்பிட்டு சொல்லிடுவான்.. என்னை அண்ணானு எல்லாம் நீ கூப்பிடாத எனக்கு பிடிக்காதுன்னு அதேமாதிரி என்னை அவாய்ட் பண்ணுவான்.. சின்ன பையன்னாலும் எனக்கு கெஞ்சிட்டு இருக்கறது எல்லாம் பிடிக்காது. அப்புறம் அண்ணானு கூப்பிட்றத நிறுத்திட்டேன். அவன்கிட்டேயும் பேசுறத குறைச்சுக்கிட்டேன். அப்டியே போக போக என் லைப்ல அவன் இருந்தான் அப்டிங்கிறதே தெரியாம போயிடிச்சு.. ஆனா எனக்கு எப்போவுமே அவனை பிடிக்கும். ஏனோ சில நேரம் இந்தமாதிரி ரீசனே இல்லாம அவன் கத்துனா ஓவரா ரியாக்ட் பண்ணா தான் கோவம் வரும். கண்டுக்காம போய்டுவேன். வீட்ல ப்ரோப்லேம், ஹாஸ்டல் இதெல்லாம் வந்த அப்புறம் அவனை நான் பாக்கறதுக்கு வாய்ப்பே இல்லாம போயிடிச்சு.. ஆனா பிரச்சனைனு வர எந்த விஷயம்னாலும் ருத்திரா இருந்தா இத எப்படி யோசிப்பான்னு நினச்சு தான் பண்ணுவேன். கொஞ்ச நாள்ல  அப்டியே பழகிடிச்சு. ஆனா அவன் தானே அண்ணா கூப்பிடவேண்டாம்னு சொன்னான்.. சோ கூப்பிடக்கூடாதுனு அப்டியே பிக்ஸ் ஆகிடுச்சு.. இன்னைக்கு ருத்திராவும் ஆதர்ஷும் பேசியதை கூறிவிட்டு ஏனோ அவனை எனக்கு பழையபடி கூப்பிடணும்னு தோணுச்சு.. கூப்பிட்டேன்…ஆனா அவன் தான் வரமாட்டேன்னு சொல்லிட்டான்.” என கூற

அக்ஸா “ம்ம்ம்.. அதுக்கு இவளோ நேரம் நீங்க சொன்னதுலையே அதுக்கான பதில் இருக்கு ஆதவ். ருத்திரா சொன்னதுதான் ஒருத்தருக்கு அளவுக்கு மீறி, தகுதிக்கு திறமைக்கு மீறி ஒரு விஷயம் நாம குடுக்கறோம்ன அதோட மதிப்பு அவங்களுக்கு புரியாது.. அது எவ்ளோ உண்மையோ அதேமாதிரி தான் நாம செய்ற தப்புக்கு கொஞ்சம் கூட தண்டனை கிடைக்காம திருந்திட்டோம்னு வந்திட்டா முழுசா அது அங்க நடந்திருக்காது…. அந்த பழக்கம் வராது..ரொம்ப கஷ்டம் அது… யோசிச்சு பாருங்க, நம்ம கூட அவரு இந்த சமயத்துல வந்து இருந்தா இன்னும் அவரு அப்பா இறந்திட்டாருனு வலி அவரு மனசுல இருந்திட்டே இருக்கும்.. நாமளும் இப்டி இருந்திருப்போம்ல அதுக்கு காரணம் யாருனு கண்டிப்பா ஒரு கட்டத்துல மறுபடியும் யோசிக்கத்தோணும்.. எல்லாரும் மனுசங்க தானே.. சோ அந்த மாதிரி யோசிக்கறத நிறுத்தவோ மனச கண்ட்ரோல் பண்ணவோ உடனே எல்லாருக்கும் வராது.. இதே அவரு கொஞ்ச காலம் தனியா இருக்கட்டும்.. அவருக்கு எப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்தணும்னு யோசிச்சு யோசிச்சு பழக்கபடுத்தினரோ அத எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு இப்போ ரிலாக்ஸா இருக்கட்டும்.. மனசு அந்த கோபத்துல வெறுப்புல இருந்து வெளில கொஞ்சம் வர வர அமைதியாகும் போது நாம எல்லாரும் அவர்கூட இருக்கோம்னு அவருக்கு காட்டுனா போதும், அவருக்கு இந்த வாழ்க்கை இதுல ஒரு பிடிப்பு வந்து அவரு தப்பை முழுசா உணரணும்…. அப்போ கூப்பிட்டுக்கலாம்…இல்லை அவரே கேட்கட்டும். அப்போ பாத்துக்கலாம்.. நாம கஷ்டப்படாம கேட்காம ஆசைப்படாம கிடைக்கற எதுக்குமே முழு மதிப்பு நமக்கு குடுக்கமாட்டோம். அது வேலை, நமக்கு கிடைக்கற உதவி மட்டுமில்ல மன்னிப்பும் கூட தான். ஒரு பெர்ஸன்டேஜவது அதுல ஒரு குறை இருக்கும்… உங்க அப்பா அவரோட அப்பாவுக்கு கேட்காம எல்லாத்தையும் தூக்கி குடுத்து தப்பு பண்ணாரு.. நீங்க அவரு கொஞ்சம் வருத்தபட்டதும் அவருக்கு மன்னிப்பு குடுக்க தயாரா இருக்கீங்க.. அதைத்தான் அவரு சொன்னாரு.. நீயும் அதேதப்ப பண்றேன்னு..”

ஆதர்ஷ் “ஆனா அவன் தான் அவனோட தப்பை உணர்ந்திட்டானே.. அப்புறம் என்ன?”

அக்ஸா “ஆதவ், உங்களுக்கு எப்படி சொல்றது, சரி ஒரு ஸ்கூல் படிக்கற பையன் வீட்ல இருந்து ஒரு நாள் ஒரு 10 ரூபா திருடுறான்.. அவனுக்கு அதை எடுத்துட்டு போன கொஞ்ச நேரத்துலையே மனசு படபடனு தான் இருக்கும்.. ஆனா அன்னைக்கு அவன் மாட்டிக்கல.. சோ அவனுக்கு ஹப்பாடினு ஒரு நிம்மதி வந்திடும். அடுத்த தடவை எடுக்கணும்னு தோணும்போது மாட்டிக்குவோமானு முன்னாடியே அவனுக்கு தோணும்.. ஆனா லாஸ்ட் டைம் நாம தப்பு பண்ணி மாட்டிகலேல.. யாரும் கண்டுபுடிக்கமாட்டாங்கனு அவனே பெருமைய சொல்லிட்டு திரும்ப அதே தப்ப பண்ணுவான். இதே மாதிரி ஒரு அஞ்சாறு தடவை திருடுறான்னு வைங்க அவனுக்கு அது பிடிச்சுபோய்டும் பழகிடும்.. நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயம் சீக்கிரம் எடுத்துக்குவோம்.. ஆனா அந்த தடவை அவன் யாருகிட்டேயாவது மாட்டிக்கிறான், அந்த நேரத்துல அவனை ரொம்ப திட்டி அடிச்சு ரொம்ப ரூடா நடந்துக்கிட்டாலும் அவனுக்கு கோபம் வெறி அதிகமாகும் தான்.. திருடி பழகுனா பழக்கத்தை சட்டுனு விடவும் முடியாது.. அதேமாதிரி சரி தப்பு பண்ணிட்ட, இனிமேல் பண்ணாதேனு ஒண்ணுமே சொல்லாம மன்னிச்சு விட்டாலும் சரி எதுவும் சொல்லாலேனு நினைச்சிட்டு மறுபடியும் அதே தப்ப பண்ணவும் சான்ஸ் இருக்கு.. இது அவங்கவங்க குணத்தை பொறுத்து அதுக்கு தகுந்த மாதிரி தான் ஹாண்டில் பண்ணனும். இந்த விஷயத்துல அந்த பையனுக்கு திருடறது தப்புனு முன்னாடியே தெரியும், அவன் தெரிஞ்சும் தான் அத ஏதோ ஒரு காரணம் சொல்லி பண்ரான். ஏன் அவன் திட்டுவாங்கி அடிவாங்க போறான்னு அவனுக்கு தெரியவரும்போதே யோசிப்பான் ச்ச, இனிமேல் இந்த தப்ப பண்ணக்கூடாது.. மாட்டுனோம் அவ்ளோதான்னு. .. இந்த தடவை மட்டும் மாட்டிக்காம இருந்தா போதும்னு நினைப்பான்… ஆனா அதையும் தாண்டி அந்த தடவை தப்பிச்சிட்டா மறுபடியும் அதேதப்ப கொஞ்சம் யோசிச்சிட்டு பண்ணுவான்.. பண்ணாம இருக்கமாட்டான்.. சோ பிரச்சனை வரும் போது நாம மாட்டிக்கப்போறோம் இல்லை நாம எதையோ இழக்க போறோம்னு  எமோஷனலா யோசிக்கும்போது அந்தநேரத்துல நாம செஞ்ச தப்புக்கு வருத்தப்படுவோம் தான்.. பீல் பண்ணுவோம் தான்.. ஆனா அத நிரந்தரம் இல்லை… அது முழுசா அவங்க புரிஞ்சுகிட்டு திருந்தறதுக்கு மாறுறதுக்கு யாருக்குனாலும் டைம் ஆகும் ருத்திராவுக்கும் தான்…”

ஆதர்ஷ் “ம்ம்.. இருக்கலாம்.. எனக்கும் அந்த ஒரு கோபம் இருக்கு.. அவன் சொன்னதை அவனோட இடத்துல இருந்து பாத்தா எல்லாமே பிராக்ட்டிக்கலா ..ஏத்துக்கமுடியுது… அதனால ஏற்பட்ட இழப்பு, சித்திக்கு நடந்தது எல்லாம் நினைக்கும்போது இன்னமும் அவன் மேல கோபம் ரொம்பவே வருது எல்லார்மேலையும்… ” என அவன் ஸ்டிரிங்கை அழுத்தினான். அக்சரா “ஆதவ்..” என அழைக்க அவளிடம் திரும்பியவன் மெலிதாக புன்னகைத்துவிட்டு “கரெக்ட் தான்.. இதெல்லாம் யோசிக்கும் போது நானும் கூட என் கண்ட்ரோல அவனை இதேமாதிரி எல்லா நேரத்துலையும் விடுவேனான்னு  தெரில. அதுக்கு விலகி இருக்கறது நல்லதுதான்.” என்றவன் அடுத்து எதுவும் பேசாமல் சென்றான்.. அடுத்த சில நிமிடங்கள் அங்கே நிசப்தம் மட்டுமே இருந்தது.

வீட்டிற்கு வந்ததும் இருவரும் உள்ளே வரும்போதே பைரவி “ஆதர்ஷ் நில்லு, எங்க போயிட்டு வரீங்க?” என அவர் கேட்ட கேள்வியிலேயே அவர்களுக்கு தெளிவாக புரிந்தது ருத்திராவை பார்த்துவிட்டு வந்த விஷயம் அறிந்த பின்னரே இந்த கேள்வி என்று. அவன் வாசுவை பார்க்க அம்பிகா “அவனை ஏன்டா முறைக்குற? உன் அம்மா கேட்டதுக்கு முதல பதில் சொல்லு..”

ஆதர்ஷ் “நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்கவா கேக்கறீங்க? தெரிஞ்சுக்கிட்டு தானே கேக்கறீங்க..அதுக்கு என்ன பதில் சொல்றது?” என்றான் அவன் சாதாரணமாக கூற அம்பிகா “ஏன் ஆதர்ஷ் உனக்கு எங்ககிட்ட பதில் சொல்ல பிடிக்கலையா? இல்ல இவங்களுக்கு எல்லாம் எதுக்கு பதில் சொல்லணும்னு அலட்சியமா? நீயும் மாறிட்டேள்ல?” என வருத்தம் கொள்ள

பைரவி “அம்பிகா, விடு மா.. எல்லாம் வளந்துட்டானுங்க. அவங்க முடிவு பண்ணிட்டா அதைத்தானே பண்ணுவாங்க..நாம ஏன் எதுக்குனு கேக்க முடியுமா?” என விட்டெறியாக பேச பிரச்சனை திசை மாறுவதை உணர்ந்த அக்சரா “அட்ச்சோ அத்தை அப்டி எல்லாம் இல்லேங்க. நீங்க இரண்டுபேரும் ஏன் இப்டி எல்லாம் நினைக்கிறீங்க..” என முடிப்பதற்குள்

ஆதர்ஷ் “சாரா… நீ ஏன் இப்டி பதற… இப்போ இவங்க எல்லாரும் அப்டி என்ன பெரிய தப்பை கண்டுபுடிச்சிட்டாங்கனு இப்டி நிக்க வெச்சு கேள்வி கேட்டுட்டு இருக்காங்க.. நீ ரிலாக்ஸ இரு..” என்றவன் பிறரிடம் “ருத்திராவை பாத்திட்டு தான் வரோம். கேள்விக்கு பதில் கிடைச்சிடுச்சா.. வேற எதுவும் வேணாம்ல..?”  என்று கேட்க பைரவி தனம் மற்றும் ஜெயேந்திரனிடம் “பாத்திங்களா அக்கா, எப்படி பேசுறான்னு… இந்த வீட்டு சந்தோசத்தை அழிச்ச நம்ம எல்லாரையும் பிரிஞ்சிருக்க காரணமான ஒருத்தனை போயி நலம் விசாரிச்சிட்டு வந்திருக்கான். நீங்க சொன்னிங்களே அவன் அங்க போயிருக்க மாட்டான்..ஆதர்ஷ் தப்பு பண்ணவங்களை அப்டி எல்லாம் மன்னிக்க மாட்டான்னு. இப்போ என்ன சொல்றிங்க?”

தனம் சங்கடமாக உணர ஜெயேந்திரன் “என்ன ஆதர்ஷ் இது.. நீ இப்டி பண்ணுவேன்னு நாங்க எதிர்பாக்கலப்பா..”

அக்சராவின் அம்மா “சொல்றோம்னு தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை. இந்த வீட்ல இவளோ இழப்பு வரதுக்கு காரணம் அவன் தான். அப்டி ஒருத்தனை மன்னிக்கறது பாக்கிறது எல்லாம் தேவையா? அதுவும் அக்ஸாவையும் கூட்டிட்டு போயிருக்கிங்க?” என

அக்ஸா “அம்மா, அவரு என்ன கம்பெல் பண்ணி கூட்டிட்டு போகல. என் விருப்பத்தோட தான் கூட்டிட்டு போனாரு. இதுல அவரை மட்டும் தப்பு சொல்றதுல சரி இல்லைமா..”

பாலா “அக்ஸா நீ அமைதியா இரு.. அவரு உன்ன கட்டாயப்படுத்தாம இருக்கலாம்.. ஆனா அவரு தானே உன்னை கூட்டிட்டு போனாரு.. அது தப்பு தானே. இப்டி பிரச்சனை இருக்கற இடத்துக்கு ஏன் கூட்டிட்டு போகணும். புரிஞ்சுப்பீங்கனு நினைக்கிறேன். இனிமேல் இப்டி நடந்தா எங்க பொண்ண உங்ககூட அனுப்பவே யோசிக்கவேண்டியதா இருக்கும்.. ” என

அக்ஸா “மாமா.. கொஞ்சம் பொறுமையா இருங்க.. இப்போ ருத்திராவை பாத்துட்டு வந்ததால என்னாச்சு.. நீங்க இவளோ பேசுறதுக்கு இதுல என்ன இருக்கு?” என நிதானமாக கேட்க

அம்பிகா “என்ன பேசுற அக்ஸா நீ.. ஒரு கொலைகாரனை அதுவும் இந்த இரண்டு குடும்பத்தை இவளோ கஷ்டப்படுத்திருக்கான். அவனை ஏன் பாக்க போறிங்கனு கேட்க கூடாதா.. புள்ளைய பெத்தவங்க.. பயத்துல கேட்கத்தான் செய்வாங்க..” என கூற

அக்சரா “ஆனா அத்தை…”

ஆதர்ஷ் “சாரா…” என அவனை பார்த்தவள் அவன் வேண்டாம் என கண்ணசைக்க அவள் அமைதியாகிவிட மற்றவர்களை பார்த்தவன் கை கட்டிகொண்டு மேலே சொல்லுங்க என்பது போல பார்த்தான்.

அக்ஸாவின் மாமா நந்தகுமார் “பெத்த அம்மா அவங்களே இவளோ தூரம் அவனை விட்டு விலகி இருக்காங்க. அப்போவே அவனை பத்தி புரிஞ்சுக்க வேண்டாம்.. ”

“பெரியவங்க சொல்றதுல அர்த்தம் இருக்கும்.. வளந்துட்டா நமக்கு தான் எல்லாமே தெரியும்னு பண்ணக்கூடாது..”

“இனிமேல் இப்டி தான் உன் இஷ்டத்துக்கு பண்ணுவேன்னு நீ சொன்னா நாங்க வேணும்னா இந்த வீட்டை விட்டு போய்டறோம். இந்த மாதிரி அட்வைஸ் தொந்தரவே இருக்காது. உங்க இஷ்டப்படி நீங்க இருக்கலாம்.”

“எங்க பொண்ணுக்கு பிடிச்சதுனு மட்டுமில்ல நீங்களும் நல்ல பையன்னு தான் இந்த கல்யாணத்தை நாங்க ஏத்துக்கிட்டோம். எங்களுக்கு உங்ககிட்ட பிரச்சனை இல்லை. ஆனா அந்த ருத்திரா கூட நீங்க சொந்தம் அது இதுனு சொல்லிக்கிட்டு உறவாடுற மாதிரி இருந்தா எங்க பொண்ணை உங்களுக்கு தரதுக்கே நாங்க யோசிக்கவேண்டியது இருக்கும். எங்க பொண்ணு இவளோ நாள் பட்ட கஷ்டம் போதும். மறுபடியும் அவளை பிரச்சனை இருக்கற இடத்துல நாங்க விடுறதா இல்லை.” என ஜெயேந்திரன், பைரவி, அக்ஸாவின் குடும்பத்தினர் என்று ஆளாளுக்கு பேசினர்.

அதோட அக்ஸாவிடம் “அவன் தான் கூப்பிட்டான்னா உனக்கு என்னாச்சு அக்ஸா.. நீ சொல்றதுக்கு என்ன? நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க..” என  அம்பிகா வினவ

அக்ஸா “இல்லை அத்த, இப்போவும் இவரு மேல தப்பு இல்ல. அவசரப்பட்டு எல்லாம் கோபத்துல புரியாம பேசுறீங்க. கொஞ்சம் நாங்க சொல்…”என முடிப்பதற்குள் பேச இடமே கொடுக்காமல் பைரவி  “என்ன புரியாம பேசுறோமா? உன்கிட்ட அவன் சொன்னதும் நீ யோசிக்காம இருந்திருக்க மாட்ட. இவன் ருத்திராவை பாக்க போறான்னு சொன்னா இங்க யாருமே ஒத்துக்கமாட்டோம்னு அதோட பிரச்னை வரும்னு தெரிஞ்சும் நீ அவன்கூட போயிருக்க.. என்ன நினச்சு இப்டி பண்ணனு கேட்டா  நாங்க புரியாம பேசுறோமா? இப்போ உங்க குடும்பத்துல உன்னை தரதுக்கே யோசிக்கிற அளவுக்கு வந்தும் செஞ்ச விஷயத்தை நியாயப்படுத்துறல? எங்க குடும்பத்தை கெடுத்தவனுக்காக சப்போர்ட் பண்ண சொல்றியா? நாங்க யாருமே வேண்டாம்னா முன்னாடியே முடிவு பண்ணிட்டு தான் இத சப்போர்ட் பண்றியா?” என பைரவி வேறு கோணத்தில் எடுத்துக்கொண்டு அக்ஸாவை குறை சொல்ல

அனைவரும் செய்வதறியாது நிற்க அக்ஸா கோபமா வருத்தமா என சொல்லவொண்ணா நிலையில் ஆனால் அமைதியாக நிற்க ஆதர்ஷ் கோபத்தில் கையில் வைத்திருந்த கார் சாவியை சட்டென்று தூக்கி எறிந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 22ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 22

22 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் மூவரும் கோவிலுக்கு மகிழ்வுடன் செல்ல வண்டியில் இருந்து இறங்கி நடந்து வர ஜெயேந்திரன், தனம் அனைவரும் ஆதர்ஷ் அக்சரா குழந்தை என அவர்கள் ஒரு குடும்பமாகவே வருவதை கண்டு பூரித்து போயினர். அனைவரும் இதையே

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 06சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 06

இதயம் தழுவும் உறவே – 06   வரவேற்பறைக்கு திரும்பி வந்த வித்யாவின் முகம் இறுக்கமாக இருந்தது. மனோகரன் யோசனையோடு அவளை பார்த்திருக்க, பின்னாடியே யசோதா வந்தாள். எதையோ சாதித்த திருப்தியோடும், பூரிப்புமான முக பாவத்தோடும். யசோதா கோவில் செல்வதற்காக பிரத்யேகமாக

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 4கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 4

அவளது காதலை நிராகரிக்க தகுந்த காரணம் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளே நுழைந்தான் விஷ்ணு. அங்கு அவனை எதிர்பார்த்து ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தாள் கவிதா. “வா மாமா உனக்குத்தான் வெயிட்டிங்“ “ஏன்?” “இன்னைக்கு இரவோட அந்த முன்றுமாதம் முடிய போகுது“ “ஆமாம் முடிய