Tamil Madhura ஆன்மீகம்,Uncategorized பனச்சிகாடு சரஸ்வதி ஆலயம்

பனச்சிகாடு சரஸ்வதி ஆலயம்

வணக்கம் தோழமைகளே,

ஆன்மீகம் பகுதிக்கு சுதா பாலகுமார் அவர்கள் பிரசித்தி பெற்ற ஒரு ஆலயம் பற்றித் தெரிவித்துள்ளார். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

 

30 அடி பள்ளத்தில் இருக்கும் உலகின் ஒரே அழகான பசுமை கோவில்!

banner

பனச்சிக்காடு எனும் தளம் சரஸ்வதி தேவிக்கான திருத்தலம் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம், கேரளம் உட்பட பிற மாநிலங்களிலிருந்தும் வருகை தருகிறார்கள். இந்த கோவில் எங்கு அமைந்துள்ளது இங்கு எப்படி செல்லலாம் என்பன குறித்து இந் தொகுப்பில் காண்போம்.

பனச்சிகாடு:

பனச்சிகாடு எனும் சாந்தம் வழியும் அழகிய கிராமம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது கோட்டயத்திற்கும் சங்கணாச்சேரிக்கும் இடையே உள்ள பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது.

சிறப்புகள், திருவிழாக்களும் கொண்டாட்டமும்:

கேரளத்தின் மிகச் சிறந்த கோவில்களில் இது ஒன்றாகும். மேலும் அரிதாக காணப்படும் சரஸ்வதி கோவிலும் இதுதான். கேரளத்தில் அவ்வளவாக சரஸ்வதி கோவில்கள் இதுமாதிரி கட்டப்பட்டிருப்பதில்லை. மேலும் இங்கு இருக்கும் சரஸ்வதி சுயம்பு வடிவில் இருப்பார். அதுவும் சிறப்பு சரஸ்வதி பூசையின் போது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு இங்கு பஞ்சாமிர்தம், பால்பாயாசம் செய்து படைத்து வழிபடுகிறார்கள். துர்க்காஷ்டமி, மகாநவமி சரஸ்வதி பூசை நாட்களில் இந்த கோவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு வந்து வழிபட்டால் படிப்பில் மேலோங்கி நிற்கலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

நடை திறக்கும் நேரம்:

இந்த கோவில் காலை 5.30 மணிக்கு திறக்கப்படும். காலையில் 9.30 மணி வரை திறந்திருக்கும் இந்த கோவிலின் நடை அதன் பின் அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். பக்தர்கள் வழிபட்டு முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

வழிபாடு:

குழந்தை பிறக்கவும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள் குணமடைவதற்கு இங்கு வருகிறார்கள்.பாட்டு இசை நாட்டியம் போன்ற கலைகள் இங்கேயே கற்றுக்கொள்ள தொடங்கப்படுகின்றன.

நேர்த்திக்கடன்:

தாங்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு வேண்டியதை நிறைவேற்றிக்கொடுத்தால் சரஸ்வதிக்கு தாங்கள் வேண்டிக்கொண்ட பொருள்களை படைத்து வழிபடுகிறார்கள்.

இன்னதுதான் செய்தாகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.தங்கள் வசதிக்கு ஏற்ப எந்த விதமான பொருள்களையும் படைக்கலாம் என்பது இந்த தலத்தின் விதி.

 எப்படி செல்வது:

கோட்டயத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள பனச்சிகாடு கிராமம் இங்குள்ள சரஸ்வதி கோயிலுக்கு புகழ் பெற்றுள்ளது. தக்ஷிண மூகாம்பிகை கோயில் என்றும் இது அழைக்கப்படுகிறது.

வருடமுழுக்க பூசைகள்:

வருடமுழுவதுமே இக்கோயிலில் பூஜைகள் நடத்தப்படுவது இதன் சிறப்பம்சமாகும். அதுமட்டுமல்லாமல் இக்கிராமத்தை சுற்றிலும் ரம்மியமான இயற்கைக்காட்சிகள் நிறைந்திருப்பதால் ஒரு சுற்றுலாத்தலமாகவும் இது பிரசித்தி பெற்றுவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மேற்கே செல்லும் விமானங்கள் – 2மேற்கே செல்லும் விமானங்கள் – 2

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானங்கள் முதல் பதிவு உங்களைக் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். தப்பு செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள் நல்லவர்கள் என்று சொல்லிவிட முடியாது. தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தும் தைரியம் இன்மையால் தப்பு செய்யாதவர்களை நல்லவர்கள் என்று சொல்லிவிட

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 74ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 74

74 – மனதை மாற்றிவிட்டாய் உடனே சுபிக்கிட்ட சொல்லி அவங்க பொண்ண கூப்பிட்டு இன்ட்ரோ குடுன்னு சொன்னேன். மீரா அம்மாகிட்ட கேட்டு அவளை அவளது தோட்டத்தில் சென்று பார்க்க சுபி திவியை மீராவிற்கு அறிமுகப்படுத்தியதும் இருவரும் ஏனோ ஒரு தோழமையுடனே ஐந்து

திருமதி ராஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரைதிருமதி ராஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரை

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் இந்த கட்டுரையில் நாம பார்க்க போறது ஆறகளூர் அப்படின்னு ஒரு ஊரு. இது எங்க ஊரு சேலத்து பக்கத்தில் ஆத்தூர் செல்லும் வழியில் இருக்கும் தலைவாசல் பக்கத்தில் இருக்கும் ஒரு ஊர் தான் ஆறகளூர். நம்ம சேலத்தில் இருந்து