Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 15

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 15

15 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

விடிந்ததும் ஆதர்ஷ் அவளை எண்ணிக்கொண்டே சிரிப்புடனே புரண்டு படுக்க வெளியே சத்தம் கேட்டதும் வேகமாக எழுந்தவன் மணி ஆறே கால் என காட்ட என் செல்லம் எந்திரிச்சுட்டாளா? என்றவன் வெளியே வந்து அவள் துவைக்க செல்வதை பார்த்தவன் பின்னால் சென்று பூவை பறித்து அவள் மேல் வீசிவிட்டு மறைந்தான். அவள் திருப்பி பார்த்துவிட்டு மீண்டும் வேலையை பார்க்க இதே இரண்டு மூன்று முறை தொடர அதன்பின் பூக்கள் அவள் மேல் விழுந்தாலும் அவள் கண்டுகொள்ளாமல் இருக்க அவனே கடுப்பாகி முன்னால் சென்று “என்ன மேடம் இவளோ சீக்கிரமே எந்திரிச்சு வேலை செயிரிங்க? குளிர்ல?”

“ஏன் சார் உங்களுக்கு குளிருதா?  எங்க சார் இந்த பக்கம்?” என அந்த சாரில் அதிக அழுத்தம் தர

“ஓய்.. என்ன கொழுப்பா? ஒழுங்கா பேர் சொல்லி கூப்பிடமாட்டேயா? சும்மா சார் சார்னு வெறுப்பேத்திட்டு?”

“இதென்ன வம்பா இருக்கு? நீங்க கூட தான் என்னை மேடம்னு கூப்பிடறீங்க?”

“நீ சும்மா நடிக்காதடி எனக்கு தெரியும் உன்கிட்ட நான் பஸ்ட் நேம் கேக்கும்போது சொல்லாம சார்னு கூப்பிடுன்னு சொன்னதை வெச்சு நீ என்னை வெறுப்பேத்துற.. “

அவன் அறிவான் தான் தன்னிலை மறந்து வேதனை கொள்ளும்போதும்  இல்லை கோபம் கொள்ளும்போதும் மட்டுமே அவள் தன்னை ஆதவ் என்று அழைத்திருக்கிறாள். மத்தபடி வேண்டுமென்றே சார் தான்.. இன்று அவன் நேரடியாக கேட்கவும் அவள் சிரித்துவிட்டு “பரவால்லையே கரெக்டா கண்டுபுடிச்சுடீங்க. அதெல்லாம் ஞாபகம் இருக்கா சார்க்கு?” என அவள் அவனது முறைப்பை கண்டு சிரிக்க

“சிரிக்காதடி? இராத்திரி நான் குட் நைட் சொல்லவும் இல்ல, ரிப்ளையும் பண்ணல. கொஞ்சமாவது உனக்கு அக்கறை இருக்கா? மனுஷன் கடுப்புல போறானே? கோபமா இருப்பான் போல, பேசுவானா? மாட்டானான்னு கொஞ்சமாவது தோணவேண்டாம்? திரும்ப மெஸேஜ் கால் பண்ணி பேசணும்னு தோணல? என்னை என்ன தான் நீ புரிஞ்சுகிட்டேயோ? ரொம்ப கஷ்டம் இப்டி இருந்தா..” என அவளை சீண்ட

அவளோ அவனை கூர்மையாக பார்த்து “அப்டியா? நான் என்ன நினைச்சேன்னா நீங்க கோபமா போனாலும் அந்த மெஸேஜ் பாத்ததும் லைட்டா ஒரு ஸ்மைல் வந்திருக்கும். என்னை பழிவாங்கவோ, வம்பிழுக்கவோ ரிப்ளை பண்ணாம தூங்கிருப்பீங்கன்னு நினச்சேன்” என்றதும் அவன் விழிவிரித்து பார்க்க அவளே தொடர்ந்து “அதோட நீங்க கோபம், டென்ஷன் கவலை இதெல்லாம் இல்லாம தூங்கணும்னு தான் நினைச்சேனே தவிர எனக்கு குட் நைட் சொல்லிட்டு தூங்கணும்னு நான் எதிர்பார்க்கல. எப்டியு அந்த மெஸேஜ் பாத்ததும் சிரிச்சிட்டு படுத்திருப்பிங்கனு ஒரு நம்பிக்கை.” என்றவள் வாய் பிதுக்கி ‘நீங்க சொன்னமாதிரி நான் தான் உங்கள புரிஞ்சுக்கல போல. நீங்க கோபத்துல தான் இருந்திருக்கீங்க. நமக்குள்ள செட் ஆகாது போலவே. ” என அவள் முடிப்பதற்குள் அவளை இடை பற்றி வளைத்து தன்னோடு இணைத்தவன் “ஹே பிராடு எப்படிடி நேர்ல பாத்தமாதிரி சொல்ற?”

“அவ்ளோ ஆப்செர்வ் பண்ணிருக்கேனே. அதுவுமில்லாம சார் முகமே சொல்லுதே கோபம் இல்லேனு ”

“ம்ஹூம்.. எப்படி? என்ன சொல்லுது மேடம்.?”

“நல்லா நிம்மதியா தூங்கிருக்கீங்க.. பயங்கர ஜாலியா இருக்கீங்கன்னு.. எல்லாத்துக்கும் மேல உங்களுக்கு கோபத்தை எல்லாம் அடக்கி வெக்க தெரியாதுன்னு சொல்லுது. கோபம் வந்துட்டா வீர்வீருன்னு அப்போவே கத்திடுவீங்க ”

“ஹா ஹா ஹா.. சூப்பர் போ.. என்னை பத்தி எல்லாமே உனக்கு தெரிஞ்சிருக்கு. அப்போ பிரச்னை இல்லை. கல்யாணம் பண்ணாலும் நீ என்னை கண்கலங்காம பாத்துக்குவேன்னு நம்பிக்கை இருக்கு.. உன்னை நம்பி நான் தாலியோட கைய நீட்டலாம்.” என அவள் வாய்விட்டு சிரிக்க அவளை ரசித்தவன் “சாரா இதே சிரிப்பை நான் உனக்கு எப்போவுமே தருவேனா? உன்னை அந்த அளவுக்கு நான் இன்னும் சரியா புரிஞ்சுக்கலையோன்னு தோணுது. என் கோபம் குழப்பத்துனால உன்னை கஷ்டப்படுத்தறேனோன்னு கவலையா இருக்கு.” என அவன் தலை குனிய அவள் அவன் தலையை நிமித்தி விட்டு “நான் உங்களை புரிஞ்சுகிட்டு அளவுக்குன்னு எல்லாம் கம்பேர் பண்ணி மெஷர்மென்ட் எடுத்து செக் பண்ண லைப் ஒன்னும் மெஷின் இல்லையே.. உங்களுக்கு தேவையானது உங்களை புரிஞ்சுக்கிட்ட பொண்ணு. எனக்கு தேவையானது என்னை முழு மனசோட ஏத்துகிற அன்பும் காதலும் தான்.  அப்டி பாத்தா நீங்க எனக்கு போதும் போதும்ங்கிற அளவுக்கு காதலை குடுக்கிறீங்க. அதோட என்னை உங்களைவிட வேற யாராலையும் இவ்ளோ சந்தோசமா வெச்சுக்கமுடியாது. என்னை நீங்க தெரியாம கஷ்டப்படுத்தினாலும் தெரிஞ்சே உங்களை வருத்திக்கிறீங்க. சோ இனிமேல் உங்களுக்கு உங்ககூட நான் சந்தோசமா இருப்பேனா அப்படிங்கிற மாதிரி எண்ணமே வரக்கூடாது. ஓகே?”

அவள் தலையோடு முட்டிவிட்டு “தேங்க்ஸ் டி செல்லம்” என அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட அவள் வெக்கத்துடன் “ஆதவ், சரி போதும் போயி ஆபீஸ் கிளம்புங்க. நானும் இந்த வேலைய முடிச்சிட்டு வரேன்.”

“இல்லடா இன்னைக்கு கம்மிதான். நான் பாத்துக்கறேன். நீ இங்க ரிலாக்ஸா வேலை பாரு. நான் போயி சீக்கிரம் முடிச்சிட்டு வரேன். உன்னை பக்கத்துல வெச்சுகிட்டு எனக்கு இன்னைக்கு அங்க வேலை ஓடாது. நீ இங்க இரு. அப்போதான் நான் சீக்கிரம் வருவேன். நாம எல்லாரும் ஈவினிங் வெளில போலாம்.” என அவளும் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு நகர்ந்தான்.

 

காலை உணவு உண்ணும் போது அக்சராவிற்கு கால் வர பேசிவிட்டு சந்தோசமாக வந்தவள் “ரஞ்சித் வரானாம் இன்னைக்கு, தர்ஷன் சொன்னான்” என்றாள். ப்ரியாவும் “வாவ்..சூப்பர்.. இந்த ஜோதில ஐக்கியமாக அந்த வானரமும் வருதா? இந்த இடம் இனி அவ்ளோதான்.” என கலாய்க்க வாசு “ஹலோ யாருன்னு முதல சொல்லு.”

பிரியா “அவன் எங்க பிரண்ட். பேரு ரஞ்சித். ஸ்கூலிங்க்ல இருந்து நாங்க எல்லாரும் ஒண்ணா படிச்சோம். ரொம்ப பாசக்காரன், பட் கொடூரமானவன்,என்கிட்ட எப்போப்பாரு சண்டைபோட்டுட்டே இருப்பான்.” என

அக்சரா “எங்களோட பெஸ்ட் பிரண்ட். அவனோட அம்மா அப்பா 2பேருமே அவன் 7த் படிக்கும் போதே ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அப்புறம் சொந்தக்காரங்களும் பாத்துக்காம ஒரு 3 வருஷம் படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு தான் போயிருந்திருக்கான். கடைசில ஒரு பத்திரிகை கம்பெனில வேலை செய்ய போயி அவரு இவனுக்கு படிக்கிறதுல இருந்த ஆர்வத்தை பாத்து அவன் படிப்பை கண்டிநியூ பண்ண உதவி பண்ணாரு. அப்போதான் அவன் எங்க ஸ்கூலுக்கு வந்தான். நாங்க ஒரே கிளாஸ் தான். எங்களை விட ரஞ்சித் பெரியவன்னாலும் நாங்க அவன்கிட்ட ரொம்ப பிரண்ட்லியா பழக ஆரம்பிச்சு இப்போவரைக்கும் எங்க பிரண்ட்ஷிப் அப்டியே போகுது. மெரிட், ஸ்காலர்ஷிப்ல தான் படிச்சான். இப்போ பெங்களூரில ஒர்க் பண்ணிட்டு இருக்கான்.

ஸ்கூல் போக ஈவினிங் வீகென்ட் பத்திரிகை ஆபிஸ்ல ஒர்க் பண்ணிட்டு தான் அவன் வளந்தான். கொஞ்சம் பண பிரச்னைனால அந்த பத்திரிகை ஆபிஷ வித்துட்டாங்க. அதை திரும்ப வாங்கி அந்த ஓனர் அங்கிள்கிட்ட தரணும்னு அவனுக்கு ஆசை. அவரு, அந்த பத்திரிகை ஆபிஸ், அப்புறம் பிரண்ட்ஸ்னு நான் பிரியா இவ்ளோதான் அவன் உலகம். கூட பொறக்காத பொறுப்பான அண்ணனா, நல்ல பிரண்டா, வெல்விஷரா, எங்களோட பாடி கார்டா எல்லாமாவும் அவன் எங்களுக்கு இருந்தான். ஒன்றை வருசத்துக்கு முன்னாடி அவனை பாத்தது. இன்னைக்கு இங்க வரனாம்.” என அவள் ஏதோ நினைவலையில் மூழ்க

பிரியா அக்சராவின் தோளில் கை போட்டு “அதான் இன்னைக்கு வரானே. விடு. என்றவள் வாசு, ஆதர்சிடம் திரும்பியவள் ஆனா உங்களுக்கு தான் கஷ்டம். எங்களை கல்யாணம் பண்ணிக்க நீங்க முக்கியமா அவன்கிட்ட நல்லபேர் வாங்கணும். இல்லாட்டி அவ்ளோதான் பா. நாங்க பொறுப்பாக முடியாது. எங்களுக்கு ஏதாவது பிரச்னை ஆச்சு நீங்க காலி..”

வாசு “ஓய்..இது என்ன புது ரூல். யாரும் உனக்காக வரமாட்டாங்கனு நம்பித்தானே லவ் பண்றேன்னு சொன்னேன். இப்போ புதுசா உன்கிட்ட பிரச்சனை பண்ணா சண்டை போட ஆள் வருவங்கன்னா எப்படி. அதெல்லாம் செல்லாது. பிரேக்கப் தான்.” என

பிரியா “என்ன சொன்ன?” என பழம் வெட்ட வைத்திருந்த கத்தியை பார்க்க அவள் கண் சென்ற திசையை பார்த்த வாசு ” இல்லடா, அந்த காபி கப்பை தான்னு சொல்ல வந்தேன். டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு.” என

ஆதர்ஷும், அக்சராவும் சிரிக்க பிரியாவும் சிரித்துவிட்டு ஆதர்சிடம் திரும்பி “அண்ணா, வாசுவவிட உங்கள தான் அவன் ரொம்ப செக் பண்ணுவான். அக்ஸாக்கு எந்தளவுக்கு நீங்க மேட்ச்சா இருக்கீங்கன்னு ..அவனுக்கு அக்ஸா தான் பஸ்ட் அண்ட் பெஸ்ட் பிரண்ட், சிஸ்டர் எல்லாமே. அவ மேல எப்போவுமே ஒரு தனி பிரியம் அவனுக்கு. அதனால கல்யாணத்துக்கு அவன்கிட்ட நீங்க அப்ரூவ் வாங்குறது ரொம்ப முக்கியம் அண்ணா.” என

ஆதர்ஷ் சிரிப்புடன் “இட்ஸ் மை பிளேசர். என் சாராவ பிடிக்காதவங்க யாருதான் இருப்பாங்க.” என்றதும் ஓஒ வென ப்ரியாவும் வாசுவும் கத்த சாரா வெட்கம் கொள்ள ஆதர்ஷ் தொடர்ந்து “அவளை அந்தளவுக்கு பாத்துக்கறவங்க, அவளுக்கு அந்தளவுக்கு பிடிச்சவங்ககிட்ட நல்ல பேரு எடுக்கறதும் அவங்ககூட நான் சேர்ந்து இருக்கறதும் கூட என் சாராவை சந்தோஷப்படுத்தும். அதுக்காகவே அத நான் பண்ணுவேன்.” என்றான்.

 

அனைவரும் தத்தமது வேலைகளை பார்க்க செல்ல மதிய வேளையில் ரஞ்சித்திற்கு பிடித்த அனைத்தும் செய்து வைத்து  வெயிட் பண்ண ஆதர்ஷ்,வாசு அனைவரும் வந்ததும் ரஞ்சித் வந்தான்.

அவனை கண்டதும் அவனும் அக்சராவை பார்த்து அப்டியே நிற்க அருகில் வந்தவன் எதுவும் பேசாமல் இருக்க அக்சரா “ரஞ்சிண்ணா, என்கிட்ட இப்போவும் பேசமாட்டியா?” என

ரஞ்சித் அமைதியாக இருக்க அவள் முகம் வாட அதை காணபிடிக்காமல் அருகில் வந்தவன் “ஹே அக்ஸா, என்னது? எதுக்கு இப்போ முகம் டல்லாகுது? அதான் வந்துட்டேன்ல, என் அக்ஸா எப்போவும் சிரிச்சிட்டே இருக்கணும் சரியா?” என அவளும் புன்னகைக்க மெல்ல அணைத்துக்கொண்டான்.

ப்ரியாவும் சிரித்துவிட்டு “ஓய் வானரமே எப்படி இருக்க? ஹப்பாடி, இரண்டுபேரும் செட் ஆகிட்டீங்களா? இனி உனக்கு நான் தேவைப்படமாட்டேன். சும்மா கூப்பிட்டு அக்ஸா எப்படி இருக்கா? என்ன பண்ரான்னு என்னை இம்சை பண்ணிட்டே இருப்ப.இனி அந்த பிரச்னை இல்ல பாரு…” என

ரஞ்சித்தும் “நல்லாயிருக்கேன். நீ எப்படி இருக்க மந்தி? ஆமா, இந்த வேலையாவது நான் உன்ன மதிச்சு தரேனேனு நினச்சு சந்தோசப்படு. தெரிஞ்சவங்க கம்பெனின்னு உன்னை வேலைக்கு வெட்ச்சா அங்க இருந்து லீவுன்னு வந்துட்டு இங்கேயே டேரா போட்டுட்டு சும்மாதானே இருக்க. இந்த வேலை செய்றதுக்கு என்னவாம்?”

என இருவரும் சண்டையை ஆரம்பிக்க வாசுவும், ஆதர்ஷும் சிரிக்க திரும்பி பார்த்ததும் அக்ஸா அவர்களை அறிமுகப்படுத்தினாள்.

“ரஞ்சித் இவரு ஆதர்ஷ், எங்க எம்டி சார், விக்ரமோட பிரண்ட். இங்க இப்போ ஜெயேந்திரன் அங்கிள் எல்லா இன்ச்சார்ஜ்ம் இவர்கிட்ட தான் குடுத்திருக்காரு. இங்க பக்கத்துல தான் இருக்காங்க. இவரு அவரோட பிரண்ட் வாசு அண்ணா.

உன்ன பத்தி காலைல இருந்து நிறைய அவங்ககிட்ட சொல்லிட்டோம் சோ இப்போ பெரிசா இன்ட்ரோ தேவையில்ல இவன் தான் ரஞ்சித் எங்க பெஸ்ட் பிரண்ட், குட் பிரதர், எங்க கேங்கோட பெரிய வானரம்” என அக்ஸா கூற ரஞ்சித் அவள் தலையில் செல்லமாக கொட்டிவிட்டு ஆதர்ஷ் வாசு இருவருக்கும் கை கொடுத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.

அக்சரா “சரி எல்லாரும் பிரஷ்ஸப் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம்” என எல்லோரும் நகர ரஞ்சித் அறைக்கு சென்று எடுத்துவைக்க சற்று பொறுத்து வந்த அக்சரா ரஞ்சித்திடம்  “எல்லாம் ரெடி சாப்பிட வரலாம்.” என்றாள்.

ரஞ்சித் “எல்லாருக்கும் எடுத்துவைமா. இதோ அஞ்சே நிமிஷம் பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன்.” ம்ம் என்றவள் அங்கேயே நகராமலும் நகர்ந்தும் தயங்கி நிற்க அவளை கண்டுகொண்ட ரஞ்சித் “என்ன மேடம் ஒரு வழியா மனசு வந்திடுச்சு போல. சொல்லு வா.” என

இவள் புரியாமல் அவனிடம் சென்றவள் “என்ன ரஞ்சித் கேக்கற? எனக்கு புரியல. எதுக்கு மனசு வரணும்?”

ரஞ்சித் மெலிதாக சிரித்துவிட்டு “நீ என்கிட்ட ஒரு விஷயம் சொல்ல வரேல்ல, அதான் சொல்ல மனசு வந்திடுச்சு போலன்னு சொன்னேன்.”

அவன் தன்னை அறிந்துகொண்டதை புரிந்து விழிவிரித்து பார்த்தவள் இருந்தும் குறும்புடன் “அப்படியா, அதெப்படி அவ்ளோ நம்பிக்கையோட சொல்ற? அதெல்லாம் ஒன்னுமில்லையே?” என

ரஞ்சித் அவள் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு “ஹே வாலு, என்கிட்டேயே ஒன்னுமில்லன்னு பொய் சொல்றியா? உன்ன எனக்கு தெரியாதா?” என அக்சராவும் புன்னகைத்துவிட்டு “சரி உண்மைதான். ஒத்துக்கறேன்.. ஆனா என்ன விஷயம்னு நான் சொல்லமாட்டேன். நீதான் என்ன நல்லா தெரிஞ்சுவெச்சிருக்கேல்ல? நீயே கண்டுபுடிச்சு நான் என்ன சொல்ல வந்தேன், கேட்க வந்தேனோ அதுக்கும் பதில் நீயே சொல்லிடு. பாக்கலாம்.. ஆனா பிரியாகிட்ட கேட்கக்கூடாது.” என அவள் விரல் நீட்டி மிரட்ட அதை கண்டு சிரித்தவன் “நீ இன்னும் மாறவேயில்லை.. சரி அவ்ளோதானே உன் ஆசை. யார்கிட்டயும் கேட்காம நானே அதுக்கான பதில் சொல்றேன்.” என அவளும் சரி என தலையசைத்துவிட்டு வெளியே வந்தவள் ப்ரியாவிடம் நடந்ததை கூறி “என் லவ் விஷயம் எப்படிடி ரஞ்சித்க்கு தெரிஞ்சது? இல்லை அவன் சும்மா போட்டுவாங்குறானா? அவன் அப்டி எல்லாம் பண்ணமாட்டானே… ஹே பிரியா உண்மைய சொல்லு எனக்கு தெரியாம நீ ஏதாவது அவன்கிட்ட சொன்னியா?”

பிரியா “போடி நீ வேற… அவனை பத்தி உனக்கு தெரியாதா? அவனே ஒண்ணு நேரடியா விஷயத்தை தெரிஞ்சுப்பான். இல்ல சம்மந்தப்பட்டவங்ககிட்ட கேப்பான். மத்தவங்கள எப்போ விசாரிச்சிருக்கான். அது நானாவே இருந்தாலும் அவன் பண்ணமாட்டானு உனக்கு தெரியாதா?”

அக்சராவும் ஒப்புக்கொண்டு ” சரி பாக்கலாம் என் அண்ணன் என்னை எவ்ளோ தூரம் புரிஞ்சுவெச்சிருக்கான்னு?” என கண்ணடிக்க ப்ரியாவும் சிரித்துவிட்டு “என்னமோ பண்ணித்தொலைங்க. ஆனா சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க. இப்போ வா சாப்பிடலாம்.” என இழுத்து சென்றாள்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து குட்டிஸ்களுடன் விளையாடிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

ஆதர்ஷ் இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு என கிளம்ப ரஞ்சித் “அக்ஸா எனக்கு கொஞ்சம் வெளில போகணும். திங்ஸ் வாங்கணும். அப்டியே ஆதர்சோட போயி இறங்கிக்கறேன். என்றவன் ஆதர்சிடம் உங்களுக்கு ப்ரோப்லேம் இல்லையே?”

அவனும் இல்லை என தலைசைக்க இருவரும் அனைவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மேற்கே செல்லும் விமானங்கள் – 3மேற்கே செல்லும் விமானங்கள் – 3

வணக்கம் தோழமைகளே, ராஜகோபாலை விடாது தொடரும் சிலியா. அவள் ஐயங்காராய் பிறந்திருந்தால் தாயின் கண்முன்னே நிறுத்தியிருப்பேனே என்று மனதில் உருகும் நம் கதாநாயகன். இது எங்கு போய் முடியும் என்ற கேள்வியுடன் நாம்… [scribd id=372890235 key=key-fmnoTjY8PvUKL8gnQI0i mode=scroll]   அன்புடன்,

யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’

வணக்கம் தோழமைகளே! எழுத்தாளர் யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’ முழு கதையின் பதிவு உங்களுக்காக. இத்தனை நாளும் தனது பதிவுகளின் மூலம் உங்களது மனதைக் கொள்ளை கொண்ட எழுத்தாளருக்கு ஓரிரு நிமிடங்கள் செலவழித்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே ! [googleapps domain=”drive”