Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 75

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 75

75 – மனதை மாற்றிவிட்டாய்

பேசிட்டு மறுபடியும் கோவிலுக்கு போன போதுதான் மீராவோட அப்பா ஆல்ரெடி சொல்லி வெச்ச ஆளுங்க மறுபடியும் ஏதோ டவுன்ல பாத்தேன்னு மறுபடியும் ஆக்சிடென்ட் பண்ண பாத்தாங்க. அப்போதான் நீங்களும் அர்ஜுன் அண்ணாவும் மோதிரம் வாங்க போயிருந்திங்களா? மறுபடியும் அவங்க பாண்டியன் அங்கிள்கிட்ட நான் பேசுன விஷயம் தெரியாததால ஏதாவது அவசரப்பட்டு பண்ணிடப்போறாங்கனு தான் உங்களுக்கு கால் பண்ணேன். அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது சுந்தரும் அவங்க அப்பாவும்கூட வெளில தான் போயிருந்திருக்காங்க. நான் வந்த பிறகு மீரா அவங்க அப்பாகிட்ட பேசி அழுது புலம்பி அந்த கல்லை கரைச்சுட்டா. அவரும் அவ முன்னாடியே யாரையெல்லாம் ஆள் செட் பண்ணாரோ எல்லாருக்கும் கூப்பிட்டு அவனை எதுவும் பண்ணவேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்.

இதை சொல்லிமுடிக்க ஆதி கோபமாக “இடியட் இப்படியா பண்ணுவ? அந்த ஆள் தான் கொலை பண்றேன் அது இதுன்னு கோபத்துல இருக்கான். இதுல அவன் வீட்டுக்கே போயி அவனையே பேசி மிரட்டிருக்க. அறிவில்லை.”

முதலில் ஆதியின் கோபத்தில் திகைத்து பார்த்தவள் புன்னகைத்துவிட்டு “நான் வேற என்ன பண்றது. உங்ககிட்ட சொல்லிட்டேன். பட் நீங்க சீக்கிரம் ரிஸ்க் எடுத்தமாதிரி தெரில. உங்களுக்கும் வேலைன்னு சொல்லிட்டீங்க. ஓரு நாள் விட்டதுக்கே ஆக்சிடென்ட் பண்ண ட்ரை பன்னிட்டாங்க. எத்தனை நாள் என்ன என்னனு யோசிச்சிட்டே என்னால எல்லாம் இருக்கமுடியாது. எனக்கு அவ்ளோவா பொறுமை பத்தாது. நான் பாத்துக்கறேன்னு முந்தினநாள் சும்மா சொன்னேன்னா நினைச்சீங்களா?

அண்ட் அதுக்கு தான் மீராகிட்டேயும் அவங்க அம்மாகிட்டேயும் அவரை பத்தி சில விஷயம் குணம் பத்தி அவரோட வீக்னஸ் அவரோட குடும்பம் அவரோட பிரச்சனை இந்த பிடிவாதம், கெளரவம், சாதி எல்லாம். ஆனா எதையும் யோசிச்சு பண்ணா தெளிவா முடிவெடுப்பாருனு சொன்னாங்க. சரி மொதல்ல அவரை அமைதியா யோசிக்க வெக்கணும்னு தோணுச்சு. அதுக்கு தா கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் மிரட்டல்… எல்லாரும் எப்போவும் சந்தோசமா இருக்கணும்னா அப்போ அப்போ இந்த மாதிரி கொஞ்சம் பீல் பண்ணிடனும்.” என கண்ணடிக்க

ஆதி “அங்க உனக்கு ஏதாவது ஆயிருந்தா நான் என்னடி பண்ணிருப்பேன். என்னை பத்தி நீ யோசிக்கவே இல்லையா? அசட்டு தைரியம் எல்லா நேரத்துலையும் கூடாது டா மா ”

அவன் கழுத்தை சுற்றி கையை மாலையாக போட்டு கொண்டு “எனக்கு ஏதாவது ஆகுற வரைக்கும் நீங்க என்னை விடமாடீங்கனு தெரியும். உங்ககிட்ட சொல்லாம நான் எங்கேயும் போகமாட்டேன் ஆதி, அது சாகறதாவே இருந்தாலும் போகமாட்டேன். இது அசட்டு தைரியம் இல்லை. உங்க மேல நம்ம லவ் மேல எனக்கிருக்கற ஆழமான நம்பிக்கை. நான் எப்பவுமே உங்கள நினைச்சிட்டே தான் ஆதி இருந்தேன். இருப்பேன். ” அவன் இன்னும் அமைதியாக இருக்க தனது மொபைலை எடுத்து காட்டினாள். பிரச்சனை எனக்கு ஒருவேளை பெருசாகும்னு தோணுச்சுன்னா உங்களுக்கு அனுப்புறத்துக்காக தான் இந்த மெசேஜ் டைப் பண்ணி வெச்சிருந்தேன். நான் எங்க இருக்கேன். அவங்க தான் கொலை பண்ண ட்ரை பண்ணாங்கன்னு எல்லாம் அதுல இருக்கும். அதோட அந்த வீடியோ எல்லாம் உங்களுக்கு அனுப்ப ரெடியா எடுத்துவெச்சுட்டு தான் அவர்கிட்ட பேசவே போனேன். ஒரு பட்டன் தட்டிருந்தா போதுமே நீங்க அடுத்த நிமிஷம் அங்க வந்திருப்பீங்க. இப்போ நம்புறீங்களா நான் உங்கள நினைக்காம உங்கள மீறி எதுவும் செய்யமாட்டேன். எந்த பிரச்னைளையும் மாடிக்கமாட்டேன்னு. உங்களுக்கு ஏதாவது ஓர் வகைல விஷயம் தெரியமாதிரி தான் பன்னிருப்பேன். அவ்ளோ பிரச்னை இருந்தாலும் இதெல்லாம் நான் யோசிச்சிட்டு ரெடி பண்ணிட்டு தான் போனேன் தெரியுமா? ” என

அவனுக்கு தன் மேல் அவள் வைத்த காதலை நம்பிக்கையை எப்படி கூறுவது என்றே புரியாமல் அவளையே பார்க்க “என் மேல ஏன் டி இவ்ளோ நம்பிக்கை வெச்சிருக்க? ”

அவளோ முறைத்துவிட்டு “என்னை நீங்க ஏன் இவ்ளோ லவ் பண்றிங்கன்னு நான் கேட்டேனா. கேட்டா பதில் இருக்கா? ” என எதிர்கேள்வி கேட்க அவனும் சிரித்துக்கொண்டே அணைத்துக்கொண்டான்.

ஆதி “அது சரி அப்போவரைக்கும் மீரா சுந்தர்கிட்ட லவ் சொல்லவேயில்லை. அப்புறம் எப்படி இவன் லவ் பண்ணான்?”

திவி ” அது ஒரு கதை மீரா இப்போதான் சொன்னா.

நான் மீராகிட்ட முதல சுந்தர்கிட்ட லவ் சொல்லுன்னு பேசிட்டு வந்திட்டேன். இங்க அம்மு நிச்சயதார்த்தம் முடிஞ்ச நைட் சுந்தர்கிட்ட மீரா லவ்வ சொல்லிட்டாளாம். அப்போ அவருக்கு நம்ம விஷயமும் தெரிஞ்சிருச்சு சோ சுந்தர் மீராவை லவ் பண்ணலேன்னு மட்டும் சொல்லிட்டு போயிட்டாறாம்.

ஆனா அவ விடாம இவகிட்ட பேசிட்டு தொரத்திட்டே இருந்திருக்கா.. அதுக்குள்ள தான் சோபி சுந்தர குழப்பிவிட்டு வேற டிராக்ல பிராப்லம் பண்ணிட்டாளே. அதுல சுந்தர்க்கு எப்படியும் கடைசியா ஒரு வழி இருக்குன்னு பாத்திருக்காரு. அதனால நான் வேற ஒரு பொண்ண லவ் பண்றேன்னு மீராகிட்ட சொல்லிட்டு அப்புறம் தான் அவரு பிரண்ட்க்கு ஏதோ அடிபட்டதுன்னு ஊருக்கு போய்ட்டாரு. அங்க இருந்து சுந்தர் வரதுக்குள்ள நமக்கு கல்யாணம் முடிஞ்சது. அவருக்கு விஷயம் தெரிஞ்சு அப்படியே ஊருக்கு போய்ட்டாராம். அவர பார்த்ததும் மறுபடியும் மீரா பேசிருக்கா. ஏதாவது பிரச்சினையா ஹெல்ப் வேணுமான்னு. ஏன் முகம் வாடிருக்குன்னு கேட்டிருக்கா.. சுந்தர்க்கு ரொம்ப சங்கடமா இருந்தாலும் அந்த ஆறுதல் தேவப்பட்டிருக்கு போல. இந்த மாதிரி இவரு லவ் பண்ண பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லிருக்காரு. அவளுக்கும் அந்த கல்யாணத்துல விருப்பம்னு தான் சொன்னதும் மீரா அதுக்கப்புறம் எதுவும் அதப்பத்தி பேசாம சுந்தர்கிட்ட சாதாரணமா பழையமாதிரியே பேசிருக்கா ஆறுதலா இருந்திருக்கா.. இவருக்கும் ஒரு கட்டத்துக்கு மேல மீராவையே ஏன் கல்யாணம் பண்ணிக்ககூடாதுன்னு தோணிருக்கு. அத அவகிட்டேயும் சொலாலிருக்காரு. ஆனா வேற ஒரு பொண்ண லவ் பண்ணனேன்னு ஒரு உறுத்தலோடவே கேட்டிருக்காரு. அவ சொல்லிருக்கா தப்பா எடுத்துக்காதீங்க. இத லவ் இல்லை ஜஸ்ட் நமக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தரை பார்த்ததும் வந்த ஈர்ப்பு தான். அப்படி லவ்வா இருந்திருந்தா அந்த பொண்ணோட கல்யாணத்த இப்படி சாதாரணமா எடுத்துகிட்டு அமைதியா இருக்கமுடியாது. அதுவுமில்லாம நான் எவ்வளவு தான் உங்ககிட்ட லவ் சொல்லிருந்தாலும் கேட்டிருந்தாலும் ஏன் கெஞ்சியே இருந்திருந்தாலும் உங்களால அந்த இடத்துல இன்னொருத்தர நினைச்சுகூட பாக்கமுடியாது. இப்போ உங்க மனசுல ஒரு கேள்வி வந்ததே ஏன் நாம மீராவை கல்யாணம் பண்ணகூடாதுன்னு அப்படி ஒரு எண்ணம் கூட வந்திருக்காதுன்னு சொல்லிருக்கா. சுந்தர்க்கு மீராவை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சாலும் அப்பவும் ஒரு குழப்பத்துலையே இருக்காருன்னு மீரா ஒரு விஷயம் சொல்லிருக்கா. நீங்க லவ் பண்ண பொண்ணுகிட்ட முன்னாடியே சொல்லிருந்தா அவ கிடச்சிருப்பாலோன்னு தானே உங்க கவலை. அத அந்த பொண்ணுகிட்டேயே கேட்டிருங்க. உங்களுக்கு தெளிவான ஒரு பதில் கிடைக்கும். அதோட அவங்களோட பதிலை உங்க மனசு எப்படி ஏத்துக்கும்கறத பொறுத்து நம்ம வாழ்க்கையையும் நீங்க உறுத்தல் இல்லாம மனசார ஏத்துக்குவிங்கன்னு சொல்லிருக்கா. அதுக்கப்புறம் தான் சுந்தர் என்னை பத்தி விசாரிக்க நம்ம வீட்ல நடந்த பிரச்சினை தெரிஞ்சு வந்து பேசிருக்காரு. அங்க என்ன பேசுனோம்னு தான் உங்களுக்கே தெரியுமே…

அதுல நான் சுந்தர்கிட்ட சொன்ன பதில் அவரு லவ் பண்ணலேங்கிறத விட ஆதி இடத்தில என்னால யாரையும் நினைக்க முடியாது. நான் அவர்கூட இல்லாட்டியும் என் மனசுல அவரு மட்டும் தான் எப்பவும் இருப்பாருன்னு சொன்னது. சுந்தர்க்கு அதுல இருந்து தெளிவாயிடுச்சு என்ன பண்ணாலும் நான் ஆதியை விட்டு வரமாட்டேன்னு அவருக்கு நான் கிடைக்கவே மாட்டேன்னு தெரிஞ்சதும் அமைதியாய்ட்டாரு. அத சாதாரணமா மனசு ஏத்துக்கட்டதும் தெளிவாயிட்டு மீராகிட்ட போயி லவ் சொல்லிருக்காரு. அப்புறம் அவளும் அடுத்த ஒரு 2நாள் சந்தோஷமா பேசிருக்காங்க. இவரு இத்தனை வருஷம் இல்லாம எப்படி இப்போ வந்த லவ் சொன்னேன்னு கேட்டிருக்காரு. அப்போதான் மீரா என்னை பத்தி சொல்லிருக்கா. திவி அவ்வளவு தூரம் பேசிட்டு லவ் சொல்றத தள்ளிப்போடாதேன்னு சொல்லிட்டு போனான்னு நடந்த எல்லாமே சொல்லிருக்கா. அத கேட்டிட்டு சுந்தர்க்கு ரொம்ப சங்கடமா போயிடிச்சாம். நானா லவ் பண்றேன்னு நினச்சிகிட்டு திவி லவ் விஷயத்துல வாழ்க்கைல பிரச்சினை பண்ணிட்டேன். ஆனா திவி என் லைப்க்கு எனக்கு ஒத்துப்போறவள பார்த்து எவ்வளவு ரிஸ்க் எடுத்து நீ என்கிட்ட வரதுக்கு காரணமா இருந்திருக்கான்னு சொல்லிருக்காரு. அவ்வளவு நாள் வரைக்கும் சுந்தர் லவ் பண்ண பொண்ணு யாருன்னு மீராக்கு தெரில அதே சமயம் ஏதோ ஒன் சைடு லவ் கிடைக்கலேன்னதும் பீவ் பண்றாருன்னுதான் நினைச்சிருக்கா. சோ சுந்தர ் இப்படி சொன்னதும் என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்கா. அவரும் குற்றவுணர்ச்சில நடந்த எல்லாமே சொல்லிட்டாரு. மீராக்கு அதுல தான் கோபம். திவி ஆதி அண்ணாவை லவ் பண்றாருன்னு தெரிஞ்சும் அத கெடுத்துவிட்டு நீங்க அவளை கல்யாணம் பண்ணி என்ன சாதிக்கப்போறிங்க. அவ மனசு உங்களுக்கு முக்கியம்னு பட்டிருந்தா இவ்வளவு கேவலமான வேலைய பண்ணிருக்கமாட்டீங்க உங்கள நினச்ச நான் பெருமைபடாத நாளே இல்ல. ஆனா இப்போ எனக்கே இப்படி ஒருத்தரவா லவ் பண்ணேன்னு என்னை நினச்சா அவ்ளோ கோபம் வருது.. இனிமேல் நான் உங்ககிட்ட பேசவே போறதில்லன்னு சொல்லிட்டு போயிட்டா. சுந்தரும் மன்னிப்பு கேட்டு எல்லாம் சொல்லி ஒன்னும் நடக்கல. நாம இப்போ ஊருக்கு வந்த பிறகு தான் சுந்தர் மீராகிட்ட தனித்தனியா பேசுனேன். மீராகிட்ட சுந்தர் தெரியாம தப்பு பண்ணாலும் அத சரி பண்ணதும் அவருதான். சரி அவரை விட்டிட்டு வேற யாராவத கல்யாணம் பண்ண போறியா இல்லேல்ல. அப்புறம் எதுக்கு இந்த வீம்புன்னு கேட்டு சமாதானப்படுத்தி இப்போதான் கொஞ்சம் மேடம் இறங்கி வந்திருக்காங்க. என திவி ஆதியிடம் கூறி முடிக்க

“ஓ … இதனால தான் நம்மளால அவங்களுக்கு பிரச்சினைன்னு சொன்னியா..?”

” ஆமா.. சரி கதை கேட்டதெல்லாம் போதும். சமத்தா தூங்கலாம் நாளைக்கு நிறையா வேலையிருக்கு” என உறங்கசென்றனர்.

மறுநாள் அனைவரும் வேலையில் இருக்க திவி வேகமாக வந்து ஆதியிடம் “ஆதி சீக்கிரம் வாங்க.” என ஆர்ப்பரிக்க லேப்டாப்பில் வேலையில் இருந்தவன் “எங்கடி எங்க கூப்பிடறே?”

“மதன் கொஞ்ச நேரத்துல வரானாம். அவன் சோபியை மீட் பண்ணி பேசணும். என்குய்ரின்னு சொல்லி தான் பேசுவான். பட் இங்க வேண்டாம் இடம் சரிப்படாது. வெளில போகட்டும். அதுக்குள்ள நீங்க தாத்தாகிட்ட பேசுங்க. ”

இன்னும் புரியாமல் ஆதி “அவங்க வெளில போயி பேசுறதுக்கு நான் என்ன பண்ணறது? அதுவும் தாத்தாகிட்ட என்ன பேசணும்?”

“என்ன ஆதி புரியாம பேசுறீங்க. அவன் எப்படியும் பேசி சோபிக்கிட்ட சம்மதம் வாங்கிடுவான். அப்போ வீட்ல யாரு பேசுறது? ”

“யாரு? ”

“நீங்க தான். ”

“வாட்? என்ன விளையாடறியா?.. அவ பண்ண குளறுபடி தான் இவ்ளோ பிரச்சனை. ஏதோ நீயே அத பெருசு பண்ணலேன்னு தான் விட்டுட்டேன். அதுவும் உன் பிரண்ட் லவ் பன்றேன்னு சொல்லி கேட்டதால தான். இல்லாட்டி எனக்கு இருந்து கோபத்துக்கு இந்நேரம் இங்க அவங்க எல்லாம் இருந்திருக்கவே முடியாது. இந்த அழகுல நான் அவங்க கல்யாணத்துக்காக போயி பேசணுமா? முடியாது. ..”

“என்ன ஆதி நீங்க. ..இப்போ இப்டி சொல்றிங்க. இதுக்கே இப்டி சொன்னா அப்போ சுந்தர் மீரா கல்யாணத்துக்கு நீங்க எப்படி பேசுவீங்க? ” என கேட்டுவிட்டு ஒன்றும் அறியாத பிள்ளை போல முகத்தை வைத்துக்கொள்ள

ஆதி “அப்படியே ஓடிடு…. என் முன்னாடி வந்த எப்படி அடிப்பேன்னே தெரியாது. என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல. நீ வேணா எல்லாரையும் போனா போகுதுன்னு விடலாம். மாறுவாங்கன்னு நம்பலாம். எனக்கு அதெல்லாம் துளி கூட நம்பிக்கை இல்லை. என்ன இருந்தாலும் இத்தனையும் நீ பாத்து பண்ணதுக்கு காரணமே குடும்பத்துல எல்லாரும் ஒண்ணா சந்தோசமா இருக்கணும்னு நினச்சதுதான்.. அதோட பிரச்சனை தெரிஞ்சு நீ சொன்ன பல காரணம். உன் நம்பிக்கை வீணாக வேண்டாம். திரும்ப ப்ரோப்லேம் பண்ணி உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான் நான் அமைதியா இருக்கேன். நான் ட்ரிங்க் பண்ணிட்டு பேசுனத்துக்கு அடுத்த நாள்ல இருந்து எவ்வளோ நேரம் உன்னை பாத்து உனக்கு ஆறுதலா இருக்கமுடிலேன்னு நினச்சு பீல் பண்ணிருக்கேன் தெரியுமா? சுந்தர் வந்து உண்மையா சொன்னதால ஏதோ அவன் இப்போ இருக்கான். இங்க வந்த பிறகு சோபி எங்களை திட்டுனாலும் நீ பழைய மாதிரி எனக்கு திரும்ப கிடைச்சிட்டானு காரணத்துனால தான் அவங்கள நான் இதோட விட்ருக்கேன். நீ உடம்பு சரில்லாம இருந்த ஒரு ஒரு நிமிஷமும் என்கிட்டேயே நீ சாதாரணமா பேசாம நெருங்காம விலகி தயங்கி இருந்தபோதெல்லம் எனக்கு எவ்ளோ கோபம் வரும் தெரியுமா? இதுக்கு காரணமானவங்க எல்லாரையும் கொல்லணும்னு தோணுச்சு. ஆனா நீ இப்போ அவங்க 2 பேரோட கல்யாணத்தையும் என்னை வெச்சு பண்ண பாக்கிற? வேண்டாம் வீணா என்னை வெறுப்பேத்தாத. வேற என்ன வேணாலும் கேளு. நான் அவ்ளோ நல்லவன் எல்லாம் இல்லை. இத இரண்டும் நான் பண்ணமாட்டேன். அவங்க ‘மேரேஜ்ல நான் பிரச்னை பண்ணமாட்டேன். அதுவே பெரிய ஹெல்ப் தான்.” என திரும்பி அவன் நின்று கொள்ள

திவிக்கு அனைத்தும் புரிந்தாலும் விடாமல் “ஓகே ஆதி உங்க இஷ்டம். அவங்க இரண்டுபேரும் பிரச்னை பண்ணாலும் அவங்கனால தான் ஓரளவுக்கு பிரச்னை சால்வ் ஆச்சுன்னும் நீங்களே ஒத்துக்கிறீங்க. ஆனா கடைசியா நீங்க அந்த பிரச்சனையா அவங்க பண்ண கெட்டத பாக்கறீங்க. நான் நல்லத பாக்கறேன். அதுவுமில்லாம இவர்களுக்காகன்னு ஏன் நினைக்கணும். மீராவும், மதனும் என்ன பாவம் பண்ணாங்க. மீரா சுந்தர் தப்பு பண்ணான்னு தெரிஞ்சதும் அவர்கிட்ட பேசவேயில்லை. அவளே தண்டிச்சிட்டா. மதன் என்னதான் அவன் லவ் பண்ற பொண்ணுன்னு முடிவு பண்ணாலும் எனக்காக தான் அவ செய்யற எல்லாமே சொன்னான். அதோட அவளுக்கு எதிரா போட்ட பிளான்லையும் அவன் வேண்டாம்னு சொல்லல. எல்லாத்துக்கும் மேல அவளை நான் அத்தனை பேர் முன்னாடியும் அடிச்சும் அவன் ஒருவார்த்தை கூட என்கிட்ட ஏன் இப்டி பண்ணேன்னு கேள்வி கேக்கல. அப்படிப்பட்ட இரண்டுபேரும் அவங்க லவ்க்கு என்கிட்ட ஹெல்ப் கேட்டபோது உங்கள நம்பி தான் நான் கண்டிப்பா பன்றேன்னு சொன்னேன். ஆனா இப்போ நீங்களே இப்டி முடியாதுனு சொல்றிங்க. நீங்களே இப்டி சொன்னா தாத்தாகிட்ட எப்படி பேசமுடியும். அவரு உண்மை தெரிஞ்சதுல இருந்து சுபியா தவிர அவங்க யார்கிட்டேயும் பேசக்கூட இல்ல. முக்கியமா சோபி, சுந்தர்கிட்ட… அவங்கள பத்தி நானே கொஞ்சமா பேசுனா கூட அவரு ஒரே வார்த்தைல வேற எது வேணாலும் நீ கேளு டா மா. உனக்காக தான் இந்த கல்யாணத்துக்கு வந்திருக்கேன். பேத்தி பேரன்னு பாசம் வெச்சுட்டேன் ஆனா பண்ற தப்பெல்லாம் மன்னிப்பேன்னு நினைக்காத. அத நீயே கேட்டாலும் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டாரு.”

“ஆதி நான் மனசார தான் இவங்க இரண்டுபேரோட கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்படறேன். என் முடிவ நீங்க தப்பு சொல்லமாடீங்கனு நம்பிட்டேன். ஒருவேளை உங்களுக்கு பிடிக்கல அண்ட் நானும் ஹெல்ப் பண்ணகூடாதுனு சொன்னிங்கன்னா நானும் பண்ணமாட்டேன். அவங்ககிட்டேயே அவங்க பிரச்னையை பாத்துக்க சொல்லிடறேன். ஆனா ஒரு உறுத்தல் இருக்கும். மீரா, மதன்க்காக அவங்க எனக்கு ஹெல்ப் தானே பண்ணாகன்னு.. உங்களை நான் கம்பல் பண்ணமாட்டேன் ஆதி. ஆனா நீங்க நினைச்சாதான் இத பிரச்சனையில்லாம கல்யாணத்த நடத்த முடியும் நான் நம்புறேன். முழுசா உங்கள மட்டும்தான் நம்புறேன். ஆனா உங்களுக்கு வேண்டாம்னா நானும் எதுவும் சொல்லல ” என அவள் அமைதியாக கீழே சென்றுவிட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 67ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 67

உனக்கென நான் 67 சுவேதாவை கட்டாயமாக ஆபரேஷன் செய்துவிட்டு வருமாறு சுகுவுடன் அனுப்பிவைத்தான் சந்துரு. அவள் அழுதுகொண்டே சென்றது சந்துருக்கு வருத்தமாக இருந்தாலும் அபரேஷ்ன் முடித்து தங்களுடன் நீண்ட நாள் தங்கையாக வாழ்வால் என்ற தைரியத்துடன் தன் கண்ணீரை மறைத்துகொண்ட் அனுப்பிவைத்தான்.

உள்ளம் குழையுதடி கிளியே – 21உள்ளம் குழையுதடி கிளியே – 21

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் ஹிமா சரத் உறவில் ஏற்படும் முன்னேற்றம் மற்றும்  ஜானை கண்டுபிடிக்க வால்டர்  சின்னையன் முயற்சி வெற்றியா தோல்வியா இவற்றிற்கு பதில் இரண்டும்