Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 11

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 11

11 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

அக்ஷரா பேசிய அனைத்தையும் யோசித்தவனுக்கு எவ்வளவு பாசமான குடும்பம் இருந்திருந்தா அவங்க இல்லேன்னாலும் மதிப்புகுடுத்து அவங்க சொன்னமாதிரி வாழ்வேன்னு சொல்லுவா. அதுவும் குழந்தைங்களோட அப்டியே தனியா  வாழ்றவ எவ்வளோ பிரச்னை வந்திருக்கும்.. விஷயம் சின்னதோ பெரிசோ எதையுமே தெளிவா யோசிச்சு பேசுறவ எப்படி ஒரு செட்டில்டு லைப்காக மட்டும்னு விக்ரம மேரேஜ் பண்ணிக்க ஓகே சொல்லுவா? என ஆதர்ஷின் மனதினுள் ஒரு வினா எழ

‘அவ எங்க அப்படி சொன்னா? நீயா தான் அந்த மாதிரி சொல்லி திட்டிட்டு வந்திட்ட.’. என அவன் மனமே அவனுக்கு பதிலுரைக்க

“ஓ.. ஆனா இரண்டு பேருமே சந்தோஷமா தானே பேசிட்டு வந்தாங்க..”

அக்ஷரா மேரேஜ்க்கு ஓகே சொல்லாட்டி விக்ரம் எப்படி நார்மலா இருப்பான்?

வீட்டிற்கு சென்றதும் முதலில் அவளிடம் பேசி பல விஷயங்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என்று எண்ணினான். அதற்குள் ஜெயேந்திரனிடம் இருந்து ஆதர்ஷை வீட்டுக்கு வந்துவிட்டு போகும்படி அழைப்பு வந்தது. வேறு வழியின்றி அவர்களை இறக்கிவிட்டு ஆதர்ஷ் மட்டும் சென்றான்.

 

அங்கே சென்றதும் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். தனம் “வாப்பா ஆதர்ஷ். இந்த ஸ்வீட் எடுத்துக்கோ. ”

“எதுக்கு மா? ஏதாவது விசேஷமா?”

“ஆமா, விக்ரம் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டான்.”

ஜெயேந்திரன் “பொண்ணுகூட ரெடி.. எல்லாம் நமக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணு தான்.” என

தனம் “எல்லாமே நம்ம அக்சராவால தான்… இல்லீங்க.. எனக்கு எவ்வளோ சந்தோசமா இருக்கு தெரியுமா?” என சொல்லிக்கொண்டே இருக்க ஜெயேந்திரனுக்கு போன் அழைப்பு வந்தது என நகர்ந்துவிட தனலக்ஷ்மியும் “நீ உக்காரு ஆதர்ஷ், உனக்கு நான் குடிக்க ஏதாவது கொண்டு வரேன்.” என இருவரும் விஷயத்தை மட்டும் கூறியவர்கள் யார் அந்த பெண் என கூறாமல் சென்றுவிட இவனுக்கு தான் ஒரு ஒரு வினாடியும் யுகமாக மனதினுள் யுத்தமே நிகழ்த்திக்கொண்டிருந்தான்.

 

‘இங்க என்ன நடக்கிது? அக்சரா எப்படி.. இல்ல அவகிட்ட பேசாம இனிமேல் அவளை பத்தி தப்பா நினைக்கக்கூடாது. இருந்தாலும் இவங்க எல்லாருமே இவ்ளோ தூரம் சொல்றங்கன்னா கண்டிப்பா அவ சம்மதம் இல்லாம இருக்காதே. விக்ரம் ஆசை எப்போதுமே அக்சரா அவனின் வாழ்வில் வேண்டும் என்பது, அவனின் பெற்றோர் ஆசை, அக்சரா பேசியது அனைத்தும் எண்ணி பார்க்க அவனுக்கு ‘இல்லை. என் அக்சரா அப்டி என்னை விட்டுட்டு போகமாட்டா.’ என அவன் கூற அவனது மனமோ ‘எப்படி எப்போ இருந்து அவ உன் அக்சராவானா?’ என்ற கேள்விக்கு பதில் கூறும் நிலையில் அவன் இல்லை. அவனுக்கு இப்போது அக்சராவிடம் பேசவேண்டும். அதன் முன் இங்கே என்ன நடக்கிறது என்ன செய்வது என அவன் முடிவெடுத்தவுடன் ஜெயேந்திரன், தனம் வந்ததும் “பொண்ணு யாருமா?”

“நம்ம சஞ்சனா தான்..” என்றதும் அவனுக்கு என்னவென்று சொல்லமுடியாத நிம்மதி.

தனம் “எங்க எல்லாருக்குமே சஞ்சனாவை எப்போவுமே பிடிக்கும். இந்த வீட்டு பொண்ணு இந்த வீட்லையே இருந்தா நல்லா இருக்கும்னு ஒரு எண்ணம், அதோட எனக்கு அவருக்கு, மரகதம் எல்லாருக்குமே இந்த ஆசை இருந்தது. அக்சராகிட்ட சொல்லிருந்தேன். அவ விக்ரம்கிட்ட, சஞ்சனாகிட்ட  பேசிருக்கா. அவங்களும் பேசி எல்லாமே சுமூகமா முடிஞ்சது.” என முடிக்க விக்ரம் அங்கே வந்தவன் “அம்மா போதும் மா. ஓகே சொன்னது நானு, எனக்கு தான் கிரெடிட் வேணும்..”

“நீ கொஞ்சம் பேசாம இரு விக்ரம். ஆதர்ஷ் நீ அவனை விடு.. இவன் அடுத்து ஊருக்கு போறதுக்குள்ள கல்யாணம் பண்ணிடணும்னு முடிவு பண்ணிருக்குப்பா. கல்யாண வேலைன்னா எவ்வளோ இருக்கு. அவருக்கும் அலைச்சல் எல்லாம் முடியாது..விக்ரமை கை காட்டி இவனை நம்பினா ஒன்னும் நடக்காது. எனக்காக இந்த வீட்டு மூத்த பையனா நீ தான் முன்னாடி நின்னு எல்லாமே பாத்துக்கணும் செய்வியா?” என

கேட்க

ஆதர்ஷ் அவரின் கைகளை பிடித்துக்கொண்டு “நீங்க கவலையே படாதீங்க மா. எல்லாமே நான் பாத்துக்கறேன். என்ன பண்ணனும்னு சொல்லிட்டு நீங்க டென்ஷன் இல்லமா ரிலாக்ஸா இருங்க. எங்க வீட்ல நான் எந்த விசேசத்துலையும் பெருசா கலந்துக்கிட்டதே இல்ல. அண்ணா கல்யாணம் கூட வந்துட்டு உடனே போய்ட்டேன்.. ஆனா எல்லாரோட சேர்ந்து செலிப்ரட் பண்ணனும்னு தோணும். ஆனா அங்க என்னால அது முடியல. எனக்கு அந்த ஆசையே போயிடிச்சு. ஆனா நீங்க என்கிட்ட ஆசைப்பட்டு ஒண்ணு கேட்டிருக்கிங்க. அதுக்காகவே  இங்க எல்லாமே நான் பாத்துக்கறேன் விக்ரம் கல்யாணம் செமையா நடத்திடலாம்..” என அவன் நம்பிக்கை குடுக்க இதை பார்த்துக்கொண்டிருந்த விக்ரம், ஜெயேந்திரன், தனம், சஞ்சனா, மரகதம் அனைவரும் அவன் கூறியதை கேட்டு அமைதியாக விக்ரம் சட்டென்று சுதாரித்து “அடடா என்ன இங்க செண்டிமெண்ட் ஸீனா.. டேய் அண்ணா எந்திரி ..” என அனைவரும் அதிர்ச்சியாக ஆதர்ஷ் அவனை பார்க்க விக்ரம் “என்ன எல்லாரும் இப்டி ஷாக் ஆகுறீங்க. உங்களை ஆதர்ஷும் அம்மா அப்பா தான் கூப்பிட்றான். இந்த வீட்டு மூத்த பையனா இருந்து எல்லாமே பாத்துக்கணும்னு வேற சொல்லிட்டீங்க. அப்போ அவன் எனக்கு அண்ணா தானே.” என அனைவரும் ஆசுவாசமாக மூச்சுவிட ஆதர்ஷ் சிரித்துக்கொண்டே எழுந்து வந்து “அதெல்லாம் சரி தான் விக்ரம். ஆனா எனக்கு இன்னொரு குடும்பம், உறவு இதெல்லாம் வேண்டாம். நாம எப்போவும் போல நல்ல பிரண்ட்ஸாவே இருப்போம். அதான் நல்லா இருக்கும்.” என அவன் கூற அவனை பற்றி அனைவர்க்கும் தெரியும் என்பதால் எதுவும் கூறாமல் அவன் கிளம்ப போக அவனுடன் வந்த விக்ரமிடம் அவனே கேட்டுவிட்டான். “விக்ரம் என்ன நடந்தது?” என அவனும் புரியாமல் முழிக்க

“இல்ல நீ என்கிட்ட வேற சொன்னமாதிரி இருந்தது. ஆனா  இப்போ இங்க நடக்கிறது முழுக்க வேற. அதுவும் உங்க கல்யாணத்துக்கு அக்சரா தான் காரணம்னு எல்லாரும் சொல்ராங்க அதான் என்ன ஆச்சுன்னு கேட்டேன்.”

விக்ரம் சிரித்துக்கொண்டே “ஓ…அக்சரா பத்தியா?.. நான் அக்சராகிட்ட உன்கிட்ட சொன்ன எல்லாமே சொன்னேன்.. பேசி கேட்டேன். அதுக்கு அவ சொன்னா ‘கண்டிப்பா நான் பெஸ்ட் பிரண்டா எப்போவுமே கூட இருப்பேன்னு.’

எனக்கே நாம சரியாத்தானே சொன்னோம்னு சந்தேகமே வந்திடுச்சு ஆதர்ஷ். அவகிட்ட மறுபடியும் கேட்டதுக்கு அவ சிரிச்சிட்டே பதில் சொன்னா என அவன் கூற

 

அன்று நடந்தவை :

[அக்சரா “இல்ல விக்ரம் நீ சொன்னதுல நல்லா யோசிச்சு பாரு.. யாரும் உனக்கு க்ளோஸ இல்ல. எல்லாமே கிடைச்சும், எல்லாருமே பாசமா இருந்தும் மனசார எல்லாமே ஷேர் பண்ணிக்க, சண்டை போட, அட்வைஸ் கேட்க, குடுக்க ஒருத்தர் வேணும்னு எதிர்பார்க்கிற. இது உனக்கு மட்டுமில்ல. எல்லாருக்குமே இப்டி ஒரு எண்ணம் இருக்கும். அதுக்கு சரியான ஆள் இவங்கதான்னு கண்டுபிடிச்சிட்டா அவங்கதான் நம்ம லைப் பார்ட்னர்னு தப்பா புரிஞ்சுக்கிறாங்க. அதுதான் பிரச்சனை.. அந்த மாதிரி ஒருத்தர் பிரண்டா, அக்கா, அண்ணா, தங்கச்சி, அப்பா, ஏன் ஜஸ்ட் நீ ட்ராவெல பாக்கறவங்க, இல்லை உனக்கு ஒரு வெல் விஷரா கூட இருக்கலாமே. அவங்க உடனே லைப் பார்ட்னர் ஆக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. அந்த ரியாலிட்டிய ஏத்துக்கணும். அதோட கல்யாண லைப்ல உனக்கு ஒரு ஒப்பீனியன் இருக்கும் எனக்கு ஒன்னு இருக்கும் …அப்டி பாத்தா நான் உனக்கு சரியானவ இல்லை.”

” அப்டினா நான் உன்னை உண்மையா லவ் பண்ணல. பாத்துக்கமாட்டேன்னு சொல்றியா?”

“அப்படி சொல்லல விக்ரம். அது முதல லவ்வானு கேட்டுக்கோ. ஏன்னா நீ என்னை விரும்பிருந்தா நான் உன்  லைப்ல வேணும்னு மட்டும் நினைச்சிருப்ப. என்ன நடந்தாலும் சரி, என்கூட இருக்கணும்னு ஆசைப்பட்டிருப்ப. ஆனா நீ தெளிவா சொன்ன, இது இது காரணம், நான் யோசிச்சேன். சோ அக்சரா நீ லைப்ல இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுதுன்னு. அப்போ நீ சொன்ன காரணம் விஷயம் எல்லாமே நான் கொஞ்ச நாள்ல மாத்திகிட்டா என்னை விட்ருவியா? அப்போ உனக்கு என்ன பிடிக்காம போகுமா? பிரேக்டிக்கல யோசிச்சு சொல்லு” என

“அது, அப்டின்னு இல்லை. பட் கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பண்ணமுடியும்.?” என விக்ரம் கூற

அவள் மெலிதாக புன்னைகைத்து “பாரு, அப்டி இருந்தாலும் அத எப்படி ஹாண்டில் பண்றதுனு தெரியும்னு நீ சொல்லல. உன் முடிவுல முடிவுல மேல உனக்கு நம்பிக்கையில்லை.

இல்ல அக்சரா நீ அந்த மாதிரி பண்ணமாட்டேனு சொல்ல என் மேலையும் முழுசா உனக்கு நம்பிக்கை இல்லை. அப்படியிருக்க எப்படி அது லவ் ஆகும்? லவ்ல அன்பு, நம்பிக்கை, புரிதல் ரொம்ப முக்கியம்னு நினைக்கிறவ நான். இதுல ஒன்னு இல்லேன்னாலும் லைப் மாறிடும். அத ஆசைப்பட்டு ஏத்துக்கிட்டது போயி கடமைக்குனே வாழவேண்டியதா போய்டும். என்னால அப்டி உணர்ச்சியை தொடச்சிட்டு  இருக்கமுடியும்னு தோணல. அதான் சொல்றேன் நாம இரண்டுபேரும் இப்டி இருக்கறதுதான் சரினு.”

அதை ஓரளவுக்கு ஒப்புக்கொண்டவனுக்கு “நீ சொல்லறது சரிதான்… எனக்கு நீ கூட இருந்தா ஓகேனு தோணுச்சு. ஆனா மத்தபடி நீ சொல்றமாதிரி பீலிங்ஸ் எல்லாம் தோணல தான்… அப்டின்னா நான் உன்ன லவ் பண்ணேன்னு யோசிச்சது தப்பா?” என விக்ரம்  குழப்பமாக வினவ

அக்சரா “அது அப்படியில்லை. தப்பில்லை. பிரீயா விடு ” என அவன் மனம் கேட்காமல் தெளிவுறாமல் இருக்க

இவளே தொடர்ந்து “சரி நான் ஒன்னு கேக்கறேன். நீ கடைக்கு போற. ஒரு பொம்மை வாங்கணும்னு நீ யோசிச்சு வெச்சிருக்க. அது என்ன பொம்மை , அங்க இருக்கானு தேடுவ. சிலது பொம்மை இருக்கும். ஆனா நீ நினச்சா கலர் இருக்காது. கலர் இருக்கும் அதுக்கு தகுந்த விலை இல்லாம ஜாஸ்தியா இருக்கும். எல்லாமே எடுத்து பாத்திட்டு உன் மனசுக்கு முழுசா திருப்தியாகலேன்னு  வெச்சுட்டு வந்துடற ? அது சரியா தப்பா?

 

“கண்டிப்பா சரிதான் , பிடிக்காட்டி எடுத்துக்கமாட்டேன். வந்துடுவேன்.” என விக்ரம் கூற

“அப்போ அதேதானே இங்கேயும். நான் உன் லைப்க்கு ஒத்துவருவேன்னு நீ நினச்ச. ஆனா நமக்குள்ள பிரண்ட், சண்டை, இந்த மாதிரி எல்லாமே ஓகே. ஆனா வாழ்க்கை முழுக்க நாம ஒண்ணா இருக்க சரியவராதுங்கும் போது நீ அந்த ஐடியாவ விட்டுட்ட. பிரண்ட்ஸாவே இருக்கோம்..அவ்ளோதான். இதுல மட்டும் நீ யோசிச்சதால தப்புனு எப்படி சொல்லமுடியும். நீ உனக்கு பிடிச்ச பொம்மை நான்தானானு யோசிச்சு பாத்திருக்க சரியா வேற எதுவுமில்லை. நீ ஜாலியா எப்போவும் போல இரு.” எனவும்

இவனுக்கு நன்றாக தெளிவுற “ஓகே மேம். இனி எந்த குழப்பமும் இல்லை. எனக்கான பொம்மைய பாத்தா நான் எடுத்துட்டு வரேன்.” எனவும்

அக்சரா சிரித்துவிட்டு “அப்போ நான் ஒண்ணு உன்கிட்ட கேக்கவா?”

“கண்டிப்பா, ரிஜெக்ஷன இவ்ளோ அழகா சொல்லிருக்க, அதுக்காகவே நீ சொன்னதை நான் கேக்கறேன் சொல்லு.”

“அது இல்லை. நான் விஷயம் சொல்றேன். நீ யோசிச்சு முடிவு பண்ணு. உனக்காக ஒரு பொண்ணு பாத்திருக்கோம் அம்மா, அப்பா, அத்தை, எனக்கு எல்லாருக்கும் ஓகே . நீ என்ன சொல்ற?”

“என்ன அக்சரா இப்போ மட்டும் நான் என்ன லவ் வெச்சுக்கிட்டா அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்குவேன்? உன் பாஷைல சொல்லனும்னா எனக்கான பொம்மையை நான் தேடாம சும்மா இந்தா ஏதோ ஒண்ண எடுத்துக்கோன்னு குடுக்கறீங்க. ?” என அவன் குறைபட

“சரி உனக்கு எந்த மாதிரி பொம்மை வேணும். முதல உன் எதிர்பார்ப்பை சொல்லு.” என அக்சரா வினவ

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. எனக்கு கடைக்கு போற ஐடியாவே இல்லை..அதாவது கல்யாணமே பண்ணிக்கற ஐடியா பெருசா இல்ல.  ஏதோ தோணுச்சு உன்கிட்ட கேட்டுட்டேன்.அவ்ளோதான்… இதுல இன்னொருத்தர் வேற கண்டுபுடிச்சு அவளுக்கு என்னை புரியவெச்சு ரொம்ப கஷ்டம்டா சாமீ என்ன விட்ருங்க. எங்க 2பேர் லைப்பும் காலி…” என

அவளும் “விக்ரம் நீ ஒன்ன மறந்துட்ட..நீ உன் மனசுல இந்த மாதிரி பொம்மை வாங்கணும்னு நினச்சிருந்தா நீ சொல்றது சரி. ஆனா உனக்கு அப்டி இல்லாதப்போ உனக்கு எந்த பொம்மை வந்தாலும் அத எடுத்துக்கிட்டு அதோட வாழ ஆரம்பிச்சிடுவ. எதிர்பார்ப்ப இது திருப்திப்படுத்தும். எனக்கு பிடிச்சமாதிரி என்கூட இருக்கும்னு நீ நினச்சு ஒண்ணு வாங்கி அது இல்லேன்னு பொய்யானதா உனக்கு ஏமாற்றம் அதிகமா இருக்கும். ஆனா உனக்கு அந்த ஐடியாவே இல்லாதப்போ நீ உன்கிட்ட வர பொம்மையை அதோட கேரக்டர் வெச்சு ஏத்துக்கப்பழகிக்குவ. உனக்கு அதுல பெருசா ஏமாற்றம் வர வாய்ப்பில்லையே…”

 

“லாஜிக் எல்லாம் சரிதான்…ஆனா எனக்கு தான் கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லையே…?”

 

“ஆஹான். அப்போ சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்ட கேக்கும்போது எந்த ஐடியால கேட்டிங்கனு தெரிஞ்சுக்கலாமா?”

அவன் தலையை தட்டிக்கொள்ள இவளும் சிரித்துக்கொண்டே “சும்மா பொய் சொல்லாத.. எப்டினாலும் கல்யாணம் பண்ணிக்க தானே போற. இந்த பொண்ணுகிட்ட பேசிப்பாரு. உனக்கு ஓகேனா ஓகே .. அப்டி இல்லாட்டி வேற பொண்ண பாக்கலாம்.”

 

“அப்படிங்கிற. சரி… எனக்கு பிடிச்சாத்தானே. அப்போ பாத்துக்கலாம். அந்த பொண்ணு யாரு சொல்லு.”

 

“சஞ்சனா..”

“என்ன சஞ்சுவா?” என அவன் அதிர்ச்சியாக இவளும் தலையாட்டிவிட்டு “சோ நீ அவகிட்ட பேசிப்பாரு. அப்புறம் உங்க முடிவு என்னனு சொல்லுங்க ” என கூறிவிட்டு .அனுப்பிவைத்தாள்.]

 

அப்புறம் தான் நானும் சஞ்சுவும் பேசினோம்.எங்களுக்கு பெருசா எந்த ப்ரோப்லேமும் இல்லை. அதோட நிறையா விஷயங்கள் கல்யாணத்துக்கு அப்புறம் எங்களோட லைப் ஸ்டைல் திங்கிங் எல்லாமே ஓரளவுக்கு சேம் தான். அதுலயும் பிரச்சனை இல்லை. அம்மா அப்பா அத்தை எல்லாருக்கும் அல்ரெடி வேற எதிர்பாத்திருந்திருக்காங்க. சோ ஓகே சொல்லிட்டோம்.

 

இதை அனைத்தையும் கூறி முடித்தவன் ஆதர்ஷிடம் ‘இப்படி தான் அக்சரா மேடம் என் மண்டைய கழுவி சஞ்சுக்கிட்டு குடுத்துட்டாங்க.’ என்றான்.

அதை கேட்டு சிரிக்க விக்ரமே “ஆனா பாரேன், அக்சரா நம்மள விட சின்னவ தான் வாழ்க்கையை பத்தி, உறவு பாசம் எது நிஜம் எது நிலைக்கும்னு அவளுக்கு தெளிவான ஒரு ஐடியா இருக்கு. ஆனா நாம தான் ஒருத்தர பிடிச்சது அவங்க வாழ்க்கை முழுக்க கூட இருக்கணும்னு நினச்சா உடனே லவ்ன்னு குழப்பிக்கிட்டு மத்தவங்களை குழப்பிவிட்டு ஷுஉஉஉ… எப்டியோ, அக்சரா நான் ஆசைப்பட்ட மாதிரி என் லைப்ல கடைசிவரைக்கும் இருப்பா என்னோட பெஸ்ட் பிரண்டா.. ஹேப்பி இன் தட்.” என கூறிவிட்டு விக்ரம் நகர்ந்துவிட வீட்டிற்கு கிளம்பிய ஆதர்ஷின் மனதில் ஏதோ ஓடிக்கொண்டே இருக்க அப்டியே வண்டியில் சுற்றிக்கொண்டே இருந்துவிட்டு வீடு வந்து சேர நேரம் இரவை தொட்டது.

 

வந்தவனை வாசு விசாரிக்க “என்னடா, எங்க போன, போன் பண்ணாலும் எடுக்கல. என்னாச்சு.?” என்றதும்

அவன் விக்ரம் தன்னிடம் கூறியது, இவர்கள் அனைவரும் அங்கே சென்றிருந்த போது சஞ்சு, அக்சரா, பிரியா பேசியதை கேட்டது, அவளை தவறாக நினைத்து திட்டியது அலுவலகத்தில் நடந்தது, இன்று நடந்தது  என அனைத்தையும் கூறியவன் “அக்சரா இப்போ என்ன பண்றா? அவகிட்ட நான் பேசணும்.” எனும்போது உணவை குடுக்கவந்த பிரியா இதை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்க அவளுக்கு கோபம் வந்தது.

ஆதர்ஸிடம் “நீங்க உங்க மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க. அவளை பத்தி அவ கேரக்டர் பத்தி என்ன தெரியும்னு நீங்க இப்டி எல்லாம் அவகிட்ட கேட்டு இருக்கீங்க. என்றவள் அன்று இவர்கள் பேசியதை முழுமையாக கூறினாள்

உங்களுக்கு பொண்ணுங்களை பிடிக்கலேன்னா அப்டியே இருந்துக்க வேண்டியதுதானே. அவகிட்ட உங்க கோபத்தை காட்ட என்ன உரிமை இருக்கு. அவ யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுக்கு என்ன? அவளும் என்கிட்ட எதுவுமே சொல்லாம இருந்திருக்கா. இரண்டுநாளா எத கேட்டாலும் தலைவலின்னு சொல்லிக்கிறது. இப்போதான் தெரியுது அது எப்படி வந்ததுன்னு.” என பொரிய

வாசு “பிரியா ப்ளீஸ், அவனே தப்பா நினைச்சுட்டேன்னு பீல் பண்ணி தான் அக்சராகிட்ட பேசணும்னு நினைக்கிறான். நீயும் ஏன் திட்டிகிட்டு இருக்க..?..” என

ஆதர்ஷ் அமைதியாக எழுந்து வந்து “எனக்கு அக்சரா எங்க இருக்கானு மட்டும் சொல்லு.?” என அவன் வினவ

பிரியா வாசுவை முறைக்க அவன் கண்களாலையே கெஞ்ச “டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டு மேல ரூம்ல  உக்காந்திருக்கா..” என ஆதர்ஷ் நகர்ந்தவன் நின்று “அவ சாப்பிட்டாளா?”

இல்லை என பிரியா தலையசைக்க அவன் “எடுத்து வெச்சுட்டு நீங்க படுங்க. நான் அவளை கூட்டிட்டு வந்து சாப்பிடவெச்சுக்கறேன்.” என அவன் மாடிக்கு சென்றான்.

 

 

அவனை திட்டிக்கொண்டு இருக்க வாசுவோ ப்ரியாவிடம் வந்தவன்  “பிரியா அவன நான் இப்டி பாத்ததேயில்லை. மொத தடவையா ஒருத்தர பத்தி என்ன பண்றாங்க, சாப்பிடங்களான்னு அவன் விசாரிச்சே இப்போதான் பாக்கிறேன்.அவன் மோசமானவன் இல்லை. ஆனா பாசத்தை காட்டவேமாட்டான். காட்டவே தெரியாதோன்னு கூட நினைச்சிருக்கேன். அவன் அக்சராகிட்ட பேசட்டும்.. அக்சராவும் அவனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாயிருக்கும்.”

பிரியா “எப்படி இப்டி இருக்கமுடியுது அவரால?.. யாருகிட்டேயும் ஒரு அட்டாச்மெண்ட் இல்லாமல் எல்லாமே மெஷின் மாதிரி செஞ்சிட்டு என்ன வாழ்க்கை இது.?”

மெலிதாக புன்னகைத்த வாசு “அவன் அண்ணாதான் அவனை பத்தி சொல்லிருக்காரு. அவன் நம்மள எல்லாரையும் விட ஜாலியா இருந்தவன், துறுதுறுன்னு ஏதாவது பண்ணிட்டு செம ஸ்மார்ட். அம்மா, அப்பா, அண்ணா சித்தி, பாட்டி தாத்தான்னு ஏன் வீட்ல வேலை செய்றவங்கள்ல இருந்த வரவங்க போறவங்க வரைக்கும் எல்லாருக்கும் அவன் செல்லம். சீக்கிரம் செட் ஆயிடுவானாம். படிப்பு விளையாட்டு எல்லாத்துலையும் சுட்டி. குடும்பம், பிரண்ட்ஸ்ன்னு ரொம்ப எல்லாரோடையும் அட்டாச்மெண்ட்டோட இருந்தினாம். ஆனா அவன் ஓரளவுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கற அந்த இரண்டுகெட்டான் வயசுல இவன் பாத்த இவனை பாதிச்ச விஷயங்கள் ரொம்ப அதிகம். அதுக்கப்புறம் எல்லாமே மாறிடுச்சு. அவனை திரும்ப பழையமாதிரி இருந்தா ரொம்ப நல்லாயிருக்கும்னு தோணும். அப்படி அவன் லைப் மார்ரத பாக்கணும்னு அவன் அண்ணாவும் ரொம்ப ஆசைபட்டாரு. ஆனா எல்லாமே கைமீறி போயிடிச்சுனு. அவரு சொல்லும் போது எனக்கே இவனா அப்டி இருந்தானு தோணும். ஆனா என்ன பண்றது. நானும் அவனும் 11த்ல இருந்து ஒண்ணா படிக்கிறோம். ஓரளவுக்கு பழகுறதே என்னோட மட்டும் தான். பிரண்ட்ஸ், ஹெல்ப்புனு யாருகிட்டேயும் எதுவும் கேட்டு நான் பாத்ததேயில்லை. ரொம்ப ஷார்ப், பயங்கர டாலேண்ட், படிப்பு, ஜாப்னு எல்லாமே பஸ்ட். அவன்கிட்ட கத்துகிற, அவனை பாத்து கத்துக்கவேண்டிய விஷயம் நிறையா இருக்கும். ஆனா அவன் அதையெல்லாம் வெளில காட்டிக்காம அவனையே ரொம்ப குறுக்கிக்கிட்டு தனி உலகத்துல வாழ்ந்திட்டு இருக்கான். ” என அவனை பற்றிய கடந்த கால நிகழ்வுகளை அவளிடம் கூறிவிட்டு “அவன் உலகமே தனியாயிடிச்சு . ஆனா ரொம்ப நல்லவன். எனக்கு நிறையா தெரிஞ்சு தெரியாம ஹெல்ப் பண்ணிருக்கான். அதெல்லாம் நான் அவன்கிட்ட கேட்டதுகூட இல்லை. ஆனா அவனா புரிஞ்சுகிட்டு எல்லாருக்கும் என்னென்ன வேணுமோ செய்வான். ஆனா அவனை தான் யாராலையுமே புரிஞ்சுக்கமுடில.  இப்போ சொல்லு அவன் யார்மேலையும் ஒரு அட்டாச்மெண்ட் வெக்காம இருக்கறது சரியா தப்பா? என்றவன் பெருமூச்சுடன் அவன் மனசு விட்டு சந்தோசமா சிரிச்சு பாக்கணும்னு எனக்கு ஆசை பிரியா.  அவன் லைப் இதுக்கு மேலையாவது நல்லாயிருக்கணும். ” என அவன் நண்பனுக்காக வேண்ட ப்ரியாவும் கண்ணீரை துடைத்துக்கொண்டு வாசுவின் கைகளை பற்றிக்கொண்டு “யாரு மேல தப்புனு பேசி ப்ரயோஜனமே இல்லை. அவரோட வாழ்க்கையை எதிர்பாராத சூழ்நிலைகள் ரொம்ப மாத்திடுச்சு. அதேமாதிரி இனிமேல் நடக்கற நிகழ்வுகள் எதிர்பாராம கண்டிப்பா நல்ல வழிய காட்டும்னு நம்புவோம்..”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 13சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 13

இதயம் தழுவும் உறவே – 13   மௌனம் இருவரின் வாய்மொழியாக, மேற்கொண்டு யார் பேசுவது என்னும் நிலை. ‘நீதானே தொடங்கினாய், நீயே சொல்லி முடி’ என்று கவியரசன் பார்த்திருக்க, “தேங்க்ஸ்…” என்றாள் மனமார. அவளது நன்றியுணர்ச்சிக்கு காரணம் கணவன் தன்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 42ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 42

உனக்கென நான் 42 கையில் அந்த சிறிய கோப்பை இடம் பிடித்திருக்கவே தன் அன்னையிடம் ஓடி வந்தாள் சுவேதா. தன்னை நினைத்து தன் தாய் பெருமைபடுவார் என சுவேதா ஓடி வந்தாள். அது அவள் எட்டாம் வகுப்பின் துவக்க தருணம் தான்

நிலவு ஒரு பெண்ணாகி – 13நிலவு ஒரு பெண்ணாகி – 13

வணக்கம் தோழமைகளே, போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட தோழிகள் அனைவருக்கும் என் நன்றிகள். இன்றைய பகுதியைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நிலவு ஒரு பெண்ணாகி – 13 அன்புடன், தமிழ் மதுரா