8 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்
அவனுக்குமே இப்போது ஒருவேளை நான் தான் அவசரப்பட்டு கத்திட்டேனோ? என்ற எண்ணம் வந்தது. “ச்ச…. அவ சிந்துக்காக தான் பேச வந்திருக்கா. என்ன சொல்ல வரான்னே கேக்காம நான் டென்ஷன் ஆகி அவளையும் டென்ஷன் பண்ணி இது எல்லாம் தேவையா? என்று குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டே இருந்தான்.
ஆனா அவ பெட் கட்டுனேன்னு அவளே சொல்றாளே..அது தப்பு தானே.?
அதுதான் அவளே சொல்றாளே… அவளுக்கு ஆல்ரெடி வாசு வர விஷயம் தெரியும்.அதனால அப்டி சொல்லிருக்கான்னு அண்ட் அந்த விக்னேஷ் ஏதாவது வெறுப்பேத்திருப்பான். அதனால கூட இருக்கலாம்.
ஆனா அவ என்கிட்ட வந்து பேசிட்டு போனது எல்லாம் அவன்கிட்ட எதுக்கு சொல்லணும். நான் என்ன சொன்னாலும் சார் கேப்பாருனு ஒரு இம்ப்ரெஸ்ஸன உருவாக்க பாக்கறாளா? விக்னேஷ் சொல்றது உண்மையா? அக்சரா அப்டி எல்லாம் மோசமான பொண்ணா தெரில..இவ்வளோ நாள் பழகுறோமே அவ நிறையா விசயத்துல கரெக்டா தானே இருக்கா… அவளை ஆபீஸ்க்கு கூட நான்தானே கூட்டிட்டு போறேன்.அவளா எதுவும் கேக்கலையே?… பட் எல்லாரையும் முழுசா நம்பவும் முடிலையே.. ” என தனக்குள் ஒரு விவாதத்தை முடித்துக்கொண்டு வெளியே வர அங்கே அவளை காணவில்லை. மற்ற அனைவரும் இருந்தனர். குழந்தைகளும் அவனிடம் வந்து “அங்கிள் ப்ளீஸ் நீங்களும் வாங்க போகலாம்” என கூற அவன் ஏற்கனவே அதே ஐடியாவில் இருந்தாலும் அக்சரா பேசிட்டு போனதும் போயி ஓகே சொன்னா நல்லாஇருக்காது என தயக்கத்தில் வந்தவனுக்கு குழந்தைகள் கேட்டதும் இதை காரணமாக வைத்து சரி என்றுவிட்டான். அனைவரும் அவன் குழந்தைகளுக்காக ஒப்புக்கொண்டான் என நினைத்துக்கொண்டனர். மறுநாள் கிளம்புவதற்கு உண்டான ஏற்பாடுகளை கவனித்தனர்.
ஆதர்ஷ்க்கு அக்சராவை காண வேண்டும் என தோன்ற அவளோ வீட்டுக்குள் இருந்து வெளியே வராமல் இவனை நன்றாக பழிவாங்கிக்கொண்டிருந்தாள். பிரியா சென்றுதான் செய்த உணவை எடுத்துவந்தாள். அவனுக்கு அவளை பற்றி கேட்கவும் முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க அவள் இல்லாமல் உண்ணவும் தோன்றாமல் இருக்க வாசு ப்ரியாவிடம் “எங்க அக்சராவை காணோம்? வர சொல்லு. சாப்பிடட்டும்..” என கேட்க நண்பனுக்கு மனதினுள் நன்றி கூறிக்கொண்டிருக்க
பிரியா “அவளுக்கு தலை வலியாம்… அப்புறம் சாப்டிக்கறேன்னு சொல்லிட்டா… அவ அப்படித்தான் பசிச்சு சாப்ட்டா நல்லா சாப்பிடுவா.. ஆனா அந்த நேரத்துக்கு சாப்பிடணும், அப்டிங்கிறதுக்காக எல்லாம் சும்மா சாப்பிடமாட்டா.. வயிறு காலியா இருக்குன்னு சும்மா தள்ளக்கூடாது. பசித்து புசினு பெரியவங்க சொல்லிருக்காங்கன்னு டயலாக் பேசுவா. நீங்க எல்லாம் சாப்பிடுங்க.” என வாசு “ஓ… அங்கேயுமா? இந்த சாரும் அதே மாதிரி.” என ஆதர்ஷை காட்டிவிட்டு உண்ண ஆரம்பிக்க அவனுக்கு அக்சரா தன்னை போலவே யோசிக்கிறாள் என எண்ண முகம் மலர்ந்தாலும் அவள் உண்ணவில்லை, தலை வலி என்றது அவனுக்கு புரிந்துகொள்ள முடியாது உணர்வில் ஏனோ சங்கடமாக இருக்க ஒருவேளை என்கூட பேசி சண்டைபோட்டத நினைச்சிட்டு இப்டி பண்றாளோ என்றவனுக்கு ஏனோ கோபம், வருத்தம்…அவனும் எனக்கு இப்போ பசிக்கல என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
பிரியா வந்ததும் அக்சரா “எல்லாரும் சாப்பிட்டாச்சா டி” என வினவ “இல்லடி ஆதர்ஷ் மட்டும் சாப்படல அவருக்கும் பசிக்கலையாம். நீ சாப்படலேன்னு அவரு சாப்படலையா? இல்ல நீ செஞ்சேன்னு சாப்பிடலையா?” என அவள் கிண்டல் செய்துகொண்டிருக்க அக்சராக்கும் அதே எண்ணம் நான் செஞ்சதுன்னா சாப்பிடகூட கூடாதா? என நினைக்க அவளுக்கு ஏனோ மனம் வடிந்தது போல இருக்க அதை அவள் முகம் பிரதிபலிக்க ப்ரியா “ஹே… அக்ஸா செல்லம் என்னாச்சு..ஏன் முகம் இப்டி வாடுது… இங்க பாரு நான் சும்மா சொன்னேன். அவருக்கு உண்மையாவே பசிச்சிருக்காது..அண்ட் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்னு சொல்லிட்டாரு.. கொடுத்துதான் விட்ருக்கு…” என்றும்
அக்சரா “இருந்தாலும் அவரு சாப்பிட மாட்டாரு அத..” என கூற
பிரியா ” ஒருவேளை நீ ஊட்டிவிடனும்னு நினைக்கறாரோ? ” என அக்சரா முறைக்க “இல்லடா இவ்வளோ தெளிவா அவரை பத்தி சொல்றியே அந்த அளவுக்கோனு நினச்சேன். ” எனவும் அக்சரா தூங்க போக அவளை பிடித்து நிறுத்தி “ஹே இரு டி எனக்கு இன்னமும் ஒரு டவுட்..”
“என்னது?”
“இல்லை, நீ காலைல அவ்ளோ ஸ்ட்ரோங்கா எப்படி சொன்ன.. கண்டிப்பா அது ஆதர்ஷா இருக்காதுன்னு..அப்போ எந்த அளவுக்கு அவரை நீ நம்புவ? புரிஞ்சிருப்ப? உள்ள எதுவும் இல்லாமலையா நான் அவரை பத்தி குறை சொன்னதும் என்னை திட்டி அது அவரு இருக்காதுன்னு சொன்ன ?” என்று கேட்க
அக்சரா சிரித்துக்கொண்டே “கரெக்ட் அவரை அந்த அளவுக்கு புரிஞ்சிருக்கேன்… நீ சொன்னேல்ல தண்ணி ஊத்திட்டேன்.. சண்டை வந்தது.. செம ஆர்கியூமென்ட் எல்லாம்… இதுவே ஆதர்ஷா இருந்திருந்தா அங்க ஆர்கியூமென்டே நடந்திருக்காது… அவரு உன்னை பேசவே விட்டிருக்கமாட்டாரு. அதுவும் நீ இவ்ளோ வாய் பேசுனத்துக்கு அடி விழுந்திருந்தா கூட ஆட்சேபணை இல்லை.. அதெல்லாம் இல்லாம நீ ஒழுங்கா வந்து சேர்ந்தியே அத வெச்சு தான் சொன்னேன்…அவரோட கோபம் அப்டி…கண்டிப்பா நீ இந்த கெத்தா பயத்தை காட்டிக்காம சீன் போட்டுட்டு மத்தவங்கள ஏமாத்திட்டு வரமாதிரி மெத்தெட் எல்லாம் இவருகிட்ட நடக்காது.. தலை தெறிக்க ஓடிவந்திருப்ப..அவருகிட்ட பேசிட்டு சந்தோஷமா ஏன் நார்மலா கூட யாருமே வெளில வந்து நான் பாக்கல… சோ சாதாரணமா தானே இருக்காருன்னு வாயக்குடுத்து வாங்கிக்கட்டிக்காத…” எனவும் ப்ரியாவும் சற்று எச்சிலை விழுங்கிக்கொண்டு “அப்போ ரொம்ப மோசமா? கோபக்காரனா… வாயே தொறக்க மாட்டேன்பா.. எனக்கு எதுக்கு வம்பு சரி தூங்கலாம்” என அதன் பின் எதுவும் கூறாமல் அமைதியாக உறங்கினாள்.
அவளை கண்டு சிரித்துக்கொண்டே “அது அப்டி இல்லைடி… அவரோட இந்த கோபமும் நியாயமில்லாம இருக்காது. கண்டிப்பா ஏதாவது ஒரு காரணம் இருக்கும். எதையுமே பெஸ்டா குடுக்கணும்னு பண்ணுவாரு. ரிஸ்க் எடுப்பாரு ..எந்த ஒரு முடிவும் தெளிவா தீர்க்கமா இருக்கும். என்ன முடிவு பண்ணா அத மாத்துறது ரொம்ப கஷ்டம். தப்பு பண்ணா யாரானாலும் ஒரே மாதிரி தான் ட்ரீட் பண்ணுவாரு. அவ்ளோ பெரிய பொறுப்புல இருந்திட்டு அதுவும் தனியாளா அத்தனை பேரையும் சமாளிக்கணும்னா அதுக்கு அவரோட கோபம் கண்டிப்பா வேணும்… அத நிறைய பேரு தப்பா புரிஞ்சுக்கறாங்க..” என்று கூறிவிட்டு கண்மூடி உறங்க சென்ற அக்சராவிற்கு ப்ரியாவிடம் இருந்து இறுதியாக ஒரு கேள்வி “ஆனாலும் அவ்ளோ கோபம், வேகம், வீம்பு, ஈகோ இதெல்லாம் உன்கிட்டேயும் தான் காட்டுறாரு..அத நீ மட்டும் ஏன் மத்தவங்க சொல்றமாதிரி குறையா சொல்லாம நல்லவிதமா சொல்லி அவருக்கு சப்போர்ட் பண்ற.. அவரும் உன்னை திட்டமட்டும் தான் செய்றாரே தவிர உன்னை விட்டுகுடுக்கமாட்டேங்கிறாரு.. உனக்கு ஒண்ணுன்னா அவரு செய்றாரு அதெப்படி. உங்களுக்குள்ள என்னவோ நடக்கிது.. எங்களுக்கு தான் ஒண்ணுமே புரியல..” என அவள் தூங்கிவிட்டாள்.
அக்சராவும் அதே கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டே தூக்கத்தை தொலைத்துவிட்டாள்.
இதே நிகழ்வு வாசுவுக்கும், ஆதர்ஸ்க்கும் இடையே நிகழ வாசுவும் எத்தனயோ கேள்விகள் கேட்க அனைத்திற்கும் ஆதர்ஷ் ஒரு பக்கத்துவீட்டுகாரங்க, ஒரே இடத்துல வேலை செய்ரோம் அந்த காரணம் தான் என அவன் கூறிய அனைத்து பதில்களும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்க வாசு இறுதியாக காலைல நடந்ததை பற்றி கூறி “எப்படி கண்டிப்பா அது அக்சராவா இருக்காதுன்னு சொன்னே?” என கேட்க
“அக்சராவா இருந்திருந்தா அவ தப்பு பண்ணிட்டான்னு தெரிஞ்சதும் மன்னிப்பு கேட்டிருப்பா. அதுக்கப்புறம் நீ கத்திருந்தா அப்போ இதுக்கும் மேலையுமே கூட சண்டை போட்டிருப்பா… ஆனா தான் மேல தப்பு வெச்சுகிட்டு முழுசா மத்தவங்க மேல அத திணிக்கமாட்டா.. எந்த ஒரு பிரச்னைனாலும் பொறுமை இருக்கும். வேலை செய்றதுல வேகம் இருந்தாலும் எடுக்கற முடிவு நிதானமா தெளிவா இருக்கும். அதேமாதிரி தான் அடுத்தவங்ககிட்ட பேசுறதும் யோசிக்காம பேசமாட்டா அதுதான் அவ குணம்…” என அவன் கூற வாசு அவனையே பார்த்துக்கொண்டிருக்க “ஏய் வாசு, என்னடா ஆச்சு?”
வாசு “இல்லை, நீ ஒருத்தர பத்தி இவ்ளோ தூரம் அனலைஸ் பண்ணுவியா? அதுவும் ஒரு பொண்ண? இந்த அளவுக்கு நல்லவிதமா பேசி கூட உனக்கு செர்டிபிகேஷன் குடுக்கதெரியுமா? சம்திங் ஸ்பெஷல்?”
சுதாரித்த ஆதர்ஷ் “டேய், அதெல்லாம் ஒண்ணுமில்ல.. இப்போவும் சொல்றேன் ஒர்க் அவ மத்தவங்ககிட்ட நடந்துக்கற விதம் வெச்சு தான் சொன்னேன். மத்தபடி எந்த ஒரு ஸ்டேஜலேயும் பொண்ணுங்க எமோஷனல் பிளாக்மெயில் பண்ணியாவது அவங்க தான் ஜெயிக்க பாப்பாங்க.. மத்தவங்க பீலிங்ஸ்க்கு மதிப்பு தரமாட்டாங்க. சோ எனக்கு அந்த ஒப்பீனியன் மாறல. மாறவும் மாறாது. இவளும் அப்படித்தான் இருப்பா.. என விக்னேஷ் கூறியது, அக்சரா கூறியது என அனைத்தும் கூறிவிட்டு பாத்தியா ஒரு பொண்ணு இருக்கற இடத்துல எவ்ளோ குழப்பம்னு அதனால நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத.” என ஆதர்ஷும் சென்று படுத்துவிட்டான். இருப்பினும் அவன் மனதினுள் ஒரே ஒரு கேள்வி எதிர்பார்ப்பு, ஆசை என எப்படி அதை வரையறுப்பது என்ற தெரியாமல் உதித்தது “அக்சரா மட்டும் நான் பாத்த பொண்ணுங்க மாதிரி இல்லாம இருந்தா நல்லாயிருக்கும்ல ..” என அவன் நினைத்துக்கொண்டே பெருமூச்சுடன் தூங்கிவிட்டான்.
மறுநாள் அனைவரும் வெளியே கிளம்ப ஆதர்ஷ் அக்சராவிடம் பேசவேண்டுமெனவே எண்ணிக்கொண்டு இருக்க அவளே கண்டும் காணாமல் அவள் உண்டு அவள் வேலை உண்டு என இருக்க இவனது நிலைமை தான் கவலைக்கிடமாக இருந்தது. அவனுக்கே அவளை பற்றி என்ன எண்ணுகிறான். அவளுடன் பேசவேண்டுமா? வேண்டாமா? என பல குழப்பங்கள் சூழ அவளின் இந்த ஒத்துக்கமும் அவனை என்னவோ செய்தது. அவன் அக்சராவையே கவனித்தான். அக்சராவோ அவனை தவிர மற்ற அனைவரையும் கவனித்தாள். வாசுவும், ப்ரியாவும் இதனை கண்டுகொண்டு அதைப்பற்றி பேசினர். இவர்கள் இருவருக்கும் என்னவோ ஒன்று இடையே இருப்பதை உணர்ந்துகொண்ட வாசுவும், ப்ரியாவும் அதனை வெளிக்கொணர பார்த்தனர்.
பிரியா “உங்க பிரண்ட் ரொம்ப மோசம்.. ஒழுங்கா யோசிச்சு மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சுக்கறதில்லை. எல்லாத்துக்கும் கத்த வேண்டியது.” என சலித்துக்கொள்ள வாசு “ஹெலோ, அங்க அக்சரா மட்டும் என்னவாம்.. இவ்ளோ சண்டைபோட்டாலும் அவதானே எல்லாமே பாத்துபாத்து பண்றா..அது ஏன்னு யோசிச்சாளா? அவ மட்டும் அவங்களுக்குள்ள லவ் இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டாளா? இன்னும் அந்த நண்டு சுண்டுகளோட தான் விளையாடிட்டு இருக்கா.”
பிரியா “சும்மா அவளை சொல்லாதீங்க. இப்டி திட்டிகிட்டே இருந்தா லவ் வருமா? ஒருவேளை இருக்கா இல்லையானு யோசிக்கிறதுக்குள்ள கத்தி பயமுறுத்துனா அவ எப்படி அடுத்து யோசிப்பா?”
வாசு அதை ஒப்புக்கொண்டு மௌனமாக பிரியா தொடர்ந்து “இப்டி ஒருத்தர கட்டிக்கிட்டு என் பிரண்ட் என்ன பாடுபடபோறாளோ? கடவுளே…” என கைகூப்பி வேண்ட வாசு “சரி, சரி ரொம்ப ஓவரா பண்ணாத.. என் பிரண்ட்க்கு அவன் மனசு புரியவரைக்கும் தான்.. புரிஞ்சு, அக்சராவ இவன் லவ் பண்றத ஒத்துக்கிட்டா அவன் அளவுக்கு யாருமே நல்லா பாத்துக்கமுடியாதுனு அக்சராவே சொல்லுவா தெரியுமா? அவ்ளோ காரிங்கா இருப்பான் அவன்.”
பிரியா “என்னவோ பா, எல்லாம் நல்ல படியா நடந்தா சரி… ஆமா நீங்க எப்படி உங்க பிரண்ட்க்கு இவளோ சப்போர்ட் பண்றீங்க? நீங்களும் அப்படித்தானா?”
வாசு “ச்ச..ச்சா… யாரு சொன்னது. அந்த விஷயத்துல நான் என் பிரண்ட் மாதிரி இல்லப்பா.. நான் எல்லாம் என் மனசுகிட்ட தான் மொதல்ல பேசுவேன். லவ் சொல்றதுக்கு எல்லாம் டிலே பண்ணமாட்டேன் தெரியும்ல… உனக்கு எப்போ ஓகே? கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லு உடனே பண்ணிக்கலாம்… எனக்கு என் பிரண்ட் மட்டும் தான். சோ வேற யாருகிட்டேயும் சொல்லணும்னு கூட இல்லை.” என கூற ஒரு நிமிடம் இமைக்க மறந்தவளை சொடக்கிட்டு அவளது நினைவை பூவுலகிற்கு கொண்டுவந்தவன் “என்ன பதிலே காணோம்? பயந்துட்டியா?..சும்மா எல்லாம் கேள்வி கேக்கத்தான் லாயக்கு..” என சீண்ட
ப்ரியாவும் கெத்தாக “அந்த விசயத்துல நானும் என் பிரண்ட மாதிரி இல்லை. எப்போன்னாலும் எனக்கு ஓகே தான். அண்ட் எனக்கும் பிரண்ட்ஸ் மட்டும் தான்.. சோ நோ ப்ரோப்லேம்.” என இருவரும் தங்கள் மனதை பகிர்ந்துகொண்டதை எண்ணி சிரித்துவிட்டனர்.
கார்டன், லேக் என சுற்றிப்பார்த்துவிட்டு இறுதியில் ஜெயேந்திரன் அவர்களின் வீட்டிற்கு சென்றனர். மாலை நேரம் குழந்தைகள் வரவும் தனலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசிக்கொண்டிருக்க மற்றொரு இனிப்பான செய்தியென விக்ரமிடம் இருந்து போன் வந்தது. அவன் மறுநாள் இங்க வருவதாக. இதை கேட்டு அனைவரும் மகிழ, அக்சரா வெளிப்படையாகவே தனது மகிழ்ச்சியை காட்டிக்கொள்ள ஆதர்ஷ்க்கு சற்று கோபம் கூட வந்தது. ஜெயேந்திரனின் தங்கை மரகதமும் அவளது மகள் சஞ்சனாவும் இருக்க அவர்களுடனும் வாயாடி கொண்டிருந்தனர் முக்கியமாக அக்சரா விக்ரம் பற்றியே அனைவரும் பேச சிறிது நேரத்திலேயே ஆதர்ஷ் அனைவரையும் கிளப்ப பார்த்தான். கிளம்பினாலும் வழியில் எல்லாம் அக்சரா பிரியா, வாசுவிடம் விக்ரம் புகழையே பாடிக்கொண்டிருக்க இவன் வந்தும் எதுவும் சாப்பிடாமல் சென்று படுத்துவிட்டான்.
அடுத்தநாள் அனைவரும் விக்ரமை காண தயாராக மதியம் வருவான் என்று கூறியும் அக்சரா காலையிலேயே துரிதப்படுத்த சரி என எல்லோரும் உடன் சென்றனர். அங்கே ஏற்கனவே விக்ரம் வந்துவிட அவனிடம் விசாரிக்க சர்ப்ரைஸ இருக்கட்டும்னு தான். ஆனா நீங்க எல்லாரும் எப்படிடா கரெக்டா வந்தீங்க என வாசுவிடம் வினவ அக்சராவை கைகாட்டியதும்
விக்ரம் “ஹே, அக்ஸா இது உன் வேலையா? உன்ன வெச்சுகிட்டு என்னால ஒரு பிளான் உருப்படியா பண்ணமுடியுதா?”
அக்சரா “அது எப்படி நான் இருக்கறவரைக்கும் நடக்கும்? நீ என்கிட்ட சொல்லிருந்தா ஹெல்ப் பண்ணிருப்பேன்.”
சஞ்சனா “ஹாய் மாமா எப்படி இருக்கீங்க? ட்ராவல் எப்படி இருந்தது?”
விக்ரம் “சூப்பரா இருக்கேன் சஞ்சு, செமையா இருந்தது..நீ எப்படி இருக்க ?” என அனைவரிடமும் அவன் பேசிவிட்டு ஆதரிஷிடமும் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு உள்ளே செல்ல வீடே ஒரே கோலாகலமாக இருந்தது.
விக்ரம், சஞ்சனா, வாசு, பிரியா, அக்சரா அனைவரும் ஒன்றாக அமர்ந்து வாயடிக்க ஆதர்ஷ் மட்டும் அதில் கலந்துகொள்ளாமல் ஜெயேந்திரனிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். ஏதோ போன் வர எழுந்து சென்று பேசிவிட்டு வந்த ஆதர்ஷின் காதுகளில் தனம், ஜெயேந்திரன் பேசிக்கொண்டிருந்தது விழுந்தது.
தனம் “ஏங்க அக்சரா, குழந்தைங்க எல்லாரும் இருக்கும் போது தனியா இருக்கற எண்ணமே இருக்கறதில்லை அவ தான் எவ்ளோ பொறுப்பா இருக்கா? எல்லாரையும் கவனிச்சுக்கறா, ரொம்ப பாசம், கலகலப்பா இருப்பா. எனக்கு அவ இந்த வீட்டு மருமகளா வந்தா நல்லாயிருக்கும்லன்னு தோணுது.. இல்லேங்க?”
ஜெயேந்திரன் மெலிதாக புன்னகைத்துவிட்டு “எனக்கும் அந்த யோசனை இருக்கத்தான் செய்யுது. ஆனாலும் அவங்க மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்காம நாம என்ன பண்ணமுடியும் சொல்லு. என்ன எழுதி வெச்சிருக்கோ யாருக்கு தெரியும்? கொஞ்ச நாள் பொறுமையா இருப்போம். அப்டி இல்லாட்டி நாமளே அவகிட்ட பேசலாம் சரியா?”
தனம் “ரொம்ப சந்தோஷம்ங்க.”
இதை கேட்டு ஆதர்ஸ்க்கு அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. வெளியே சென்று உலாத்திக்கொண்டிருக்க விக்ரம் அவனிடம் வந்து “ஹே ஆதர்ஷ், ஏன் இங்கேயே இருந்திட்ட? உள்ள வா?”
“இல்ல விக்ரம், சும்மா தான். ஜஸ்ட் காத்தாட இருக்கலாமேன்னு தான் வந்துட்டேன்.”
“ஓ…சரி..அப்புறம் சொல்லு உனக்கு இங்க எல்லாமே ஓகே தானே.. எந்த பிரச்னையும் இல்லையே?”
“இல்ல விக்ரம்.. இங்க எந்த ப்ரோப்லேமும் இல்ல. ஆனா முடிஞ்சளவுக்கு நீயே இத எல்லாம் சீக்கிரம் இன்ச்சார்ஜ் எடுத்துக்கலாமே?”
“ஏய் கமான் ஆதர்ஷ். உனக்கே நல்லா தெரியும் எனக்கு பெருசா இதுல இன்டெரெஸ்ட் இலேன்னு. நாம MBA படிக்கும் போது இருந்தே அப்டித்தான்னு புரிஞ்சிருக்கும்.நாம இரண்டுபேருக்குமே ஒண்ணு வேணும்னா வேணும். அத நம்மகிட்ட இருந்து யாரும் பறிக்கவும் முடியாது. அதேமாதிரி நமக்கு பிடிக்காததை நம்மகிட்ட திணிக்கவும் முடியாது.. ஆனா என்ன உன்னோட மேனேஜ்மென்ட் வேற ஸ்டைல். என்னோட மேனேஜ்மென்ட் வேற ஸ்டைல். சோ இத நீயே பாத்துக்கோ. இப்போதைக்கு இந்த டாபிக்க விடு. நீ ரிலாக்ஸா எத பத்தியும் நினைக்காம உன் வீடு உன் ஊரு மாதிரி ஹாப்பியா இரு. சரியா?”
“ம்ம்..” என மெலிதாக புன்னகைக்க உள்ளிருந்து அனைவரும் வெளியே வந்து பேசிக்கொண்டிருக்க அக்சரா குழந்தைகளுடன் விளையாடுவதை பார்த்த ஆதர்ஷ் காரணம் புரியாமல் அவளை ரசிக்க விக்ரமோ காரணம் புரிந்து ரசித்தான். அதை ஆதர்சிடம் வேறு கூறினான்.
விக்ரம் “அக்ஷ்ரா ரொம்ப நல்ல பொண்ணுல?… இங்க இருக்கறவங்களிலே அக்ஸா தான் என்கிட்ட நார்மலா இருப்பா. அம்மா அப்பா மரகதம் அத்த கிளோஸ் தான் இருந்தாலும் பெரியவங்க அப்படிங்கிற பீல் இருக்கும். அதோட நான் அவங்க எல்லாருக்கும் செல்லமும் கூட.. சஞ்சனா கூடவே வளந்தாலும் எங்க இரண்டுபேருக்குள்ள ஒரு பாண்டிங் வரல. மத்தபடி வேலைகாரங்க எல்லாரும் ஒரு பயம், ஒதுக்கம், பிரண்ட்ஸ் பாதி பேர் தேவைக்காக இப்டியே போயிடிச்சு… இது எல்லாமே கலந்து என்னை கைடு பண்ண, ஒரு பிரண்ட்டா, வெல் விஷரா, எனக்கு எல்லாமாவும் இருக்கறது, சண்டை போட்டு தப்புனாலும் ஆர்கியூ பண்ணி எனக்கு சொல்றது எல்லாமே அவகிட்ட எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன் அக்ஸா என் லைப்ல இவளோ லேட்டா வந்தான்னு கூட எனக்கு தோணும். ஐ லைக் ஹெர்… ஐ திங்க் அவகிட்ட நான் இந்த தடவை ப்ரொபோஸ் பண்ணி கேட்கலாம்னு இருக்கேன்…பார்ப்போம்” என அவன் அக்சராவை பற்றி புகழ்ந்தது மட்டுமின்றி அடுத்த கட்ட நோக்கத்தையும் சொல்லிவிட ஆதர்ஸ்க்கு தான் தலைவலி அதிகமானது. அக்ஷ்ரா ஒத்துப்பாளா? என்று கேள்வியும் “மாட்டாள்” என்ற பதிலும் “அவ என்ன பதில் சொன்னா நமக்கென்ன?” என்ற வினாவும் வர அதை பற்றி முதன்முறையாக நடந்துகொண்டே யோசிக்க முடிவெடுத்தான். அங்கே பிரியா, அக்சரா, சஞ்சனா மூவரும் அக்சராவின் திருமணம் பற்றி பேசிக்கொண்டிருக்க
“காசு பணம் சம்பாரிக்கறது எவ்ளோ கொடுமையா இருக்கு இப்போ எல்லாம்? அதுவும் நல்லவனா இருந்து இந்த காலத்துல முன்னாடி வரது எல்லாம்? நடக்கவே நடக்காத காரியம்பா. இதுல எப்படி செட்டில் ஆன பையன பாக்கிறது அதுவும் ஓரளவுக்கு வயசுல..இதெல்லாம் நடக்கிற காரியமா?” என பிரியா சொல்ல
சஞ்சனாவும் “அதேதான் நானும் சொல்றேன் பேசாம ஆல்ரெடி கட்டுன வீட்ல குடிபோய்டலாம் அதான் பிரச்சனை இல்லாத வேலை. எப்படி அக்சரா கரெக்ட் தானே… நான் சொன்னது புரிஞ்சுதா?” என சிரிக்க
அக்சராவும் “நல்லா புரிஞ்சது… இந்த காலத்துல லைப்ல செட்டில் ஆகணும்னு கனவு மட்டும் வெச்சு முன்னாடி வரது ரொம்ப கஷ்டம் தான். சோ பேசாம நல்லா பணக்கார பையன பாத்து கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிடவேண்டியதுதான். இல்லையா?” என சிரித்துக்கொண்டே கேட்க
சஞ்சு “அதே அதே… ” என்றதும் மூவரும் அதை தொடர்ந்து ஆமோதித்து சிரிக்க
அதை கேட்ட ஆதர்ஷ்க்கு அக்சராவா இப்டி நினைக்கறது? ச்ச… அவளும் மத்த பொண்ணுங்க மாதிரி தானா? அப்டினா விக்ரம் ப்ரொபோஸ்ன்னு போய் நின்னாலே இவ அக்ஸப்ட் பண்ணிடுவாளா? அவ்ளோதானா ? என நினைத்துக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டான்.
இங்கே சிறிதுமுடித்தபின் அக்சராவோ “ஆனா அப்டி பணத்துக்காக பாக்கிற வாழ்க்கை எந்த அளவுக்கு சொல்லமுடியும். பணம் போனா இதுவும் போய்டுமே. அதுக்கு கொஞ்ச காலம் வாழ்ந்தாலும் மனசுக்கு பிடிச்சவங்களோட நிம்மதியா சந்தோசமா வாழ்ந்திட்டு இருக்கறத வெச்சு எல்லாரையும் சந்தோஷப்படுத்தி பாத்துகிட்டு சீக்கிரம் செத்தா கூட மனசு நிறைஞ்சிருக்கும். அந்த மாதிரி ஒரு வாழ்க்கை, நமக்கே நமக்காகன்னு கிடைக்கற லவ் அமைஞ்ச எல்லாருமே லக்கி தான் இல்ல?” என
ப்ரியாவும், சஞ்சனாவும் “கண்டிப்பா… ஆனா அப்டி ஒருத்தர கண்டுபுடிக்கறதுதான் கஷ்டமா இருக்கு பா..அதைவிட பெரிய கஷ்டம் கண்டுபுடிச்சு சொல்லாம இருக்கறது..” என்று தங்களின் மனம் கவர்ந்தவர்களை மனதில் கொண்டு கூறினார்.
அதோடு அவர்களின் மாநாடு முடிந்து கிளம்ப இதை விக்ரம், வாசு கேட்டு தங்களுக்குள் சிரித்துக்கொண்டே சென்றனர்.
ஆதர்ஸ்க்கு அவன் அறையில் சென்று முடங்க சிறிது நேரத்தில் வாசு வந்து அவனும் “அக்சரா, விக்ரம் செம டா…. டைம் போறதே தெரில… அப்டி ஒரு அண்டர்ஸ்டாண்டிங்” என
ஆதர்ஷ் “போதும் விட்றா.. என்ன பெரிய அண்டர்ஸ்டாண்டிங்.. அத மட்டும் வெச்சுகிட்டு என்ன பண்ணமுடியும் சொல்லு… அதோட இந்த காலத்துல யாருமே அவங்களுக்குனு ஒரு தேவையில்லாம அடுத்தவங்களோட பழகறதில்லை… அதே மாதிரி தான் இதுவும்.. பேசாம போயி படு.” என கடித்துக்கொண்டு படுத்துவிட்டான்.
வாசுவிற்கு “இவன் எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறான்..ஏதோ சரியில்ல” என்றவன் மொபைல் எடுத்துக்கொண்டு தன் அவன் வேலையை ஆரம்பித்தான். ப்ரியாவும் அதற்காகவே காத்திருந்தது போல வேகமாக எடுத்து பேசலானாள்.