Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 76

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 76

76 – மனதை மாற்றிவிட்டாய்

ஆதிக்கு தான் மிகவும் சங்கடமாக போய்விட்டது. அவளை அவ்வாறு காணமுடியாமல் கீழே வந்தவன் தாத்தாவிடம் மதன் பேசிக்கொண்டிருக்க இவனும் சென்று விசாரிக்க என்குய்ரி பற்றி சொன்னதும் தாத்தாவும் சரி என ஆனால் வெளியே அழைத்து செல்கிறேன் வீட்டில் வேண்டாம் என அவரும் தயங்க பின் ஆதியே “தாத்தா உண்மை எனக்கும் உங்களுக்கும் தெரியும். மத்தவங்க எல்லாரும் எப்போ வேணாலும் வந்து சோபிய அர்ரெஸ்ட் பண்ணலாம்னு தான் இன்னும் நினைச்சிட்டு இருகாங்க. அதோட இங்கேயே இவரை பேச வெச்ச இன்னும் கொஞ்ச நேரத்துல சொந்தக்காரங்க எல்லாரும் வருவாங்க யாரு என்னன்னு கேப்பாங்க. நாம பதில் சொல்லவேண்டியது வரும். அதுக்கு வெளில போயி பேசிட்டு வந்தா யாரும் கேக்கமாட்டாங்க. அப்டியே சோபி எங்கன்னு கேட்டாலும் சும்மா ஏதோ பிரண்ட் வந்திருக்காங்க வெளில கொஞ்சம் போயிருக்கான்னு சொல்லிட்டா எப்போவும் போல விட்ருவாங்க… அதோட உங்ககிட்டேயும் கொஞ்சம் தனியா பேசணும்” என அவரும் ஒரு மனதாக மதனிடம் “சரிங்க தம்பி, கூட்டிட்டு போயிட்டு வாங்க என்றவர் சோபியிடம் அழைத்து வர சொன்னார். பாட்டி அவளிடம் விஷயத்தை கூறி அழைத்து வந்ததும் மதன் அவளை ஆவலாக பார்க்க அவ்ளோ எதையும் கவனிக்காமல் தரையை மட்டுமே பார்த்த வண்ணம் இருக்க இவனுக்கும் அவள் நிலை புரியவே அவளிடம் சென்று “கொஞ்சம் என்குயிரி தான். தாத்தாக்கிட்டேயும் பேசிட்டேன். சும்மா கேஸுலா வாங்க. உங்க வயல் இங்க இருக்குனு சொன்னாங்க. அங்க வரைக்கும் அப்டியே நடந்துக்கிட்டே பேசலாம். வீட்ல விசேஷம் நடக்கிதில்ல. ரொம்ப பார்மலா விசாரிக்கணும்னு எல்லாம் சொன்ன நிறைய கேள்வி வரும் அதனால தான்.” என அவன் விளக்கம் குடுக்க யாரோ ஒருவர் தன் குடும்பத்திற்காக இவ்ளோ யோசிப்பார்களா? என நினைத்து அவனை நிமிர்ந்து பார்த்தாள் அடுத்த கணமே நான் இதுல பாதி யோசிச்சிருந்தா கூட இவ்வளோ பிரச்னை வந்திருக்காதே என தோன்ற தலை கவிழ்ந்தது. ஆனால் உடன் கிளம்பினாள். தாத்தாவை பார்த்தாள். அவரோ முகத்தை திருப்பி கொள்ள பெருமூச்சுடன் வெளியேறினாள்.

அவர்கள் சென்றதும் ஆதி “தாத்தா மதன் பத்தி தனக்கு தெரிந்த சில விஷயம் கூறினான். அவரிடமும் அபிப்ராயம் கேட்டான். பின் அவனுக்கு சோபிய பிடிச்சிருக்காம் தாத்தா. கல்யாணம் பண்ணிக்க கேக்குறான் நேத்து தான் என்கிட்ட சொன்னான் என்று கூறினான். தாத்தா முதலில் திகைத்தாலும் உடனே சுதாரித்து “ஏதோ தெரியாம வயசு கோளாறா இருக்கும்.. வேண்டாம் அந்த பையன பாத்தா நல்ல விதமா தெரியுது. அவனுக்கு எடுத்து சொல்லி வேற பொண்ணு பாக்க சொல்லிடு பா” என்றார்.

ஆதி “தாத்தா வயசு கோளாறா இருக்க மதன் ஒன்னும் ஸ்கூல் பையன் இல்ல. நல்லா படிச்சிருக்கான், நல்லா வேலைல இருக்கான். எதுன்னாலும் சுயமா யோசிச்சு முடிவு பண்ணுவான். அதோட சோபியை அவன் இப்போதான் முததடவையா பாக்கறான்னு இல்லை. உங்க பேத்தி திவி அவன்கிட்ட சோபிய பத்தி விசாரிக்க சொல்றதுக்கு முன்னாடியே போட்டோ அனுப்பிச்சதும் அவனுக்கு புடிச்சிருக்கு. போன்ல இவ கூப்பிட்டு பிரச்னையை சொல்றதுக்கு முன்னாடியே அவன் சோபிய லவ் பன்றேன்னு சொல்லிட்டானாம். அதுக்கப்புறமும் நடந்த பிரச்சனை எல்லாமே தெரிஞ்சு தான் அவன் இப்போவும் அதே முடிவுல இருக்கான். இதுல நீங்க தான் தாத்தா உங்க முடிவை சொல்லணும். ”

மற்ற அனைவரும் ஏதோ ஒரு ஆர்வத்தில் இதை கேட்க ஆனால் யாரும் எதிர்க்காமல் இருக்க ஈஸ்வரியும் என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுதிட்டேன்னா என அழுதுகொண்டே இருக்க அதோடு பாட்டி, சந்திரா எல்லாரும் “ஏதோ தெரியாம பண்ணிட்டா, அந்த பையன் தான் எல்லாமே தெருஞ்சும் சரினு சொல்றானே.. பேசிபாக்கலாமே ?” என தாத்தாவுக்கு கோபம் தான் அதிகமானது.

தாத்தா “சரி அந்த பையனுக்கு பிடிச்சது அதுனால அவன் அப்டி சொல்றான். அவங்க அப்பா அம்மாவுக்கு, இப்டி ஒரு பொண்ண பிடிக்குமா? இவ நம்ம குடும்பத்திலையே இவ்ளோ பிரச்சனை பன்னிருக்காளே அடுத்த குடும்பத்துல எத நம்பி கல்யாணம் பண்ணி வெக்க சொல்ற? அந்த பையனோட வாழ்க்கையை கெடுக்க சொல்றியா? ” என அவர் மீண்டும் கத்த இப்போது கோபம் கொள்வது ஆதியின் முறையாயிற்று.

“தாத்தா உங்க முடிவு தான் அப்போ என்ன? அவ பண்ண தப்புக்கு தண்டனையா கடைசிவரைக்கும் கல்யாணம் எலாம் எதுவும் பண்ணாம இங்கேயே வெச்சுக்கபோறீங்களா? சரி அவ தப்பு பண்ணா

அதுக்கு தண்டனைனு சொல்றிங்க. யாரு தான் தப்பு பண்ணல. அப்டி பாத்தா சோபி இப்டி இருக்கறதுக்கு முத காரணம் நீங்க எல்லாரும் தானே. ஈஸ்வரி அத்தை குணம் பணம் வேணும்னு இருக்கறது தான். எவ்வளோ குடுத்தாலும் பத்தாது. உங்கள யாரு அப்டி ஒரு பொண்ண இந்த குடும்பத்துக்கு பாக்க சொன்னது.. சரி அதுக்கப்புறமாவது மாமா அத்தைகிட்ட இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிபடாதுன்னு சொல்லி புரியவெச்சிருக்கணும் அவரு அத பண்ணல. சோபிய அத்தையோட பொறந்து வீட்டுக்கு அனுப்பிச்சு படிக்கவெச்சாங்க. வளத்துனாங்க. உங்களுக்கு அவ குணத்துல கொஞ்சமா சந்தேகம் வருது கோபப்படறா..மதிக்கல… நெறையா செலவு பண்ரான்னு சொல்ற எல்லாமே புரிஞ்சதும் அவளை அப்போவே அடிச்சு திட்டியோ இல்லை பொறுமைய பேசியோ உங்ககூட வெச்சு புரிய வெச்சிருக்கணும் அதையும் பண்ணல. வெளில அவளை பத்தி குறையா யாராவது பேசுனா அது உன் குணம் தானே பாரு தப்பா பேசுறாங்கனு அப்போவது அவளுக்கு காட்டிருக்கணும். அப்போவும் என் பேத்திய வெளில விட்டுக்கொடுக்கறதான்னு அவளுக்கு சாதகமா பேசி ஏதோ கொஞ்சம் செலவு பண்ணுவா கோபப்படுவ அவ்ளோதான்னு அதுவே நீங்க ஒண்ணுமே இல்லாத மாதிரி காட்டிக்கிட்டிங்க. அண்ணா தங்கச்சின்னு அவங்களாவது பழக விட்ருக்கனும். ஏதோ விருந்தாளி வந்து போற வரைக்கும் அவங்க பண்ற கொடுமையை சகிச்சிக்கோன்னு இருக்கறமாதிரி நீங்க அந்த மாதிரி இருக்கக்கூடாதுனு மட்டும் சொல்லிட்டு சோபிய தண்ணி தெளிச்சு விட்டுடீங்க. இப்டி எல்லா தப்பும் மொத்த குடும்பமும் பண்ணிட்டு இப்போ தண்டனை மட்டும் அவளுக்கா? ஏன்னா அவளால அதிகம் பாதிக்கப்பட்டது நானும் திவியும் தான். நாங்களே அவங்க கல்யாணத்துக்கு சரின்னு சொல்லியும் உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சனை. உங்களுக்கு ஒருவேளை தப்பு பண்ணா தண்டனை இருக்கணும்ன்னா மொதல்ல சோபிய இப்டி வளத்துன எல்லாருக்கும் என்ன தண்டனைன்னு சொல்லுங்க. அப்போ நானும் திவியும் ஏத்துக்கறோம். இல்லை எங்க விருப்பப்படி அவ கல்யாணத்துக்கு எல்லாரும் ஒத்துக்கோங்க.” என அவன் கத்தி முடிக்க அனைவரும் எதுவும் பேசமுடியாமல் அதோட தாத்தாவை பார்த்த வண்ணம் இருக்க அவர் ஒரு பெருமூச்சுடன் “நீ சொல்றது சரி தான். அவளால அதிக பாதிப்பு உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் தான். ஆனா நீங்களே இத ஏத்துக்கறீங்க. நீங்க சொல்ற படியே நடக்கட்டும். அந்த தம்பி வந்தததும் பேசிட்டு அவங்க அப்பா அம்மாகிட்ட பேசலாம். கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடலாம். ” என அனைவரும் ஏதோ சற்று நிம்மதியுடன் சந்தோஷமாகினர்.

ஆதியும் “தேங்க்ஸ் தாத்தா” என அவரும் சிரித்துக்கொண்டே தோளில் தட்டிவிட்டு சென்றார். அவன் அறைக்கு சென்று சன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க உள்ளே மெதுவாக வந்த திவி ஆதியை அணைத்து அவன் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு தாங்க் யூ சோ மச் ஆதி என மறுகன்னத்திலும் இதழ் பதித்து விட்டு அவன் சுதாரிக்கும் முன் வேகமாக ஓடி வெளியேறிவிட்டாள்.

அவனும் சிரித்துக்கொண்டே “பிராடு” என்றான்.

மதன் சோபியிடம் முதலில் சில பொதுவான விஷயம் குடும்பம் அவளை பற்றி கேட்டுவிட்டு அவளிடம் அந்த கடத்தல் பற்றி கேட்க அவளும் “நான் பணம் கடனா வாங்க தான் போனேன். அவங்க ஜஸ்ட் ஏதோ கிப்ட் பாக்ஸ் குடுக்க சொல்ராங்கனு தான் வாங்கிட்டு போயி குடுத்தேன். சத்தியமா அதுல என்ன இருந்ததுன்னு எனக்கு தெரியாது என பயத்துடன் கூற” மதனும் “அதெப்படி சும்மா கேட்டதும் பத்து லட்சம் குடுத்துடுவாங்களா? அந்த அளவுக்கு பழக்கமா? இதெலாம் கூட யோசிக்கமாட்டேயா? அந்த அளவுக்கு என்ன பணத்தேவை? இப்போ அந்த பணத்தை வெச்சு உன்னால என்ன பண்ண முடியுது சொல்லு ” என கத்தியவன் அவள் அழவும் இவன் அமைதியானான். அவளோ “நான் என்ன சொன்னாலும் யாரும் நம்பமாடீங்க. சரி…ஆனா ப்ளீஸ் எனக்கு ஒரே ஒரு வாரம் டைம் கொடுங்களேன். வீட்ல எல்லார்கூடையும் இருந்திட்டு வந்துடறேனே. நான் இத்தனை வருஷம் குடுமபத்துல எல்லாரையும் எவ்வளோ மிஸ் பண்ணிருக்கேன்னு இப்போதான் புரியுது. அதோட அவங்களுக்கு எவ்வளோ தொந்தரவு குடுத்திட்டேன்.. தப்பு பண்ணிட்டேன் ..அதுக்கெல்லாம் மன்னிப்பு கேக்கணும். ” என அவள் அழ

இவன் பொறுமையாக “ஹே ஹே ஜஸ்ட் ரிலாக்ஸ். சொல்லு என்னென்ன தப்பு பண்ணா? ஒரு பிரண்டா என்கிட்ட ஷேர் பண்ணிக்க தோணுச்சுனா எல்லாமே சொல்லு. இப்டி எல்லாத்தையும் உள்ள வெச்சு அழுதுகிட்டே இருக்காத.” என அவன் கண்டிப்புடன் கூற

அவளும் ஏதோ ஒரு உந்துதலில் இவனுக்கு தெரிந்தே என்றாலும் அவள் கண்ணோட்டத்தில் எப்படியெல்லாம் நினைத்தால் கோபத்தில் என்னவெல்லாம் செய்தாள் என்று அனைத்தும் கூறினாள்.

கேட்டு முடித்தவன் அவள் சற்று அழட்டும் என விட்டவன் மீண்டும் “சரி உனக்கு ஒரு வாரம் டைம் போதுமா? அதுக்கப்புறம் மாமியார் வீட்டுக்கு போலாமா?” என

இவளும் தலையை தொங்க போட்டு கொண்டு போதும் என்பது போல தலையசைக்க

அவனும் சிரித்துக்கொண்டே “சரி இப்போ என் பிரச்சனைக்கு வா. என்ன பத்தி என்ன நினைக்கிற? ஏன்னா அந்த கடத்தல் விஷயம் மட்டும் தான் அபீசியல்.. மீதி எல்லாம் உன்னோட பர்சனல்.. உனக்கு விருப்பம்னா தான் சொல்ல சொன்னேன். நீயும் எல்லாமே சொல்லிட்டா. அந்த அளவுக்கு என்னை நம்புறியா என்ன?” என அவள் வினவ

இவளும் அவனை ஒரு முறை பார்த்துவிட்டு “ஆமா, ஏன்னு தெரில. உங்ககிட்ட சொல்லிடணும்னு தோணுச்சு. என்கிட்ட யாருமே இதுவரைக்கும் நீ ஏன் இப்டி பண்ண நீ என்ன நினச்சேன்னு கேட்டதில்லை. கெட்டவங்கள இருந்தவங்க எல்லாரும் என்னை ஏத்திவிட்டுட்டு எனக்கு ப்ரச்சனனைதும் விட்டுட்டு போய்ட்டாங்க. நல்லவங்க என்கிட்ட பாசமா இருந்தவங்க எல்லாரையும் நானே பகைச்சுக்கிட்டேன். என்னை புரிஞ்சுகிட்டு தப்புனாலும் அத எடுத்து பொறுமையா யாரும் சொன்னதில்லை. ஒன்னு திட்டுவாங்க இல்ல மாறமாட்டேனு போய்டுவாங்க. கூடவே இருக்கறவங்க நீ பண்றதுதான் சரினு என்கரேஜ் பண்ணுவாங்க. அதனால கூட இருக்கலாம். நீங்க நான் சொன்னதையும் கேட்டீங்க. தப்புனாலும் சத்தம்போடீங்க. இனிமேல் நான் எப்படி இருக்கபோறேனு எனக்கு தெரில பட் ஏனோ என்ன மதிச்சு கேட்ட ஒருத்தர்கிட்ட உண்மையா இருக்கணும்னு தோணுச்சு. அதான் சொல்லிட்டேன்.” என அவள் கூற

இவனும் சிரித்துகொண்டே “சரி அப்போ நானும் என் மனசுல இருக்கறத சொல்லிடறேன். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ ஓகே சொன்ன நீ சொன்ன அதே ஒரு வாரம் கழிச்சு உன் மாமியார் வீட்டுக்கு அதாவது உன்னை கல்யாணம் பண்ணி எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். ஓகேவா? ” என இவளுக்கு ஒன்றும் புரியாமல் விழிக்க மதன் “இங்க பாரு, மத்த பிரச்சனை எல்லாத்தையும் மறந்துட்டு உனக்கு என்னை பிடிச்சிருக்கா அப்டினு மட்டும் சொல்லு. வேற எதையும் யோசிக்காத. மீதி உனக்கு இருக்கற குழப்பம் எல்லாத்தையும் அப்புறம் நான் தீத்துவெக்கிறேன்.” என

அவளும் “பிடிச்சிருக்கு” என்றதும் அவனும் அவளிடம் நெருங்கி அமர்ந்துகொண்டு “உஹ்ஹ்…. எத்தனை கேஸ் முடிச்சிருக்கேன். எந்த ரிசல்ட்காகவும் இப்டி மனசு அடுச்சுக்கிட்டதில்லை.” என்றவன் அவன் எப்படி இந்த கேஸ் எடுத்தான், திவி இவனது தோழி என்பது பற்றி, அந்த கடத்தல் கும்பலுக்கு இவளுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உறுதியானது, இவள் ஜெயிலுக்கு போக வேண்டியதில்லை, திவியும் இவனும் சோபிக்கு புரியவைக்க போட்ட பிளான் வரை அனைத்தும் கூறினான்.

அவள் “ஓ….” என்றதும் எப்டியோ கோபப்படுவாள், உன் பிரண்ட்க்காக தான் என்கிட்ட பேசுனியா? என சந்தேகிப்பாள் என எதிர்பார்த்தவனுக்கு இந்த ரியாக்ஷன் ஒன்றும் புரியவில்லை. இருந்தும் இந்த கேஸ்க்கும் உன்ன விரும்பனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்போவும் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. வீட்ல பேசுறேன். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம். ஓகே தானே.?” என அவளும் மெலிதாக புன்னகைத்துக்கொண்டே சரி என்றாள். இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

பின் மதன் தாத்தாவிடம் பேசி அவனதும் பெற்றோருக்கு போன் போட்டு தர தாத்தாவே அவர்களிடம் பேசிவிட்டு அடுத்த ஒரு நாளில் சின்ன பேத்திக்கு கல்யாணம் இருக்கு என அதற்கும் அழைத்துவிட்டு வந்ததும் மீதியை நேரில் பேசிக்கொள்ளலாம் என உறுதியானது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 28ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 28

28 – மனதை மாற்றிவிட்டாய் மறுநாள் அனைவரும் நண்பகலில் கிளம்ப தயாராக 2 மணி நேர பயணம் தான் என்பதால் ஆதி, சுந்தர் இருவருமே காரை ஒட்டினர். முதலில் சோபனாவும், ஈஸ்வரியும் ஆதியுடன் வண்டியில் வர பிளான் செய்தனர். சுபி, அனு

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 03வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 03

சமயற்காரன், “ஐயா! உங்களுக்கு அநேககோடி வந்தனங்கள். உங்கள் தயாள புத்திக்கு உங்களையும் உங்களுடைய பிள்ளை குட்டிகளையும் கடவுள் எப்பொழுதும் மங்களகரமாக வைக்கட்டும். நான் இப்போது வேலை செய்ய வகையற்றுத் திண்டாடுகிறேன். நான் இனி நியாயமான வழியில் சம்பாத்தியம் செய்ய எனக்கு ஏதாவது