Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 14

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 14

14 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

ஜெயேந்திரனின் வீட்டில் அனைவரும் பேச முதலில் பூக்கள் கண்காட்சிக்கும், காட்டேஜில்  தேவையான ஏற்பாடுகள் செய்வதாகவும், அடுத்து சம்மர் முடித்து ஜூனில் திருமணம் என கூற விக்ரம் அப்போது ப்ராஜெக்ட் என கூற பின் மீண்டும் தள்ளிப்போக இறுதியாக நவம்பரில் திருமணம் வைப்பதாக தீர்மானித்தனர். கண்காட்சி முடித்துவிட்டு விரைவில் நிச்சயம் மட்டும் வைத்துக்கொள்ள முடிவு செய்தனர். அனைவர்க்கும் மகிழ்ச்சியே… இருந்தும் ரொம்ப மாதங்கள் இருப்பதாக தாய்மார்கள் கவலை கொள்ள விக்ரம் சற்றும் யோசியாமல் “மாம், கொஞ்ச நாள் எங்களை லவ் பண்ண விடுங்க… என்கிட்ட கேட்டா அடுத்த வருஷம் வெச்சுக்கலாம்னு தான் சொல்லுவேன். யாருக்கும் தெரியாம வெளில போறது, விடிய விடிய போன் பேசுறது, ப்ரொபோஸ் பண்ண நாள், அவ பர்த்டே, என் பர்த்டே எதுமே கிடைக்கலேன்னாலும் மந்திலீ, அனிவெர்சரி, ஏன் வீக்லி கூட கொண்டாடறது, நிறையா கிப்ட்ஸ், அப்போ அப்போ ஜாலினு  நிறையா பண்ணவேண்டியது இருக்கு…கல்யாணத்துக்கு அப்புறம் பண்ற திருட்டுத்தனத்துல சுவாரசியம் இருக்காது. போர் அடிச்சிடும்..சோ அதுக்கு முன்னாடி டைம் இருக்கறது நல்லதுதான் என அனைவரும் சிரிக்க சஞ்சனா தலையில் அடித்துக்கொள்ள அக்சராவோ “என்ன சஞ்சு நீ, விக்ரம் எவ்ளோ ஓப்பனா பிளான் சொல்றாரு.. நீ என்ன மா இப்டி பண்ற? எங்க உனக்கு அந்த மாதிரி ஆசை இல்லேனு சொல்லு பாக்கலாம் என அவளை சீண்ட அவளோ வெக்கம் கொள்ள அவளை விடுத்து விக்ரமிடம் திரும்பிய அக்சரா “ஆமா விக்ரம், நீயா கல்யாணம் வேண்டாம்னு ஒரு காலத்துல சொன்ன? அங்கிள் விக்ரம நம்பலாமா? எனக்கென்னவோ ஏதோ பிராடு வேலை பண்ரான்னு தோணுது..”

ஜெயேந்திரன் “கரெக்ட் மா.. எனக்கும் அதேதான் டவுட். இவன் சொல்றதெல்லாம் பாத்தா ரொம்ப வருஷமா பிளான் பண்ணமாதிரில இருக்கு.” என தாய்மார்களும் அவனை ஒரு மாதிரி பார்க்க

விக்ரம் “ஐயோ அப்பா, அவ பொய் சொல்றாப்பா.அப்ப்டியெல்லாம் உங்க பையன சந்தேகப்படக்கூடாது…”

அக்சரா “ச்ச..ச்சா… சந்தேகம் எல்லாம் இல்ல பிரண்ட். கன்பார்ம் நீ பிராடு தான். சஞ்சு எதுக்கும் நீ கல்யாணத்துக்கு முன்னாடி இவன் வேலை பாத்த இடம் இருந்த ஊரு எல்லா விசாரிச்சு பாரு மா.. எத்தனை வருஷ அனுபவமோ பாத்துக்கோ.” சஞ்சு அவனை கூர்மையாக பார்க்க விக்ரம் “ஓய்ய்… அக்ஸா நீ சும்மா இருக்கமாட்டா, எல்லாரையும் குழப்பிவிட்டுட்டு, ஆதர்ஷ் நீயே சொல்லு… காலேஜ்ல எல்லாம் நான் எப்படினு….நீ சொன்னாதான் இவங்க எல்லாரும் நம்புவாங்க ” ஆதர்சை பார்த்து அக்சரா கண்சிமிட்ட அவனும் புன்னகைத்துவிட்டு

ஆதர்ஷ் “ச்ச.. ச்சா… விக்ரம் ரொம்ப நல்லவன்.. அவனா எந்த பொண்ணு பின்னாடியும் போகமாட்டான்.” என விக்ரம் “தட்ஸ் மை பிரண்ட்.. ”

ஆதர்ஷ் தொடர்ந்து “அவன் பின்னாடி வர பொண்ணுங்ககிட்ட மட்டும் தான் ரொம்ப ஜாலியா இருப்பான்.” என அவன் முடிக்க விக்ரம் அவனை கண்டு “துரோகி….” என்றான்.

திரும்பி பார்த்து “நான் சும்மாதான் பில்ட்டப் பண்றதுக்காக அப்டி சொன்னேன்..மத்தபடி எனக்கு அடுத்த வாரமே கல்யாணம்னா கூட ஓகே பா…”குடும்பத்தில் அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்க்க அவன் செய்வதறியாது விழிக்க பின் அனைவரும் சிரித்துவிட விக்ரம் “ஹே எல்லாரும் என்ன வெச்சு காமெடி பண்றிங்களா? உங்களை என அடிக்க துரத்த அக்சராவும், சஞ்சனாவும் ஓட அந்த இடமே சிரிப்பொலி எதிரொலிக்க ஆதர்ஷ் மெலிதாக புன்னகைத்தாலும் அவன் அமைதியாக அவனை தூரத்தில் இருந்து கண்டுகொண்ட அக்சரா நின்று அவனை பார்க்க விக்ரம் “மாட்டுனியா?” என சஞ்சனாவை பிடிக்க அவர்கள் தங்கள் உலகத்தில் சென்றுவிட அக்சரா அமைதியாக ஆதர்சிடம் வந்தவள் “சரிங்க அங்கிள் நாங்க கிளம்பறோம். போயி வேலைய ஆரம்பிக்கறோம்… ” என விடைபெற்றுக்கொண்டு ஆதர்சை அழைத்துக்கொண்டு வெளியே வந்தவள் அவனிடம் எதுவும் கேட்காமல் அடுத்து செய்ய வேண்டிய நிகழ்வுகள், வேலைகளை பற்றி பேச்சு கொடுத்து அவனது எண்ணத்தை மாற்றினாள்.

 

அடுத்த வந்த தினங்களில் அக்சரா, ஆதர்ஷ் இருவருக்கும் கல்யாண வேலை கண்காட்சி வேலை என இருக்க இதோடு குழந்தைகளையும் மறக்காமல் அவர்களோடும் நேரம் செலவிடுவது என அனைத்தும் அக்சரா உடனிருந்து பார்க்க, ஆதர்ஷ்க்கு இன்னமும் அனைவரிடமும் அந்த ஒதுக்கம் இருந்துகொண்டே இருந்தது.

அதனால் அவன் வேலைகளை இருமடங்காக பார்த்தான். முக்கியமாக வெளி வேலை, மீட்டிங் என சில நேரம் அவன் உண்ணாமல் வேலை பார்த்தான்.

அவள் சாப்பாடு பற்றி கேட்டதும் “இல்ல சாரா, எனக்கு இந்த ஒர்க் இருக்கு… நீ போயி சாப்பிட்டு வா…” என அவளை அனுப்பி வைத்தான்.

அடுத்து ஐந்து நிமிடத்தில் வந்த அக்சரா தட்டில் அனைத்தும் எடுத்து வந்து கொடுத்தாலும் ஆதர்ஷ் “வேணாம்… நீ சாப்பிடு.” என வேலையில் மூழ்கிட “ம்ச்ச்… வாய மட்டும் திறங்க ” என அக்சராவே அவனுக்கு உணவு ஊட்டவர அவன் முதலில் கொஞ்சம் எதையும் உணராமல் வாங்கிகொள்ள அவனுக்கு புரை ஏறும் போது அவள் வேகமாக தலையை தட்டிவிட்டு தண்ணீர் குடுக்க பின்பும் அவன் வேலையிலே இருக்க இவளும் எடுத்துவைத்துவிட்டு அடுத்து இவனுக்கு தேவையான பைல்ஸ்களை எடுத்து கொடுக்க அவன் கூறுவதை குறித்து கொள்ள என்றிருந்தாள். இரவு வெகு நேரம் ஆகி பின் இருவரும் ஆபீஸ் விட்டு கிளம்பினர். அவள் சற்று தள்ளாட அவளை தாங்கியவன் “என்னடா, என்ன பண்ணுது?”

அவள் “ஒண்ணுமில்ல… எனக்கு டையர்டா இருக்கு.” என்றதும்

ஆதர்ஷ் “நீ சாப்பிட்டியா?” என அவள் இல்லை என தலையசைத்தவன் “சாப்பிட்டு போலாமா? பசிக்கிது..” என்றதும் அவனுக்கு கோபம் வந்தாலும் அவள் பசியை நினைத்தவன் ஏதும் கூறாமல் அவளை கடைக்கு அழைத்துச்சென்றான். அவள் உண்டு முடித்து இருவரும் வண்டியில் ஏறியதும் அவன் பொரிய தொடங்கிவிட்டான்.

ஆதர்ஷ் – “நீ என்ன நினைச்சிட்டு இருக்க… எல்லாமே எனக்கு ஊட்டிவிட்டுட்டு உன்னை யாரு சாப்பிடாம இருக்க சொன்னது?”

சாரா – “நீங்க தான் சாப்பிடவே மாட்டேங்கிறீங்க.. எனக்கு அப்போ பசியில்லை. அதுவுமில்லாம நீங்க மதியமும் சாப்பிடாததால உங்க வயிறும் கொல பசில இருக்கும்ல… அத யாரு கவனிப்பாங்க சொல்லுங்க… நான்தானே பாக்கணும்.. அதான் எல்லாமே உங்களுக்கே ஊட்டிவிட்டுடேன். இப்போ பாருங்க எனக்கு பசின்னாலும் நீங்க எனக்காக டைம் ஸ்பென்ட் பண்ணி கூட வந்து வாங்கித்தறீங்க. இதுவே உங்களுக்கு பசின்னா யோசிக்கக்கூட மாட்டிங்க. இல்ல அப்டியே போயி டையர்ட்ல தூங்கிடுவீங்க. அப்புறம் நான் என்ன பண்றது சொல்லுங்க. உங்க வயிறு என்கிட்ட தானே நாளைக்கு கம்பளைண்ட் பண்ணும்?” அதான் என அவள் சிரிப்புடன் கூற அவன் அவளது விளக்கத்தில் சிரித்தவன் “என் வயிறு உன்கிட்ட கம்பளைண்ட் பண்ணுமா?”

அவள் மேலும் கீழும் தலையாட்ட அவன் “அப்படியா? என்ன சொல்லுச்சு சொல்லு பாக்கலாம்..”

“இந்த ஆதவ் வேலையை பாத்து என்னை பட்டினி போற்றுவான். பொறுப்பே இல்லாத பஸ்டர் பாய் (buster boy) அவன்.. நான் கத்தினாலும் சிக்னல் குடுத்தாலும் என்னை மதிக்கவே மாட்டேங்கிறான். இவன்கிட்ட கத்தி கத்தி என் எனர்ஜியே போயிடிச்சு.. சோ சாரா குட்டி நீ என்னை டேக் கேர் பண்ணிக்கோன்னு உங்க வயிறு என்கிட்ட சொல்லுச்சு.” என அவள் ஏற்ற இறக்கத்தோடு கூற அவை நடந்தால் எப்படி இருக்கும் என அவள் சொன்னது போல எண்ணி பார்த்தவன் வாய்விட்டு சிரித்துவிட்டு பின் “சரி அப்போ என் வயிறு மட்டுமா உன்கிட்ட கம்பளைண்ட் பண்ணும்? வேற எதுவுமில்லையா?” என அவன் ஆர்வமாக கேட்க

யாரு சொன்னது எல்லாமே கம்பளைண்ட் பண்ணும்.

உங்க கை “சாரா செல்லம், இங்க பாரு லொட்டு லொட்டுன்னு தட்டிகிட்டே இருக்கான். கொஞ்சம் கூட கையை நகுத்தாம இப்டி இருந்தா அப்டியே அது பிரீஸ் ஆகி நின்றும். அவனை ஏதாவது பண்ணி வேலை வெச்சு கைய அசைக்க சொல்லு.. எனக்கு மறத்துறும் போலன்னு சொல்லும்.”

உங்க கால் “சாரா மா, நீயே பாரு. மீட்டிங், செக்கிங், சூப்பர்விஸிங்ன்னு வெளில போறான். அங்க போனாலும் உக்காறதே இல்லை… எனக்கு பயங்கரமா வலிக்கிது. விடாம பாதையாத்திரைக்கு வேண்டுன பக்தன் மாதிரி அலையோ அலைன்னு அலையுறான். கோவில்ல அலைஞ்சிருந்தா புண்ணியமாவது கிடைச்சிருக்கும். இவனுக்கு காலா வந்து எனக்கு விமோட்சணமே கிடைக்காது போலவே..தயவுசெஞ்சு அவனை கொஞ்சமாவது உக்கார சொல்லுன்னு” சொல்லும்.

உங்க கண்ணு “சாரா பேபி, கொஞ்சம் கூட ரெஸ்ட்டே விடாம வேலை வெச்சுக்கிட்டே இருக்கான். கண்ணெல்லாம் எரியுது. கல்நெஞ்சுக்காரன் அசந்து கூட தூங்க மாட்டேங்கிறான். கண்ணுன்னு நினைச்சானா? இல்லை கல்லுன்னு நினச்சானா?”ன்னு திட்டும்

எல்லாத்துக்கும் மேல உங்க மூளை கண்ணீர் விடாத குறையா பொலம்பும், காண்டாகி பயங்கரமா உங்கள கத்தும். ” கை, கால், கண்ணு, உடம்பு வலி, பசி, தூக்கம் இது எல்லாமே அவன் ஒரு ஒரு நேரத்துல தான் செய்றான். மனசாட்சியே இல்லாதவன் எதையாவது சொல்லி என்ன யோசிக்க வெச்சு பொழுதன்னைக்கும் என்னை வேலை வாங்கிட்டே இருக்கான். ஆண்டவன் இவனுக்கு ஏன்டா மூளையை குடுத்தாருன்னு எனக்கே கோபம் வருது. நானே ஆண்டவன்கிட்ட அப்ளிகேஷன்போட்டுட்டு இவனை விட்டுட்டு ஓடிடலாமான்னு இருக்கேன்.. தூங்கும் போது கூட என்னை ஏதாவது திங்க் பண்ண வெக்கிறான். சாம கோடாங்கி… இவனை நீ ஓரளவுக்கு ஹாண்டில் பண்ணா நான் இவன்கூட இருப்பேன். இல்லை நான் இவனை விட்டு போய்டுவேன். அப்புறம் உனக்கு மூளையே இல்லாத முட்டாள் தான் புருஷனா வருவான் பாத்துக்கோன்னு ” மிரட்டும்.

என அவள் கூறிமுடிக்க ஆதர்ஷ்க்கு அனைத்தும் கேட்டு முதலில் சிரிப்பு வர கண்ணீர் வரும் அளவிற்கு அதை நினைத்து நினைத்து சிரித்தான்.

 

“கான்செப்ட் எல்லாமே ஓகே தான். ஆனா திட்றது எல்லாம் நீயே சொல்றமாதிரி இருக்கே..” என அவளை தலை சரித்து பார்க்க அக்சரா மெலிதாக தடுமாறிவிட்டு “ஆ.. அது எல்லாம் இல்ல. உங்கள நான் திட்டுவேனா? உங்க மைண்ட் தான் அப்டி சொல்லுச்சு. டிரஸ்ட் மீ… என அவள் கண்கள் மின்மினி போல படபடத்துக்கொண்டே கூற அவளை பார்த்து “இருந்தாலும் வாலு உனக்கு ரொம்ப தான் தைரியம்… என் முன்னாடி எல்லாரும் நின்னு பேசவே யோசிப்பாங்க. நீ என்னடான்னா என்னை பத்தி என்கிட்டேயே அதுவும் திட்டி கிண்டல் பண்ணி சொல்றே.. உன்ன என்ன பண்ணலாம்?”

அவள் தன்னை அவன் கண்டுகொண்டதை எண்ணி  உதட்டை கடித்துக்கொண்டு திருதிருவென விழிக்க அதில் தன்னை இழந்தவன் அவளது உதட்டை விடுவித்தவன் அவள் கன்னங்களை வருடியவன் அவளது கூச்சத்தையும் உடல் சிலிர்பையும் உணர்ந்தவன் மெலிதாக புன்னைகைத்துவிட்டு அவளின் கைப்பற்றி தன் கைக்குள் அடக்கினான். அவளது கண்களை பார்த்து வினவினான்.

“சாரா, நீ சொன்னது எல்லாமே சரி தான். எனக்குள்ள நிறையா ஓடிட்டே இருக்கு. எது தேவைன்னே தெரியாம தேடி போயிட்டிருக்கேன். என்னோட ஒவ்வொரு அசைவுக்கும், ஏன் என்னோட உயிர், உடம்புல இருக்கற ஒரு ஒரு அணுவுக்கும் இருக்கற தேவையும், அதுக்கான அர்த்தம் புரிஞ்சுக்க முடியற  உனக்கு என் மனசு அதுல இருக்கிற வலியும் புரியலையா? என்னால நடந்த எதுல இருந்தும் வெளில வரமுடியாம தான் இப்டி இருக்கேன்னு நீ புரிஞ்சுக்கலையா? நான் வேணும்னு பண்ணல. நீ எனக்காக கவலைப்படறது, விட்டுக்கொடுக்கறது, உன்னை கஷ்டப்படுத்திக்கறது எல்லாம் வேண்டாம்டா. என்னால அத இன்னும் முழுசா  ஏத்துக்க முடில. நீ இப்டி எனக்காக பாத்து உன்னை கவனிச்சுக்கலேன்னு தெரிஞ்சா அது என்னை இன்னும் வீக் ஆக்கிடும். நீ நீயா இரு.. அதுதான் எனக்கு எப்போவுமே வேணும். பிடிக்கும் சரியா? என அவளது மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு தலையோடு முட்டிவிட்டு “கிளம்பலாமா?” என வினவினான்.

சாராவும் மெல்லிய புன்னகையுடன் தலையசைக்க “தட்ஸ் மை கேர்ள்…” என நெற்றியில் முத்தமிட்டு வண்டியை கிளப்பினான்.

அவளும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே வர அவளின் அமைதியே அவனை பிசைக்க அவளிடம் அவனே ஏதாவது கேட்க பேச்சு குடுக்க என்றிருந்தான். அவள் பதில் கூறினாலே தவிர வேறு எதுவும் பேசவில்லை.

அவள் இறங்க போக “சாரா, கோவிச்சுகிட்டேயா?” என்றான் ஆதர்ஸ்.

திரும்பி பார்த்தவள் “தெரில … ஆனா கொஞ்சம் வருத்தம். வேற எதுவும் இல்லை. சரி ஆய்டும் விடுங்க.” என்றாள்.

ஆதர்ஷ் “ம்ச்ச்.. என்ன மா, ஏன் இப்டி பண்ற? எதுக்கு நீ வருத்தப்படணும்… நீ நீயா உனக்கு பிடிச்சமாதிரி இருன்னு தானே சொல்றேன்.”

அக்சரா “எனக்கு பிடிச்ச மாதிரி தான் இப்போவும் இருக்கேன். என்னோட குடும்பத்தை முக்கியமா உங்களை நல்லா பாத்துக்கணும்னு நினைக்கறேன்.. உங்க எல்லாரோட சந்தோசத்தை பாக்க தான் எனக்கு பிடிச்சிருக்கு.” என அவள் புன்னைகையுடன் சொல்ல

ஆதர்ஷ் “நான் இது இது பண்ணனும்னு சொல்றது. என்னை கேர் பண்ணிக்க உன்னை கஷ்டப்படுத்திருக்கறதுன்னு நீயும் எமோஷனல் பிளாக் மைல் பண்ண ஆரம்பிச்சுட்டியா? என்னை கண்ட்ரோல் பண்ண பாக்காத சாரா.” என அவன் கொஞ்சம் காட்டமாகவே சொல்ல

இப்போது கோபம் கொண்ட சாரா திரும்பி “ஆதவ் கொஞ்சம் பொறுமையா இருங்க. நான் நானா தான் இருக்கேன். உங்களுக்கு என்ன பிரச்சனை. ஒழுங்கா சாப்படல, உடம்பை பாத்துக்கலைன்னு சொன்னேன். ஆனா மாத்திக்கோங்கன்னு நான் உங்ககிட்ட கேட்டேனா? நீங்க தான் எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு நான் இப்படித்தான் நீ உன்னை பாத்துக்கோ, டேக் கேர் பண்ணிக்கோன்னு என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கீங்க. உங்களுக்காக பாத்திட்டு என்னை பாத்துக்கலேன்னு நீங்க சொல்லாதீங்க. ஏன்னா நீங்களே அந்தமாதிரி இல்லை. அடுத்தவங்க பண்ண பிரச்னைக்கும் தப்புக்கும் உங்களை வருத்திக்க நீங்க ரெடியா இருக்கீங்க.. அப்டி பிரச்சனைய பத்தின எண்ணம் வரும்போது மனச மாத்திக்க வெறித்தனமா வேலை பாக்கணும், அதை பத்தி நினைக்கவே கூடாதுனு இருந்தா வாழ்க்கை முழுக்க பயந்துதான் ஓடிட்டு இருக்கனும். ஒண்ணு அந்த பிரச்சனைய யோசிச்சாலும் இனி மாத்தமுடியாதுன்னு நினைசீங்கன்னு அத மறக்க முயற்சி பண்ணுங்க. அதை தூக்கி எறிஞ்சுட்டு அது கத்துக்குடுத்த பாடத்தை மட்டும் மனசுல வெச்சுகிட்டு வெளில வாங்க. இல்லையா தைரியமா திரும்ப அதை போயி சரி பண்ணிட்டு வாங்க. இப்டி இரண்டும் இல்லாம உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்க இது ஒரு சாக்கு இல்லையா?

இந்த மாதிரி கேள்வியே இல்லாத பதிலை கண்டுபுடிக்கறேன்னு வாழ்க்கையை வீணாக்காதீங்க. அதைவிட அழகான தேவையான விஷயங்களுக்கு மதிப்பு குடுங்க.. நமக்கு பிடிச்சவங்க சந்தோசமா இருக்கணும், அவங்களுக்கு பிரச்னை வரக்கூடாதுன்னு தான் எல்லாரும் நினைப்பாங்க. இதுக்கு நீங்களும் விதிவிலக்கு இல்லை. அவன் ஏதோ சொல்லவர அவனுக்கு பேச இடம் தராமல் இல்லைன்னு சும்மா சொல்லாதீங்க. அக்கறை இல்லாம தான் என்கிட்ட பிரச்சனை பண்ண அந்த பொறுக்கிய தொவைச்சு ஹாஸ்பிடல்ல போட்டீங்களா? உன் பிரச்னையை நீயே சால்வ் பண்ணுனு ஏன் என்கிட்ட சொல்லல. ஏன் இப்போவும் நான் சாப்பிடாம என் உடம்பை கெடுத்துப்பேனோனு தானே என்கிட்ட இவ்ளோ ஆர்கியூ பண்றீங்க. நீங்க பண்ணா சரி? அதே விஷயத்துக்கு நான் உங்ககிட்ட ஆர்கியு பண்ணா தப்பு இல்லையா? அவன் அமைதியாக இருக்க நீங்க எதையோ நினைச்சுட்டு சாப்பிடாம தூங்காம உடம்ப கெடுத்துக்கிறீங்கன்னு நான் உங்ககிட்ட அட்வைஸ் பண்ணல. அதேமாதிரி இதெல்லாம் ஏன் பண்ணலன்னு சண்டையும் போடல. ஆனா நீங்கழும் அப்போ என்கிட்ட இந்த மாதிரி அட்வைஸ் கேள்விகள் வெச்சுக்கக்கூடாது தானே. உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு இப்போவரைக்கும் தெரியாது. நீங்களா சொல்றவரைக்கும் நான் கேட்கவும் மாட்டேன். ஆனா நீங்க இவ்ளோ வருத்தப்படுறீங்கன்னு அது 1 நாள் முன்னாடி இல்லை 1 மாசம் முன்னாடி நடந்த விஷயம் இல்ல. ஆனா அப்போ இருந்து நீங்க வருத்தப்பட்டாலும் சாப்பிடாம, தூங்காம, உடம்பை பாத்துக்காம தான்  இருந்தீங்களா என்ன? இல்லேல்லா? எல்லாமே பண்றீங்க தானே. அதவே தேவைப்படும்போது சரியான நேரத்துக்கு பண்ணுங்க. கொஞ்சம் முழு மனசோட நிம்மதியா பண்ணுங்கன்னு தான் சொல்றேன். அண்ட் இன்னொரு விஷயம் உங்களுக்கு தான் கோபம் வரும்னு நினைப்பா? மத்தவங்களுக்கும் வரும். அடுத்தவங்ககிட்ட கோபமா பேசுறதுக்கு முன்னாடி அது அங்க தேவையான்னு யோசிச்சு பேசுங்க. அதோட உங்களுக்கு எது வேணும். எது பண்ணனும்னு நீங்க தெளிவா முடிவெடுங்க. குட் நைட்.” என்றவள் விருட்டென்று சென்றுவிட்டாள்.

 

அவள் சென்றபின் அறைக்கு வந்தவன் முதலில் கோபத்துடன் குறுக்கும் நெடுக்கும் நடக்க அவளிடம் இருந்து “ரொம்ப நேரம் ஏதாவது யோசிச்சிட்டே நடக்காம தூங்குனா பெட்டர் சார். குட் நைட்” என்ற மெசேஜ் உடன் ஸ்மைலி வர இவன் இதழும் மெலிதாக விரிந்தது.

அவள் தன்னை அந்தளவுக்கு புரிந்து வைத்துள்ளது எண்ணி அவன் பெருமைகொண்டாலும் ஏன் மனமே அதை எதிர்பார்த்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தான். அவன் மனமே அவனிடம் கேட்டது “சாரா சொன்னதுல என்ன தப்பு. நீயே உன் முடிவுல தெளிவா இல்லை. அவ உனக்கு அட்வைஸ் பண்ணல, சண்டை போடல, ஆனா உனக்கு வேணும்கிறது அந்த சூழ்நிலையை உருவாக்கி அவளே செய்றா. அதுவும் உனக்கே தெரியாம. அதுல என்ன பிரச்சனை.?” என்ற மனதின் கேள்விக்கு அவன் சிந்திக்க ஆரம்பித்தான்  சாப்பிட மாட்டேன்னு  சொன்னாலும்  அவ எடுத்து வெட்ச்சாலோ, ஊட்டி விட்டாலோ சாப்பட்றேன். அவளை வேலை அதிகம் இருந்தா வீட்டுக்கு போக சொன்னாலும், அவ கூட இருந்து செஞ்சா வேகமா முடிச்சிடறேன். இதே விஷயத்தை அவ என்கிட்ட நான் ஹெல்ப் பண்ண  இருக்கேன்னு நேரா சொன்னா வேண்டாம்னு சொல்லுவேன் தான். ஆனா அவ  தெளிவா வேற ஏதாவது வேலைய பத்தி பேசினதும் நானும் அத மறந்துட்டு வேலை பாக்க போய்ட்டா அவளும் அப்டியே கூட இருந்து எல்லா வேலையையும் எனக்கு ஹெல்ப் பண்ணிடறா. தான் வேலை அதிகம் செய்து சிறிது முகம் மாறினாலும் அவள் காபியுடன் வந்து நிற்பது, காட்டேஜ் விசிட் சென்றால் தனக்கு முன் அங்கே கால் செய்து எது தேவை என அனைத்தும் தயார் நிலையில் வைத்திருப்பது, நான் ஆபீஸ் வந்தால் என் செய்கைகள் கொண்டே வேலைகள், மீட்டிங் எது அன்று என்னால் முடியும், முடியாது என அனைத்தும் அவள் பார்த்துக்கொள்வது என தன் மனநிலை எப்போது எப்படி இருக்கும் என தன்னை விட அவள் சரியாக அறிந்து வைத்துள்ளது எண்ணி பூரித்தான்.

அதோடு அவள் இன்று தன்னிடம் கோபம் கொண்டு பேசியது எண்ணி அவன் மேலும் சிரித்தான். இவளோ அமைதியா கூட சண்டை போடா முடியுமா? என எண்ணியவன் கண்ணாடி முன் நிற்க அவன் மனக்கண்ணில் சாராவின் நிழல் உருவம் தெரிய அதனுடன் பேச ஆரம்பித்தான். “ஆனா பிராடுடி  சாரா நீ,  உடனே என்கிட்ட குரலை உயர்த்திருந்தக்கூட நான் கவனிச்சிருக்கக்கூட மாட்டேன். மேடம் பொறுமையா பேசுற மாதிரியே பேசுற, நடுவுல நான் பேசவந்தாலும் கொஞ்சம் கூட இடமே குடுக்காம பேசுறா, வேகமா சொன்னாலும் சொல்ற விஷயத்துல அப்டி ஒரு தெளிவு, பேச்சுல ஒரு நிதானம், வார்த்தைல அப்டி ஒரு அழுத்தம் கடைசியா எவ்ளோ அழகா சொல்ற நீ, மத்தவங்களுக்கும் கோபம் வரும்னு. சொல்லிட்டு நீ பாட்டுக்கு போறா. அதோட என்ன சொல்ற .. ‘நீங்க எதையோ நினைச்சுட்டு சாப்பிடாம தூங்காம உடம்ப கெடுத்துக்கிறீங்கன்னு நான் உங்ககிட்ட அட்வைஸ் பண்ணல. அதேமாதிரி இதெல்லாம் ஏன் பண்ணலன்னு சண்டையும் போடல. ஆனா நீங்கழும் அப்போ என்கிட்ட இந்த மாதிரி அட்வைஸ் கேள்விகள் வெச்சுக்கக்கூடாது தானே?’ னு.. நான் உன்கிட்ட கேள்வி கேட்காம உன்னை கவனிச்சுக்கமா வேற யாரு பாத்துக்குவாங்க. இவனே தொடர்ந்து சரிதான் அப்போ நீதான் என்னை பாத்துக்கணும். நீ கேட்டது சரின்னு நான் ஒத்துக்கறேன். இனிமேல் இதுக்காக முக்கியமா நீ என்னை பாத்துகிற விஷயத்துல  உன்கிட்ட சண்டை போடமாட்டேன். உன்னை கண்ட்ரோல் பண்ணமாட்டேன். சர்ரெண்டெர் மேடம்.” என கனவில் தெரிந்து உருவம் சிரித்துக்கொண்டே மறைந்துவிட

அவன் மனம் “அப்போ இனிமேல் சாரா என்ன சொன்னாலும் கேக்கப்போறியா? அவளும் உன்னை அன்ப காட்டி உன்னை அவகிட்ட இழுத்துகிட்டா, இதுவும் ஏமாற்றத்துல போயி முடிஞ்சுட்டா? என தன் கேள்வி கணைகளை வீசி அவனை அசைத்தது.

ஆனால் இந்த முறை அவன் தெளிவாக பதில் கூறினான். “தெரில. என் சாராவோட அருகாமையையும், அதீத அன்பையும் ரொம்ப எதிர்பார்க்கிறேன். அவ இதுவரைக்கும் நான் தப்பா செஞ்ச எனக்கு பிடிச்சவிஷயங்களை தான் சுட்டிகாட்டிருக்கா. மத்தவங்ககிட்ட பாத்த விஷயத்தை வெச்சு அதோட பாதிப்புனால சில நேரம்  நான் அவளை கஷ்டப்படுத்திடறேன். இனிமேல் அந்த குழப்பத்துக்கு அவ விஷயத்துல நான் இடம் கொடுக்கமாட்டேன்.முழுசா நம்புறேன். என் சாரா என்னை ஏமாத்தமாட்டா. முக்கியமா அன்ப காட்டி என் உணர்ச்சிகளை மதிக்கமா அடிமையாக்கமாட்டா. இனி என் சாராகிட்ட எனக்கு பிடிச்சமாதிரி நான் இருக்கபோறேன். அவகிட்ட வேற ஆள்கூட இருக்கற மாதிரி என்னால ஒதுங்கி இருக்க, யோசிச்சு பேச எல்லாம் முடியாது. ” என்றவன் தெளிவான முடிவோடு மகிழ்வுடன் ‘அப்போ மேடம்கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் போலவே. என்னவே என்னமா அடக்குறா. என்னவெல்லாம் நிக் நேம் வெக்கிறா? பொறுப்பில்லாத பஸ்டர் பாய், பாதையாத்திரைக்கு வேண்டுன பக்தன், கல்நெஞ்சுக்காரன், மனசாட்சி இல்லாதவன்னு  ஒருத்தர கஷ்டப்படுத்தறமாதிரி வார்த்தைகளை கூட இவளோ ரசிக்கறமாதிரி சொல்லமுடியுமா? அக்சரா அழகி டி….ஸ்வீட் ரவுடி நாளைக்கு உன்னை கவனிச்சுக்கறேன். இன்னைக்கு கத்திட்டு போய்ட்டேல்லே உனக்கு குட் நைட் சொல்லமாட்டேன் பாக்கலாம் என்ன பண்றேன்னு ” என மொபைலில் அவளது படத்திடம் பேசிவிட்டு சிரிப்புடன் உறங்க சென்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 71ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 71

71 – மனதை மாற்றிவிட்டாய் திவி “வெயிட் வெயிட். அது முழுசா பொய்யுமில்லை, உண்மையுமில்ல. இரண்டுமே மிக்சிடு தான்.” “அதான் எப்படி? ” “அனு விசயத்துல சோபி பண்ணத பாத்தபிறகு எனக்கு அவளை சுத்தமா நம்பாதோனல. அதனால என் பிரண்ட் ஒருத்தன்கிட்ட

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 3’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 3’

அந்தக் கருநீல மீட்டிங் சூட் கேட்டின் உடலைக் கச்சிதமாய் கவ்வியிருந்தது. மிகச் சிறிய வைரத் தோடு, அதே டிசைனில் சிறிய பென்டன்ட் மற்றும் கையில் ரோலக்ஸ் வாட்ச். பார்ப்பவர் கண்ணைக் குத்துவது  போன்ற  லிப்ஸ்டிக்கும் முகப்பூச்சும் அவளுக்கு அறவே பிடிக்காது என்பதால்

Chitrangatha – 41,42Chitrangatha – 41,42

வணக்கம் பிரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கிங்க. உங்களது கமெண்ட்ஸ், கவிதை மற்றும் அன்புக்கு நன்றி. அடுத்த இரு பதிவுகளுடன் உங்கள் முன் வந்துவிட்டேன். சரயுவிடம் ஒரு வரம் கேட்கிறான் ஜிஷ்ணு. காதல் நிராசையாய் போன ஒரு மனிதன், கருகிப் போன தனது