Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 37

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 37

37 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

இரவு விக்ரம்க்கு அழைத்து “டேய் வாசுகிட்ட சொல்லி கம்பெனி  எல்லா டீடைல்ஸ்சும் உனக்கு அனுப்ப சொல்லிருக்கேன். அவன் அனுப்பிச்சிருப்பான். நீ எனக்கு நாளைக்குள்ள செக் பண்ணிட்டு சொல்லு, எந்த மாதிரி ஸ்டேட்டஸ் இருக்கு. கணக்கு வழக்கு, கிளைன்ட் டீடெயில்ஸ், இப்போ எந்த கிளைண்ட்ஸ் போகுறமாதிரி இருக்காங்க. யாரோட டையப் இருக்கு எல்லாமே செக் பண்ணு. சாராவையும் கூப்டுக்கோ. எல்லாத்தையும் பாத்துட்டு இப்போ கம்பெனி எந்த ஸ்டேஜ்ல இருக்கு. என்ன பண்ணா பழையபடி கொண்டுவர முடியும் எல்லாம் எவ்ளோ இன்வெஸ்ட்மெண்ட்ஸ் தேவைப்படுது, செல்வம், அவனுங்க ஆளுங்க குடுத்த டீடைல்ஸ் இது. சோ செக் பண்ணிடுவேனோனு சில விஷயம் அவன் கணக்குல காட்டாம இருக்கலாம். இல்ல பண்ணா நான் மட்டும் தான் செக் பண்ணனும், எல்லாமே கண்டுபுடிக்கறது கஷ்டம்னு கவனிக்காம விட்ருவேனு நினச்சு எல்லாமே இருக்கற டீடைல் கூட கொடுத்திருக்கலாம். அவன் மாட்றதுக்கும் சான்ஸ் இதுல கிடைக்கலாம். நான் எதுக்கும் நாளைக்கு மீட்டிங் எல்லாம் முடிச்சிட்டு வேற ஒரு பிளான்ல இருக்கேன். அதுல இருந்து இவனுங்க பண்ண குளறுபடி இன்னும் தெரிய வாய்ப்பிருக்கு. அத தெரிஞ்சதும் நான் சொல்றேன். ” என்றவன் அவன் கேட்டதற்கு பதில் கூறிவிட்டு வைத்துவிட்டான்.

பொழுது விடிந்ததும் ஏனோ பல நினைவுகள் எண்ணங்கள் அவன் மனதில் தோன்ற கீழே சென்று அம்மா அண்ணியை பார்க்கலாம் என்றெண்ணியவன் வேண்டாம், மீண்டும் சாதாரணமாக பேசினால் அவர்களும் அழுது பயந்து தன்னை கட்டுப்படுத்த முயற்சி செய்வார்கள். எல்லாமே இந்த போராட்டத்தின் முடிவு வரை தான் என்றெண்ணியவன் பின் துரிதமாக ஆபீஸ் கிளம்பினான். வாசுவின் வீட்டிற்கு அதிகாலையிலேயே விக்னேஷ் வந்துவிட இருவரும் நேரே ஆபீஸ் புறப்பட்டனர். அனைவரும் வந்த பின்னர் விக்னேஸை வாசு அழைத்துவந்தவன் போல அனைவர்க்கும் அறிமுகம் செய்ய ஆதர்ஸும் கேட்டுக்கொண்டு பின் வேலையில் இறங்கினர். ஆஃபீசியல் மீட்டிங் அரேஞ்சு பண்ணனும்.

சங்கரமூர்த்தி “மேனேஜர்ஸ், சூப்பர்வைஸர் எல்லாரையும் கூப்பிடவா?”

ஆதர்ஷ் “எல்லா எம்பிளாய்ஸ்கிட்டையும் சோ மொத்தமா கேதர் பண்றமாதிரி எந்த பிளாஸ் இருக்கோ. அங்க வரச்சொல்லுங்க.”

பின் மதிய வேளையில் மீட்டிங்கில் ஆதர்ஷ் “எல்லாருக்கும் வணக்கம். என் பேரு ஆதர்ஷ், உங்கள்ல பல பேருக்கு தெரிஞ்சிருக்கும். இந்த கம்பெனியோட ஓனர் மகேந்திரனோட இரண்டாவது பையன். இனிமேல் இந்த பொறுப்பை நான் தான் எடுத்துக்கப்போறேன். உங்களுக்கு யாருக்கு என்ன பிரச்னைனாலும் தயங்காம என்கிட்ட சொல்லுங்க. ஒருவேளை என்கிட்ட உங்களுக்கு சொல்லமுடிலேன்னா இவரு வாசு என்னோட பிரண்ட் அண்ட் இந்த கம்பெனியோட இன்னொரு ஷேர் ஹோல்டர். அதனால இவர்கிட்டேயும் சொல்லலாம். இதை எதிர்பார்க்காத செல்வம், சங்கரமூர்த்தி, வாசு அனைவரும் அவனை பார்க்க அவன் கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருந்தான். ஏதாவது என்கிட்ட கேக்கனும்னா தயங்காம கேளுங்க..”

கூட்டத்தில் சிலர் “என்னங்க, இவளோ நாள் வராம இப்டி திடிர்னு வந்துட்டு நான் தான் முதலாளினு சொன்னா எப்படி நாங்க ஏத்துக்கறது, இத்தனை நாள் கம்பெனி என்ன நிலைமைல இருந்ததுன்னு கூட பாக்காம இப்போ வந்திருக்கீங்கன்னு என்ன காரணம்? ஒருவேளை கம்பெனிய இவருக்கு விக்கப்போறிங்களா? அப்போ எங்களை வேலைய விட்டு தூக்கப்போறிங்களா? முதலாளி நீங்க தான் சார், ஆனா நாங்க வேலை செய்ற இடத்தை பத்தின விஷயம், யாருக்கிட்ட வேலை செய்ரோம்னாவது  எங்களுக்கு தெரியனும்ல?” என ஆளாளுக்கு கேள்விகள் எழுப்ப

ஆதர்ஷ் நிதானமாக ஆனால் மெலிதான புன்னகையுடன் “கண்டிப்பா உங்களுக்கு அதுக்கான பதில் தெரிஞ்சுக்கவேண்டிய உரிமை இருக்கு. உங்க எல்லாரோட கேள்வியும் நியாயமானதுதான். நான் எல்லாத்துக்கும் பதில் சொல்றேன். அதுக்கு முன்னாடி தெளிவா சொல்றேன், கம்பெனிய மட்டுமில்ல கடை குவாரி எங்கேயும் யாரையும் பணப்பிரச்சனைக்காக வேலைய விட்டு தூக்கமாட்டேன். ஆனா தப்பு பண்ணாங்கன்னா யோசிக்கவே மாட்டேன்.. அதோட எதையும் விக்கிறது எல்லாம் இருக்கவே இருக்காது. நீங்க முழுசா நம்பலாம்.. இந்த தொழில் எல்லாம் எந்தளவுக்கு அப்பா உயிரா நினச்சு உருவாக்குனதுன்னு எனக்கு தெரியும், கடைசில என் அப்பா, அண்ணா இரண்டுபேரோட உயிரே போயிடிச்சு. ஆனா அப்போவும் அவங்க ஆசைப்பட்டது நான் இங்க வந்து இன்ச்சார்ஜ் எடுத்துக்கணும்னு தான். அன்னைக்கு சில பர்சனல் ப்ரோப்லேம் அதோட நான் செஞ்சிட்டு இருந்த வேலை நான் இங்க வரமுடியாத சூழ்நிலை. பொறுப்பு எடுத்துக்க முடியாத நிலைமை… அது தப்பு தான். அதுக்காக நான் ஒரு ஒரு நிமிஷமும் வருத்தப்படுறேன். தப்பு பண்ணவன் திருந்தவே கூடாதா? இனிமேல் அதேமாதிரி நான் இருக்கமாட்டேன். அப்பா அண்ணா இரண்டு பேருமே நம்மகிட்ட இருக்கறவங்கள மனுஷங்களா தான் முதல பாக்கணும், வேலைகாரங்களா பாக்கக்கூடாதுனு சொல்லுவாங்க. அந்தமாதிரி தான் உங்கள நடத்திருப்பாங்க, அவங்களும் இருந்திருப்பாங்க. அதேமாதிரி தான் நானும் இருப்பேன். நீங்க அந்த விசயத்துல யோசிக்கவே வேண்டாம். அப்பாவும், அண்ணாவும் இறக்கும்போது எப்படி குடும்பத்தை என்னை நம்பி விட்டுட்டு போனாங்களோ அதேமாதிரி தான் உங்களையும் இந்த தொழிலையும்.. இது எல்லாத்துலையுமே வர நல்லது கெட்டதுக்கு நான் பொறுப்பெடுத்துக்கறேன். நான் இப்போதான் வந்திருக்கேன்முக்கியமா உங்கள வேலை வாங்க இல்லை. இங்க வேலை செய்ய தான் வந்திருக்கேன்.  எனக்கு கொஞ்ச நாள் டைம் குடுங்க.  திரும்ப பழையபடி தொழிலை முன்னாடி கொண்டுவரவேண்டியது என் பொறுப்பு.  அதுக்கு உங்களோட ஒத்துழைப்பு வேணும்னு நினைக்கிறேன். என்னை முதலாளியா ஏத்துக்கணுமா வேண்டாமானு முடிவு உங்களோடது தான். அத நான் சொல்லி திணிக்க மாட்டேன். நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேன். உங்களுக்கு வேற என்ன எப்போ பேசணும்னாலும் தாராளமா சொல்லுங்க. இவளோ நேரம் பொறுமையா இருந்து எல்லாமே பேசுனத்துக்கு கேட்டதுக்கு ரொம்ப நன்றி.” என்றவன் எழுந்து செல்ல கூட்டம் கலைந்தது.

கூட்டத்தில் சலசலப்புடன் நகர சிலர் “மகேந்திரன் ஐயா ஆனந்த் ஐயா இருந்த வரைக்கும் சரி, அப்போவும் இந்த செல்வம் அவனோட பிஏ ஏதாவது பண்ணிட்டே தான் இருந்தானுங்க. அய்யாகிட்ட சொல்லியும் அவரு அப்போ அப்போ மிரட்டுனாலும் இவன் அடங்குனபாட்ட காணோம். ஒரு கட்டத்துல அவங்க இரண்டுபேரும் இறந்தப்புறம் இவன் தான் எல்லாமேங்கிற மாதிரி ரொம்ப ஆடுனான். இப்போ இரண்டாவது பையன்னு சின்ன முதலாளி வந்திருக்காரு, என்ன பண்ணுவான் அந்த செல்வம்?”

“அவங்களையே இவன் தூக்கி சாப்பிட்டவன், இவனை பாக்க ஏதோ இப்போதா சின்னவயசு பையன்மாதிரி இருக்கு. எப்படி என்னனு சமாளிக்கபோறானோ?”

“அந்த செல்வம் இவளோ பதுங்கி இருக்கானே அதான் யோசனையா இருக்கு. சரி பாப்போம், எந்த அளவுக்கு எல்லாரும் தொழிலை திரும்ப பழையபடி மாத்துறாங்கன்னு..”

“அதுக்கு அந்த செல்வத்தை வெளில அனுப்பிச்சாலே போதும், அவன் தான் எல்லாத்துக்கும் முட்டுக்கட்டையா நிக்கிறது. அதைத்தான் முதலாளி பண்ணல. அவரு செஞ்ச தப்பே அதுதான். என்ன நடக்கபோகுதோ? நமக்கு சம்பளம் ஜாஸ்தி கேட்கலாம்னு பாத்தா இங்க சம்பளம் வருமான்னே சந்தேகமா இருக்கு.. நம்ம பிரச்சனை நமக்கு” என ஆளாளுக்கு பேசிக்கொண்டே சென்றனர்.

உள்ளே நுழைந்ததும் வாசு “டேய், நீ என்னடா நினைச்சிட்டு இருக்க? இப்போ என்னை எதுக்கு ஷேர் இதெல்லாம்.? எப்போ பண்ண?”

ஆதர்ஸ் “நேத்தே லாயர் அங்கிள்கிட்ட பேசிட்டேன். டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணிட்டு வரேன்னு சொல்லிருக்காரு. இன்னைக்கு நீ சைன் பண்ணிடு. உனக்கு இங்க அந்த போஸ்ட் தேவை. நான் யோசிக்காம எதையும் பண்ணல. நானே எல்லா இடத்துலயும் இருக்கமுடியாது. நீ சில விஷயம் பாக்கணும் முடிவெடுக்கணுங்கும்போதும் நீ யாரு இங்க, சொன்னா ஏன் கேக்கணும் அது இதுனு பல கேள்விகள் வரும். அதுக்கு பதில் சொல்ல எல்லாம் நமக்கு நேரமில்லை. அதுக்கு அந்த கேள்வியே வரமாதிரி எல்லாத்தையும் உருவாக்கிட்டா பிரச்சனை இல்ல பாரு. அதோட நீயும் விக்ரமும் கிளைண்ட்ஸ், வேலை இதப்பத்தி எல்லாமே பாத்துக்கோங்க. அவனுக்கு நான் ரைட்ஸ் கொடுத்திருக்கேன். நீயும் இங்க முதலாளி தான். அந்த மாதிரியே நடந்துக்கோ. இல்லை சுத்தி இருக்கறவனுங்க மட்டம் தட்ட பாப்பாங்க. டோன்ட் கிவ் சான்ஸ் டு தேம். புரிஞ்சுதா? அண்ட் உன்னோட திறமை எனக்கு தெரியும். நீ ரொம்ப தயங்க எல்லாம் தேவையில்ல.” என்றவன் நேற்று விக்ரமிடம் தான் பேசியது அனைத்தும் கூறிவிட்டு அவனுடன் பேசச்சொன்னான்.

அந்தநேரம் விக்னேஷின் மூலம் இந்த மாதிரி சிலர் செல்வம் பற்றி முன்னே இதுபோல் பிரச்சனை இருந்தது பற்றி பேசுவதை அவர்களிடம் தெரிவிக்க ஒரு நிமிடம் யோசித்த ஆதர்ஷ் சங்கரமூர்த்தியை அழைத்து ராஜுவுடன் குடோன் குவாரிக்கு சென்று அனைத்தும் காட்ட சொன்னான். செல்வத்தை அழைத்து வாசுவை கடைக்கு அழைத்து செல்ல சொன்னான். எந்தமாதிரியான வேலை, கஸ்டோமர், வரவு செலவு அனைத்தும் அவனுக்கு சொல்லும்படி கூறினான். செல்வத்திற்கு ஏற்கனவே இவன் என்ன ஐடியாவில் இருக்கிறான், ஏன் இவளோ வேகமா எல்லாத்தையும் செய்கிறான் என ஒன்றும் புரியாமல் இருக்க செல்வத்திற்கு வேலை வைக்கவும் அவன் மூளை வேலை செய்யவே மறுத்தது. அனைவரும் வெளியே சென்றபின் செல்வம் மட்டும் தயங்கி நின்று “ஆதர்ஸ், இப்போ கம்பெனி இருக்கற நிலமைல வாசுவுக்கு இந்த பார்ட்னர்ஷிப் தரது எல்லாம் தேவையா? பிரண்ட்னு ஒரே காரணத்துக்காக அவனை உள்ள விடறது ஹாண்டில் பண்ண சொல்றது எல்லாம் எந்த அளவுக்கு சரியாவரும் யோசிச்சு பாரு.”

ஆதர்ஷ் சளைக்காமல் “அங்கிள் நான் யோசிக்காம எதுவுமே செய்யல… இப்போ நமக்கு இன்வெஸ்ட் பண்றதுக்கு பணம் வேணும். அப்டினு நீங்க தான் சொன்னிங்க. அந்த அமௌன்ட் அவன் தான் எனக்கு தரப்போறான். சோ அதுவே பார்ட்னெர்ஷிப்குனு சொல்லிட்டா திருப்பி தரவேண்டாம் பாருங்க. அதோட தம்பி மாதிரி, தூரத்து சொந்தம்னு ஒரே காரணத்துக்காக தான் அப்பா உங்களுக்கு இங்க ஒரு பொசிசன் குடுத்து வெச்சிருந்தாரு. நீங்க என்ன அவரை ஏமாத்திட்டீங்களா என்ன? எதுமே இன்வெஸ்ட் பண்ணாமலே உங்களுக்கு ஒரு 10% ஷேர் குடுத்தாரு. இவன் பணம் வேற குடுக்கப்போறான் அதனால எதுவும் இல்லாம இருந்தா சரி வராது அங்கிள்.” என அதற்கு மேல் செல்வத்தால் எதுவும் கூறமுடியாமல் வெளியேறினான்.

செல்வத்திற்கு வாசு பற்றி கிடைத்த தகவல் அந்தளவுக்கு பின்புலம் கிடையாது சும்மா கூட படிச்சவன் அவ்ளோதான். அப்டிருக்க அவன் எப்படி இவளோ பணம் தருவான். இத ஆதர்ஷ்கிட்டேயும் கேட்கமுடியாது. அது எதுக்கு உங்களுக்குன்னு கேப்பான். இவன் உண்மையாவே பணம் குடுத்தானா இல்லையா? என்ற குழப்பத்தில் செல்வம் வாசுவுடன் சென்றான்.

சங்கரமூர்த்தியுடன் சென்ற ராஜு பேசினாலே அவனுக்கு வேர்த்து கொட்டும். அத்தனை பயத்துடன் மனதில் இவனோட என்னை தனியா கோர்த்துவிட்டுட்டாங்களே என சபித்துக்கொண்டே கடவுளை வேண்டிக்கொண்டே சென்றான்.

வாசுவிற்கு அழைத்து தான் பேசியதை கூறிவிட்டு நீயும் அப்டியே மெயின்டைன் பண்ணிக்கோ என்றான். அதோடு வாசு, ராஜு இருவரிடமும் அவர்களை மாலை வர தங்களின் பார்வையிலேயே வைத்திருக்க சொன்னான். கம்பெனிக்கு நான் கூறும்வரை வரவேண்டாம் என்று கூறிவிட்டான்.

விக்னேஷிடம் கூறி சிறிது நேரம் முன்னாடி பேசியவர்களை அழைத்து வர சொன்னான். அவர்களிடம் சில விஷயம் கேட்டு தெரிந்துகொண்டவன், அப்பா காலத்துல இருந்து வேலை செஞ்சவங்க யாரு எங்க இருக்காங்க, அதேபோல செல்வத்தோடு யாருக்கெல்லாம் வாக்குவாதம், சண்டை ஏற்பட்டது எப்போது அவனை பற்றிய புகார் மகேந்திரனிடம் சென்றது, என அனைத்தும் கேட்டறிந்தவன் சரி அப்டியே ஒரு விசிட் மாதிரி போலாம் என கிளம்பினான். கம்பெனியை சுற்றிபார்த்துக்கொண்டே அனைவரிடமும் அங்கே அங்கே நின்று பேசினான். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கு மேலே அவன் அனைவரிடமும் பேசிவிட்டு அறைக்கு சென்றுவிட்டான்.

கடைக்கு அழைத்து சென்ற செல்வம் மேலோட்டமாக வாசுவிடம் கூற அவன் சில கேள்விகள் கேட்கவும் சரியாக பதில் வராமல் போக வாசு கால் மேல் கால் போட்டு “Mr.செல்வம், உங்க பிரச்சனை இவனெல்லாம் நமக்கு சமமான்னு நினைக்கிறது புரியுது. ஆனா என்ன பண்றது சொல்லுங்க. சூழ்நிலை அப்டி மாறிடுச்சு. இப்போ இருக்கற நிலைமைக்கு நான் தான் உங்கள அப்டி நினைக்கணும். ஏன்னா என்னோட ஷேர் 25%. என செல்வம் விழிக்க வாசு தொடர்ந்து இப்போ இருக்கற நிலமைல இந்த கம்பெனி முன்னுக்கு வரணுமா வேண்டாமான்னு நான்தான் முடிவு பண்ணனும். சரியா நீங்க எல்லாவிஷயத்தையும் சொல்லலேன்னா நான் பணம் எல்லாம் இன்வெஸ்ட் பண்ணமாட்டேன். எனக்கு ஷேர் தேவையில்லேனு சொல்லிடுவேன். இல்லையா நீங்க ஏதோ தப்பு பண்ணிருக்கீங்க எனக்கு கணக்கு வழக்கு எல்லாம் சரியா இவரு காட்டலேனு சொல்லிடுவேன். இரண்டுத்துல எதுநடந்தாலும் அப்புறம் ஆதர்ஷ் உங்கள தான் கேள்வி கேப்பான். அவனை சமாளிக்க முடிஞ்சா சமாளிச்சுக்கோங்க. என அவன் நன்றாக சேரில் சாய்ந்து கொள்ள செல்வம் அதற்கு மேல் ஒழுங்காக கேட்டவற்றிக்கு பதில் கூறினான்.

இடையில் வாசு மேனேஜரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது தனியாக வந்த செல்வம் சங்கரமூர்த்திக்கு அழைக்க அவன் ராஜுவை பார்த்துவிட்டு கட் செய்துவிட்டான். செல்வம் கம்பெனியில் தனக்கென உளவு வேலை பார்க்கும் ஆட்களில் ஒருவனுக்கு கால் செய்து “அங்கு என்ன நடக்கிது. அவனுக்கு ஏதாவது சந்தேகம் வந்ததா? யார்கிட்டேயாவது பேசுறானா?” என விசாரிக்க

“அவன் எல்லார்கிட்டயும் பேசுறான் சார். எங்ககிட்ட கூட பேசிட்டு தான் போனான். வேலை இதெல்லாம் எந்த மாதிரி ஷிப்ட் டைம், சம்பளம் எந்தமாதிரி எதிர்பாக்கிறிங்க, இந்தமாதிரி எல்லாம் தான் எங்ககிட்ட கேட்டான். மத்தவங்ககிட்டேயும் அதுதான் கேட்டிருப்பான்னு நினைக்கிறோம். அவன் பேசுறத பாத்தா சந்தேகம் எல்லாம் வந்தமாதிரி இல்லை. அவன் உண்மையாவே கம்பெனி முன்னாடி கொண்டுவரதுக்கு தான் பாக்குறான். நம்மள அவசரப்பட்டு எதுவும் பண்ணி மாடிக்கவேண்டாம்னு தோணுது.” என்றான்.

செல்வம் மீண்டும் குழப்பத்தில் திரும்ப வாசு “என்ன சார், தனியா ஏதோ போன். டென்ஷனா குழப்பமா வேற இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா?”

செல்வம் “ஆ.. அதெல்லாம் ஒண்ணுமில்ல வாசு. வீட்ல வைப்கிட்ட பேசுனேன். கொஞ்சம் உடம்பு முடிலேன்னு சொன்னா.. அதான் நான் போலாமான்னு யோசிச்சிட்டு  இருந்தேன்” என அவன் தான் இங்கிருந்து செல்லவேண்டுமென இவ்வாறு சொல்ல

வாசு “அச்சச்சோ, ஆண்ட்டிக்கு என்னாச்சு. வாங்க நாம முதல வீட்டுக்கு போய்ட்டு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம். நானும் வரேன்” என செல்வம் “அய்யயோ, உனக்கு எதுக்கு சிரமம்?”

வாசு “என்ன சார், இப்படி சொல்றிங்க? நீங்க இந்த கம்பெனிக்காக ஆதர்ஸ் குடும்பத்துக்காக எவளோ உழைச்சிருக்கிங்கனு அவன் சொல்லிருக்கான். உங்கள பத்திரமா பாத்துக்காட்டி அவன் என்னவே திட்டுவான். நாம ஒரே கார்ல தானே வந்தோம். நீங்க வேற டென்ஷன இருக்கீங்க. நான் கூட வந்து உங்கள வீட்ல விட்டுட்டு ஆண்ட்டிய பாத்திட்டு அப்டியே ஆபிஸ் போறேன். ஆதர்ஷ் எதுவும் சொல்லமாட்டான் கவலைப்படாதீங்க.” என அவனும் வருவதில் குறியாக இருக்க வேறுவழியின்றி

செல்வம் “அட அதெல்லாம் ஒன்னும் பெரியவிஷயமில்லை வாசு. அது சும்மா தலைவலி தானாம். நான் சாயந்தரம் போயி பாத்துக்கறேன். நாம இப்போ உள்ள போயி வேலைய பாக்கலாம் வா.” என

வாசு “சார், உங்களுக்கு ஓகே தானே. இல்லாட்டி வாங்க உடனே உங்க வீட்டுக்கு நாம போலாம்.”

செல்வம் “இல்லை இல்ல, எனக்கு ஓகே தான். நாம வேலையே பாக்கலாம்.” என்றான்.

வாசுவும் சிரித்துக்கொண்டே நகர்ந்தான்.

விக்னேஷ் ஆதரிஷிடம் “சார் எதுக்கு இவளோ நேரம் எல்லார்கிட்டயும் போயி பேசணும். நமக்கு டைம் வேஸ்ட் தானே. அதுக்கு முதல வந்து சொல்லிட்டு போனவங்ககிட்ட இருந்து யார் யார்கிட்ட விசாரிக்கணும்னு கேட்டீங்களா அவங்கள மட்டும் நேரா கூப்பிட்டு கேட்டிருக்கலாமே?”

ஆதர்ஸ் புன்னகையுடன் “விக்னேஷ், நீ காலைல மீட்டிங் முடிஞ்சதும் என்ன பண்ண? என்ன விஷயம் கேட்டுட்டு வந்து சொன்ன?”

விக்னேஷ் “நீங்க சொன்னிங்க கூட்டத்துல ஒரு ரவுண்டு பாத்திட்டு வந்து சொல்ல சொன்னிங்க, எல்லாரும் என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க, அப்போ தான் செல்வம் பத்தி பேசுன விஷயம் நமக்கு தெரிஞ்சது. நான் வந்து உங்ககிட்ட சொன்னேன்.”

ஆதர்ஸ் “இப்போ நீ எனக்கு ஹெல்ப் பண்றமாதிரி வேலை செய்றமாதிரி செல்வத்துக்கும் எப்படியும் அங்க அங்க ஆளுங்க வெச்சிருப்பான்ல.? தனி தனியா நீ சொல்றமாதிரி கேட்டிருந்தா அவனுங்க செல்வம்கிட்ட சொல்லுவாங்க, யாரெல்லம் கூப்பிட்டு விசாரிச்சோம்னு சொல்லுவாங்க. அவங்களுக்கு ப்ரொப்லெம். அதோட செல்வம் மேல நமக்கு சந்தேகம் வந்தது அவனுக்கு கன்பார்ம் ஆகிடும், அவன் உஷாராகிடுவான். ஆனா இப்போ எல்லார்கிட்டயும் பேசும்போது யாரு நம்மகிட்ட என்ன சொன்னாங்கனு தெரியாது. நமக்கு சந்தேகம் வந்ததா இல்லையானு கூட தெரியாது. எப்பிடியும் அவனுக்கு குழப்பம் தான் மிஞ்சும்.” என கூற

விக்னேஷ் “ஓ… சரிங்க சார், இப்போ அடுத்து என்ன பண்ணணும்?”

ஆதர்ஷ் அடுத்து செய்யவேண்டியதை கூறினான். மீண்டும் அவன் வேலையில் அமர்ந்தவன் மெசேஜ் வர “இன்னும் சார் சாப்படலையோ?” என இருந்ததை கண்டு அவன் இறுக்கம் தளர்ந்து சாராவிற்கு கால் செய்தான்.

ஒரே ரிங்கில் எடுக்க ஆதர்ஷ் “நான் எல்லாரையும் கண்காணிச்சா அங்க இருந்திட்டே நீ என்னை வாட்ச் பண்றியா?கேடி …” என

அவளும் சிரித்துவிட்டு “அச்சச்சோ, என்கிட்ட போன் பேசுறிங்களே ட்ராக் பண்ணிட்டா?” என அவள் அவனை வம்பிழுக்க

ஆதர்ஸ் “பேசிக் போன் தான் அதெல்லாம் பண்ணமுடியாது. அதோட இந்த  நம்பர் என் வைப்க்காக மட்டும் தான்.வேற யாருக்கும் தெரியாது. என்னதான் ஸ்மார்ட் போன் இதெல்லாம் வந்தாலும் பல நேரத்துல இந்த பேசிக் மொபைல் தான் எவ்ளோ பெனிபிட்ல.?” என

அக்சரா “பிராடு… எவ்ளோ தெளிவா பிளான் பண்றீங்க?”

ஆதர்ஷ் “என்ன பண்றது இந்தமாதிரி பிராடு வேலைக்கு என்னோட குரு ஆலோசகர் எல்லாமே நீயாச்சே…” என அவளை கிண்டல் செய்ய

அவள் “ஓய்… சேட்டை ஓவராகிடிச்சு…. சரி அங்க எல்லாமே ஓகே தானே…, ரொம்ப கஷ்டமா இருக்கா?

ஆதர்ஷ், “ம்ம்.. கஷ்டமா தான் இருக்கு. என்ன பண்றது இது எல்லாம் சரிபண்ணாம கல்யாணம் பண்ணாலும் மேடம் சந்தோசமா இருக்கமுடியாதுனு சொல்லிட்டீங்க… நான் வேற என்ன பண்றது?” என பொய்யாக கூற

அக்சரா “என் மேல ஏதாவது கோபமா இல்லை வருத்தமா?” என அவள் சீரியஸக கேட்க

ஆதர்ஷ் “ஏய் சாரா, உண்மைய சொன்னா உன்னை பாக்கமுடிலேனு தான் கஷ்டமாயிருக்கு, இத்தனை நாள் இவளோ பிரச்சனை இவளோ தப்பானவங்க சுத்தி இருந்திருக்காங்க, கண்டுக்காம நான் என்ன பண்ணேன்னு நினைக்கும்போது தான் என் மேலையே வருத்தமா கோபமா இருக்கு.” என அக்சரா அமைதியாக இருக்க

ஆதர்ஷ்க்கு போன் வர  “ஓகே சாரா, ரகு கூப்படறான், சீக்கிரம் எல்லாத்தையும் முடிச்சிட்டு நான் அங்க வரேன்.பத்திரமா இரு.” என போனை வைத்துவிட்டான்.

ரகுவிடம் பேசிவிட்டு கேஸ் பற்றி விபரம் கேட்டான். அவன் அனைவரையும் விசாரிக்க போவதாக கூறினான்.

 

அன்று இரவு செல்வம் போனில் நடந்தவற்றை கூறி “இப்போ அவனுக்கு நம்ம மேல டவுட் இருக்கா இல்லையான்னே புரியல…கொஞ்சம் கூட கேப்பே விடாம ஏதாவது செஞ்சிட்டே இருக்கான். எனக்கு உண்மையாவே தலை வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல.. ஆதர்ஸ், வாசு, ரகு, ராஜு இது போதாதுன்னு அந்த விக்னேஷ் பையன் வேற யாரை பாத்தாலும் ஏதோ நோட்டம் விடுற மாதிரியே இருக்கு. இல்லை பயத்துல எனக்கு தான் அப்டி இருக்கான்னு தெரில.” போனை வாங்கி சங்கரமூர்த்தி “அது மட்டுமில்லை, யாரு ஆக்சிடென்ட் பண்ணதுனு கண்டுபுடிக்க ரொம்ப தீவிரமா இருக்கானுங்க… நானும் செல்வம் சாரும் பேசவே முடியறதில்லை. அதான் வீட்டுக்கு கிளம்பி வந்துட்டேன். எங்களுக்கு அங்க இருக்கற ஒரு ஒரு நிமிஷமும் பைத்தியம் பிடிக்கறமாதிரி இருக்கு. எதுவுமே யோசிக்கவே முடில. எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு…”

மறுமுனையில் “எதுக்கு பயம் நான் தான் இருக்கேன்ல… நான் சொல்றமாதிரி செய்ங்க..”

சங்கரமூர்த்தி “நீங்க சொன்னமாதிரி போன் கால், அவன் பேசுறவங்க யாரு என்னனு எல்லாமே பாத்தும் ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. அவன் இன்னொரு பேசிக் மொபைல் வெச்சிருக்கான், அந்த நம்பர் எடுக்கமுடியல… கேட்டாலும் தரமாட்டேன்கிறான், எதுக்கு உங்களுக்குனு திருப்பி கேக்குறான்.. ஹாஸ்பிடல், ஆக்சிடென்ட் ஆன இடம், எங்க எங்க யாரு இருக்காங்க என்ன பண்ணப்போறானு அவன் எல்லாத்தையும் எங்க முன்னாடியே தான் பண்றான். ஆனா என்ன நினைச்சிட்டு பண்ரான்னு ஒன்னுமே கண்டுபுடிக்க முடியல… இன்னைக்கு சாயந்தரம் குடோன்க்கு எல்லாரும் வரவெச்சு ஒருத்தனை நல்லா வெச்சு செஞ்சுட்டானுங்க… அவன் வாங்குன அடில எனக்கும் செல்வம் சார்க்கும் ஈரக்குலையே நடங்கிடிச்சு.. அவன் யாருனு கேட்டா ஆதர்ஷ் சின்னவனா இருக்கும்போது அவன் அம்மா இரண்டுபேரும் வண்டில போயி ஒருதடவை ஆக்சிடென்ட் ஆச்சே, அப்போ அவங்க டிரைவர ஒருத்தன் வேலை பாத்தான்ல அவன். பிளான் சொன்னமாதிரி வண்டியை பாதில நிறுத்திட்டு அவன் போனான். அதுக்கே அவனுக்கு இந்த நிலைமைன்னா ஐடியா குடுத்தது, செஞ்சது நம்மனு தெரிஞ்சா என்ன பண்ணுவானோ? அதோட அந்த விஷயம் நடந்து இத்தனை வருஷம் கழிச்சு அந்த டிரைவர கண்டுபுடிச்சு இப்டி அடிக்கறானே, பழசை எல்லாத்தையும் தோண்டி எடுக்கறவன் இப்போ கொஞ்ச மாசம் முன்னாடி நடந்ததை கண்டுபுடிக்கறதா அவனுக்கு கஷ்டம்… நம்ம முடிவென்னனு நல்லா தெரிஞ்சுபோச்சு..” என அவன் புலம்பிக்கொண்டே போனை செல்வத்திடம் குடுக்க “என்னாச்சு அவருக்கு, இவளோ புலம்பிட்டு பயந்துட்டு?” என அவன் கத்த

செல்வம் “அவன் சொன்ன எல்லா விஷயமும் உண்மை. அவன் பயமா இருக்குன்னு சொல்லிட்டான், நான் சொல்லல.. அவ்ளோதான்…”

மறுமுனையில் “நானும் இங்க சும்மா இல்லை. அவன் நான் விசாரிச்ச வரைக்கும் இவளோ நாளும் லண்டன்ல தான் இருந்திருக்கான், அவன் நேத்து தான் வந்திருக்கான். அது எல்லாமே உண்மை தான். அவங்க வீட்ல வரவங்க போன் எல்லாமே ட்ராக் பண்ணி செக் பண்ணிட்டேன். அவங்க வீட்ல இருந்து விஷயம் போகல… அவனுக்கு இப்போவரைக்கும் சந்தேகம் வந்தமாதிரி தெரில. ஆனா ஏனோ ஒண்ணு மிஸ் ஆகுது.. சரி, வாசு அவன் பிரண்ட் அவனை பத்தி தெரியும், ஆனா அந்த விக்னேஷ், ராஜு இவனுங்க எல்லாம் எப்படி ஆதர்ஷ்கு இவளோ பழக்கம்ஆனாங்கன்னு தான் புரியல. அவளோ சீக்கிரம் அவன் எல்லாரையும் நம்புறவனும் இல்லை. அதனால விக்னேஷ் யாரு? விக்னேஷ்க்கு வாசு எப்படி பழக்கம், இவளோ நாள் வாசு எங்க இருந்தானு எல்லாம் விசாரிக்க சொல்லுங்க.  விஷயம் தெரிஞ்சதும் அடுத்து மூவ் பண்ணிடலாம்.”  என போனை வைத்தாலும் மறுநாள் செல்வத்திற்கு அட்டாக் வந்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 28ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 28

உனக்கென நான் 28 ராஜேஷை பார்த்த அன்பரசியோ ஓடினாள். “ஏய் சின்ன புள்ளைங்கள மட்டும்தான் ரேகிங்க பன்னுவியா” என ராஜேஷ் சிரித்தான். அதற்குள் எதிர்புறமிருந்து ஜெனி வந்தாள். ஓட முயன்ற அன்பரசியை பிடித்தாள் ஜெனி. “ஏன்டி ஓடிக்கிட்டு இருக்க?!” திரும்பி பார்க்க

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 48ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 48

உனக்கென நான் 48 சந்துருவை கடக்கும்போது அந்த பெண் டிக்டாக் என சைகை செய்ய நண்பர்கள் இருவரும் அதிர்ச்சியில் நின்றிருந்தனர். அவள் சிரித்துகொண்டே செல்ல அந்த நேரம் “சந்துரு இந்தா இத அன்புக்கு!!” என சன்முகம் வந்த நேரம் அவரது கையிலிருந்த