Tamil Madhura கதைகள்,காயத்திரியின் 'தேன்மொழி',தொடர்கள் காயத்திரியின் ‘தேன்மொழி’ – 11

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 11

பாகம் 11

தேனுவிற்கு ராசாத்தியின் நிலையை பார்க்க பார்க்க மனம் வெறுப்பு தட்டியது.ஒருபக்கம் சிவமூர்த்தியின் இழப்பு மற்றொரு பக்கம் தன் தோழியின் நிலை…சிவமூர்த்தியின் அம்மா நல்ல மனம் உள்ளவர் என்பதால் சிவமூர்த்தியின் கரு அவளிடம் இருப்பதை ஏற்றுக்கொண்டாள்.மூர்த்தி அவன் தாயிடம் அதிகம் பேசுவது தன் ராசாத்தியின் கதைதான் அத்துனை காதல் அவள் மேல்….ராசாத்தியும் அவன் மேல் உயிரை வைத்திருந்ததால்தான் அவர்கள் திருமணம் நிச்சயக்கபட்டபின் இப்படி ஒரு தவறு நடந்துவிட்டது என தேனுவிடம் அழுதாள்…தேனுவின் மனம் அல்லோல்பட்டது…காதல் ,திருமணம் என இந்த ஒரு ஆண்டுக்குள் என்னால் அவரை விட்டு ஒரு அடி கூட நகர இயலவில்லையே பாவம் தன் தோழி எந்த நிலைக்கு ஆளாகியிருப்பாள்…இன்று நேற்று வந்த காதலா இது எத்தனை வருடமாய் அவனுக்காய் காத்திருக்கிறாள் பட்டாளத்துக்கு போன பின்பும் எவனையும் ஏறெடுத்து பார்க்காதவள்…பட்டாளத்தில் சேர்ந்தபோது பிரிய மனமில்லாமல் அழுது தீர்ப்பாள் அவள் அவன்மேல் கொண்ட காதலை எழுததெரியாமல் அவள் சொல்வதை கேட்டு இவள்தான் கடிதம் எழுதுவாள்..அவள் அழுதுகொண்டே சொல்லும் வார்த்தைகள் ஒரு நேரம் தேனுவிற்கே கண்ணீர் வந்துவிடும் அப்படி ஆழமானது அவர்கள் காதல் நண்பனின் இழப்பு தோழியின் நிலை இதுவரை இழப்பின் தாக்கம் அறியாத அவள் மனமெங்கும் வலிதந்தது…இவள் மனம் வெம்பி கிடந்த நேரம் கிஷோரின் ஆறுதல் தேவைப்பட்டது…தேனுவின் அம்மா அப்பா இறுதி சடங்கில் கலந்துகொண்டு கையோடு அவளை வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்…. வீட்டிற்கு வந்நதும் அவள் மனம் ஆறுதலடைய கிஷோருக்கு  கால் செய்கிறாள் தேனு ….மொபைல் நாட் ரீச்சபிளாக இருக்க அவள் தலைவலி இன்னும் கூடுகிறது தலையனைக்குள் முகம் புதைத்து அவள் சோகம் தீர்க்க நினைத்தபோது “தேனு என ஒரு குரல் கேட்க கண்ணீர் மல்க ஓடிவந்து அவள் மார்பில் முகம் புதைத்தாள்,அழுது தீர்த்தாள் கிஷோரும் அவளைத்தேற்ற முயற்சி செய்து தோற்றுப்போனான்…

“கண்ணே நீ அழுதால்

கதிரவனும் ஒளியற்று போகும்

உன் சோகம் தீர்க்க தெரியவில்லை

சிரித்த முகமும் சித்திர அழகும்

இன்று இருள் சூழ்ந்து இருக்கிறது

உன் பாரம் தீர்க்க நானிருக்க

என் நெஞ்சம் புகுந்து தஞ்சம் கொள்ளடி”

ஒரு வழியாய் அழுதுமுடித்தவன் முகத்தை தன் கைக்கொண்டு தூக்கினான்.அழாத ஹனி எனக்கு மனசு என்னமோ மாதிரி இருக்கு எப்போதும் சிரிச்ச முகமா இருக்குற உன்னைய இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு..உன் ஃபிரண்ட் மூர்த்தி இறந்தது வருத்தம்தான் ஆனா அவன் வீரமரணம் அடைஞ்சிருக்கான் நம்ம நாட்டுக்காகதான் அவன் ராணுவத்துல சேர்ந்ததே…ஆனா அவனுக்கு திருமணநேரத்துல இப்படி ஆனது ரொம்ப கவலையை குடுத்துடுச்சு…ராசாத்தியும் பாவம்தான்…மனச தேத்திக்கோமா உலகத்துல பிறந்த எல்லாருக்கும் இறப்பு வர்றது சகஜம்தான் இப்போ எனக்கு கூட இப்படி என அவன் ஆரம்பிக்க அவன் வாயை தன் கைகளால் பொத்தினாள் “வேணாம் மாமா விளையாட்டுக்குகூட அப்படி பேசாத நீ இல்லனா நான் செத்துருவேன்…என் பிரண்ட்டுக்கு இப்படி ஆனதே என்னால தாங்கமுடியலை..நீ என் உசுறுடா நீ இல்லனா மூச்சிருக்காது எனக்கு என இறுக கட்டிக்கொண்டாள்..அவளை ஆறுதல்படுத்த அவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்”…அவள் மனமும் சற்று பாரம் குறைந்து காணப்பட்டது.இரவு உணவை கிஷோர்,தேனு இருவரும் அவள் தாய் தந்தையுடன் சேர்ந்து உண்டு முடித்தனர்.எப்பொழுதும் கலகலவென சிரிப்பும் பேச்சுமாய் உண்ணும் இரவு உணவு வயிராற உண்ண முடியாமல் ஏனோ மௌனத்தில் கடைமைக்கு உண்டு முடித்தனர்.தேனுவும் கிஷோரும் அவர்கள் அறைக்கு சென்றனர் அவள் முகம் இருண்டு காணப்பட்டதையறிந்த கிஷோர் அவளை தன் மடியில் கிடத்தினான்.”வேணாங்க இன்னைக்கு மனசு சரியில்லங்க என அவள் கூறினாள்.”ஹே லூசு உன்னை எதுவும் பண்ணமாட்டேன் … பேசாம என் மடியில படுத்து தூங்குடி அப்பதான் உன் மனசு பாரம் குறையும் “என்றதும்….சிறிய புன்னகையுடன் அவன் மடியில் படுத்துறங்கினாள்

“தோளில் சுமந்த தந்தையும்

வயிற்றில் சுமந்த தாயும்

இன்று ஒருசேர அவன் சுமக்கிறான்

அவன் மடியில்

அவன் என் தாயோ

நான் அவன் சேயோ

கண்ணீர் கலைந்திட

காதல் தந்திட அவனிருக்க

உலகமே என் வசமிருக்க”

அவளை மெதுவாய் அவனருகே தலைசாய்த்து படுக்கவைத்தான் இவனும் அவள் அருகே படுத்து உறங்கிபோனான்.விடியற்காலையில் யாரோ முனகும் சத்தம் கேட்டு விழித்தவன்…தேனு அருகே சென்றான் அவள் உடல் நெருப்பாய் கொதித்தது.ஒருவித பதஷ்டத்துடன்அவளை தூக்கிக்கொண்டு சிட்டி மருத்துவமனைக்கு சென்றான்.”சார் அவங்க என் வைஃப் அவங்களோட க்ளோஸ் பிரெண்ட் இறந்துபோய்ட்டாங்க ஸோ நேத்து ஃப்புல்லா அழுதுட்டே இருந்தா இப்போ இப்படி காய்ச்சல் வந்துடுச்சு எப்படியாவது சரி பண்ணுங்க சார் என அழுதபடியே தலையில் கைவைத்து அமர்ந்தான்”….அவளுக்கு முதலுதவி செய்தபின் டாக்டர் வெளியே வந்தார் .”ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல மிஸ்டர் கிஷோர் ..நேத்து அவங்க அதிகமா அழுததால பீவர் வந்துருக்கு அப்புறம் முக்கியமான நியூஸ் என்னன்னா நீங்க அப்பாவாக போறீங்க கங்க்ராட்ஸ் என டாக்டர் சொல்ல கிஷோர் ஆர்வத்தில் ஐசியூ விற்கு சென்று தேனுவின் நெற்றியில் முத்தம் பதித்தான்..எனக்கு செல்லக்குட்டி வரப்போகுது இதை சந்தோஷமா கொண்டாட கூட முடியலை உன் நிலைமையை பார்த்து….என்றவாறு அவள் கரம் பற்றி கண்ணீர் விட்டான்….சற்று நினைவு திரும்பியவள் மாமு என அழைக்க “இனி உன்கிட்ட சோகத்தையே நான் பார்க்கக்கூடாது ஏனா என் குட்டி பாப்பா வரப்போறாங்க எனக்கூற மகிழ்ச்சியில் தன் வயிறை தடவிப்பார்த்தாள்தேனு”..தன்னவனை மகிழ்ச்சியில் பார்த்து வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள்.

“ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டுபூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

தாயாக தந்தை மாறும் புது காவியம்ஓ…இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதேகருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதேவிழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..”

என்ற தெய்வத்திருமகள் பாடல் அவன் மனதில் கேட்டது…அங்கு வந்த டாக்டர் அவளை பரிசோதித்துவிட்டு “நவ் ஸீ யிஸ்

பெர்பக்ட்லி ஆள் ரைட்  பட் ட்ராவலிங் வேண்டாம் 5மந்த் வரை “என்றதும்..தேனுவின் முகம் சற்று கவலையானது “இரண்டு நாள்கூட இவரை விட்டு இருக்க முடியாது இதுல ஐந்து மாதமா என்பதை போல் பாவமாக” கிஷோர் முகத்தைப்பார்தாள் தேனு.கிஷோரும் சற்று ஏமாற்றமாய் அவளைப்பார்த்தான்…துக்க நிகழ்வு மனதைக்குடைந்த நேரம் இப்படி ஒரு அழகான தருணம் …அள்ளிக்கொஞ்ச அழகு குட்டி கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை பத்து மாதம்தான்.

ஆறுமாதமாய் அவன் உயிரை தன்னுள் சுமக்க ஆசைக்கொண்டாள் ஏனோ அவளுக்கு வரம் கிடைத்தது இன்றுதான்.நாட்களை எண்ணிக்கொண்டிருந்த வேலை தினமும் மொபைலில் தேனுவிடம் பேசினான் அவளுக்கு அது சற்று அவன் நினைவை அதிகப்படுத்தியது…அவள் கேட்கும் நேரம் போக இயலாது பார்ப்பது கலெக்டர் உத்யோகம் எனவே வார இறுதியில் வாரம் ஒருமுறை சென்று வருவான்…அப்பொழுது அவள் கொள்ளும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை…இந்தமுறை வந்நபோது ஏதோ ஆபிஸில் பெரிய  பிரச்சனை என கிஷோர் கூறினான் அது இப்படி ஒரு ஆபத்தை தரப்போவதை எண்ணவில்லை தேனு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கடவுள் அமைத்த மேடை – 1கடவுள் அமைத்த மேடை – 1

வணக்கம் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. ராணிமுத்துவில் வெளிவந்த ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ கதையை படித்துவிட்டு முகநூலிலும் மெயிலிலும் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி. சித்ராங்கதாவில் சரயுவை பாராட்டி இன்னமும் எனக்கு எழுதுகிறீர்கள் நன்றி. இப்போது ‘கடவுள் அமைத்த மேடை’ கதைக்கு வருவோம்.

Chitrangatha – 24Chitrangatha – 24

ஹலோ பிரெண்ட்ஸ், உங்க கமெண்ட்ஸ் பார்த்து எனக்குப் பேச்சே வரல…. விருது கிடைக்கணும்னு வாழ்த்துற உங்க அன்பைப் பார்த்து நிஜம்மாவே திகைச்சுப் போயிட்டேன். உங்களோட இந்த அன்பே எனக்கு மிகப்பெரிய விருதுதான். அது எப்போதும் மாறாம இருந்தால் போதும். எல்லாரும் காரடையான்