Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 07

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 07

7 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

வாசுவும் முதலில் உள்ளே நுழைந்தவன் சிந்துவிடம் பேசிவிட்டு சஞ்சீவை பார்த்தான். அவன் உறங்கிக்கொண்டிருக்க இவனும் சென்று சற்று களைப்பாற மனமோ “அவதான் அக்சராவா? என்ன இப்டி கத்துறா? சரியான பஜாரியா இருப்பா போலவே?” என தனக்குள் குமுறிக்கொண்டே இருக்க ஆதர்ஷ் வரவும் அவனிடம் பொதுவான நல விசாரிப்புகளுக்கு பின் ஆதர்ஷ் வினவினான்.

“என்னடா, வரும்போதே பொம்மையை குளிப்பாட்டி கொண்டுவந்தியா?” என வாசு “கடுப்பேத்தாதடா, நீ சொன்னத விட அந்த அக்சரா ரொம்ப இம்சை போல டா. வந்ததும் ப்ரோப்லேம் பண்ணிட்டா.” எனவும் அக்சரா பெயரை கேட்டதும் ஒரு கூர்மையுடன் “அவளா? அவ என்ன பண்ணா?” என கேட்க வாசுவும் நடந்தவைகளை கூற ஆதர்ஷ் “அது அக்சராவா இருக்காது” என்றான் உறுதியாக.

வாசுவும் அப்போ வேற யாரு என குழப்பிக்கொண்டிருக்க வாண்டூஸ் அனீஸ், ரானேஷ் வேகமாக ஓடிவர இவர்களது சத்தம் கேட்டு சஞ்சீவ் முழித்துக்கொள்ள அவனையும் தூக்கிக்கொண்டு வராண்டாவிற்கு வர அங்கே சிந்து, அனீஸ்,ரானேஷ், அக்சரா, பிரியா அனைவரும் பேசிக்கொண்டிருக்க வாசு வந்ததும் சிந்து அவனை அறிமுகப்படுத்தினாள்.

அக்சராக்கா இவரு தான் எங்க வாசு அண்ணா. ஆதர்ஷ் அண்ணாவோட பெஸ்ட் பிரண்ட். எங்க பாமிலியோட ரொம்ப கிளோஸ். அண்ணா இவங்க அக்சரா இங்க தான் தங்கிருக்காங்க. அண்ணாவும் இவங்களும் ஒண்ணாதான் ஒர்க் பண்ராங்க. அண்ணாவோட பிஎ ரொம்ப ஜாலி டைப் நல்லா பேசுவாங்க.” என அறிமுகப்படுத்த அவர்களும் சினேகமாக புன்னகையுடன் பேசிக்கொள்ள அங்கே ஆதர்ஷ் சஞ்சீவுடன் வர இவளை கண்டதும் முறைக்க ஆரம்பித்தான். அக்சராவிற்கு புரியவில்லை. எதற்காக முறைக்கிறான் என யோசித்துக்கொண்டே இருக்க சஞ்சீவ் அக்சராவிடம் தாவ தூக்கக்கலக்கத்தில் இருப்பதால் அவனிடம் எதுவும் கூறாமல் அக்சராவிடம் தந்துவிட அவளும் சஞ்சீவை ஏந்திக்கொண்டு ப்ரியாவை அனைவர்க்கும் அறிமுகப்படுத்த ஆதர்ஷ் ஒரு ஹாயுடன் நகர்ந்துவிட சஞ்சீவ் மீண்டும் அக்சரா தோளில் சாய்ந்து உறங்க எத்தனிக்க அவளும் இவனை உள்ளே படுக்க வெச்சடறேன் என சென்று விட, சிந்து அனிஷ், ரானேஷ் உடன் விளையாட செல்ல ப்ரியாவும் வாசுவும் மட்டும் தனித்து விடப்பட முதலில் இருவரும் கோபமாக முறைத்துக்கொண்டு இருக்க வாசு நகர எத்தனிக்க பிரியா சாரி என்றாள்.

 

[அக்சரா “நீ பண்ணதுதானே முதல தப்பு. அதனால நீ போயி சாரி சொல்லு. இல்லை நான் போயி சொல்றேன் என கூறவும் தான் பிரியா “இல்லை நீ எதுக்கு அவன்கிட்ட எல்லாம் சாரி சொல்லணும். நானே சொல்லிக்கறேன். என சொல்லிவிட்டு வந்ததால் மன்னிப்பும் கேட்டுவிட்டாள்.]

 

வாசுவோ நம்பாத பார்வை ஒன்றை தன் மீது வீச கொஞ்சம் அவளுக்குள்ளும் எதோ ஒன்று பிசைய தன்னை நிரூபித்து விடும் நோக்கில் பிரியா, “உண்மையாவே மன்னிப்பு தாங்க கேக்கறேன். ஆக்சுவலி நான் அப்போவே மன்னிப்பு கேக்கத்தான் நினைச்சேன். ஆனா நீங்க சட்டுனு திட்டுனதும் கோபம் வந்திடுச்சு. அதான் அப்போ அப்டி பேசிட்டேன். சாரி.” என தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு அமைதியாக நிற்க வாசுவிற்கு என்னவோ போல ஆகிவிட்டது.

“இல்லை, இல்ல என் மேலையும் தான் தப்பு.கவனிக்காம வந்துட்டேன். அதோட நீங்க பேசவரதையும் கேட்காம ரொம்ப கத்திட்டேன்.சாரி ” என வாசு கூற

இருவரும் மாறி மாறி  மன்னிப்பு கேட்டுக்கொண்டு ஒரு கட்டத்தில் சிரித்துவிட்டனர். அதன் பின் சாதாரணமாக இருவரும் பேசிக்கொண்டு தங்களை பற்றிய விபரங்களை பரிமாறிக்கொண்டனர்.

 

அக்சரா சஞ்சீவை படுக்க வைத்துவிட்டு திரும்ப வர அவளை முறைத்துக்கொண்டு நின்றான் ஆதர்ஷ். ஒரு நொடி புரியாவிடினும் அவளே சிரித்த முகத்துடன் சென்று பேசினாள்.

“சார் ஏதோ மூட் அவுட்ல இருக்கீங்க போல.?”

அவனுக்கு விசாரிக்காமல் கோபம் கொள்வது தவறு என உள்ளே ஒரு மனம் அடித்துக்கொண்டே இருக்க அவனும் “நீ விக்னேஷ்கிட்ட ஏதாவது சேலஞ்ச் பண்ணியா?” என வினவ

அக்சரா ஒரு நொடி யோசித்துவிட்டு “ஆமா பண்ணேன்.”

“எதுக்கு…?”

“அதுவா?… இன்னைக்கு நான் உங்ககிட்ட சீக்கிரம் கிளம்ப பெர்மிஷன் கேட்டேன்ல..கண்டிப்பா விடுவீங்கன்னு சொன்னேன்.” என அவளும் அவன் சாதாரணமாக கேட்கிறான் என நினைத்து சிரித்துக்கொண்டே சொல்ல

ஆதர்ஸோ “என்ன நினைச்சிட்டு இருக்கே உன் மனசுல நீ.. கொஞ்சம் சாதாரணமா பேசிட்டா என்ன உன் இஷ்டத்துக்கு நான்  ஆடுவேன்னு நினைச்சியா?”

அக்சரா “இல்லை…நான் அந்த அர்த்தத்துல சொல்லல…”

“பேசாத…உன்னை கொஞ்சம் ஏதோ பரவாலைன்னு நினச்சேன். ச்ச என்னை சொல்லணும்…எல்லாரையும் மாதிரி தான் நீயும்… என்ன நினச்சு நீ இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு எனக்கு தெரில. ஆனா நான் ஆரம்பத்துலையே .சொல்லிட்டேன். என்கிட்ட இருந்து நீ விலகி இருக்கறதுதான் உனக்கு நல்லது.” என அவன் கத்திவிட்டு சென்றுவிட்டான்.

அக்சராவிற்கு முதலில் வருத்தமாக இருந்தது. இதுக்கு எதுக்கு இப்டி திட்றாரு. அந்த விக்னேஷ் என்ன சொல்லி  வெட்ச்சானோ? என யோசித்துக்கொண்டே வெளியே வர குட்டிஸ், பிரியா, வாசு  அனைவரும் மறுநாள் வெளியே கார்டன், தொட்டபெட்டா என எங்காவது சுற்றிப்பார்க்க செல்லலாம் என கேட்க அக்சராவும் குழந்தைகளை கண்டதும் மனநிலை மாறி இவர்களுடன் சேர்ந்து ஓகே சொல்லிவிட்டாள்.

வாசு “ஆதர்ஷ் என்ன சொல்லுவான்னு தான் தெரில. இன்னைக்கு வரும்போதே நாளைக்கு ஏதோ ஒர்க்ன்னு சொல்லிட்டே வந்தான். என இழுக்க

சிந்து முகம் வாட “அப்டின்னா அண்ணா வரமாட்டாரா? அப்போ எங்களையும் விடமாட்டாரே.” என முகம் வாட அவள் கூறவும் எல்லாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

வாசு சென்று அழைக்க அவனோ ” வேலை இருக்குடா. நான் வரலை… ” என

வாசு “டேய், சிந்து குட்டிஸ் எல்லாரும் ஆசைப்படறாங்கடா.” என்றதும்

ஆதர்ஷ் “சரிடா, அதான் நீ கூட இருப்பியே.? நீயே அவங்கள பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வா…” என்றான்.

அதற்கு மேல் அவனை கட்டாயப்படுத்த முடியாது என தெரிந்ததால் வாசுவும் வந்து நடந்ததை கூற சிந்து

“அண்ணா வந்தா நல்லாயிருக்கும்.. தனியா போக இஷ்டமே இல்லை.” என பிறர் அவளை வற்புறுத்தியும் சிந்து அண்ணா வந்தா வரேன்.இல்லாட்டி மாட்டேன் என  பிடிவாதமாக மறுத்துவிட இறுதியாக அக்சரா தான் சென்று பேசுவதாக ஆதர்ஷிடம் சென்றாள்.

அக்சரா சென்று அவன் முன்னாடி நின்றதும் ஆதர்ஷ் மீண்டும் முகம் கோபமாக திருப்பிக்கொள்ள இவள் சாதாரணமாக சென்று “எல்லாரும், நாளைக்கு வெளில போலாம்னு ஆசைப்படறாங்க. உங்க பிரண்ட் கூட வராரு.”

“தெரியும்… அத சொல்லத்தான் இவ்ளோ தூரம் வந்தியா?”

“இல்லை இல்ல… நீங்களும் வந்தா நல்லாயிருக்கும்.. ”

“அதான் எனக்கு ஒர்க் இருக்கு வரமுடியாதுன்னு சொன்னனே? வாசு சொல்லல?”

“அது அவரு சொன்னாரு. இருந்தாலும் நான் சொல்லவந்தது…” என முடிப்பதற்குள்

“ஸ்டாப் இட் அக்சரா. என்னதான் உன் ஐடியா.? நீ சொன்னா கேட்பேன், உனக்காக எது சொன்னாலும் செய்வேன்னு நீயா கற்பனை பண்ணிக்கிட்டா நான் ஒன்னும் பண்ணமுடியாது. அவங்கள விட நீ எனக்கு முக்கியமா?  சீன் கிரீயேட் பண்ணாத.” என கத்தினான்.

அக்சரா “நான் எப்போ அப்டி சொன்னேன். யாருகிட்ட என்ன சீன் போட்டேன்.?”

“ஏன் மேடம்க்கு அது கூட மறந்திடுச்சா? நானும் நீயும் ஒண்ணாதான் வரோம் போறோம்னு இதெல்லாம் எஸ்டேட்ல விக்னேஷ் அவங்ககிட்ட எல்லாம் சொல்லனுமா? ”

“நானா அவங்ககிட்ட சொல்லல. அவரோட வரபோலன்னு கேட்டாங்க. ஆமான்னு சொன்னேன். அவ்ளோதான்.”

ஆதர்ஷ் “அதான் நீ எதுக்கு பதில் சொல்ற?”

அக்சரா “அதுல மறைக்கறதுக்கு என்ன இருக்கு. எல்லாரும் பாக்கத்தானே செய்றாங்க. அதனால கேக்கறாங்க. இல்லேன்னு பொய் சொல்ல சொல்றிங்களா? அப்டி சொன்னாதான் அவங்களுக்கு என்னமோ இருக்குன்னு தப்பா யோசிக்கத்தோணும். அதுவுமில்லாம அத மாத்தி சொல்ற  அளவுக்கு தப்பா ஏதுமில்லையே.?”

ஆதர்ஷ் “ம்ம்…. அதுல உனக்கு என்ன தப்பா தெரியப்போகுது? ஒரு பையன்கூட தனியா போறோம். பேர் கெட்ற கூடாதுன்னு தோணனும். அப்டி இருந்தா இதெல்லாம் நீ சாதாரணமா சமாளிச்சு இருக்கலாம்.”

பொறுமை இழந்த அக்சரா “அந்த அக்கறை முதல உங்களுக்கு இருந்திருக்கணும். அங்கிள்கிட்ட கூப்பிட்டு நானே அவளை ஆபீஸ் கூட்டிட்டு போறேன்னு சொல்லும்போது இதெல்லாம் உங்களுக்கு தோணலையா? நானா வந்து உங்ககிட்ட கெஞ்சிட்டு நின்னேன்.” எனவும்

ஆதர்ஷ் ஒரு நிமிடம் அமைதியாகி விட்டு மீண்டும் வினவினான் “உனக்கு யாரு சொன்னாங்க. எப்போ?”

அவள் ஏதும் பேசாமல் நிற்க அவளிடம் நெருங்கி “கேட்கிறேன்ல?”

“அங்கிள் தான். நான் தான் அங்கிள்கிட்ட கேட்டேன். என்னை கூட்டிட்டு போயிட்டு வரன்னு அவருக்கு எதுக்கு சிரமம். மூர்த்தி அண்ணாவுக்கு வேலை இருந்தா பரவால்ல அங்கிள். நானே ஏதாவது அரேஞ்சுமெண்ட்ஸ் பண்ணிக்கறேன்.’ னு தான் சொன்னேன். அப்போதான் அவரு சொன்னாரு. ‘ ஆதர்ஷ்க்கு சிரமம் எல்லாம் இல்லமா… இன்பாக்ட் அவனேதான் வந்து கேட்டான். அக்சராவை நானே கூட்டிட்டு போறேன்னு சொன்னான். அதோட அவளுக்கும் சேஃப். எப்போன்னாலும் சீக்கிரம்  போகணும்,இல்ல லேட்டா ஆகும்னு எதுன்னாலும் இரண்டு பேரும் ஒரே இடத்துல இருந்தா ஈசி.” என அவர்களுக்கிடையேயான உரையாடலை கூற அவனும் விட்டுக்கொடுக்காமல் “போனா போகுதுன்னு கூட்டிட்டு போனேன் பாரு .. தப்பு என்மேல தான்.”

“அந்த அளவுக்கு நான் உங்ககிட்ட பாவப்பட்டு வந்து நிக்கல..”

“ம்ச்ச்… இப்போ எதுக்கு வந்த?”

அவள் ஒரு நீண்டமூச்சை உள்ளிழுத்து விட்டு “உங்களையும் வெளில போக கூப்பிட தான் வந்தேன்..” என்றதும்

ஆதர்ஷ் “ஏன் உனக்கு டிரைவர் வேலை பாக்கத்தான் நான் இருக்கேனா? அதான் வரமுடியாதுன்னு வாசுகிட்டேயே சொல்லிட்டேனே.அவன் என் கிளோஸ் பிரண்ட். அவன் சொல்லியே நான் கேக்கல.. இல்ல  மேடம் சொன்னதும் அப்டியே கேட்ருவேன்னு உனக்கா நம்பிக்கையா? அப்டி கேட்டுட்டா இன்னுமே எல்லார்கிட்டேயும் போயி அத சொல்லி பில்டப் பண்ணலாம்னு நினைச்சியா? ச்ச…உன்ன மாதிரி…”

அக்சரா “போதும் நிறுத்தறீங்களா? என்ன தான் நீங்க நினைச்சிட்டு இருக்கீங்க.. சும்மா என்ன ஏதுன்னே தெரியாம எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுகிட்டு கத்தாதீங்க. நீங்க நான் வேலை செய்ற இடத்துல இருக்கற ஜஸ்ட் MD அவ்ளோதானே? ஒன்னும் பெரிய மேதை, கடவுள், உலகமே நீங்கதாங்கிற ரேஞ்சுக்கு பில்ட்டப் பண்ணாதீங்க..உங்க பேரை யூஸ் பண்ணி நான் எதுக்கு ஸீன் போடணும். உங்களுக்கே அவ்ளோ சீன் இல்லை..

என்ன பிரச்சனை உங்களுக்கு? ஆமா நான் விக்னேஷ்கிட்ட பெட்  கட்டுனேன். இன்னைக்கு சார் என்னை சீக்கிரம் போக கேட்டா விட்ருவாருன்னு. அது உங்களையோ என்னையோ வெச்சு நான் சொல்லல. காலைலயே சிந்து சொல்லிட்டா உங்க பிரண்ட் வராங்க. சோ அண்ணா இன்னைக்கு சீக்கிரம் வரதா சொல்லிருக்காங்கன்னு. அதோட ஆபீஸ்ல நீங்க வரும்போது போன்ல ஷார்ப்பா 4.30க்கு வந்துடுவேன்னு சொல்லிட்டு வந்தீங்க. சோ எப்படியும் நீங்களே கிளம்பிடுவீங்க.அதோட ஒர்க்ஸ் அவ்ளோவா இன்னைக்கு இல்ல. அதனால நீங்க கண்டிப்பா நோ சொல்லமாட்டீங்கன்னு நம்பிக்கைல தான் அப்டி சொன்னேன். அத தவிர நீங்க நினைக்கற மாதிரி எல்லாம் நான் நினைக்கல. “

“இதுல நானும் நீயும் ஒண்ணாதான் வரோம் போறோம்னு இதெல்லாம் அவங்ககிட்ட சொல்லனுமா? ”

“நானா அவங்ககிட்ட சொல்லல. கேட்டாங்க. ஆமான்னு சொன்னேன். அவ்ளோதான்.”

“அதான் நீ எதுக்கு பதில் சொல்ற?”

“அதுல மறைக்கறதுக்கு என்ன இருக்கு. காரணமில்லாம பொய் சொல்ற அளவுக்கு உங்ககூட வரது பெரிய விஷயமா எனக்கு படல. எனக்கு மூர்த்தி அண்ணா கூட வரதும், உங்ககூட வரதும், பஸ்ல போறதும் ஒண்ணுதான். ஆல் ஆர் ஜஸ்ட் ட்ராவல் . மத்தவங்க என்ன நினைப்பாங்கனு யோசிச்சு யோசிச்சு ஒரு ஒருத்தருக்கும் ஒரு ஒரு பதில் என்னால கொடுக்கமுடியாது.உங்களுக்கு ஒரு வேலை என்னை கூட்டிட்டு வரேன்னு சொல்றது கஷ்டமா இருந்தா ப்ளீஸ் விட்ருங்க… உங்கள பொறுத்தவரைக்கும் நான் ஆபீஸ் வரணும். எப்படி வந்தா உங்களுக்கு என்ன. அங்கிள் ஆண்ட்டி முன்னாடி காரிங்கா இருக்கறமாதிரி காட்டிக்கறது, பாக்றவங்க முன்னாடி ரொம்ப டீசென்ட் அண்ட் ரெஸ்பெக்ட்டா ட்ரீட் பண்றமாதிரி காட்டிக்கறது, தனியா பேசும்போது அப்டியே அது எல்லாத்துக்கும் நேர் எதிரா நடந்துக்கவேண்டியது. நீங்க சொல்றது ஒண்ணு, செய்றது ஒண்ணு..உங்கள மாதிரி ஒரு ஒரு இடத்துக்கு தகுந்த மாதிரி எனக்கு வராது, அதுக்கு அவசியமும் இல்லை.

நான் உங்ககிட்ட பேசவந்தது சிந்துக்காக, அவ நீங்க வந்தாதான் வரேன்னு சொல்றா. இல்லாட்டி அவ உங்ககிட்ட கேட்கக்கூட வேணாம்.அண்ணா ஒர்க் பாக்கட்டும்ன்னு இருக்கா. உங்க பிரச்சனைய குழந்தைங்க மேல போட்டு திணிக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன். அவ இத்தனை நாளுமே கோவில் பார்க்ன்னு எங்க கூப்பிட்டாலும் வந்ததில்லை. அவளுக்கு போகணும்னு ஆசை. ஆனா உங்களுக்கு வெளில யார்கூடவும் போறது பிடிக்காதோன்னு அவ எதையுமே பண்றதில்லை.”

ஆதர்ஷ் “நான் அவளை கண்ட்ரோல் பண்ணலையே…”

அக்சரா “நேரடியா பண்ணல. ஆனா வந்த மொத நாளே அவளுக்கு நீங்க சொன்ன விஷயம் மறந்திடுச்சா.. குழந்தைங்க ஓகே தான் ஆனா பெரியவங்க எல்லாம் நல்லா பேசுனாலும் ஏதாவது ப்ரோப்லேம் பண்ணிடுவாங்கன்னு நீங்க என்னை மனசுல வெச்சு தானே சொன்னிங்க. அப்புறம் எப்படி அவ என்னை நம்பி வருவா?”

அவன் அவளை பார்க்க அக்சராவோ தெடர்ந்து “உடனே ஒட்டுகேட்டியானு அதுக்கும் குதிக்காதிங்க. இங்க இரண்டு போர்சன் ரூம்ல பிரிச்சிருக்கே தவிர வராண்டா, வெளில தோட்டம், மேல இருக்கற ரூம், பின்னாடி இருக்கற இடம் எல்லாமே 2 பேமிலிக்குமே காமன் தான். அதுவாது ஞாபகம் இருக்கா? அன்னைக்கு நான் பின்னாடி வரும்போது உங்களோட இந்த போதனை காதுல விழுந்தது. அண்ட் ரொம்ப ரகசியம் மாதிரி நீங்க பேசல. அது உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன். அதனால இன்டென்சனோட வந்து ஒண்ணும் உங்க குடும்ப விஷயத்தை நான் கேட்கல. அவளுக்கு சொல்றதுக்கு முன்னாடி நீங்க மனுஷங்களை முதல சரியா எடை போடறீங்களான்னு யோசிச்சு பாருங்க.

வேலை, திறமை, படிப்புன்னு உங்களை அடுச்சுக்க ஆளே இல்லைதான்.ஆனா மனுசங்க, அவங்களோட உணர்வை புரிஞ்சுக்கறது, எமோஷன்ஸ் இதெல்லாம் மட்டும் உங்களுக்கு எப்போ தான் புரியப்போகுதோ… இப்டி வாழ்க்கைல எல்லாரையும் ஒதுக்கி ஒதுக்கி வெக்கணும்னா எப்படி? உங்க எண்ணத்தை அந்த சின்ன பொண்ணு மேல திணிக்காதீங்க.. ” என கூறிவிட்டு அவள் விருட்டென்று சென்றுவிட்டாள்.

ஆதர்ஷ் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான். அக்சரா இவ்ளோ கத்துவாள் என்று அவனும் நினைக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 12பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 12

உயிருக்கு ஆபத்து வரும் என்று எவனோ ஒரு சோதிடன் சொன்னதைக் கேட்டு, மருண்டு போனதாகவும், அந்த மருட்சியின் காரணமாகவே, என் கணவரைத் தன் புருஷராக்கிக் கொள்ளத் துணிந்ததாகவும், என் தங்கை என்னிடம் சொன்னது கேட்டு, நான் சிரித்தேன். சிரித்தேனே தவிர கொஞ்சம்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 01ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 01

வணக்கம் தோழமைகளே! கவிதைகள் மூலம் இதுநாள் வரை உங்களை மகிழ்வித்த ஹஷாஸ்ரீ இப்போது “மனதை மாற்றிவிட்டாய்” என்ற தொடர் கதை மூலம் உங்களைச் சந்திக்க வந்துள்ளார்.  படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். 1 – மனதை மாற்றிவிட்டாய்