பாகம் 13
அப்சரா எப்படி இந்த மேட்டரை அப்பாகிட்ட சொல்லப்போகுற இன்னைக்கே எப்படியாச்சும் சொல்லனும் .அப்பா வேற நேத்து நைட்டு அப்சரா படிச்சு முடிச்சுட்ட தம்பியும் ஸ்கூல் முடிச்சுட்டான் இப்போ சட்டம் படிக்கனும்னு ஆசைப்படறான் ஸோ லாவ் காலேஜ்ல சேர்க்க போறேன் நெக்ஸ்ட் உன் திருமணப்பேச்சு தான் என்றவுடன் இவளுக்கு தூக்கிவாரிப்போட்டது இருந்தாலும் சமாளித்துவிட்டாள் சிரித்துக்கொண்டே அவள் ரூமிற்கு சென்றாள்.அறையினுள் அப்சரா ஒரு முடிவை எடுத்துவிட்டு அவள் லவ்வர்க்கு மெஸேஜ் அனுப்பி உறங்கிப்போனாள்.காலை எழுந்து குளித்து அழகான மேக்ஸி சுடியை அணிந்து தேவதைபோல் வந்தவள்.அம்மா அதுவந்து அதுவந்து என இழுத்தாள் சொல்லுடி என தேனு கூறினாள்.இல்லம்மா அதுவந்து நான் ஒருத்தரை லவ் பண்றேன் அவரை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன் எனக்கூறினாள்.அவ்வளவுதான் தேனு பொங்கிவிட்டாள் என்ன சொல்ற லவ் பண்றியா உங்க அப்பா உன் மேல வச்சுருக்குற நம்பிக்கைக்கு இதுதான் நீ குடுக்குற பரிசா எனக்கேட்க கண்ணில் நீருடன் நின்றாள்.அப்பறம்மா அவரு அவங்க அம்மாவ கூட்டிட்டு இங்க இன்னும் 10 நிமிஷத்துல வந்துடுவாறு என்றாள் பேசிப்பாருங்க பிடிச்சா ஓகே இல்லனா நீங்க பார்க்குற மாப்பிள்ளையை நான் அக்செப்ட் பண்றேன் என்றாள்.கிஷோரை என்னங்க ஒரு நிமிஷம் இங்க வாங்க என அழைத்து அப்சரா கூறிய அனைத்து விஷயங்களையும் கிஷோரிடம் கூறினாள்.நல்ல வேளை நம்மகிட்ட சொன்னாலே இப்போலாம் எல்லா பிள்ளகளுமே லவ் மேரேஜ் தான் அதுவும் ஓடிப்போய் ஆனா என் பொண்ணு பரவாயில்லை நம்மகிட்ட சொல்றா எனக்கிஷோர் கூறிவிட தேனுவிற்கு மகளுக்கு சப்போர்ட் பண்ணும் அப்பா மேல அப்படி ஒரு கோபம் நீங்கதான் பொம்பளபுள்ளைய கெடுத்து வச்சுருக்கீங்க எனக்கத்திவிட்டு சண்டை போட்டு சென்றாள்.சண்டைக்காரி எப்போதும் எல்லா கோபத்தையும் என்மேலதான் காட்டுவா இந்த வயசுலயும் என்கிட்ட சண்டைபோட்டு பேசாம இருக்கா பாரு,இந்த சண்டை எத்தனை நாள் நீடிக்குமோ புள்ளைகளாவா பெத்து வச்சுருக்கேன் எதுக்கெடுத்தாலும் அவங்க அம்மாகிட்ட கோர்த்து விட்ருதுங்க கடைசில என் ஹனி ஹனிபீயா மாறி கொட்ட ஆரம்பிச்சுடுறா அப்சரா எதுக்காக இவகிட்ட சொன்னா என்கிட்ட சொல்லியிருந்தா நான் மெதுவாஎடுத்து சொல்லியிருப்பேன்ல என புலம்பிக்கொண்டே தன் அறைக்கு சென்றான்.தேனு தேனு என்ற குரல் கேட்க புத்துணர்ச்சி பெற்றவளாய் ஓடிவந்தாள் அங்கே ராசாத்தி அவள் மகன் பாலா இருவரும் நின்றிருந்தனர்.ஏய் ராசாத்தி என ஆசையாய் கட்டிக்கொண்டாள் தன் தோழியை என்னடி மகன் இங்கிலாந்துக்கு போய்டான் அவனை பார்த்துக்க நான் போறேன்னு போனவதான் ஆளையும் காணோம் அட்ரஸையும் காணோம் என்றாள்.இனிமே எல்லா அட்ரெசும் இங்கதான் அப்சரா,சரண் எங்க எனக்கேட்கவும் தேனுவின் முகம் சற்று மாறியது .சரண் வெளியில போயிருக்கான் அப்சரா இங்கதான் என இழுத்தாள் அதற்குள் அப்சராவே வந்து ராசாத்தி கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.இப்பொழுது பாலாவை கவனித்த தேனுவிற்கு பயங்கர மகிழ்ச்சி அவளுடைய நண்பன் சிவமூர்த்தியை அச்சு வார்த்தார்போல் இருந்தான்.இப்பொழுது அருகே வந்த அப்சரா அம்மா அவங்க வந்துட்டாங்க எனக்கூற தேனுவிற்கு கோபம் சுளீரென வந்தது அவளை ரூமுக்கு அழைத்துச்சென்றவள் என்னடி விளையாடுறியா பொம்பளபுள்ளைனு செல்லம் குடுத்தா உன் இஷ்டத்துக்கு லவ்னு வந்து நிக்குற எங்ககிட்ட கேக்காம மாப்ள வீட்டுல இருந்து வேற வர சொல்லிருக்க என ஆக்ரோஷமாய் கத்தினாள்.நீ இங்கயே இரு ராசாத்தி போனதும் வந்து உன்னைய கவனிச்சுக்குறேன் என வெளியே சென்றாள்..ராசாத்தி தன் மகனின் புதிய கிளினிக் திறப்பு விழா பத்திரிக்கை நீட்டினாள்…அதிலேயே கிளினிக் திறப்புவிழா மற்றும் நிச்சயவிழா என அச்சிடப்பட்டிருந்தது. இவள் ஆச்சரியமாய் ராசாத்தியிடம் பொண்ணு பார்த்துட்டியா பாலாவிற்கு எனக்கேட்க அப்சரா ஓடிவந்து பாலா அருகே நின்றுகொண்டாள்…ராசாத்தி சிரித்துக்கொண்டே தேனுவைப்பார்க்க….தேனு சற்று குழம்பிப்போனாள்.கிஷோருக்கும் சற்று குழப்பம்தான்.இவங்க இரண்டு பேரும் 12ம் வகுப்பு லீவ்க்கு வந்தப்ப பொன்வனத்துல விளையாடறப்ப அப்சரா கீழே விழுந்துருக்கா அப்ப என் பையன் ஹெல்ப் பண்ண போய்ருக்கான் இப்படியே பிரண்ட்ஸிப்பா ஆரம்பிச்சது காலேஜ் படிக்கும்போது லவ் ஆயிடுச்சு இரண்டு பேருக்கும் பிடிச்சு போயிடுச்சு இவ்ளோ நாள் லவ் பண்ணிக்கிட்டுதான் இருந்தாங்க திடீர்னு என் பையன் உன் பொண்ண லவ் பண்ணதா சொல்லவும் ரொம்ப சந்தோஷமாயிடுச்சு எனக்கு என் தேனுவோட பொண்ணே என் மருமகளா வர்றது எவ்ளோ சந்தோஷம் என ராசாத்தி கூறினாள் மேலும் இவன் கிளினிக் வைக்குறதுக்காக தான் இவ்ளோ நாள் வெயிட்டிங் இப்ப அதுவும் ரெடி உங்க இரண்டு பேருக்கும் என் பையனை பிடிச்சிருக்கா என ராசாத்தி கேட்க மகிழ்ச்சியோடு இருவரும் சம்மதம் தெரிவிக்க வீடே கலகலப்பானது….அப்சரா தன் அன்னையின் மேல் சாய்ந்தவாறு ஓரக்கண்ணால் பாலாவை நோக்க அவனும் கண்களாலே காதலை விளக்கினான்.