Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 18

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 18

18 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

எங்க எல்லாருக்கும் எவ்ளோ பிரச்னை வந்தபோது எவ்ளோ கண்ணீர், வருத்தம் .. அப்போவும் அக்ஸா எங்ககூட இருந்தா. எங்களுக்கு ஆறுதலா இருந்தா. எங்களை அந்த பிரச்சனைல இருந்து வெளில கொண்டு வந்தா. ஆனா அவளோட பிரச்னைல இருந்து அவளை எங்களால வெளில கொண்டு வர முடில. அவ பேமிலில எல்லாரும் இறந்து இரண்டு வருஷம் ஆகப்போகுது. அவ அன்னைக்கு அழுகல. அந்த நேரத்துக்கு அவளால ஏதுக்கமுடிலன்னு நினைச்சோம்.. கொஞ்ச நாள் ஆச்சுன்னா சரி ஆகிடும்னு நினைச்சோம். அன்னைக்கு அனிஷ் கேட்ட கேள்வி ஈவ்னிங் வந்துடுவாங்கள்ளன்னு. அக்ஸாவும் அதேதான் கேட்டா. இரண்டுபேர்க்கும் எங்களுக்கு வித்யாசமே தெரில. குழந்தைத்தனமா இருக்காளேன்னு தோணுச்சு. நாங்க கூடவே இருந்தாலும் எப்படி இவ தாங்கிக்கப்போறா? சமளிக்கபோறாணு பயந்தோம். ஆனா அவகிட்ட எந்த பிரச்சனையும் இல்லை. ரொம்ப அமைதியா எல்லாத்தியும் ஹாண்டில் பண்ணா. முக்கியமா குழந்தைங்கள. அவ சொன்ன விஷயம் பொய்யாவே இருந்தாலும் குழந்தைங்க அத நம்பி வாழ ஆரம்பிச்சுட்டாங்க. இனிமேல் உண்மைய சொன்னாகூட குழந்தைங்க ஏத்துக்குவாங்க. புரிஞ்சுகிட்டு இவளோ நாள் இருந்த மாதிரி லைப்ப பாத்துகிட்டு வாழ பழகிக்குவாங்கனு எங்களுக்கே ஒரு நம்பிக்கை வந்தது. ஆனா இப்போவும் அக்ஸா அதே மனநிலைல தான் இருக்கா. அவளை நினைச்சாதான் ரொம்ப கவலையா இருக்கு. அவ என்ன நினைக்கிறான்னு கூட தெரில. இந்த இரண்டு வருசத்துல அவ அவங்க பேமிலி பத்தி ஒரு தடவ கூட பேசியோ, பீல் பண்ணியோ நாங்க பாத்ததேயில்லை. அதுவே எங்களுக்கு அவ ஏன் இப்டி ஆகிட்டானு  பயமா இருந்தது… முன்னாடி எல்லாம் மெச்சூரிட்டி  இருந்தாலும் நிறையா குழந்தைத்தனம், சேட்டை இருக்கும். எல்லார்கிட்டயும் வம்பிழுப்பா. ஏதாவது திட்டனும், கொஞ்சணும்னு ரொம்ப எதிர்பார்ப்பா. ஆனா இப்போ மெச்சூரிட்டி கலந்த ஜாலி அதுவும் மத்தவங்களுக்கு, குழந்தைங்களுக்காக தான்னு தெரியுது. சில நேரம் தனியா உக்காந்து வேடிக்கை பாப்பா. ரொம்பதூரம் தனியா நடந்து போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போவா. சும்மா பாத்தா அதுல எதுவும் டிஃபரென்ட் தெரியாது. ஆனா முன்னாடி இருந்த அக்ஸாக்கும் இவளுக்கு நிறையா வேறுபாடு இருக்கு. அத அவ தெரிஞ்சு ஏத்துக்கிட்டாளா? தெரியாம நடக்குதான்னு கூட எங்களுக்கு புரியல.

இப்போ தான் கொஞ்ச நாளா அவளோட பழைய சிரிப்ப நிம்மதியான தூக்கத்தை பாக்கிறேன் என ஆதர்சை பார்த்து கூற அவனும் மெலிதாக புன்னகைத்தான்.

ஆதர்ஷ் எழுந்து “நாம வீட்டுக்கு போலாமா? அவ மட்டும் தனியா இருப்பா..” என அனைவரும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

வரும் வழியில் அவகிட்ட நாம பேசலாம் என முடிவெடுத்தனர் ஆதர்சை தவிர. அவன் மௌனமாகவே வீடு வந்து சேர்ந்தான். அக்சராவிடம் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்றாள். சாப்பிட அழைத்தாள். குழந்தைகளுடன் வம்பிழுத்துக்கொண்டு பேசிக்கொண்டே உண்டு முடித்தாள். குழந்தைகள் உறங்க சென்றதும் அக்ஸாவிடம் அனைவரும் பேசினர்.

 

அக்சராவை அவர்களது பெற்றோர்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள செய்ய முயற்சித்தனர்.

ரஞ்சித் “கடைசியா நீ என்னதான் முடிவு சொல்ற? ஊருக்கு போயி அவங்களுக்கு சாமி கும்பிடலாமா வேணாமா?”

சஞ்சனா “அக்ஸா, உனக்கு புரியாம இருக்காது. இறந்தவர்களுக்கு அவங்க ஆத்மா சாந்தி அடையணும்னு சாமி கும்படறது புதுசில்லையே?”

விக்ரம் “நாம என்னதான் நம்மகூட இருக்காங்கன்னு நம்மள ஏமாத்திக்கிட்டாலும் உண்மை மாறப்போகுதா அக்ஸா.”

பிரியா “நீ அதுக்காக அழுகாம இருந்தாலும் உன் வேதனை எங்களுக்கு புரியுது டி. ஆனா அதுவே சில நேரம் பயமாவும் இருக்கு. எங்களுக்கு நீ வேணும் அக்ஸா. எல்லாத்தையும் உள்ள வெச்சுகிட்டு அடக்கி உன்னை கஷ்டப்படுத்திக்காத. இன்னும் எத்தனை நாளைக்கு இப்டி அவங்க வருவாங்கனு உன்னையே ஏமாத்திக்கபோற?”

வாசு “இது உன்னோட மட்டும் முடியல அக்ஸா. அந்த சின்ன பசங்களை பாக்கிறேல்ல? அவனுங்களுக்கு நீதான் எல்லாமே. நீ சொல்றத தான் நம்புறாங்க. செய்றாங்க. அவங்கள ஏமாத்தறது தப்பில்லையா? இன்னுமொரு 2 3 வருஷம் அனிஷ் பெரியவனாகிடுவான். அவனுக்கு அப்போவும் புரியாதுன்னு நினைக்கிறியா?”

அக்ஸா அமைதியாக இருந்தவள் பெருமூச்சுடன் “இதுக்கான பதில் நான் ஆரம்பத்துலையே சொல்லிட்டேன். சரி, அப்டி உங்களுக்கு அவங்களுக்கான சடங்கு எல்லாம் செஞ்சே ஆகணும்னு தோணுச்சுன்னா ப்ளீஸ் நீங்க எல்லாரும் தாராளமா ஊர்ல போயி செஞ்சிட்டு வாங்க. ஆனா நானும் குழந்தைங்களும் கண்டிப்பா வரமாட்டோம். எங்ககிட்ட அதைப்பத்தி சொல்லவும்வேண்டாம், பேசவும்வேண்டாம்.” என சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டாள். அவள் சற்று பதட்டமாகி பேசியதால் அனைவரும் என்ன செய்வது என புரியாமல் விழிக்க

ஆதர்ஷ் அமைதியாக இருந்தவன் எழுந்து அக்ஸாவிடம் சென்றான். வெளியில் மரபெஞ்சில் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தவளின் அருகில் சென்று அமர்ந்தான்.

ஆதர்ஷ் “சாரா” என அழைக்க

திரும்பியவள் “ப்ளீஸ் ஆதவ் நீங்களும் அவங்கள மாதிரி எதுவும் சொல்லாதீங்க. எனக்கு…” என அவள் மூச்சுவாங்க

அவளது முகத்தை கைகளில் ஏந்தியவன் “இல்லடா, நான் அப்டி எதுவும் சொல்லல. நான் உன்கூட இருக்கேன். உனக்கு என்ன தோணுதோ, அத நம்பு அதை செய். உன்னை கஷ்டப்படுத்திக்காத.” எனவும் அக்ஸா அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவளது கைகள் நடுக்க அதை பற்றியவன் “என்னாச்சு?” என வினவ

அக்ஸா “தெரில.. பயமா, கோபமா, எதுனாலன்னு எனக்கு சொல்ல தெரில. ரொம்ப பதட்டமா இருக்கு.”

அதை இறுக பற்றியவன் அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டு அவள் இயல்பு நிலைக்கு வரும்வரை அமைதியாக இருந்தான்.

அவளது நடுக்கம், பதட்டம் அனைத்தும் குறைந்ததும் அவளை நேருக்கு நேர் பார்த்தவன் “உனக்கு என் மேல நம்பிக்கை இருக்குல்ல?” அவள் ஆமாம் என தலையசைத்ததும்,

“அப்போ இனிமேல் எதுக்கும் இவ்ளோ எமோஷனல் ஆகக்கூடாது. என் சாரா அவ நிதானத்தை எப்போவும் இழக்கமாட்டா. உன் மனசுல இருக்கறத வெளில கொட்டிடு, இல்லை நீயே பதில் கண்டுபுடி.  நீ எடுத்த முடிவுல தெளிவா இருக்க, ஆனா அதுக்கான காரணம்? நீ சொல்றது மட்டுமில்லையோன்னு தோணுது. எதுக்காக நீ பயப்படற… உன்கிட்ட நான் இதுவரைக்கும் பயத்தை பாத்ததில்லை சாரா. இவங்ககிட்ட சொல்ற பதில், இவங்களை சமாளிக்கிறது கூட உனக்கு சாதாரணம் தான். ஆனா நீ இதுல வேற எதையோ யோசிக்கற… அதான் ரொம்ப கஷ்டப்படுத்திக்கறேன்னு தோணுது.” அவள் அவனை இமைக்காமல் பார்க்க

அவன் தொடர்ந்து “எப்போவும் நான் உன்கூட தான். உன் முடிவு தான் என் முடிவும். எல்லாத்துலையுமே சரியா?” என

அவள் பதில் ஏதும் கூறாமல் அவனது கைவளைவில் தோளில் சாய்ந்துகொண்டாள். அவன் தலையை வருடிக்கொடுக்க சிறுது நேரத்தில் “ஆதவ், நான் காரணமில்லாம எதையும் சொல்லமாட்டேனு நீங்க நம்புறீங்களா?”

“கண்டிப்பா… அதுல என்ன சந்தேகம்.?”

நிமிர்ந்து அவன் முகம் பார்த்து “தேங்க்ஸ்” என்றாள்.

அவனோ அவளது மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு “இதுக்கு தேங்க்ஸ் வேறையா? எனக்கு நீ தர தேங்க்ஸ் வேணாம்.. நானே எடுத்துக்கறேன்.” என அவளது நெற்றியில் இதழ்பதிக்க அவளும் சிரித்துக்கொண்டே அவன் தோளில் நிம்மதியாக சாய்ந்துகொண்டாள்.

அக்ஸா “ஆதவ், உங்களுக்கு தெரியுமா? எங்க வீட்ல எல்லாருக்கும் நான் செல்லம். எனக்கு எல்லாருமே ஒண்ணா எப்போவும் என்னை சுத்தி இருந்தா ரொம்ப பிடிக்கும். அம்மா அப்பாக்கு நான் தான் உலகம். மாமா அத்தைகளுக்கு நான் தான் செல்லம், அனிஷ், ரானேஷ் இரண்டுபேருக்கும் நான் தான் அக்கா, அண்ணி, டீச்சர், அவங்கள இம்சை பண்ற எனிமி எல்லாமே.

பொதுவா சின்னவங்களுக்கு தானே சப்போர்ட் பண்ணி பெரியவங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்க சொல்லுவாங்க. ஆனா எங்க வீட்ல என்ன தெரியுமா நடக்கும்… நான் தான் அவனுங்க இரண்டுபேரையுமே டார்ச்சர் பண்ணுவேன்.. அவனுங்களையும் கூப்பிட்டு சேந்து ஏதாவது சேட்டை பண்ணுவோம். வம்பிழுத்து அடுச்சுக்குவோம். ஆனா பிரச்சனை வந்ததும் எல்லாரும் அவனுங்க இரண்டுபேருக்கும் அட்வைஸ் பண்ணுவாங்க. அக்ஸா பெரியவதானே, அவ சொல்றத கேக்கணும்னு, அப்புறம் அவ கல்யாணம் பண்ணிட்டு போய்டுவா அதுனால அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு, அவ அப்டி எல்லாம் பண்ணமாட்டா, சமத்து பொண்ணு டா, நீங்க இரண்டுபேரும் தான் வாண்டு பசங்க. ஒழுங்கா அவகூட சண்டைபோடாம போங்கடான்னு சொல்லுவாங்க.

2பேரும் பயங்கரமா காண்டாகிடுவானுங்க. ஆனா என்ன பண்ணாலும் என்கிட்ட பேசாம இருந்ததில்லை. நான் சொல்றத கேக்கமாட்டேனு சொன்னாலும் செய்றது நான் சொல்ற மாதிரி தான் இருக்கும். அவனுங்களுக்கு நான் அக்காவ மட்டும் இல்லை. பொறந்துதல இருந்து அம்மாவாவே மாறின மாதிரி ஒரு பீல். எனக்கு ஏதாவது பிரச்னைன்னா அந்த குட்டிஸ்ங்க கூட தாங்காது. எங்கவீட்ல நான்தான் குழந்தையும் கூட நான் தான் பெரியவளும் கூட. அவ்ளோ பாசம். என்மேல எல்லாருக்கும் அப்டி ஒரு நம்பிக்கை. ஆனா கடைசியா நான் சொன்ன ஒரு பொய் எல்லாமே மாறின மாதிரி ஒரு பீல்.

உண்மையா அன்னைக்கு நான் தான் அவ்ங்ககூட போறமாதிரி இருந்தது. ஆனா ஏன்னு தெரில, அனிஷ், ரானேஷ் இரண்டுபேரும் என்னைக்கூட இருக்க சொல்லி ரொம்ப அடம்பிடிச்சாங்க.

லீவ் கிடைக்கலேன்னு பொய் சொல்லி அவங்கள கிளம்ப சொல்லிட்டேன். அப்போவும் கூட சரி நாங்க வேணா கூட இருக்கோம்னு அத்தை மாமா எல்லாரும் சொன்னாங்க நான் தான் இவனுங்க வெளில கூட்டிட்டு போக சொன்னாங்கன்னு யோசிச்சு அவங்க இருந்தா சரிப்படாதுனு அதெல்லாம் வேண்டாம் நீங்களும் போயிட்டுவாங்கன்னு அனுப்பிச்சுட்டேன்.

கடைசியா கூட கிளம்பும்போது என்கிட்ட கேட்டாங்க “வேணும்னா அடுத்த வாரம் கூட நாம கோவிலுக்கு எல்லாரும் சேந்து போகலாம்டா, உன்னையும் கூட்டிட்டு போகணும்னு தான் இவளோ தூரம் சொல்றோம்னு” சொல்லி கேட்டாங்க.

 

ஆனா கண்கள் கலங்க ஆதவ்வின் சட்டையை இறுக பற்றியவள் “நான் தான் கேட்கல. இங்க பாருங்க. கோவிலுக்கு போற பிளான மாத்த கூடாது. இதுதான் என்னை கடைசித்தடவையா என்ன. இந்த தடவ இல்லாட்டி அடுத்த டைம் ஒண்ணா போய்க்கலாம். இதுக்காக இப்போ போட்ட பிளான ஏன் மாத்துறீங்க? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்க எல்லாரும் கோவிலுக்கு கிளம்புறீங்க. அதுவும் இப்போவே போறீங்க அவ்ளோதான்” என அவர்களை கட்டாயப்படுத்தி அனுப்பிவைத்ததை எண்ணி வருந்த

 

“நான்தான் அவங்கள கம்பெல் பண்ணி அனுப்பிச்சு வெச்சேன். அத பண்ணாம இருந்திருந்தா இது எதுமே நடந்திருக்காதே. அட்லீஸ்ட் அத்தை மாமா எல்லாருமேவாது இருக்கேன்னு சொன்னாங்க. நான் கேக்காம அவங்களையும் போக சொல்லிட்டேன். இன்னைக்கு அந்த குழந்தைங்க இரண்டுபேரும் அம்மா அப்பா கூட இல்லாம இருக்காங்க.

 

இவங்க எல்லாரும் சொல்றமாதிரி அவனுங்களுக்கு புரியாம இருக்குன்னு நினைக்கிறீங்களா? இல்லை ஆதவ், அவங்ககிட்ட நான் பொய் சொல்லல. இங்க வந்த புதுசுல முததடவையா எங்க மூணுபேருக்குள்ள சண்டை. எப்போவும் போல அடுச்சுக்கிட்டோம். பழைய ஞாபகத்துல இருங்க டா அத்தை மாமா எல்லாரும் வரட்டும் சொல்றேன்னு சொல்லிட்டேன். அவனுங்களும் நாங்களும் பாத்துகிறோம், எப்டின்னாலும் உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க. இரு இப்போவே உன்னை அட்டாக் பண்றோம்னு அடிக்க வந்தானுங்க. அப்புறம் தான் எங்களுக்கு புரிஞ்சது எங்ககூட அவங்க இல்லேனு. அமைதியா அன்னைக்கு உக்காந்திருந்தோம். நான் கேட்டேன் “கண்ணா இரண்டுபேருக்கும் கஷ்டமா இருக்கா? அம்மா அப்பா ஞாபகமா இருக்கா? அவங்கள நினச்சு பீல் பண்றிங்களா? கவலைப்படாதீங்க வந்துடுவாங்க.”

 

அனிஷ் “இல்ல அக்ஸா, உன்னை நினச்சு தான் கஷ்டமாயிருக்கு. எங்களை எப்போவுமே நீதான் பாத்துக்கிட்ட இப்போவும் நீ பாத்துப்ப.. உன்னை யாரு பாத்துக்குவாங்க. நீ தான் அவங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேல்ல. நீ பீல் பண்ணாத அக்ஸா, உண்மையோ பொய்யோ நம்ம அம்மா அப்பா வந்துடுவாங்கன்னு நம்பலாம். நீ நம்புனா நாங்களும் அதை நம்புறோம். நாங்க பீல் பண்ணுவோம்னு நினச்சு நீ கவலைப்படாத. எங்களுக்கு தான் நீ இருக்கியே..”

ரானேஷ் “ஆமா அச்சா, நீ பீல் பண்ணாத.  அப்புறம் எனக்கு அழ வரும்” என தன் மழலை மொழியில் ஆறுதல் கூற அவர்களை கட்டி அணைத்துக்கொண்டு சொன்னாள் “இனிமேல் நான் எப்போவும் பீல் பண்ணமாட்டேன். எனக்கு தான் நீங்க இருக்கீங்களே” என கூற அவர்களும் கட்டிக்கொண்டனர். அதை சொல்லிய அக்ஸா “அந்த குழந்தைகளுக்கு என்ன புரியும், அவனுங்க அவங்க மனசு சொல்றத முழுசா நம்புறாங்க, கேக்கறாங்க. அக்ஸா சொன்னா நீ நம்புனா நானு நம்புறேன்னு சொல்ராங்க. அவங்களுக்கு இருக்கற அந்த நம்பிக்கை தெளிவா அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன். அதனால தான்

நான் அந்த விஷயத்தை எப்படி பாக்கிறேனோ, ஏத்துக்கறேனோ அப்டித்தான் அவங்களுக்கும் சொன்னதுல தப்பில்லைனு.

கோவிலுக்கு போனாங்க. ஆக்சிடென்ட் ஆகிடுச்சு அது உண்மை. ஆனா அதுக்கடுத்து அவங்க இறந்துட்டாங்கன்னு சொல்றத என்னால ஏத்துக்க முடில. அதனால அத விட்டுட்டேன். இப்போவும் அவங்க யாரும் கூட இல்லாம அவனுங்க சிரிக்க விளையாட படிக்க ஆட ஓடனு எல்லாமே தான் பன்றாங்க.. எதுக்கு நான் அவங்ககிட்ட நம்ம அம்மா அப்பா உயிரோட இல்லேனு சொல்லணும். சொல்லிட்டா கஷ்டம் சங்கடம் தானே. இந்த வலியை அவங்களுக்கு தரணும்னு நினைச்சிருந்தா நான் 2வருஷம் வெயிட் பண்ணனும்னு என்ன அவசியம் இருக்கு. அன்னைக்கே அப்டியே சொல்லி அழுது புலம்பி முடிச்சிருப்போமே. அதோட மனசார நம்பாத ஒரு விஷயத்தை ஏன் ஏத்துக்கணும்னு தான் கேக்கறேன்.

 

அவங்களுக்கு  சாதாரணமா ஆக்சிடெண்ட் ஆன மாதிரி எனக்கு தோணல ஆதவ். என அவன் “என்ன சொல்ற நீ?”

“ஆமா, அவங்க ஊருக்கு திரும்பி வரதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி கால் பண்ணாங்க. நான் குட்டிஸ் எல்லாரும் வெளில இருந்தோம். அன்னைக்கு மதியம் கால் பண்ணி “அத்தை, மாமா அப்பா அம்மா எல்லாருமே என்கிட்ட பேசுனாங்க.. நாங்க நாளைக்கு சாயந்தரம் வந்துடுவோம்டா, நீ பத்திரமா இரு. ஜாக்கிரதையா இரு. குழந்தைகளை பாத்துக்க உனக்கு சொல்ல வேண்டியது இல்லை. இருந்தாலும் மூணு பேரும் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. அக்ஸா மா எந்த பிரச்சனை வந்தாலும் எப்போவும் தைரியமா இருக்கனும், உன் மனசு சொல்றத கேளு, நீ என்ன முடிவு பண்ணாலும் எங்களுக்கு ஓகே தான். எப்போவும் நாங்க உனக்கு சப்போர்ட் தான். முடிஞ்சளவுக்கு சீக்கிரம் வந்துடறோம்னு சொன்னாங்க.” ஒரு நாள்ல வரப்போறீங்க இதுக்கு எதுக்கு இவளோ அட்வைஸ்னு சொல்லி நானும் சிரிச்சுட்டு அத சாதரணமா எடுத்துக்கிட்டேன். ஷாப்பிங் குழந்தைங்ளோட விளையாட்டுனு அதுல கவனமா இருந்துட்டேன். ஆனா அவங்க வரலேன்னு முடிவானதுக்கப்புறம் தான் எனக்கு இத யோசிக்கும் போதெல்லாம் கஷ்டமா இருந்தது. அவங்களுக்கு அப்போவே ஏதோ தெரிஞ்சிருக்கு. பிரச்சனை வந்திருக்கு. இல்லாட்டி இந்தளவுக்கு பயந்து எல்லாருமே சொல்லிருக்கமாட்டாங்க. அதனால தான் என்ன பண்றதுனு யோசிச்சிட்டே இருந்தேன். அன்னைக்கு ராத்திரியே அம்மா என்கிட்ட “இங்க இருக்காதீங்கடானு சொல்லிகிட்டே இருந்தமாதிரி கனவு, அதோட அவங்க என்கிட்ட போன்ல சொன்னது உன் மனசு சொல்றத கேளு, எந்த பிரச்சனை வந்தாலும் தைரியமா இருன்னு… ” அது எனக்கு கேட்டுட்டே இருந்தது. முழுமனசோட அங்க இருந்து கிளம்பி யாருக்கும் தெரியாம வந்துட்டேன். அதோட அவங்க கடைசியா நாங்க வந்துடறோம்னு சொன்னது .. அதுல எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு ஆதவ். நம்ம உள் மனசு நம்மகிட்ட பொய் சொல்லாது. ஒன்னு நம்புற விஷயத்தை சொல்லும், இல்ல நம்பவேண்டிய விஷயத்தை சொல்லும். எனக்கு இரண்டுமே அதுதான் சொல்லுது அவங்கள்ள யாராவது ஒருத்தராவது எங்கேயோ இருக்காங்கன்னு.. நீங்க சொல்லுங்க வந்துடுவாங்கள்ல ஆதவ்? என் நம்பிக்கை பொய்யாகிடுமா? நான் பண்ணது தப்பா ஆதவ்?” என அவள் அவன் தோளில் புதைந்து அழுதுகொண்டே சொல்ல அனைவரும் இதை கேட்டு கண் கலங்க இருப்பினும் அவள் மனம் திறந்து அனைத்தும் கொட்டிவிட சற்று ஆறுதலாக இருக்கும் என எண்ணியவர்கள் அவளை தடுக்காமல் இருந்தனர். அவள் அழுது முடிக்கும் வரை விட்டவன்

“ஹே செல்லம் இங்க என்னை பாரு… நீ பண்ணதுதான் சரி. நம்ம உணர்ச்சிகளுக்கு நாம தானே மதிப்பு குடுக்கணும். அதைத்தான் நீ பண்ணிருக்க. என்னை நம்புறேன்னு சொன்னேல, நான் பாத்துக்கறேன். இதுக்கு மேல இத பத்தி நீ கொழப்பிக்கக்கூடாது. நீ இனிமேல் எதுக்குமே பீல் பண்ணக்கூடாது சரியா?” என அவள் தலையசைக்க

“குட்.சரி, அப்டினா நீ அவங்கள தேடறதுக்கு ஏதாவது முயற்சி பண்ணியா?”

அக்ஸா “இந்த மாதிரி சொல்லி கேட்கல. ஆனா அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு, ஒருத்தரோட உடம்பு கூடவா கிடைக்கல. சோ அது வந்தாதான் நம்புவேன்னு சொல்லி தான் ரஞ்சித்கிட்ட, பிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் சொல்லி கேட்ருக்கேன்.”

விக்ரம் “ஒ.. ஆனா நீ ஏன் அவங்களுக்கு ஏதோ பிரச்சனை முன்னாடியே இருக்குனு யாருகிட்டேயும் சொல்லல. அவங்க ஆக்சிடெண்ட்ல சந்தேகம் இருக்குனு கூட சொல்லல? சொல்லிருந்தா அந்த வியூல இருந்து பாத்திருப்பாங்கள்ள?”

“இல்ல விக்ரம், எத வெச்சு சொல்ல சொல்ற. எனக்கு அவங்க போன்ல அட்வைஸ் பண்ணாங்க. கனவு வந்தது அதனாலென்னா சொல்லமுடியும். எனக்கு பிரச்சனை யாரு பண்ணாங்க என்னன்னு தெரிஞ்சிருந்தா இவ்ளோ தயங்கிருக்கமாட்டேன். என்ன பிரச்சனை யாரு பன்றாங்க? எங்க இருக்காங்க? எதுக்காக? எதுமே தெரியாது. ஆனா அம்மா அப்பா எல்லாரும் அன்னைக்கு போன்ல சொன்னதை வெச்சு பாத்தா  நான் ஏதாவது ரொம்ப தெரியரமாதிரி ரிஸ்க் எடுத்து அவங்கனால குழந்தைங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்திடிச்சுனா.. அதுனால தான் நான் எதுமே வெளில காட்டிகல. அதோட இத சொன்ன நீங்க எல்லாருமே கூட எந்த அளவுக்கு நம்புவீங்கன்னு எனக்கு தெரில. ஒருவேளை யாரும் இல்லேனு பயத்துல நான் உளரேனு நினைச்சிட்டா.. அதனால தான் நான் அதை பத்தி பிரச்னையா எதுவும் சொல்லல. மத்தபடி  சொல்லக்கூடாது மறைக்கணும்னு எல்லாம் எதுவுமில்லை என அவள் ரஞ்சித் பிரியா மனம் வருந்துவார்களே என கவலை கொண்டு விளக்கம் தர அதை உணர்ந்தவன் அவளுக்கு மறுபுறத்தில் அமர்ந்து அவள் தலையை வருடிக்கொடுத்து “உன்னை நான் எப்போவும் தப்பா நினைக்கமாட்டேன்டா. நீயே மனசுக்குள்ள வெச்சுகிட்டு தனியா இருந்து கஷ்டப்படறியேன்னு தான் எனக்கு கவலை மத்தபடி நீ சொல்ற விஷயத்தை, எந்த காரணத்தையும் நான் எப்போவும் ஒதுக்கி தள்ளனதுஇல்லை. எனக்கு என் அக்ஸா மேல நம்பிக்கை இருக்கு” என அவளை தோளோடு செய்துகொள்ள “தேங்க்ஸ் அண்ணா” என்றாள். பின் அனைவரும் உறங்க சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 07ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 07

உனக்கென நான் 7 ‘என்ன காதலா? காதலை பற்றி எனக்கு என்ன தெரியுமாவா?’ என மனதில் எதிரொலிகளை அலைபாய விட்டிருந்தான். அதற்குள்ளாகவே பின்னால் வந்த மணல் லாரி தன் பலத்த ஒலியால் அவனது மனதை வெளுத்தது. “ஒரு நிமிடம்” என கையால்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 63ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 63

63 – மனதை மாற்றிவிட்டாய் அடுத்து வந்த தினங்களில் யாருடனும் திவி ஒட்டவில்லை. அவளையும் கண்டு கொள்ளும் நிலையில் யாரும் இல்லை. ஆதியும் திவி உட்பட யாருடனும் நெருங்காமல் கேட்ட கேள்விக்கு பதில் என்றிருக்க மூன்று நாட்களில் அபியை குழந்தையுடன் வீட்டுக்கு

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 56ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 56

56- மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் தத்தமது அறைகளுக்கு சென்று விட ஈஸ்வரியும் சோபியும் மட்டும் ஹாலில் சந்தோஷமாக அமர்ந்திருக்க ஆதி மாலை வரும்போது வெளியே பார்த்து விட்டு “அக்கா வந்திருக்காங்களா?” என மகிழ்ச்சியுடன் வர ஈஸ்வரி “என்ன வந்து என்ன பிரயோஜனம்..