Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 06

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 06

6 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

அன்று முழுவதுமே இருவரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் குறை கூறாமல் வேலை செய்தனர். ஆதர்ஷ் அக்சராவிற்கு தெரியாமல் அவளிடம் வம்பு செய்தவனை கண்டுபிடித்து புரட்டி எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டான். ஏன் அத்தனை கோபம் வேகம் என்ற கேள்விக்கு அவனுக்கு விடையில்லை. சிறிது வாரங்களில் ஊட்டியின் பிரத்தியேக மலர் கண்காட்சி நடக்கவிருப்பதால் அது குறித்து வேலைகளும் இருந்தது. அன்று மாலை ஜெயேந்திரனின் வீட்டிற்கு சென்று குழந்தையை கூட்டிக்கொண்டு வீடு திரும்ப அக்சரா சஞ்சீவிடம் பேசிக்கொண்டே வர அவனும் அவளுடன் இப்போதெல்லாம் நன்கு ஒட்டிக்கொள்ள ஆதர்ஷ்க்கு அதை தடுக்கும் எண்ணம் இல்லாமல் அவனே சில நேரங்களில் அவனறியாமலே ரசிக்கவும் தொடங்கிவிட்டான். இருப்பினும் அவன் வந்த பாதை அவனுக்கு நேர்ந்த அனுபவம் அக்சராவை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாமல் தடுத்தது. அவனும் அதற்காக பெரிதாக கவலை கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் பிரச்னையில்லை என ஒவ்வொன்றாக நெருங்கிகொண்டிருந்தான் மனதளவில்.

 

இரு தினங்களில் அக்சராவின் தோழி பிரியா வருவதாக கூறியிருக்க, ஆதர்ஷின் நண்பன் வாசுவும் வர இருப்பதாக திடீரென ஒரு நாள் முன்பே முடிவாக அன்று ஆபீஸில் அக்சரா பரபரப்பாக வேலை செய்துகொண்டிருக்க அவளிடம் வந்த விக்னேஷ் ” என்ன அக்சரா இன்னைக்கு என்ன இவளோ அவசரம்?”

“என் பிரண்ட் ஊர்ல இருந்து வரா… அதனால சீக்கிரம் முடிச்சிட்டு போலாம்னு தான்.”

“ஓ… ஆதர்ஷ் சார்கிட்ட பெர்மிசன் வாங்கிட்டியா? உனக்குன்னு சொல்லியும் அவரு பெர்மிஷன் குடுத்துட்டாரா?” என ஒரு மாறி கேட்க

இவளும் புருவம் சுருக்கி “புரியல… அதென்ன உனக்கு குடுத்துட்டாரான்னு அழுத்தமா ஒரு கேள்வி? நான்னா மட்டும் என்ன?” என அவள் தெளிவாக வினவ

விக்னேஷ் சிரித்துக்கொண்டே “என்ன அக்சரா தெரியாதமாதிரி கேக்கற? சார்க்கு உன்னை சுத்தமா பிடிக்காது. எதுனாலும் திட்டிகிட்டே குறை கண்டுபுடிச்சிட்டே தான் இருப்பாரு. அப்படியிருக்க நீ பெர்மிஷன் கேட்டா உடனே ஓகே சொல்லிடுவாருன்னு என்ன நிச்சயம். நீ பாட்டுக்கு பேக் பண்ணிட்டு கடைசில பெர்மிசன் கிடையாதுன்னு அவரு உன்னை ஏமாத்திடபோறாரு. உன் ட்ராவல் டைம் கூட ரொம்ப ஜாலியா இருந்திடக்கூடாதுனு தான் கூட கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வராரு. அதுலையே தெரியவேண்டாம்….ஒருவேளை கூட போகவே இலேன்னு பொய் சொல்லபோறியா?” என அவன் எதையோ எண்ணிக்கொண்டு கேட்க

 

அவள் மெலிதாக புன்னகைத்துக்கொண்டே “கண்டிப்பா சார் கூட தான் டெய்லியும் வரேன் போறேன். ஆனா நீ நினைக்கற மாதிரி ஒர்க்ல என்னை டார்ச்சர் பண்றதுக்குன்னு இல்லை. பொதுவா பண்ற வேலைல அவரு ரொம்ப கரெக்ட்டா இருக்கணும்னு எதிர்பாக்குறாரு. அது எப்படி தப்பாகும்? நான் அதுல இருந்து நெறைய கத்துக்கத்தான் வேணும். அதுவுமில்லாம நான் தப்பு பண்ணாதானே நான் பயப்படணும். இப்போ எனக்கென்ன பயம்? அதோட சார் இன்னைக்கு கண்டிப்பா எனக்கு பெர்மிசன் தருவாரு.” என அழுத்தமாக சொல்ல

“ஓ… என்ன பெட் வெச்சுக்கலாமா? அவரு உனக்கு பெர்மிஷன் தரமாட்டாரு. திட்டுதான் வாங்க போற.”

“கண்டிப்பா இல்லை. பெர்மிசன் வாங்கிட்டு வரேன். சார் இன்னைக்கு என்னை திட்டமாட்டாரு. நீதான் பெட்ல தோத்து போயிடுவ பாவம். நான் சொல்றத செய்றதுக்கு ரெடியா இருங்க மிஸ்டர்.விக்னேஷ்.” என அவள் உள்ளே சென்றுவிட்டாள்.

 

ஆதர்ஷிடம் வேலைகளை பற்றி அனைத்தும் கூறிவிட்டு பிரண்ட் வரா அழைக்க செல்லவேண்டுமென பெர்மிஷன் கேட்க அவனும் சரி என “தேங்க்ஸ் சார். எனக்கு தெரியும் நீங்க கண்டிப்பா இன்னைக்கு பெர்மிஷன் குடுத்துடுவீங்க எதுவும் சொல்லமாட்டீங்கன்னு..”

அவன் புருவம் உயர்த்தி “எப்படி?”

“அது சீக்ரெட்.. ” என கூறிக்கொண்டே வெளியேறி விட

இவனும் மெலிதாக சிரித்துக்கொண்டே வேலையை தொடர்ந்தான்.

வெளியே சென்று கூற அதோடு “இனிமேல் என்கிட்ட தேவையில்லாம வம்பு வெச்சுக்காதீங்க விக்னேஷ். உங்களுக்கு தான் நல்லதில்லை. பல்பா வாங்கணும்.பாவம். இதோட எத்தனையாவது தடவை.. சோ சேடு.”  என அவள் வருத்தம் தெரிவித்துக்கொண்டு அவனை வெறுப்பேற்றி விட்டு நகர விக்னேஷ் இதை கேட்டு கடுப்பாகி அக்சரா கிளம்பியதும் ஆதர்ஷிடம் வந்தவன் “சார் நீங்க இப்படின்னு நான் நினைக்கவேயில்லை சார். எப்படி சார் அவளுக்கு பெர்மிஷன் குடுக்கலாம்?” என கத்த

ஆதர்ஷ் கொதிநிலைக்கே சென்றுவிட்டான் “சட் அப் விக்னேஷ். என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல. சாதாரணமா ஒர்க்கர்ஸ் கூட பிரண்ட்லியா இருக்கலாம்ணு பேசுனா நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுவேன்னு நினைச்சிட்டு இருக்கியா? இங்க நீ MD ஆஹ் நான் MD ஆஹ்? என்கிட்ட  ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்க நினைச்ச நீ இங்க இருக்கணுமா?வேணுமான்னு நான் யோசிக்கவேண்டியது வரும் அண்ட் இனிமேல் அக்சராவை மரியாதை இல்லாம பேசுன நடக்கிறதே வேற. நாளைக்கு என்னை பத்தியும் அப்போ இப்படித்தான் பேசுவேல்ல?”

“ஐயோ சார், உங்கள போயி அப்படியெல்லாம்..”

“ஸ்டாப் இட். அப்போ அக்சரா பத்தி மட்டும் மரியாதை இல்லாம பேசலாமா? ஸீ என் கம்பெனில வேலை செஞ்சாலும் சகமனுஷங்களுக்கு மரியாதை குடுக்க கத்துக்கணும். உன்னால எனக்கு லட்சக்கணக்குல லாபம் வந்தாலும் உன் பழக்கவழக்கம் சரியில்லேன்னா தூக்கி வெளில வீசிட்டு போய்ட்டேயிருப்பேன். மைண்ட் இட்.” என ஆதர்ஷ் உறும விக்னேஷும் சில நிமிடம் ஆடிபோய்ட்டான்.

பின் சுதாரித்துக்கொண்ட விக்னேஷ் “சார் சாரி சார்.. நான் உங்கள கேள்வி கேக்கிறதுக்காக அப்டி கேட்கல சார். நீங்க ஒர்க்கர்ஸ்க்குன்னு எல்லாமே பாத்து பாத்து செய்யிரீங்க. ஆனா அவ உங்க பேரை என ஆதர்ஷ் முறைக்க சாரி சார் அவங்க உங்க பேரை கெடுத்துவிடற மாதிரி சொல்லிவெக்கறாங்க. அதனால தான் சார் ஒரு ஆதங்கத்துல கேட்டுட்டேன் என்றவன் “அக்சரா சொன்னாங்க சார், நீங்க தான் அவங்கள கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வறீங்களாம். அப்போவும் வேலை விஷயமா எதுவும் பேசுறதெல்லாம் இல்லை. உங்ககிட்ட அவங்களுக்கு பயமில்லை. எல்லாத்துக்கும் மேல நீங்க அவங்க என்ன சொன்னாலும் செய்விங்கனு சொல்லி கடைசியா இப்போ நான் சீக்கிரம் கிளம்ப பெர்மிஷன் வாங்க போறேன்.கண்டிப்பா என்னை எதுவும் சொல்லாம அனுப்பிச்சு வெச்சுடுவாருன்னு பெட் கட்டி சொல்லிட்டு போனாங்க. அதேமாதிரி நீங்க எதுவும் கேட்காம ஓகே சொல்லிட்டீங்கன்னு வேற சொல்லிக்காடிட்டு போறாங்க.. உங்க பேரு கெடாம பாத்துக்கோங்க சார். எல்லா பொண்ணுங்கள நான் குறையும் சொல்லல. அதோட எல்லா பொண்ணுங்களையும் ரொம்ப நல்லவங்கன்னும் சொல்லமுடியாதில்ல. உங்களுக்கு தெரியாதது இல்லை. பாத்துக்கோங்க சார். அண்ட் சாரி சார்.” என கூறிவிட்டு அவன் ஆழ்மன எண்ணத்தை மீண்டும் கிளறி விட்டு சென்றுவிட்டான்.

ஆதர்ஸ்க்கு இதை அப்டியே விடவும் மனமில்லை. அக்சரா வேலை விஷயத்தில் சரியாக இருக்கிறாள். பெரிதாக அவனிடம் நேராக வந்து எந்த ஒரு சலுகையும் எடுத்துக்கொள்ளவில்லை தான். ஒருவேளை அப்டி எடுத்துக்காம விலகி போயி வரவெக்கணும்னு நினைக்கிறாளா? பெட் கட்டிருக்கா…நாங்க பேசுனது வேற அவன்கிட்ட சொல்லிருக்கா. என்ன நினச்சு இதை பண்ணிருப்பா? விக்னேஷ்க்கு அக்சராவின் மேல் ஒரு கோபம் அது அவனுக்கு கிடைக்கவேண்டிய வேலை இவளுக்கு கிடைத்தது என்பதால் வந்தது. அதனால் அவன் அவ்வாறு இருக்கிறான். மத்தபடி மற்றவரிடம் பிரச்சனையோ வேலையில் குறைகள் என்பதுவோ அவனிடம் இல்லை. அதோட தன்னிடம் ஒன்றை கூறும்போது பொய்யாக கூறினால் கண்டிப்பா அவர்கள் கதை முடிந்தது என அவனுக்கு தெரியும். இன்னும் சொல்ல போனால் விக்னேஷ் நடந்தவற்றை அப்டியே சொல்லி அடுத்தவர்களை மாட்டிவிடும் ரகம், அவன் நல்லபெயர் எடுத்துக்கொள்ள பார்க்கும் குணம். அதனால் அவன் சும்மா சொல்வதற்கும் இல்லை. இதை மொதல்ல அக்சராகிட்ட கேட்கணும். அவ எதுக்கு என்கிட்டேயே போகும்போது இன்னைக்கு எனக்கு நீங்க பெர்மிஷன் குடுத்துடுவீங்கன்னு தெரியும்னு சொல்லிட்டு போனா? என குழப்பத்துடன் அவனும் சென்றுவிட்டான்.

 

விக்னேஷ்க்கு இரு நாட்களாக கோபம், குழப்பம். அவனும் தான் அக்சரா ஆதர்ஸை பார்த்துக்கொண்டிருக்கிறானே. இருவரும் ஒற்றுமையாக வேலை செய்ய இவனுக்கு தான் அக்சராவை எப்படி மாட்டிவிடுவது என யோசித்துக்கொண்டே இருக்க இறுதியில் இன்று கிடைத்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என முடிவெடுத்துக்கொண்டான். அவளை குத்திக்காட்டி குழப்பிவிட பார்க்க, இருந்தும் அவள் இத்தனை அழுத்தமாக நம்பிக்கையுடன் சொல்வதை பார்க்க அவனுக்கு எரிச்சலாக வந்தது. அதனாலே ஆதர்ஷிடம் அவ்வாறு கூறினான். அவன் நடந்தவற்றை அப்டியே கூறவில்லை. அதோடு பொய்யும் கூறவில்லை. அவள் கூறியதை மட்டும் பெரிதுபடுத்தி கூற அது அவளை தவறாக எண்ணும் வகையில் அமைந்தது.

 

பிரியாவை வீட்டிற்கு அழைத்துவந்தபின் சிறிது நேரம் அக்சராவும்,ப்ரியாவும் பேசிக்கொண்டிருக்க நடந்தவை அனைத்தும் கேட்ட பிரியா “இருந்தாலும் ரொம்ப டூ மச் டி. உனக்கு அன்னைக்கு பிளான் இருக்குனு தெரிஞ்சும் வேலை குடுத்து உக்காரவெச்சு அந்த பொறுக்கிட்ட இருந்து பிரச்னை பண்ணி வந்திருக்க வேண்டியதா போச்சு. எல்லாம் அவனால தான். அவனுக்கு என்னை பெரிய கொம்பன்னு நினைப்பா?” என பொரிய

அக்சரா “ஹே…என்ன டி அவன் இவன்ட்டு. விடு அவரேதோ நினைச்சுட்டு குழப்பிக்கறாருனு நினைக்கிறேன். மத்தபடி கேரக்டர் எல்லாம் குறையே சொல்லமுடியாது. என்ன கோபம், அதோட அவர் பிடிச்சதே பிடிவாதம்னு நிக்கவேண்டியது. அத சரியான விதத்துல சொல்லிட்டா போதும் புரிஞ்சுப்பாரு. ”

ப்ரியா “அது சரி, என்னமா அவர பத்தி இவ்ளோ அனாலிசிஸ் பண்ணிட்டு இருக்க. என்ன குடும்பமா நடத்தப்போற?” என அக்சரா முறைக்க பிரியா “பின்ன என்ன டி, இந்த விக்னேஷ் பையனெல்லாம் உன்னை கலாய்க்கற அளவுக்கு வெச்சுயிருக்கறது உங்க பாஸ் தானே. அதுக்கு நான் கத்துக்கிட்டு இருக்கேன். இவ என்னடான்னா அவருக்கு செர்டிபிகேட் குடுத்திட்டு இருக்கா. நீ என்னவேணாலும் சொல்லு நேர்ல பாத்தா சும்மா லெஃப்ட் அண்ட் ரைட் வாங்காம விடமாட்டேன்.” என்க

அக்சராவோ “எனக்கென்னவோ நான் அவரை கேள்வி கேக்கற அளவுக்கு கூட நீ கேக்கமாட்டேன்னு தோணுது. நீ எல்லாம் இங்க பேசத்தான் டி. உங்க எல்லாரையும் அவரு ஈஸியா சமாளிச்சுடுவாரு.” என பிரியா யோசிப்பது போல பாவனை செய்துவிட்டு “அப்போ சரி, நீ நேர்ல என் போர்ஸ பார்ப்ப. இப்போ போயி எனக்கு சாப்பிட ஏதாவது ரெடி பண்ணு.” என அவளை உள்ளே அனுப்பிவைக்க அனிஷ், ரானேஷ் அனைவரும் வர பேசிக்கொண்டே விளையாடிக்கொண்டிருந்தனர்.

வெளியே தண்ணீர் தெளித்து குழந்தைகளுடன் பிரியா விளையாடிக்கொண்டிருக்க அங்கே வந்த வாசு மீதும் கவனிக்காமல் தண்ணீரை வாரி இறைத்துவிட்டாள். வாசு சஞ்சீவிற்கு என பெரிய நாய் பொம்மை வாங்கி வர அவை முழுவதும் நனைந்து விட கோபம் கொண்ட வாசு “ஹே, இடியட் அறிவில்லை? இப்டி தான் தண்ணிய இறைப்பியா? ஆள் வரது கூட கண்ணுக்கு தெரில?”

முதலில் தெரியாமல் செய்ததால் மன்னிப்பு கேட்க வாயெடுத்தவள் அவன் திட்டவும் கோபம் வர இவளும் விட்டுக்கொடுக்காமல் “ஏன் எனக்கு கண்ணு தெரிலேன்னா என்ன? உங்களுக்கு நல்லா தெரியும்ல பாத்து வரவேண்டியதுதானே? இல்லை ஓரமா போலாம்ல? எண்ணமோ  இவரு தான் அறிவ முழுசா ஆர்டர் எடுத்தவர் மாதிரி பேச வந்துட்டாரு.”

“தண்ணிய இப்டி வேஸ்ட் பண்றியே? கொஞ்சமாவது ஒரு பொறுப்பு இருக்கா?”

“அடாடா…ரொம்ப தான் அக்கறை… நல்லா கேட்டுக்கோங்க.. இங்க சுத்தியும் கார்டன் தான் நாங்க மேல ஊத்திக்கிட்டு விளையாண்டாலும் தண்ணி இதுக்கு தான் போகும். அதுவும் குடிக்கற தண்ணி எதுவும் நாங்க யூஸ் பண்ணல. இங்க ஏரி, பால்ஸ்லனு இருக்கற தண்ணி தான் இதுக்கு எல்லாம்.. உங்கள மாதிரி சிட்டில அழகுக்கு ஸ்விம்மிங் பூல், ஸ்டார் ஹோட்டல்ல டெகரேட் பண்றதுக்குனு பால்ஸ் மாதிரி மாடல் பண்ணி இன்னும் நெறைய வகைல  யாருக்குமே யூஸ் இல்லாம தண்ணிய வேஸ்ட்டாக்கல. அங்க  எல்லாம் போயி உங்க பொறுப்ப காட்டிறீங்களா?”

 

“என்ன திமிரா? தப்பு பண்ணிட்டோம் மன்னிப்பு கேட்கணும்னு ஒரு மேன்னேர்ஸ் கூட இல்லை? இதுதான் சொல்லிக்கொடுத்தாங்களா?”

 

“உங்களுக்கு எப்படி? பாக்கிற பொண்ணுகிட்ட இப்படித்தான் மரியாதை இல்லாம  பேசணும்னு சொல்லிக்கொடுத்தாங்களா? உங்க இஷ்டத்துக்கு திட்றதுக்கு பேசாம வாங்கிட்டு போக நான் என்னை உங்க வேலைக்காரியா?”

 

“ச்சா.. குழந்தைக்காக வாங்குன நாய் பொம்மை இப்டி ஆயிடிச்சு… கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி இருக்கா? என்ன ஜென்மமோ? ”

“நான் மனுஷ ஜென்மம் தான்.. ஒன்னும் கவலை படாதீங்க. அதுதானே நினைஞ்சது..அந்த நாய் பொம்மையை தூக்கிப்போட்டுட்டு நீங்க அந்த இடத்துல இருங்க ரொம்ப பொருத்தமா இருக்கும். ”

“ஏய், என்னவா நாய்னு சொல்றா? உன்னை..”

“பாத்தியா? சொன்னதும் கத்தி ப்ரூவ் பண்றத?” என கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

வாசுவும் கோபமாக ஆதர்ஷின் வீட்டினுள் சென்றுவிட்டான்.

அக்சராவிடம் வந்த பிரியா “டி அக்ஸா நீ சொன்னதவிடவே அவன் ரொம்ப திமிரு பிடிச்சவனா இருக்கான்.” என அவள் ஆதர்ஷ் தான் வந்தவன் என அவளிடம் இஷ்டத்திற்கு கத்த அவளை முதலில் அமைதியாக்கிவிட்டு நடந்தவற்றை அக்சரா முழுமையாக விசாரித்தாள்.

அதன் பின் “கண்டிப்பா அவரு ஆதர்ஷ் இல்லை.வேற யாராவதா இருக்கும்” என்றாள் அக்சரா.

பிரியா “இல்லடி ஆள் வயசு எல்லாம் பாக்க நீ சொன்னமாதிரி தான் இருந்தான். அந்த வீட்டுக்கு தான் போனான். அங்க வேற யாரு ஜென்ட்ஸ் இருக்கப்போறாங்க?”

அக்சரா “அவரோட பிரண்ட் ஒருத்தர் வரதா சிந்து சொன்னா. ஒருவேளை அவராதான் இருக்கும்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 40ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 40

40 – மனதை மாற்றிவிட்டாய் மகா இதயத்தை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட அவளிடம் வந்த மதி “மகா சொன்னா கேளுமா. உனக்கு நெஞ்சு வலி வேற இருக்கு. ” என அவரை அடக்க “இல்ல அண்ணி, என்னால முடியல. எப்படி இருந்த

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 05யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 05

கனவு – 05   ஒலித்துக் கொண்டிருந்த தொலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. ஒரு தடவை முழுதாக ஒலித்து ஓய்ந்ததன் பின்னர் குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் கேட்கவும் எடுத்துப் பார்த்தாள். சஞ்சயன் தான்.   “முரளியின் நம்பரை அனுப்பு”   என்று