Tamil Madhura உன்னையே எண்ணியே வாழ்கிறேன்,தமிழ் மதுரா உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7

முகமெல்லாம் சிரிப்புடன் மாரா ஜெயேந்தரிடம் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள்.

“ஹன்ட்ரெட் பெர்சென்ட் என்னை அவன் நம்பிட்டான். என்னை நம்பு ஜெய் அவன் கண்ணைப் பார்த்தே சொல்லிடுவேன். கண்டிப்பா அவன்கிட்ட மாற்றம் தெரியும்”

“தெரியுது. நேத்து கவுன்சிலிங் தர்ற இடத்துக்குத் தானா போயிருக்கான், பேசிருக்கான். அதுவே பெரிய முன்னேற்றம்தான் எங்களைப் பொறுத்தவரை”

“சொன்னேன்ல… பேசாம மூணு கேரக்டரையும் என்கிட்டேயே தந்திருக்கலாம். மரணம் நெருங்கும்பொழுதுதானே நேரத்தோட முக்கியத்துவமும் அன்பின் ஆழமும் ஒவ்வொருத்தருக்கும் தெரியுது. அப்படிப் பார்த்தா என் ரோல் தானே பெருசு”

“ஆமாம் மாரா”

“அப்ப ஏன் மத்த ரெண்டு ரோலையும் நானே பண்ணக் கூடாது”

“அன்பு, காதல் எல்லாம் ஒரு வயசுப் பொண்ணு சொன்னாத்தான் எடுபடும் மாரா”

“நினைச்சுகிட்டே இரு. என்னை மாதிரி பங்க்சுவாலிட்டியை பிரேமாகிட்ட எதிர்பார்க்காதே. அவ வரவேண்டிய நேரத்துக்கு வரமாட்டா… எல்லாம் முடிஞ்சதும் சரியா வந்து நிப்பா” நொடித்துக் கொண்டார்.

“காதலே அப்படித்தான். அதனால அவளுக்குப் பொருத்தமான கேரக்டர் தான்” என்று இருமலினூடே சொல்லி முடித்தான்.

“ஜெய் நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா” என்றார் மாரா.

“கேளு”

“உனக்கு என்னாச்சு… உன்னைப் பார்த்தா என்ன சொல்றது நீ இறந்து கொண்டிருப்பது மாதிரி இருக்கே”

“எல்லாரும்தான் செத்துகிட்டிருக்கோம்”

“அவங்களை விட நீ கொஞ்சம் வேகமாகவே…”

“தெரியுதா… அவ்வளவு அப்பட்டமாவா…” கண்ணாடியில் ஓடிச் சென்று முகத்தைப் பார்த்தான்.

“அதனாலதான் மாரா கம்பனி ஷேரை வித்து என் பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு தந்து பத்திரமா உட்கார வைக்க ட்ரை பண்ணிட்டிருக்கேன்”

“இதைத் தவிர்க்க முடியாதா”

“பேட்டில் இஸ் ஓவர் மாரா” என்றான்.

“யாருகிட்டயாவது சொன்னியா”

“இல்லை… ”

“தப்பு பண்ணிட்டிருக்க ஜெய்… உன் குடும்பத்துகிட்டயும் நண்பர்கள் கிட்டயும் உன் நிலமையை எடுத்து சொல்லு. அவங்க துணையோடு எதிர்த்து கடைசி வரை போராடு. போராடிக் கிடைக்கும் தோல்வி கூட கொண்டாடப் படவேண்டிய வெற்றிதான்”

காலை ஈஸ்வர் தனது அலுவலக அறைக்குள் நுழைந்த பொழுது அங்கு ஒரு இளைஞன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். ஈஸ்வரைக் கண்டதும் “இதனை செட் பண்ணவும் கலைக்கவும் எத்தனை நேர விரயம். என்கிட்டே ஒரு குப்பைத் தொட்டி இருந்தா இது எல்லாத்தையும் அள்ளிப் போட்டுடுவேன்” என்றான்.

“சாரி.. நீங்க தப்பான ரூமுக்கு வந்துட்டிங்கன்னு நினைக்கிறேன். மீட்டிங் ரூம் வலது பக்கம் போகணும்” என்றான் ஈஸ்வர்

“நான் சரியான அறைக்குத்தான் வந்திருக்கேன் ஈஸ்வர்” என்றபடி தனது கையிலிருந்த கடிதத்தை எடுத்துக் காட்டினான்.

“காலம் காயத்தை ஆற்றும்னு சொல்வாங்க. ஆனால் அவங்க எப்படி நீ எல்லாத்தையும் அழிப்பாய்னு ஏன் பேசுறதில்லை. எத்தனை சாம்ராஜ்யங்களை சுக்குநூறாக்கியிருக்க. எப்படி நீ அழகை சாம்பலாக்குவாய்னு யாரும் சொல்றதேயில்லையே. என்னைப் பொறுத்தவரை நீ ஒரு ப்ரோயஜனமில்லாத கற்பாறை. நீ இருக்கியா இல்லையான்னே தெரியல”

“நீ எனக்கு எழுதின கடிதம் இது.

எனக்குப் புரியல ஈஸ்வர், காதல் ஒரு ஆக்கும் சக்தி, மரணம் ஒரு அழிக்கும் சக்தின்னா… அதுக்கு நடுவில் இருக்கும் பாலம்தானே நான். என்னைப் பத்தித் தெரிஞ்ச மாதிரி பேசுற ஒருத்தருக்கு கூட சுத்தமா என்னைப்பத்தித் தெரியாது. ஏதோ ஐன்ஸ்டீன் கொஞ்சம் உண்மைக்கு நெருக்கமா சொல்லிருக்கார், கடைசில நீங்கல்லாம் சேர்ந்து நான் ஒரு பிரமைன்னு கூட முடிவு கட்டிருக்கிங்க. புரியாம பேசுற உங்ககிட்ட என்ன சொல்ல” என்று பேசிக் கொண்டிருந்தபொழுதே

“ஈஸ்வர்” என்று அழைத்தபடி உள்ளே நுழைந்தாள் ரஞ்சனி.

“நேத்து நான் சொன்ன மீட்டிங் இன்னும் அரை மணி நேரத்தில் ஆரம்பிக்கப் போகுது. நீ அட்டென்ட் பண்ணா நல்லாருக்கும்”

ரஞ்சனி ஈஸ்வரை மட்டும் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தாள். ஈஸ்வர் அருகில் ஒருவன் இருப்பதை சட்டையே செய்யவில்லை.

அவளைப் புதிராகப் பார்த்தவண்ணம் ஈஸ்வர் “நான் அட்டென்ட் பண்ணல…” என்றான். அப்படியே பெல்லை அடித்துப் பியூனைக் கூப்பிட்டவன் “எங்க எல்லாருக்கும் காப்பி கொண்டு வா” என்றான்.

ரஞ்சனி முகத்தில் புன்னகை “ஈஸ்வர்… நீ என்கிட்டே ஒழுங்கா பதில் பேசி எத்தனை நாளாச்சு தெரியுமா… இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றாள் முகம் மலர.

உள்ளே நுழைந்த பியூன் இரண்டு கப் காப்பிகளை மட்டும் வைத்துவிட்டு சென்றான். மூன்றாவதாய் நிற்பவன் தனது கண்களுக்கு மட்டும்தான் தெரிகிறானோ… ஈஸ்வரின் முகத்தில் குழப்ப ரேகைகளை கவனியாது ரஞ்சனி காப்பியை எடுத்துப் பருக, காலம் என்று சொல்லிக் கொள்ளும் அந்த இளைஞன் பதிலளித்தான்.

“நான் உன் கண்ணுக்கு மட்டும்தான் தெரிவேன் ஈஸ்வர். நீதானே என்னைக் கூப்பிட்ட. அதனால உனக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போக வந்தேன்”

“ம்ஹம்” என்றான் ஈஸ்வர்.

“என்னாச்சு ஈஸ்வர் எங்கேயோ பார்த்து தலையாட்டுற” வியப்போடு கேட்டாள் ரஞ்சனி.

“ஒண்ணுமில்லை ரஞ்சு” என்றான்.

ரஞ்சனி வெளியேறியதும்

“லெட்டர் போட்டியே… என்கிட்டே என்ன வேணும் உனக்கு” ஈஸ்வரிடம் கேட்டான் காலம்.

பதிலில்லாதது கண்டு “நீங்கள்லாம் இருக்கிங்களே குறை சொல்றதில் கில்லாடிங்க. நான் எல்லா சமயத்திலையும் ஒரே மாதிரிதானே இருக்கேன். நீங்கதான் உங்க மூடுக்குத் தகுந்த மாதிரி

நாள் போறதே தெரியல, நேரம் கம்மியா இருக்கு, இன்னைக்கு எப்படா முடியும்னு இருக்குன்னு சொல்றிங்க.

நான் எங்கேயும் இருக்கேன். போதுமான அளவு இருக்கேன். நான் உங்க ஒவ்வொருத்தருக்கும் சமமா கிடைச்ச பரிசு. இப்ப உன்கிட்ட நின்னு நான் பேசிட்டு இருக்கும் வினாடி கூட உனக்குக் கிடைச்ச பரிசுதான், ஆனால் நீ அந்தப் பரிசை வீணாக்கிட்டு இருக்க.

இது என்ன ஈஸ்வர்? அஞ்சு நாள் பத்து நாள் பொம்மை கட்டடம் கட்டி ஒரே நாளில் அதை இடிப்பியா… பார்த்துப் பார்த்து நேரம் செலவழிச்சு செதுக்கின விஷயங்களை ஒரே வினாடியில் பாழக்குறது உனக்கு பழக்கமா போயிடுச்சு இல்ல.

சொல்லப்போனா கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாம நடந்து என்னை சின்னாபின்னப் படுத்துற உங்க ஒவ்வொருத்தருக்கும் நான்தான் திட்டி லெட்டர் எழுதணும்” வேகமாய் அந்தக் பொம்மைக் கட்டிடங்களை இடித்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறியவனைத் திகைப்புடன் பார்த்தான் ஈஸ்வர்.

3 thoughts on “உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7”

  1. செம்ம. மாராவின் முதல் முயற்சியே ஈஸ்வரை சென்டர் வரை போகவைத்துவ.விட்டது. டைம் ..டைம்பாம் வெடித்து சிதறிட்டா..ன். மீண்டும் மாமசென்ருக்கு போ.வான்னு நினைக்கிறறேன்.ஜெய் கட்டாயம் நம்பிக்கையோடு ட்ரிட்மென்ட் எடுக்கணும்.மாரா உண்மையாவே அக்கறையோடு ஜெய்கிட்ட பேசது டச்சிங். ப்ரேமா. உன் ப்ரேமம் எந்த அளவுக்கு ஈஸ்வர்கிட்ட ரீயாக்ஷன் உருவாக்க போகுது…ஆவலுடன் …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 30மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 30

30 விடுதியில் அவளது அறைக்கு வந்த சுஜி, இவ்வளவு நாளாகத் தான் அடக்கி வைத்திருந்த துக்கத்தைச் சேர்த்து வைத்து அழுதாள். நீண்ட நாட்களாக அவள் மனதிற்குப் போட்டு இருந்த மேல் பூச்சு களைந்து, மனதில் உள்ள துக்கம் எல்லாம் வெடித்து கண்களில்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9

“பிரேமா ப்ளீஸ் இன்னும் ஒரு முறை நீ ஈஸ்வரை மீட் பண்ணியே ஆகணும்” ராபர்ட் கெஞ்சும் குரலில் கேட்டான். “என்னால முடியாது ராபர்ட்” “இப்படி சொல்லக் கூடாது பிரேமா. இப்படி பாதியில் விட்டா நாங்க என்ன செய்வோம். இது உன் தொழில்