Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 05

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 05

5 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

அடுத்து வந்த தினங்களில் அக்சரா, ஆதர்ஷின் சண்டை, ஒருவர் மற்றவரை வீழ்த்த எண்ணி செய்வது, குறை கூறி விளையாடுவது என அது அனைத்தும் ஒரு போட்டியாகவே சென்றது. இருந்தும் இருவரும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். அவளிடம் அவன் குறை கூறுவது, வாய்ப்பு கிடைத்தால் அவனுக்கு இவள் பதிலடி தருவது என இருந்தது. இருப்பினும் இருவரும் குழந்தைகளிடம் எதுவும் பாரபட்சம் காட்டாமல் இருக்க அவர்களும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

அக்சரா அன்று காலையில் அனிஷ், ரானேஷிடம் பரிட்சை முடிந்ததால் மாலையில் பார்க் அழைத்து செல்கிறேன் என கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாள். இதை கேட்ட ஆதர்ஷ் பாக்கறேன் இன்னைக்கு நீ எப்படி சாயந்தரம் வரேன்னு என மனதினுள் கூறிக்கொண்டு அவளுக்கு காலையில் இருந்து அதிகம் வேலை தராமல் மாலை கிளம்பும் நேரத்திற்கு சற்று முன்பாக “இது எமெர்ஜெண்சி இந்த டீடைல்ஸ் எல்லாம் செக் பண்ணி ரிப்போர்ட்ஸ் ரெடி பண்ணிடு. நைட் வீட்டுக்கு எடுத்துட்டு வந்து கொடுத்திடு. நாளைக்கு ஜெயேந்திரன் அப்பாகிட்ட ஒன்ஸ் செக் பண்ணிட்டு சைன் வாங்கணும், எனக்கு இப்போ கொஞ்சம் அர்ஜென்ட் ஒர்க் இருக்கு. வெளில போறேன். நீ ஒர்க் கம்ப்ளீட் பண்ணிடு” என அவன் சென்றுவிட்டான்.

இவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அந்த வேலை எல்லாமே முடிச்சிட்டு போனா எப்படியும் 7க்கு மேல ஆகுமே. எப்படி அவனுங்கள வெளில கூட்டிட்டு போறது. காலைலயே அவ்ளோ சொல்லி அனுப்சானே அனிஷ். இப்போ முடியாதுனு சொன்னா அவ்ளோதான்.. ஆனாலும் கால் பண்ணி வரமுடியாது என்று மட்டும் கூற அவன் நீ பேசாத என்று போனை வைத்துவிட்டான். இவளுக்குமே சங்கடமாக போய்விட்டது. பசங்க பாவம் எக்ஸாம் இது அதுனு சொல்லித்தான் இவ்ளோ நாள் வெளில கூட்டிட்டு போகமுடில. இன்னைக்கு வேற இப்டி ஆயிடிச்சு. எல்லாமே இவரால தான். ஆதர்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்…… இவர என்னதான் பண்ரது? என திட்டிக்கொண்டே வேலையை செய்ய துவங்கினாள். மூர்த்தியின் வண்டி வேறு பிரச்சனை செய்ய வண்டியை சர்வீஸ்க்கு கொடுத்துவிட அவராலும் வரமுடியாமல் போகவே இவள் மட்டும் தனியாக நடந்தே சென்றுவிட்டாள். பகல் வெளிச்சம் என்றால் பெரிதாக தெரியாது. இரவு நேரம் வேறு, அவளுமே கொஞ்சம் தயக்கத்துடனே வீடு வந்து சேர்ந்தாள். குட்டிஸ்களின் குரல் ஆதர்ஷின் வீட்டில் இருந்து கேட்க இவளும் சென்று சற்று உடை மாற்றிக்கொண்டு பிரெஸுப் ஆகி வந்தாள். அதற்குள் அனைவரும் வெளியே வர அக்சரா “டேய், கண்ணா சாரிடா. நான் வேணும்னு பண்ணல. வேலைடா. என்மேல கோபமா? கண்டிப்பா நாளைக்கு கூட்டிட்டு போறேன். ” எனவும்

அனிஷ் “ஒண்ணும் வேண்டாம். நீ தான் ஏமாத்திட்ட… சொன்னா சொன்ன மாதிரி இருக்கறதில்லை. ஆனா ஆதர்ஷ் அங்கிள் வந்ததும் எங்ககிட்ட என்ன விஷயம் கேட்டுட்டு உடனே எங்க எல்லாரையுமே பார்க் கூட்டிட்டு போய்ட்டாரு தெரியுமா? உன்கிட்ட அப்பாய்ண்ட்மென்ட் வாங்குறதே பெரிய வேலையா இருக்கு. அங்கிள் ரொம்ப ஸ்வீட். கேட்டதும் செஞ்சிட்டாரு…நீ முன்னமாதிரி இல்லை. எங்களை கண்டுக்கமாட்டேன்கிற..” என அவன் பொரிய

ரானேஷ் “ஆமா, யூ சீட்டெர், பேட் கேர்ள் போ..” என அவர்கள் ஓடிவிட பின்னால் ஆதர்ஷ் மெலிதாக சிரித்துக்கொண்டிருக்க இவளுக்கு புரிந்துவிட்டது “பிராடு, என்னை மாட்டிவிடறதுக்குனே இப்டி பண்ணிட்டு என் தம்பிங்ககிட்ட இருந்து என்னவே திட்டுவாங்க வெச்சுட்டியா?” என்றவள் அவனை முறைத்துக்கொண்டே அவனிடம் நேரடியாக சென்று “வேணும்னே தானே பண்ணீங்க?” என்றதும் அவனும் சளைக்காமல் “அப்படியெதுவும் எனக்கு தெரில..நாம ஒரு விஷயத்துல பொறுப்பை எடுத்துக்கிட்டா, ஒருத்தர்கிட்ட ஒரு வாக்கு குடுத்தா என்ன பிரச்னை வந்தாலும் பின்வாங்கக்கூடாதில்லை. ஏன் நீ இன்னைக்கு இந்த மாதிரி வெளில போகற பிளான் இருக்கு. சோ நான் வீட்டுக்கு போயிட்டு மோர்னிங் சீக்கிரம் வந்து பன்றேன்னு சொல்லிருக்கலாம்… நீ ஏன் பண்ணல? உனக்கு ஈகோ.. எங்க என்கிட்ட வேலை இப்போ செய்யமாட்டேன்னு சொன்னா அது நீ கிவ் அப் பண்ண மாதிரி ஆய்டும், என்கிட்ட ஒரு ஹெல்ப்புனு கேட்டமாதிரி ஆகிடும்னு நீ சொல்லாமலே இருந்தா நான் என்ன பண்ணமுடியும்.?” என அவன் கூற

இவளுக்கும் அதை உண்மைதான் என பட்டதால் எதுவும் கூறாமல் அமைதிகாத்தாள். இருப்பினும் குழந்தைகள் நினைத்து அவள் யோசிக்க அவனோ “என்ன மேடம், எப்போவுமே பதில் டான் டான்னு வரும். இன்னைக்கு என்னாச்சு. நீ இன்னைக்கு போட்ட பிளான் பிளாப் ஆயிடிச்சு. உன் தம்பிங்களே உன்கிட்ட கோவிச்சுக்கிட்டு போய்ட்டாங்க. வேணும்னா என்கிட்ட சொல்லு. நானே அவனுங்ககிட்ட பேசி நான்தான் ஒர்க் குடுத்தேன். பாவம் அவ பேசிடுங்கன்னு சொல்லி ரெகமண்ட் பண்றேன். இல்லாட்டி அவனுங்க ரொம்ப கோவமா இருக்காங்க.பேசமாட்டாங்க.” என அவளை சீண்ட

அவளோ “போதும், அவனுங்கள எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும். அவங்க என்கிட்ட சண்டைபோட்டதால மத்தவங்க எங்களுக்குள்ள வரணும்னு இல்லை. அவனுங்க என்னை புரிஞ்சுப்பானுங்க. எனக்கு தெரியும் என் குழந்தைங்களுக்கு என் மேல அந்த அளவுக்கு பாசம் இருக்கு” என அவள் சிலிப்பிக்கொண்டு சென்ற விதத்தில் இவனுக்கு சிரிப்பும் வந்தது. அதோடு அவ்ளோ நம்பிக்கையா? என்ன பண்ரான்னு பாக்கறேன். பெருசா என்ன பண்ணுவா? ஒண்ணு மிரட்டி உருட்டி இந்த விஷயத்தை பெருசாக்க மாட்டா. நாளைக்கு குழந்தைங்களே பேசிடும். இல்லை ஏதாவது லஞ்சமா இத வாங்கித்தரேன், அத செஞ்சுதரேன்னு சொல்லி குழந்தைங்க மனச டைவர்ட் பண்ணித்தானே காரியம் சாதிக்க முடியும். அதைத்தானே எல்லாருமே பண்ராங்க. இவளும் அப்டித்தான் பண்ணப்போறா. என மனதில் யோசித்தாலும் அவளை கவனித்தான்.

அனிஷ், ரானேஷ் செல்லும் இடங்களுக்கு பின்னாடியே சென்று சாரி சொல்லிக்கொண்டே இருந்தாள். பின் அவர்கள் வெளியே வந்து அந்த கார்டெனில் இருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்துகொண்டு முகத்தை தூக்கிவைத்துக்கொள்ள இவளும் அவர்களுக்கு முன் மண்டியிட்டு “டேய் கண்ணா இரண்டுபேரும் பேசுங்கடா. நான் கூட்டிட்டு போகக்கூடாதுனு நினைக்கல. உண்மையாவே வேலை. எனக்கும் உங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசை இருக்காதா? நான் உங்க இரண்டுபேர்கிட்டேயும் அப்டி நடந்துப்பேனா? சொல்லுங்க. நான் பண்ணது தப்பு தான். அதுக்கு தான் சாரி சொல்றேன். வேற பனிஷ்மென்ட்னாலும் சொல்லுங்க. ஆனா இரண்டுபேரும் பேசாம இருக்காதீங்கடா. ப்ளீஸ். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என அவள் முகத்தை தொங்கபோட்டுக்கொள்ள குட்டிஸ்களுக்கு பாவமாக போய்விட்டது. ரானேஷ் உடனே “அண்ணா, அக்ஸா பீல் பண்ரா .. ” எனவும் அனிஷ் “அக்ஸா விடு. நாம இன்னொரு நாள் சேந்து போய்க்கலாம். எங்களுக்கு உன் மேல கோபம் இல்லை. சும்மா வம்பிழுக்க தான் பேசமாட்டோம்னு சொன்னோம். எங்களை பாரு அக்ஷா என அவளை உலுக்க அவளும் நிமிர்ந்து பார்த்துவிட்டு “உண்மையாவே என்கிட்ட பேசுவீங்க தானே? கோபம் போயிடிச்சா?”

“அதெல்லாம் போயிடிச்சு.. கோபமே இல்ல. பசிதான் வந்திடுச்சு. எங்களுக்கு சீக்கிரம் டிபன் ரெடி பண்ணு. போ” என அனிஷ் கூற அவள் சிரிக்க

“அக்ஸா எங்களுக்கு இன்னைக்கு நீயே ஊட்டிவிடரையா?” என அவளும் கண்டிப்பாடா தங்கம் என்றதும்

இருவரும் அவளை கட்டிக்கொண்டு “லவ் யூ அக்ஸா” என்றனர்.

“லவ் யூ டூ டா செல்லம்ஸ்.” என இவளும் கட்டிக்கொள்ள இதை பார்த்துக்கொண்டிருந்த ஆதர்ஷ்க்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. குட்டிஸ் இருவரும் “நாங்க சிந்து அக்கா சஞ்சீவ் குட்டிகூட விளையாடிட்டு இருக்கோம். ” என ஓடி சென்றதும் ஆதர்ஷ் அக்சராவிடம் வந்தான். அவளையே பார்த்துக்கொண்டிருக்க “என்ன MD சார், அப்டி பாக்கறீங்க?” எனவும் அவன் இவள் எப்படி குழந்தைகளை சமாளிப்பாள் என தான் மனதில் எண்ணியதை சொன்னான். ஆனா நீ எப்படி வேற எதுவும் பேசாம அந்த விஷயத்தை பத்தி மட்டுமே பேசி அவங்கள சரி பண்ண? அதுவும் அவ்னுங்ககிட்ட அவ்ளோ சீரியஸா மன்னிப்பு கேட்பேன்னு எதிர்பார்க்கல?” என அவன்  கேட்கவும் அவள் மெலிதாக புன்னகைத்துக்கொண்டே கூறினாள்.

“எதுக்கு வேற விஷயம் பேசி டாபிக் சேன்ஜ் பண்ணி மனச மாத்தி ஒரு விஷயத்தை சாதிக்கணும். சரி அப்டி பண்ணா அது அந்த நேரத்துக்கு நான் தப்பிக்க பண்ற ஒரு வழி தானே. எனக்கு அவனுங்க மேல எவ்ளோ பாசம்னு அவங்களுக்கே தெரியும். நடந்த விஷயத்தை என்னோட இடத்துல இருந்து சொல்லி விளக்கம் கொடுத்துட்டேன். சொன்னதை செய்யமுடியாம போனதுக்கு மன்னிப்பு கேட்டேன். நாம மத்தவங்களுக்கு ஒரு நம்பிக்கை குடுக்கறோம். அத காப்பாத்த முடிலேன்னா அது எதிர்பார்த்த அவங்களுக்கு எவ்ளோ ஏமாற்றம். அதுக்கு தான் அந்த சாரி. பொதுவா இந்த மாதிரி பிரச்சனை வரதுல கூட்டிட்டு போறேன் போகலேங்கிற விஷயம் ப்ரோப்லேம் இருக்காது. அவங்க நம்ம லைப்ல எவ்ளோ முக்கியம்னு புரிலேன்னு வருத்தம் தான் இருக்கும். அத புரியவெச்சுட்டா போதும்.பிரச்சனை சால்வ்டு.”

“இருந்தாலும் அந்த அளவுக்கு குட்டி பசங்ககிட்ட மன்னிப்பு கேக்கற அளவுக்கு.?”

“சோ வாட்?…சின்னவங்களோ? பெரியவங்களோ? பீலிங்ஸ் உணர்ச்சிகள் எல்லாருக்குமே இருக்கும் தானே… நிறையா தெரிஞ்ச, சூழ்நிலைகள்  இப்டி இருக்கும்னு புரிஞ்சுக்கற நிலைமைல இருக்கற பெரியவங்களே அந்த மாதிரி பாசத்தை எதிர்பார்க்கும் போது சின்ன பசங்களுக்கு நாம சொல்லாம எந்த அளவுக்கு புரியும் சொல்லுங்க.”

அவனுக்கு அதை குறை கூறவும் முடியவில்லை. கிண்டல் செய்து சிரிக்கவும் தோணவில்லை. அவனுக்கே ஏதோ ஒன்று பெரியவரோ சின்னவரோ மற்றவரின் சிறு உணர்ச்சிக்கு கூட இவளால் இத்தனை மதிப்பு தர இயலுமா? என அமைதியாகிவிட்டான். அவளும் சென்று உணவினை தயார் செய்து வெளியே வராண்டாவில் அமர்ந்து குழந்தைகளுக்கு ஊட்டிவிட சஞ்சீவையும் மடியில் வைத்துக்கொண்டு ஊட்டிவிட சிந்துவை உடன் அழைத்து உட்கார வைத்துக்கொண்டு அவர்கள் அனைவரும் பேசி சிரிக்க இவனுக்கு தானும் அவர்களுடன் இருக்கவேண்டுமென தோன்ற இருப்பினும் இல்லை இது சரியில்லை. இனி ஒரு பொண்ண முழுசா நம்புறது எல்லாம் சரிவராது. ஏதோ உணர்ச்சிக்கு மதிப்பு குடுத்தா நல்லவங்களாகிடுவாங்களா? அதை மத்தவங்களும் தான் பண்றாங்க. ஏன் அம்மா, அண்ணி எல்லாரும் கூட அப்படித்தானே எல்லாமே மத்தவங்களுக்காக யோசிப்பாங்க என தனக்குள் யோசித்துக்கொண்டே வந்தவனுக்கு அவர்களை பற்றி நினைத்ததும் வருத்தத்தோடு கோபமும் வர அந்த இடத்தை விட்டே அகன்றுவிட்டான். இருப்பினும் அக்சராவின் குரல் சிரிப்பு அவள் குழந்தைகளோடு குழந்தையாக பேசி சிரிப்பதை பார்த்தவனுக்கு ஏனோ அந்த நிமிடம் வேறேதும் தோன்றவில்லை. எல்லாரும் எவ்ளோ சந்தோசமா இருக்காங்க. என்னால ஏன் அவங்ககூட இதுல கலந்துக்க முடில என எண்ணியவனுக்கு கிடைத்த ஒரே விடை பெருமூச்சு மட்டுமே.

பின்பு எழுந்து அனைவரும் சென்றுவிட மூர்த்தியும், மகாவும் வந்தனர். “என்ன ஆதர்ஷ் தம்பி, சாப்பிட்டீங்களா? குழந்தைங்க என்ன பண்ராங்க?” என வினவ அவனும் பதில் கூற மகா அக்சராவை அழைக்க அவளும் “என்னக்கா, குமார அவங்க பாட்டி வீட்டுக்கு அனுப்பிச்சாச்சு. அவன் இந்த பக்கம் வராட்டி நீங்க வரமாட்டீங்க போல. என்னை கண்டுக்கவேயில்லேல? ” என செல்லமாக கோபிக்க மகாவும் “ஆமா கண்டுக்காம தான் அங்க ஒரு பொறுக்கி உளறனத கேட்டு பதறி போயி உன்னை பாக்க வந்தனாக்கும்.” என கேட்டதும் அக்சரா தயங்க ஆதர்ஷ் புரியாமல் முழிக்க மூர்த்தி “ஏன் மா நீ எப்போ வந்த..ஏன் லேட்.. நான் தான் என்னால வர முன்னாடியே சொன்னேனே ? அந்த பொறுக்கி பையன் உன்கிட்ட பிரச்சனை பண்ணானா?” என்று இருவரும் பொரிய

அக்சரா “அட்ச்சோ, அதெல்லாம் எதுவுமில்லை. எனக்கு கொஞ்சம் ஆபீஸ்ல வேலை அதனால தான் லேட்.. நடந்து வரும் போது எல்லாரும் அந்த பக்கம் சும்மா ட்ரின்க் பண்ணிட்டு வந்திட்டு இருந்தானுங்க. கொஞ்சம் பேர் என் பேரை சொல்லி கத்தி கிண்டல் பண்ணிட்டு இருந்தானுங்க. நானே திட்டிட்டு வந்துட்டேன். ” எனவும் ஆதர்ஷ் “என்னாச்சு என்ன பிரச்னை?” எனவும் மூர்த்தி ” இல்லை தம்பி நான் மதியமே கூப்பிட்டு சொல்லிட்டேன். வண்டி பிரச்சனைமா. சர்வீஸ் குடுத்திருக்கு. நீ சீக்கிரம் கிளம்பிக்கோ. இல்லை ஆதர்ஷ் தம்பிகூடவே கிளம்பிடுன்னு. சரினு சொல்லிட்டு இப்போ வேலை லேட்னு சொல்லுது. சரி அதாவது முன்னாடியே சொல்லிருந்தா வேற வண்டி சொல்லிருக்கலாம்ல.. தனியா வந்து எதுக்கு நமக்கு வம்பு சொல்லுங்க?” என இன்னும் அவன் தெளியாமல் “யாரு அவகிட்ட பிரச்சனை பண்றது?”

மகா “அது அந்த ஏரியால இருக்கற ஒரு பொறுக்கி தம்பி அவன் அவங்க கூட்டாளிங்களோட சேந்துக்கிட்டு இருட்டுற நேரமாச்சுன்னா தண்ணிய போட்டுட்டு அந்த எஸ்டேட் தாண்டி இருக்கற காடு பக்கத்துல தான் சுத்துவானுங்க. அக்சரா இங்க வந்த ஒரு 6 7 மாசத்துல அவனுங்க தண்ணிய போட்டுட்டு கலாட்டா பண்ணிருக்கானுங்க. இவளுக்கு கோபம் வந்து அடிச்சுட்டா. அன்னைக்கு தண்ணில இருந்ததாளையோ என்னவோ கொஞ்சம் தள்ளாடி அவனும் விட்டுட்டான். ஆனா அதுக்கப்புறம் அவகிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருக்க அப்புறம் நம்ம ஜெயேந்திரன் அய்யாகிட்ட சொல்லி போலீஸ்ல எல்லாம் சொல்ல சொல்லி அவன் மிரட்டி அனுப்பிச்சிருக்கு. இருந்தாலும் அவன் இவ தனியா வந்தா ஏதாவது வம்பிழுக்க பிரச்சனை பண்ணேன்னு  தான் இருப்பான். அதனால தான் தனியா அவளை அந்த வழில அனுப்ப முதலாளி அய்யாவும் அம்மாவும் கூட ரொம்ப யோசிப்பாங்க. அவன் இப்போவும் தண்ணில தான் சுத்திக்கிட்டே இன்னைக்கு நீ அவனை பாக்கத்தான் தனியா வந்தேன்னு சொல்லி பினாத்திக்கிட்டு இருந்திருக்கான். பக்கத்து தெரு அக்கா  வந்து சொல்லிட்டு போனாங்க. அதனால தான் ஏதாவது பிரச்னையோன்னு பதறிப்போயி வந்தேன்.” என அவள் கூறிமுடித்து அக்சராவிற்கு தனியாக அந்த வழில வந்ததற்கு அர்ச்சனை நடந்துகொண்டிருக்க ஆதரஷ்கோ மனம் ஒருநிலையில் இல்லை.

அவர்கள் பேசிவிட்டு கிளம்பிச்சென்றபின் அக்சராவிடம் சென்றவன் “ஏன் என்கிட்ட இதெல்லாம் சொல்லல. ?”

“எதை?”

“மூர்த்தி அண்ணா வரமாட்டாங்க, தனியா தான் போகணும்னு.”

“அது சரி….. இப்டி காரணம் சொல்லி வேலை செய்யாம தப்பிக்க பாக்கிறியான்னு என்னை ஒரு வழி பண்ணிருக்கமாடீங்க?.. ” என அவள் சிரிப்புடன் சொல்ல,

ஆதர்ஷ் “ஸீ.. அது நமக்குள்ள …” என ஆரம்பித்து அதை அப்டியே நிறுத்திவிட்டு “ஓகே பைன்… யாரவன் உன்கிட்ட வம்பு பண்றது? இன்னைக்கு என்ன நடந்தது… ஏன் என்கிட்ட அவனை பத்தி முன்னாடியே சொல்லல?” என அவன் கேள்விகளை கேட்டு முதலில் அக்சரா விழித்தாலும் அடுத்த நொடியே

“சொல்லிட்டு அப்புறம், சார்கிட்ட யாரு வாங்கிக்கட்டறது?

‘ஏன் பொண்ணுங்க கொஞ்சம் கூட தையிரமா இருக்கக்கூடாதா? அவங்களுக்கு வர பிரச்சனைய முடிஞ்சளவுக்கு கூட சமாளிக்கக்கூடாதா? இந்த மாதிரி சில்லி ரீசன்ஸ் சொல்லி எல்லாத்துலையும் ஒரு ஸ்பெஷல் பிளேஸ், சிம்பதிய உருவாக்கிக்கவேண்டியது…. பொண்ணுங்க சாதிக்கக்கூடாதா? நாங்க பெரிய பொஸிசன்ல இருக்கவிடமாட்டீங்களா, எங்களுக்கு சம உரிமை வேணும்னு பெமினிசம் பேச தெரியுது… அதே நேரம் உங்களுக்கு எல்லாமே மத்தவங்க தான் பண்ணனும்னு நினைக்கிறது… பொண்ணுங்க மனசளவுல ரொம்ப ஸ்ட்ரோங் பசங்கள விட… ஆனா அத நீங்கதான் புரிஞ்சுக்காம உங்கள குறைச்சு இடைபோடுகிறீங்க…மொதல்ல உங்களுக்கு வர நல்லதா கெட்டதுக்கான பொறுப்பை நீங்க மனசார எடுத்துக்கோங்க,அத சமாளிக்கற திறமையை வளத்திக்கோங்க.. தானாவே உங்களுக்கான மரியாதை, இடம் எல்லாமே தேடி வரும். …’. அப்டின்னு ஒரு கிளாஸே எடுத்திருப்பிங்க…..அதேமாதிரி என்னால முடியாதுனு சொன்ன மாதிரி என்னை மட்டம் தட்டிருப்பிங்க…தானா வந்து மாட்டுவேன்னு நினைச்சீங்களா? நெவெர் பாஸ்…” என அவள் சிரிக்க

 

அவனுக்கோ அவள் கூறிய அனைத்தும் உண்மையே… தன்னிடம் அவள் இப்படி ஒரு காரணம் சொல்லி கேட்டுயிருந்தா நான் அப்படி தான் சொல்லிருப்பேன்…. இப்போ அவ சமாளிச்சிட்டு வந்துட்டா தானே..அப்புறம் ஏன் என் மனசு இப்டி இருக்கு. என்றவன் அவளே அதை சாதாரணமா எடுத்துக்கிட்டா. விடு என்றாலும் அவன் மனம் கேட்காமல் ஏதோ ஒரு கோபம், அவள் மீதான ஏதோ ஒரு உணர்வு அவள் கூறிய காரணங்களை ஒப்புக்கொள்ள முடியாமல் முரண்டுபிடிக்க அவன் அங்கே நில்லாமல் சென்றுவிட்டான்.

அக்சராவிற்கு இவன் செய்கைகள் வித்யாசமாக இருந்தாலும் எதுவும் பதில் இல்லைமையால் அவளும் சென்றுவிட்டாள்.

 

அடுத்த நாள் ஜெயேந்திரன் அக்சராவிடம் “அம்மாடி, இனிமேல் நீ ஆதர்ஷ் கூடவே ஆபிஸ் போயிட்டு வந்திடுமா. மூர்த்திக்கு வேற வேலை இருக்குமா… ஆதர்ஷ்கிட்டேயும் சொல்லிட்டேன்மா” எனவும் அவளும் ஒப்புக்கொண்டாள். ஆனால் ஏதோ ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்க அவளும் தயாராகி வர ஆதர்ஷ் அப்பா சொன்னாரு, வா போலாம்னு கூப்பிடல… இனிமேல் நான் உனக்கு டெய்லியும் டிரைவர் வேலை பாக்கணும்னு கிண்டல் பண்றமாதிரி பேசவும் இல்லை… இவளும் அங்கிள் சொன்னாங்க அதனால தான் வரேன்னு விளக்கம எல்லாம் எதுவும் குடுக்காமலே நேராக சென்று அமைதியாக காரில் ஏற அவனும் வண்டியை கிளப்பினான்.. இவனது அமைதியே அவளுக்கு உணர்த்திவிட்டது, இது ஏதாச்சியாக நடந்தது இல்லை… என அதேபோல ஆதர்ஷா பிளான் பண்ணி பொண்ணுங்கள தனியா கூட்டிட்டு போற அளவுக்கும் அவளால் தவறாக நினைக்கமுடியவில்லை. எதுக்கு? எப்படி ? என குழப்பிக்கொண்டே அவனை பார்க்க வெளியே வேடிக்கை பார்க்க என இருக்க அவளது செய்கையிலேயே அவனுக்கு புரிந்துவிட்டது அவள் ஏதோ யூகித்துவிட்டாள் என இருந்தும் அவன் மெலிதாக புன்னகைத்துவிட்டு எதுவும் கூறாமல் அழைத்துசென்றுவிட்டான்.

 

[அவள் எண்ணியது போலவே இது ஆதர்ஷின் வேலை தான். இரவு அவளை பற்றியே எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு இதுக்கு மேல அவளை தனியா விடவேண்டாம்னு மட்டும் தான் தோன்றியது. அதிகாலையில் ஜெயேந்திரனிடம் கால் செய்து “அங்கிள், நானும் அக்சராவும் ஒரே இடத்துல தான் இருக்கோம். என் பிஏங்கிறதால எப்படியும் போற இடத்துக்கு எல்லாம் அவளும் வரவேண்டியது இருக்கும். இதுக்கு எதுக்கு தனி தனியா போயிட்டு, ஒண்ணாவே போயிட்டு வந்துட்டா ஈசி தானே. டெய்லி பிளான் எல்லாமே கூட போற வழியிலேயே பேசிடுவோம்..மூர்த்தி அண்ணாவும் வெளில ஸ்கூல் ட்ரிப் எடுக்கறதா கேள்விப்பட்டேன்.இவளுக்காக மட்டும் அவரு வந்திட்டு போகவேண்டியது வரும். சில சமயம் வேலை இருந்தா அதுவும் முன்ன பின்ன ஆகும் ..”

“ம்ம்..நீ சொல்றதும் சரி தான். நீயே அக்சராகிட்ட சொல்லி கேட்றவேண்டியதுதானே..”

“இல்லை பா, என்ன தான் MDனாலும் ஒரு வயசு பொண்ணுகிட்ட போயி இனி என்கூட தான் இருக்கணும். என்கூட தான் வரணும்னு சொன்னா அது சரி வராது..”

“ச்சா.. ச்சா… அக்சரா அப்படியெல்லாம் நினைக்கிற பொண்ணுயில்லை ஆதர்ஷ்…”

“அவ நினைக்க மாட்டாப்பா. ஆனா மத்தவங்க? அவகிட்ட சும்மா நீ ஏன் MDகூட வரனு கேட்டா நீங்க சொல்லி அவ வந்தா அதே பதிலை காரணத்தை சொல்லிடுவா.. தயங்கமாட்டா.. அப்டியில்லாம இல்லை MD தான் சொன்னாருன்னு சொன்னா ஏதாவது பேசுவாங்க. ஒரே இடத்துல இருக்கோம் அதனால தான்னு சொன்னா அது தேவையில்லாம அந்த பொண்ணுக்கும் சங்கடம் தானே. அதனால தான் உங்ககிட்டேயே கேட்கலாம்னு..” என அவரும் “சரிதான் ஆதர்ஷ்… ஊரு உலகம் எப்படி வேணாலும் நினைக்கும்… நான் அக்சராகிட்ட பேசுறேன்..” என ஒப்புக்கொண்டுதான் அவளிடம் சொன்னது எல்லாமே.]

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 7ராணி மங்கம்மாள் – 7

7. வஞ்சப் புகழ்ச்சி வலை  இரகுநாத சேதுபதி தாம் மிகவும் சிக்கலான எதிரிதான் என்பதை நிரூபித்திருந்தார். மானாமதுரையிலேயே படைகளைத் தங்க வைத்துக் கொண்டு ரங்ககிருஷ்ணன் இராமநாதபுரத்துக்கு தூது அனுப்பியும் பயனில்ல்லை. போய் வந்த தூதுவன் இராமநாதபுரத்தில் பொறுப்புள்ள யாரையும் சந்திக்கவும் முடியாமல்

வார்த்தை தவறிவிட்டாய் – 6வார்த்தை தவறிவிட்டாய் – 6

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதி உங்களுக்கு கொஞ்சம் ஷாக்கா இருந்திருக்கும். கமெண்ட்ஸ், முகநூல் மெசேஜ் மற்றும் எனக்கனுப்பிய மெயில் இவற்றின் வாயிலாக உங்க கருத்தினை தெரிந்துக் கொண்டேன். நீங்க ஊகிச்சது சரியான்னு இந்தப்பகுதியைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. உங்களது கமெண்ட்ஸ் மற்றும் அலசல்