9 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்
குழந்தைகளுக்கு தேர்வு விடுமுறை, பிரியாவும் இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கப்போவதால் அவளே பார்த்துக்கொள்வதாக கூற வாசுவும் இங்கேயே சில நாள் தங்கிவிட்டு செல்வதாக கூறினான்.
ஆபீஸ் வந்ததும் சிறிது நேரத்தில் சஞ்சனா வர அக்சரா “ஹே சஞ்சு வா வா…சொல்லு யாரு?”
சஞ்சனா “ஏய்…எதுக்கு டி இப்டி கத்துற… யாருக்காவது கேக்கபோகுது…”
“அதுசரி, இது என்ன மூடி மறைக்கற விஷயமா?… லவ் ப்ரோபோசல் யாருக்கும் தெரியாம பண்ணலாம். கல்யாணம் கூடவா?”
சஞ்சு தலையில் அடித்துக்கொண்டு “சரி டி ..இப்போ உனக்கு என்ன தெரியணும்?”
“ம்ம்… நேத்து மேடம் சொன்னிங்களே ‘அப்டி ஒருத்தனை கண்டுபுடிக்கறதும், அதுக்கப்புறம் அத சொல்லி அடுத்த கட்டத்துக்கு போறதும் அதைவிட கஷ்டம்னு … அந்த ஒருத்தர் யாருன்னு சொல்லு.”
“அடிப்பாவி இத வெச்சு தான் என்னை இவளோ கேள்வி கேக்கிறியா? நான் கூட சும்மா கேக்றாளோனு நினச்சேன். பரவால்லை ஷார்ப் தான். ஆமா ப்ரியாவும் தான் அத ஆமான்னு சொன்னா.. அவளை விட்டுட்ட?”
“அவளுக்கு ஆல்ரெடி ஓவர் மா.. ” என கண்ணடிக்க “சரி சரி அதப்பத்தி அப்புறம் சொல்றேன். நீ சொல்லு யாருன்னு.”
சஞ்சனா “தெரில டி.. எனக்கு எந்த அளவுக்குன்னு சொல்ல தெரில. பட் அவரை பிடிச்சிருக்கு. அதனால கேட்டுப்பாக்கலாம்னு இருக்கேன். அவருக்கும் ஓகேன்னா லைப் நல்லாயிருக்கும்னு தோணுது..ஆனா எப்படி மூவ் பண்றதுனு தான் புரியல. அதான் உன்கிட்ட ஐடியா கேக்கலாமேன்னு ..”
“பாருப்பா…ம்ம்.. அத கண்டுபுடிச்சடலாம்.. உன்னை யாரு பிடிக்கலன்னு சொல்லுவாங்க சொல்லு..நீ ஆள் மட்டும் யாருன்னு சொல்லு.”
“உங்க எம்டி Mr.ஆதர்ஷ் யாதவ் தான்.”
அக்சரா திருதிருவென விழிக்க, எச்சிலை விழுங்க, சுற்றும் முற்றும் பார்க்க சஞ்சனா “ஏய் என்ன டி ஆச்சு..?”
“ஏன் சஞ்சு, உனக்கு வேற ஆளே கிடைக்கலையா?” என
“ஏன் டி அப்டி கேக்கற… அவரு கேரக்டர் ஓகே தானே…?”
“கேரக்டர் எல்லாம் ஓகே தான். ஆளும் ஓகே தான். மனுஷன் நல்லவரு தான். பட் ரொம்ம்ம்ம்ப நல்லவரு … கல்லை கரைக்கலாம்.. இது பாறை டி… அத அட்டாக் பண்ண ஐடியா கேக்கற?” என அவள் சோகமாக முகத்தை வைத்துக்கொள்ள
சஞ்சனா “சரி … அப்புறமா பொறுமையா பீல் பண்ணிக்கோ. இப்போ பொறுப்பா ஐடியா சொல்லு..” எனவும்
அக்சரா “கல்நெஞ்சக்காரி…. உன் காதலுக்கு என்னை காவுக்குடுக்கறதுனே முடிவே பண்ணிட்டியா?”
“ப்ளீஸ் டி….”
“சரி … ஏதாவது பண்ணுவோம்..” சஞ்சனாவுக்கு சில ஆலோசனைகளை வழங்கினாள்.
அடுத்து 2 தினங்களில் வேலை கற்றுக்கொள்ள என சஞ்சனா ஆபீஸ் வருவது உடன் இருப்பது வேலை சம்பந்தமாக என்றாலும் விடாமல் தொடர்ந்து வந்து பேசுவது என இருக்க பொறுமை இழந்த ஆதர்ஷ் சஞ்சனாவிடம் தனியாக விசாரித்து தன் முடிவினை கூறிவிட்டான்.
“சஞ்சனா, நீங்க நினைக்கற மாதிரி எந்த ஒரு எண்ணமும் எனக்கில்லை. இப்போ மட்டுமில்ல எப்போவுமே வராது. என்னை சுத்தி நிறையா பிரச்சனைகள் இருக்கு. அதுல யாரையும் உள்ள இழுத்து விட எனக்கு இஷ்டமில்லை.நீங்க இதெல்லாம் விட்டுட்டு உங்க லைப்ல கான்செண்ட்ரேட் பண்ணுங்க. நான் உங்களுக்கு கண்டிப்பா சரிவரமாட்டேன்… எனக்கு பொறுமை எல்லாம் ரொம்ப கஷ்டம்… என்னை புரிஞ்சுக்கறது அத விட கஷ்டம்.. அட்ஜஸ்ட் பண்ணிப்பேன், பாத்துக்கலாம்ங்கிற எண்ணம் கூட என்கிட்ட வராது… சோ என்மேல அந்த மாதிரி ஐடியா எல்லாம் வேண்டாம்.. ஏன்னா உங்கள, உங்க குடும்பத்தை நான் பாத்திருக்கேன்.. உங்களை பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சதால தான் இப்படி பொறுமையா சொல்லணும்னே தோணுச்சு.. மத்தபடி இது கூட எனக்கு வராது…” என அவன் சில விஷயங்கள் கூற
சஞ்சனாவும் “ம்ம்… புரியுது.. ஆனா நீங்க யாரையாவது லவ் பண்றிங்களா?”
ஆதர்ஷ் புன்னகைத்துக்கொண்டே “பொண்ணுங்க மேலையே இருந்த நம்பிக்கை ரொம்ப குறைஞ்சிருச்சுனு சொல்றேன்.. இதுல எப்படி? நான் பொண்ணுங்க எல்லாரையும் தப்புனு சொல்லல.. எனக்கு அவங்களுக்கும் செட் ஆகாது போல. அன்பு பாசம்னு சொன்னாலும் அவங்க கட்டுப்பாட்டுல தான் என்னை ஆட்டிவெக்கிறமாதிரி இருக்கு.”
சஞ்சனா “ஒஹ்ஹஹ்… ஒரே ஒரு சந்தேகம் அப்டினா உங்களுக்கு கல்யாணம் இல்லை காதல் பண்ற ஐடியாவே இல்லையா?…ஆனா உங்களுக்குனு ஒருத்தி இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுது..”
“தெரிலேங்க… அப்டி ஒருத்தி கிடைக்கணுமே….நானே நிறையா குழப்பத்துல இருக்கேன். எனக்கு மனைவியா வரவ என்னை எனக்கே புரியவெக்கிறவளா இருக்கனும். என்னை என் உணர்ச்சிகளை அவ உணரணும். அவகிட்ட இருந்து அவளோட எண்ணங்களோட சேத்தி எனக்கு என் தேவை என்னன்னு நான் புரிஞ்சுக்கணும். எப்போ யாருகிட்ட அந்த மாதிரி ஒரு பீல் வருதோ அப்போ சொல்றேன். ஒரு நிமிஷம் கூட யோசிக்கமாட்டேன். அவளை என் லைப்ல மிஸ் பண்ணவும் மாட்டேன். அப்டி ஒருத்தி என் வாழ்க்கைல வந்தா எனக்கு எல்லாமாவும் அவ வேணும்.. அப்டி இல்லாட்டி வேண்டவே வேண்டாம்… மீதி இருக்கிற அந்த ஒரே ஒரு உறவு என் வாழ்க்கைல வராம சந்தோஷமான கனவாவே கலைஞ்சுபோகட்டும்..” என தன் எதிர்பார்ப்பையும், ஏக்கத்தையும் கலந்து சொல்ல சஞ்சனா “ஆல் தி பெஸ்ட் ஆதர்ஷ்… இப்போ நானே சொல்றேன்.. நீங்க சொல்றதெல்லாம் வெச்சு பாத்தா உங்களுக்கு ஒரு பொண்ணு மனைவியா மட்டும் இல்லாம உங்க வாழ்க்கையவே திருப்பி கொடுக்கறவளா வேணும். அதுக்கு நான் சரியான ஆள் இல்ல தான். எனிவே, அப்டி ஒருத்தி கண்டிப்பா வருவா.. மீட் பண்ணதும் எனக்கு சொல்லுங்க.” என
ஆதர்ஷ் “கண்டிப்பா.. பை. டேக் கேர்.”
“டேக் கேர்.” என அவளும் சென்றுவிட்டாள்.
மறுநாள் அக்சரா ஆபீஸ் வந்தும் வேலை பார்த்தாலும் சஞ்சனாவிற்கு கால் செய்ய மெஸேஜ் செய்ய என இருக்க இதை கவனித்த ஆதர்ஷ் “அக்சரா வேலைய பாக்கறியா? இல்லையா? யாருக்கு கால் ட்ரை பண்ணிட்டு இருக்க..?”
“ஆ.. அது வந்து சார்… நம்ம சஞ்சு தான்… பாருங்க.. பெரிய வீட்டு ஆளுங்கன்னாலும் வேலை கத்துக்க கரெக்டா வரணும்ல.. ஆக்சுவலி ரொம்ப நல்ல பொண்ணு.. பொறுப்பா எல்லாமே பண்ணுவா. இன்னைக்கு ஏன் வரலேன்னு தெரில..அதான் உடம்பு ஏதாவது சரி இல்லையானு கேட்க…” என இழுக்க
ஆதர்ஷ் “ஓ… பைன். பட் நீ அத பத்தி கவலைப்படாத.. இனிமேல் அவங்க வரமாட்டாங்க. அவங்க வந்த வேலை நேத்தோட முடிஞ்சது. ”
“என்ன.. நேத்தோடவ… அதெப்படி? என்கிட்ட சொல்லவேயில்லை?” அவன் முறைக்க
“இல்லை சார், ஒரு பழக்கவழக்கத்துக்காகவாது சொல்லிட்டு போகணும்ல அதான்…” என
“அது சரி…இன்னைக்கு அவங்க பாட்டி ஊருக்கு போறாங்களாம். வர 2 3 நாளாகுமாம். உன்கிட்ட சொல்லணும்னா சஞ்சனா வந்த வேலை சக்ஸஸ முடிஞ்சது. பட் உன் பிளான் தான் பிளாப்… இப்போதைக்கு இது போதும். போ போயி வேலைய பாரு…” அவள் குழப்பிக்கொண்டே செல்ல இவன் புன்னகைத்துக்கொண்டான்.
அக்சராவும், ஆதர்ஷும் எஸ்டேட் கிளம்ப விக்ரமிடம் இருந்து கால் வர அதை அட்டென்ட் செய்து “ஹே மெசேஜ் பண்றேன்… கால் பேச முடியாது.. பை பை..” என மெல்ல கூறினாலும் ஆதர்ஷ் காதுகளில் அது நன்றாகவே கேட்டது..அவள் வழி முழுவதும் மொபைலில் சாட் செய்துகொண்டே வர ஆதர்ஷ் ஆஃபீஸில் இறக்கிவிட்டுவிட்டு நேராக வெளி வேலை என்று சென்றுவிட்டான்.
அன்று மாலை அவர்களது கார்டன், காட்டேஜ், எஸ்டேட், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், சூப்பர்வைசர்ஸ் என அனைவரையும் அழைத்து ஒரு மீட்டிங் அரேஜ் செய்ய சொல்லிருந்தான் ஆதர்ஷ்.
மதியம் மேல் வந்தவன் அக்சராவிடம் கேட்க “இல்லை சார்… இன்னைக்கு மீட்டிங் அரேஜ் பண்ணல. ” என அவள் முடிப்பதற்குள்
“வாட்… ஏன் பண்ணல… என்ன ப்ரோப்லேம்..யாராவது வேணாம்னு சொன்னாங்களா?”
“இல்லை சார். யார்கிட்டேயும் இன்னும் கேட்கல… பொதுவா ஈவினிங் எல்லாருக்கும் டைம் சரிபட்டு வராதுன்னு தான் இன்னும் சொல்லல… நாளைக்கு மார்னிங் அரேஜ் பண்ணிடலாமா சார்?…ஜெயேந்திரன் அங்கிள்கிட்ட கேட்டேன்….உங்ககிட்ட கேட்கமுடில சார்…ஆக்சுவலி நான்…”
“ஸ்டாப் இட் அக்சரா.. எல்லா முடிவும் நீயே எடுக்க இது உன் ஆபீஸ் இல்லை. இங்க நீ MD இல்லை. புரிஞ்சுதா?.. எல்லாருக்கும் டைம் சரிபடாதா? இல்ல உனக்கா? நீ பர்சனல் ஒர்க் கான்செண்ட்ரேட் பண்ணிட்டு சொல்ற வேலைய செய்யாம இருக்கறதுக்கு ஒன்னும் இங்க சம்பளம் தரல. யாருக்கும் சொல்லாம மறந்துட்டு டைம் ஒத்துவராதுனு பொய் வேற சொல்றியா? பிளான் பண்ணமாதிரி இன்னைக்கு ஈவினிங் மீட்டிங் அரேஜ் பண்ணனும். இல்லை நீ வேலைய விட்டு போய்டு. எனக்கு இந்த மாதிரி பொறுப்பில்லாம சாக்கு சொல்லிட்டு வேலை செய்யாம இருக்கறவங்கள ஆபீஸ்ல வெச்சுக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. கெட் லாஸ்ட்..”
“இல்லை சார்… நான் மறக்கல… அது ரீசனோட தான்..”
“உன்ன நான் அப்போவே போகசொலிட்டேன்…. டோன்ட் வேஸ்ட் மை டைம்.” என
அக்சராவும் உடனே வெளியேறி விட்டாள். அடுத்து அவள் உணவு கூட உண்ணாமல் வேலையை மட்டுமே பார்க்க அவனும் கண்டும் காணாதது போல விட்டுவிட்டான்.. ஆனால் அவனும் சாப்பிடவில்லை..மாலை 4 மணிக்கு அவனிடம் வந்தவள் “சார் காட்டேஜ்ல இருக்கற கான்ப்ரன்ஸ் ரூம்ல 5 மணிக்கு மீட்டிங் அரேஜ் பண்ணிருக்கு.. எல்லாரும் வந்துடுவாங்க.. ஒரு 4.30க்கு மேல கிளம்புனா சரியா இருக்கும் சார்…” என அவனும் சரி என்ற தலையசைப்புடன் அவளை அனுப்பிவிட்டான்.
மீட்டிங் சென்றவர்களிடம் இவனும் வரப்போகும் மலர்கண்காட்சிக்கு தான் வைத்திருக்கும் புது திட்டங்களை அதோடு காட்டேஜ்ல் செய்யவேண்டிய ஏற்பாடுகள் என அனைத்தும் கூறி அவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு ஜெயேந்திரனிடமும் பேசிவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவன் செய்யவேண்டிய வேலைகளை அனைவர்க்கும் மறுநாள் மெயில் அனுப்புவதாக கூறினான்.
எல்லோரும் உண்டு முடித்து கிளம்பிவிட அக்சராவை தேடிக்கொண்டு வந்த ஆதர்ஷ் கண்ணில் மூர்த்தி பட
“மூர்த்தி அண்ணா, என்ன இது மாத்திரை யாருக்கு?”
“அக்சராம்மாக்கு தான் தம்பி…”
“ஏன் அவளுக்கு என்னாச்சு.?”
“மழைல வேற நினைஞ்சிருக்கும் போல. காலைலேயே ஜூரம்னு சொல்லுச்சு.. டாக்டர்கிட்ட கூப்பிட்டா வேலை இருக்குன்னு சொல்லிடிச்சு. இப்போ ரொம்ப முடில போல. மாத்திரை கேட்டுச்சு தம்பி. இந்த புள்ளைய என்ன சொல்றது?” என அவனே அந்த மாத்திரையை வாங்கிக்கொண்டு “நான் குடுத்துகிறேன்.. நீங்க போங்க.” என்றவன் போகும் போது ஜெயேந்திரன் அவனை அழைத்து பேசவேண்டும் என்றார்.
“சொல்லுங்க பா..”
“இல்லை ஆதர்ஷ், ஏதாவது ப்ரோப்லேமா?”
“இல்லையே பா.. ஏன் கேக்கறீங்க?”
“இல்லை நான் வேலைல கேட்கல. உனக்கும், அக்சராக்கும் இடைல?”
அவன் எதுவும் பேசாமல் இருப்பது கண்டு அவரே “அவ எதுவும் சொல்லல ஆதர்ஷ்..”
“அவ சொல்லிருக்க மாட்டான்னு தெரியும்பா… இருந்தாலும் நீங்க கேக்கிறிங்களேன்னு யோசிச்சேன்.” என அவரும் மெலிதாக ஒரு புன்னகையை தந்துவிட்டு “பாதி என் வயசு அனுபவத்துல வந்த யூகம், மீதி ஆபீஸ்ல இருந்து வந்த தகவல்.. சுவருக்கும் காதிருக்குன்னு சும்மாவா சொல்லுவாங்க… மத்தவங்க பாத்து சண்டை போடுறீங்கன்னு சொல்லி காட்சி பொருளா ஆக்க விட்றாதீங்க.. ஏன்னா எனக்கு உன்னை பத்தியும் தெரியும், அக்சரா பத்தியும் தெரியும். உங்ககிட்ட எனக்கு பிரச்சனை இல்லை. ஆனா மத்தவங்க??
சரி என்ன நடந்ததுன்னு நான் சொல்லிடறேன்…மழை வேற அதிகம், நிலச்சரிவு வரதுக்கு வாய்ப்பிருக்குனு செய்தில சொல்லிருக்காங்க.. ஈவ்னிங் மீட்டிங் வெச்சு இருட்டுல ரொம்ப தூரம் போறதுனா நிறையா பேருக்கு கஸ்டம்ல அதனால தான் மார்னிங் மீட்டிங்க்கு அவ கேட்ருப்பா.. அதனால தான் நானும் பொதுவா அப்டியே வெச்சுக்கறது.. இன்னைக்கு உனக்கு கால் பண்ணி சொல்ல ட்ரை பண்ணிருக்கா. லைன் போகல. ஏன்னா நானும் உனக்கு ட்ரை பண்ணேன்.. ரீச் பண்ணமுடிலேனு தான் என்கிட்டேயே கேட்டுட்டு மீட்டிங் நாளைக்கு வெச்சுக்கலாம்னு சொன்னது… அதுக்கப்புறம் மதியம் மேல தான் அரேஜ் பண்ணிருப்பீங்க போல அதான் கேட்டேன். அவ என்கிட்ட நேரா கேட்கல. எனக்கும் மீட்டிங் இன்வைட் பண்ணணும்ணுல. அத பத்தி பேசும்போது தான் உன்கிட்ட பேச ட்ரை பண்ணி முடிலேனு நானே சொல்லிட்டேன். சாரி ஆதர்ஷ்.. நீ இருக்கற இடத்துல நான் முடிவெடுக்க கூடாதுதான்.”
ஆதர்ஷ் “ஐயோ, என்னப்பா நீங்க, இது உங்க ஆபீஸ்.. உங்களுக்கு உரிமை இருக்கு. அதுவுமில்லாம ஒரு அவசியமான காரணம் இருக்கும்போது அத ஏன் குறைசொல்லபோறேன்? அவ இத என்கிட்ட சொல்லல. அதான் எனக்கும் தெரில.”
ஜெயேந்திரன் “தெரியும்ப்பா, அதான் நானே சொல்றேன். அவ நல்ல பொண்ணுப்பா.. அவ இங்க வந்ததுல இருந்து வேலை, பொறுப்பு, பொறுமை மத்தவங்ககிட்ட நடந்துக்கிற விதம், ஒரு வேலைய எப்படி தட்டிக்குடுத்து வாங்கலாம்னு அவ செய்யற எதுலையுமே குறை இருந்ததில்லை.. இந்த சின்ன வயசுல இவளோ பக்குவமான்னு சில நேரம் ஆயாசமா இருக்கும். சில நேரம் ஏன் இவளுக்கு இவளோ பிரச்னைன்னு கூட தோணும். ஆனா எதையுமே வெளில காட்டிக்காம எல்லாரையும் சந்தோசமா வெச்சுக்கணும்னு நினைப்பா. அவளை நீ திட்றது ஒர்க்ல ப்ரோப்லேம் இதெல்லாம் நான் தலையிடமாட்டேன். ஆனா மத்தவங்க அத பாத்து கிண்டல் பண்ற அளவுக்கு வேண்டாம்னு தோணுச்சு. அது உங்க இரண்டுபேருக்குமே நல்லதில்லேல? அதனால ஆதர்ஷ் சொல்றேன். ” என
அவனும் “புரியுது பா.. இனிமேல் கவனமா இருக்கேன். சாரி அண்ட் தேங்க்ஸ்.” என
அவரும் புன்னகைத்து விட்டு பொதுப்படையாக ஓரிரு விஷயம் பேசிவிட்டு செல்ல பின்னால் சென்று பார்க்க ஸ்விம்மிங் பூல் அருகே அமர்ந்து எல்லோரு ரீச் ஆய்ட்டாங்களானு விசாரிச்சிட்டு போனை ஆப் செய்துவிட்டு அமைதியாக அவள் மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அவளிடம் சென்றவன் “எல்லாம் ஓகே தானே?” என்றான்.
ஆதர்ஸை பார்த்தவள் எழுந்து “எல்லாமே ஓகே சார்.. கேட்டுட்டேன். எல்லாரும் சேஃப்பா வீட்டுக்கு போய்ட்டாங்க. கேப் அரேஞ்சுமென்ட்ஸ்க்கு மட்டும் நாளைக்கு செட்டில் பண்ணனும். டீடெயில்ஸ் நோட் பண்ணிட்டேன். நாளைக்கு மோர்னிங் வந்ததும் ஒன்ஸ் நீங்க செக் பண்ணிட்டா எல்லாருக்கும் மெயில் அனுப்பிச்சிடுவேன்.” என அவள் இவன் கேட்காமலே அனைத்தும் கூற
அவன் எதுவும் கூறாமல் இவளையே பார்த்துக்கொண்டிருக்க அதை கண்டவள் அடுத்து எதுவும் பேசாமல் தலை குனிந்து கொள்ள அப்டியே இன்னும் சில நேரம் ரசித்தவன் எதுவும் கூறாமல் “வா போலாம்.” என்றான்.
இவளும் எதுவும் கூறாமல் பின்னோடு சென்று வண்டியில் ஏறினாள். சிறிது தூரம் மௌனமாக செல்ல அவள் சோர்ந்து கார் கதவில் சாய்ந்துகொள்ள அவனுக்கு மிகவும் வருத்தமாக இருக்க எதுவும் கூறாமல் வேகமாக சென்றவன் வண்டியை விட்டு இறங்க சொல்லி அவளை அழைத்தான்.
“எங்க வந்திருக்கோம்?” என அவள் வினவ
கதவை திறந்துவிட்டு “ம்ம்ம்… ஹாஸ்பிடல்க்கு…வா.” என்றான்.
இறங்கியவள் எதுவும் கூறாமல் “இல்லை எனக்கு ஒண்ணுமில்ல. நான் நல்லாத்தான் இருக்கேன்.”
“அப்டியா சரி.. இன்னைக்கு தானே மழைல நினைஞ்ச…நாளைக்கு உடம்பு சரியில்லாம போகும். அட்வான்ஸ பாத்திடலாம் வா.” என அவளும் மெலிதாக புன்னகைக்க அவனும் அழைத்து சென்றான்.
டாக்டரை பார்த்துவிட்டு வண்டி ஏறியதும் அவளும் சோர்ந்து படுத்துக்கொள்ள இவனோ சீட் எல்லாம் சரி செய்துவிட்டு நேராக ஹோட்டல் சென்று அவளுக்கு உணவு வாங்கி வந்து அவளை எழுப்பினான். எழுந்தவள்
“இல்லை ப்ளீஸ் எனக்கு எதுவும் வேண்டாமே… என்னால முடில.. டையர்டா இருக்கு” என
“டேய், இங்க பாரு நீ மதியம் வேற சாப்பிடல… இப்போ மீட்டிங்கில கொஞ்சம் சாப்பிட்டதும் வாமிட் பண்ணிட்ட.. மாத்திரை போடணும்ல .. கொஞ்சம் சாப்பிடு..” என அவனே ஊட்டிவிட உண்டு முடித்தவள் மாத்திரை போட்டுகொண்டு சீட்டில் சாய்ந்துகொண்டு அவனை பார்த்தாள். அவன் திரும்பி வந்து காரை எடுத்தவன் அவள் தன்னையே பார்ப்பது உணர்ந்து அவளிடம் “அக்சரா என்னாச்சு..ஏதாவது வேணுமா?..தண்ணி?”
இல்லை என தலையசைக்க
“வேற குளிருதா?..ஏசி கூட போடலையே… பாத்ரூம் போகணுமா? வாமிட் வருதா? ” என அவன் அனைத்தும் கேட்க அவள் எதுக்கும் இல்லை என்பது போல கூற “நீங்க இந்த அளவுக்கு பாத்துப்பிங்கனு நினைக்கல..அதான்..நீங்க தானான்னு பாத்துட்டிருக்கேன்..” என
ஆதர்ஷ் புன்னகைத்துவிட்டு “ஏன் நானும் மனுஷன் தானே.. எனக்கு பீலிங்ஸே இருக்காதுன்னு முடிவு பண்ணிட்டியா? எல்லாமே தேவைப்படும் போது வெளில வரும்.”
அக்சரா “அப்டின்னா உங்களுக்கு பாசம் இருக்குன்னு நீங்க காட்டணும்னா எப்போவுமே காய்ச்சலோட படுத்திருக்கணுமா?..அடக்கடவுளே இதென்ன டா சோதனை?” என அவள் திருதிருவென முழிக்க இவனுக்கு அவள் கூறியதும், செயலும் பார்த்து வாய்விட்டே சிரித்துவிட்டான்.
வீட்டிற்கு வந்து இறங்கியதும் விக்ரமிடம் இருந்து அக்சராவிற்கு கால் வந்தது.
“என்ன விக்ரம், இப்போத்தான் வரேன்… நானே நினச்சேன்.. நீயே கூப்பிட்ட….”
“…………………………………………”
“ஒ.. அப்டியா? ஏன் இன்னைக்கு சொல்லமாட்டியா?”
“……………………………………………………..”
“சரி நாளைக்கு தானே மீட் பண்ணலாம்.” என சிரித்துக்கொண்டே வர பிரியா விசாரிக்க “தெரில டி, விக்ரம் என்கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் பேசணும் நாளைக்கு மீட் பண்ணனும்னு சொல்றாரு. ஏதோ ரொம்ப இம்போர்ட்டண்ட்டாம்.” என
அங்கே வந்த ப்ரியாவும், வாசுவும் “ம்ம்.ம்ம்ம்…” என கண்ணடித்து கிண்டல் செய்து கொண்டே உள்ளே சென்றனர். ஆதர்ஸ்க்கு இதை கேட்டு மீண்டும் கோபம் ஏறியது.
ஆபீஸ் வந்தவள் வேகமாக அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு மதியம் ஆதர்ஷிடம் வந்த அக்சரா வேலைகளை பற்றி கூறிவிட்டு வேற ஏதாவது ஒர்க் இருக்கா சார்? என வினவ அவனும் சாதாரணமாக “இல்லை மெயில் மட்டும் தானே ஈவினிங் பாத்துக்கலாம்.” என
அவளோ “ஓகே சார்… சார் எனக்கு லஞ்ச்க்கு அப்புறம் ஒரு டூ ஹார்ஸ் பெர்மிஸ்ஸின் வேணும்.” என அவனுக்கு சிறிது உறுத்தினாலும் காரணமில்லாமல் அவள் கேட்கமாட்டாள் என்றெண்ணியவன் “கண்டிப்பா வேணுமா?”
ஆமாம் எனபது போல அவள் தலையசைக்க “ஓகே.. எடுத்துக்கோ..”
அக்சரா “தாங்க் யூ சார்..” என புன்னகையுடன் நகர அவனும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவன் அவளை காணாமல் இருக்க அக்சரா தவிர மற்ற அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க அங்கிருந்தவர்கள் “சார் அக்சரா மேடம் வெளில போயிருக்காங்க..”
இன்னொருத்தர் “ஆமா லஞ்ச்க்கே வெளில தான்… நம்ம கூட எல்லாம் மேடம்க்கு சாப்பிட பிடிக்குமா?”
விக்னேஷ் “ஏய் என்னப்பா.. எஸ்டேட் ஓனர் வந்து கூப்பிடும் போது போகாம இருப்பாங்களா? சொல்லுங்க..”
ஆதர்ஷ் கோபப்படுவதை கண்டுகொண்டவன் “அது ஒண்ணுமில்ல சார்… விக்ரம் சார் வந்தாரு.. அக்சராவ கூட்டிட்டு போய்ட்டாரு.. அவங்களும் லஞ்ச் வெளில பாத்துக்கறேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. இதுல டூ ஹார்ஸ் பெர்மிஸ்ஸின் போட்டுட்டு போயி பேசணுமான்னு எல்லாரும் கொஞ்சம் பேசிக்கறாங்க.. இங்க பக்கத்துல இருக்கற பேக்கரில தான் இருக்காங்க. இதுக்கு வேலை நேரத்துல பெர்மிஸ்ஸின் போடணுமான்னு எல்லாரும் சொல்லிட்டு இருக்காங்க.” என அவன் இன்னும் ஏத்திவிட ஆதர்ஷ் அவனை முறைத்துவிட்டு நகர
பின்னல் ஒருத்தன் “அந்த பொண்ணுக்கு வந்த வாழ்வ பாரு… MD கேக்கும்போது எல்லாம் யோசிக்காம பெர்மிஸ்ஸின் குடுக்கறாரு.. எஸ்டேட் ஓனர் வந்து கூட்டிட்டே போறாரு.. எல்லாரும் அந்த பொண்ணு பக்கம் தான்..” என ஒரு மாதிரி சொல்ல ஆதர்ஷ் வேகமாக அவர்களிடம் சென்றவன் அனைவரையும் பார்த்துவிட்டு “உங்களுக்கு இப்போ அக்சரா பெர்மிஸ்ஸின் வாங்குனது பிரச்சனையா? இல்லை விக்ரம்கூட வெளில போனது பிரச்னையா? நேரா என்கிட்ட கேளுங்க… ” என அனைவரும் இதை எதிர்பார்க்காததால் அமைதியாக இருக்க
ஆதர்ஷ் தொடர்ந்து “இந்த ஆபீஸ்ல அவங்கவங்களுக்கு குடுத்த வேலை பாக்கத்தானே சம்பளம்.. நீங்க உங்களோட பர்சனல் விஷயம்னு கேட்டு பெர்மிஸ்ஸின் தராம இருந்திருக்கேனா? அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சனை.? அதோட எனக்கு தெரிஞ்சு உங்க லெவல்க்கு நீங்க எல்லாரும் இந்த வேலைய விட ஸ்பை வேலைக்கு தான் தகுதியானவங்கன்னு நினைக்கிறேன். அதாவது மத்தவங்கள உளவு பாக்கிறது.. என்ன விக்னேஷ் நான் சொல்றது சரி தானே.. ஏன்னா நீதானே இதுக்கு தலைவன்…. அக்சரா வேலை நேரத்துல கரெக்டா இல்லேன்னாதான் நான் கேட்க முடியும். வேலைய முடிச்சிட்டு பெர்மிசன் வாங்கிட்டு போனதுக்கு அப்புறம் அது அவங்களோட பர்சனல்… இதுக்கு மேல இதெல்லாம் ஒரு விஷயம்னு பேசறது, கம்பளைண்ட் மாதிரி சொல்றது முக்கியமா விக்னேஷை பார்த்து அவங்க பேசறாங்க இவங்க பேசுறாங்கனு நாம கேவலமா நினைக்கறத எல்லாம் பேசுறது இதெல்லாம் என்கிட்ட வேணாம்.. ஒரே மாதிரி எல்லா நேரத்துலையும் பேசிட்டே இருக்கமாட்டேன். புரிஞ்சுதா?” என அவன் விருட்டென்று சென்றுவிட்டான்.
ஆனால் தனியாக வந்தவனுக்கு உள்ளே கொதித்துக்கொண்டிருக்க வெகு நேரம் தாண்டி விக்ரம், அக்சராவை விட்டுவிட்டு சந்தோசமாக செல்ல இவளும் வந்து வேலையை சாதாரணமாக வேலையை தொடர இவனுக்கு இருப்புகொள்ளவில்லை. அக்சராவிடம் எரிந்து விழுந்துகொண்டே இருந்தான். சிரிப்போடு வந்தவள் இதை புரிந்துகொள்ளமுடியாமல் சென்றுவிட்டாள்.. இதே நிகழ்வு மாலை வரை நடக்க வேலை முடிய தாமதமாக கிளம்பியதும் வண்டியில் செல்லும் போது அவளே கேட்டுவிட்டாள்.
“சார்.. என்னாச்சு ஏதாவது ப்ரோப்லேமா? ஏன் டென்ஷனா இருக்கீங்க..?”
“ஒண்ணுமில்ல…”
“இல்லை.. நீங்க நார்மல இல்ல… ஆனா ஏன்னு எனக்கு புரியல…” என்றதும்
ஆதர்ஷ் கோபத்துடன் “உனக்கு நான் நினைக்கிறது எல்லாம் எப்படி புரியும்.
விக்ரம் பேசுறது ஏன் அவன் என்ன நினைக்கிறான்னு கூட புரியும்.
ஆபீஸ் டைமிங்ல பெர்மிஸன் போட்டுட்டு போன. ஓகே அது உன் பர்சனல். ஆனா சுத்தி அதே இடத்தில எல்லார் கண்ணுக்கும் படற மாதிரி தான் சுத்துவியா? எதுக்கு அவங்க எல்லாம் பார்த்து நீயும் அவனும் லவ் பண்றீங்கன்னு தப்பா பேசுறதுக்கா இல்ல ஒருவேளை உனக்கே அந்த ஐடியா இருக்கா? அவன் பிடிச்சிருக்குன்னாலும் நீ எதை பத்தியும் யோசிக்க மாட்டியா? அவன் கேரக்டர் தப்புன்னு சொல்லல. ஆனா பெரிய இடத்தில, அவங்க குடும்பத்துல எல்லாம் அக்செப்ட் பண்ணிப்பாங்கன்னு நினைக்க முடியுமா? கேட்டா உடனே ஓகே சொல்லிடுவியா? வெறும் பணம் மட்டும் லைப்ல போதுமா? சொத்து பணம் அந்தஸ்த்துன்னு எல்லாமே இருக்கறவனா பாத்து கல்யாணம் பண்ணிட்டா வாழ்க்கைல எல்லாமே கிடைச்சிடுமா? அன்பு,பாசம்னு எந்த உணர்ச்சியும் முக்கியமில்லையா? ஏன் இப்டி யோசிக்கிறீங்க. உன்ன பெத்தவங்க கூட இருந்திருந்தா இப்டிதான் அட்வைஸ் பண்ணிருப்பாங்களா? பெமினிசம் பத்தி பேசுறது பொண்ணுங்களுக்கு சமஉரிமைன்னு கேக்கமட்டும் தான்ல. இதுவே கல்யாணம்னு வந்தா இப்டி தான் அந்த பையன் செட்டில்ன்னு பாத்திட்டு பிரச்சனை இல்லாம கல்யாணம் மட்டும் பண்ணிக்கலாம்னு திங்க் பண்ணுவீங்க..
ச்ச…இதெல்லாம் உன்கிட்ட சொல்லிமட்டும் என்ன பிரயோஜனம்..நீயும் எல்லாரையும் மாதிரி தானே.” என அவன் டென்ஷனில் கத்திகொண்டே இறுதியில் வீடு வந்ததும் காரை விட்டு இறங்கி சென்றுவிட்டான். அவளோ அதிர்ச்சியில் சிலையென்றாகிருந்தாள்.
தனக்கு பேசவே இடமளிக்காமல் அவன் கோபமாக செல்ல இவளும் சற்று நேரம் பொறுத்து இறங்கி வீட்டினுள் சென்று உறங்கிவிட்டாள்.