Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 17

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 17

17 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

பிரியா தனிமையில் அக்சராவுடன் பேசும்போது “யாரோ கண்னுக்கு தெரியாதவங்களுக்காக இவளோ யோசிக்கறன்னா உன்ன குடும்பத்துக்காக, கட்டிக்கரபோறவங்களுக்காக எவ்ளோ யோசிப்ப?”

அக்ஸா சிரிக்க பிரியா தொடர்ந்து “அக்ஸா நீ அடுத்து என்னதான் டி பண்ணப்போறே?”

அக்ஸா “எனக்கு கொஞ்ச நாள் வேலைக்கு போய்ட்டு வீட்ல, பிரண்ட்ஸ்னு கொஞ்சம் என்ஜோய் பண்ணிட்டு மனசுக்கு பிடிச்சவனை பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன்கூட சேந்து அவன் லைப்ப அழகாக்கனும். எல்லார்கூடவும் சேந்து இருக்கனும்.” என,

பிரியா “அடிப்பாவி, அப்போ நீ படிச்சது எல்லாமே வேஸ்ட்டா?”

“அது எதுக்கு வேஸ்ட் ஆகணும். அறிவு எப்போவுமே தேவைப்படும். ஆனா அறிவு இருக்குங்கறதுக்காக நான் வேலைக்கு போகி அத காட்டணும்னு அவசியமில்லையே… எனக்கு தேவையிருக்கு வேலைக்கு போகணும் வீட்டு செலவு குழந்தைங்க படிப்பு இந்த மாதிரி எல்லாமே தேவை இருக்குன்னா போவேன். இல்ல சமுதாயத்துல நான் இருந்தா ஒரு வேலை நடக்கும்னு ஏதாவது தேவை இருந்தா அப்போ கண்டிப்பா அத செய்வேன்… மத்தபடி சும்மா பேருக்காக எல்லாம் என்னால வேலை பாக்கமுடியாது. எத செஞ்சாலும் முழுமனசோட அத ஏத்துக்கிட்டு செய்யணும்.. அடலீஸ்ட் அதை வெறுக்காமலாவது செய்யணும் அது எதவேணும்னாலும்  இருக்கலாம். படிக்கறது, ஆபீஸ் வேலைன்னாலும் சரி, ஒரு பொறுப்பான பொண்ண குடும்பத்தை பாத்துகிறவளா இருந்தாலும் சரி…

 

பிரியா “அப்போ உன் புருஷனை குடும்பத்தை பாத்துக்கப்போற? சரி யாரை கல்யாணம் பண்ணிக்கப்போற? ஆள் எப்படி இருக்கணும்?”

அக்ஸா “நான் அவரை ரொம்ப லவ் பண்ணணும். கஷ்டப்படுத்தாம பாத்துக்கணும். சந்தோஷமா வெச்சுக்கணும். அவருக்கு எந்த பிரச்னைனாலும் நான் அவருக்கு சப்போர்டிவ எப்போவுமே கூட இருக்கனும். நான் அவரை சந்தேகப்படவேகூடாது. அந்த அளவுக்கு முழுசா நம்பனும். என்கூட இருக்கும்போது இன்னொரு ஆள் கூட இருக்காங்கனு ஒரு நினைப்பே அவருக்கு வரக்கூடாது. அந்த அளவுக்கு நான்  அவரோட வாழ்க்கைல ஒரு இடத்துல இருக்கனும்.. அவரை நான் அவ்ளோ லவ் பண்ணனும்…அவங்க பேமிலி எல்லார்கூடவும் சேந்து இருக்கணும்..”

பிரியா “ஏய்… அவன் எப்படி இருக்கணும்னு கேட்டா நீ எப்படி இருப்பேன்னு சொல்லிட்டு இருக்க? டேய் ரஞ்சித் இவளுக்கு தலைல அடிபட்டிட்சா பாரு.” அவனோ ” முதல அவ சொல்றத முழுசா கேளு முந்திரிக்கொட்டை..” என

அக்ஸா சிரித்துக்கொண்டெ “கரெக்ட்டா. நான் இன்னும் முடிக்கவே இல்ல. இந்த மாதிரி ஒரு பீல் யாரை பாத்தா எனக்கு வருதோ அவரை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.”

பிரியா தலையில் கைவைத்து கொண்டு “உனக்கு கல்யாணம் நடந்த மாதிரி தான்.”

 

இதுவரை கூறி முடிக்க வாசு “எல்லாருமே எல்லாமே அவளுக்கு நல்லதாதானே நடந்திருக்கு. அப்புறம் எப்படி அவங்க வீட்ல இறந்தாங்க. உங்க வீட்ல, சுத்தி ஊர்காரவங்கன்னு இவளோ சப்போர்டிவ் இருந்தும் அக்ஸா ஏன் இங்க வந்தா?”

 

பிரியா “என் அப்பா மிலிட்டரி இருந்தாரு நான் ஸ்கூல் படிக்கும்போதே அவரு இறந்திட்டாரு. அம்மா மட்டும் தான் கார்மெண்ட்ஸ்ல வேலை பாத்தாங்க.. அக்ஸா வீட்ல தான் எதுன்னாலும் நம்பி விட்டுட்டு போவாங்க. அக்ஸா தான் என்னை பாத்துக்குவா.. என்னை விட அவ சின்னவன்னாலும் எனக்கொரு சிஸ்டரா இருந்து எல்லாமே பாத்துக்கிட்டா. எனக்கு காலேஜ்ல படிக்கும்போது அம்மாவுக்கும் உடம்பு முடியாம இறந்துட்டாங்க. அப்போகூட என்னை அவளை இரண்டுபேரையுமே கூப்பிட்டு அம்மா பேசிட்டு கடைசியா அக்ஸாகிட்ட தான் ப்ரியாவை பாத்துகோடாமான்னு சொல்லிட்டு இறந்துட்டாங்க. அவ மேல அவ்ளோ நம்பிக்கை. சொந்தகாரவங்க யாரும் பெருசா கண்டுக்கல. தனியா இருக்கறதால நிறையா பிரச்சனை. அக்ஸா எனக்கொரு அம்மாவாவே இருந்து டேக் கேர் பண்ணிட்டா. ரொம்ப அழுவேன். புலம்புவேன். சூசைட் பண்ணிக்க எல்லாம் போயிருக்கேன். எல்லா நேரத்துலையும் அக்ஸா கூட இருந்தா. எனக்கு எப்போ என்னமாதிரி அட்வைஸ் கைடென்ஸ் வேணுமோ அப்டி சொல்லி பாத்துக்குவா. அதுக்கப்புறம் நானும் அதுல இருந்து வெளில வர ஆரம்பிச்சுட்டேன். என்னை திரும்ப பழைய மாதிரி அவ மாத்திட்டா. எங்க இரண்டுபேருக்கும் கோயம்புத்தூரிலேயே வேலை கிடைச்சது. ரஞ்சித்க்கு பெங்களூர்ல. ஒன்றவருசம் அப்டியே ஸ்மூத்தா போச்சு.

 

மூணு மாசத்துக்கு ஒரு தடவை ரஞ்சித் வந்துடுவான். அப்டி வந்தா எல்லாரும் அக்ஸா வீட்ல தான் இருப்போம். அப்டி தான் அந்த டைம் நாங்க எல்லாரும் ஒண்ணா இருக்கும்போது அக்ஸாக்கு கல்யாணம் பண்ணிவெக்கலாம்னு வீட்ல பேசுனாங்க. அவ எங்ககிட்ட எப்படி பையன் வேணும்னு சொன்னதை எல்லார்கிட்டயும் சொல்லி சிரிச்சு சந்தோசமா பேசிட்டு இருந்தோம். அதுதான் நாங்க ஒண்ணா கடைசியா இருந்தது. அந்த வாரத்துல கொல்லிமலை பக்கத்துல கோவிலுக்கு போகணும்னு சொல்லியிருந்தாங்க. அக்ஸாவும் கூட போறதாத்தான் இருந்தது. குழந்தைங்களுக்கு எக்ஸாம்ஸ். சோ அவனுங்கள வீட்ல விட்டுட்டு போறதா இருந்தது. நான் வந்து பாத்துக்கறேன்னு சொல்லிருந்தேன். சென்னைல எங்க பிரான்ச் ஆபீஸ்ல  ட்ரைனிங் எடுக்க அக்ஸாவை கூப்ட்டிருந்தாங்க. அவ லீவு போட்டதால என்னை கேட்டாங்க. நானும் வேற ஆள் ஆரேஞ்சு பண்ணிட்டு லீவு சொல்லிக்கலாம்னு பிளான் பண்ணிருந்தோம்.ஆனா ஊருக்கு கிளம்பறதுக்கு 2நாள் முன்னாடி என்கிட்ட அக்ஸா, அனீஸ், ரானேஷ் எல்லாரும் பேசுனாங்க.

அக்ஸா சொன்னா “பிரியா அவனுங்க இரண்டுபேரும் என்னை போகவேண்டாம்னு அடம்பிடிக்கிறானுங்க. எல்லார்கிட்டயும் அந்த வாண்டூஸ் இரண்டும் ட்ரை பண்ணி பாத்துருச்சுங்களாம். அக்ஸா கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டாங்களாம். அதனால இவனுங்க என்னை இம்சை பன்றானுங்க. வெள்ளிக்கிழமை மதியம் எக்ஸாம் முடிஞ்சிடும். சண்டே வரைக்கும் நாம ஜாலியா இருக்கலாம் தேவி. வெளில கூட்டிட்டு போ ப்ளீஸ்.. நீ ஏதாவது பண்ணு. அம்மா, அப்பா, அத்தை மாமா, சித்தப்பா, சித்தி எல்லாரும் கோவிலுக்கு போயிட்டு வரட்டும். நீ எங்ககூட இரு தேவின்னு நேத்துல இருந்து அடம்பன்றானுங்க டி..சோ நானே இங்க இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.  நான் லீவு போட்டது அப்டியே இருக்கட்டும். ஆபீஸ்ல நீ சென்னை ட்ரைனிங் போக கேட்டாங்கதானே.. சோ அதுக்கு கிளம்பி போயிட்டு வா. வீட்ல கேட்டா உனக்கு ட்ரைனிங் இருக்கு. சென்னை அனுப்பிச்சிட்டாங்க. ஆள் இல்லாததால என்னை வேலை செய்ய சொல்லிருக்காங்கன்னு சொல்லி ஊருக்கு அவங்கள மட்டும் போக சொல்லிடறேன். நீயும் அப்டியே மெயின்டைன் பண்ணிக்கோ. வீட்ல நீ ஊருக்கு கிளம்புனதுக்கப்புறம் தான் சொல்லப்போறேன். ஏன்னா ரொம்ப முன்னாடி சொன்னா பிளான தள்ளிவெச்சுட்டு என்னை கூப்டுவாங்களாம். அவனுங்க இரண்டு பேரும் என்னை குடும்பத்துலையே எமெர்ஜெண்சி லீவு எடுக்க சொல்ராங்க.” என இருவரும் சிரித்துக்கொள்ள சொன்னபடியே அனைத்தும் நடந்தது.

சனி கிழமை அக்ஸா, அனீஸ், ரானேஷ் எல்லாரும் வெளில போயி சுத்திட்டு நல்ல ஆட்டம். நான் அன்னைக்கு தான் சென்னைல இருந்து வந்தேன். என்கிட்ட பேசிட்டே, வம்பிழுத்துட்டே ஒருத்தர மாத்தி ஒருத்தர் கம்பளைண்ட் பண்ணிட்டு குழந்தைங்களோட  குழந்தையா அக்ஸாவும் தூங்கிட்டா.. கொஞ்ச நேரத்துல  கால் வந்தது.. அக்ஸாவோட பேமிலி வந்த வண்டி ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. மலைல இருந்து உருண்டு பள்ளத்துல விழுந்திடிச்சு. ஒருத்தர் கூட அதுல உயிர் பொழைக்கலன்னு. அதோட யாரோட பாடியுமே கிடைக்கலன்னு.”

எனக்கு இத கேட்டு என்ன பண்றதுன்னே தெரில.ரஞ்சித்கிட்ட சொன்னேன். அவன் உடனே கிளம்பி வரேன்னு சொன்னான். விடியறதுக்குள்ள அந்த நியூஸ் எல்லாம் உண்மையா என்ன ஏதுன்னு எல்லாமே விசாரிச்சோம். பொய்யா இருக்காதான்னு நாங்களே அவளோ நேரம் வெயிட் பண்ணோம். ஆனா எந்த யூஸும் இல்லை. ரஞ்சித், எங்க பிரண்ட்ஸ் எல்லாருமே வந்திட்டாங்க. ஆனா இத எப்படி அவகிட்ட  சொல்லப்போறோம்னு நினைச்சாதான் கவலையா இருக்குன்னு பொலம்புனோம். குடும்பத்துல ஒருத்தர்கூட பிரிஞ்சு போகக்கூடாதுனு நினச்சவ இப்போ மொத்த குடும்பமுமே அவளை விட்டு போய்ட்டாங்கன்னு சொன்னா எப்படி தாங்கிப்பா.”

 

அக்ஸா காலை எழுந்து வந்து பார்த்தவள் “ஹே ரஞ்சித் எப்போ வந்த? என்ன திடிர்னு விசிட். செம டா. என பின்னால் பார்க்க நெருங்கிய நண்பர்கள் இருக்க “ஹே வாங்க வாங்க … எல்லாரும் என்ன திடீர் சர்பரைஸ்.. சூப்பர் டா… இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா,அப்பா, மாமாஸ், அத்தைஸ் எல்லாரும் வந்துடுவாங்க. உங்கள பாத்தா எல்லாரும் ரொம்ப சந்தோசப்படுவாங்க. காலேஜ் முடிஞ்சு ஒரே ஒரு தடவ வந்திங்க. அப்புறம் வருஷமே ஆச்சு.. பிரியா இவனை பாரேன். என அவள் சகஜமாக அதுவும் மகிழ்ச்சியாக பேச அனைவரும் அமைதியாக நின்றனர். அக்சரா “என்னாச்சு, ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க?” என அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இறுதியில் விஷயத்தை கூற முதலில் அமைதியாக கேட்டவள் நம்பாமல் பார்க்க பிரண்ட்ஸ் “விசாரிச்சு பாத்துட்டோம் அக்ஸா, மலைல இருந்து வண்டி உருண்டு விழுந்திடிச்சு. வண்டி நம்பர். அந்த வழியா போனவங்க கடைல இருந்தவங்க எல்லார்கிட்டயும் போட்டோஸ் காட்டியும் கேட்டுட்டோம். அவங்க அந்த வழியாதான் போயிருக்காங்க. பள்ளத்துல வண்டி விழுந்திடிச்சு. யாரோட பாடியுமே கிடைக்கல. தேடிட்டு இருக்காங்க.” என கூற அப்டியே சோபாவில் அமர்ந்தவள் அருகில் ரஞ்சித் வர அவனிடம் மட்டும் “ரஞ்சிண்ணா, இதுல யாரும் பொய் சொல்லமாட்டீங்கன்னு தெரியும். ஆனாலும் யாராவது தப்பா இன்போர்ம் பண்ணிருந்தா?அவங்களுக்கு ஒன்னும் ஆகாது.  ப்ளீஸ் எனக்காக அவங்க எங்கன்னு விசாரிச்சு பாக்கறியா? ” என அவன் எதுவும் கூற இயலாமல் இருக்க “அவங்க ஈவினிங்க்குள்ள வந்துடுவேன்னு என்கிட்ட சொல்லிருக்காங்க.. வந்துடுவாங்க” என அதையே திரும்ப சொல்ல அனைவரும் அவளுக்கு மீண்டும் எடுத்து கூறினர். அதற்குள் பக்கத்து வீடுகளுக்கு விஷயம் தெரிந்து அனைவரும் வந்து விசாரிக்க அக்ஸா கொஞ்சம் கூட அழாமல்  அப்படியே உட்கார்ந்திருந்தாள். உள்ளிருந்து அனீஸ், ரானேஷ் இருவரும் வெளியே வந்தவர்கள் அனைவரையும் பார்த்து நகர அதில் “இப்டி எல்லாருமே இந்த புள்ளைங்கள அனாதையா விட்டுட்டு போய்ட்டாங்களே?” என கூட்டத்தில் புலம்ப சிறுவர்கள் இருவரும் புரிந்தும்,புரியாமலும் அக்சராவிடம் வந்து அவளுக்கு இருபுறமும் அமர்ந்து அவளை கட்டிக்கொண்டனர். நிலவுலகிற்கு வந்த அக்சரா இருவரையும் தோளோடு அணைத்துக்கொள்ள ரானேஷ் “அக்ஸா, ஏன் எல்லாரும் இங்க இருக்காங்க? நம்ம அப்பா அம்மா எல்லாரும் எப்போ வருவாங்க?”

அனீஸ் “நம்மள விட்டுட்டு போய்ட்டாங்கன்னு சொல்ராங்க. அப்போ இனிமேல் வரமாட்டாங்களா? கோவிலுக்கு போயிட்டு வரேன்னு தானே சொன்னாங்க. அருகில் இருந்த ரஞ்சித்திடம் “மாமா, ஈவ்னிங் வந்துடுவாங்கதானே?” என அக்ஸா கேட்ட அதே கேள்வியை இவனும் கேட்க ரஞ்சனுக்கு மேலும் கனக்க மூவரையும் ஆறுதல் படுத்தினான். குழந்தைகளை அழைத்துக்கொண்டு அக்ஸா உள்ளே சென்றுவிட்டாள்.

பின்னால் ரஞ்சித், பிரியா வந்து பார்க்க அக்ஸா அமைதியாக சென்று அமர குழந்தைகள் இருவரும் அவள் மடியில் படுத்துக்கொண்டனர். வேற எதுவும் பிரச்சனை செய்யவில்லை. ரஞ்சித் பெருமூச்சுடன் ப்ரியாவை உடன் இருக்க சொல்லிவிட்டு வெளியே விசாரிக்க வந்தோருக்கும் பதில் கூறிக்கொண்டும் தேவையானவைகளை பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் முழுவதும் சென்றுவிட்டது. அக்ஸா ஹாலில் பார்க்க பெரியவர்கள் அனைவரும் இருப்பது போன்ற படம் ஒன்று பிரேம் செய்து கொண்டு வந்தனர். அதற்கு ரஞ்சித் மாலையிட போக தடுத்த அக்சரா “வேண்டாம் போடாத. அவங்களுக்கு மாலை போடாத.. அவங்க எங்கேயாவது இருப்பாங்க”. சீக்கிரம் வந்துடுவாங்கன்னு மாலை போடவிடல.

ரஞ்சித் “அக்ஸா, உனக்கு புரியலையா அவங்க இனி வரமாட்டாங்க. அழக்கூட இல்லாம நீ ஏன் இப்டி இருக்க.. ”

பிரியா “அதிர்ச்சில உனக்கு பைத்தியமே பிடிச்சிடுமோனு எங்களுக்கு பயமா இருக்கு. ப்ளீஸ் அக்ஸா உண்மைய நடந்தத ஏத்துக்கோ. அவங்க யாருமே இப்போ இல்லை.” என அவளை குலுக்க அப்டியே இருந்தவள் குழந்தைகள் வேகமாக ஓடிவந்து “அக்ஸா, அக்ஸா…” என அழஆரம்பித்து விட்டனர்.

பதறியவள் “என்னடா கண்ணா, ஏம்மா அழறீங்க? என்னாச்சு..”

“நம்ம அம்மா அப்பா ஆக்சிடெண்ட்ல செத்து போய்ட்டாங்களாம். இனிமேல் நமக்கு யாருமே இல்லன்னு வெளில எல்லாரும் சொல்ராங்க. பாவம் பாவம்னு சொல்ராங்க. நீ சொல்லு தேவி, அவங்க திரும்ப வரமாட்டாங்களா? நமக்கு யாருமே இல்லையா? நம்மகிட்ட வரேன்னு சொல்லிட்டு தானே போனாங்க.. ஏன் இப்டி பண்ணாங்க…எங்களுக்கு பயமா இருக்கு…” என அழ அக்ஸாவிற்கு கண்கள் பனிக்க அப்டியே கண் மூடி கட்டுப்படுத்தியவள் குழந்தைகளை நிமிர்த்தி “இல்லடா கண்ணா அவங்க வந்துடுவாங்க. இரண்டு பேரும் என்னை பாருங்க. நம்ம அப்பா அம்மா இப்போவும் ஊருக்கு தான் போயிருக்காங்க. என்ன எப்போ வருவாங்கன்னு தெரில. யாருகிட்டேயும் சொல்லாம எங்கேயோ போயிருக்காங்க. சீக்கிரம் வந்துடுவாங்க சரியா? குட்டி கண்ணா அழக்கூடாது. என் செல்லம்ல… நமக்கு யாருமில்லைனு யாரு சொன்னது எல்லாருமே இருக்காங்க. பட் வெளில போயிருக்காங்க அவ்ளோதான் சரியா. அதோட பிரியா ஆண்ட்டி, ரஞ்சித் மாமா எல்லாரும் இருகாங்க. பயப்படக்கூடாது.அழக்கூடாது சரியா?”

பிரியா “அக்ஸா என்ன பண்ற?, குழந்தைங்ககிட்ட ஏன் பொய் சொல்லணும். என்னைக்காவது ஒருநாள் அவங்களுக்கு உண்மை தெரியாத்தானே போகுது.?”

அக்ஸா “என்ன பொய் நான் சொல்லிட்டேன்? ஊருக்கு போயிருக்காங்க அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. அவ்ளோதானே.. பள்ளத்துல விழுந்து இறந்துட்டாங்கனு நீங்க சொல்லிறீங்க. அடிபட்டு எங்கேயோ இருக்காங்கன்னு நான் சொல்றேன்… நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லாத போது சடலத்தை கூட காட்டாம நீங்க எல்லாரும் சொல்றத நான் மட்டும் ஏன் நம்பணும்.  யாராவது அவங்க இறந்தத பாத்திங்களா? இல்லேல ..அப்புறம் என்ன… முடிஞ்சா அவங்க பாடியாவது கொண்டுவாங்க. அப்போ நம்புறேன் அவங்க இறந்துட்டாங்கன்னு எனக் கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

 

பிரியா “அவங்க எல்லாரும் உயிரோட இல்லேங்கிறத ஏத்துக்கவே அவ தயாரா இல்லை. இருந்தும் பாக்றவங்க யாராவது கேட்டுகிட்டே இருக்காங்க அப்போ எல்லாம் குழந்தைங்க ரொம்ப அழுதாங்க. அக்ஸா கொஞ்சம் கூட கலங்காம அவங்களுக்காகவே தைரியமா இருந்தா. கடைசியா அனீஸ் ரானேஷ்கிட்ட கேட்டா.”

அக்ஸா “டேய் கண்ணா இரண்டுபேர்கிட்டேயும் நான் ஒண்ணு கேக்கவா? இங்க இருந்தா எல்லாரும் இப்டி தான் கேட்டுகிட்டே இருப்பாங்க. நீங்க அழுதிட்டே இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கு. நாம இங்க இருக்கவேண்டாம். வேற எங்கேயாவது போய்டலாம். கொஞ்ச காலம் நம்மள ஹாஸ்டல் சேத்தி படிக்கவெச்சதா நினைச்சுக்கலாம். அதுக்குள்ள நம்ம அம்மா அப்பா வந்துடுவாங்க. ரானேஷ் குட்டி இங்க நீ இப்டி அழுதிட்டே இருந்தா அம்மா அப்பா பீல் பண்ணுவாங்க தானே. நீ குட் பாய் தானே. நீ சந்தோசமா இருந்து நல்லா படிச்சு, விளையாண்டு பெஸ்ட்டா வரணும்ல? உங்க இரண்டுபேர்கிட்டேயும் அத்தை மாமா எல்லாரும் அதானே சொல்லுவாங்க. அவங்க சொன்னதை கேப்பிங்களா? இல்லை அவங்க உயிரோடவே இல்லேன்னு மத்தவங்க சொல்றத கேப்பிங்களா?

இருவரும் “நம்ம அப்பா அம்மா சொல்றதுதான் கேப்போம்.”

அனிஷ் “நாம வெளில போய்டலாம் அக்ஸா. இங்க இருந்தா அவங்ககூட இருக்கறதுதான் ஞாபகம் வருது. எல்லாரும் கேக்கும்போது கஷ்டமா இருக்கு. இனிமேல் ஸ்கூல்க்கு வெளிலனு எங்கேயும் போகமாட்டோம்..” என கலங்க

அக்ஸா “இல்லடா கண்ணா அவங்க யாரும் நம்மள விட்டு எங்கேயும் போகல… நாம அவங்க சொன்னமாதிரி கரெக்டா இருக்கோமான்னு பாக்கிறதுக்காக கேம் வெச்சிருக்காங்க. இதுல நாம சரியா இருந்தா அவங்க கண்டிப்பா நம்மகிட்ட வந்துடுவாங்க. எப்போவும் அவங்க சொன்னதை நாம மனசுல வெச்சுக்கணும். நல்லவங்களா இருக்கணும். மத்தவங்களுக்கு பிரச்சனை கொடுக்கக்கூடாது. வர பிரச்சனையா பாத்து பயப்படக்கூடாது. எப்போவுமே சந்தோசமா இருக்கணும். எல்லாரையும் சந்தோசமா வெச்சுக்கணும். நம்மள விட பிரச்சனைல கஷ்டப்படறவங்கள நினச்சு பாக்கணும். எனக்கு ஏன் இப்டி நடக்கிதுன்னு யாரையும் குறை சொல்லக்கூடாது. காரணம் இல்லாம எதுவும் நடக்காது. முழுமனசோட நாம செய்யவேண்டியதை செய்வோம். அவங்க எல்லாரும் கண்டிப்பா நம்மகிட்ட வருவாங்க. அப்டி வரும்போது நாம அவங்களுக்கு கிப்ட் தரணும்ல. அதுவும் நாம ஹாப்பியா தரணும். அப்போதான் அவங்களும் சந்தோசப்படுவாங்க. ”

“அப்போ கண்டிப்பா வருவாங்களா?”

“கண்டிப்பா வருவாங்க. ஆனா நீங்க இப்டி பீல் பண்ணிட்டு பயந்துட்டு வீட்லையே இருந்தா அவங்க பாதிலையே போய்டுவாங்க.. யார் கேட்டாலும் தைரியமா சொல்லு. அவங்களுக்கு எதுவும் ஆகல. எங்களை விட்டு போகமாட்டாங்க. கொஞ்ச நாள்ல எங்ககிட்ட வந்துடுவாங்கன்னு சொல்லு. அதையும் மீறி நம்பலேன்னா நீ வந்துடு. அதுக்கு அப்புறம் அவங்க இஷ்டம். என்னமோ நினைச்சிட்டு போகட்டும். நீ உன் மனச போட்டு கொழப்பிக்கக்கூடாது சரியா? நீங்க எவ்ளோதூரம் சந்தோசமா இருக்கீங்களோ, எல்லாமே கரெக்டா பண்றீங்களோ அவ்ளோ சீக்கிரம் அவங்க வந்துடுவாங்க.”

“ஓகே அக்ஸா. இனி நாங்க பீல் பண்ணமாட்டேன். நாம எங்க போறோம்னு சொல்லு.” என குழந்தைகள் தெளிவாகி அடுத்த கேள்வியை கேட்க

அக்ஸா “அது உங்க இஷ்டம். நீங்களே சூஸ் பண்ணுங்க.” என இருவரும் யோசித்து சொல்வதாக சென்றுவிட

ப்ரியாவும் ரஞ்சித்தும் ” நீ என்ன பண்ணிட்டு இருக்க. ஏன் அவங்ககிட்ட இப்டி எல்லாம் சொல்ற? பின்னாடி பொய்னு தெரிஞ்சா வருத்தப்படமாட்டாங்களா?”

அக்ஸா “முழுசா ஏதும் தெரியாம எந்த ஆதாரமும் இல்லாம குழப்பத்துல இருக்கும் போது அவங்களுக்கு ஏதும் ஆகியிருக்காதுன்னு  சந்தோசப்பட கூடாதுன்னு சொன்னா அவங்க உயிரோட இல்லேனு நீங்க சொல்லி எங்களை கஷ்டப்படுத்தவும் கூடாது தானே. சரி, இன்னைக்கு நானும் மத்தவங்கள மாதிரி அவங்ககிட்ட ஆமாடா எல்லாரும் இறந்துட்டாங்கனு சொல்றேன். என்ன நடக்கும். பீல் பண்ணுவானுங்க, அழுவாங்க. ஸ்கூல் போகமாட்டேன், படிக்கமாட்டேன். எல்லாமே இருக்கும். அப்போ மறுபடியும் அவங்கள திட்டி சொல்லி புரியவெச்சு லைப்ல படிப்புல கவனத்தை கொண்டுபோகவெக்கணும். எல்லாமே மனசுல ஒரு வலியோட பண்ணுவாங்க. அவனுங்க குழந்தைங்க. அவங்க லைப் என்ன ஆகும் இப்டி இருந்தா.. நேத்துல இருந்து அவனுங்க அழுததையே என்னால பாக்க  முடில. என்கூட இருக்கும் போது சரி. வெளில போனா ஐயோ பாவம் இனி இவங்களுக்கு யாரு இருக்காங்கனு எல்லாரும் பரிதாபமா பாக்ராங்கன்னு அனீஸ் சொல்றான். இப்டி ஒரு ஒருத்தரா பாவப்பட்டே எங்க அம்மா அப்பா எங்ககூட இல்லேன்னு சொல்றமாதிரி இருக்கு. எனக்கு அவனுங்க தான் முக்கியம். நான் தெளிவா யோசிச்சு தான் சொல்லிருக்கேன். அவங்க உயிரோட இல்லேங்கிறதா அவங்ககிட்ட நான் எதுக்கு சொல்லணும். நானே அத இன்னும் முழுசா நம்பல.. என் மனசு இன்னும் அவங்க எங்கேயோ இருக்காங்கன்னு சொல்லிட்டே தான் இருக்கு. என்னால என்னை ஏமாத்திக்கமுடில. ஒருவேளை நீங்க சொல்றமாதிரி அவங்க இல்லேங்கிறதுக்கான எல்லா ஆதாரமும் கிடைக்கிதுன்னா அப்போ நம்புறேன். அந்த சமயம் அவனுங்களும் மனசார அத ஏத்துக்கிட்டா நம்பட்டும். இல்லையா அவங்க இருக்காங்க எங்களுக்காக வருவாங்கனு நாங்க இப்டியே இருந்திட்டு போறோம். அது உங்கள பொறுத்தவரைக்கும் பொய்ன்னா அப்டியே இருக்கட்டும். அந்த பொய் தான் அந்த குழந்தைங்க லைப்ப சந்தோசமா வெச்சுக்கும்னா நான் அதைத்தான் சூஸ் பண்ணுவேன். எனக்கு அவங்க தான் முக்கியம். அவனுங்க இரண்டுபேரும் எங்க போகணும்னு சொல்ராங்களோ அங்க கிளம்பறோம்.” என அழுத்தமாக தெளிவாக கூற

அதில் உள்ள உண்மையை உணர்ந்த இருவரும் எதுவும் கூறாமல் ஒப்புக்கொண்டனர்.

ரஞ்சித் “சரி, அதுக்கு ஏன் வெளில போகணும். என்கூடவே பெங்களூரு வந்துடுங்க. தனியா எல்லாம் உங்கள விடமுடியாது.”

அக்ஸா “அது சரியா வராது ரஞ்சித். நான் குழந்தைங்களுக்காக தான் இந்த முடிவு எடுத்திருக்கேன். அப்டி உன்கூட வந்தா நாளைக்கு நீ இருக்கற இடத்துல கேள்வி கேக்றவங்களுக்கு என்ன பதில் சொல்லுவ.. உண்மையா சொன்னாலும் அடுத்த இதே மாதிரி ஐயோ பாவம் யாருமில்லாம இங்க வந்திருக்காங்கன்னு தான் அவங்களும் நினைப்பாங்க. பசங்களுக்கும் தோணும் நம்ம அம்மா அப்பா யாரும் நம்மகூட இல்ல அதான் உன்கூட இருக்கோம்னு தோணிட்டே இருக்கும். யோசிச்சு பாரு. இத்தனை நாள் அப்டி இருந்திருந்தா தெரிஞ்சிருக்காது. திடிர்னு இப்டி ஒரு சம்பவம் நடந்ததால, இது எல்லாம் நடக்கிதுன்னு எதுவுமே இருக்கக்கூடாதுல.  ” என மறுத்துவிட

“ஏன்… ஒரு அண்ணனா இருந்து நான் செய்யவேண்டியதுதான் நான் கேக்கறேன். உன் கூட பொறந்த அண்ணனா இருந்திருந்தா இப்டி சொல்லுவியா?” என இருவருக்கும் வாக்குவாதம் வர இறுதி வரை அக்ஸா உடன் வர மறுத்துவிட்டாள்.

பிரியா நீ இங்க இருந்து ஜாப் பாத்துக்கோ. அப்போ அப்போ வந்து வீட்டை பாத்துக்கோ. ரஞ்சித் நீ இப்போ இருக்கறமாதிரியே உனக்கு டைம் கிடைக்கும்போது வந்துட்டு போ. உங்க இரண்டுபேர் தவிர வேற யாருக்கும் நாங்க எங்க போறோம்னு தெரியவேண்டாம். பக்கத்து வீட்ல இருக்கற ஒரு 70 வயதை கடந்த ஒரு பெண்மணியிடம் மட்டும் விஷயத்தை கூறிவிட்டு கிளம்ப தயாராகினர். ஆனால் எங்கே செல்கிறார்கள் என கூறவில்லை. வயதை கடந்த அனைத்தையும் பார்த்த அனுபவம் அவர்களின் வலி உணர்வுகளை புரிந்துகொண்ட அந்த மூதாட்டியும் இவர்களை அனுப்பி வைத்தார்.

அனீஸ், ரானேஷ் இருவரும் ஊட்டி செல்லலாம் என அதன் பின் ரஞ்சித்திடம் கூற  தெரிந்த ஆசிரமம் ஒன்றை நடத்தும் ராதாகிருஷ்ணன் என்பவரின் உதவியுடன் இங்கே ஜெயேந்திரனிடம் கூறி வேலைக்கு ஏற்பாடு செய்து வந்தனர்.

 

பிரியா “விட்டுட்டு போனதோட சரி, அதுக்கப்புறம் ரஞ்சித் இங்க வரவேயில்லை. என்கிட்ட இங்க இருக்கறவங்ககிட்ட மட்டும் பேசி அக்ஸாவ பத்தி எப்போவும் கேட்டுப்பான். அவளும் தெரிஞ்சும் அப்டியே நடக்கட்டும்னு ஏத்துக்கிட்டா. அதுக்கப்புறம் தான் கொஞ்ச நாள் ஜெயேந்திரன் அங்கிள் வீட்ல இருந்தது. கொஞ்சம் கார்டன் வேலை எல்லாம் பாத்துக்கிட்டா. சஞ்சு, விக்ரமோட பிரண்ட்ஷிப், அவங்க வீட்ல எல்லாருக்குமே அவளை பிடிச்சது. நம்பிக்கையோட கம்பெனில அவளை வேலை செய்யட்டும்ன்னு சொன்னாங்க. அப்புறம் அவளே தனியா தான் இருப்பேன்னு அடம்பண்ணி தான் இப்போ இங்க இருக்கா. இப்போ மறுபடியும் பெரியவங்க இறந்துட்டாங்க, வரமாட்டாங்கனு அதே விஷயம் பேசி சொல்லவும் அக்ஸா அதேதான் திருப்பி சொல்றா. எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு. விட்ருங்கன்னு.. அதுல தான் இரண்டுபேருக்கும் பிரச்சனை.” என கூறிமுடித்தாள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 10சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 10

இதயம் தழுவும் உறவே – 10   அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் சமயங்களில் தேர்தல் மையத்தில் பணி புரிவார்கள். பொதுவாக அவர்கள் தற்சமயம் பணியில் இருக்கும் தாலுக்காவை விடுத்து, அதே மாவட்டத்தின் கீழ் இருக்கும் வேறு ஒரு தாலுக்காவில் தான்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 09ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 09

9 – மனதை மாற்றிவிட்டாய் ஆதியின் வீட்டிற்கு ராஜலிங்கமும், மகாலிங்கமும் வர அவர்களை அனைவரும் வரவேற்க எழுந்து சென்ற சந்திரசேகர் “ஹே வாங்கப்பா, இங்க தான் இருக்கீங்க வரதே இல்ல.. இப்போவது வரணும்னு தோணுச்சே” என்று குறைபட்டு கொண்டே ஆனால் நண்பனை

ஜெனிபர் அனுவின், “காதல் குறியீடு” சிறுகதை.ஜெனிபர் அனுவின், “காதல் குறியீடு” சிறுகதை.

வணக்கம் வாசக நெஞ்சங்களே! ஜெனிபர் அனு அவர்கள், “காதல் குறியீடு” எனும் சிறுகதை ஒன்றுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளார். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை ஜெனிபர் அனுவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. காதல் குறியீடு “சார்! நான் ஒண்ணு சொன்னா தப்பா