Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 26

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 26

26 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

மகேந்திரனுக்கு இருந்த கோபத்தில் யாரிடமும் இனி தன் அண்ணன் ஜெயேந்திரன் பற்றி பேசக்கூடாது என கூறிவிட யாரும் வாயே திறக்கவில்லை.

ஆதர்ஷ் வீட்டில் நடப்பது  புரிந்தும் புரியாமலும் அனைவரிடமும் கேட்க முழுதாக யாரும் சொல்லாமல் தட்டி கழிக்க ஆனந்த் பாட்டி தாத்தா மட்டும் அவனிடம் இவர்களோடு இருந்த சந்தோஷமான நிகழ்வுகளை கூறினர்.

இருப்பினும் அவனுக்கு சில விஷயங்கள் கேட்டும் சந்தேகம் தான் அதிகமானது. இறுதியில் தாத்தா இறக்கவும் வீட்டில் சொந்த பந்தம் அனைவரும் கூட இறுதி சடங்கில் அவர்களுக்குள் ஒவ்வொன்றாக பேச அவை அனைத்தும் ஆதர்ஷ் காதில் விழுந்தது.

“என்ன பா பண்றது? புள்ளைங்கள நல்லா அந்த மனுசன் வளத்துனாலும் இரண்டு புள்ளைங்க வாழ்க்கையும் இப்டி ஆயிடிச்சே. பெரிய பொண்ணு அடிபட்டு படுத்திடிச்சு, சின்ன பொண்ணையும் இவரே கல்யாணம் பண்ணிகிட்டாரு.”

“அட நீ வேற பா, அந்த பொண்ணுக்கு இவளோ நாள் கல்யாணம் ஆகாம இருக்கறதால தான் இவரு கல்யாணம் பண்ணிருப்பான்னா நினைக்கிற? இவங்களுக்குள்ள ஏதோ பிடிச்சிருக்கு போல. அதனால தான்.”

“இருக்கும், சொத்தும் வெளில போகாம இருக்கும்னு மகேந்திரனே மச்சினிச்சிய கல்யாணம் பண்ணிட்டான் போல. இருந்தும் அந்த பொண்ணு எப்படி ஒத்துக்கிச்சு?”

“யாருக்கு தெரியும், ஆரம்பத்துல இருந்தே அந்த பொண்ணுக்கு அவங்க மாமனை பிடிச்சிருக்கு போல. அதனால தான் இங்கேயே இருந்திடிச்சு. என்ன பண்றது, அந்த பைரவி பொண்ண சொல்லணும். எல்லாம் தெரிஞ்சும் தெரியாதமாதிரி  இருந்திருக்கு. இதெல்லாம் பெரிய இடத்துல சகஜம் போல.”

“ஆமா, ஒருவேளை புருசனும், தங்கச்சியுமே சேந்து தான் இப்டி அந்த பைரவி புள்ளைக்கு ஆக்சிடென்ட் பண்ணிட்டாங்களோ என்னவோ யாரு கண்டது.. எப்படி தான் இரண்டுபேருக்கும் துரோகம் பண்ண மனசு வந்ததோ?” என பேசியவை அனைத்தும் கேட்ட ஆதர்ஷ் தன் சித்தி, அப்பாவின் மேல் கோபமும், குழப்பமும் கொண்டான். இறுதியாக சடங்கு அனைத்தும் முடிந்த பின் அவன் அப்பாவிடம் “ஏன் பா நீங்க சித்திய கல்யாணம் பண்ணீங்க? அம்மா இப்டி அடிபட்டதாலயா?” என

ஏற்கனவே பிறரிடம் கோபத்தில் இருந்தவன் அதை ஆதர்ஷ் மீது காட்டி கத்திவிட்டார். முதன்முறையாக தவறு செய்யாமல் கேள்வி கேட்டதற்காக இத்தனை கோபம் என்றால் அப்பா மீதுதான் தவறு என தீர்மானித்தான். அவர் பதில் கூறாமல் இருப்பது, அம்மாவிடம் பேசாமல் இருப்பது அதோட சித்தி கருவுற்றிருக்க வீட்டிற்கு வந்த செல்வம் குடும்பத்தினர் ‘மனுஷன் ஏதோ பிடிக்காம மனைவியை பாத்துக்க, குழந்தைக்காக கல்யாணம் பண்ணாருன்னு பாத்தா அவரு சந்தோசமா தான் இருந்திருக்காரு.. ஒருவேளை முன்னாடியே விரும்பம் இருந்திருக்குமோ?’ என பாட்டியிடம் கூறிவிட்டு செல்ல இறுதியில் பாட்டிக்கும் மகேந்திரனுக்கும் வாக்குவாதம் வர மகேந்திரன் கத்திவிட்டு செல்ல பாட்டி புலம்ப ஆரம்பித்துவிட்டார். “என் 2 பொண்ணுங்க வாழ்க்கையும் இப்டி ஆகிடுச்சே.. என் பொண்ண இப்டி தப்பா பேசுறத கேட்கத்தான் நான் இன்னும் இருக்கேனா? கண்டிப்பா இவங்க எல்லாரும் ஏதோ சதி பண்ணிட்டானுங்க.. என் முத பொண்ணு இனி நடக்கவே முடியாம படுத்த படுக்கையா இருக்கா. இரண்டாவது பொண்ணு தான் அக்கா வாழ்கையவே கெடுத்திட்டான்னு ஊரே சொல்லுது.” என புலம்பி கொண்டே இருந்தவர் அடுத்த ஒரு நாளில் இறந்துவிட ஆதர்ஷ்க்கு வீடே சூனியமாக இருந்தது. அவனுக்கு அடிபட, வீட்டில் நடந்த நிகழ்வுகள், அடுத்தடுத்த இறப்பு என அவனது படிப்பு பாதியில் நின்றது. பின் மீண்டும் பள்ளிக்கு போக வர வீட்டில் ஆனந்த் மட்டுமே அவனுக்கு அனைத்துமாக இருந்தான். அவனிடம் கேட்டால் இப்போ நான் உனக்கு சொன்னாலும் புரியாதுடா. கொஞ்சம் பொறுமையா இரு. அப்பா காரணம் இல்லாம இப்டி பண்ணமாட்டாங்க. எல்லாம் சரி ஆய்டும். என கூறுவான். அம்மாவிடம் அவ்வப்போது சென்று பேசிவிட்டு வருவான். குழந்தை சிந்து பிறந்த சில காலம் கழித்து குழந்தையை மட்டும் பார்ப்பான் விளையாடுவான். ஆனா அப்பா, சித்தியிடம் ஒதுங்கியே இருந்தான். அவன் பத்தாவது படிக்கும் போது மகேந்திரனுக்கு சிறந்த தொழிலதிபர் என விருது வழங்கினர். அதற்காக இவரது வீட்டில் தனிப்பட்ட முறையில் அனைவரையும் அழைத்து விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.  புது பிஸ்னஸ் துவங்க பார்ட்னெர்ஷிப் போட அங்கே வந்த முன்னணி தொழிலதிபர் சர்மா முன் வர மகேந்திரனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

 

அந்த விருந்தில் ஏன் இருக்கிறோம் என ஆதர்ஷ் கடைமைக்கு என ஓரமாக அமர்ந்திருக்க சர்மாவின் மகள் தீக்ஸா மற்றும் அவளுடைய நண்பர்கள் கூட்டம் அங்கே வந்து அவனிடம் சீண்ட அவன் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டான். தீக்ஸாவிற்கு எப்போவுமே தான் அழகு என பெருமை, அனைத்து வாலிபர்களும் தன்னிடம் வந்து நிற்பதில் அவள் கர்வமாக இருக்க முதன்முறையாக ஆதர்ஷ்ன் இந்த செயல் அவளுக்கு கோபம் கொடுக்க அவளது தோழிகள் அவளை மேலும் சீண்ட பெட் கட்ட அவள் மீண்டும் ஆதர்சிடம் சென்று அவனிடம் பேச மற்ற பசங்களை போல இவனும் தன் பின்னால் வருவான் என காட்ட வைக்க பிரண்டா இருக்கலாம் என அவள் பேசி கொண்டே இருக்க, அவன் எனக்கு இந்த மாதிரி விடாம பேசுறது, பிரண்ட்ஷிப் எல்லாம் பிடிக்காது. என்னை டிஸ்டர்ப் பண்ணாத. என முகத்தில் அடித்தமாதிரி பேசிவிட்டு செல்ல அவளுக்கு ஏற்பட்ட பெரிய அவமானமாக எண்ணி அவனை பலி வாங்க எண்ணினாள். சிறிது நேரத்தில் அவன் தோட்டத்தில் இருக்க, இவளும் தோட்டத்திற்கு சென்று அங்கிருந்து கத்திவிட்டு முன்னே ஓடிவர அனைவரும் அவளிடம் வந்து என்னவாயிற்று என கேட்க

“ஆதர்ஷ், என்கிட்ட பேசிட்டு தோட்டத்துக்கு கூட்டிட்டு போனான்.  ட்ரிங்க் பண்ண சொன்னான். எனக்கு இன்டெரெஸ்ட் இலேனு பிடிக்காதுன்னு சொன்னேன். அவன் ஹே கமான், நீ பாரின்ல வளந்தவ தானே. ஜஸ்ட் இதெல்லாம் அங்க சாதாரணம் தானே.. அங்க இந்தமாதிரி ரூல்ஸ் எல்லாம இருக்கு. அங்க எவ்ளோ ட்ரிங்க்ஸ் அடிச்சிருப்ப, பப்புக்கு போயிருப்ப.. அது மட்டும் தானா? டேட்டிங் எல்லாம் கூடவா? என கேட்டுக்கொண்டே கிஸ் பண்ண ட்ரை பண்ணான். நான் கத்திட்டு ஓடிவந்திட்டேன். என அழ அனைவரும்

“அமைதியா பையன் இருக்கானேன்னு பாத்தா, இப்படியா இருப்பான்? ச்சாச்சா… மகேந்திரன் என்னதிது?”

“அட அவரை கேட்டு என்ன பண்றது பையனுக்கும் வயசு அப்டி? அப்போ அப்டித்தான் இருக்கும்.”

“ம்ம்.. 10த் எக்ஸாம் எழுதிருக்கான்ன்னு சொன்னிங்க. இந்த வயசுலையே இப்படியா?”

“அவனுக்கு அடிபட்டது வீட்ல இருந்த சூழ்நிலை நாளா 2 வருஷம் படிப்பை நிறுத்திட்டு அப்புறம் படிக்கிறான். இல்லாட்டி பையன் இந்த வருஷம் 12வாது முடிச்சு காலேஜ் போயிருப்பானே.” என

அனைவரும் ஆதர்ஸை பார்க்க அவன் தீக்ஸாவை முறைத்துவிட்டு “நான் எதுவும் பண்ணல. அவ பொய் சொல்றா.” என கூறினான்.

ஆனால் அனைவரும் அந்த பொண்ணு இவ்ளோதூரம் அழுதுகிட்டு சொல்லுது அதுகூட பொய்னு சொல்றியா? என

“அழுதா உண்மையாகிடுமா? அவதான் என்கிட்ட வந்து வந்து பேசுனா. நான் மதிக்காம போய்ட்டேன். அதான் இப்டி பொய் சொல்றா..” அனைவரும் இப்போவே எப்படி பேசுறான். தப்பு பண்ணிட்டு எவ்ளோ தைரியமா நிக்குறான். எல்லாம் வளர்ப்பு அப்டி. அப்பா சரியா இருந்திருந்தா பையன சரியா வளத்துவாரு. இங்க அவரே இப்டி இருக்கும் போது பையனை எப்படி கேள்வி கேக்கறது.?” என ஆளாளுக்கு பேச

மீண்டும் ஆதர்ஷ் ” நான் தப்பு பண்ணலனு சொல்லிட்டேன். ஆனா நீங்க யாரும் நம்பலேல?” என கத்த  மகேந்திரன் அவனை அறைந்துவிட்டார்.

ஆதர்ஷ் எதுவும் கூறாமல் மாடிக்கு சென்றுவிட்டான்.

 

சிறிது நேரம் கழித்து வேலை விஷயமாக வெளியே சென்ற  ஆனந்த் திரும்பி வந்ததும் ஏதோ சரியில்லை என தோன்ற மகேந்திரனிடம் செல்ல அங்கே சர்மா மகேந்திரனிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

“பாருங்க ஓரளவுக்கு உங்களை பத்தி தெரிஞ்சதால நான் சொல்றேன். பிஸ்னஸ்ல முதல வரது மட்டும் முக்கியமில்லை. நீங்க சம்பாரிக்கறதே பசங்களுக்கு தான். அவங்க சந்தோசம் இருக்கானு முதல பாருங்க. அவங்கள புரிஞ்சுக்கோங்க. அவங்க சொன்னமாதிரி இப்போ ஆதர்ஷ்க்கு காலேஜ் படிக்கற வயசுன்னா நீங்க இத்தனை பேர்முன்னாடி செய்யாத தப்புக்கு அடிக்கும்போது அவனுக்கு எவளோ சங்கடமா இருக்கும்.” என

மகேந்திரன் அதிர்ச்சியாக பார்க்க அவர் தோளில் தட்டிவிட்டு “எனக்கு புரியுது மகேந்திரன், அது உங்களுக்கும் தெரியும், இருந்தும் அங்க மத்தவங்க உங்ககிட்ட கேட்ட கேள்விகள் அந்த கோபத்தை யார்கிட்ட காட்றதுன்னு தெரியாம அவன் மேல காட்டிட்டீங்க. ஆனா அவன் நிலமைல இருந்து யோசிச்சு பாருங்க. அப்போ உங்களுக்கு புரியும்.”

மகேந்திரன் “தேங்க்ஸ் சார். உண்மைதான்… என் பையனுக்கு ட்ரிங்ஸ் எல்லாம் பிடிக்காது. அவன் கொஞ்ச வருசமா எல்லார்கிட்டயும் பேசுறதையே நிறுத்திட்டான்.. அவன் அந்த தப்ப பண்ணிருக்கமாட்டான். ஆனா உங்களுக்கு எப்படி அது பொய்னு தெரியும்.”

அவர் மெலிதாக புன்னகைத்து விட்டு “அத்தனை பேர் இருந்தாலும் தான் தப்பு பண்ணலனு உங்க பையன் அங்க நின்னு தைரியமா சொன்ன எல்லாரையும் பாத்து சொன்னவிதம், அவன் முறைச்சதுல என் பொண்ணே பயந்து உண்மைய உளறிருப்பா, அத சமாளிக்க தான் அழுதிருக்கா. சும்மா பதட்டப்படாம பொறுமையா ஆனா அழுத்தமா அவன் நின்னது அதுலையே தெரிஞ்சது அவன் மேல தப்பில்லைனு. நீங்க அடுச்சதும் கூட அவன் அசரல. உண்மையாவே நானே ஆச்சரியப்டுட்டேன். உங்க பையனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. அவனோட நேர்மை, குணம், பிரச்சனையா சமாளிக்கற விதம் தைரியம் எல்லாமே. அதோட என் பொண்ணை பத்தியும் எனக்கு தெரியும். அம்மா இல்லாத பொண்ணு. அவ சௌரியமா வளரணும்னு பணம் சம்பாரிக்க நான் வந்துட்டேன். அவளை கவனிக்காம விட்டுட்டு இப்போ பீல் பண்றேன். அவ சொன்னமாதிரி ட்ரிங்ஸ் பண்ணுவா, பப்புக்கு போவா. தப்பான பொண்ணு இல்லை. ஆனா கொஞ்சம் ஆணவம் திமிரு. தான் அழகு. தனக்கு எல்லாமே கிடைக்கும்னு. அதனால வந்த வினை தான் இதெல்லாம். என் பொண்ணு பண்ண தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.” என கூறிவிட்டு சென்றார்.

 

நடந்தவற்றை ஆனந்திடம் சொல்ல அவன் கோபம் கொண்டு முதல் முறை தந்தையிடம் கத்தினான். “அப்பா, அவருக்கு தெரிஞ்ச அளவுக்கு கூட உங்களுக்கு நம்ம ஆதர்ஷ் பத்தி தெரிலையா? இவளோ நாள் நானும் நீங்க ஏன் சித்திய கல்யாணம் பண்ணிங்கனு கேள்வியை உங்ககிட்ட கேட்டதில்ல. உங்ககிட்ட ஒரு நியாயம் இருக்கும்னு நம்புனேன். அப்பா எது பண்ணாலும் காரணம் இருக்கும்னு முழுசா நம்புனேன். ஆனா நீங்க இன்னைக்கு என்ன பண்ணிருக்கீங்க? ஊர்ல இருக்கறவன் ஆயிரம் கேப்பான். கேட்டா ஒன்னு அங்க பிரச்சனையா சமாளிங்க. இல்லை பதில் சொல்லுங்க. தேவையில்லாம இனி ஆதர்ஷ அடிக்காதிங்க. அப்டி நடந்தது அவன் இங்க இருக்கவே வேண்டாம். அவனை ஹாஸ்டல்ல வெளியூர்ல சேத்திவிட்டு படிக்கவெச்சடலாம். அவனாவது அங்க நிம்மதியா படிச்சிட்டு இருக்கட்டும். நம்மகிட்ட வந்து அவன் தான் பாவம் ரொம்ப கஷ்டப்படுறான். அவனை சுத்தி ஏன் இதெல்லாம் நடக்கிதுன்னு தெரியாமலே அவன் அதோட வாழ்ந்திட்டு இருக்கான். இதுல இந்த மாதிரி பிரச்சனை வேறயா? நம்ம அப்பாவே நம்மள நம்பலேனு அவன் பீல் பண்ணமாட்டானா?…” என பொரிந்து தள்ள

 

மகேந்திரன் அமைதியாக சோபாவில் உட்கார்ந்தவர் “நீ சொல்றது உண்மைதான்.. என் பிரச்சனையா நான் அவன் மேல போட்டு திணிச்சிட்டு இருக்கேன். நீ சொன்னமாதிரி அவனை ஹாஸ்டல்ல சேத்திடலாம். அதுதான் அவனுக்கும் நல்லது. ஒரே வீட்ல இருந்து அவன் என்கிட்ட, கல்யாணிகிட்டன்னு யாருகூடவும் சாதாரணமா பேசாம ஏதோ முள்ளு மேல இருக்கறமாதிரி சங்கடப்படுறான். இது அவனோட ராஜ்ஜியம். ஆனா அவன் தனியா இருக்கறத பாக்க கஷ்டமா இருக்கு. அவன்கிட்ட நீ பேசு. ஹாஸ்டல் சேர்ரதுக்கு.” என வருத்தத்துடன் பேசிவிட்டு நகர்ந்தவர் மீண்டும் அவனை அழைத்து “ஆனா என் பையன நம்பாம இல்லைடா.. நான் நம்ம பழைய ஆதர்ஷ ரொம்ப மிஸ் பண்றேன்.” என்று கூறிவிட்டு சென்றார்.

 

ஆனந்த்க்கும் வருத்தம் தான். இருப்பினும் வேறு வழியில்லை என யோசித்தவன் ஆதர்ஸிடம் செல்ல அவன் டேபிலில் தலை சாய்த்து அங்கே இருந்த பொம்மையை பார்த்துக்கொண்டிருந்தான். அவனிடம் சென்று அவன் தலையை வருடிவிட அவன் “நான் தப்பு பண்ணல அண்ணா. பொய் சொல்லல. அப்பாக்கு தெரியும்ல. அப்புறம் ஏன் செய்யாத தப்புக்கு என்ன அடிச்சாரு” என தெளிவாக ஆனால் வளர்ந்த குழந்தையாக அவன் கேட்க ஆனந்த் பதில் கூறமுடியாமல் அப்டியே இருக்க பின் பெருமூச்சுடன் “ஆதர்ஷ், உனக்கு இங்க இருந்தா கஷ்டமா இருக்கும். நீ ஹாஸ்டல் போயி படிக்கிறயா?.. எங்களுக்கு..” என அவன் முடிக்கும்முன் “போறேன் அண்ணா. நான் போய்ட்றேன். என்னால நம்ம வீட்ல இப்படி இருக்கமுடில. எனக்கு அடிபட்டு எல்லாமே மறந்தபிறகு நீ சொன்ன அண்ணா நாம பாமிலியா முன்னாடி எல்லாம் ரொம்ப ஜாலியா இருந்தோம்னு எனக்கு அது எதுவும் ஞாபகம் வரல. ஆனா, அதுக்கப்புறம் எந்த ஒரு நிமிசத்துலையும் நான் நம்ம எல்லாரும் ஒண்ணா இருந்து பேசி சிரிச்சு பாத்ததேயில்லை. அதோட எனக்கு நிறையா கேள்விகள் குழப்பங்கள் தான் இருக்கு. ஏன் சித்தி இப்டி பண்ணாங்க, அம்மா ஏன் எதுவுமே கேக்காம இருக்காங்க, அப்பா ஏன் பதிலே சொல்லமாட்டேங்கிறாரு. எதுவுமே புரில. நான் இத்தனை வருஷம் வெயிட் பண்ணி பாத்தேன். ஆனா எனக்கு இதுக்கு பதில் கிடைக்காதுன்னு தெரிஞ்சிடிச்சு. நான் இங்க இருக்கமாட்டேன் அண்ணா. நான் போறேன். என்னை ஹாஸ்டல சேத்திவிட்று அண்ணா.” என அவனிடம் மனப்பாரத்தை கூற ஆனந்திற்கு அவன் படும் வேதனையை காணபிடிக்காமல் பதிலும் கூறாமல் வெளியே வந்துவிட்டான். அடுத்து அனைத்தும் விரைவில் நடந்தது.

 

ஆதர்ஷ் ஹாஸ்டல் சேர்ந்து படித்தான். அப்போது தான் வாசு பழக்கம். அவனும் அம்மா இறந்துவிட படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் தொடர இங்கே சேர்ந்தான். இருவரும் முதலில் தங்களது எண்ணத்தில் மூழ்கியிருக்க கொஞ்சம் கொஞ்சமாக வாசு வெளியே வர துவங்கினான். ஆதர்ஷ் பேசுவது, படிப்பது, நண்பன் என வாசுவோடு சுற்றுவது என அனைத்தும் இருந்தாலும் எதையோ இழந்த உணர்வு அவனுக்குள் இருந்துகொண்டே இருக்கும்.

பின் ஆதர்ஷ் பிபிஏ சேர , வாசு பிகாம் சேர்ந்தான். அங்கே விக்ரமுடன் வாசுவிற்கு பழக்கம் ஏற்பட்டது. இருந்தும் ஆதர்ஷ், வாசு நட்பு என்றும் நிற்கவில்லை. முதுநிலை பட்டம் மூவரும் MBA படித்தனர். விக்ரம், ஆதர்ஷ் இருவரும் படிப்பு, விளையாட்டு என அனைத்திலும் அடுத்தடுத்தே இருந்தனர். ஆதர்ஷ் முதல் இடம், விக்ரம் அடுத்து என இருக்க விக்ரமிற்கு அது சற்று எரிச்சலாகவே உணர்ந்தான். அடுத்து மூவரும் ஒரு கம்பெனியில் ஒரு அனுபவமா இருக்கட்டும் என வேலைக்கு சேர்ந்தனர். இன்னமும் ஆதர்ஷ்க்கு அடுத்த நிலை தான் தன்னுடையது என இருக்க விக்ரம் ஜெயேந்திரனிடம் பேசும்போது புலம்ப அதுவும் கோபத்துடன், அப்போதுதான் அவர் இவனை பற்றி ஆதர்ஷ் விக்ரமின் அண்ணன், எந்த பிரச்னை ஏன் குடும்பம் பிரிந்தது என அனைத்தும் கூறினார். மகேந்திரனுக்கு என் மேல கோபம், எங்க சண்டைல பாவம் அவனை கண்டுக்காம விட்டுட்டோம்னு நான்  நினைக்காத நாளே இல்லைடா. இப்போதைக்கு ஆதர்ஸிடம் எதுவும் சொல்லவேண்டாம் என கூறிவிட்டு சென்றார்.

 

ஆதர்ஷ் காலேஜ் சேரும்போதே ஆனந்திற்கு கல்யாணம் நிச்சயம் செய்ய அப்போவும் கூட ஒரு நாள் முன்னே சென்றுவிட்டு கல்யாணம் முடிந்த அடுத்த நாள் திரும்பிவிட்டான். பின் சிறிதுகாலம் பழக பழக அண்ணி சாந்தியின் குணம் அம்மா சித்தி எப்படி தன்னிடம் இருக்கவேண்டும் என நினைத்தானோ அதை போல இருக்க கொஞ்சம் அவர்களோடு நன்றாக பேச துவங்கினான். வீட்டிற்கு என்றால் அண்ணா, அண்ணி, தங்கை சிந்து, அடுத்து குட்டி பையன் சஞ்சீவ் என குடும்பம் அவனுக்கு கொஞ்சம் பிடித்துவிட இவர்களுக்காக என அவ்வப்போது போக வர இருந்தான். இருப்பினும் மற்றவர்களுடன் ஒதுக்கத்துடன் இருக்க புது ப்ராஜெக்ட்.. லண்டன் போகணும். மூணு மாசம். சீக்கிரம் கிளைண்ட் ஓகே சொல்லிட்டா நீங்க வேலை முடிஞ்சதும் கூட வந்தடலாம். ஆனா ரொம்ப ஒர்க் இருக்கும். பாத்துக்கோங்க. என அவனை அனுப்ப கம்பெனியில் கேட்க

ஆனந்திடம் ஆதர்ஷ் “அண்ணா, ப்ராஜெக்ட் விஷயமா போறேன் என விபரம் கூற”

ஆனந்த் “டேய், நம்ம பிஸ்னஸ் இங்க இருக்கு. இதை நீ பாத்துக்கோடா. ஏன் நீ வெளில போயி வேலை பாக்கணும்.”

“இல்லை அண்ணா, எனக்கு இந்த சொத்து பணம் இதெல்லாம் பிடிக்கல. வாழ்க்கைக்கு பணம் வேணும். அது நாம வாழற அளவுக்கு இருந்தா போதும்னு நான் நினைக்கறேன் அண்ணா. இந்த மாதிரி சொத்து பணம் இதெல்லாம் பாத்து இழந்தது அதிகம். பிஸ்னஸ் பிரச்சனைல தானே எனக்கும் அம்மாவுக்கும் ஆக்சிடென்ட் ஆகி அம்மா இப்போ இப்டி இருகாங்க..

இந்த சொத்து பணம் இதெல்லாம் பாத்துக்க, அதுக்கு ஆசைப்பட்டுத்தானே அப்பாவும், சித்தியும் கல்யாணம் பண்ணாங்க..” ஆனந்த ஏதோ சொல்லவர

ஆதர்ஷ் “அப்டினு எல்லாரும் பேசிக்கறாங்க. ஆனா உண்மை என்னனு எனக்கும் உனக்குமே தெரியாதே அண்ணா…? அதோட நான் இன்னைக்கு உங்க எல்லாரையும் விட்டு விலகி இருக்க கடைசிகாரணம் அப்பா நான் செய்யாத தப்புக்கு என்னை தண்டிச்சது. அன்னைக்கு ஏன் அவரு அப்டி பண்ணாரு. எல்லாரும் கேள்வி கேக்கறன்னு. அங்க பதில் சொல்ல முடில. அந்த பிரச்சனையா சமாளிக்க முடிலனு தானே. அப்டி ஒரு கேள்வி வரதுக்கு யாரு காரணம், ஏன் அன்னைக்கு மட்டுமா எல்லாரும் பேசுறாங்க. அவர் அந்த தப்பு பண்ணதுல இருந்துதானே. அப்புறம் எதுக்கு எல்லாருக்கும் விருந்து பார்ட்டினு வெச்சு அவரே அசிங்கபட்டுக்கணும். கேட்டா பிஸ்னஸ். ” என விரக்தியாக புன்னகைத்தவன் “நாம வாழறதுக்காக தான் அண்ணா இந்த வேலை பிஸ்னஸ், சொத்து எல்லாம். ஆனா அதுல ஊறிட்டா அது தான் நம்மள ஆட்டிவெக்கிது. என்னால அந்த மாதிரி வாழமுடில அண்ணா. ப்ளீஸ் என்னை கம்பெல் பண்ணாத.” என அவன் இங்கே இருக்க சொல்லி  கேட்ட அனைத்தும் ஆதர்ஷ் மறுத்துவிட்டு கிளம்பினான்.

 

கிளம்பினாலும் ஆதர்ஷ்க்கு மனம் கனக்க அண்ணா இத்தனை நாள் இல்லாம நம்மகிட்ட ஒன்னு கேட்டிருக்கான். பிஸ்னஸ் பாத்துக்கவேண்டாம். ஆனா கூடவாது இருன்னு. அவன் இவளோ தூரம் கேக்குறான். சரி இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சதும் அண்ணா ஆசைப்படியே ட்ரான்ஸபெர் வாங்கிட்டு போய்டலாம். இல்லை அங்கே போயி வேற வேலை பாத்துக்கலாம். வீட்ல இருப்போம். இப்போதான் அண்ணா அண்ணி குட்டிஸ் எல்லாரும் இருக்காங்களே, முதல இருந்த இறுக்கம் வீட்ல கொஞ்சம் இல்லாம இருக்கும் என முடிவுடன் லண்டன் சென்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 18ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 18

18 – மனதை மாற்றிவிட்டாய் ஆதியும், அர்ஜுனும் அவனது அறையில் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தனர். கீழே இரவு உணவு தயாராக ஈஸ்வரியும், சோபனாவையும் கூப்பிடனும் என்றவுடன் திவி முதல் ஆளாக நான் போறேன் அத்தை என்று கத்த ஒன்னும் வேணாம். போயி நீ

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66

66 – மனதை மாற்றிவிட்டாய் அதிகாலையே எழுந்தவன் டாக்டர்க்கு கால் செய்தான். அவரிடம் விஷயத்தை கூற அவரை சென்று அழைத்துவந்தவன் வீட்டில் அனைவர்க்கும் இவன் படித்ததில் அவர்களுக்கு தேவைப்படுவதை அவள் மனநிலை பற்றி மட்டும் கூற முழுதாக கேட்டுக்கொண்ட டாக்டர் “ஓகே

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77

77 – மனதை மாற்றிவிட்டாய் பாட்டி, ஈஸ்வரி, சந்திரா அனைவர்க்கும் மகிழ்ச்சி தாளவில்லை. ஈஸ்வரி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு அழத்துவங்க அனைவரும் அவரை சமாதானபடுத்தினர். பின் ஆதியும், திவியையும் அழைத்து திருஷ்டி சுற்றி போட்டுவிட்டு பட்டுப்புடவை வேஷ்டி கொடுத்து கட்ட சொல்லி