Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 20

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 20

20 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

இன்னும் இரண்டு நாட்களில் விக்ரம், சஞ்சனா நிச்சயதார்த்தம் வைக்க அனைவரும் அதில் தீவிரமாக வேலை செய்தனர். நிச்சயத்திற்கு முந்தைய நாள் எல்லோரும் ஒன்றாக உணவருந்தும் வேளையில் ஜெயேந்திரன் வாசு ப்ரியாவை கண்டுகொண்டதால் “என்ன வாசு, விக்ரம் கல்யாணத்தோட சேத்தி உனக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு இருக்கோம்… தனமும் கூட அதைத்தான் ஆசைப்பட்டா. எங்களுக்கு தெரிஞ்ச பொண்ண சொன்னாங்க. ரொம்ப அடக்கமான, வாயே பேச தெரியாத ரொம்ப நல்ல பொண்ணுபா நீ சரினு சொல்லிட்டா உடனே கூப்பிட்டு பேசிடலாம். உன்னை கடைசிவரைக்கும் பிரச்சனை இல்லாம பாத்துக்குவா..  நாங்க பொண்ணு பாக்கவா?” என வினவ

வாசு “அடக்கமான, வாயே பேச தெரியாத பொண்ணா? பாக்கலாமே…” என ஒரு எதிர்பார்ப்புடன் கத்தி கூற பிரியா கொலைவெறியுடன் அவனை முறைக்க இளையோர் அனைவரும் தங்களுக்குள் சிரித்தனர். உண்டு முடித்து ப்ரியாவிடம் “பிரியா, சும்மா டா..பொண்ணு எப்படி இருக்குனு பாக்கத்தான் அப்டி சொன்னேன். நான் உன்னை விட்டுட்டு போவேனா?”

 

பிரியா “நம்பிட்டேன்… ஒன்னும் தப்பில்லை… நானே சொல்றேன்.. போ போயி பொண்ணு பாத்துட்டு வா..” என சிரித்துக்கொண்டே கூற ஒரு ஆர்வத்தில் வாசுவும் “நிஜமாவா? எனக்கு தெரியும் தங்கோ… நீ மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல… என் பீலிங்ஸ நான் சொல்லாமலே நீ புரிஞ்சுப்ப…” என பக்கத்தில் இருந்து விக்ரம், அக்ஸா எல்லாரும் வேண்டாம் என சைகை காட்ட அது அவனுக்கு புரிவதற்குள் தலையில் ஒரு மேடு ஏறி இறங்கியது.. வாங்கி அடியின் வீக்கம் அப்டி…

பிரியா “உனக்கு எவ்ளோ கொழுப்புடா… எப்படி எப்படி எல்லா பொண்ணுங்களையும் பாக்கிறது தான் உங்க பீலிங்கா…. அத என்கிட்டேயே வேற சொல்ற…”

விக்ரம் “அதுவும், அடக்கமான நல்ல பொண்ணான்னு கேட்டு ஷாக் ஆகுற? அப்போ பிரியா அப்டி இல்லனு சொல்லாம சொல்றியா?” என ஏத்திவிட

பிரியா “இன்னைக்கு நீ காலி.  ஆதர்ஷ் அண்ணா உங்க பிரண்ட்ட கடைசியா பாத்துக்கோங்க….”

ஆதர்ஷ் “பரவால்லமா, அவனுக்கு இது தேவைதான்…அது உன் ப்ரொபேர்ட்டி பிரியா.. நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ.” என

வாசு “நீயுமாடா ….டேய் துரோகி சும்மா இருங்கடா… பிரியா, எனக்கு ஒரு 5 நிமிஷம் டைம் குடேன்… அதுக்குள்ள நான் அங்கிள்கிட்ட பேசிட்டு வந்துடறேன்…நான் உன்னை வம்பிழுக்க தான்டா அப்டி சொன்னேன்… மத்தபடி எதுவும் இல்ல…” என ஓடியவன்

ஜெயேந்திரனிடம் சென்று “அங்கிள், நான் ஒண்ணு சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க.. நீங்க பாத்த பொண்ணுகிட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க அங்கிள்” என முழு சோகத்தையும் முகத்தில் காட்ட

ஜெயேந்திரன் “ஏன்பா, என்னாச்சு… நீ கூட சந்தோசமா தானே பொண்ணு பாக்கலாம்னு சொன்ன? இப்போ என்ன பிரச்னை? ”

“இல்ல அங்கிள் வேண்டாம்.. அது ஒத்துவராது..”

“அட என்ன பிரச்சனைனு சொல்லு வாசு… நல்ல பொண்ணு, அடக்கமான, அதிகம் எதித்து பேச தெரியாத பொண்ணுங்க கிடைக்கறது எல்லாம் இந்த காலத்துல கஷ்டம்பா… ”

“என்ன பண்றது அங்கிள், எனக்கு அந்த கொடுப்பினை இல்லையே?” என பெருமூச்சுடன் சொல்ல எதிரில் பிரியா கொலைவெறியுடன் நிற்க வாசுவிற்கு என்னசொன்னோம்னு இப்டி முறைக்கிறா? என தான் கூறியதை யோசிச்சதவன் செய்வதறியாது அனைவரையும் பார்த்து உதவிக்கு அழைக்க அனைவரும் அவன் நிலை கண்டு சிரித்தனர். மீண்டும் வாசுவிடம் தனம் காரணம் வினவ பின் விக்ரம் “அம்மா, அவனும் ப்ரியாவும் லவ் பண்ராங்க. நீங்க வெளில பொண்ணே பாக்கவேண்டாம். சார் இங்கேயே ரெடி ஆகிட்டாரு..” என

தனம் மகிழ்ச்சியாக “ரொம்ப சந்தோசம்” ஜெயேந்திரனிடம் “ஏங்க உங்களுக்கு முன்னாடியே விஷயம் தெரியுமா?”

அவரும் தெரியும் என்பது போல தலையசைக்க வாசு “அப்புறம் ஏன் அங்கிள் இப்டி மாட்டிவிட்டீங்க?”

“வாசு, நல்லா யோசிச்சு சொல்லு.. பொண்ணு இருக்குனு நான் சொன்னேன் சரி.. அது ஓகே பாக்கலாம்னு நானா சொன்னேன்? நானா மாட்டிவிட்டேன்? நீ உன் உள் மனசுல இருக்கற ஆசை வெளில வந்திடுச்சுபா நான் என்ன பண்றது? நீ உனக்கு ப்ரியாவை தான் பிடிச்சிருக்குன்னு சொன்னா நான் என்ன சொல்லப்போறேன் சொல்லு… ” என அவரும் அவர் பங்கிற்கு கூற பிரியா உச்சகட்டத்திற்கே சென்றுவிட வாசு அவள் பின்னால் மன்னிப்பு கேட்க சென்றுவிட்டான்.

அவனின் நிலை கண்டு அனைவரும் கிண்டல் செய்ய

பிரியா “போடா பக்கத்துல வராத…. எவளையாவது போயி கட்டிக்கோ. உனக்கு அடக்கமான பொண்ணு தானே வேணும்..” என அவள் கத்திகொண்டே இருக்க

வாசு “எனக்கு என்னை புரிஞ்சுகிட்ட என் அடாவடியான பிரியா தான் வேணும்… நான் சொல்றத கேளு பிரியா… அவங்களுக்கு தெரியும்னு எனக்கு முன்னாடியே தெரியும்.. அக்ஸா, சஞ்சு எல்லாரும் சொல்லிட்டாங்க. அதான் கொஞ்சம் அவங்களோட சேந்து விளையாடலாம்னு அப்டி சொன்னேன்.. மத்தபடி எப்போவும் எனக்கு நீ தான்.. நீயே வேற பொண்ணு பாத்தாலும் நான் ஒத்துக்கமாட்டேன் பா..” என

அவள் சிரித்துக்கொண்டே அவன் தோள் சாய்ந்து “என்னை உனக்கு அவ்ளோ பிடிக்குமா?”

வாசு “அதுவும் தான். அதைவிட முக்கியமான காரணம் தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசு எவ்ளவோ பரவால்ல… இன்னொன்னுகிட்ட என்னால முதல இருந்து அடிவாங்க முடியாது.” என அவள் அடிக்க வர அந்த இடமே மகிழ்ச்சியாக அமைந்தது.

தனம் “எப்டியோ, 2 பேருமே கல்யாணத்துக்கு ரெடி. ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆதர்ஷ் நீ எப்போப்பா கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவ?”

ஆதர்ஷ் “இல்லமா, இப்போதைக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லை. கொஞ்ச நாள் போகட்டும் எப்போன்னு நானே சொல்றேன்.”

வாசு “அப்போ பொண்ணு பாக்கலாம்ல?” என கண்ணடித்து கேட்க அனைவரும் அவன் விளையாடுவதை புரிந்துகொண்டு “அதானே, இப்போ இருந்து பொண்ணு பாக்க ஆரம்பிச்சா அப்புறம் பேசி கூட அவங்களை வெயிட் பண்ண சொல்லிக்கலாம்.”

ஜெயேந்திரன், தனம் இருவரும் “கரெக்ட் தானே ஆதர்ஷ் அவங்க சொல்றது. பொண்ணு பாத்து செலக்ட் பண்றது என்ன சும்மாவா? நீ வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தியேனு தான் உன்கிட்ட கேட்டுட்டு இருக்கோம். இல்லாட்டி எப்போவோ பொண்ணு பாத்திருப்போம். நீ சரினு மட்டும் சொல்லு நாங்களே பாக்கிறோம். மத்ததெல்லாம் உனக்கு பிடிச்சாதா..சரியா?” என முழுமூச்சுடன் இறங்கி அவர்கள் வினவ

விக்ரம் “நீங்க பொண்ணு பாருங்க மா.” என்றுவிட்டு வாசுவும், விக்ரமும் வம்பிழுக்க “அந்த ராஜம்  எஸ்டேட் ஓனர் பொண்ணு எப்படி?, இல்லை MK மில் ஓனர் பொண்ணு?” என

தனம் “பேசிடலாமா ஆதர்ஷ் ” என ஆர்வமாக வினவ

ஆதர்ஷ் “ம்ச்ச்… டேய் இரண்டுபேரும் சும்மா இருங்க. விளையாட்டுக்குகூட அப்டி வேற யார்கூடவும் வெச்சு பேசாதீங்க. மா, நானும், அக்சராவும் ஒருத்தர ஒருத்தர் விரும்பறோம். எனக்கு லைப்ன்னா அது அவகூட மட்டும் தான். ” என சாராவை பார்க்க அவள் மெலிதாக புன்னகைக்க “ஆனா நான் இப்போவும் சொல்றேன். கல்யாணம் இப்போ வேண்டாம் எப்போன்னு நானே சொல்றேன். தப்பா எடுத்துக்காதீங்க.” என

ஜெயேந்திரன், “ஹே ஆதர்ஷ், எவ்ளோ பெரிய குட் நியூஸ் சொல்லிருக்க, உன்னை போயி தப்பா எடுத்துக்கறதா? நீ கல்யாணத்துக்கே ஓகே சொல்லமாட்டேன்னு இருந்தோம். ஆனா நீ அக்சரா தான் பொண்ணுன்னு சொன்னதும் எங்களுக்கு வேற என்ன சந்தோசம் இருக்கு. தனத்தை கை காட்டி அவ ஆனந்த அதிர்ச்சில வாயடச்சு போயி நிக்கிறா. எங்களுக்கு அவ்ளோ சந்தோஷம் தெரியுமா?. எங்களுக்கே கூட அந்த ஆசை இருந்தது. நீயும் அக்ஸாவும் நல்ல பொருத்தம்னு ஒண்ணா சேந்தா நல்லா இருக்குமேன்னு தான் யோசிப்போம். உன் கல்யாணத்துல நானே எல்லா வேலையும் இறங்கி செய்யப்போறேன். உன் இஷ்டப்படி நீங்க இரண்டுபேரும் பேசி எப்போ கல்யாணம்னு மட்டும் சொல்லுங்க. ஜாம் ஜாம்னு நடத்திடலாம்.”

தனம் அக்சராவிடம் வந்து த்ரிஷ்டி கழித்து “என் தங்கம். ரொம்ப சந்தோஷமா இருக்கு..”

ஆதர்ஸிடம் திரும்பி “உனக்கு இப்டி ஒருத்திய குடுக்கத்தான் ஆண்டவன் இவளோ காலம் பண்ணிருக்கான் போல. உனக்கு ஏத்த ஜோடி அக்ஸா தான். நாங்க எப்போவுமே அதேதான் நினைப்போம். அக்ஸா இந்த வீட்டு மரு” என முடிப்பதற்குள் ஜெயேந்திரன் “சரிமா, இப்டி பேசிட்டே இருந்தா எப்படி. சீக்கிரம் போயி இனி விசேஷத்துக்கு உண்டான வேலைகளை பாக்கலாம்.” என  சென்றுவிட்டார்.

(ஆதர்ஷ்எனக்கு லைப்ன்னா அது அவகூட மட்டும் தான்என அக்சராவை பார்த்தவன் அவளை அனைவரும் கிண்டல் செய்வது அவள் வெட்கப்படுவது என அவளை ரசித்துக்கொண்டிருந்தான். இவர்கள் பேசியதை ஆதர்ஷ் அக்சரா இருவரும் கவனிக்கும் நிலையில் இல்லை. கவனித்திருந்தால் அன்றே அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் விதியின் விளையாட்டில் தப்பிக்க அவர்கள் மட்டும் விதிவிலக்கல்லவே.)

 

ஆளாளுக்கு வேலைகளை பார்க்க செல்ல ஜெயேந்திரன் தனத்திடம் “என்னமா இப்டி வாய விட பாத்தியே?”

தனம் “இல்லைங்க ஏதோ சந்தோஷத்துல பேசிட்டேன். நம்ம வீட்டு பையன் இப்டி நம்ம கண்ணு முன்னாடியே தனியா  கஷ்டப்படுறானேன்னு சங்கடப்பட்டேன். அவன் வாழ்க்கை இப்டி தனியாவே போய்டுமோனு பயமா இருந்ததுங்க. இப்போ எல்லாம் சரி ஆயிடிச்சுங்க.. இனிமேல் நாம ஏன் அவன்கிட்ட உண்மைய சொல்லாம இருக்கணும்?”

ஜெயேந்திரன் “அவன் எப்படி எடுத்துக்குவான்னு தெரிலையே? இப்போதைக்கு அவனும் கல்யாணம் வேண்டாம்னு தானே சொல்றான். அதான் யோசனையா இருக்கு.”

தனம் “என்னங்க நீங்க இப்டி சொல்றிங்க? அவன்தானே அக்சராவை பிடிச்சிருக்குன்னும் சொன்னான். அத மறந்திட்டீங்களா? சொன்னா அவன் ஒத்துக்குவாங்க.”

ஜெயேந்திரன் “சரி, பாப்போம் ஒரு இரண்டுநாள் அவன் எப்படின்னு யோசிச்சுட்டு சொல்லிக்கலாம்.”

சிறிது நேரத்தில் ஜெயேந்திரன் மிகவும் மகிழ்ச்சியாக ஆதர்ஸை அழைத்து வாழ்த்துக்கள் கூற என்னவென்று விசாரிக்க “நீ சொன்னபடி நிறைய மாற்றங்கள் கார்டன், பிளவர் ஷோ அதுவும் நாமளே பண்ணதுல நல்ல பேரு, அதோட நம்ம எஸ்டேட், காட்டேஜ்ல இருந்து கூட நல்ல ப்ரோபிட். கமிட்டி மெம்பெர்ஸ் முதல சொன்னாங்க, புதுசா இதெல்லாம் எதுக்கு ரிஸ்க், அதோட சின்ன பையன் அவன் எந்த அளவுக்கு பாத்துக்குவான்னு.. ஆனா இப்போ சொல்ராங்க.. நாங்க ஸ்பான்சர் பண்றதுன்னா கூட பண்றோம்னு சொல்ராங்க. நான் வெச்ச நம்பிக்கையை நீ காப்பாத்திட்ட. ரொம்ப சந்தோசமா இருக்கு ஆதர்ஷ்… ” என வாழ்த்த

தனம், மரகதம் அனைவரும் “எல்லாம் அக்சரா அவனுக்கு கிடைச்ச நேரம் தான்.” என அனைவரும் ஆமோதித்து அவனுக்கு வாழ்த்து கூற

ஜெயேந்திரன் “அதோட எல்லாரும் உனக்கு ஒரு விழா வெச்சு என்கரேஜ் பண்ணனும்னு, வேற இந்த மாதிரி பிசினஸ டெவெலப் பண்ற வகைல புதுமையா விஷயங்களை பத்தி பேசணும்னு சொன்னாங்க.. நான்தான் விக்ரம், சஞ்சனா நிச்சயம் அன்னைக்கு உனக்காக விழாவும் நடத்திடலாம்னு சொல்லிட்டேன்….” என அனைவரும் கோரஸாக கத்த ஆதர்ஷ் தயங்கி “இல்லப்பா பங்க்ஷன் எல்லாம் எதுக்கு?” என அனைவரும் அவனை மனதினுள் திட்டிக்கொண்டே வெளியில் அவனை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தினர்.. இறுதியில் அனைவரும் அக்சராவிடம் பேச சொல்ல அவள் “இது எல்லாமே அவரோட உழைப்பு தான். அவரே அத வேண்டாம்னு சொல்லும்போது நான் என்ன சொல்றது?” என அவன் இஷ்டம் என்று விட்டுவிட எல்லாரும் தலையில் அடித்துக்கொள்ள முகத்தை தொங்கபோட்டுக்கொள்ள தனம் “சரி அக்சரா, ஆதர்ஸோட இஷ்டமாவே இருக்கட்டும்.. உனக்கு என்ன இஷ்டம்? நீ இதை பத்தி என்ன நினைக்கிறேன்னு சொல்லு” என வினவ

அக்சரா “கண்டிப்பா விழா வெக்கிறதுல தப்பில்லைனு தான் சொல்லுவேன். விழா வெக்கிறது செலவு, பெருமைக்காக அப்டினு மட்டுமில்லாம என்ன இருந்தாலும் நாம பண்ண விஷயம். அதுவும் இவளோ பேர் எதிர்ப்பை மீறி தைரியமா ஒரு விஷயத்தை செஞ்சு முடிச்சிருக்கோம். நாமளே அத கொண்டாடாட்டி மத்தவங்க எப்படி அத புரிஞ்சுப்பாங்க. பொதுவா விழா வெச்சு ஒருத்தரை பாராட்டும்போது அது அவனை மட்டும் அடுத்த நிலைமைக்கு கொண்டுபோகாது, அத ஒரு பாடமா எடுத்துகிற எல்லாரையும் அடுத்து இடத்துக்கு கொண்டுபோகும். இவனை மாதிரி நாம ஏன் யோசிக்கலேன்னு கொஞ்ச பேர் நினைப்பாங்க, இவனை விட இன்னும் பெஸ்ட்டா பண்ணனும்னு கொஞ்ச பேர் நினைபாங்க,  சின்னவன் தானே இவனுக்கு என்ன தெரியப்போகுதுனு நினச்சவங்க சின்னவங்க, பெரியவங்கனு பாக்காம யார் புதுசா ஒரு விஷயம் சொன்னாலும் அந்த விஷயத்தை கவனிக்கனும்னு நினைப்பாங்க, கொஞ்சம் ரிஸ்க் எடுக்க தயங்கிறவங்க உங்கள மாதிரி ஆளுங்கள முன்உதாரணமா வெச்சு ரிஸ்க் எடுப்பாங்க. இப்டி ஒரு ஒருத்தரும் நினைச்சாலும் எல்லாருக்கும் நல்லதுதானே, ஏன்னா இந்த மாதிரி எந்த எண்ணமுமே தப்பில்லையே, வாழ்க்கைல அடுத்த கட்டத்துக்கு போறதுக்கான ஒரு உந்துதல் தான். இதுவே உங்களை பத்தி தெரியாத போது எல்லாரும் என்ன பேசிக்குவாங்க ஜஸ்ட் “ஏதோ புதுசா ஒருத்தன் வந்தான் பா, ஏதோ பண்ணான், நல்ல லாபமாம்னு சொன்னாங்க. எல்லாம் அதிர்ஷ்டம் தான், இல்லை எல்லாம் பணம் விளையாண்டிருக்கும்னு” அவங்க இஷ்டத்துக்கு பேசுவாங்க. இத சொல்லியே அடுத்து புது முயற்சி எடுக்கறவங்கள தடுப்பாங்க.”அவனுக்கு பணம் இருக்கு, சப்போர்ட்கு ஆள் இருக்கு. அந்த மாதிரி நீங்களும் புதுசா பண்ணி அகலகால் வெக்காதிங்கனு சொல்லுவாங்க. அதுக்கு விழா வெச்சு நீங்க தான் இத பண்ணீங்க, எப்படி பண்ணீங்க, ஏன் உங்களுக்கு இப்டி யோசனை தோணுச்சுனு எல்லாமே அவங்க கேக்கும்போது ஷேர் பண்ணா அவங்களும் தெரிஞ்சுப்பாங்க. உங்கள பாத்து நிறையா பேர் கத்துக்குவாங்க, நல்ல விஷயம் மத்தவங்கள போயி சேரும். அதோட உங்க பேர மிஸ் யூஸ் பண்ணவும் வாய்ப்பிருக்கு. அதுக்கு நீங்க யாரு என்னனு எல்லாருக்கும் தெரிஞ்சா அந்த மாதிரி தப்பு நடக்கிறதும் குறையும்ல..இப்படித்தான் நான் சொல்லுவேன்..” என கூற

அக்சராவை அனைவரும் பார்க்க சஞ்சு “ஒரு விஷயத்தை என்கரேஜ் பண்ணி விழா நடத்துறதுக்கு இவளோ காரணம் இருக்கா?” என ஆச்சரியப்பட அக்சரா சிரித்துக்கொண்டே ஆதர்ஸை பார்த்து “இது என்னோட கண்ணோட்டத்துல சொன்னது. இப்போவும் உங்க சாய்ஸ் தான்” என இந்த முறை ஆதர்ஷ் மெலிதாக புன்னகையுடன் “எனக்கு ஓகே தான்” என அனைவரும் மகிழ்வுடன் கத்தினர்.

 

அக்சராவும், ஆதர்ஷும் வேலையாக வெளியே செல்ல அக்சரா “கோபமா?” என

ஆதர்ஷ் “எதுக்கு?” என புரியாமல் வினவ அக்சரா “இல்லை, வேலை செஞ்சது, ஐடியா, ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணது எல்லாமே நீங்க, ஆனா எல்லாரும் ஒரேவார்த்தைல நான் உங்க லைப்ல வந்ததால எல்லாமே நல்லதா நடக்கிதுன்னு சொல்ராங்க. உங்களுக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லேனு தெரியும். அதான்.” என அவன் புன்னகையுடன் “ம்ம்.. கரெக்ட் தான். ஆனா அத வேற மாதிரி சொல்லலாம். அதனால ஒத்துக்குவேன். அவள் என்ன என்பது போல பார்க்க ஆதர்ஷ் தொடர்ந்து “நீ என் லைப்ல வந்ததும் நான் சந்தோசமா இருக்கேன். என் மனசு ரிலாக்ஸா இருக்கு. முக்கியமா என் மனசுக்கு என் உணர்ச்சிக்கு நான் மதிப்பு முழுசா கொடுக்கறேன். அது எனக்கு ஹெல்ப் பண்ணுது.. மனசு ரிலாக்ஸா சந்தோசமா இருக்கும்போது நல்லா ஆக்ட்டிவ இருக்கும். அதோட என் சாரா என்கூடவே இருக்கா, எப்போவும் இருப்பாங்கற எண்ணமே எந்த கவலையும் இல்லாம பல மடங்கு நான் சாதிக்க எனக்கு ஹெல்ப் பண்ணும்.” சோ நீ என் லைப்ல வந்ததால இந்த சக்சஸ்னு இப்போ சொன்னா ஒத்துக்குவேல்ல?” என

சாரா அவனை பார்த்துக்கொண்டே “யூ சோ ஸ்வீட்… அங்க எல்லாரும் பயங்கரமா கிண்டல் பண்ராங்க..நான் சொன்னாதான் நீங்க கேப்பிங்க அது இதுனு.. அதுங்க பண்ற அலப்பறை இருக்கே “…என இருவரும் சிரிக்க அக்சரா “விழா வெக்க நீங்க ஓகே சொன்னது எனக்காகவா? இல்லை நான் சொன்ன விளக்கம் உங்களுக்கு சரினு பட்டதலையா?” என வினவ

ஆதர்ஷ் “இது யாருக்கு டவுட் அவங்களுக்கா? உனக்கா?”

அக்சரா ம்ம் என யோசித்துவிட்டு “எல்லாருக்குமே.. எனக்கும்தான்..” என மெதுவாக கூறிவிட்டு கீழ் உதட்டை கடிக்க அதில் தன்னை மறந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு அவளை பார்ப்பது போல திரும்பி உக்கார்ந்துகொண்டு “என் சாராக்கு டவுட்ன்னா கண்டிப்பா தீக்கணுமே. சரி சொல்லு இதுக்கு 2 ல எது பதில்னு உண்மை சொல்லவா? பொய் சொல்லவா?” என வினவ

அக்சரா “பொய் சொல்லுங்க..” என

ஆதர்ஷ் சிரித்துவிட்டு “உனக்காக இல்லை ..” என அவளும் சிரித்துவிட்டு “சரி, இப்போ உண்மைய சொல்லுங்க..

ஆதர்ஷ் “நீ சொன்ன இரண்டு காரணமுமே உண்மைதான். நீ சொன்ன விளக்கம் எனக்கு சரினு தான் பட்டது. என்கிட்ட இருந்து கொஞ்ச பேர் தெரிஞ்சுப்பாங்க, அதுல இருந்து அவங்களுக்கு உதவியா இருக்கும்போது அத ஏன் பண்ணகூடாதுனு தோணுச்சு. நான் யாருன்னே தெரியாம இருந்தா நீ சொன்னமாதிரி என் பேர சொல்லி தப்பு நடக்கவும் வாய்ப்பிருக்கு. இப்போ எல்லார்கூடவும் பழகுறதுல, அவங்க சந்திக்கும்போது மத்தவங்களுக்கு நான் எப்படினு ஒரு ஐடியா வந்திடும், எனக்கும் கூட அடுத்து இத முன்னாடி கொண்டுபோறதுக்கு எனக்கு இதை தேவைப்படும். சோ தப்பில்லை, அதோட தேவைன்னு புரிஞ்சது. அப்புறம் என் சாரா சொல்லி நான் ஒண்ண வேண்டாம்னு விடறதா? … ” என அவன் கிண்டலாக இழுத்து கூற அதை உணர்ந்தவள் அவனை ஓரக்கண்ணில் முறைத்துவிட்டு செல்லமாக கையில் அடிக்க, சிரித்துக்கொண்டே அதை வாங்கியவன் அவள் கைகளை தன் கைக்குள் வைத்துக்கொண்டு கூறினான் “நிஜமா தான் சாரா, என் மனசுக்கு, எனக்கு என்ன தேவைன்னு என்னைவிட உனக்கு நல்லா தெரியும். அத நான் முழுசா நம்புறேன். அதனால தான் நீ எனக்கு குடுக்கற எதையுமே நான் வேண்டாம்னு சொல்லமாட்டேன். ஏன்னா அது எனக்கு பிடிக்காதது, தேவையில்லாததுனா நீயே எனக்கு முன்னாடி அத வேண்டாம்னு ஒதுக்கிடுவ, என்கிட்ட அத குடுத்து திணிக்கமாட்ட.” என அவன் அத்தனை உறுதியுடன் கூற

அக்சராவே அவனை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருக்க அவள் முன் சொடக்கிட

அக்சரா “எனக்கு ஆச்சரியமா இருக்கு, என்னை நீங்க இவளோ நம்புறீங்களா? ”

அவன் சிரித்துக்கொண்டே”போலாமா?” என அவளும் தலையசைத்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 23மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 23

23 ஒரு மழை நாளில், சுஜி உனக்கு யாரோ விசிட்டர் என்று ரோசி சொன்னதும், சோம்பலாக படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சுஜி எழுந்து குதித்தோடி வெளியே சென்றாள். போன வாரமே விக்கி வருகிறேன் என்று சொல்லி இருந்தான். பரபரவென ஒரு

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 35ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 35

35 – மனதை மாற்றிவிட்டாய் அதிகாலையில் அனைவரும் நிச்சயம், கோவில் விசேஷம் என கிளம்பு தயாராக திவி கீழே தோட்டத்தில் நின்றிருந்தவளை பார்த்தவன் வேகமாக கீழே வந்து பின்புறம் நின்று இமை கொட்டாமல் பார்த்தான். தன் வெண்டை பிஞ்சு விரல்களை ஈரக்கூந்தலில்

உள்ளம் குழையுதடி கிளியே – 17உள்ளம் குழையுதடி கிளியே – 17

ஹாய் பிரெண்ட்ஸ், உங்க அன்பான கமெண்ட்ஸ் பார்த்தேன். நன்றி நன்றி நன்றி. சின்னையன் – விபிஆர் கமெண்ட்ஸ்கு முன்… பின்…. நன்றி விபிஆர்…. வால்டரை ரொம்பவே ரசிச்சோம் :-). இனி சிரிப்புடன் அடுத்த பதிவுக்கு செல்லலாம். உள்ளம் குழையுதடி கிளியே –