Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 27

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 27

27 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

லண்டன் வந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. அன்று காலையில் இருந்து ஆதர்ஷ் மனம் ஏனோ தவிப்புடன் இருக்க இவனுக்கும் வேலை என்பதால் வீட்டில் யாருடனும் பேசமுடியவில்லை. அண்ணனிடம் இருந்து அவ்வப்போது மெசேஜ் வந்தாலும், ஏனோ வீட்டில் அனைவரையும் பார்க்க வேண்டுமென அவன் எண்ணம் வந்துகொண்டே இருக்க வேலைகளை இரண்டு நாட்களில் முடித்துவிட்டு அவன் கிளம்பிவிட யாருக்கும் தகவல் சொல்லமுடியவில்லை. சென்னைக்கு அன்று மாலை 6 மணிக்கு வர வேண்டிய விமானம் சற்று காலதாமதமாகி 7 மணிக்கு மேல் வந்து சேர்ந்தது. அதன்பின் அவன் டாக்ஸி பிடித்து வீட்டிற்கு செல்ல ட்ராபிக்கில் இன்னும் லேட்டாக அவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் ஏதோ சாமி ஊர்வலம் வர, பட்டாசு வெடி எல்லாம் வைக்க இரைச்சலாக இருந்தது. ஆதர்ஷ் வீட்டின் பின் புறம் வரும் வழியில் வண்டியை விட சொல்லி அங்கே இறங்கிக்கொள்ள வீட்டில் யாருக்கும் கூப்பிட்டும் போன் எடுக்காமல் இருக்க வேறு வழியின்றி அவன் பின்பக்கம் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்தான். அவனிடம் ஒரு சாவி எப்போதும் இருப்பதால் கதைவை திறந்துகொண்டு உள்ளே செல்ல வீடே இருட்டாக இருந்தது. அவனுக்கு அந்த சூழல் ஏதோ சரியில்லை என உணர்த்த அவன் நேரே பைரவியின் அறைக்கு செல்ல அங்கே பைரவி படுக்கையில் சாய்ந்துகொண்டு அழுதுகொண்டிருக்க, அண்ணி சாந்தி அருகே உட்கார்ந்திருக்க, சிந்து, சஞ்சீவ் இருவரும் அருகில் இருந்த சோபாவில் உறங்கிக்கொண்டிருக்க ஆதர்ஷ் “அம்மா, அண்ணி, என அழைக்க இருவரும் கனவுலகில் இருந்து வெளியே வந்தது போல விழிக்க இவன் அவர்கள் அருகில் சென்று “என்னாச்சு, உங்களுக்கு எல்லாம். ஏன் எல்லாரும் இங்க இருக்கீங்க. அண்ணா அப்பா சித்தி எல்லாரும் எங்க.?” என கேள்விகள் கேட்க

சாந்தி “நீ எப்படி வந்த? உன்னை யாராவது பாத்தாங்களா?”

“இல்லை அண்ணி, நான் ..”

“நீ ஏன் இப்போ இங்க வந்த? யாராவது உங்கிட்ட ஏதாவது சொல்லி வரவெச்சாங்களா?” என பதற

ஆதர்ஷ் “அண்ணி, கொஞ்சம் பொறுமையா இருங்க. ஏன் இவளோ பதட்டப்படுறீங்க?”

“ஆதர்ஷ், ப்ளீஸ், கேட்டதுக்கு முதல பதில் சொல்லு” என அதுலையே இருக்க

இவன் “இல்லை அண்ணி, யாரும் சொல்லல. வேலை ஓரளவுக்கு முடிஞ்சது. எனக்கு ஏனோ உங்க எல்லாரையும் பாக்கணும் போல இருந்தது. அண்ணா ஞாபகமா இருந்தது. அதான் சீக்கிரம் வேலையமுடிச்சிட்டு கிளப்பிவந்துட்டேன். அண்ணாவுக்கு மெசேஜ் பண்ண பாத்தேன். ஆனா கடைசி நேரத்துல தான் பிலைட் டிக்கெட் கெடச்சது. அதோட நான் அவசரத்துல அனுப்பிச்ச மெசேஜ் போகல போல. நான் இங்க வந்து தான் பாத்தேன். என்னை யாரும் பாத்திருக்கமாட்டாங்க. ஏன்னா கோவில் ஏதோ விஷேம் போல, முன்னாடி ஊர்வலம், வெடி வெக்கன்னு ரோடு பிளாக். அதனால நான் பக்கத்து தெரு வழிய வந்து பின்னாடி வழியா செவுரு ஏறி குதிச்சு வந்தேன். நான் வீட்டுக்கு கால் பண்ணேன். லைன் டெட். அண்ணாவுக்கு கூப்பிட்டு லைன் போகல…” என சாந்தி, பைரவி இருவரும் ஆசுவாசமாக மூச்சுவிட

ஆதர்ஷ் “இப்போ சொல்லுங்க, இங்க என்ன நடக்கிது, அண்ணா எங்க?”

பைரவி “உங்க அண்ணா, அப்பா, சித்தி எல்லாரும்  நம்மள விட்டுட்டு போய்ட்டாங்கபா” என பைரவி அழ ஆதர்ஷ்க்கு இடியென இறங்கியது அந்த செய்தி.

 

சாந்தி “நீ லண்டன் போன ஒரு வாரத்துல ஏதோ ஆபிஸ்ல பிரச்சனைன்னு அவரு சொல்லிட்டு இருந்தாரு. மாமா, அவரு இரண்டுபேரும் ரொம்ப டென்ஷன தான் இருந்தாங்க. அன்னைக்கு அவரு, மாமா காலைல கிளம்பும்போது இன்னைக்கு ஒரு முடிவு கட்டாம விடமாட்டேன்னு சொல்லி கோபமா கிளம்புனாங்க. அவங்களோட கல்யாணி அத்தையும் கிளம்பிபோனாங்க. ஆனா கொஞ்ச நேரத்துல எங்களுக்கு வந்த தகவல் அவங்க போன வண்டி ஆக்சிடென்ட் ஆகிடுச்சுன்னு போயி பாத்தா மாமாவும், கல்யாணி அத்தையும் இறந்துட்டாங்க. உங்க அண்ணாவுக்கு மட்டும் அடிபட்டத்துல ட்ரீட்மெண்ட் பாக்கறோம் ஆபரேஷன்னு சொல்லிட்டாங்க… அவருக்கு ஆபரேஷன் முடிஞ்சு கோமா ஸ்டேஜ்னு சொல்லிட்டாங்க. உனக்கு தகவல் சொல்லலாம்னு நாங்க சொன்னபோது உங்க அப்பாவோட பார்ட்னர் செல்வம் தான் எங்ககிட்ட ‘அவன் இதை எப்படி தாங்குவான். அதோட அவன் ஊருக்கு போறதுக்கு முன்னாடியே இந்த சொத்து பிஸ்னஸ் எல்லாம் வேண்டாம்னு சொல்லிருக்கான். சாதாரண வேலை பாத்துக்கறேன், இதுனால தான் நிறையா பிரச்சனைன்னு இந்த சொத்தை பாத்துக்கமாட்டேன்னு சொல்லிருக்கான். அப்டி இருக்க இப்போ மறுபடியும் அவன்கிட்ட போயி இதே சொத்து பிஸ்னஸ்காக தான் நீ உன் அப்பா, சித்திய இழந்துட்டேன்னு சொன்னா அவன் என்ன ஆவான். அதோட ஆனந்த் இப்போ பேசுற நிலைல இருந்தாலாவது அவன் சொல்றத ஆதர்ஷ் கேப்பான். ஆனந்தும் இப்டி ஒரு நிலமைல இருக்கும்போது ஆதர்சோட கோபம் பல மடங்கு இருக்கும். அவன் இதுக்கு காரணமானவங்களை கொல்லாம விடமாட்டேனு கிளம்புவான். ஆத்திரத்துல அவன் அந்த மாதிரி ஏதாவது பண்ணாலும் அவன் வாழ்க்கையே போய்டுமே மா. அவன்கிட்ட சொல்லாம நாமளே அவங்களுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கை செஞ்சிடலாம். என சாந்தி பைரவி இருவருக்கும் செல்வம் கூறுவது நியாயம் என பட்டாலும் அவனிடம் சொல்லாமல் எப்படி என

செல்வம் இறுதியாக “நல்லா யோசிங்க இரண்டுபேரும். இங்க இத்தனை பேரை கொன்னவனுக்கு ஆதர்ஷ் ஒருத்தன கொல்றது என்ன பெரிய வேலையா? அவனே நீங்களே கூப்பிட்டு காட்டிகொடுத்திடுவீங்க போல.. அப்டி அவன் வந்துட்டா கண்டிப்பா இதே நிலைமை அவனுக்கும் வரும்.. அதனால யாரு என்னனு நாங்க கண்டுபுடிச்சு அவனை ஜெயில்ல போடுறவரைக்கும் ஆதர்ஷ்கிட்ட இத சொல்லவேண்டாம்..” என

இருவரும் சரிதான் அவன் உயிராவது மிஞ்சட்டும் என செல்வம் கூறியபடி செய்ய ஒப்புக்கொண்டனர்.

சாந்தி “ஆனா எப்படி, ஆதர்ஷ்க்கு தெரியாம மறைக்கமுடியும்? அவரு அவங்க அண்ணாகிட்ட வாரத்துக்கு ஒருதடவையாவது பேசுவாரே..”

செல்வம் “அத நான் பாத்துக்கறேன்மா. ஆனந்த்தோட மொபைல்ல இருந்து அவன் அனுப்பற மாதிரி நாங்க ரிப்ளை பண்ணிடறோம். ஆதர்ஷ்க்கு நாம ஆள கண்டுபுடிக்கற வரைக்கும் விஷயம் தெரியவேண்டாம்.” என கூறிவிட்டு சென்றான். அடுத்து மகேந்திரன், கல்யாணி இருவரது இறுதி சடங்கும் இரு மகன்கள் இருந்தும் யாரோ செய்யவேண்டிய நிலை.

வீட்டின் வெளியே ஆள் வெச்சிருக்கு மா, நம்ம ஆளுங்க தான். எதுக்கும் உங்களோட ஒரு சேப்டிக்கு என செல்வம் சொல்லிவிட்டு ஆள் நிறுத்திவைக்க இவர்களும் ஒப்புக்கொண்டனர். தினமும் சாந்தி காலை மாலை என இரு நேரமும் மருத்துவமனை சென்று ஆனந்தை பார்த்துவிட்டு நினைவு திரும்ப வேண்டி கோவிலுக்கு சென்றுவருவாள். வீட்டில் முடியாமல் இருக்கும் மாமியார், ஒன்றரை வயது குழந்தை, வயசு பொண்ணு என சாந்தி பார்த்துக்கொள்ள ஒரு வாரம் கழித்து அன்று மருத்துவமனை செல்ல அங்கே ஆனந்திற்கு நினைவு திரும்ப இவள் மகிழ்வுடன் “நான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வரேன்.” கூற அவளை தடுத்த ஆனந்த்

“சாந்தி, வேண்டாம் யார்கிட்டேயும் சொல்லாத. அதோட ஆதர்ஷ் எங்க? அவன் வந்துட்டானா?” என கேட்க

இவள் நடந்ததை கூறினான்.

எங்களை ஆக்சிடென்ட் பண்ணதே செல்வம் தான்.  அவன் பிஸ்னஸ், பணம் இதுக்காக எல்லாம் ஆசைப்பட்டு இப்டி பண்ணிருக்கான். முதல ஆதர்ஷ் எங்க வீட்ல இருக்கானா? அவனை கூப்பிடு இங்க வர சொல்லு.” என ஆனந்த் அவசரப்படுத்த

சாந்தி பித்து பிடித்தவள் போல அப்டியே இருக்க அவன் விசாரிக்க இவள் நடந்தவற்றை கூறினாள். செல்வம் பேச்சை கேட்டு ஆதர்சிடம் எதுவுமே சொல்லவில்லை. அதோடு, இவனது மொபைல் அவர்களிடம் இருப்பது, வீட்டில் காவலுக்கு ஆள் வைத்திருப்பது என அனைத்தும் கூறி அழத்துவங்க

ஆனந்த் “தப்பு பண்ணிட்டீங்களே மா, … சரி இப்போ எப்படியாவது இந்த விஷயத்தை சொல்லி ஆதர்ஷ இங்க வரவெய்ங்க… அவன் வந்துட்டா எல்லாமே பாத்துக்குவான்.”

சாந்தி “இல்லேங்க அப்டி ஆதர்ஸ் கோபப்பட்டு அவங்கள கொலை பண்ணிட்டு ஏதாவது பிரச்சனை ஆகிட்டா அவரோட வாழ்க்கை?.. அதோட அந்த செல்வம் சொன்னது, ஆதர்ஷ் இங்க வந்தா அவனுக்கு இதே நிலைமை தான்னு .. எல்லாம் நினைச்சா வேண்டாம்ங்க, ஆதர்ஷ் அங்கேயே இருக்கட்டும்… நான் கூப்பிடல.” என புலம்ப

முதன்முறையாக ஆனந்த் குரலை உயர்த்தி “உளராத சாந்தி, உனக்கு ஆதர்ஷ் பத்தி அவ்ளோதான் தெரியும். இருக்கற பிரச்சனை எல்லாமே முடிவுக்கு வரணும்னா அவனை இங்க வர சொல்லு..ஆதர்ஷ் இங்க வந்தா அவனுக்கு பிரச்சனை இல்லை. அவனால செல்வம் அவனை சுத்தி இருக்கிறவங்களுக்கு தான் பிரச்சனை… அதனால தான் அவன் அப்டி சொல்லிருக்கான்.ஆதர்ஷ் பிரச்சனை வந்தா கோபத்துல சும்மா கத்திட்டு போற ஆளுனு நினைச்சியா? அவன் பிரச்சனைய தீக்கணும்னு முடிவு பண்ணா போதும், எப்படியும் சரி பண்ணிடுவான். நீ முதல நான் சொல்றத செய். இங்கிருந்து போ. எப்படியாவது ஆதர்ஷ்க்கு தகவல் குடு. எனக்கு நினைவு திரும்பினத யார்கிட்டேயும் சொல்லாத…கிளம்பு..” என அவன் மயக்கமாக அங்கிருந்து அவள் சென்றுவிட அதற்குள் இவர்கள் இருவரும் இங்கே பேசிக்கொண்டிருக்க அதை கவனித்த நர்ஸ் செல்வத்திற்கு கால் செய்து ஆனந்திற்கு நினைவு திரும்பிவிட்டது. என

செல்வம் “அப்டியா? சந்தோசம் மா, யாருக்கும் இன்னும் தெரியாதில்லை?”

நர்ஸ் “இல்லை சார், அவங்க மனைவி வந்திருக்காங்க. அதுக்கப்புறம் தான் நினைவு வந்தது. பேசிட்டு இருக்காங்க. நீங்க பேமிலி பிரண்ட் வேற. தினமும் வந்து பாத்துட்டு அக்கறையா விசாரிச்சிட்டு எப்போ நனவு திரும்புனாலும் சொல்லசொன்னிங்களா? அதான் சார் உடனே கூப்பிட்டேன். ” என மறுபுறம் “ரொம்ப தேங்க்ஸ் மா” என போனை வைத்துவிட

சாந்தி என்ன செய்வது, மீண்டும் மாலை கோவிலுக்கு செல்வதாக சொல்லிக்கொண்டு அங்கிருந்து எப்படியாவது ஆதர்ஷ்க்கு சொல்லணும் என எண்ணிக்கொண்டே வீட்டினுள் செல்ல அங்கே ஹாலில் செல்வம் அமர்ந்திருக்க முதலில் அதிர்ச்சியான சாந்தி, பின் சுதாரித்துக்கொண்டு “வாங்க அங்கிள், நீங்க எப்போ வந்திங்க?”

செல்வம் “இப்போதான் மா, ஒரு 10 நிமிஷம் ஆச்சு. ஹாஸ்பிடல் போயிட்டு வந்துட்டயா? ஆனந்த் எப்படி இருக்கான்? ஏதாவது முன்னேற்றம் இருக்கா?” என சாதாரணமாக விசாரிக்க

அவள் “இல்லை அங்கிள், அவருக்கு இன்னும் நினைவு திரும்பல” என கூறியதும் செல்வத்திற்கு முடிவானது இவளுக்கு விஷயம் தெரிந்திருக்கு என.

செல்வம் வாய் விட்டு நன்கு சிரித்துவிட்டு “உன் புருஷன் எல்லாத்தையும் சொல்லிட்டான் போல.” என சாந்தி அதிர்ச்சியாக அவளுக்கு போன் வர எடுத்து பேசியவள் அதிர்ச்சியாக அப்டியே சரிந்தாள். அவளை தண்ணீர் தெளித்து எழுப்பியதும் “ஏன்டா இப்டி பண்ண? ஏன் என் புருஷனை கொன்ன?” என கத்த

செல்வம் “என்னது, நானா? அவனுக்கு தான் அடிபட்டு கோமால இருக்கான். அப்டியே நினைவு திரும்பாம இறந்திட்டான். அப்டித்தான் நாளைக்கு ரெகார்ட் சொல்லும்.” என்றான்.

 

செல்வம் “ஆமா மா, நான்தான் எல்லாமே பண்ணேன். பார்ட்னர்னு உன் மாமனார் பேர்ல மட்டும் சேத்திக்கிட்டான். ஆனா எங்க போனாலும் அவனுக்கு தான் எல்லா மரியாதையும். நான் அவனுக்கு கீழ வேலை பாக்குற மாதிரியே வேற நடத்துறானுங்க. உன் புருஷன் எங்கிருந்தோ வந்து அவனெல்லாம் எனக்கு ஒரு ஆளா சமமா இருக்கான் ..உன் கொழுந்தன், அதான் அந்த ஆதர்ஷ் பையன் அப்போவே வாயி அதுவும் நேரம் பார்த்து மாட்டிவிடுவான். மகேந்திரனும் அதுக்கு திட்டுனான் என்னை. அதான் அப்போவே பழிவாங்க ஆக்சிடென்ட் பண்ணேன். அதுல தான் உங்க மாமியார் இப்டி ஆனது. உன் சின்ன மாமியாரை என் தம்பி மாணிக்கம் ரொம்ப விரும்புனான்.ஆனா அவ ஒத்துக்கல. கடைசில அவன் கோபப்பட்டு அவளை யாருக்கு தெரியாம ஏன் அவளுக்கே தெரியாம கெடுத்திட்டான். அது எனக்கு உபயோகமா போயிடிச்சு. ஆனா என் தம்பி கொஞ்சம் நியாயமானவன். அவளை நான் காதலிச்சேன். ஏதோ கோபத்துல இப்டி பண்ணிட்டேன். நானே போயி சொல்லபோறேன்னு நின்னான். அவனை அடக்கி உன்னை இத்தனை நாள் அவமானப்படுத்துனவங்க. அதனால ஒரு இரண்டுவாரம் விடு. யாரு அவளை கெடுத்ததுனே தெரியாம பொலம்பட்டும். அப்புறமா அவங்க இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லும் போது நானே கல்யாணம் பண்ணிவெக்க கேக்குறான். அதுவரைக்கும் நீ வெளியூர்ல இரு என அவனிடம் பேசி ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டார். இவனும் பொறுத்திருந்து பார்க்க மகேந்திரன் எதுவும் பிரச்சனை என கூறாமல் இருக்க இவன் இறுதியாக ஆக்சிடென்ட் செய்தான்.  நான் எதிர்பார்க்காம நடந்த விஷயம்னா உன் மாமனார் கல்யாணியை கல்யாணம் பண்ணதுதான். அப்போவும் என் தம்பி அந்த கவலைல அப்போ அப்போ ட்ரிங்ஸ் எடுத்துக்கொள்பவனை ரொம்ப கத்துக்குடுத்து ஒரு கட்டத்தில் உடல் சரியில்லாமல் இறந்துட்டான்… அதுக்கப்புறம் எல்லாம் நான் நினச்சா மாதிரி தான் நடந்தது, வீட்ல பிரச்சனை, அப்பா பையனுக்குமே, அந்த பெருசுங்க இறந்தது, மகேந்திரன் அவன் அண்ணாவோட சண்டை போட்டு புரிஞ்சது, ஆதர்ஷ்க்கு அடிபட்டு பழசு மறந்தது எல்லாமே எனக்கு சாதகமா தான் நடந்தது…மறக்காம இருந்திருந்தா அப்போவே அவன் என்னைத்தான் சந்தேகப்பட்டிருப்பான்… எப்டியோ குடும்பத்துல எல்லாரும் அடுச்சுக்குறானுங்க .. மகேந்திரன் பீல் பண்ணிட்டு வேலைல கோட்டைவிடுவான்னு பாத்தா அவன் முழு நேரமும் ஆபிஸ் கதி என இருந்தான். ஒரு கட்டத்துல இவனுக்கு அடுத்து இவன் பையன் ஆனந்த் எல்லாத்தையும் பாத்துக்குவான்னு   சொல்லிட்டான் என சாந்தியிடம் திரும்பியவன் இந்த வீட்டு வாரிசே இல்லாத உன் புருஷன் எல்லாம் எனக்கு முதலாளியா? அப்போ இத்தனை நாள் கூடவே நான் இருந்தேனே எனக்கு என்ன மரியாதை? அதான் நேரம் பாத்திட்டு இருந்தேன். அப்போ அப்போ ஏதாவது வேலைல குளறுபடி பண்றது, பணம் சுருட்டறதுனு இருந்தேன். திடிர்னு இந்த ஆளு அதான் உன் மாமனார் ஆதர்ஷ்கிட்ட பேசி அவனையும் நம்ம பிஸ்னஸ பாத்துக்க சொல்லலாம்னு இருகேன்னு சொல்லிட்டான். எனக்கு தூக்கிவாரி போட்ருச்சு.. ஆதர்ஷ் வந்தா அவ்ளோதான். உன் புருசனும் உன் மாமனார்கிட்டவாது கொஞ்சம் கருணை எதிர்பார்க்கலாம்.ஆதர்ஷ்கிட்ட தப்பு பண்ணோம்னு தெரிஞ்சாலே அதுக்கான தண்டனை தந்திட்டு தான் அடுத்து பேசவே ஆரம்பிப்பான். அதனால தான் கொஞ்சம் பயந்தேன். ஆனா அவன் எனக்கு வேலை வெக்கமா வெளிநாடு போறேன்னு சொல்லிட்டான். நாங்களும் போனா போகட்டும்னு விட்டுட்டோம். அடுத்து தான் மகேந்திரனும், ஆனந்தும் நான் வேலைல பண்ற தில்லுமுல்லு எல்லாம் நோண்ட ஆரம்பிச்சானுங்க,அதோட நான் பேசிட்டு இருந்ததையும் கேட்டு எப்டியோ தெரிஞ்சுக்கிட்டானுங்க, அதோட இவளோ நாள் தண்ணி அடிச்சுகிட்டு சும்மா பொலம்பிட்டு இருந்த என் தம்பி அவன் பிரண்ட் ஒருத்தன்கிட்ட மட்டும் இத சொல்லிருப்பான் போல. அவன் எப்படியோ கல்யாணிகிட்ட

மாணிக்கம் தான் இப்டி உங்க வாழ்க்கையை மாத்துனது. ஆனா அவன் இப்போ உயிரோட இல்ல. உங்க ஞாபகத்துல குடிச்சே இறந்திட்டான். அவன் முன்னாடியே சொல்ல வரலாம்னு இருந்தபோது அவங்க அண்ணா தான் தடுத்தாங்கனு சொல்லிருக்கான். அன்னைக்கு என்னை பாக்க தான் மகேந்திரன், கல்யாணி, ஆனந்த் மூணு பேரும் வந்தாங்க. வர வழில ஆக்சிடென்ட் பண்ணியாச்சு.. பின்ன ஏற்கனவே கோபமா இருக்கானுங்க. இதுல அந்த பொண்ணு வாழ்க்கையை வேறஇப்டி ஆனதுக்கு காரணம் தெரிஞ்சா அவ்ளோதான். அதான் எல்லாரையும் மேல அனுப்பிச்சாச்சு. இனி அடுத்து ஆதர்ஷ், உன் குழந்தைங்க எல்லாரும் இருக்காங்க.எப்படியும் சொத்த விக்க இந்த வீட்டு வாரிசுனு அவன் தான் கையெழுத்து போடணும் … அதுக்காக அவனை மிச்சம் வெச்சிருக்கு. அதோட அவன் தான் இந்த பிஸ்னஸ் எல்லாம் பாத்துக்கமாட்டேனு சொல்லிட்டானே. அதனால விட்டாச்சு. உன் கொழந்தைங்கள உங்கள எல்லாரும் வெச்சு பிளாக் மெயில் பண்ணிதான் அவன்கிட்ட இருந்த சொத்தை எங்க பேருக்கு மாத்த போறேன். வேற வழியில்லை அவன்கிட்ட. அதோட ஆதர்ஷ் சொல்றமாதிரி எங்காவது போயி வேலை பாத்துட்டு குடும்பத்தோட இருந்தா அவனுக்கு குழந்தைங்களுக்கு அது பாதுகாப்பு. நடுவுல பிரச்சனை பண்ணா அப்புறம் அவனையும் வரவெச்சு மொத்தமா வீட்டோட கொழுத்திடுவேன். ஆதர்ஷ இப்போ வரவெக்க மாட்டேன். கொஞ்சம் வேலை இருக்கு. அதனால அவன் வேலைய  முடிச்சிட்டு லண்டன்ல இருந்து மெதுவா வரட்டும் சரியா?” என அவளை மிரட்டி விட்டு எப்படியும் இவர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை என காட்டிவிட்டு சென்றுவிட்டான்.

 

செல்வம் தான் ஆபீஸ்ல பிரச்னை பண்றது, ஆக்சிடென்ட் பண்ணது இதற்கு காரணம் என நடந்தவற்றை சுருக்கமாக பைரவியும், சாந்தியும் ஆதர்சிடம் சொல்லிவிட்டு அவனை இங்கிருந்து கிளம்பச்சொல்லி கேட்டனர். (கல்யாணியின் வாழ்க்கையில் நடந்த அநியாயம், ஏன் மகேந்திரன் அவளை மணம் செய்து கொண்டார், அதற்கு காரணமும் இவர்கள் தான் என்பதை மட்டும் கூறவில்லை)

 

ஆதர்ஷ் முதலில் அதிர்ச்சியில் இருந்தவன் அண்ணன் இறப்பு அவனுக்கு மிகப்பெரிய அடியாக விழ இறுதியில் இவர்களும் விட்டு செல் என்றதும் அவன் கோபத்துடன் “என்ன சொல்றிங்க? திரும்ப என்னை எங்க போக சொல்றிங்க? அதுவும் இவளோ பிரச்னையை வெச்சுகிட்டு…அவனுங்கள சும்மா விடசொல்றிங்களா? என்னை பயந்து போகசொல்றிங்களா?”

“இல்லை இங்க இருந்தா எப்போ என்ன நடக்குமோன்னு பயந்துட்டே இருக்கனும்.. இதுக்கு மேல யாரையும் எங்களால இழக்க முடியாது. நீ உயிரோட இருக்கணும்டா. சொன்னா கேளு..”

“சரி மா, அப்போ வாங்க, எல்லாரும் கிளம்பிடலாம்.”

“முடியாது… இது உங்க அப்பா அண்ணா எல்லாரும் கஷ்டப்பட்டு உருவாக்குனது, விட்டுட்டு வரமுடியாது. வாழ்வோ சாவோ அது இங்க தான்.” என பிடிவாதம் பிடிக்க

ஆதர்ஷ் “என்னமா பேசுறிங்க நீங்க, நான் அவங்கள பாத்துக்கறேன்னு சொன்னா முடியாது கொலை பண்ணிடுவாங்கன்னு சொல்லி போக சொல்றிங்க. அப்போ நீங்க இங்க இருந்தா மட்டும் எதுவும் பண்ணமாட்டாங்களா? உங்களால இனி யாரையும் இழக்க முடியாது.ஆனா எனக்கு மீதி இருக்கற நீங்களாவது வேணும்னு நினைக்கமாட்டேனா?”

“புரிஞ்சுக்கோ ஆதர்ஷ், இப்போ அவங்களுக்கு சொத்து தான் வேணும். அதுக்கு உன் கையெழுத்து வேணும். குழந்தைங்க மேஜர் ஆகுற வரைக்கும் அவங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனா அவங்கள வெச்சு தான் உன்னை பிளாக் மைல் பண்ணுவாங்க. நீ சொத்து வேண்டாம். குழந்தைங்கன்னு சொல்லிட்டு வாங்கிட்டு போய்டுவ. ஆனா இந்த சொத்து, வீடு பிஸ்னஸ் எல்லாம்? நம்ம குடும்பத்தோட உழைப்பு எவனோ எடுத்துட்டு போக விடமுடியாது. நீ இல்லாட்டி அவங்க இத அனுபவிக்க தான் முடியுமே தவிர விக்கவெல்லாம் முடியாது.”என

ஆதர்ஷ் “இவளோ தெளிவா 2 பேரும் பேசுறீங்களே? அப்போ உங்கள வெச்சு என்னை பிளாக் மைல் பண்ணமாட்டானா? அப்போ நான் வர தேவையில்லையா?”

சாந்தி இறுதியில் அவனது காலில் விழுந்து “சிந்து, சஞ்சீவ் இரண்டுபேருக்கும் இனி மிச்சம் இருக்கறது நீ மட்டும் தான். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ…” என  கெஞ்ச, ஆதர்ஷ் அண்ணி எந்திருங்க. என்ன பண்றீங்க நீங்க? என பதறினான்.

அதற்குள் பைரவி “வேண்டாம் ஆதர்ஷ். நாங்க இருக்கோம்னு நினைப்பு உனக்கு இருந்ததானே நீ வரணும். இங்கிருந்து நீ குழந்தைகளை கூட்டிட்டு போகும்போது உன் அப்பா அண்ணா சித்தி எல்லாரும் இறந்துட்டாங்கனு எப்படி மனசுல வெச்சுப்பியோ அதேமாதிரி அம்மா அண்ணியும் இல்லேனு முடிவோட போ. நீ வளத்த வேண்டிய குழந்தைங்க, நீ அவ்ளோதான் உன் வாழ்க்கைல. உனக்கு நாங்க யாருமே இனி இல்லை. குழந்தைங்க வளரதுக்குள்ள எப்படியும் இங்க இருக்கற பிரச்சனை சரியாகும்னு நம்புவோம். இல்லையா செல்வம்க்கு வயசாகாதா? எப்படியும் அவன் இறந்துட்டா இது ஆட்டோமேட்டிக்கா குழந்தைங்களுக்கு தான் வந்து சேரும். அப்போ கூட்டிட்டு வா. அதுவரைக்கும் நீ எங்களுக்காக வரணும்னு அவசியம் இல்லை.” என முகத்தில் அடித்தது போல கூற

ஆதர்ஷ் “என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் சொல்றிங்களா? நாளைக்கு குழந்தைங்க மட்டும் எங்க போனாங்கன்னு அவன் வந்து கேக்கமாட்டானா? அப்போ என்ன பண்ணுவீங்க? அண்ணா, அப்பா, சித்தி எல்லாரும் உண்மையாவே இறந்துட்டாங்க. ஆனா எனக்கு சொந்தம்னு சொல்லிக்க இருக்கற உங்களையும் நான் ஏன் இல்லேனு நினச்சு வாழனும். இந்த சொத்து போனா என்னமா, நான் இருக்கேன். நான் சம்பாரிக்கமாட்டேனா?.. எல்லாருமே போய்டலாம். எனக்காக இருக்கற உங்களையும் என்னால எப்படி விடமுடியும்.?” என கெஞ்ச

பைரவி “முடியணும் ஆதர்ஷ்.  இத்தனை வருஷம் பெத்து வளத்த அப்பா சித்தி எல்லாரோடையும் பேசாம அவங்க இருக்கறதையே மறந்துட்டு உன்னால வாழ முடிஞ்சதுல… உன் அண்ணன் உன்கிட்ட இங்க வந்து பிஸ்னஸ பாத்துக்கோனு கேக்கும்போது முடியாதுனு சொல்லிட்டு போகமுடிஞ்சதுல.. அப்போ எல்லாம் உனக்கு இந்த பாசம் எங்க போச்சு. அவன் கேட்டபோதே நீ இங்க இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா? எப்போவுமே உனக்கு உன் பிடிவாதம் முக்கியமா போச்சுதானே. உன் அண்ணாவோட இறப்புக்கு நீதான் முக்கிய காரணம்.” என ஆதர்ஷ் அண்ணன் சொல்வதை கேளாமல் வேண்டாம் என ஒரே முடிவாக சென்றது தவறு என குற்றஉணர்ச்சியில் இருந்தவனுக்கு அம்மாவின் வார்த்தைகள் அடுத்து பேசும் சக்தியற்று நிறுத்தியது..

பைரவி தொடர்ந்து “உன்கிட்ட கடைசியா ஒரு உதவின்னு  கேக்கறோம். அந்த குழந்தைகளை எடுத்துட்டு நீ எங்கேயாவது போயி வளத்து. இல்லை இப்போவும் உன் இஷ்டப்படி தான் செய்வேன்னு சொன்னா பிரச்சனையே வேண்டாம் செல்வத்தை கூப்பிட்டு எல்லா சொத்தையும் நீ எழுதி கொடுத்திடு. ஆனா அதுக்குள்ள இங்க நாங்க யாரும் உயிரோட இருக்கமாட்டோம், இந்த வீடு எதுவும் இருக்காது.. மொத்தமா கொளுத்திப்போம். இன்னும் உயிரோட இருந்து நீங்க கஷ்டப்படுறதையோ, இருக்கற ஒரே புள்ளை சாகறதை என்னால பாக்கமுடியாது.” என கருணையே இல்லாமல் பேசிவிட்டு கண்ணீர் வடிக்க

 

சில நிமிடம் அமைதியாக இருந்த ஆதர்ஷ் பெருமூச்சுடன் “நான் குழந்தைகளை கூட்டிட்டு போறேன். இப்போவே.” என்றான். சாந்தியும், பைரவியும் “ரொம்ப நன்றிப்பா…” என ஏதோ கூறுவரும் முன்,

ஆதர்ஷ் “நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான். எனக்கு பாசமே இல்லாம தான் இத்தனை வருஷம் இருத்திட்டேன்…ம்ம்ம்… உங்களுக்கு மீதி இருக்கற ஒரு பையன் சாகறதை உங்களால பாக்க முடியாது.. ஆனா நான் மட்டும் என்னோட எல்லா சொந்தமும் என்னை விட்டு போய்டிச்சுன்னு எப்போவுமே சொல்லிட்டே இனி வாழ்நாள் முழுக்க வாழணும் இல்லை. எந்த அம்மாவும் பையனுக்கு இப்டி ஒரு வரத்தை தரமாட்டாங்க… ரொம்ப தேங்க்ஸ். என்னை நீங்க எல்லாரும் ரொம்ப நல்லா புரிஞ்சுக்கிட்டிங்க.. அப்பா சித்திய ஏன் கல்யாணம் பண்ணாரு எனக்கு தெரியாது. ஒரு ஒருத்தரும் தப்பா பேசும்போது, இல்லை சொத்துக்காகன்னு சொல்லும்போது கஷ்டமாயிருக்கும். உங்ககிட்ட அதுக்கான பதில் கேட்டேன். யாருமே சொல்லல. நான் தனிமையா இருந்தாளாவது நீங்க எல்லாரும் மனசு விட்டு பேசுவீங்கன்னு நினச்சேன். ஆனா என்னை நீங்க யாரும் இந்த வீட்டு பையன மதிக்கவேயில்லை… நீ பாட்டுக்கு பீல் பண்ணிட்டு இருன்னு விட்டுடீங்கன்னு நினச்சேன். ஆனா இப்போதான் புரியுது என்னை நீங்க மனுசனா கூட மதிக்கல. எனக்கு மனசு இருக்கும்னு புரிஞ்சுக்கல. பரவால்ல.. என் அண்ணன் தான் நான் இவளோ தூரம் வந்திருக்கறதுக்கு காரணம், அவனுக்காக மட்டும் தான் எல்லாமே. அவன் குழந்தையை வளத்தி பெரியாள் ஆக்குறதுதான் என் கடமை. நீங்க என்ன சொல்றது? நானே முடிவு பண்ணிட்டேன். இனி என் லைப்ல யாருமே இல்லை. எதுவுமே இல்லை. நீங்க எல்லாரும் இந்த வீடு சொத்து இதுவே கட்டிக்கோங்க. எனக்கு யாரும் வேண்டாம். செல்வம் மாதிரி எதிரிங்க பிளாக் மைல் அசைக்கிதோ இல்லையோ ஆனா உங்கள மாதிரி செண்டிமெண்ட்டா பேசி  பாசம் வெச்சு பிளாக் மைல் பண்றதுல தான் நிறையா பேர் ஒண்ணுமே இல்லாம போறாங்க. இனி என் லைப்ல இந்தமாதிரி பாசமும் நான் யார்கிட்டேயும் வெக்கமாட்டேன், என் மேலையும் வெக்க விடமாட்டேன். முக்கியமா எனக்கு சொந்தமே வேண்டாம். ” என அவன் அடுத்து செய்ய வேண்டியவைகளை ஏற்பாடு செய்ய அவனது அறைக்கு போனான்..வாசுவிற்கு கால் பண்ணி விஷயத்தை கூற அவனை அழைத்தான்.

இங்கே பைரவியம், சாந்தியும் கண்ணீர் வடிக்க, சாந்தி “ஏன் அத்தை ஆதர்ஷ்கிட்ட இவளோ கடுமையா பேசிட்டிங்க? அதோட  மாமா ஏன் கல்யாணி அத்தைய கல்யாணம் பண்ணாருன்னு சொல்லிருக்கலாமே…”

பைரவி “இல்லை சாந்தி, அவனுக்கு அவன் சித்தி தான் என்னை விட இஷ்டம். அவள மயக்கமருந்து குடுத்து கெடுதிட்டு யாருன்னுகூட தெரியாம விட்டுட்டு போய்ட்டான் அந்த மாணிக்கம்…அவ எவளோ கூனி குறுகி நின்னா தெரியுமா? இந்த விஷயம் எனக்கு அவருக்கு(மகேந்திரன்) மட்டும் தான் தெரியும். அதனால தான் நான் அவர்கிட்ட நீங்களே கல்யாணிய கட்டிக்கோங்கன்னு சொன்னேன். அதுல தான் எனக்கு அவருக்கு என் தங்கச்சி மூணு பேருக்கும் சண்டை. அவங்கள நான் கம்பெல் பண்ணேன். அப்போ எனக்கு ஆக்சிடென்ட் ஆகி கால் போய்டுச்சுன்னு தெரிஞ்சது .. இதுவே சாக்கா வெச்சு அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன். ஏன்னா அப்போ அவ மாசமா இருந்தா. அத அழிக்கவும் எங்க யாருக்கும் மனசில்லை. அவங்க இரண்டுபேரும் சந்தோசமா இல்லை. அதோட ஆதர்ஷ் அவங்ககிட்ட இருந்து விலக ஆரம்பிச்சுட்டான். பொறந்த குழந்தை இவரோட குழந்தையாவே இருக்கட்டும் அப்போதா அதுக்கு பாதுகாப்புன்னு தான் அப்டியே விட்டுட்டோம். ஆனா ஆதர்ஷ்க்கு அவன் சித்திக்கு இப்டி ஒரு அநியாயம் நடந்தத தெரிஞ்சா  அவன் நின்னு பேசக்கூட மாட்டான். அடுத்து கொலை தான். அவன் கோபம் அந்த மாதிரி.. இத்தனை வருஷம்  என் பையனோட வாழ்க்கை இருந்தும் இல்லாம போயிடிச்சு. கொஞ்ச நாள் கஷ்டப்பட்டாலும் இதுக்கு மேலாவது அவன் குழந்தைகளோட அவனுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கிட்டு நல்லா இருக்கட்டும். இந்த பிரச்சனை அவனுக்கு வேண்டாம். ” என அவள் அழுதுகொண்டிருக்க சாந்திக்கும் என்ன கூறுவது என்று தெரியாமல் அழ சற்று நேரத்தில் வந்த ஆதர்ஷ் சிந்துவை எழுப்பி விஷயத்தை கூறி கிளம்ப சொன்னான். சஞ்சீவை தூக்கிக்கொண்டு இருவரிடமும் சொல்லாமல் வாசுவை பின் பக்கம் வர சொல்லி கிளம்பிவிட்டனர். அவங்க அம்மா அண்ணிகிட்ட கடைசியா ஒரு வார்த்தை கூட சொல்லல. திரும்பி கூட பாக்கல….

அப்புறம் தான் ஊட்டிக்கு வந்தது. இங்க அவனோட வாழ்க்கை.” என நடந்தவற்றை ஜெயேந்திரன், வாசு இருவரும் அனைவரிடம் கூறினர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 5’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 5’

மறுநாள் காலை காதம்பரியின் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ரூபி நெட்வொர்க் ப்ராஜெக்ட் கிடைத்த விவரம் ஒரு ஆள் விடாமல் பரவியிருந்தது. “கல்பனா அதுக்குள்ளே எல்லார்ட்டயும் சொல்லிட்டியா” “பின்னே எவ்வளவு பெரிய விஷயம்… ஆபிஸே கொண்டாடிட்டு இருக்கோம்” வாயெல்லாம் புன்னகையாக சொன்னாள் கல்பனா.

வார்த்தை தவறிவிட்டாய் – 10வார்த்தை தவறிவிட்டாய் – 10

ஹாய் பிரெண்ட்ஸ், தீபாவளி நல்லா கொண்டாடினிங்களா. எனக்கு உங்க எல்லாரோட வாழ்த்துக்களும், பரிசும் கிடைச்சது. நன்றி. உங்களை மாதிரியே நானும் பண்டிகை வேலைகளில் பிஸியா இருந்தேன். கேரக்டர் பத்தின விளக்கத்தை  சில பேர் என்னிடம் டிஸ்கஸ் பண்ணிங்க. நான் படித்த சில

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 05ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 05

5 – மனதை மாற்றிவிட்டாய் கை கழுவி விட்டு அமைதியாக வந்த திவி அனைவரிடமும் “நான் கிளம்புறேன் … கொஞ்சம் வேலை இருக்கு” என்றாள். அவளை நம்பாமல் பார்த்தவர்களிடம் ” ஐயோ, நிஜமாத்தான் சொல்றேன்… அத்தை நீங்களாவது சொல்லுங்க நான் வந்ததுல